11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/03/2019
+1 Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?
2.
வேதி நேர் மாசுபடுதிகளின் தீய விளைவுகள் படியிலிடு.
3.
தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?
4.
சுற்றுச்சூழல் மீதான ஓசோன் படல சிதைவின் தாக்கங்கள் யாவை?
5.
தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.
6.
ஹைட்ரோகார்பன்கள் என்பவை யாவை? அவற்றுடன் இணைந்த ஆபத்துகளை குறிப்பிடு.
7.
காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?
8.
மக்காத மாசுபடுதிகளைக் கூறி, அவற்றின் விளைவுகளை எழுதுக.
9.
6 கிராம் லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2 ) கரைசலுடன் ஐசோடானிக் கரைசலாக உள்ள குளுக்கோஸ் கரைசலில் , ஒரு லிட்டரில் கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?
10.
சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.
11.
சமநிலையின் மீது வினைவேக மாற்றியின் விளைவை எழுதுக.
12.
முறைசார் மின்சுமையினை கொண்டு லூயிஸ் அமைப்பில் சிறந்த வடிவமைப்பை குறிக்கும் வடிவத்தினை தெரிவு செய்யும் வழிமுறைகளை எழுதுக.
13.
அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவு மற்றும் அழித்தல் குறுக்கீட்டு விளைவு -இவற்றை விளக்குக.
14.
HF மூலக்கூறு உருவாதலை விளக்குக
15.
பின்வரும் வினையினைக் கருதுக.
\(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.
16.
0.185 g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுடன் சேர்ந்து 0.320 g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க(Ag=108, Br=80).
17.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii.p-டைகுளோரோ பென்சீன்
iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன்
18.
வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.
19.
வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு.
20.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டை எழுதி விளக்குக.
21.
கொதிநிலை ஏற்றம் என்றால் என்ன?
22.
பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?
23.
வடிவ மாற்றியன்கள் எந்த நிலையில் மட்டும் சாத்தியமாகிறது? ஏன்?
24.
சிஸ், டிரான்ஸ் மாற்றியம் இவற்றில் அதிக நிலைப்புத்தன்மை உடையது எது? ஏன்?
25.
புரப்பீனின் ஓசோனேற்ற வினையை எழுதுக
26.
n-ஹெக்சேனில் இருந்து பென்சீன் எவ்வாறு உருவாகிறது?
27.
இயல்புக் கரைசல்கள் என்பன யாவை? அதன் விலகல் தன்மை குறித்து எழுதுக.
28.
ஒரு நல்லியல்புக் கரைசலின் திறன்களை பட்டியலிடு.
29.
Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத் எவ்வாறு தீர்மானிப்பாய்?
30.
சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?
31.
வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?
32.
மூலக்கூறு மாதிரிகள் என்பவை யாவை? அவை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
33.
கார்பன் அயனிப் பிணைப்பை உருவாக்காமல் சகப்பிணைப்பை உருவாக்குவதேன்?
34.
மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.
35.
சமநிலை மாறிலி எனப்படுவது எது?
36.
கரைத்திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
37.
திட்டக் கரைசலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுக.
38.
திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது யாது? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
39.
பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
(i) எத்திலின் குளோரைடு
(ii) எத்திலிடின் டைகுளோரைடு
40.
அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.
41.
உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.
42.
பால்ஸ்கீமன் வினையை எழுதுக.
43.
காட்டர்மான் வினையை எழுதுக.
44.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?
45.
பாயில் விதியின் விளைவுகளை எழுதுக.
46.
கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.
47.
பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
(i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
(ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற
48.
\(\triangle H^o _f\) for CO2(g), CO(g)மற்றும் H2O(g) மதிப்புகள்-393.5,-111.31 மற்றும்-242 மது mol-1
49.
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
50.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
51.
வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.
52.
"தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.
53.
வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
54.
66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.
55.
வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.
56.
கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?
57.
வரையறு: சமமான நிறை.
58.
விதைச்சிதைவு வினையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
59.
சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.
60.
இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.
61.
பரிமாற்ற ஆற்றல் என்றால் என்ன?
62.
ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.
63.
ஆஃபா தத்துவத்தின் வரம்புகள் யாவை?
64.
சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என்றால் என்ன? இந்த சம ஆற்றல் பண்பு எவ்வாறு இழக்கப்படுகிறது. உதாரணத்துடன் கூறுக.
65.
அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நீ எவ்வாறு வரையறுப்பாய்?
66.
குவாண்டம் இயக்கவியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
67.
எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது. இந்த கண்டுபிடிப்பு எதை உருவாக்க காரணமாக அமைந்தது?
68.
டி -பிராக்ளே அலைநீளம் எதற்கு முக்கியத்துவம் உடையது? எதற்குப் புறக்கணிக்கத்தக்கது?
69.
போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?
70.
சமவெப்ப அழுத்த நிலையில், ஒரு குறிப்பிட்ட வாயுவின் விரவுதல் வீதம், நைட்ரஜனை காட்டிலும் 0.5 மடங்கு அதிகம்.அக்குறிப்பிட்ட வாயுவின் மோலார் நிறையினைக் கணக்கிடுக.
1.
1.தாவர வளர்ச்சி மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருள்கள், கதீர்வீச்சுப் பொருள்கள், வேதி உப்புகள் மற்றும் நோயுண்டாக்கும் காரணிகள் விடாப்பிடியாக, மண்ணில் உருவாக்கப்படும் நிகழ்ச்சி, மண் மாசுபாடு என வரையறுக்கப்படுகிறது.
2.மண் மாசுபாடானது, மண்ணின் அமைப்பு, மண் வளம், நிலத்தடி நீரின் தரம் மற்றும் உயிர்ச் சூழல் அமைப்பில் காணப்படும் உணவுச் சங்கிலி ஆகியவற்றை பாதிக்கின்றன.
2.
1.காட்மியம் மற்றும் மெர்குரி ஆகியவற்றால் சிறுநீரக சேதத்தை ஏற்படுத்த முடியும்.
2.லெட் நச்சால் சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளில் தீவிர பாதிப்புகளை உண்டாக்க முடியும். மேலும் இது மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
3.பாலிகுளோரினேற்றம் செய்யப்பட பைபீனைல்கள் (PCB) தோல் நோய்களை உருவாக்குகின்றன. மேலும் இவை புற்று நோய்க்காரணியாகவும் செயல்படுகின்றன.
3.
அதீத பசி வளர்ச்சியின் காரணமாக, நீரின் மேற்பரப்பு மூடப்பட்டு நீரில் உள்ள ஆக்சஸிஜன் செறிவு குறைக்கப்படுகிறது.
அதாவது பாசிபடர்ந்த நீரானது, நீர் நிலைகளில் வாழும் மற்ற உயிரினங்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
ஊட்டச்சத்து மிகுந்த நீர், நிலைகள், தாவர பெருக்கத்தை ஆதரிப்பதால், ஆக்ஸிஜன் மறுக்கப்பட்டு மற்ற விலங்குகளின் வாழ்க்கை அழிக்கப்படும் செயல் முறையின் காரணமாக ஏற்படும் பல்லுயிர் இழப்பு, தூர்ந்து போதல் என் அறியப்படுகிறது.
4.
1.ஓசோன் படலம் உருவதாலும், சிதைத்தலும் தொடர்ந்து இயற்கை செயல் முறையாகும்.இது ஒருபொழுதும் அடுக்குமண்டலத்தில் உள்ள ஓசோன் சமநிலையை பாதிப்பில்லை. வளிமண்டலத்தில் ஓசோன் சமநிலையில் நிகழும் எந்த மாற்றமும், பின்வரும் வழிகளில் உயிர்கோளத்தில் கடுமையான பாதிப்புகளை எற்படுத்தும்.
(i).ஓசோன் பாடலை சிதைவானது,அதிகளவு UV கதிர்கள் புவிப்பரப்பை அடைய அனுமதிக்கும். ஓசோன் படல சிதைவு தோல் புற்றுநோயை உருவாக்கும். மேலும் மனிதர்களில் நோய் எதிர்ப்பு நிலையை குறைக்கிறது.
(ii)UV கதிர்வீச்சு தாவர மிதவையுரிகளின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இதனால் கடல்வாழ் உணவுச்சங்கிலி பாதிக்கப்படுகிறது.
(iii) UV கதிர்வீச்சு தாவர புரதங்களை பாதிக்கின்றன, இது அபாயகரணமான செல்பிறழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
5.
1. பனிப்புகையானது அமில மழைக்கு காரணமாகிறது.
2. பார்வைத்திறன் குறைவை ஏற்படுத்துகிறது.
3. மூச்சுக்குழல் எரிச்சலை உருவாக்குகிறது.
6.
1.கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் மட்டுமே ஆக்கப்பட்ட சேர்மங்கள் ஹட்ரோகார்பன்கள் என்றழைக்கப்படுகின்றன.
2. இவை இயற்க்கையாகவும் (சதுப்புநிலவாயு), வாகன எரி பொருள்கள் முற்றிலுமாக எறியாததாலும் உருவாக்கப்படுகின்றன.
3. இவை வலிமை மிகுந்த புற்றுநோய் உருவாக்கம் காரணிகளாகும். எடுத்துக்காட்டாக பல்லணு அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) புற்றுநோய் காரணிகளாகும். இவை கண் மற்றும் மூக்கு ஆகியவற்றின் எரிச்சலை உருவாக்குகின்றன.
7.
1.உயிரினங்களின் மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில், காற்றில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் கற்று மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.
2.காற்று மாசுபாடு என்பது அடிவெளி மண்டலம் மற்றும் அடுக்கு மணடலத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளது. முதன்மையாக வளிமண்டலக் காற்றில் அதிக அளவில் வெளிவிடப்படும் விரும்பத்தகாத பொருள்களால் காற்று மாசுபாடு உருவாகிறது.
8.
1.Hg, Pb, DDT, நெகிழிகள், கதிர்வீச்சுக் கழிவுகள் போன்றவை மக்காத மாசுபடுதிகள் எனப்படுகின்றன.
2.இத்தகைய மாசுபடுதிகள் சிறிய அளவில் இருப்பினும், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.
3. அவை இயற்க்கையாகக் சிதைவடையாமல் நம் சுற்றுச்சூழலிருந்து நீக்குவது கடினம்.
9.
யூரியா கரைசல் சவ்வூடு = CRT
பரவல் அழுத்தம் \(\left( { \pi }_{ 1 } \right) \)
= \(\frac { { w }_{ 2 } }{ { M }_{ 2 }V } RT=\frac { 6 }{ 60\times 1 } RT\)
குளுக்கோஸ் கரைசலின் = \(\frac { { w }_{ 2 } }{ 180\times 1 } \times RT\)
சவ்வூடு பரவல் அழுத்தம் \(\left( { \pi }_{ 2 } \right) \)
ஐசோடோனிக் கரைசலுக்கு ,
\({ \pi }_{ 1 }={ \pi }_{ 2 }\)
\(\frac { 6 }{ 60 } RT=\frac { { w }_{ 2 } }{ 180 } RT\)
\(\Rightarrow \) w2 = \(\frac { 6 }{ 60 } \times 180\) = 18g
10.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின் படி
\(\pi \) = CRT
C = \(\frac { n }{ V } \)
இங்கு n = 'V' லிட்டர் கரைசலில் கரைக்கப்பட்டுள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை.
எனவே , \(\pi =\frac { n }{ V } RT\) or \(\pi \)V = nRT ........(1)
wA கிராம் கரைப்பானில் , wB கிராம் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைத்து , கரைசல் தயாரிக்கப்பட்டால் , அதன் மோல் எண்ணிக்கை n என்பது
n = wB /MB
ஏனெனில் MB - கரை பொருளின் மோலார் நிறை இந்த 'n' மதிப்பை சமன்பாடு (1) ல் பிரதியிட, நமக்கு கிடைப்பது
\(\pi =\frac { { w }_{ B } }{ V } \frac { RT }{ { M }_{ B } } \)
\({ M }_{ B }=\frac { w_{ B } }{ V } \frac { RT }{ \pi } \) ........(2)
சமன்பாடு (2) ஐ பயன்படுத்தி , கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிட முடியும்
11.
வினைவேக மாற்றியை சேர்ப்பதன் மூலம் சமநிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
வினைவேக மாற்றியானது முன்னோக்கிய வினையையும் பின்னோக்கிய வினையையும் ஒரே அளவிற்கு பாதிக்கிறது.
எனவே, இது சமநிலைக் கலவையின் இயைபினை மாற்றியமைப்பதில்லை.
எனினும் குறைவான கிளர்வு ஆற்றல் உடைய வினை வழியினை உருவாக்குவதன் மூலம் வினைவேக மாற்றியானது சமநிலை விரைவாக எய்துவதற்கு காரணமாக அமைகிறது.
12.
(i) முறைசார் மின்சுமையினைப் பெற்றுள்ள வடிவமைப்பினைக் காட்டிலும் அனைத்தும் முறைசார் மின்சுமைகளும் பூஜ்ஜியமாக உள்ள வடிவமைப்பு முன்னுரிமை பெறும்.
(ii) குறைவான முறைசார் மின்சுமை கொண்டுள்ள வடிவமைப்பானது, அதிகமான முறைசார் மின்சுமை கொண்டுள்ள வடிவமைப்பைவிட முன்னுரிமை பெறும்.
(iii) எந்த வடிவமைப்பில், எதிர்மறை முறைசார் மின்சுமை அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய அணுவின் மீது காணப்படுகிறதோ அந்த அமைப்பு முன்னுரிமையுடையது.
13.
(i) அணு ஆர்பிட்டால்களின் அலைச்சார்பு \(\psi \) என குறிக்கப்படுகிறது. ஒப்பிடத்தக்க ஆற்றலுடைய \(\psi \)A மற்றும் \(\psi \)B ஆகிய இரு அலைச்சார்புகளால் குறிப்பிடப்படும் இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு மூலக்கூறு ஆர்பிட்டால்களை தருகிறது.
(ii) அவைகளுள் ஒன்று பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் (\(\psi \) பிணைப்பு) மற்றொன்று எதிர்ப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் (\(\psi \) எதிர் பிணைப்பு) ஆகும். இவ்விரு மூலக்கூறு ஆர்பிட்டால்களுக்கான அலைசார்பிணை அணு ஆர்பிட்டால்களுக்கான \(\psi \)A மற்றும் \(\psi \)B நேரிய இணைவின் மூலம் பெறலாம்.
\(\psi \)பிணைப்பு =\(\psi \)A +\(\psi \)B
\(\psi \)எதிர் பிணைப்பு =\(\psi \)A -\(\psi \)B
(iii) அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவால், பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் உருவாவதாகவும், அணு ஆர்பிட்டால்களின் அழித்தல் குறுகீட்டு விளைவின் காரணமாக எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் உருவாவதாகவும் கருதலாம். இரு 1s ஆர்பிட்டால்களில் இருந்து சம மூலக்கூறு ஆர்பிட்டால்கள் உருவாவது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
(iv) ஆக்கக் குறுக்கீட்டு விளைவு: இரண்டு 1s ஆர்பிட்டால்கள் ஒரே கட்டத்தில் உள்ளன. மற்றும் ஒரே குறிகளை பெற்றுள்ளன.



14.
(i) ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு: 1s1
(ii) புளூரின் அணுவின் இணைத்திற கூட்டின் எலக்ட்ரான் அமைப்பு : 2s2 29x2, 2py2, 2pz1

(iii) ஹைட்ரஜனின் சரிபாதி நிரப்பப்பட்ட 1s ஆர்பிட்டாலானது, புளுரினின் பாதி நிரப்பப்பட்ட 2pz ஆர்பிட்டாலுடன் நேர்கோட்டில் மேற்பொருந்தும் போது ஹைட்ரஜனுடன் புளூரினுக்கு இடையே ஒரு σ-சகப்பிணைப்பு உருவாகிறது.
15.
| Fe3+ | SCN- | [Fe(SCN)]2+ | |
| ஆரம்ப செறிவு (M) | 1x 10-3 (10 x 10-4) |
8 x 10-4 | - |
| வினைப்பட்டது | 2 x 10-4 | 2 x 10-4 | - |
| சமநிலை செறிவு | 8 x 10-4 | 6 x 10-4 | 2 x 10-4 |
\({ K }_{ eq }=\frac { \left[ Fe(SCN) \right] ^{ 2+ } }{ \left[ { Fe }^{ 34 } \right] \left[ SCN^{ - } \right] } \)
\(=\frac { 2\times { 10 }^{ -4 }M }{ 8\times { 10 }^{ -4 }M\times 6\times 10^{ -4 }M } \)
\(=0.0146\times 10^{ 4 }\)
\({ K }_{ eq }=4.16\times 10^{ 2 }M^{ -1 }\)
16.
கரிமச் சேர்மத்தின் நிறை(w) =0.185 g
சில்வர் புரோமைடின் நிறை(x)=0.320 g
புரோமினின் சதவீதம் =\(\frac{80}{188}\times \frac{x}{w}\times 100\)
=\(\frac{80}{188}\times \frac{0.32}{0.185}\times 100\)
=73.6%
17.

18.
(i) பிரிகையடைதல் அல்லது இணைதல் நிகழாத கரைபொருளுக்கு வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு 1.மேலும், அதன் கண்டறியப்பட்ட மோலார் நிறையானது, உண்மையான மோலார் நிறைக்கு அருகாமை மதிப்பை பெற்றிருக்கும்.
(ii) கரைசலில், இணைந்து உயிர்படி ஒலிகோமரைத் தரும் கரைபொருள்களின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு ஒன்றை விடக் குறைவு (i < 1). மேலும், அளவிடப்பட்ட மோலார் நிறையைவிட அதிகமாக இருக்கும்.
(iii) பிரிகையடைந்து அவற்றின் உட்கூறு அயனிகளை உருவாக்கும் கரைபொருளின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு ஒன்றை விடக் அதிகம் (i > 1) மேலும், அளவிடப்பட்ட மோலார் நிறையானது. உண்மையான மோலார் நிறையைவிட குறைவாக இருக்கும்.
19.
(i) வாண்ட் ஹாஃப் காரணி 'i' என்பது, கரைபொருளின் உண்மையான மோலார் நிறைக்கும், அசாதாரண மோலார் நிறைக்கும் இடையே உள்ள விகிதம் என வரையறுக்கப்படுகிறது.
(ii) 
20.
(i)சவ்வூடு பரவல் அழுத்தமானது கரைபொருளின் மோலார் செறிவு மற்றும் கரைசலின் வெப்பநிலை ஆகியவற்றிக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
(ii) வாண்ட் ஹாஃப் சமன்பாடு.
π = CRT
இங்கு
C = கரைசலின் மோலார் செறிவு
R = வெப்பநிலை
T = வாயு மாறிலி
21.
(i) எளிதில் ஆவியாகாத கரைபொருளை தூய கரைப்பானுடன், அதன் ஆவிஅழுத்தம் 1 atm க்கு கீழாக குறைகிறது.
(ii) மீண்டும் ஆவிஅழுத்தத்தை 1 atm க்கு கொண்டு வர வேண்டுமெனில், கரைசலின் வெப்பநிலை உயர்த்தப்பட வேண்டும் .
(ii) இதன் விளைவாக, கரைசலானது, தூய கறைபானின் கொதிநிலைவிட (T0b) அதிக கொதிநிலை (Tb) கொதிக்கிறது.
(iii) வெப்பநிலையில் ஏற்படும் இந்த உயர்வானது, கொதிநிலை ஏற்றம் என அழைக்கப்படுகிறது.
22.
1. பென்சோயிக் அமிலம், நாப்தலீன் மற்றும் கற்பூரம் போன்ற சேர்மங்களை சூடுபடுத்தும் போது திண்ம நிலையிலிருந்து உருகாமல் (நீர்ம நிலை அடையாமல்) நேரடியாக ஆவி நிலைக்கு மாறுகிறது.
2. ஆவியை குளிரச் செய்யும்போது திண்மப் பொருள் மீண்டும் பெறப்படுகிறது.
3. இத்தகைய செய்முறை பதங்கமாக்கல் எனப்படும். எளிதில் ஆவியாகும் மற்றும் எளிதில் ஆவியாகாத திடப்பொருள்களை பிரித்தெடுக்க மிகச்சிறந்த முறையாகும்.
4. இம்முறை குறைந்த அளவே பயன்படுகிறது. ஏனெனில் சில சேர்மங்கள் மட்டுமே பதங்கமாகும்.
23.
1.அல்கீன்களில் காணப்படும் தொகுதிகள் ஒரே மாதிரியாக இருப்பின் அவை வடிவமாற்றியங்களைக் கொண்டிருப்பதில்லை.
2. இரட்டைப் பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ள கார்பனுடன் இரு வேறுபட்ட அணுக்கள் அல்லது தொகுதிகள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் மட்டுமே வடிவமாற்றியம் சாத்தியமானது.
3.எ.கா:
(i) புரப்பீனிக்கு வடிவமாற்றியங்கள் ஏதும் இல்லை.
(ii) ஏனெனில் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பனுடன் ஒரே மாதிரியான இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
24.
1 பொதுவாக சிஸ் மாற்றியத்தினைக் காட்டிலும் டிரான்ஸ் மாற்றியமானது அதிக நிலைப்புத் தன்மை உடையது.
2.ஏனெனில் சிஸ் மாற்றியத்தில், பெரிய உருவளவு உள்ள தொகுதிகள் இரட்டைப்பிணைப்பின் ஒரே பக்கத்தில் காணப்படுகிறது.
3. இத்தொகுதிகளின் கொள்ளிட விலக்கி விளைவினால் சிஸ் மாற்றியமானது டிரான்ஸ் மாற்றியத்தைக் காட்டியிலும் குறைவான நிலைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது.
4.டிரான்ஸ் மாற்றியத்தில் பெரிய உருவளவு உள்ள தொகுதிகள் எதிரெதிர் பக்கத்தில் அமைகின்றன.
25.

26.

27.
(i) செறிவு எல்லை முழுமைக்கும், ரெளல்ட் விதிக்கு உட்படாத கரைசல்கள் இயல்புக் கரைசல்கள் என்றழைக்கப்படுகின்றன.
(ii) ஒரு இயல்புக் கரைசலுக்கு, காலத்தலின் போது கனஅளவு மற்றும் என்தால்பி மற்றும் நிகழ்கிறது. அதாவது ΔHகலத்தல் ≠ 0 மற்றும் ΔVகலத்தல் ≠ 0.
(iii) ரெளல்ட் வீதியிலிருந்து இயல்புக்கரசைல்கள் விலக்கமடைதலானது நேர்விளக்கமாகவோ அல்லது எதிர்விழக்கமாகவோ இருக்கும்.
28.
(i) இரண்டு கூறுகளை கலக்கும்போது, கனஅள்வில் மாற்றம் இருப்பத்தில்லை (ΔVகலத்தல் = 0)
(ii) கரைபொருளை கரைப்பானில் கரைக்கும் போது, வெப்பப் பரிமாற்றம் நிகழ்வதில்லை.
(ΔHகலத்தல் = 0)
(iii) தூய திரவங்களில் உள்ளதைப் போன்றே, கரைச்சலிலுள்ள கரைபொருள் மற்றும் கரைப்பான் ஆகியவற்றின் தப்பிச்செல்லும் திறன், இருக்க வேண்டும்.
29.
Q = KC, எனும்போது வினை சமநிலையில் உள்ளது.
Q > KC, எனும்போது வினையானது பின்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
Q < KC, எனும்போது வினையானது முன்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
30.
நிகர வினை எத்திசையில் நிகழும் என்பதனை கணிக்க இயலும்.
வினை நிகழும் அளவினைத் தீர்மானிக்க இயலும்.
சமநிலையில் உள்ள வினைபடுபொருட்கள் மற்றும் வினை விளைப்பொருட்கள் செறிவுகளைக் கண்டறிய இயலும்.
31.
1. கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு அமைப்பினை சுழல் இயலாத் தன்மையினால் புறவெளியில் வெவ்வேறு வடிவமைப்புகளை பெற்றுள்ள புறவெளி மாற்றியன்கள் வடிவ மாற்றியன்கள் எனப்படுகின்றன.
2. கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பின் வழியே சுழற்ச்சித் தடையின் காரணமாகவோ அல்லது வளையச் சேர்மங்களில் ஒன்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்ச்சித் தடையினாலோ இவ்வகை மாற்றியன்கள் ஏற்படுகின்றன.
32.
1.கரிம மூலக்கூறுகளின் முப்பரிமான வடிவமைப்புகளை சிறந்த முறையில் புலக்காட்சிப்படுத்த பயன்படும் இயல் உபகரண அமைப்புகளை மூலக்கூறு மாதிரிகள் எனப்படுகின்றன.
2.இவைகள் மரம், பிளாஸ்டிக், உலோகம் அல்லது வணிக ரீதியில் கிடைக்கக் கூடிய பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
33.
1.கார்பனைப் பொறுத்த வகையில், அதற்கு அருகே உள்ள மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பினைப் பெற, நான்கு எலக்ட்ரான்களை ஏற்றறோ அல்லது இழந்தோ C4- அல்லது C4+ அயனியை உருவாக்க வேண்டும்.
2. ஆனால் இச்செயல்முறை நிகழ தேவையான ஆற்றல் மிக அதிகம் என்பதால் இந்நிகழ்வு நிகழ்வதற்கான சாத்தியம் இல்லை.
3. இதிலிருந்து கார்பனானது அயனிப் பிணைப்பை உருவாக்க வாய்ப்பில்லை என அறிய முடிகிறது.
4. ஏற்றத்தாழ அனைத்து கார்பன் சேர்மங்களிலும் கார்பனானது நான்கு சகப்பிணைப்புகளைப் பெற்றுள்ளது.
34.
| மீளும் வினை | சமநிலை மாறிலி |
| முன்னோக்கு வினைக்கு \(xA+yB\rightleftharpoons lC+mD\) |
KC என்க |
| வினையை மருதிசையில் மாற்றி எழுதும்போது,\(lC+mB\rightleftharpoons xA+yB\) | \({ K }_{ C }^{ 1 }=\frac { 1 }{ { K }_{ C } } \) |
| \(\begin{matrix} A\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons B } & B\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons C } \\ C\overset { { K }_{ 3 } }{ \rightleftharpoons D } & A\overset { { K }_{ 4 } }{ \rightleftharpoons D } \end{matrix}\) எனில் |
\({ K }_{ 4 }={ K }_{ 1 }{ K }_{ 2 }K_{ 3 }\) |
35.
கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வினையின் சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டில் உள்ள வினை விளைப் பொருட்களின் மோலார் செறியுகளை அவைகளின் வேதிவினைக் கூறு விகிதப்படிக்கு உயர்த்தப்பட்டதன் பெருக்கற்பலனுக்கும்வினைப்படும் பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதப்படிக்கு உயர்த்தப்பட்டதன் பெருக்கற்பலனுக்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி
இம்மாறிலி சமநிலை மாறிலி எனப்படுகிறது.
36.
(i) பொதுவாக ஒரு கரைபொருளின் கரைதிறனானது, அந்த கரைபொருளின் தன்மை மற்றும் அது கரைக்கப்படும் கரைப்பானின் தன்மை ஆகியவற்றை பொறுத்தது.
(ii) மேலும் இது,
(1) கரைசலின் வெப்பநிலை
(2) அழுத்தம்
ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
37.
(i) அதிக அளவிலான கறைப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் செறிவு மிகுந்த திட்டக் கரைசலை பயன்படுத்துவதால், கரைபொருளை எடையறியும் போது ஏற்படும் பிழைகளை குறைக்கமுடியும்.
(ii) இருப்புக்கரைசலை நீர்க்கச் செய்து வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட பயன்பாட்டுக் கரைசல்களை நாம் தயாரிக்க முடியும். இம்முறையில் நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதால் அதிக பயனுடையது.
(iii) சில செறிவு மிகுந்த கரைசல்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவை, மேலும், சோதனைகளில் பயன்படுத்தப்படும் பயன்பாட்டு திட்டக்கரைசல்கள் போல் அல்லாமல், அவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு குறைந்தளவே ஊக்கமளிக்கின்றன.
38.
(i) திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது, துல்லியமாக திறன் தெரிந்த கரைசலாகும்.
(ii) தேவையான அளவு கரைபொருளைக் கொண்டுள்ள, குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரைப்பதன் மூலம், தேவையான செறிவுடைய திட்டக்கரைசைலை தயாரிக்க முடியும்.
39.


40.

41.

42.

43.

44.
\(\frac { \gamma { H }_{ 2 } }{ \gamma _{ { C }_{ n }{ H }_{ 2n-2 } } } =\sqrt { \frac { { m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } } }{ m_{ { H }_{ 2 } } } } \\ 3\sqrt { 3 } =\sqrt { \frac { { m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } } }{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்தி மாற்றி அமைக்கும் பொழுது.
\(27\times 2={ m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } }\\ 54={ n }_{ (12) }+(2n-2)(1)\\ 54=12n+2mn-2\\ 54=14n-2\\ n=(54+2)/14\\ =\frac { 56 }{ 14 } =4\\ \therefore n=4.\)
45.
* பாயில் விதியிலிருந்து அழுத்தம்-அடர்த்தி இவற்றிக்கு இடையான தொடர்பினை பின்வருமாறு தருவிக்கலாம்.
* \({ P }_{ 1 }{ V }_{ 1 }={ P }_{ 2 }{ V }_{ 2 }\)(பாயில் விதி)
\({ P }_{ 1 }\frac { m }{ { d }_{ 1 } } ={ P }_{ 2 }\frac { m }{ { d }_{ 2 } } \)
* இங்கு 'm' என்பது வாயுவின்நிறை,d1 மற்றும் d2 என்பன முறையே, P1 மற்றும் P2 அழுத்த நிலைகளில் அடர்த்தி மதிப்புகளைக் குறிப்பிடுகின்றன. \(\frac { { P }_{ 1 } }{ { d }_{ 1 } } =\frac { { P }_{ 2 } }{ { d }_{ 2 } } \)
* அதாவது, வாயுவின் அடர்த்தி, அதன் அழுத்தத்திற்கு நேர்விகித தொடர்புடையது
46.
கார உலோகங்களின் பயன்கள்:
உலோக லித்தியமானது, பயனுள்ள உலோக கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.எடுத்துக்காட்டாக இது லெட் உடன் சேர்ந்து, மோட்டார் எஞ்சின்களில் பயன்படும் வெண்மை உலோக (white metal)பேரிங்குகள், அலிமினியத்துடன் சேர்ந்து ஆகாய விமான பாகங்கள் மற்றும் மெக்னீசீயதுடன் சேர்ந்து கேடயங்கள் ஆகியன தயாரிக்கப்படுகின்றன.இது வெப்ப உட்கரு வினைகளில் பயன்படுகிறது.
(i) லித்தியம் மின்வேதிக்கலன்கள் செய்யவும் பயன்படுகிறது.
(ii) லித்தியம் கார்பனேட் மருந்துகளில் பயன்படுகிறது.
(iii) Pb(Et)4 மற்றும் Pb(Me)4 ஆகியவற்றை தயாரிக்க தேவைப்பதேவைப்படும் Na/Pb உலோக கலவை தயாரிக்க சோடியம் பயன்படுகிறது.இந்த கரிம லெட் சேர்மங்கள் சில காலங்களுக்கு முன்னர் பெட்ரோலுடன் சேர்க்கப்படும் இடிப்பு எதிர்ப்பு (anti-knock) சேர்மங்களாக பயன்பட்டன.தற்காலத்தில் லெட் இல்லாத பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது.
(iv) திரவ சோடியம் அதிவேக ஈணுலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மென் சோப்புகள் (Soft Soap) தயாரித்தலில் பயன்படுகிறது.மேலும் இது மிகச்சிறந்த கார்பன் டையாக்சைடு உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிறது.
(v) சீசியம் ஒளிமின்கலன்களை வடிமைத்தலில் பயன்படுகிறது.
47.
(i)
| தனிமம் | குறியீடு | அணு எண் | எலக்ட்ரான் அமைப்பு |
|---|---|---|---|
| லித்தியம் | Li | 3 | [He]2s1 |
| சோடியம் | Na | 11 | [Ne]3s1 |
| பொட்டாசியம் | K | 19 | [Ar]4s1 |
| ரூபீடியம் | Rb | 37 | [Kr]5s1 |
| சீசியம் | Cs | 55 | [Xe]6s1 |
| ஃபிரான்ஷியம் | Fr | 87 | [Rn]7s1 |
(ii) பொதுவான ஆக்ஸிஐனேற்ற நிலை:இந்த தனிமங்கள் அனைத்தும் அதிக நேரமின்தன்மை கொண்டவையாக உள்ளன.இவைகள் எளிதில் தங்களின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரானை இழந்து ஒற்றை மின்சுமையுடைய நேர்மின் அயனிகளை (M+) உருவாக்குகின்றன.கார உலோகங்கள் +1 என்ற ஒரே ஒரு ஆக்ஸினேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளன.
48.
\(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)
\(\triangle H^o _f (CO_2)=\) -393.5 KJ mol-1
\(\triangle H^o _f (CO)=\)-111.31 KJ mol-1
\(\triangle H^o _f (H_2O)=\)-242 KJ mol-1
\(\triangle H^o _f = \sum \triangle H^o_{f(product)} -\sum \triangle H^o_{f(reactant)}\)
=[-111.31+(-242)]-[-393.5]
=-111.31-242+393.5
\(\triangle H^o _f=40.19 KJ \ mol^{-1}\)
49.
H=U+PV
H,U,V ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் H1,U1,V1 மற்றும் H2,U2,V2 ஆகும்.
என்தால்பி மாற்றம்
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+ P\triangle V\)
50.
1.எந்த ஒரு செயல் முறையின் தன்னிச்சை தன்மையும் மூன்று வெவ்வேறு காரணிகளை பொறுத்து அமைகிறது.
2.ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது வெப்பம் உமிழ் செயல்முறையாகும், மேலும் தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)H எதிர்குறிஉடையது)
3.ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)S நேர்குறிஉடையது)
4. ஒரு வினை தன்னிச்சையாக நிகழ, மேற்கூறிய இரண்டின் தொகுப்பான கட்டிலா ஆற்றல் மதிப்பு கண்டிப்பாக எதிர்குரியை பெற்ரறிருக்க வேண்டும். அதாவது ஒரு வினை தன்னிச்சையாக நிகழ்வதற்கு தேவையான நிபந்தனை \(\triangle\)H-T\(\triangle\)S<0 என்பதாகும்.
51.
1.வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியானது வெப்பச் சமநிலைவிதி எனவும் அழைக்கப்படுகிறது. வெப்ப இயக்கவியலின் முதல் மற்றும் இரண்டாம் விதிகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்னரே புஜ்ஜியவிதி முன்மொன்மொழியப்பட்டது.
2.வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜியவிதிப்படி இரண்டு வெவ்வேறு வெப்ப நிலைகளிலுள்ள அமைப்புகள் தனித்தனியாக மூன்றாம் அமைப்புடன் வெப்ப சமநிலையில் இருந்தால் அந்த இரு அமைப்புகளும் தங்களுக்குள் வெப்ப சமநிலையில் இருக்கும்.

52.
(i) ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தது.
உதாரணம்:
டெல்லூரியம் (127.6) ஆறாவது தொகுதியிலும் அயோடின் (127) ஏழாவது தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
53.
(i) அனுவின் உருவளவு
(ii) நிகர அணுக்கரு மின்சுமை
(iii) மறைத்தல் விளைவு
(iv) எலக்ட்ரான் அமைப்பு
54.
\(\lambda=\frac{h}{p}=\frac{6.626\times10^{-34}}{66.26\times10^{-28}}\)
λ=1x10-7 m
55.
மாறாக வேதிவினைக் கூறு விகித அடிப்படையில் அமையாத அளவினைக் கொண்ட வினைபடு பொருட்களைக் கொண்டு, வினை நிகழ்த்தப்படும் போது, உருவாகும் விளை பொருளின் அளவானது, எந்த வினைபடுபொருள் முதலில் முழுவதும் வினைப்படுகிறதோ, அந்த வினைபொருளைச் சார்ந்து அமையும். இவ்வினைப்பாடு பொருள் வினை தொடர்ந்து நிகழ்வதைக் கட்டுப்படுத்துகிறது. இது வினை கட்டுப்பாட்டுக் காரணி என அழைக்கப்படுகிறது.
56.
கூற்று 1 மற்றும் கூற்று 2 உண்மையான கூற்றுகளாகும். ஆனால் இவ்விரண்டிற்க்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை.
57.
1.008g ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்ஸிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அயனியின் நிறையே, அதன் கிராம் சமான நிறை என வரையறுக்கப்படுகிறது.
2. சமான நிறைக்கு அலகு இல்லை.
58.
1. ஒரே சேர்மம், ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் இரண்டிற்கும் உற்படுகிறது.
2. இத்தகைய வினைகளில், ஒரே தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது.
3.இத்தகைய வினைகள் விகித சிதைவு வினைகள் எனப்படுகின்றன.

59.
1. ஒரு சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளாக பிரிகையடையும் வினைகள் சிதைவடையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை வினைகளில், ஒரு சேர்மத்தில் உள்ள இரண்டு வெவ்வேறான தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களில் மாற்றம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டு:

60.
இரண்டு வினைப் பொருட்கள் வினைபுரிந்து ஒரு சேர்மத்தினைத் தரும் வினைகள், இணையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:

61.
1. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே தற்சுழற்சி உடைய எலக்ட்ரான்கள் இருக்குமாயின் அவைகளினுடைய இடங்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2. பரிமாற்றம் அடையும் நிகழ்வின்போது ஆற்றலானது வெளியிடப்படுகிறது. வெளியிடப்படும் ஆற்றல் பரிமாற்ற ஆற்றல் என அழைக்கப்படுகிறது.
62.
1. ஆறு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள கார்பன் அணுவினை கருதுவோம்.
2. ஆஃபா தத்துவத்தின்படி இதன் எலக்ட்ரான் அமைப்பு 6C=1s22s22p2
3. இதனை பின்வருமாறு குறிப்பிடலாம்

4. மேற்கண்ட நிகழ்வில் எலக்ட்ரான் -எலக்ட்ரான் விலக்குவிசையினை குறைத்திட ஹீண்ட் விதிப்படி ஆறாவது எலக்ட்ரானானது ஐந்தாவது எலக்ட்ரான் இடம் கொண்டுள்ள px ஆர்பிட்டாலில் சென்று இரட்டையாகாமல் py ஆர்பிட்டாலுக்குச் செல்கிறது.
63.
1. ஆஃபா தத்துவம் பல்வேறு ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பதை விளக்குகிறது.
2. ஆனால் px, py, pz போன்ற சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுவது பற்றி அறிவியல் ஏதும் குறிப்பிடவில்லை.
64.
சம ஆற்றல் ஆர்பிட்டால்கள்:
1. ஒரு p ஆர்பிட்டாலுக்கு மூன்று வகையான திசையமைப்புகள் உள்ளன.
2. அதாவது px, py, pz இம்மூன்றும் சமமான ஆற்றலைப் பெற்றுள்ளன. எனவே, இவை சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என அழைக்கப்படுகின்றன.
சம ஆற்றல் பண்பு இழத்தல்:
1. மின்புலம் மற்றும்
2. காந்தப்புலம்
இவற்றினால் சம ஆற்றல் பண்பு இழக்கப்படுகிறது.
65.
1. அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நான்கு குவாண்டம் எண்கள் அடங்கிய தொகுப்பின் மூலம் வரையறுக்க இயலும்.
2. அவையானவை
(i) முதன்மை குவாண்டம் எண்(n)
(ii) கோண உந்த குவாண்டம் எண் (l)
(iii) காந்த குவாண்டம் எண் (m)
(iv) தற்சுழற்றி குவாண்டம் எண் (s)
66.
1. ஹெய்சன்பர்க்கன் நிச்சயமற்றக் கொள்கை (மற்றும்)
2. நுண்துகளின் ஈரியல்புத்தன்மை.
-இவற்றை அடிப்படையாகக் கொண்டு குவாண்டம் இயக்கவியல் என்ற ஒரு புதிய இயக்கவியல் உருவாக்கப்பட்டது.
67.
1. எலக்ட்ரான் நுண்ணோக்கி
2. குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் விளிம்பு விளைவு
68.
முக்கியத்துவம் உடையது: எலக்ட்ராயனுக்கு டி -பிராக்ளே அலைநீளம் அளவிடக்கூடியது மேலும் முக்கியத்துவம் உடையது.
புறக்கணிக்கத்தக்கது: இரும்பு பந்திற்கு டி -பிராக்ளே மிகக்குறைவாக இருப்பதால் புறக்கணிக்கத்தக்கது.
69.
(i) பல எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களுக்கு இக்கொள்கையினை பயன்படுத்த இயலாது
(ii) சீமன் விளைவு மற்றும் ஸ்டார்க் விளைவு ஆகியவற்றை இக்கொள்கை விளக்கவில்லை.
(iii) அணுக்கருவினைச் சுற்றி எலக்ட்ரான்கள் அவற்றின் கோண உந்தத்தின் மதிப்பு \(\frac{nh}{2\pi}\) க்கு சமமாக இருக்குமாறு உள்ள சில குறிப்பிட்ட வட்டப்பாதையில் மட்டுமே சுழல்வதற்கு அடிப்படையாக அமையும் காரணத்தினை போர் கொள்கையினால் விளக்க இயலவில்லை.
70.

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards