11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
11th Second Revision Test 2019
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
மீஸோஸ்பியரில் காணப்படும் வெப்பநிலை எல்லை
150C to -560C
-560C -to 20C
-20C -to -920C
-920C -to 12000C
2.
ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான்
PCI3
PCI5
SOCI3
மேற்கூறிய அனைத்தும்
3.
பின்வருவனவற்றை கவனி:
I. கொழுப்பின் அசிட்டிக் அமிலத்தொகுப்பு
II. டெர்தோலாட்டின் மீத்தேன் தொகுப்பு
இவற்றுள், கரிமச் சேர்மங்களை ஆய்வகங்களிலும் தயாரித்து அதன் பண்புகளை ஆய்ந்தறிய இயலும் என்பதை உறுதிப்படுத்திய சோதனை எது?
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
இரண்டும் அல்ல
4.
\(\triangle H=\)
மாறா வெப்பம், மாறா அழுத்தத்தில் வினைவெப்பம்
மாறா அழுத்தத்தில் வினையில் உட்கொள்ளப்படும் வெப்பம்
மாறா அழுத்தத்தில் வினையில் வெளிப்படும் ஆற்றல்
மாறா பருமனில் வினைவெப்பம்
5.
டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை
2 புரோட்டான் மட்டும்
ஒரு நியூட்ரான்
ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்
2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்
6.
சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களின் நிலைப்புத்தன்மை அதிகம். இது பின்வரும் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?
பரிமாற்ற ஆற்றல்
நிலை ஆற்றல்
இயக்க ஆற்றல்
இவற்றுள் எதுவுமில்லை
7.
கூற்று: ஒரு நல்லியல்பு கரைசலானது ரெளல்ட் விதிக்கு கீழ்படிகிறது.
காரணம் : ஒரு நல்லியல்பு கரைசலில்,
கரைப்பான் – கரைப்பான் இடையீடுகளும்,
கரைபொருள் – கரைபொருள் இடையீடுகளும்,
கரைபொருள் – கரைப்பான் இடையீடுகளைப் போலவே உள்ளன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
8.
பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்.
NH4Cl
NH3
NaCl
இவற்றில் ஏதுமில்லை
9.
N2(g) மற்றும் H2(g) ஆகியவற்றிலிருந்து NH3 உருவாதல் ஒரு மீள் வினையாகும்
N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + Heat இவ்வினையின் மீது வெப்பநிலை உயர்வினால்
ஏற்படும் விளைவு என்ன?
சமநிலையில் மாற்றமில்லை
அம்மோனியா உருவாதலுக்கு சாதகமாக உள்ளது.
சமநிலை இடது பக்கத்திற்கு நகரும்.
வினையின் வேகம் மாறாது.
10.
ஈத்தேனின் மறைத்தல் மற்றும் எதிரெதிர் வச அமைப்புகளை ஒப்பிடும் போது பின்வருவனவற்றுள் சரியானக் கூற்று எது?
ஈத்தேனின் மறைத்தல் வச அமைப்பில் முறுக்க திரிபு காணப்படினும் எதிர் எதிர் வச அமைக்பைக் காட்டிலும் மறைத்தல் வச அமைப்பு அதித நிலைப்புத் தன்மை உடையது.
ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரவ ஏதுமில்லை .
ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பினைக் காட்டிலும் குறை வான நிலைப்புத் தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு காணப்படுகிறது.
ஈத்தே னின் எதிரெ திர் வச அமை ப்பானது மறைத்தல் வச அமைப்பினை க் காட்டிலும் குறை வான நிலைப்புத்தன்மை உடைய து
ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரிபு காணப்படுவதில்லை
11.
பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?
sp2
spd2
sp3
sp2d
12.
25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27oயில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது?
HBr
HCl
HF
HI
13.
கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.
\({ M }^{ + }\left( g \right) \xrightarrow [ Aqueous ]{ Medium } { M }^{ + }\left( aq \right) \)
Na
Li
Rb
K
14.
1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை
66.25 g mol-1
44 g mol-1
24.5 g mol-1
662.5 g mol-1
15.
தவறான கூற்றை கண்டறிக
ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.
ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள்,அதிகமான எதிர்மின்சுமையைப் பெற்மையைப் பெற்றுள்ள எதிர்மின் அயனி,அதிகமான அயனி ஆரத்தினை பெறும்.
தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது தனிமங்களின் அணு ஆரம் அதிகரிக்கின்றது.
தனிமவரிசை அட்டவணையின் இரண்டாம் வரிசையில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைகிறது
16.
பென்சினின் குளோரினேற்றத்தை எழுது.
17.
எண்ம விதியைப் பற்றி எழுதுக.
18.
பின்வரும் வேதி வினைகளை பூர்த்தி செய்து பின்வருமாறு வகைப்படுத்துக்க.
[அ] நீராற்பகுத்தல்
[ஆ] ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
[இ] நீரேற்ற வினைகள்
(i) KMnO4 + H4O2
(ii) CaO + H2O
19.
சமநிலையில் உள்ள ஒரு வினையில், மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?
20.
கரைதிறன் மீதான அழுத்தத்தின் விளைவை விளக்குக.
21.
நீரில் கரைந்ரைந்துள்ள ஆக்சிஜன் நீர்சூழ் வாழ்க்கைக்கு பொறுப்பாகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு குறைவதற்கு எந்தெந்த செயல்பாடுகள் பொறுப்பாகின்றன?
22.
பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
(அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
(ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்
23.
ஒப்பு அணு நிறை வரையறு
24.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.
25.
ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.
26.
இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.
27.
வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.
28.
20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.
29.
ஹைட்ரஜனை தொழில் முறையில் தயாரிக்க பின்வரும் நீர்வாயு மாற்ற வினை மிக முக்கியமானதாகும்.
CO(g) + H2O(g) ⇌ CO2(g) + H2(g)
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் KP = 2.7, 2L குடுவையில் 0.13 மோல் CO, 0.56 மோல் நீர் 0.78 மோல் CO2 மற்றும் 0.28 மோல் H2 ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டால், சமநிலையை அடைய வினை எந்த திசையில் நிகழும் எனக் கண்டறிக.
30.
ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.
31.
ஒரு தானியங்கி மோட்டார் வாகன இயந்திரத்தில் பெட்ரோல் 8160 C வெப்பநிலையில் எரிக்கப்படுகிறது.சூழலின் வெப்பநிலை 210 C ஆக இருக்கும்போது இயந்திரத்தின் அதிகபட்ச திறனை கணக்கிடுக.
32.
கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும்
ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் (tyres) கோடையில் குளிர்காலத்தை விடகாற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும்.
33.
140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.
34.
ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.
35.
மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.
36.
குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
அ. ஹலேஜனேற்றம்
ஆ. நைட்ரோ ஏற்றம்
இ.சல்போனேற்றம்
ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை
37.
0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)
38.
2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.
39.
வரையறு: சமமான நிறை.
40.
ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.
41.
ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.
42.
2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)
43.
NH3, H2O மற்றும் HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக. தங்களது வரிசைப்படுத்தலுக்கான அடிப்படையினை விளக்குக.
1.
(c)
-20C -to -920C
2.
(d)
மேற்கூறிய அனைத்தும்
3.
(c)
இரண்டும்
4.
(a)
மாறா வெப்பம், மாறா அழுத்தத்தில் வினைவெப்பம்
5.
(c)
ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்
6.
(a)
பரிமாற்ற ஆற்றல்
7.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
8.
(a)
NH4Cl
9.
(c)
சமநிலை இடது பக்கத்திற்கு நகரும்.
10.
(b)
ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரவ ஏதுமில்லை .
11.
(a)
sp2
12.
(d)
HI
13.
(b)
Li
14.
(b)
44 g mol-1
15.
(a)
ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.
16.

17.
ஒரு வேதிப் பிணைப்பில் ஈடுபடும் அனைத்தும் அணுக்களும் தங்களது இணைதிற வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெறும் வகையில் தங்களுக்குள் எலக்ட்ரான்களை பரிமாற்றம் அல்லது பங்கீடு செய்து கொள்கின்றன
18.
(i) KMnO4 + H2O2 + H2SO4 \(\rightarrow\) 2MnSO4 + K2SO4 + 5O2 + 8H2O (ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை)
(ii) CaO + H2 \(\rightarrow\) Ca(OH)2 (நீரான் படுத்தல்)
19.
மாறாத கன அளவில், சமநிலையில் உள்ள ஒரு அமைப்பின் ஒரு மந்தவாயு சேர்க்கப்படும் போது, அக்கலனில் உள்ள வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதாவது வாயுக்களின் மொத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வினைபடு பொருட்கள் மற்றும் வினை விளை பொருட்களின் பகுதி அழுத்தங்கள் அதிகரிப்பதில்லை.
எனவே, மாறாத கன அளவில் மந்த வாயுவினை சமநிலையில் உள்ள ஒரு அமைப்பின் சேர்ப்பதால் அது சமநிலையில் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
20.
(i) பொதுவாக, அழுத்தத்தில் ஏற்படும் மாற்றமானது திண்மங்கள் மற்றும் நீர்மங்களின் கரைதிறனில் குறிப்பிடத்தகுந்த விளைவை உருவாக்குவதில்லை.
(ii) ஏனெனில் அவை அமுங்குவதில்லை. எனினும், வாயுக்களின் கரைதிறனானது, பொதுவாக அழுத்தம் அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது.
21.
1. மனித நடவடிக்கைகள்
2. கரிமக் கழிவுகள்
3. தூர்ந்து போதல்
22.
(அ) \(Ca(HCO_{3})_{2} \rightarrow CaCO_{3}+CO_{2}+H_{2}O\)
(ஆ) \(2CaO_{(s)}+5C_{(s)} \rightarrow 2CaC_{2(s)}+CO_{2(s)}\)
23.
ஒரு அனுவின் சராசரி அணுநிறைக்கும், ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம்.
ஒப்பு அணு நிறை (Ar) = அனுவின் சராசரி நிறை / ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறை
24.
(i) லாந்தனைடுகள்: [54Xe] 4f1-145d1 6s2
(ii) ஆக்டினைடுகள்: [86Rn] 5f0-14 6d0-2 7s2
25.

புதிய கவர்ச்சி விசைகள் (கருப்பு நிற அம்புகுறி)
(i) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
(ii) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
புதிய விலக்கு விசைகள் (ஆரஞ்சு நிற அம்புக்குறி)
(i) Ha மற்றும் Hb ஆகிய அணுக்கருக்களுக்கிடையே உருவாகிறது.
(ii) Ha மற்றும் Hb ஆகிய இணைதிறன் எலக்ட்ரான்களுக்கு இடையே உருவாகிறது.
(iii) கவர்ச்சி விசையின் காரணமாக Ha மற்றும் Hb ஆகியன ஒன்றோடொன்று நெருங்குகின்றன. ஆனால் அதே நேரத்தில் விலக்குவிசைகள் அவைகளை விலகலடையுமாறுச் செய்கின்றன. ஆரம்ப நிலையில், இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஒன்றோடொன்று நெருங்கும்போது, விலக்கு விசையினைக் காட்டிலும், கவர்ச்சி விசைகள் அதிக வலிமையுடையதாக உள்ளன. மேலும் நிலை ஆற்றல் குறைந்துக் கொண்டே வருகின்றது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் நிகர கவர்ச்சி விசையானது விலக்கு விசைகளுக்குச் சரி சமமாகிறது. இந்நிலையில் அமைப்பானது, மிகக் குறைந்த நிலை ஆற்றலைப் பெற்றிருக்கும்.

H2 மூலக்கூறு உருவாதல் -VB கொள்கை
(i) இந்நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் (Ha மற்றும் Hb) அணு ஆர்பிட்டால்களுக்கிடையே அதிகபட்ச மேற்பொருந்துதல் நிகழ்கிறது. மேலும் இந்நிலையில் அவைகள் ஒன்றோடொன்று சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது. இந்நிலையில் அவ்விரு ஹைட்ரஜன் அணுக்களுக்கிடையேயானத் தொலைவு H-H பிணைப்பு நீளத்தைத் தருகிறது. அதன் மதிப்பு 74pm. இந்நிலையில் வெளியிடப்படும் பிணைப்பாற்றல் எனப்படுகிறது.
(ii) இந்த பிணைப்பு உருவாதலில் ஆற்றல் வெளியிடப்படுகிறது. எனவே உருவான மூலக் கூறானது அதிக நிலைப்புத்தன்மை உடையது.
இவ்விரு அணுக்களுக்கு இடையேயான தொலைவினை மேலும் குறைக்கும் பொழுது கவர்ச்சி விசையினைக் காட்டிலும் விலக்கு விசையானது அதிகரிப்பதால் அமைப்பின் நிலையாற்றல் அதிகரிக்கிறது.
26.
1. ஒரு வினைசெயல் தொகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மாறுபடுவதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
2. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ள சேர்மங்களின், வினைச்செயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்கைல் தொகுதிகள் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
3.ஈதர்கள், கீட்டோன்கள் எஸ்டர்கள் மற்றும் ஈரினைய அமீன்கள் போன்ற வினைச்செயல் தொகுதிகளைப் பெற்றுள்ள சேர்மங்களில் இம்மாற்றியம் காணப்படுகின்றது.
4. அதாவது ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினையும், நீண்ட கார்பன் சங்கிலித் தொடரில் (நேராக அல்லது பக்கச் சங்கிலி அமைப்புடைய) மாறுபட்டும் காணப்படும் மாற்றியங்கள் இவ்வகைப்படும்.
எ.கா:
C4H10O விற்கான இணை மாற்றியங்கள் பின்வருமாறு
CH3-O-C3H7
(மெத்தில் புரப்பையில் ஈதர்)
C2H5-O-C2H5
(டைஎத்தில் ஈதர்)
\(C{ H }_{ 3 }-O-\underset { \overset { | }{ C{ H }_{ 3 } } }{ CH } -C{ H }_{ 3 }\)
(மெத்தில் ஐசோ-புரப்பைல் ஈதர்)
27.
1. இச்செயல் முறையில், சகப்பிணைப்பானது சீரற்ற முறையில் பிளவுபடுகிறது. இதில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருந்த அணுக்களில் ஒரு அணு பிணைப்பு இரட்டை எலட்ரான்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.
2. இதன் விளைவாக ஒரு நேர் அயனி மற்றும் ஒரு எதிஅயனி உருவாகும். பிணைக்கப்பட்டிருந்த அணுக்களில் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட அணு எதிர் அயனியாகவும் மற்றொன்று நேர் அயனியாகவும் மாற்றமடைகிறது.
3. இப்பிளவானது அதிக எலக்ட்ரான் கவர்தன்மையுடைய அணுவினை நோக்கிய ஒரு வளைவான அம்புக்குறியால் குறிப்பிடப்படுகிறது.
4. எடுத்துக்காட்டாக, மூவிணைய பியூட்டைல் புரோமைடில் புரோமின் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை பெற்றிருப்பதால் C-Br பிணைப்பானது முனைவுள்ள பிணைப்பாகும்.
5. C-Br பிணைப்பில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான்கள் கார்பனைக் காட்டிலும் புரோமினால் அதிக அளவு கவரப்படுகின்றது.
6. எனவே, C-Br பிணைப்பானது நீராற்பகுத்தலில், சீரற்ற பிளப்பிற்கு உட்பட்டு மூவிணைய பியூட்டைல் நேர் அயனியினைத் தருகிறது.

7. ஆல்டிஹைடு அல்லது கீட்டோன்களில் காணப்படும் C-H பிணைப்பு பிளவுபடுதலை நாம் கருதுவோம். ஹைட்ரஜனைக் காட்டிலும் கார்பன் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது என நாம் அறிவோம் எனவே C-H பிணைப்பின் சீரற்ற பிளவால் கார்பன் எதிர் அயனி உருவாகிறது.
8. எடுத்துக்காட்டாக ஆல்டால் குறுக்க வினையில் OH- அயனியானது \(\alpha\)-ஹைட்ரஜனைக் கவர்வதால் பின்வரும் எதிர் அயனி உருவாகிறது.

28.
மொத்த அழுத்தம் = 1 atm
PN2 = \(\left( \frac { 80 }{ 100 } \right) \\ \) x அதிக அழுத்தம்
= \(\frac { 80 }{ 100 } \) x 1 atm
= 0.8 atm
PO2 = \(\left( \frac { 20 }{ 100 } \right) \) x 1
= 0.2 atm
ஹென்றி விதிப்படி,
Pகரைபொருள் = KH x கரைசலின் கரைபொருள்
PN2 = (KH)நைட்ரஜன் x கரைசலின் நைட்ரஜன் மோல் பின்னம்
⇒ \(\frac { 0.8 }{ 8.5\times { 10 }^{ 4 } } ={ X }_{ { N }_{ 2 } }\\ \)
⇒ \({ X }_{ { N }_{ 2 } }\\ \) = 9.4 x 10-6
இதைப்போலவே
\({ X }_{ { O }_{ 2 } }=\frac { 0.2 }{ 4.6\times { 10 }^{ 4 } } \)
= 4.3 x 10-6
29.
30.
(i) ஒரு தனித்த தனிமத்தின் (அதவாது வேறெந்த தனிமத்துடனும் பிணைத்துக்காத நிலையில்) ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
எடுத்துக்காட்டு: H2, C12, Na, S8 ஆகியவற்றில் காணப்படும் அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
(ii) ஓரணுவினைக் கொண்ட அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை என்பது அந்த அயனியின் மீதுள்ள நிகர் மின்சுமைக்குச் சமம்.
எடுத்துக்காட்டு:
Na+ அயனியில் உள்ள சோடியத்தின் ஆக்சிஜனேற்ற எண் +1 ஆகும்.
Cl- அயனியில் உள்ள குளோரின் ஆக்சிஜனேற்ற எண் -1
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து உள்ள அனைத்து அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்யமாகும். அயனிகளைப் பொறுத்தவரையில் இக் கூடுதல் மதிப்பு அயனியின் மீதுள்ள நிகர மின்சுமைச் சமம்.
எடுத்துக்காட்டு:
H2SO4 ல் , (2 X H -ன் ஆக்சிஜனேற்ற எண்) +(S- ஆக்சிஜனேற்ற எண்) +(4x ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்)=0
\({ SO }_{ 4 }^{ 2- }\)ல் (1 X S-ன் ஆக்சிஜனேற்ற எண்)+(4 X O-ன் ஆக்சிஜனேற்ற எண்) =-2
(iv) உலோக ஹைட்ரைடுகளைத் தவிர பிற அனைத்துச் சேர்மங்களிலும் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1, உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
ஹைட்ரஜன் குளோரைடில் (HCl), ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1
சோடியம் ஹைட்ரைடில் (NaH) ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் -1
(V) அனைத்துச் சேர்மங்களிலும் புளூரினானது -1 ஆக்சிஜனேற்ற நிலையினைக் கொண்டுள்ளது.
(Vi) பெரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜன் -2 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது. பெராக்சைடுகள், சூப்பர் ஆக்சைடுகள், புளூரினின் சேர்மங்கள் ஆகியன இதற்கு விதிவிலக்காக அமைகின்றன.
எடுத்துக்காட்டுகள்: ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்
நீரில் (H2O) -2 [2 (+ 1)+ x = 0; x = -2]
ஹைட்ரஜன் பெராக்ஸைடில் (H2O2)
H2O2
2 (+ 1) + 2x = 0;
⇒2x =-2;
⇒x =-1
KO2 போன்ற சூப்பர் ஆக்சைடுகளில் -\(\frac {1}{2}\)+1 + 2x = 0·,
2X =-1; X=--\(\frac {1}{2}\)
ஆக்சிஜனின் டைபுளூரைடில் (OF2) + 2.
x + 2 (-1) = 0; x = + 2
(vii) அனைத்துச் சேர்மங்களிலும், கார உலோகங்கள் +1 ஆக்சிஜனேற்ற நிலையினையும், காரமண் உலோகங்கள் +2 ஆக்சிஜனேற்ற நிலையினையும்,பெற்றுள்ளன.
31.
இயக்குதிறன் சதவீதம் \(\left[ \frac { { T }_{ h }-{ T }_{ c } }{ { T }_{ h } } \right] \times 100\)
இங்கு
Th=816+273=1089k
Tc=21+273=294k
இயக்குதிறன் சதவீதம் \(=\left( \frac { 1089-294 }{ 1089 } \right) \times 100\)
இயக்குதிறன் சதவீதம்=73%
32.
33.
m = 160 g = 160 × 10–3 kg
v = 140 km hr–1=\(\frac{140\times10^{3}}{60\times60}ms^{-1}\)
v = 38.88 ms–1
\(\lambda=\frac{h}{mv}\)
\(\lambda=\frac{6.626\times10^{-34}Kgm^{2}s^{-1}}{160\times10^{-3}kg\times38.88ms^{-1}}\)
\(\lambda=1.065\times10^{-34}m\)
34.
1. ஹைட்ரஜனின் ஐசோடோப்பு ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கனநீரைத் தருகிறது.
(B)
2D2 + O2 \(\rightarrow\) 2D2 O
2. டியூட்டிரியம் ஆனது புரப்பீனுடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு புரோப்பேன் டியூட்ரைடைத் தருகிறது.
(A) (C) (D)
CH3CH = CH2 \(\overset { { D }_{ 2 } }{ \longrightarrow } \) CH3 - CHD - CH2D
(C) (D)
முடிவு:
| குறியீடு | பெயர் | வாய்பாடு |
|---|---|---|
| A | டியூட்டிரியம் | D2 |
| B | கனநீர் | D2O |
| C | புரப்பீன் | CH3CH = CH2 |
| D | புரோப்பேன் டியூட்ரைட் | CH3 - CHD - CH2D |
35.
| மீளும் வினை | சமநிலை மாறிலி |
| முன்னோக்கு வினைக்கு \(xA+yB\rightleftharpoons lC+mD\) |
KC என்க |
| வினையை மருதிசையில் மாற்றி எழுதும்போது,\(lC+mB\rightleftharpoons xA+yB\) | \({ K }_{ C }^{ 1 }=\frac { 1 }{ { K }_{ C } } \) |
| \(\begin{matrix} A\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons B } & B\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons C } \\ C\overset { { K }_{ 3 } }{ \rightleftharpoons D } & A\overset { { K }_{ 4 } }{ \rightleftharpoons D } \end{matrix}\) எனில் |
\({ K }_{ 4 }={ K }_{ 1 }{ K }_{ 2 }K_{ 3 }\) |
36.

37.
38.
குளுக்கோஸின் நிறை = 2.82 g
குளுக்கோஸின் மோல்களின் எண்ணிக்கை = \(\frac { 2.82 }{ 180 } \)
நீரின் நிறை = 30g
= \(\frac { 30 }{ 18 } \)
= 1.67
XH2O = \(\frac { 1.67 }{ 1.67+0.016 } \)
= \(\frac { 1.67 }{ 1.686 } \)
= 0.99
∴ XH2O + Xகுளுக்கோஸ் = 1
0.99 + Xகுளுக்கோஸ் = 1
Xகுளுக்கோஸ் = 1 - 0.99
= 0.01.
39.
1.008g ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்ஸிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அயனியின் நிறையே, அதன் கிராம் சமான நிறை என வரையறுக்கப்படுகிறது.
2. சமான நிறைக்கு அலகு இல்லை.
40.
1. ஆறு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள கார்பன் அணுவினை கருதுவோம்.
2. ஆஃபா தத்துவத்தின்படி இதன் எலக்ட்ரான் அமைப்பு 6C=1s22s22p2
3. இதனை பின்வருமாறு குறிப்பிடலாம்

4. மேற்கண்ட நிகழ்வில் எலக்ட்ரான் -எலக்ட்ரான் விலக்குவிசையினை குறைத்திட ஹீண்ட் விதிப்படி ஆறாவது எலக்ட்ரானானது ஐந்தாவது எலக்ட்ரான் இடம் கொண்டுள்ள px ஆர்பிட்டாலில் சென்று இரட்டையாகாமல் py ஆர்பிட்டாலுக்குச் செல்கிறது.
41.
1. எந்த ஒரு வலிமை மிக அமிலம் மற்றும் வலிமை மிக காரம் ஆகியவற்றின் நடுநிலையாக்கள் வெப்ப மதிப்பு ஏறக்குறைய-57.32 KJ.
2.அமிலம் அல்லது காரத்தின் தன்மையைப் பொறுத்து இம்மதிப்பு மாறுவதில்லை.
சான்று:
(i) \(HCl_{(aq)}+KOH_{(aq)} \rightarrow KCl_{(aq)}+H_2O_{(l)}[ \)
\(\triangle H \simeq -57.32 kJ\)
(ii) \(HNO_{3_{(aq)}}+KOH_{(aq)} \rightarrow KNO_{3_{(aq)}}+H_2O_{(l)}\)
\(\triangle H \simeq -57.32 kJ\)
(iii) \(H_2SO_{_4{(aq)}}+2KOH_{(aq)}\rightarrow K_2SO_{4_{(aq)}}+2H_2O_{l}\)
\(\triangle H \simeq -57.32 kJ\)
காரணம்:
1. அமில கரங்கள் பற்றிய அர்ஹீனியஸ் கொள்கை மூலம் இதற்கான காரணத்தினை விளக்க முடியும்.
2. இக்கொள்கைபடி ""வலிமை மிக அமிலங்கள் மற்றும் வலிமை மிகு அமிலங்கள் மற்றும் வலிமைமிகு காரங்கள் அவற்றின் நீர்க்கரைசல்களில் முற்றிலும் அயனிகளாக பிரிகையுற்று முறையே மற்றும் அயனிகளைத் தருகின்றன.
3.நடுநிலையாக்கல் வினை
\(H^{+}_{(aq)}+OH^+_{(aq)} \rightarrow H_2O_{(l)}\) \(\triangle H = -57.32 kJ\)
42.
உலோகத்தின் உருகுநிலையில் உலோகத் தொட்டியில் உள்ள வாயுவின் அழுத்தம்
T1 = 298K; P1=2.98atom; T2=1100K; P2=?
\({P_1\over T_1}={P_2\over T_2}\)
\(⇒\ P_2={P_1\over T_1}\times T_2\)
\(={2.98atm\over 298K}\times 1100 K=11atm\)
1100K வெப்பநிலையில் தொட்டியில் உள்ள வாயுவின் அழுத்தமானது 11atm ஆகிறது.உலோகத் தொட்டியானது அதிக பட்சமாக 12atm வரை தாங்கக்கூடியது என்பதால் தொட்டி முதலில் உருகத் தொடங்கும்.
43.
1. NH3, H2O, HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறுவரிசை.
NH3
(i) சிறிய உருவளவையும்
(ii) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையையும் பெற்றிருந்தால் H பிணைப்பு உண்டாகும்.
3. N, F, O - ஐ ஒப்பிட கவர் தன்மை வரிசை
F > O > N|
4. எனவே HF அதிக ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையைப் பெற்றுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards