11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
ஹைட்ரஜன்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
1.5 N H2O2 ன் கனஅளவுச் செறிவு
1.5
4.5
16.8
8.4
2.
நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணம்
Ca(HCO3)2
Mg(HCO3)2
CaCl2
MgCO3
3.
டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------
1p +0n
2p +1n
1p +2n
இவற்றில் ஏதும் இல்லை
4.
நீர் வாயு என்பது
H2O (g)
CO + H2O
CO + H2
CO + N2
5.
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது
ஹைட்ரஜன் அயனி, H3O+ கரைசலில் தனித்து உள்ளது
டைஹைட்ரஜன் ஒடுக்க வினைபொருளாக செயல்படுகிறது
ஹைட்ரஜன் மூன்று ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் டிரிட்டியம் அதிக அளவில் காணப்படுகிறது.
அயனி உப்புகளில், எப்போதும் ஹைட்ரஜன் நேர் அயனியாகக் காணப்படுவதில்லை
6.
இடைச் செருகல் ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது ஏன்?
7.
கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
(i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
(ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு
8.
தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் ஏன் ஹேலஜன்களுடன் வைக்கப்படவில்லை?
9.
NH3, H2O மற்றும் HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக. தங்களது வரிசைப்படுத்தலுக்கான அடிப்படையினை விளக்குக.
10.
டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக
11.
கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?
12.
H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக
13.
மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.
1.
(d)
8.4
2.
(c)
CaCl2
3.
(c)
1p +2n
4.
(c)
CO + H2
5.
(c)
ஹைட்ரஜன் மூன்று ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் டிரிட்டியம் அதிக அளவில் காணப்படுகிறது.
6.
1. உலோக ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளன.
2. ஏனெனில், உலோக அனிக்கோவை இடைவெளிகளில் ஹைட்ரஜன் காணப்படுவதால் உருவாகும் ஹைட்ரஜன் காணப்படுவதால் உருவாகும் ஹைட்ரைடுகள் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது.
7.
(i) WO3 + 3H2 \(\rightarrow \) W + 3H2O
(ii) H2 + CI2 \(\rightarrow \) 2HCI
8.
1. ஹேலஜன்கள், ஹேலைடு அயனிகளை (X-) உருவாக்குவதைப் போல ஹைட்ரஜனும் ஒரு எல்க்ட்ரானை ஏற்றுக் கொண்டு ஹைட்ரைடு அயனியை (H-) உருவாக்குகிறது.
2. இந்த அயனியின் எல்க்ட்ரான் அமைப்பு, மந்த வாயுவான ஹீலியத்தின் எல்க்ட்ரான் அமைப்பு, மந்த வாயுவான ஹீலியத்தின் எல்க்ட்ரான் அமைப்பினை ஒத்துள்ள போதிலும், ஹைட்ரஜனின் எல்க்ட்ரான் நாட்ட மதிப்பு ஹேலஜன்கனைள விட குறைவாக உள்ளது.
3. எனவே தான், தனிமவரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் ஹேலஜன்களுடன் வைக்கப்படவில்லை.
9.
1. NH3, H2O, HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறுவரிசை.
NH3
(i) சிறிய உருவளவையும்
(ii) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையையும் பெற்றிருந்தால் H பிணைப்பு உண்டாகும்.
3. N, F, O - ஐ ஒப்பிட கவர் தன்மை வரிசை
F > O > N|
4. எனவே HF அதிக ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையைப் பெற்றுள்ளது.
10.
1. வினை நிகழும் சூழலைப் பொறுத்து, டியூட்டிரியமானது ஹைட்ரஜனின் சேர்மங்களிலுள்ள ஹைட்ரஜனை, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ மீள் முறையில் பதிலீடு செய்கிறது.
2. இவ்வினைகள் டியூட்டிரியம் அல்லது கனநீரைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகின்றன .
CH4 + 2D2 \(\rightarrow\) CD4 + 2H2
2NH3 + 3D2 \(\rightarrow\) 2ND3 + 3H2
11.
1. நீர் மற்றும் கனநீருக்கு இடையே இயற்பண்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
2. ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் இவற்றின் நிறைகளின் வேறுபாடு காரணமாக, வினைகள் வெவ்வேறு விதங்களில் நடைபெறும்.
3. D2O பங்குபெறும் வினையின் வேகம் H2O பங்குபெறும் வினையின் வேகத்தை விட குறைவு.
4. எனவே இதை பருகினால் உடல் செயலியல் நிகழ்வுகள் பாதிக்கப்படும்.
5. ஆகையால் D2O (கனநீர்) குடிப்பதற்கு உகந்ததல்ல.
12.
| H2O ன் வடிவமைப்பு | H2O2 ன் வடிவமைப்பு |
|---|---|
| எது வளைவான அமைப்பை கொண்டது | திறந்த புத்தக அமைப்பை கொண்டது |
| HOH பிணைப்பின் கோணம் 104.5° | H-O-H பிணைப்பின் கோணம் 94.8° |
இது ஒரு முனைவுற்ற மூலக்கூறு![]() |
இது முணைவற்ற மூலக்கூறு![]() |
13.
1. மிகச் சிறிதளவு அமிலம் அல்லது காரம் கலந்த நீரினை மின்னாற் பகுத்தல் மூலம் மிகத்தூய்மையான (> 99.9 %) ஹைட்ரஜனைப் பெறலாம்.
2. அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு போன்றவற்றின் நீர்க்கரைசலை மின்னாற் பகுத்தும் ஹைட்ரஜனைப் பெறலாம்.
3. இம்மின்னாற் பகுப்பில் நிக்கல் நேர்மின்வாயாகவும், இரும்பு எதிர் மின்வாயாகவும், செயல்படுகிறது.
நேர்மின்வாய் : 2OH- \(\rightarrow\) H2O + 1/2 O2 + 2e-
எதிர்மின்வாய் : 2H2O + 2e- \(\rightarrow\) 2OH- + H2
ஒட்டுமொத்தவினை : H2O \(\rightarrow \) H2 + 1/2 O2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards