11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
வேதியியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
2.
ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக க் காணப்படுகிறது. உன் விடைக்கான காரணத்தை நியாயப்படுத்துக.
3.
எளிய விகித வாய்ப்பாடு வரையறு.
4.
2s, 4p, 5d மற்றும் 4f ஆர்பிட்டால்களுக்கு எத்தனை ஆரக் கணுக்கள் (radial node) காணப்படுகின்றன? எத்தனை கோணக் கணுக்கள் (angular nodes) காணப்படுகின்றன.
5.
மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.
6.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?
7.
66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.
8.
மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?
9.
ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக
10.
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
11.
நல்லியல்புத் தன்மையில் இருந்து விலகுதல் என்றால் என்ன?விளக்குக.
12.
ஆக்சிஜனேற்ற எண்ணை வரையறு. பின்வரும் சமன்பாட்டை ஆக்சிஜனேற்ற எண் முறையை பயன்படுத்தி சமன்செய்க.
AS2S3+ HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
13.
300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.
14.
எலக்ட்ரான் கவர்தன்மைக்கான பாலிங் முறையின் அடிப்படையை சுருக்கமாக தரவும்.
15.
மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு
p மற்றும் \(\frac { 1 }{ v } \)
pv மற்றும் v
p மற்றும் v
v மற்றும் \(\frac { 1 }{ p } \)
16.
எதிர்மாறு வெப்பநிலைக்கும், வாண்டர்வால்ஸ் மாறிலிக்கும் உள்ள தொடர்பு
\({ T }_{ i }=\frac { Rb }{ 2a } \)
\({ T }_{ i }=\frac { 2a }{ Rb } \)
\({ T }_{ i }=\frac { 8a }{ 27{ R }^{ 2 }b } \)
\({ T }_{ i }=\frac { 8a }{ 27Rb } \)
17.
பின்வருவனவற்றை கவனி
I. அணு ஆரம் II. எலக்ட்ரான் நாட்டம் III. எலக்ட்ரான் கவர்தன்மை IV. எலக்ட்ரான் நாட்டம் இவற்றில் ஒப்பீட்டு ஆவர்த்தன பண்பு எது?
I
II
III
IV
18.
1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை
66.25 g mol-1
44 g mol-1
24.5 g mol-1
662.5 g mol-1
19.
கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
1.
வெப்பமாறாச் செயல்முறையில் ஒரு வாயுவானது அதிக அழுத்தப்பகுதியிலிருந்து , குறைந்த அழுத்தப்பகுதிக்கு விரிவடையச் செய்யும் போது, வெப்பநிலையானது குறையும் இந்நிகழ்வு ஜூல் தாம்சன் விளைவு எனப்படுகிறது.
2.
(i) ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அணு பருமன் அதிகம்.
(ii) லித்தியத்தின் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s1 இது தன் இணைதிற எலக்ட்ரானை எளிதில் இழந்து He-ன் எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
(iii) லித்தியத்தின் 2s1 எலக்ட்ரான் அதன் எலக்ட்ரான்களால் 1s2 பயனுள்ள வகையில் மறைக்கப்படுகிறது. எனவே அதன் மீது செயல்படும் உட்கரு கவர்ச்சி விசை குறைவு.
3.
சேர்மத்தின், ஒரு முலக்கூறில் அடங்கியுள்ள வெவ்வேறு தனிமங்களின் எண்ணிக்கையின் எளிய விகிதத்தினை அத்தனிமத்தின் குறியீட்டிற்கு கீழ் ஓட்டாக எழுதுவதால் பெறப்படும் வாய்ப்பாடு எளிய விகித வாய்ப்பாடு எனப்படும்.
4.
| ஆர்பிட்டால் | n | l | ஆரக்கணு n – l – 1 |
கோணக்கணு l |
| 2s | 2 | 0 | 1 | 0 |
| 4p | 4 | 1 | 2 | 1 |
| 5d | 5 | 2 | 2 | 2 |
| 4f | 4 | 3 | 0 | 3 |
5.
1. எலக்ட்ரான் குறைபாடுடைய ஹைட்ரைடுகள் (Eg: B2H6)
2. எல்க்ட்ரான் அதிகமாக உள்ள ஹைட்ரைடுகள் (NH3,H2O)
3. சரியான எல்க்ட்ரானை கொண்டுள்ள ஹைட்ரைடுகள் (CH4, C2, H6, SiH)
6.
\(\frac { \gamma { H }_{ 2 } }{ \gamma _{ { C }_{ n }{ H }_{ 2n-2 } } } =\sqrt { \frac { { m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } } }{ m_{ { H }_{ 2 } } } } \\ 3\sqrt { 3 } =\sqrt { \frac { { m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } } }{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்தி மாற்றி அமைக்கும் பொழுது.
\(27\times 2={ m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } }\\ 54={ n }_{ (12) }+(2n-2)(1)\\ 54=12n+2mn-2\\ 54=14n-2\\ n=(54+2)/14\\ =\frac { 56 }{ 14 } =4\\ \therefore n=4.\)
7.
\(\lambda=\frac{h}{p}=\frac{6.626\times10^{-34}}{66.26\times10^{-28}}\)
λ=1x10-7 m
8.
1. மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள்.இது நியூட்டனின் முதல் விதிப்படி நடக்கிறது
2. பிரேக்கினை உபயோகிக்கும் போது அந்த குறிப்பட்ட வாகனமானது ஓய்வு நிலைக்கு வருகிறது.ஆனால் பயணிகள் தொடர்ந்து முன்னோக்கிய இயக்கத்தில் உள்ளனர்.எனவேதான் முன்பக்கமாக விழுகின்றனர்
3. ஹீலியம் பலூனின் இயக்கம் எதிர்திசையில் இருக்கும்.சுற்றியுள்ள காற்றின் அடர்த்தி வேறுபாடே இதற்குக் காரணம்
4. தீரரென காரை நிறுத்தும் போது காற்று முன்னோக்கி நகர்கிறது.இதன் விளைவு காரின் முன்புற அடர்த்தி பின்புறத்தைவிட அதிக அழுத்தத்தை முன் புற பலூனிற்கும் தரும்
5. எனவே பலூன் ஆனது குறைந்த அதிர்த்தியுடைய பின்பக்கமாக தள்ளப்படுகிறது/
9.
ஈத்தேனின் எரிதல் வினைக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
C2H6 + 7/2O2 → 2CO2 + 3H2O
⇒ 2C2H6 + 7O2 → 4CO2 + 6 H2O
4 மோல்கள் CO2 - ஐ உருவாக்க 2 மோல் ஈத்தேன் தேவைப்படுகிறது.
1 மோல் (44 g) CO2 - ஐ உருவாக்க தேவைப்படும் ஈத்தேனின் மோல்களின் எண்ணிக்கை

=1/2 மோல் ஈத்தேன்
=0.5 மோல் ஈத்தேன்
10.
(i) z=118 என்ற தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
86[Rn] 5f14 6d10 7s2 7p6
(ii) தனிம வரிசை அட்டவணையில் இது p-தொகுதியில் இடம்பெற்றுள்ளது. (இறுதி எலக்ட்ரான் p ஆர்பிட்டாலில் சேர்க்கப்படுவதால்)
(iii) வரிசை எண் =7 (n =7 என்பதால்)
(iv) தொகுதி எண் =18
(nd ஆர்பிட்டால் +ns ஆர்பிட்டால் +np ஆர்பிட்டால்)
(10) (2) (6)
11.
* PV=nRT என்ற வாயுச் சமன்பாடு உருவாவதற்கு அடிப்படையாக அமைந்துள்ள வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின்படி வாயுவின் ஒட்டு மொத்த கனஅளவோடு ஒப்பிடும் போது , தனிப்பட்ட ஒரு வாயு மூலக்கூறு அடைத்துக் கொள்ளும் கனஅளவு என்பது புறக்கணிக்கத்தக்கது .
* மேலும் வாயு மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சிவிசை ஏதுமில்லை. அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் மேற்கண்டுள்ள இவ்விரு ஊகத்தின் அடிப்படையிலான கோட்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படும் வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் எனப்படும்.
* ஆனால் நடைமுறையில் அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் ஊகத்தின் அடிப்படையிலான இவ்விரு கருதுகோள்களும் சரியானவை அல்ல.
* எடுத்துக்காட்டாக வாயுக்களை திரவமாக்குதல் நிகழ்வானது, வாயு மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சிவிசை உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
* எனவே அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் எந்த ஒரு வாயுவும் நல்லியல்பு வாயுவின் தன்மையினை பெற்றிருக்க இயலாது. நல்லியல்பு தன்மையற்ற வாயுக்கள் இயல்பு வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன.
* இயல்பு வாயுக்கள் சிலநிபந்தனைகளில் (வெப்பஅழுத்த நிலைகளில்) நல்லியல்புத் தன்மையை நெருங்குகின்றன.
12.
ஆக்சிஜனேற்ற எண்: ஒரு மூலக்கூறில் பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அனுவின் மீதமுள்ள எஞ்சிய மின்னோட்டமே, தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் ஆகும்.
படி 1: AS2S3+ HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
படி 2: As யின் ஆக்சிஜனேற்ற எண் 2 அதிகரிக்கிறது
N யின் ஆக்சிஜனேற்ற எண் 3 குறைகிறது.

படி 3: AS2S3 யை மூன்றாலும், HNO3 யை இரண்டாலும் பெருக்குக.
3AS2S3+ 2HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
படி 4: H மற்றும் O வை தவிர பிற அணுக்களைச் (As, S, N)சரி சமன் செய்க
3AS2S3+ 2HNO3 + H2O \(\rightarrow \) 6H3AsO4 + 9H2SO4 + 2NO
படி 5: இருபுறமும் O மற்றும் H ன் குறைபாடுகளைக் கண்டறிந்து சமன் செய்க.
3AS2S3+ 28HNO3 + 4H2O \(\rightarrow \) 6H3AsO4 + 9H2SO4 + 28NO
13.
mO2 = 52.5 g PO2 = ?
mCO2 = 65.1 g PCO2 = ?
T = 300 K P = 9.21 atm
PO2 = XO2 x மொத்த அழுத்தம்
\(X_{O_2}=\frac{O_2}{n_{O_2}+n_{CO_2}}\)

=\(\frac{52.5g}{32gmol^{-1}}\)=1.64 mol

=1.48 mol
PO2=XO2 x மொத்த அழுத்தம்
=0.53x9.21 atm=4.88 atm
PCO2=XCO2 x மொத்த அழுத்தம்
=0.47x9.21 atm=4.33 atm
14.
(i) ஹைட்ரஜன் மற்றும் புளூரினுக்கு முறையே 2.1 மற்றும் 4.0 என்ற மதிப்புகளை எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் என தோராயமாக பாலிங் எடுத்துக்கொண்டார்.
(ii) இதனடிபடையில் பிற தனிமங்களுக்கு பின்வரும் வாய்ப்பாட்டினை பயன்படுத்தி எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளைக் கண்டறியலாம்.
(XA-XB)=0.182\(\sqrt { { E }_{ AB }-({ E }_{ AA }\times { E }_{ BB })^{ \frac { 1 }{ 2 } } } \)
இங்கு. EAB =AB மூலக்கூறின் பிணைப்பு பிளவு ஆற்றல்
EAA =A2(A-A) மூலக்கூறின் பிணைப்பு பிளவு ஆற்றல்.
EBB=B2(B-B) மூலக்கூறின் பிணைப்பு பிளவு ஆற்றல்
(iii) கொடுக்கப்பட்ட எந்த ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் நாட்டத்தின் மதிப்பும் மாறிலியல்ல. இதன் மதிப்பு அத்தனிமம் எத்தனிமத்துடன் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அமையும்.
15.
(c)
p மற்றும் v
16.
(b)
\({ T }_{ i }=\frac { 2a }{ Rb } \)
17.
(c)
III
18.
(b)
44 g mol-1
19.
(c)
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards