11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/03/2019
11th Public Exam March 2019 Important 5 Marks Questions
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
நைட்ரஜன் ஆக்சைடுகள் பற்றிய குறிப்பைத் தருக.
2.
இயல்புக் கரைசல்கள் - ரெளல்ட் விதியிலிருந்து எவ்வாறு எதிர் விலக்கம் பெற்றுள்ளன என்பதை வரைபடுத்துடன் விளக்கு.
3.
ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
4.
HI உருவாதல் வினைக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிட்டு .
5.
ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.
6.
இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.
7.
நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.
8.
பீனாலின் அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.
9.
மீத்தேன் குளோரினுடன் புரியும் வினையின் வினை வழிமுறையை எழுதுக.
10.
வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.
11.
0.185g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுன் சேர்ந்து 0.320g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க (Ag=108, Br=80)
12.
298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
N2O4(g) ⇌ 2NO2(g);
வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.
13.
லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
14.
சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை விளக்குக.
15.
கால்சியம் ஆக்ஸைடு தயாரித்தலை விளக்கி அதன் பண்புகளை எழுதுக.
16.
இணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலையை வரையறுத்து அதில் காணப்படும் ஆவர்த்தன தன்மையை விளக்குக.
17.
அக ஆற்றலின் சிறப்பியல்புகளை பட்டியலிடுக.
18.
தொழில் முறையில் ஹைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
19.
ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.
20.
ஆக்ஸிஜவனற்ற எண் முறை விரிவாக விளக்குக.
21.
ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.
22.
எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.
23.
அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரியின் முக்கியக் கூறுகள் யாவை?
24.
போர் அணு மாதிரியின் கருது கோள்களை எழுதுக.
25.
N2 (g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையில் 298K ல் KP ன் மதிப்பு 8.19x102 மற்றும் 498Kல் 4.6 x 10–1 ஆகும். வினைக்கான ΔH0 னை கணக்கிடுக
26.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலையில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.
27.
400k வெப்பநிலையில் பின்வரும் வினையின் சமநிலை மாறிலி keq மதிப்பை காண்க
\(2NOCl(g)⇌2NO(g)+Cl_2(g),\)
\(\triangle H^0=77.2KJ mol^{-1};\)
மற்றும் \(\triangle S^0=122JK^{-1}mol^{-1}\)
28.
ஒரு நல்லியல்பு வாயுவிற்கு \(\triangle H \) க்கும் \(\triangle U \) க்கும் இடையே உள்ள தொடர்பை வருவி. சமன்பாட்டிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் விளக்குக.
29.
CaCl2 உருவாதல்செயல்முறைக்கு பார்ன்-ஹேபர் சுற்றை எழுதுக.
30.
இயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.
31.
தனிம பகுப்பாய்வில் ஒரு சேர்மம் பின்வரும் தரவுகளை தருகிறது.Na = 14.31%, S = 9.97% H= 6.22%, O= 69.5% சேர்மத்திலுள்ள ஹைட்ரஜன் முழுவதும் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து படிக நீராக இருக்கிறது, எனில் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் காண்க. சேர்மத்தின் மூலக்கூறு நிறை 322.
32.
மூன்றாம் வரிசையை சேர்ந்த காரமண் உலோகம் (A), ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் வினைப்பட்டு முறையே சேர்மங்கள் (B) மற்றும் (C) ஐ தருகின்றன.இது AgNO3 கரைசலுடன் உலோக இடபெயர்ச்சி வினைக்குட்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது. (A) ,(B), (C),மற்றும் (D) ஐ கண்டுபிடி.
33.
140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.
34.
நிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.
35.
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
36.
பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl– அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å
37.
அயனியாக்கும் ஆற்றலின் ஆவர்த்தன தொடர்பினை விவரி.
38.
H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக
39.
பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள ஒரு முதல் தொகுதி உலோகம் (A) ஆனது (B) உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தினைத் தருகிறது. இச்சேர்மத்தில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. (B) ஆனது (D) என்ற வாயுவுடன் வினைப்பட்டு அனைத்துக் கரைப்பானான (E) ஐத் தருகிறது. சேர்மம் (D) ஆனது (A) உடன் வினைப்பட்டு (F) என்ற ஒரு வலிமையான காரத்தினைத் தருகிறது. A, B, C, D, E மற்றும் F யைக் கண்டறிக. வினைகளை விளக்குக
40.
மெக்னீசியம் கார்பனேட்டில் அடங்கியுள்ள தனிமங்களின் சதவீத இயைபினைக் கண்டறிக. 90% தூய்மையான 1 kg CaCo3 ஐ வெப்பப்படுத்தும் போது உருவாகும் CO2 ன் நிறையை கிலோகிராமில் கணக்கிடுக
1.
உருவாதல்:
உயர் வெப்பநிலை எரிதல் செயல் முறைகள்,காற்றில் நைட்ரஜன் ஆக்ஸிஜனேற்றமடைதல் மற்றும் எரிபொருள்கள் எரித்தல் ஆகியவற்றின் போது நைட்ரஜன் ஆக்ஸைடுகள் வெளியேற்றப்படுகின்றன.

விளைவுகள்:
1. இந்த வாயுக்கள் அனைத்தும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்பட்டு அமில மழையாக பொழிகின்றன.
2. கடுமையான போக்குவரத்து நெரிசலில், நைட்ரஜன் ஆக்சைடுகள் செம்பழுப்பு நிற தூசிப் பனி மூட்டத்தை உருவாக்குகின்றன.
3. நைட்ரஜன் டையாக்சைடானது தாவர இலைகளை வெகுவாக பாதித்து ஒளிர்ச்சேர்க்கையை தடுக்கிறது.
4. NO2 ஆனது சுவாசப்படி எரிச்சலூட்டி
5. NO2 ஆனது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பை உருவாக்குகிறது.
6. NO2 ஆனது பல்வேறு துணி இழைகள் மற்றும் உலோகங்களும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
2.
(i) தனித்தனி மூலக்கூறுகளுக்கிடையே (A -A & B - B) உள்ள கவர்ச்சி விசைகளை விட கரைபொருள் (A) மற்றும் கரைப்பான் (B) ஆகியவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சிவிசை அதிகமாக உள்ள ஒரு கரைசலைக் கருதுவோம்.
(ii) A மற்றும் B ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட நல்லியல்புக் கரைசலுடன் ஒப்பிடும்போது, A மற்றும் B ஆகியவற்றின், கரைசலிலிருந்து தப்பித்துச் செல்லும் திறன் குறைவாக உள்ளது.
(iii) எனவே, இதன் விளைவாக, இத்தகைய இயல்புகரைசல்களின் ஆவிஅழுத்தம், A மற்றும் B ஆகியவற்றின் ஆவிஅழுத்தங்களின் கூடுதலை விட குறைவாக உள்ளது.
(iv) இந்த வகை விளக்கமானது எதிர்குறி விலக்கம் என்றைக்கப்படுகிறது.
எதிர்குறி விலக்கத்திற்கு
pA < p0A xA மற்றும் pB < p0B xB
(v) பீனால் மற்றும் அனிலீன் கலந்து கரைசலை நாம் கருதுவோம். பீனால் மற்றும் அனிலீன் ஆகிய இரண்டிலும் மூலக்கூறுகளுக்கு இடையே ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படுகிறது.
(vi) எனினும், அனிலீனுடன் கலக்கும்போது, பீனால் மூலக்கூறுகள், தங்களுக்குள் உருவான ஹைட்ரஜன் பிணைப்புகளைவிட வலுவான ஹைட்ரஜன் பிணைப்பிணை அனிலீன் மூலக்கூறுகளுடன் உருவாக்குகின்றன.
(vii) புதிய ஹைட்ரஜன் பிணைப்பு உருவாக்கமானது, பீனால் மற்றும் அனிலீன் மூலக்கூறுகளின் கரைசலிலிருந்து தப்பித்துச் செல்லும் திறனை கணிசமாக குறைகிறது.
(viii) இதன் விளைவாக, கரைசலின் போது கனஅளவு சிறிது குறைகிறது.(ΔVகலத்தல் < 0).
(ix) இச்செயல் முறையின்போது வெப்பஉமிழ்வு நிகழ்கிறது. அதாவது, ΔVகலத்தல் < 0 (வெப்பம் உமிழ் வினை)
எதிர் விலக்கம் காட்டும் இயல்புக் கரைசல்களுக்கு எடுத்துக்காட்டுகள்:
(i) அசிட்டோன் + குளோரோஃபார்ம், குளோரோஃபார்ம் + டைஎத்தில் ஈதர், அசிட்டோன் + ஆனிலீன், குளோரோஃபார்ம் + பென்சீன்.

3.
1.எடை அறிந்த கரிமச்சேர்மம், புகையும் HNO3 மற்றும் AgNO3 வுடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது. C, H மற்றும் S முறையே CO2, H2O மற்றும் SO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது. ஹாலஜன்கள் AgNO3 வுடன் சேர்ந்து வெள்ளிஹாலைடுகளாக வீழ்படிவாகின்றன.

2.AgX வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவி, உலர்த்தி எடையறியப்படுகிறது. AgX ன் மற்றும் கரிமச்சேர்மத்தின் எடை ஆகியவற்றில் இருந்து ஹாலஜன்களின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
3. ஒரு தூய்மையான கேரியஸ் குழாயில் துல்லியமாக எடையறியப்பட்ட சேர்மம் புகையும் HNO3 மற்றும் AgNO3 ஆகியவனவற்றுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4.குழாயின் திறந்த முனை மூடப்பட்டு இரும்பு குழாயினுள் 530-540 K வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.
5. பின்னர் குழாயானது குளிர்விக்கப்படுகிறது. இக்குழாயில் சிறிய துளையிடப்பட்டு உருவான வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது.
6.அதன் பின்னர் குழாய் உடைக்கப்பட்டு வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு எடை கண்டறியப்படுகிறது.
7. உருவான AgX ன் நிறையிலிருந்து, கரிமச் சேர்மத்திலுள்ள ஹாலஜனின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
கரிமசேர்மத்தின் எடை : w g
AgCl வீழ்ப்படிவின் எடை : a g
143.5 AgCl ல் உள்ள குளோரினின் எடை =35.5 g
a g AgCl ல் உள்ள குளோரினின் எடை= \(\frac{35.5}{143.5}\)x a
W g கரிமச் சேர்மம் a g AgCl யை தருகிறது.
w g கரிமச் சேர்மத்திலுள்ள குளோரினின் சதவீதம்
=\((\frac{35.5}{143.5}\times \frac{a}{w}\times100)\)%
சில்வர் புரோமைடின்எடை 'b' g என கருத்துக.
188 g AgBr ல் 80 g Br உள்ளது.
W g கரிமச் சேர்மம் b g AgBr யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
Br ன் சதவீதம் =\((\frac{80}{188}\times \frac{b}{w}\times 100)\)%
சில்வர் ஐயோடைடு எடை 'c' g என கருத்துக.
235g Agl ல் 127 g I.
C g Agl ல்\((\frac{127}{235}\times \frac{c}{w})\) g I உள்ளது.
W g கரிமச் சேர்மத்தில் c g AgI யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
I ன் சதவீதம் =\((\frac{127}{235}\times \frac{c}{w}\times 100)\)%
4.
HI உருவாகும் வினையை நாம் கருதுவோம். 'a' மோல் நைட்ரஜன் மற்றும் 'b' மோல் அயோடி வாயுக்கள், 'V' கொளவுள்ள உடைய கலனில் வினைபுரிய அனுமதிக்கப்படுகின்றன. X மோல் ஹைட்ரஜன் X மோல் அயோடினுடன் வினைபுரிந்து 2x மோல் HIஐ தருவதாகக் கொள்வோம்.
\({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }(g)\rightleftharpoons 2HCI_{ 2 }(g)\)
| H2 | I2 | HI | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a | b | 0 |
| வினைபட்ட மோல்களின் எண்ணிக்கை | x | x | 0 |
| சமநிலையில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a -x | b -x | 2x |
| சமநிலையில் மோலார் செறிவு | \(\frac { a-x }{ V } \) | \(\frac { b -x }{ V } \) | \(\frac { 2x }{ V } \) |
நிறைதாக்க விதியைக் பயன்படுத்த,
\({ K }_{ C }=\frac { \left[ HI \right] ^{ 2 } }{ \left[ { H }_{ 2 } \right] \left[ { I }_{ 2 } \right] } \)
\(=\frac { \left( \frac { 2x }{ V } \right) ^{ 2 } }{ \left( \frac { a-x }{ V } \right) \left( \frac { b-x }{ V } \right) } =\frac { { 4x }^{ 2 } }{ (a-x)(b-x) } \)
சமநிலை மாறிலி KP ன் மதிப்பினை பின்வருமாறு கணக்கிட இயலும்.
KP க்கும் KC க்கும் இடையேயான தொடர்பினை நாம் அறிவோம்.
\({ K }_{ p }={ K }_{ C }(RT)^{ (\triangle { n }_{ g }) }\)
இங்கு
\(\triangle n(g)={ n }_{ p }-{ n }_{ r }=2-2=0\)
எனவே \({ K }_{ p }={ K }_{ C }\)
\({ K }_{ p }=\frac { { 4x }^{ 2 } }{ (a-x)(b-x) } \)
5.

புதிய கவர்ச்சி விசைகள் (கருப்பு நிற அம்புகுறி)
(i) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
(ii) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
புதிய விலக்கு விசைகள் (ஆரஞ்சு நிற அம்புக்குறி)
(i) Ha மற்றும் Hb ஆகிய அணுக்கருக்களுக்கிடையே உருவாகிறது.
(ii) Ha மற்றும் Hb ஆகிய இணைதிறன் எலக்ட்ரான்களுக்கு இடையே உருவாகிறது.
(iii) கவர்ச்சி விசையின் காரணமாக Ha மற்றும் Hb ஆகியன ஒன்றோடொன்று நெருங்குகின்றன. ஆனால் அதே நேரத்தில் விலக்குவிசைகள் அவைகளை விலகலடையுமாறுச் செய்கின்றன. ஆரம்ப நிலையில், இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஒன்றோடொன்று நெருங்கும்போது, விலக்கு விசையினைக் காட்டிலும், கவர்ச்சி விசைகள் அதிக வலிமையுடையதாக உள்ளன. மேலும் நிலை ஆற்றல் குறைந்துக் கொண்டே வருகின்றது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் நிகர கவர்ச்சி விசையானது விலக்கு விசைகளுக்குச் சரி சமமாகிறது. இந்நிலையில் அமைப்பானது, மிகக் குறைந்த நிலை ஆற்றலைப் பெற்றிருக்கும்.

H2 மூலக்கூறு உருவாதல் -VB கொள்கை
(i) இந்நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் (Ha மற்றும் Hb) அணு ஆர்பிட்டால்களுக்கிடையே அதிகபட்ச மேற்பொருந்துதல் நிகழ்கிறது. மேலும் இந்நிலையில் அவைகள் ஒன்றோடொன்று சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது. இந்நிலையில் அவ்விரு ஹைட்ரஜன் அணுக்களுக்கிடையேயானத் தொலைவு H-H பிணைப்பு நீளத்தைத் தருகிறது. அதன் மதிப்பு 74pm. இந்நிலையில் வெளியிடப்படும் பிணைப்பாற்றல் எனப்படுகிறது.
(ii) இந்த பிணைப்பு உருவாதலில் ஆற்றல் வெளியிடப்படுகிறது. எனவே உருவான மூலக் கூறானது அதிக நிலைப்புத்தன்மை உடையது.
இவ்விரு அணுக்களுக்கு இடையேயான தொலைவினை மேலும் குறைக்கும் பொழுது கவர்ச்சி விசையினைக் காட்டிலும் விலக்கு விசையானது அதிகரிப்பதால் அமைப்பின் நிலையாற்றல் அதிகரிக்கிறது.
6.
1. ஒரு வினைசெயல் தொகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மாறுபடுவதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
2. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ள சேர்மங்களின், வினைச்செயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்கைல் தொகுதிகள் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
3.ஈதர்கள், கீட்டோன்கள் எஸ்டர்கள் மற்றும் ஈரினைய அமீன்கள் போன்ற வினைச்செயல் தொகுதிகளைப் பெற்றுள்ள சேர்மங்களில் இம்மாற்றியம் காணப்படுகின்றது.
4. அதாவது ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினையும், நீண்ட கார்பன் சங்கிலித் தொடரில் (நேராக அல்லது பக்கச் சங்கிலி அமைப்புடைய) மாறுபட்டும் காணப்படும் மாற்றியங்கள் இவ்வகைப்படும்.
எ.கா:
C4H10O விற்கான இணை மாற்றியங்கள் பின்வருமாறு
CH3-O-C3H7
(மெத்தில் புரப்பையில் ஈதர்)
C2H5-O-C2H5
(டைஎத்தில் ஈதர்)
\(C{ H }_{ 3 }-O-\underset { \overset { | }{ C{ H }_{ 3 } } }{ CH } -C{ H }_{ 3 }\)
(மெத்தில் ஐசோ-புரப்பைல் ஈதர்)
7.
(i) நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் அமைப்பினை நாம் வரைவோம்.
(ii) அணுக்களின் அமைவு அமைப்பு

(iii) HNO3 ல் உள்ள ஒட்டு மொத்த இணைதிற எலக்ட்ரான்கள் =[(ஹைட்ரஜன்)+[1 க்ஸ் 5(நைட்ரஜன்)]+[3 x 6(ஆக்சிஜன்)]=1+5+18=24
(iv) அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை வரைக. படத்தில் காட்டியுள்ளவாறு நான்கு பிணைப்புகளை வரைய இயலும். இது எட்டு எலக்ட்ரான்களால் (4 பிணைப்பு இரட்டை) உருவாக்கப் பட்டதாகும்.

(v) மீதமுள்ள 16 எலக்ட்ரான்களை (24-8=16) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய ஆக்சிஜன் துவங்கி ஒவ்வொரு அணுவும் எட்டு எலக்ட்ரான்கள் பெறும் வகையில் பங்கீடு செய்ய வேண்டும். ஆறு தனித்த ஜோடி எலக்ட்ரான்கள், வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஒவ்வொரு ஆக்சிஜன் மீதும் தலா மூன்று ஜோடி தனித்த எலக்ட்ரான்கள் எட்டு எலக்ட்ரான் விதியை நிறைவு செய்யும் வகையில் பங்கிடப்படுகின்றது.
மீதமுள்ள இரு தனித்த இரட்டைகளை ஹைட்ரஜனோடு இணைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மீது பங்கிடுவதன் மூலம் அது எட்டு எலக்ட்ரானை பெறும்.

(vi) அனைத்து அணுக்களும் எட்டு எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேற்கண்டுள்ள பங்கீட்டில், நைட்ரஜனானது எட்டு எலக்ட்ரான்களுக்கு இரு எலக்ட்ரான்களை குறைவாக பெற்றுள்ளது. எனவே வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஆக்சிஜனிலிருந்து ஒரு தனித்த இரட்டையினை நகர்த்துவதன் மூலம் அந்த ஆக்சிஜனுக்கும், நைட்ரஜனுக்கும் இடையே மற்றொரு பிணைப்பினை உருவாக்குக.

8.
1. பீனாலின் அமிலத்தன்மை போன்ற பண்புகளை உடனிசைவை பயன்படுத்தி விளக்க இயலும்.
2. + M விளைவின் காரணமாக, பீனாலைக் காட்டிலும், பீனாக்ஸைடு அயனி அதிக நிலைப்புத்தன்மையினைப் பெறுகிறது எனவே உடனிசைவால் பீனால் அயனியுற்று H+ ஐ தருதல் சாதகமாகிறது.

3. மேற்கண்டுள்ள அமைப்புகளில் பீனாலின் அமைப்பின் பிரிக்கப்பட்ட மின்சுமை உடைய அமைப்பு காணப்படுகிறது.
4. இவ்வமைப்பிற்கு ஆற்றல் தேவை ஆனால் பீனாக்ஸைடு அயனியில் இத்தகைய அமைப்புக் காணப்படுவதில்லை.
5. இவ்வாறாக பீனாக்ஸைடு அயனி அதிக நிலைப்புத் தன்மையினைப் பெற்றிருப்பதால் பீனால் அமிலத்தன்மையினைப் பெற்றுள்ளது.
9.
இவ்வினையானது தனி உறுப்பு சங்கிலி தொடர் வினை வழி முறையினை பின்பற்றுகின்றது.இவ்வினை வழி முறையில் , ஆரம்ப நிலை , வினைத் தொடர்தல் நிலை , முடிவு ஆகிய மூன்று படி நிலைகள் உள்ளன.
i) சங்கிலி வினையின் ஆரம்ப நிலை : புற ஊதா கதிர்களால் குளோரின் மூலக்கூறுகள் சீராக பிளவுற்று , தனி உறுப்புகளை (குளோரின் அணுக்கள் ) உருவாக்குவதால் சங்கிலி வினையானது தொடங்கப்படுகிறது.

இங்கே C1 -C1 பிணைப்பு பிளவுருகின்றது ஏனெனில் C - C & H - H பிணைப்புகள் C1 - C1 பிணைப்பை விட அதிக வலிமை வாய்ந்தவை.
(ii) வினைத் தொடரும் நிலை : இப்படிநிலை கீழ்கண்டவாறு நடைபெறுகின்றது .
அ குளோரின் தனி உறுப்பு , மீத்தேன் மூலக் கூறினைத் தாக்கி C - H பிணைப்பில் பிளவு ஏற்பட்டு மெத்தில் தனி உறுப்புகளை உருவாக்குகின்றன,

ஆ உருவாகிய மெத்தில் தனி உறுப்பு இரண்டாவது குளோரின் மூலக்கூறைத் தாக்கி , குளோரோ மீத்தேன் (CH 3C1 ) மற்றும் குளோரின் தனி உறுப்பை உருவாக்குகின்றன.

இ உருவாகிற குளோரின் தனி உறுப்பு படி (அ)- ல் குறிப்பிடப்பட்டுள்ள வினையில் ஈடுபடுகிறது. மேலும் படி (அ) மற்றும் (ஆ) - ல் குறிப்பிடப்பட்டுள்ள வினைகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால் சங்கிலித் தொடர்வினை நிகழ்கிறது.
10.
1. இச்செயல் முறையில், சகப்பிணைப்பானது சீரற்ற முறையில் பிளவுபடுகிறது. இதில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருந்த அணுக்களில் ஒரு அணு பிணைப்பு இரட்டை எலட்ரான்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.
2. இதன் விளைவாக ஒரு நேர் அயனி மற்றும் ஒரு எதிஅயனி உருவாகும். பிணைக்கப்பட்டிருந்த அணுக்களில் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட அணு எதிர் அயனியாகவும் மற்றொன்று நேர் அயனியாகவும் மாற்றமடைகிறது.
3. இப்பிளவானது அதிக எலக்ட்ரான் கவர்தன்மையுடைய அணுவினை நோக்கிய ஒரு வளைவான அம்புக்குறியால் குறிப்பிடப்படுகிறது.
4. எடுத்துக்காட்டாக, மூவிணைய பியூட்டைல் புரோமைடில் புரோமின் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை பெற்றிருப்பதால் C-Br பிணைப்பானது முனைவுள்ள பிணைப்பாகும்.
5. C-Br பிணைப்பில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான்கள் கார்பனைக் காட்டிலும் புரோமினால் அதிக அளவு கவரப்படுகின்றது.
6. எனவே, C-Br பிணைப்பானது நீராற்பகுத்தலில், சீரற்ற பிளப்பிற்கு உட்பட்டு மூவிணைய பியூட்டைல் நேர் அயனியினைத் தருகிறது.

7. ஆல்டிஹைடு அல்லது கீட்டோன்களில் காணப்படும் C-H பிணைப்பு பிளவுபடுதலை நாம் கருதுவோம். ஹைட்ரஜனைக் காட்டிலும் கார்பன் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது என நாம் அறிவோம் எனவே C-H பிணைப்பின் சீரற்ற பிளவால் கார்பன் எதிர் அயனி உருவாகிறது.
8. எடுத்துக்காட்டாக ஆல்டால் குறுக்க வினையில் OH- அயனியானது \(\alpha\)-ஹைட்ரஜனைக் கவர்வதால் பின்வரும் எதிர் அயனி உருவாகிறது.

11.
73.6
12.
13.
i.லித்தியத்தின் தனித்துவமான பண்பு
ii.Li+அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் அதன் மிகச்சிறிய உருவளவு,அதிக முனைவாக்கும் திறன்,அதிக நீரேற்றம் ஆற்றல் மற்றும் d-ஆர்பிட்டால்கள் இல்லாத்தன்மை போன்றவையே ஆகும்.
| லித்தியம் |
தொகுதியிலுள்ள மற்ற தனிமங்கள் |
|---|---|
| i.கடினமானது, ii.அதிக உருகுநிலை iii.மற்றும் கொதிநிலை கொண்டது |
i.மிதுவானவை, |
| iv.குறைவா வினைத்திறன் உடையது v.(எடுத்துக்காட்டாக,இது ஆக்சிஜனுடன் வினைப்பட்டு சாதாரண ஆக்சைடை உருவாக்குகிறது, பெராக்சைடுகளை உருவாக்குவது மிகவும் கடினம்,மேலும் இவற்றின் உயர் ஆக்சைடுகள் நிலைப்புத்தன்மை அற்றவை) |
ivஅதிக வினைதிறன் மிக்கவை |
| vi.நைட்ரஜனுடன் வினைபுரிந்து Li3 ஐ தருகிறது. | v.வினை இல்லை |
| vii.புரோமினுடன் மெதுவாக வினைபுரிகிறது | vi.வீரியத்துடன் வினைபுரிகின்றன. |
| viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிந்து அயனி கார்பைடுகளை உருவாக்குகின்றன. ix.எடுத்துக்காட்டாக 2Li+2C⟶Li2+C2 |
viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிவதில்லை. ஆனால் கார்பன் சேர்மங்களுடன் வினைபுரிகின்றன. 2Na+C2H2⟶Na2C2+H2 |
| x.இதன் சேர்மங்கள் நீரில் பகுதியளவு கரைகின்றன. | ix.நீரில் நன்கு கரைகின்றன. |
14.
i.சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் ஒற்றை மின்சுமையுடைய நேர் அயனிகள் அதிக அளவில் உயிர்திரவங்களில் காணப்படுகிறது.
ii.இது நீரில் கரைகிற அயனிச் சமநிலை மற்றும் நரம்பு தூண்டலை கடத்துதல் ஆகிய செயல்களில் இந்த அயனிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
iii.70kg எடையுடைய ஒரு மனிதனின் உடலில் மற்றும் 5g இரும்பு மற்றும் 0.06g காப்பருடன் ஒப்பிடும்போது 90g சோடியம் மற்றும் 170g பொட்டாசியம் அடங்கியுள்ளது.
iv.செல்களுக்கு வெளியே இரத்த பிளாஸ்மா மற்றும் செல்லைச் சூழ்ந்துள்ள இடைதிரவங்களில் சோடியம் அயனிகள் முதன்மையாகக் காணப்படுகின்றன.
v.நரம்பு சமிக்கைகளை கடத்திவதில் இவ் அயனிகள் பங்கு வகிக்கின்றன செல் சவ்வுகளின் வழியே நீர் கடத்தலுக்கும், சர்க்கரை மற்றும் அமினோ அமிலங்களை செல்லின் உள்ளே கடத்துவதற்கும் இந்த அயனிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
vi.சோடியம் மற்றும் பொட்டாசியம், ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்டிருந்த போதிலும் இந்த அயனிகள் கடத்தும் வழிமுறைகள் மற்றும் நொதிகளை செயலுற வைப்பதிலும்,செல்சுவரை ஊடுருவதிலும் இவைகள் குறிப்பிடத்தக்க வேறுபாட்டினைப் பெற்றுள்ளன.
vii.செல் திரவங்களின் உள்ளே பொட்டாசியம் அயனியானது அதிக அளவில் காணப்படுகிறது.இங்கே இவைகள் பல நொதிகளை செயலுறச் செய்கிறது குளுக்கோஸை ஆக்சிஜனேற்றம் செய்து ATPயை உருவாக்குகிறது.நரம்பு சமிக்கைகளை கடத்திவதில் சோடியம் - பொட்டாசியம் இறைப்பி முக்கியப்பங்காற்றுகின்றன.
15.
i.வணிக ரீதியில் சுண்ணாம்புக் கல்லை,சுண்ணாம்பு காளவாயில் 1070-1270K வெப்பநிலை எல்லையில் வெப்பப்படுத்துவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.
CaCO3⇌CaO+CO2
ii.இவ்வினை ஒரு மீள் வினையாதலால்,வினையினை முற்றிலும் நிகழ்ந்த எதுவாக,வினையில் உருவராகும் கார்பன்டையாக்ஸைடு உடனுக்குடன் நீக்கப்படுகிறது.
பண்புகள்:
iii.கால்சியம் ஆக்சைடு வெண்மைநிற படிக உருவமற்ற திண்மம்.இதன் உருகு நிமல 2870K . காற்றில் வைக்கப்படும் போது, கார்பன்டையாக்கசைடு மற்றும் ஈரப்பதத்தினை உறிஞ்சுகிறது.
CaO+H2O ➝ Ca(OH)2
CaO+CO2 ➝ CaCO3
iv.வரையறுக்கப்பட்ட நீரினைச் சேர்க்கும் போது, கால்சியம் ஆக்சைடு கட்டிகள் உடைக்கப்படுகின்றன.இச்செயல் சுண்ணாம்பை நீர்க்கச் செய்தல் என்றும் உருவாகும் வினை பொருள் நீற்றுச் சுண்ணாம்பு எனவும் அழைக்கப்படுகிறது.
CaO+H2O ➝ Ca(OH)2
v.சுட்ட சுண்ணாம்பு,கார்பன்டை ஆக்சைடுடன் வினைபட்டு சோடாச் சுண்ணாம்பு தருகிறது.
இது SiO2 மற்றும் P4O10 ஆகிய அமில ஆக்ஸைடுகளுடன் சேர்ந்து முறையே CaSiO3 றைறும் Ca3(PO4)2 ஆகியவற்றைத் தருகின்றது.
CaO+SiO2 ➝ CaSiO3
6CaO+P4O10 ➝ 2Ca3(PO4)2
16.
இணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலை:
(i) ஒரு அனுவின் இணைதிறன் என்பது ஹைட்ரஜனுடன் ஒப்பிடும்போது அவ்வணுவின் இணையக்கூடிய திறன் எனபப்டும்.
(ii) பொதுவாக இது இணைதிற கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அல்லது எட்டிலிருந்து அந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை கழித்துவிட்டு வரும் எண்ணிக்கையாகும்.
(iii) இணைதிறனுக்கு பதிலாக ஆக்ஸிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுவது எளிமையானதாக இருக்கும்.
ஆவர்த்தன தன்மை:
(i) ஒரு அணுவின் இணைதிறன் என்பது அதன் இணைதிற கூட்டில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து அமைகிறது.
(ii) ஒரு தொகுதியில் உள்ள தனிமங்களில் இணைதிற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமம் என்பதால், அதிகபட்சமாக இணைதிறன் என்பது மாறாமல் அதே மதிப்பினை பெற்றிருக்கும்..
(iii) எனினும் ஒரு வரிசையில் இணைதிற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இணைதிறனும் அதிகரிக்கிறது.
17.
1.ஒரு அமைப்பின் அக ஆற்றலானது ஒரு பொருண்மை சார்பண்பாகும். ஒரு அமைப்பிலுள்ள பொருளின் அளவை பொறுத்து இது அமைகிறது. அமைப்பிலுள்ள பொருளின் அளவை இரு மடங்காக்கும் போது,அக ஆற்றலும் இரு மடங்காகிறது.
2. ஒரு அமைப்பின் அக ஆற்றல் ஒரு நிலைச்சார்பு. இது அமைப்பின் நிலை மாறிகளை (T, P, V, k மற்றும் n) மட்டுமே சார்ந்து அமைகிறது. அக ஆற்றல் மாற்றமானது, இறுதிநிலையை அடைய எந்த வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதை பொறுத்து அமையாது.
3.அமைப்பின் அக ஆற்றல் மாற்றமானது \(\triangle U=U_f-U_i\)எனகுறிப்பிடப்படுகிறது.
4.சுற்று செயல்முறைகளில், அக ஆற்றலில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.
\(\triangle U\) (சுற்று)=0
5. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது.அதன் ஆரம்பநிலைஅக ஆற்றலைவிட குறைவாக இருக்கும் நிலையில் \(\triangle U\)ஆனது எதிர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=+ve(U_f>U_i)\)
6. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது(Uf),அதன் ஆரம்பநிலை(Ui)அக ஆற்றலைவிட அதிகமாக இருக்கும் நிலையில் \(\triangle U\)ஆனது நேர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=+ve(U_f>U_i)\)
18.
ஹைட்ரோ கார்பன்களை, நீராவியைக் கொண்டு மறு உருவாக்கம் செய்யும் முறையில், அதிக அளவில் ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம். இம்முறையில் மீத்தேனைப் போன்ற ஹைட்ரோ கார்பன்களை நீராவியுடன் கலந்து, 800-900°c வெப்பநிலையில், 35 atm அழுத்தத்தில் நிக்கல் வினை வேக மாற்றியின் மீது செலுத்தி ஹைட்ரஜன் பெறப்படுகிறது.
CH4 + H2O \(\rightarrow\) CO + 3H2
மற்றொரு முறையில், செஞ்சூட்டு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்பட்ட கல்கரியின் மீது நீராவியைச் செலுத்தி கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் பெறப்படுகின்றன. இம்முறையில் பெறப்படும் வாயுக்கள் அடங்கிய கலவை நீர் வாயு எனப்படுகிறது. இதனை தொகுப்பு வாயு எனவும் அழைக்கலாம். மெத்தனால் மற்றும் சில எளிய ஹைட்ரோகார்பன்களைப் போன்ற கரிமச்சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க இவ்வாயுக்கலவை பயன்படுவதால் இதனை தொகுப்புவாயு என்று அழைக்கின்றோம்.

நீர் வாயுவில் உள்ள கார்பன் மோனாக்சைடை கார்பன்-டை-ஆக்சைடாக மாற்றுதல்:
நீர்வாயுக் கலவையுடன், அதிக அளவு நீராவியினைச் சேர்த்து 400°C வெப்பநிலையில், இரும்பு (iron) / தாமிரம் (copper) வினைவேக மாற்றியைக் கொண்டுள்ள மாற்று உலையின் (shift Converter) வழியாகச் செலுத்துவதன் மூலம் நீர்வாயுக் கலவையில் உள்ள கார்பன் மோனக்சைடு, கார்பன் டை ஆக்சைடாக மாற்றலாம்.
CO + H2O \(\rightarrow\) CO2 + H2
மேற்கண்டுள்ள முறையில் உருவான CO2 வாயுவானது. பொட்டாசியம் கார்பனேட் கரைசலால் உறிஞ்சப்படுகிறது.
CO2 + K2CO3 + H2O \(\rightarrow\) 2KHCO3
19.
ஹைட்ரஜன் பிணைப்பு:
1. வேதியியல் மற்றும் உயிரியல் நிகழ்வுகளில் இயற்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான நிகழ்வு ஹைட்ரஜன் பிணைப்பாகும்.
2. DNA மற்றும் புரதங்களின் வடிவமைப்பில், ஹைட்ரஜன் பிணைப்பு மிக முக்கிய பாங்கு வகிக்கிறது.
3. ஒரு ஹைட்ரஜன் அணுவானது (H), அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய புளூரின் (F) அல்லது ஆக்ஸிஜன் (O) அல்லது நைட்ரஜன் (N) போன்ற அணுக்கள் ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் போது, அப்பிணைப்பு முனைவுறு பிணைப்பாகிறது.
4. இவ்விளைவின் காரணமாக முனைவுற்ற ஹைட்ரஜன் அணுவானது அதன் சூழலில் உள்ள மற்றொரு எலக்ட்ரான் கவர்தன்மை அதிகமுடைய அணுவுடன் ஒரு வலிமை குறைந்த நிலை மின்னியில் கவர்ச்சி விசையை ஏற்படுத்தும் இயல்பினைப் பெற்றுள்ளது.
5. இக்கவர்ச்சி விசையே ஹைட்ரஜன் பிணைப்பு (20-50 KJ mol-1) என்று அழைக்கப்படுகிறது. இப்பிணைப்பு விடுபட்ட கோடுகளால் (... ...) குறிக்கப்படுகிறது.
6. இப்பிணைப்பு சகப்பிணைப்பை விட வலிமை குறைவானது (>100 KJ mol-1) ஆனால் வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையைவிட வலிமையானது (<20 KJ mol-1) ஹைட்ரஜன் பிணைப்பானது. ஆவி அழுத்தம் (H2O மற்றும் H2 S) கொதிநிலை, திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் தன்மை (H2 O மற்றும் C2H5OH ). பரப்பு இழுவிசை, அடர்த்தி, பாகுநிலைத்தன்மை. ஆவியாதல் மற்றும் உருகுதலின் வெப்பம் போன்ற பல்வேறு இயற்பண்புகளில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு:
1. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பானது ஒரு தனித்த மூலக்கூறுக்கு உள்ளாகவே நிகழ்கிறது.

மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு:
1. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன்பிணைப்பானது இரண்டு வேறுபட்ட மூலக்கூறுகளுக்கிடையே நிகழ்கிறது.
2. ஹைட்ரஜன் பிணைப்பு இடைவினையை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக ஹைட்ரஜன் வழங்கி மற்றும் ஹைட்ரஜன் ஏறபியினை தகுந்த இடத்தில் பெற்றுள்ள ஒரே மாதிரியான மூலக்கூறுகள் அல்லது வெவ்வேறு மூலக்கூறுகளுக்கிடையே இத்தகைய ஹைட்ரஜன் பிணைப்பு உருவாகிறது.
3. எடுத்துக்காட்டாக: மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பானது, அம்மோனியா மூலக்கூறுகளுக்கிடையே நிகழலாம். அல்லது நீர் மூலக் கூறுகளுக்கிடையேயோ அல்லது அம்மோனியா மற்றும் நீர் மூலக்கூறுகளுக்கிடையேயோ உருவாகலாம்.
20.
இம்முறையில், வினியாபுரிவதற்கு முன்னுரும், வினை நிகழ்ந்த பிறகும், தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் வினையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை கணக்கிடலாம். அமில ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டால் பெர்ரஸ்சல்பேட் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையினைக் கருதுவோம். இவ்வினைக்கான சமன் செய்யப்படாத சமன்பாடு,
FeSO4 + KMnO4 + H2SO4 \(\rightarrow \)Fe2(SO4)3 + MnSO4 + K2SO4 + H2O
படி1: ஆக்சிஜனேற்ற எண்ணைய் பயன்படுத்தி, ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்சிஜனொடுக்கம் அடையும் வினைப்பொருட்களை (அணுக்கள்) கண்டறிக.
ஐந்து எலக்ட்ரான்களை ஏற்பதால், KMnO4 ல் உள்ள Mn ன் ஆக்சிஜனேற்ற எண் +7 லிருந்து +2 ஆகக், குறைகிறது.
ஒரு எலக்ட்ரானை இழப்பதால்,FeSO4 ல் உள்ள Fe ன் ஆக்சிஜனேற்ற எண் +2 லிருந்து +3 ஆகக், அதிகரிக்கிறது.

படி 2: ஏற்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை, இழக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம் என்பதால், பின்வருமாறு தொடர்புடைய வாய்ப்பாட்டினை, தகுந்த எண்ணால் குறுக்கு பெருக்கம் செய்து எலக்ட்ரான்களை சமப்படுத்துக. வினைவிளைபொருள் Fe2(SO4)3 ஆனது இரு மோல் இரும்பைக் கொண்டுள்ளதால், 1e- மற்றும் 5e- களை இரண்டால் பெருக்கவும்.

10 FeSO4 + 2KMnO4 + H2SO4 \(\rightarrow \) Fe2(SO4)3 + MnSO4 + K2SO4+ H2O
படி 3: ஆக்சிஜனேற்றம்/ஆக்சிஜனொடுக்கம் அடைந்த/ வினைவிளைபொருளை சமன் செய்தல்.
குறுக்கு பெருக்கம் செய்த பின், வினைபடு பொருட்களின் அடிப்படையில் வினைவிளை பொருளை (ஆக்சிஜனேற்றம்/ஆக்சிஜனொடுக்கம் அடைந்தவை) சமன் செய்யவும். மேற்கொண்டுள்ள சமன்பாடு பின்வருமாறு மாற்றமடைகிறது.
10 FeSO4 + 2KMnO4 + H2SO4 \(\rightarrow \) 5Fe2(SO4)3 + 2MnSO4 + K2SO4+ H2O
படி4.
H மற்றும் O வைத் தவிர்த்து பிற தனிமங்களை சமன் செய்க. இந்த தேர்வில், நாம் K மற்றும் S ஐ சமன் செய்ய வேண்டும் ஆனால் K மேற்கண்டுள்ளவாறு தானாகவே சமன் செய்யப்பட்டுள்ளது.
வினைபடு பொருள் :10'S' அணுக்கள் (10 FeSO4)
வினைவிளை பொருள் :18 'S' அணுக்கள்
5Fe2 (SO4)3 + 2MnSO4 + K2SO4
15S + 2S + IS = 18S
எனவே, வினைபடு பொருள் பகுதியில் 8-S அணுக்கள் குறைவாக உள்ளது. எனவே, H2SO4 ஐ '8' ஆல் பெருக்க.
10 FeSO4 + 2KMnO4 + 8H2SO4 \(\rightarrow \) 5Fe2(SO4)3 + 2MnSO4 + K2SO4+ H2O
படி5:
'H' மற்றும் 'O' அணுக்களை சமன் செய்தல்.
வினைபடு பொருள் பகுதி '16' -H அணுக்கள் (8H2SO4 i.e. 8 x 2H = 16 'H')
வினைவிளை பொருள் பகுதி '2' -H அணுக்கள் (H2O i.e. Ix 2H = 2 'H')
எனவே விளை பொருள் H2O மூலக்கூறை '8' - ஆல் பெருக்கு
10 FeSO4 + 2KMnO4 + 8H2SO4
\(\downarrow \)
5Fe2(SO4)3 + 2MnSO4 + K2SO4+ 8H2O
ஆக்சிஜன் அணு தானாகவே சமன் செய்யப்பட்டுவிட்டது. இதுவே சமன்படுத்தப்பட்ட சமன்பாடாகும்.
21.
(i) ஒரு தனித்த தனிமத்தின் (அதவாது வேறெந்த தனிமத்துடனும் பிணைத்துக்காத நிலையில்) ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
எடுத்துக்காட்டு: H2, C12, Na, S8 ஆகியவற்றில் காணப்படும் அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
(ii) ஓரணுவினைக் கொண்ட அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை என்பது அந்த அயனியின் மீதுள்ள நிகர் மின்சுமைக்குச் சமம்.
எடுத்துக்காட்டு:
Na+ அயனியில் உள்ள சோடியத்தின் ஆக்சிஜனேற்ற எண் +1 ஆகும்.
Cl- அயனியில் உள்ள குளோரின் ஆக்சிஜனேற்ற எண் -1
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து உள்ள அனைத்து அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்யமாகும். அயனிகளைப் பொறுத்தவரையில் இக் கூடுதல் மதிப்பு அயனியின் மீதுள்ள நிகர மின்சுமைச் சமம்.
எடுத்துக்காட்டு:
H2SO4 ல் , (2 X H -ன் ஆக்சிஜனேற்ற எண்) +(S- ஆக்சிஜனேற்ற எண்) +(4x ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்)=0
\({ SO }_{ 4 }^{ 2- }\)ல் (1 X S-ன் ஆக்சிஜனேற்ற எண்)+(4 X O-ன் ஆக்சிஜனேற்ற எண்) =-2
(iv) உலோக ஹைட்ரைடுகளைத் தவிர பிற அனைத்துச் சேர்மங்களிலும் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1, உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
ஹைட்ரஜன் குளோரைடில் (HCl), ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1
சோடியம் ஹைட்ரைடில் (NaH) ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் -1
(V) அனைத்துச் சேர்மங்களிலும் புளூரினானது -1 ஆக்சிஜனேற்ற நிலையினைக் கொண்டுள்ளது.
(Vi) பெரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜன் -2 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது. பெராக்சைடுகள், சூப்பர் ஆக்சைடுகள், புளூரினின் சேர்மங்கள் ஆகியன இதற்கு விதிவிலக்காக அமைகின்றன.
எடுத்துக்காட்டுகள்: ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்
நீரில் (H2O) -2 [2 (+ 1)+ x = 0; x = -2]
ஹைட்ரஜன் பெராக்ஸைடில் (H2O2)
H2O2
2 (+ 1) + 2x = 0;
⇒2x =-2;
⇒x =-1
KO2 போன்ற சூப்பர் ஆக்சைடுகளில் -\(\frac {1}{2}\)+1 + 2x = 0·,
2X =-1; X=--\(\frac {1}{2}\)
ஆக்சிஜனின் டைபுளூரைடில் (OF2) + 2.
x + 2 (-1) = 0; x = + 2
(vii) அனைத்துச் சேர்மங்களிலும், கார உலோகங்கள் +1 ஆக்சிஜனேற்ற நிலையினையும், காரமண் உலோகங்கள் +2 ஆக்சிஜனேற்ற நிலையினையும்,பெற்றுள்ளன.
22.
நிலை1: தனிமங்களின் இயைபானது சதவீதத்தில் குறிப்பிடப்படுவதால், சேர்மத்தின் மொத்த நிறையினை நாம் 100g என எடுத்துக்கொள்வதுடன், தனிமங்களின் நிறை சதவீதத்தினை அவற்றின் நிறையினை (கிராமில்) குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
நிலை2: ஒவ்வொரு தனிமத்தின் நிறையினையும், அதன் அணு நிறையால் வகுக்க. இது சேர்மத்தில் உள்ள தனிமங்களின் ஒப்பு மோல்களின் எண்ணிக்கையினைத் தருகிறது.
நிலை 3: நிலை 2 ல் பெறப்பட்ட ஒப்பு மோல்களின் எண்ணிக்கையான, அவற்றின் சிறியஎண்ணால் வகுத்து, எளிய விகிதத்தினைப் பெறவேண்டும்.
நிலை4: (தேவையெனில்) நிலை 3 ல் பெறப்பட்ட எண்கள் முழு எண்ணாக இல்லாமல் பின்ன எண்ணாக இருப்பின், தகுந்த எண்ணைக்கொண்டு பெருக்குவதன் மூலம் முழு எண்ணாக மாற்றுக.
23.
(i) அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் ஆற்றல் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மதிப்பினை மட்டுமே பெற்றிருக்கும்.
(ii) வரையறுக்கப்பட்ட எலக்ட்ரான் ஆற்றல் மட்டங்கள் காணப்படுவது என்பது எலக்ட்ரான்களின் அலையினை ஒத்த பண்பின் ஒரு நேரடியான விளைவாகும். ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டின் தீர்வுகள், அனுமதிக்கப்பட்ட ஆற்றல் மட்டங்களைத் தருகிறது.
(iii) ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கோட்பாட்டின்படி எலக்ட்ரான் ஒன்றின் துல்லியமான நிலை மற்றும் உந்தத்தினை மிகத் துல்லியமாக கண்டறிய இயலாது. இதன் விளைவாக ஆர்பிட்டால் கொள்கையினை குவாண்டம் இயக்கவியல் அறிமுகப்படுத்தியது.
(iv) அனுமதிக்கப்பட்ட ஆற்றல் மதிப்புகளுக்கான ஷ்ரோடிங்கள் அலைச் சமன்பாட்டின் தீர்வானது அலைச்சார்பு ψ ஐத் தருகிறது. இது அணு ஆர்பிட்டாலைக் குறிப்பிடுகிறது. அலைச் சார்பு ψஐப் பயன்படுத்தி எலக்ட்ரானின் அலைப் பண்பினை நன்கு விளக்க இயலும்.
(v) அலைச் சார்பு ψக்கு என எத்தகைய இயல்பு முக்கியத்துவம் இல்லை. எனினும் (x,y,z) புள்ளியைச் சுற்றி அமைந்துள்ள ஒரு சிறு கன அளவு எலக்ட்ரானை காண்பதற்கான நிகழ்தகவானது |ψ(x,y,z)|2 dxdydz க்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
24.
(i) எலக்ட்ரானின் ஆற்றல் வரையறுக்கப்பட்ட மதிப்புகளைப் பெற்றிருக்கும்
(ii) எலக்ட்ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி சில குறிப்பிட்ட ஆற்றலுடைய ஆர்பிட் எனும் வட்டப்பாதையில் மட்டும் சுற்றி வருகின்றன. இவை நிலை வட்டப்பாதைகள் என அழைக்கப்படுகின்றன.
(iii) ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வரும் எலக்ட்ரானின் கோண உந்த மதிப்பு ஆனது \(\frac{h }{2\pi }\)ன் முழு எண் மடங்காக இருக்கும்.
\(mrv=\frac{nh}{2\pi}\) n=1,2,3,...
(iv) எலக்ட்ரானானது ஒரு குறிப்பிட்ட நிலை வட்டப்பாதையில் சுற்றிவரும் வரையில் அதன் ஆற்றலை இழப்பதில்லை. ஆனால் ஒரு எலக்ட்ரான் உயர் ஆற்றலுடைய (E2) வட்டப்பாதையில் இருந்து, தாழ்ந்த ஆற்றலுடைய (E1) வட்டப்பாதைக்குத் தாவும் போது அதிகப்படியான ஆற்றல் கதிர்வீச்சாக வெளியிடப்படுகிறது.
E2-E1=hv
வெளியிடப்பட்ட கதிர்வீச்சின் அதிர்வெண்
\(v=\frac{(E_2-E_1)}{h}\)
25.
KP1=8.19 x 102T1 =298 K
KP2=4.6 x 10-1T2 =498 K
\(log({K_{p2}\over K_{p_1}})={\triangle H^o\over 2.303 R}({T_2-T_1\over T_1T_2})\)
\(log({4.6 \times 10^1\over8.19 \times 10^2})={\triangle H^o\over 2.303 \times 8.314}({498-298\over 498 \times 298})\)
\({-3.2505 \times 2.303 \times 8.314 \times 498 \times 298 \over 200}=\triangle H^o\)
\(\triangle H^o=-46181 J \ mol^{-1}\)
\(\triangle H^o=-46.18K J \ mol^{-1}\)
26.
(kH)பென்சீன் = 4.2 × 10–5 mm Hg
மீத்தே னின் கரைதிறன் = ?
P = 750mm Hg P = 840 mm Hg
ஹென்றி விதிப்படி,
P = KH . xகரைசலில்.
750mm Hg = 4.2 × 10–5 mm Hg . xகரைசலில்
xகரைசலில்=\(\frac{750}{4.2\times 10-5}\)
கரைதிறன் = 178.5 × 105
இதைப்போலவே P = 840 mm Hg
கரைதிறன் =\(\frac{840}{4.2\times10-5}\)
=200 x 10-5
27.
தீர்வு
கொடுக்கப்பட்டவை
T = 400K; ΔH0 = 77.2 kJ mol-1 = 77200
J mol-1; ΔS0 = 122 JK-1 mol-1
ΔG0 = -2.303 RT log Keq
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=\frac{-\Delta \mathrm{G}^0}{2.309 \mathrm{RT}} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=-\frac{\left(\Delta \mathrm{H}^0-\mathrm{T} \Delta \mathrm{S}^0\right)}{2.303 \mathrm{RT}} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=-\left(\frac{77200-400 \times 122}{2.303 \times 8.314 \times 400}\right) \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=-\left(\frac{28400}{7659}\right)
\end{aligned}\)
log Keq = -3.7080
Keq = -3.7080
Keq = antilog (-3.7080)
Keq = 1.95 \(\times\) 10-4
28.
1. ஒரு அமைப்பானது மாறாத அழுத்தத்தில் ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றத்திலிருக்கும்போது ஏற்படும் என்தால்பி மாற்றத்தை பின்வருமாறு கணக்கிட முடியும்
H=U+PV
2. ஆரம்ப நிலையில்
H1=U2+PV1 ............(1)
3. இறுதி நிலையில்
H2=U2+PV2 ............(2)
4. என்தால்பியில் ஏற்படும் மாற்றம் (2)-(1)\(\Rightarrow\)
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+P\triangle V\).....(3)
5. வெப்ப இயக்கவியல் முதல் விதிப்படி
\(\triangle U=q+w\) .....(4)
6. சமன்பாடு (4)-ஐ (3)-ல் பிரதியிட
\(\triangle H=q+w+p \triangle v\) .....(5)
இங்கு
w=-\(p \triangle v\)
7.சமன்பாடு (5)ல் பிரதியிட

\(\triangle H=q_p\) ....(6)
qp=மாறாத அழுத்த நிலையில் உறிஞ்சப்பட்ட வெப்பம். இது உள்ளுறை வெப்பம் அல்லது வெப்ப அடக்கம் எனப்படுகிறது.
8. மாறாத வெப்ப அழுத்த நிலையில் ஒன்றுடன் ஒன்று வேதிவினை புரிந்து வாயு நிலையுள்ள விளைபொருட்களை தரும் வாயுக்கள் அடங்கிய மூடிய அமைப்பு ஒன்றை கருதுக.
9. வினைபடு வாயுக்களின் ஆரம்ப கனஅளவு Vi எனவும் வினைவிளை வாயுக்களின் கனஅளவு Vf எனவும் அவற்றின் மோல் எண்ணிக்கை முறையே ni மற்றும் nf எனக் கொண்டால்
10. வினைபடுபொருட்களுக்கு (ஆரம்ப நிலை)
PVi =ni RT .........(7)
11.வினைபடுபொருட்களுக்கு (இறுதி நிலை)
PVf =nf RT .........(8)
12. சமன்பாடு(8)-(7) எனில்
P(Vf- Vi) = (nf- ni) RT
P\(\triangle\)V=\(\triangle\)n(g)RT.......(9)
13.சமன்பாடு (9) ஐ (6)ல் பிரதியிட
\(\triangle\) H=\(\triangle\)U+\(\triangle\)n(g)RT..........(10)
29.
CaCl2 -ன் படிகக்கூடு ஆற்றலை கணக்கிடுவதால் பார்ன்-ஹோபர் சுற்றை பின்வருமாறு பயன்படுத்தலாம்.

1. \(\triangle ^oH_1=Ca_{(s)}\) பதங்கமாதல் வெப்பம்
2.\(\triangle ^oH_1=Ca_{(s)}\)பிரிகையடைதலுக்கான என்தால்பி மாற்றம்
3.\(\triangle ^oH_3=Ca_{(g)}\)அயனியாக்கும் ஆற்றல்
4.\(\triangle ^oH_4=2Cl_{(s)}\)எலக்ட்ரான் நாட்டம்
5.\(\triangle ^oH_5=Cacl_{2}\) உருவதாலுக்கான படிகக்கூடு ஆற்றல்
\(\triangle ^oH_f=\triangle ^oH_1+\triangle ^oH_2+\triangle ^oH_3+\triangle ^oH_4+\triangle ^oH_5\)
30.
வாண்டர் வால்ஸ் சமன்பாடு
இயல்பு வாயுக்களைப் பற்றிய கணிதவியல் ரீதியான ஆய்வுகள் முதன்முதலில் J.D வாண்டர் வால்ஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. இவரது சமன்பாட்டின் மூலம் நம்மால் மூலக்கூறு அளவில், இயல்பு வாயுக்களின் தன்மையினை விளக்க இயலும். இவர் அழுத்தத்திற்கான திருத்தம் மற்றும் கனஅளவிற்கான திருத்தம் என இரு திருத்தங்களை PV=nRT என்ற நல்லியல்பு வாயுச்சமன்பாட்டில், அறிமுகப்படுத்தி அச்சமன்பாட்டினை மாற்றியமைத்தார் .
அழுத்தத்திற்கான திருத்தம்
வாயுவின் அழுத்தமானது, அவ்வாயு மூலக்கூறுகள் கொள்கலனின் சுவற்றின் மீது மோதுவதால் ஏற்படும் விசைக்கு நேர்விகிதத் தொடர்புடையது. கொள்கலனின் சுவற்றினை நோக்கிச் செல்லும் ஒருவாயு மூலக்கூறின் வேகமானது, அம்மூலக்கூறினை சூழ்ந்துள்ள பிறவாயு மூலக்கூறுகளின் கவர்ச்சி விசையினால் குறைக்கப்படுகிறது. எனவே அளந்தறியப்பட்ட அழுத்தமானது, வாயுவின் நல்லியல்பு அழுத்தத்தை விட குறைவானதாகும். எனவே இவ்விளைவிற்கான ஒரு திருத்தத்தினை வாண்டர் வால்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கொள்கலனின் சுவற்றிற்கு அருகே உள்ளே ஒரு மூலக்கூறு உணரும் கவர்ச்சி விசையானது வாயுவின் அடர்த்தியின் வர்க்கத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும் என வாண்டர் வால்ஸ் கண்டறிந்தார்.
P α ρ²
ρ = n/V
இங்கு n என்பது வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை ‘V’ என்பது கொள்கலனின் கனஅளவு ⇒ P α n²/V²
⇒ P = a n²/V²
இங்கு a என்பது விகிதமாறிலி. இது வாயுவின் இயல்பினைப் பொருத்து அமையும்.
எனவே, Pநல்லியல்பு = P = P + (an²/V²)
கனஅளவிற்கான திருத்தம்
ஒவ்வொரு தனித்த வாயு மூலக்கூறும் ஒரு குறிப்பிடத்தக்க கனஅளவை அடைத்துக் கொள்வதால், வாயு அடங்கிய கொள்கலனின் கன அளவினை (V)க்காட்டிலும், வாயுவின் உண்மையான கனஅளவு குறைவானதாகும். இவ்விளைவிற்கான வாண்டர் வால்ஸ் திருத்தக்காரணி V' ஐ அறிமுகப்படுத்தினார். வாயு மூலக்கூறுகளை கோளவடிவில் இருப்பதாக கருத்திற் கொண்டு, திருத்தக் காரணியை நாம் கணக்கிடலாம்.
V' = புறக்கணிக்கப்பட்ட கனஅளவு
இரு மூலக்கூறுகளுக்கான புறக்கணிக்கப்பட்ட கனஅளவு
\(=\frac{4}{3} \pi(2 r)^{3}=8\left(\frac{4}{3} \pi r^{3}\right)=8 V_{m}\)
இங்கு Vm ஒரு தனித்த வாயு மூலக்கூறின் கனஅளவு
ஒரு தனித்த மூலக்கூறுக்கான புறக்கணிக்கப்பட்ட கனஅளவு = \(\frac{8 \mathrm{~V}_{\mathrm{m}}}{2}=4 \mathrm{~V}_{\mathrm{m}}\)
n மூலக்கூறுகளுக்கான புறக்கணிக்கப்பட்ட கனஅளவு = n(4Vm) = nb
இங்கு b என்பது வாண்டர் வால்ஸ் மாறிலி இது 4Vm ற்குச் சமம்
⇒ v = nb
Vநல்லியல்பு = V - nb
PV = nRT என்ற நல்லியல்பு வாயுச் சமன்பாட்டினை, திருத்தம் செய்யப்பட்ட அழுத்தம் மற்றும் கனஅளவு மதிப்புகளைக் கொண்டு மாற்றியமைக்க, இயல்பு வாயுக்களுக்கான வாண்டர் வால்ஸ் சமன்பாடு பின்வருமாறு பெறப்படுகிறது.
\(\left(p+\frac{a^{2}}{V^{2}}\right)(V-n b)=n R T\)
a மற்றும் b ஆகியன வாண்டர் வால்ஸ் மாறிலிகள். வாயுக்களின் தன்மையினைப் பொறுத்து இம்மாறிலிகளின் மதிப்பு அமையும். இச்சமன்பாடு நல்லியல்புத் தன்மையற்ற வாயுக்களுக்கான, தோராயமான ஒரு சமன்பாடாகும்.
31.
| தனிமம் | % | அணுக்களின் ஒப்பு எண்ணிக்கை | எளிய விகிதம் |
| Na | 14.31 | \(\frac{14.31}{23}\)=0.62 | \(\frac{0.62}{0.31}=2\) |
| S | 9.97 | \(\frac{9.97}{32}\)=0.31 | \(\frac{0.31}{0.31}=1\) |
| H | 6.22 | \(\frac{6.22}{1}=6.22\) | \(\frac{6.22}{0.31}=20\) |
| O | 69.5 | \(\frac{69.5}{16}=4.34\) | \(\frac{4.34}{0.31}=14\) |
எளிய விகித வாய்ப்பாடு=Na2 S H20 O14

மூலக்கூறு வாய்ப்பாடு=Na2 S H20 O14
சேர்மத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜனும் , நீர் மூலக்கூறுகளாக உள்ளதால்,
மூலக்கூறு வாய்ப்பாடு Na2 SO4 . 10H2O ஆகும்.
32.
1.மூன்றாம் வரிசையை சேர்ந்த காரமண் உலோகம் மெக்னீசியம் ஆகும்.
2. மெக்னீசியம் ஆக்ஸிஜனுடன் வினைபட்டு
தருகிறது.
\(2\underset{(A)}{Mg}+O_{2} \rightarrow 2\underset{(B)}{MgO}\)
3. நைட்ரஜனுடன் வினைபட்டு
தருகிறது.
\(3\underset{(A)}{MG}\rightarrow \underset{(C)}{Mg_{3}}+N_{2}\)
4. AgNo3 உடன் உலோக இடப்பெயர்ச்சி வினைக்குட்பட்டு மெக்னீசியம் நைட்ரேட்டைத் தருகிறது.
\(\underset{(A)}{Mg}+2AgNO_{3} \rightarrow \underset{(D)}{Mg}(NO_{3})_{2}+2Ag\)
முடிவு :-
| குறியீடு | பெயர் | வாய்ப்பாடு |
|---|---|---|
| A | மெக்னீசியம் | Mg |
| B | மெக்னீசியம் ஆக்ஸைடு | MgO |
| C | மெக்னீசியம் நைட்ரைடு | Mg3N2 |
| D | மெக்னீசியம் நைட்ரேட் | Mg(NO3)2 |
33.
m = 160 g = 160 × 10–3 kg
v = 140 km hr–1=\(\frac{140\times10^{3}}{60\times60}ms^{-1}\)
v = 38.88 ms–1
\(\lambda=\frac{h}{mv}\)
\(\lambda=\frac{6.626\times10^{-34}Kgm^{2}s^{-1}}{160\times10^{-3}kg\times38.88ms^{-1}}\)
\(\lambda=1.065\times10^{-34}m\)
34.
| அணு | ஒற்றை எதிர்மின் சுமையுடைய அயனி | |
| எலக்ட்ரான்களின் எண்ணிக்கை |
x – 1 | x |
| புரோட்டான்களின் எண்ணிக்கை |
x – 1 | x – 1 |
| நியூட்ரான்களின் எண்ணிக்கை |
y | y |
கணக்கில் கொடுக்கப்பட்ட படி
y=x+11.1%of x
=\((x+\frac{11.1}{100}x)=x+0.111x\)
y=1.111x
நிறை எண் = 37
புரோட்டான்களின்
எண்ணிக்கை + நியூட்ரான்களின்
எண்ணிக்கை = 37
( x – 1) + 1.111x = 37
x + 1.111x = 38
2.111x = 38
\(x=\frac{38}{2.11}\)
x = 18.009 x = 18 (முழு எண்)
∴ அணு எண் = x – 1
= 18 –1 = 17
நிறை எண் = 37
அயனியின் குறியீடு \(_{ 17 }^{ 37 }{ { Cl }^{ - } }\)
35.
(i) ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
(ii) இதன் காரணமாக உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களுக்கு இணைதிற எலக்ட்ரான்களுக்கும் இடையேயான விலக்கு விசையும் அதிகரிக்கின்றது.
(iii) அதாவது உள்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் மறைத்தல் விளைவு அதிகரிப்பதனால், அணுக்கருவினால் இணைதிற எலக்ட்ரான்கள் மீது செலுத்தப்படும் கவர்ச்சி விசை குறைகிறது.
(iii) இவ்விளைவையே திரைமறைப்பு விளைவு என்கிறோம்.
36.
r(K+)+r(Cl-)=d(K+-Cl-) =3.14 Å .....(1)
(i) K+ மற்றும் Cl- அயனிகள் Ar(z=18) வகை எலக்ட்ரான் அமைப்பை கொண்டவை. ஏனவே அவற்றிக்கான நிகர அணுக்கரு மின்சுமை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
K+ = (1s2) (2s22p6) (3s23p6)
உள்கூடு (n-1)வதுகூடு n-வதுகூடு
Zசெயலுறு (K+) = z-s
=19-[(0.35 x7) + (0.85 x 8) + (1 x 2)
=19-11.25
=7.25
Zசெயலுறு(Cl-)
=17-[(0.35 x 7) + (0.85 x 8) + (1 x 2)
=17-11.25
5.75

∴ r(K+) = 0.74 r(Cl-) .............(2)
சமன்பாடு (2) ஐ (1) ல் பிரதியிட
0.74 r(Cl-) + r(Cl-) =3.14 Å ......(3)
1.74 r(Cl-) =3.14 Å
r (Cl-) = \(\frac { 3.14\overset { 0 }{ A } }{ 1.74 } \)
r(Cl-) = 1.81 Å
சமன்பாடு (2) லிருந்து,
r(K+) = 0.74 r(Cl-)
=0.74 x 1.81 Å
r(K+) =1.33 Å
r(K+) = 1.33 Å
r(Cl-) =1.81 Å
37.
வரிசையில் அயனியாக்கும் ஆற்றலின் ஆவர்த்தன தொடர்பு:
(i) அயனியாக்கும் ஆற்றல், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, பொதுவாக ஒரு வரிசையில் அதிகரிக்கின்றது.
(ii) ஒரு வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது, இணைதிற எலக்ட்ரான்கள் ஒரே கூட்டில் சேர்க்கப்படும் நிலையில், அணுக்கருவில் புரோட்டான்கள் சேர்க்கப்படுகின்றன.
(iii) இவ்வாறு தொடர்ச்சியாக அணுக்கருவின் மின்சுமை அதிகரிப்பதால், இணைதிற எலக்ட்ரான்கள் மீதான கவர்ச்சி விசையும் அதிகரிக்கின்றது.
(iv) மேலும் இணைதிற எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் ஆற்றல் அதிகரிப்பதால் அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கின்றது.
தொகுதியில் ஏற்படும் ஆவர்த்தன தொடர்பு:
(i) ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும்போது, அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
(ii) தொகுதியில் மேலிருந்து வரும்போது இணைதிற எலக்ட்ரான்கள் புதிய கூட்டில் சேர்கின்றன.
(iii) அணுக்கருவிற்கும் இணைதிற எலக்ட்ரான்கள் மீதான அணுக்கருவின் கவர்ச்சி விசை குறைகின்றது.
(iv) இதன் காரணமாக ஒரு தொகுதியில் மேலிருந்து கீழே செல்லும்போது அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
38.
| H2O ன் வடிவமைப்பு | H2O2 ன் வடிவமைப்பு |
|---|---|
| எது வளைவான அமைப்பை கொண்டது | திறந்த புத்தக அமைப்பை கொண்டது |
| HOH பிணைப்பின் கோணம் 104.5° | H-O-H பிணைப்பின் கோணம் 94.8° |
இது ஒரு முனைவுற்ற மூலக்கூறு![]() |
இது முணைவற்ற மூலக்கூறு![]() |
39.
1. பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள முதல் தொகுதி உலோகச்சோடியம் (Na) ஆகும். A ஆனது சோடியம் (Na)
2. சோடியம் ஆனது ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ரைட்டை தருகிறது
(A) (B) (C)
2Na + H2 \(\rightarrow\) 2NaH
(A) (B) (C)
3. இதில் ஹைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் - 1 ஆகும்.
4. ஹைட்ரஜனானது ஆக்ஸிஜனுடன் வினைப்பட்டு நீரைத் தருகிறது.
(B) (C) (D)
2H2 + O2 \(\rightarrow \) 2H2 O
(B) (C) (D)
5. நீர் ஒரு அனைத்துக் கரைப்பான ஆகும்.
6. நீரானது, சோடியத்துடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது.
(D) (A) (E)
2H2O + 2Na \(\rightarrow \) 2NaOH + H2
(D) (A) (E)
7. சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு வலிமையான காரம்
முடிவு:
| குறியீடு | பெயர் | வாய்பாடு |
|---|---|---|
| A | சோடியம் | Na |
| B | ஹைட்ரஜன் | H2 |
| C | சோடியம் ஹைட்ரைட் | NaH |
| D | நீர் | H2O |
| E | சோடியம் ஹைட்ராக்ஸைடு | NaOH |
40.
சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
MgCO3 \(\overset { \Delta }{ \longrightarrow } \) MgO + CO2
MgCO3 ன் மோலாரின் நிறை 84 g mol–1.
84 g MgCO3 ல் 24 g மெக்னீசியம் உள்ளது.
100 g of MgCO3 ல்

அதாவது மெக்னீசியத்தின் சதவீதம்=28.57%
84 g MgCO3 ல் 12 g கார்பன் உள்ளது

100 g MgCO3 ல்

= 14.29 g கார்பன் உள்ளது
கார்பனின் சதவீதம்=14.29%
84 g MgCO3 ல் 48 g ஆக்சிஜன் உள்ளது
100 g MgCO3 ல்

= 57.14 g ஆக்சிஜன் உள்ளது
ஆக்சிஜனின் சதவீதம்=57.14%
சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் படி,
100 % தூய்மையான 84 g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் போது 44 g CO2 ஐத் தருகிறது
90 % தூய்மையான 1000 g MgCO3 ஐ வெப்பப்படுத்தும் போது
\(\frac{44g}{84g\times100}\)x90%x1000g
=471.43 g CO2 ஐ தருகிறது.
=0.471 kg CO2 உருவாகிறது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards