11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/03/2019
+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)
2.
500 மி.லி 2.5 M HCl கரைசலைப் பெறுவதற்கு, 4M HCl மற்றும் 2M HCl கரைசல்களை எந்த கன அளவுகளில் கலக்க வேண்டும்?
3.
(அ) 300 மி.லி மற்றும் (ஆ) 1 லிட்டர் கரைசலில் 5.6 கிராம் KOH கரைந்துள்ளது எனில், அக்கரைசல்கள் ஒவ்வொன்றின் மோலாரிட்டியைக் கணக்கிடுக.
4.
கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.
5.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
6.
சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.
7.
குவாண்டம் இயக்கவியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
8.
SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.
9.
A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C)யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.
10.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.
11.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயு ஒன்றின் கனஅளவு 3.8dm3 ஆகும்.அதனை OoCயில் உள்ள பனிக்கட்டி நீரில் மூழ்க வைக்கும் போது அதன் கனஅளவு 2.27dm3 எனில் அதன் ஆரம்ப வெப்பநிலை என்ன?
12.
பாயிலின் விதியினை தருக.
13.
ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக
14.
ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
15.
பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக
16.
ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.
17.
காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.
18.
ஹைட்ரஜனை சேமித்து வைக்க உலோக ஹைட்ரைடுகள் எவ்வகையில் பயன்படும் என நீ எதிர்பார்க்கின்றாய்?
19.
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
20.
கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
(அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
(i) KMnO4 + H2O2 →
(ii) CrCl3 + H2O →
(iii) CaO + H2O →
21.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?
22.
பென்சீனின் ஹைட்ரஜனேற்ற வினையை எழுதுக.
23.
பிணைப்புக் கோணம் வரையறு. அதை எவ்வாறு கண்டறியலாம்.
24.
சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?
25.
உர்ட்ஸ் வினையை எழுது.
26.
கார்பாக்சில் நீக்க வினையை எழுதுக.
27.
மாற்றியம் என்றால் என்ன?
28.
ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்பதை வரையறு?
29.
நல்லியல்பு கரைசல்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
30.
\({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.
31.
பலபடித்தான சமநிலை என்றால் என்ன?
32.
5.85 கிராம் சோடியம் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு, ஒரு திட்டக் குடுவையில் 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கர சைலின் வலிமை பார்மாலிட்டியில் கணக்கிடு.
33.
வில்லியம்சன் ஈதர் தொகுத்தல் முறையை எழுதுக.
34.
மீத்தேனின் குளோரினேற்ற வினையை எழுதுக.
35.
\(\triangle ng\) என்பதை பற்றி நீ அறிவதென்ன?
36.
வெளிப்புற பூச்சாக பயன்படும் ஐயோடோபோவிடோன் புரைதடுப்பான் கரைசலானது 10% w/v அயோடோபோவிடோனைக் கொண்டுள்ளது. வழக்கமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் அளவான 1.5 மி.லி உள்ள அயோடோபோவிடோனின் அளவைக் கணக்கிடுக.
37.
கால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவை?
38.
பாம் கலோரி மீட்டரின் பயன்களை பட்டியலிடுக.
39.
உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?
40.
அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?
41.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.
42.
டியூட்ரியம் தயாரித்தல் முறையை அனுக்கரு மாற்ற வினையுடன் விவரி.
43.
ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக.
44.
எளிய விகித வாய்ப்பாடு வரையறு.
45.
மோல் - வரையறு
46.
பின்வரும் சேர்மங்களின் தயாரிப்பினை விளக்குக.
i) DDT
ii) குளோரோஃபார்ம்
iii) பை பீனைல்
iv) குளோரோ பிக்ரின்
v) ஃப்ரீயான்-12
47.
புரோமோ ஈத்தேனை பின்வருவனவற்றுடன் வினைப்படுத்தும் போது உருவாகும் விளைபொருளைக் கண்டறிக.(i) KNO2 (ii) AgNO2
48.
கெல்டால் முறை யில் 0.20g கரிமச் சேர்மத்திலிருந்து வெளிப்படும் அம்மோனியா 15 ml N/20 கந்தக அமிலக் கரைசலால் நடுநிலையாக்கப்படுகிறது. நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.
49.
சமநிலை மாறிலி மதிப்பு
\({ K }_{ c }=\frac { { [{ NH }_{ 3 } }]^{ 4 }{ [{ O }_{ 2 } }]^{ 7 } }{ { [NO] }^{ 4 }{ [{ H }_{ 2 }O }]^{ 6 } } \) கொண்ட ஒரு சமநிலை வினை க்கான , தகுந்த சமன்செய்யப்பட்ட வேதி சமன்பாட்டை தருக.
50.
1- பியூட்டைன் மற்றும் 2 - பியூட்டைனை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?
51.
கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக
a) H2(g) + I2(g) ⇌ 2 HI
b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.
52.
பின்வருவனவற்றிற்கு காரணம் தருக
1. t-பியூட்டைல் குளோரைடானது நீர்த்த KOH உடன் SN1 வினை வழிமுறையில் வினைபுரிகிறது. ஆனால் n-பியூட்டைல் குளோரைடானது SN2 வினை வழிமுறையைப் பின்பற்றுகிறது.
2. O- மற்றும் m- டைகுளோரோ பென்சீன்களைக் காட்டிலும் p-டைகுளோரோ பென்சீன் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளது.
53.
ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.
54.
எத்திலீன் மற்றும் அசிட்டிலீனில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக.
55.
பிணைப்பு ஆற்றல் வரையறு.
56.
BeCl2 மற்றும் MgCl2 ஆகியவற்றில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக .
57.
பை (π) பிணைப்பு என்றால் என்ன?
58.
ஐசோ பியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்
59.
ஒரு சேர்மத்தின் அரோமேட் டிக் தன்மையைப் ஹக்கல் விதிப்படி எவ்வாறு தீர்மானிக்கலாம்
60.
ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?
61.
அசிட்டைல் குளோரைடை அதிகளவு CH3MgI உடன் வினைப்படுத்தும் போது என்ன நிகழும்?
62.
இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?
63.
சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?
64.
திரவத்தின் ஆவி அழுத்தம் என்றால் என்ன? ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு என்றால் என்ன?
65.
ஒரினவரிசை (அ) படிவரிசை பற்றி குறிப்பெழுதுக.
66.
அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.
67.
துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.
68.
ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் எங்கிருந்து வந்தது?
69.
புமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?
70.
கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக
71.
மோலார் வெப்ப ஏற்புத்திறன் வரையறு.அதன் அலகு யாது?
72.
ஹெஸ்ஸின் வெப்பம் மாறா கூட்டல் விதியை வரையறு.
73.
விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.
74.
ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக
75.
கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்?
76.
முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.
77.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும், துணைக்கூட்டின் குறியீடு, அனுமதிக்கப்பட்ட m மதிப்புகள் மற்றும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினைத் தருக.
i) n = 4, l =2, ii) n =5, l = 3 iii) n=7, l=0
78.
ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.
79.
சமான நிறை வரையறு
80.
ஒப்பு அணு நிறை வரையறு
81.
ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக
82.
சரிபாதியளவு நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்கள் நிலைப்புத்தன்மை பெறுதல் p- ஆர்பிட்டாலைக் காட்டிலும் d – ஆர்பிட்டாலில் அதிகமாக உள்ளது. ஏன்?
83.
ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?
84.
NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக
85.
HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.
86.
0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?
87.
எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.
88.
அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானதா? “ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்.”
89.
ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.
1.
2.
500 மி.லி 2.5 M HCl கரைசலை தயாரிக்க தேவைப்படும், 4M HCl இன் கன அளவு = x மி.லி. என்க.
எனவே தேவைப்படும் தேவைப்படும், 2M HCl இன் கன அளவு = (500 - x) மி.லி.
C1V1+ C2V2 = C3V3
(4x) + 2(500 - x) = 2.5 × 500
4x + 1000 - 2x = 1250
2x = 1250 - 1000
\(x={250\over 2}\)
= 125 ml
எனவே, தேவைப்படும் 4M HCl இன் கனஅளவு = 125 மி.லி.
தேவைப்படும் 2M HCl இன் கனஅளவு = (500 - 125) மி.லி.= 375 மி.லி.
3.
KOH ன் நிறை =5.6g
மோல்களின் எண்ணிக்கை =\(\frac {5.6}{56}\)
=0.1 மோல்
அ) கரைசலின் அளவு =500 ml =0.5L

\(=\frac { 0.1 }{ 0.5 } \)
=0.2M
ஆ) கரைசலின் கன அளவு =1L
மோலாரிட்டி =\(\frac { 0.1 }{ 1 } \)
=0.1 M
4.
கார உலோகங்களின் பயன்கள்:
உலோக லித்தியமானது, பயனுள்ள உலோக கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.எடுத்துக்காட்டாக இது லெட் உடன் சேர்ந்து, மோட்டார் எஞ்சின்களில் பயன்படும் வெண்மை உலோக (white metal)பேரிங்குகள், அலிமினியத்துடன் சேர்ந்து ஆகாய விமான பாகங்கள் மற்றும் மெக்னீசீயதுடன் சேர்ந்து கேடயங்கள் ஆகியன தயாரிக்கப்படுகின்றன.இது வெப்ப உட்கரு வினைகளில் பயன்படுகிறது.
(i) லித்தியம் மின்வேதிக்கலன்கள் செய்யவும் பயன்படுகிறது.
(ii) லித்தியம் கார்பனேட் மருந்துகளில் பயன்படுகிறது.
(iii) Pb(Et)4 மற்றும் Pb(Me)4 ஆகியவற்றை தயாரிக்க தேவைப்பதேவைப்படும் Na/Pb உலோக கலவை தயாரிக்க சோடியம் பயன்படுகிறது.இந்த கரிம லெட் சேர்மங்கள் சில காலங்களுக்கு முன்னர் பெட்ரோலுடன் சேர்க்கப்படும் இடிப்பு எதிர்ப்பு (anti-knock) சேர்மங்களாக பயன்பட்டன.தற்காலத்தில் லெட் இல்லாத பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது.
(iv) திரவ சோடியம் அதிவேக ஈணுலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மென் சோப்புகள் (Soft Soap) தயாரித்தலில் பயன்படுகிறது.மேலும் இது மிகச்சிறந்த கார்பன் டையாக்சைடு உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிறது.
(v) சீசியம் ஒளிமின்கலன்களை வடிமைத்தலில் பயன்படுகிறது.
5.
1.எந்த ஒரு செயல் முறையின் தன்னிச்சை தன்மையும் மூன்று வெவ்வேறு காரணிகளை பொறுத்து அமைகிறது.
2.ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது வெப்பம் உமிழ் செயல்முறையாகும், மேலும் தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)H எதிர்குறிஉடையது)
3.ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)S நேர்குறிஉடையது)
4. ஒரு வினை தன்னிச்சையாக நிகழ, மேற்கூறிய இரண்டின் தொகுப்பான கட்டிலா ஆற்றல் மதிப்பு கண்டிப்பாக எதிர்குரியை பெற்ரறிருக்க வேண்டும். அதாவது ஒரு வினை தன்னிச்சையாக நிகழ்வதற்கு தேவையான நிபந்தனை \(\triangle\)H-T\(\triangle\)S<0 என்பதாகும்.
6.
1. ஒரு சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளாக பிரிகையடையும் வினைகள் சிதைவடையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை வினைகளில், ஒரு சேர்மத்தில் உள்ள இரண்டு வெவ்வேறான தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களில் மாற்றம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டு:

7.
1. ஹெய்சன்பர்க்கன் நிச்சயமற்றக் கொள்கை (மற்றும்)
2. நுண்துகளின் ஈரியல்புத்தன்மை.
-இவற்றை அடிப்படையாகக் கொண்டு குவாண்டம் இயக்கவியல் என்ற ஒரு புதிய இயக்கவியல் உருவாக்கப்பட்டது.
8.
SrCO3 (S) ⇌ SrO(S) + CO2(S)
என்ற வினைக்கு
Δng = 1 – 0 = 1
\(\therefore \) KP = KC (RT)
2.2 × 10–4 = KC (0.0821) (1002)
\({ K }_{ C }=\frac { 2.2\times { 10 }^{ -4 } }{ 0.0821\times 1002 } \)
= 2.674 \(\times \) 10-6
9.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 2}={ CH }_{ 2 }\) | எத்திலீன் |
| B | \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CI }\) | ஈத்தைல் குளோரைடு |
| C | \({ C }_{ 2 }{ H }_{ 5 }NH_{ 2 }\) | ஈத்தைல் அமீன் |
10.
(i) என்ட்ரோபி கூற்று:
1. ஒரு தன்னிச்சை செயல்முறை நிகழும்போது ஒரு தனித்த அமைப்பின் என்ட்ரோபி அதிகரிக்கிறது.
2. என்ட்ரோபி என்பது ஒரு அமைப்பின் மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற தன்மையை அளவிடும் வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பு.
(ii) கெல்வின்-பிளாங்க் கூற்று
1.ஒரு சுற்றுச்செயல் முறையில் சூடான வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி அவ்வெப்பத்தின் ஒரு பகுதியை குளிர்ந்த நிலையிலுள்ள மூலத்திற்கு மாற்றாமல் முழுவதும் வேலையாக மாற்றக்கூடிய இயந்திரத்தினை வடிவமைக்க இயலாது.
(iii) கிளாசியஸ் கூற்று
எந்த ஒரு வேலையும் செய்யாமல் குளிர்ந்த வெப்ப மூலத்திலிருந்து சூடான வெப்ப மூலத்திற்கு வெப்பத்தை மாற்ற முடியாது.
11.
V1 = 3.8 dm3 V2 = 2.27 dm3
T1 = ? T2 = 00 C = 273 K
\({V_1\over T_1}={V_1\over T_2}\)
\(V_1\times\left(T_2\over V_2\right)=T_1\)

T1=457K
12.
1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் , குறிப்பட்ட நிறையுள்ள வாயு அடைத்துக்கொள்ளும் கன அளவானது அதன் அழுத்திற்கு எதிர்விகித தொடர்புடையது.
2. கணிதவியல் முறைப்படி, பாயில் விதி
\(V\alpha \frac { 1 }{ p } \) (T மற்றும் n மாறிலிகள் ) அல்லது \(V=K\frac { 1 }{ P } \)
3. K = விகித மாறிலி
13.
ஈத்தேனின் எரிதல் வினைக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
C2H6 + 7/2O2 → 2CO2 + 3H2O
⇒ 2C2H6 + 7O2 → 4CO2 + 6 H2O
4 மோல்கள் CO2 - ஐ உருவாக்க 2 மோல் ஈத்தேன் தேவைப்படுகிறது.
1 மோல் (44 g) CO2 - ஐ உருவாக்க தேவைப்படும் ஈத்தேனின் மோல்களின் எண்ணிக்கை

=1/2 மோல் ஈத்தேன்
=0.5 மோல் ஈத்தேன்
14.
கொடுக்கப்பட்டவை: ஒரு அணுவின் நிறை= 6.645 × 10–23 g
\(\therefore\)1 மோல் அணுவின் நிறை = 6.645 × 10–23 g × 6.022 × 1023
=40 g
0.320 kg -ல் உள்ள தனிமத்தின் மோல்களின் எண்ணிக்கை = \(\frac{1 mole}{40 g}\times0.320 kg\)
=\(\frac{1 mol\times320g}{40g}\)
=8 mol
15.
1.கட்டுமானத் தொழிலில் அதிக அளவில் பயன்படுகிறது.
2.ஒரு உறுப்பில் எலும்பு அல்லது சுளுக்கு பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நகராமல் இருந்தி வைக்கப் பயன்படுகிறது.
3.பற்சீராக்கும் துறை, அணிகலன்கள் உருவாக்கும் தொழில்,சிலைகள் மற்றும் வார்ப்புகள் உருவாக்குவதில் இது பயன்படுகிறது.
16.
1. ஜெர்மன் மொழியில் ஆஃபா என்ற சொல்லுக்கு கட்டமைத்தல் என்பது பொருளாகும்.
2. அடி ஆற்றல் நிலையில் உள்ள அனுவின், ஆர்பிட்டால்கள் அவற்றின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன.
3. அதாவது, எலக்ட்ரான்கள், அவை நிரப்பப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆர்பிட்டால்களில், எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலுடையதோ அந்த ஆர்பிட்டாலில் முதலில் நிரம்பும்.
4. குறைவான ஆற்றலுடைய ஆர்பிட்டால் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே, எலக்ட்ரானானது அடுத்த உயர் ஆற்றலுடைய ஆர்பிட்டாலினுள் நுழையும்.

5. மேலே உள்ள படம் ஆஃபா தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படும் வரிசை தரப்பட்டுள்ளது.
6. இவ்வரிசை (n+1) விதிப்படி அமைந்துள்ளது.
17.
1. எர்வின் ஷ்ரோடிங்கர் எலக்ட்ரானின் அலைப்பண்பினை, ஒரு வகைக்கெழுச் சமன்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்டார்.
2. எலக்ட்ரான் இயங்கக்கூடிய விசையின் புலத்தினை பொறுத்து புறவெளியில் அலைச் சார்பில் ஏற்படும் மாறுபாட்டினை இச்சமன்பாடு தீர்மானிக்கிறது.
3. காலத்தினை சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டினை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\widehat { H } \psi =E\psi \)...(1)
இங்கு,
\(\widehat { H } \)=ஹாமில்டோனியன் செயலி
\(\psi \)=அலைச் சார்பு. இது துகளின் நிலை அச்சுகளின் சார்பாகும். இது \(\psi \left( x,y,z \right) \) என குறிப்பிடப்படுகிறது.
\(\widehat { H } =\left[ \frac { -{ h }^{ 2 } }{ 8{ \pi }^{ 2 }m } \left( \frac { { \partial }^{ 2 } }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { z }^{ 2 } } \right) +V\psi \right] \)...(2)
சமன்பாடு (2) ஐ (1) ல் பிரிதியிட,
\(\left[ \frac { -{ h }^{ 2 } }{ 8{ \pi }^{ 2 }m } \left( \frac { { \partial }^{ 2 } }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { z }^{ 2 } } \right) +V\psi \right] =E\psi \)...(3)
சமன்பாடு (3) ஐ \(-\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } \) ஆல் பெருக்கி, மாற்றியமைக்க.
\(\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { z }^{ 2 } } +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } \left( E-V \right) \psi =0\)...(4)
4. மேற்கண்ட ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டில், காலம் (t) ஒரு சார்பாக இடம் பெறவில்லை என்பதால் இச்சமன்பாடு காலத்தைப் பொறுத்து அமையாத ஷ்ரோடிங்கரின் அலைச் சமன்பாடு என அழைக்கப்படுகிறது.
5. மொத்த ஆற்றலின் (E) குறிப்பிட்ட சில மதிப்புகளுக்கு மட்டும் இச்சமன்பாட்டிற்கு தீர்வுகாண இயலும்.
18.
1. சில உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன், ஹைட்ரஜன் அணுவாக உறிஞ்சப்படுகிறது.
2. இவ்வாறு உறிஞ்சப்பட்ட ஹைட்ரஜன் அணுவினால் அணிக்கோவை இடைவெளி விரிவடைகிறது. எனவே, நிலைப்புத்தன்மை குறைகிறது.
3. இதனை வெப்பப்படுத்தும் போது ஹைட்ரஜன் அணுக்கள் உலோகத்தின் வழியே விரவி, புறப்பரப்பினை அடைகின்றன. மேலும் மீள் இணைந்து மூலக்கூறு ஹைட்ரஜனை உருவாக்குகின்றது.
4.நுட்பரீதியாக உலோக ஹைட்ரைடு உருவதால் ஒரு வேதிவினையின் காரணமாக உருவாகிற. ஆனால் இது இயற் சேமிப்பு முறை போன்ற செயல்படுகிறது.
5. அதாவது நீர் பஞ்சை போன்று இது உறிஞ்சுதல் மற்றும் வெளியிடுதலை நிகழ்த்துகிறது.
6. இவ்வாறு உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளினால் ஹைட்ரஜனின் மீள் முறையில் ஏற்கப்படுத்தல் என்பது ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் மீள் மின்னூட்டம் பெறச்செய்ய இயலும் உலோக மீள் மின்னூட்டம் பெறச்செய்ய இயலும் உலோக ஹைட்ரைடு மின்கலன் ஆகியப் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது.
19.
(i) z=118 என்ற தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
86[Rn] 5f14 6d10 7s2 7p6
(ii) தனிம வரிசை அட்டவணையில் இது p-தொகுதியில் இடம்பெற்றுள்ளது. (இறுதி எலக்ட்ரான் p ஆர்பிட்டாலில் சேர்க்கப்படுவதால்)
(iii) வரிசை எண் =7 (n =7 என்பதால்)
(iv) தொகுதி எண் =18
(nd ஆர்பிட்டால் +ns ஆர்பிட்டால் +np ஆர்பிட்டால்)
(10) (2) (6)
20.
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2+8H2O
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
இவற்றுள்
(அ) நீராற் பகுத்தல்
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
(ஆ) ஆக்ஸிஜனேற்ற வினை
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2 (அமில ஊடகத்தில்) + 8H2O
(இ) நீரேற்ற வினை -
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
21.
சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
CaCO3 (s) \(\overset { \Delta }{ \longrightarrow } \) CaO(s) + CO2 (g)
மேற்கண்டுள்ள சமன்பாட்டின்படி
1 மோல் (100g) CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது 1 மோல் CO2 உருவாகிறது

திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும்.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 50 g CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது

= 11.35 லிட்டர் of CO2 வைத் தருகிறது
22.

23.
(i) சகப்பிணைப்புகள் திசைப் பண்புடையவை. அவைகள் புறவெளியில் குறித்த திசையினை நோக்கி அமைகின்றன.
(ii) இத்திசைப் பண்பின் காரணமாக ஒரு மூலக் கூறின் இரு சகப் பிணைப்புகளுக்கு இடையே குறிப்பிட்ட நிலையான கோணம் உருவாகிறது.
(iii) இக்கோணம் பிணைப்புக் கோணம் என்றழைக்கப்படுகிறது.
(iv) நிறமாலை முறைகளைப் பயன்படுத்தி பிணைப்புக் கோணத்தைக் கண்டறியலாம்.
24.
இணையும் இரண்டு அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலட்ரான் இரட்டைகள் சமமாக பங்கிடப்படுவதால் அவைகளுக்கு இடையே வேதிப் பிணைப்பு உருவாகிறது. எனவே இது சகப்பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
25.

26.

27.
ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினையும் வெவ்வேறு அமைப்பு வாய்ப்பாடுகள் மற்றும் பண்புகள் பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் மாற்றியங்கள் எனப்படும்.
28.
ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்பது அதில் அடங்கியுள்ள அணுக்களின் எண்ணிக்கைகளைக் குறிப்பிடும் எளிய வடிவமைப்பு பற்றிய குறைந்தபட்ச தகவலை தரும் ஒன்றாகும்.
29.
(i) பென்சீன் & டொலுயீன்
(ii) n-ஹெக்சேன் & n-ஹெப்டென்
(iii) எத்தில் புரோமைடு & எத்தில் அயோடைடு
(iv) குளோரோ பென்சீன் & புரோமோ பென்சீன்
30.
\({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\)
\(Q=\frac { \left[ HI \right] ^{ 2 } }{ \left[ { H }_{ 2 } \right] \left[ { I }_{ 2 } \right] } \)
\(=\frac { 0.6\times 0.6 }{ 0.2\times 0.2 } \)
\(Q=9\quad \left[ \because { K }_{ C }=48 \right] \)
\(Q<{ K }_{ C }\)
ஆகவே, வினையானது முன்னோக்கிய திசையில் நிகழும்.
31.
சமநிலையில் உள்ள ஒரு வினையின் வினைபடுபொருள்கள், வினை விளை பொருட்கள் ஆகியன வெவ்வேறு நிலைமைகளின் காணப்பட்டால் அச்சமநிலை பலபடித்தான சமநிலை எனப்படும்.
உதாரணம்: \(CaCO_{ 3 }(s)\rightleftharpoons CaO(s)+CO_{ 2 }(g)\)
32.

\(=\frac { \left( \frac { 5.85 }{ 58.5 } \right) }{ 0.5 } \)
=0.2 F.
33.

34.

35.
\(\triangle ng\) என்பது வாயு நிலைமையில் உள்ள வினை விளைப்பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும், வினைபடுபொருட்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாடாகும்.
36.
10% \(\frac { w }{ v } \) என்பது, 10g 100ml கரைசலில் 10 கி
கரைபொருள் உள்ளது என குறிக்கும்.
∴ அயோடோபோவிடோனின் எடை
= \(\frac { 10g }{ 100ml } \) x 1.5ml
= 0.15 g.
37.
i.கால்சியம் ஹைட்ராக்சைடு கட்டுமானப் பொருட்கள் மற்றும் கலவைகள் தயாரிப்பதில் பயன்படுகிறது.
ii.நுண்ணுயிர் எதிர்ப்பு இயல்பினைப் பெற்றிருப்பதால் சுண்ணாம்பு அடித்தலில் பயன்படுகிறது.
iii.கண்ணாடி உற்பத்தி செய்தல்,தோல் பதனிடும் தொழில்கள், சலவைத்தூள் தயாரிப்பதில் மற்றும் சர்க்கரை தயாரித்தலில் பயன்படுகிறது.
38.
1.எரிதல் வினைகளில் வெளிப்படும் வெப்பத்தை அளவிட பாம்கலோரி மீட்டர பயன்படுகிறது.
2.உணவுப் பொருட்களின் கலோரி மதிப்பினை நிர்ணயித்திட இது பயன்படுகிறது.
3.வளர்சிதை மாற்ற ஆய்வுகள், உணவு பதப்படுத்துதல், செடி பொருட்களை சோதித்தறிதல் போன்ற பல்வேறு தொழிற்துறைகளில் பாம்கலோரி மீட்டர் பயன்படுகிறது.
39.
(i) தனிம வரிசை அட்டவணையின் இடமிருந்து வலமாகச் செல்லும்போது உட்கருமின்சுமை அதிகரிப்பதாலும், உருவளவு குறைவதாலும் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகரிக்கின்றது.
(ii) அலோகங்கள் அட்டவணையின் வலப்புறத்திலும் உலோகங்கள் இடப்புறத்திலும் காணப்படுகின்றன.
(iii) எனவே அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் அதிகமாகக் காணபப்டுகின்றன.
40.
(i) ஓர் அயனிப் படிகத்தில் உள்ள நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் ஒன்றையொன்றுதொட்டுக்கொண்டிருக்குமாறு கருதும்போது அவற்றின் அயனி ஆரங்களின் கூடுதல் ஆனது அவற்றிற்கிடையேயான அணுக்கருக்களின் தொலைவிற்கு சமமாக இருக்கும்.(ii) ஓர் அயனியின் அபாரமானது அதன் அணுக்கருவின் நிகர மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
41.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பானது ஒரு தனித்த மூலக்கூறுக்கு உள்ளாகவே நிகழ்கிறது.
42.
1. முன் பாடப்பகுதியில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, டிரிட்டியம் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.
2. எனவே, அணுக்கரு பிளவு உலையில், லித்தியத்தின் மீது மெதுவாக இயங்கும் நியூட்ரானை மோதச் செய்து, செயற்கை முறையில் டிரிட்டியம் பெறப்படுகிறது. இச்செயல் முறைக்கான அணுக்கரு மாற்ற வினை பின் வருமாறு.
\(_{ 3 }^{ 6 }{ Li }+_{ 0 }^{ 1 }{ n }\rightarrow _{ 2 }^{ 4 }{ He }+_{ 1 }^{ 3 }{ T }\)
43.
| பண்புகள் | ஆர்த்தோ ஹைட்ரஜன் | பாரா ஹைட்ரஜன் |
|---|---|---|
| உருகுநிலை | 13.95 k | 13.83 k |
| கொதி நிலை | 20.39 k | 20.26 k |
| காந்த்த் திருப்புதிறன் | புரோட்டனின் காந்திருப்புத்திறன் போல் இராண்டு மடங்கு | பூஜ்ஜியம் |
44.
சேர்மத்தின், ஒரு முலக்கூறில் அடங்கியுள்ள வெவ்வேறு தனிமங்களின் எண்ணிக்கையின் எளிய விகிதத்தினை அத்தனிமத்தின் குறியீட்டிற்கு கீழ் ஓட்டாக எழுதுவதால் பெறப்படும் வாய்ப்பாடு எளிய விகித வாய்ப்பாடு எனப்படும்.
45.
12g கார்பன் -12 ஐசோடோப்பில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படைத் துகள்களைப் பெற்றுள்ள ஒரு அமைப்பில் உள்ள பொருளின் அளவு ஒரு மோல் எனப்படும்.
46.
i) DDT

ii) குளோரோஃபார்ம்

iii) பை பீனைல்

iv) குளோரோ பிக்ரின்

v) ஃப்ரீயான்-12

47.
(i)
1.புரோமோ ஈத்தேனை KNO2 உடன் வினைப்படுத்தும் போது ஆல்கைல் நைட்ரேட் உருவாகிறது.
2.ஏனெனில், K-O பிணைப்பு இயற்கையில் அயனிப் பிணைப்பாக உள்ளது.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+KN{ O }_{ 2 }\rightarrow { CH }_{ 3 }{ CH }_{ 2 }-O-N=O+KBr\)
(ii)
1. புரோமோ ஈத்தேனை AgNO2 உடன் வினைப்படுத்தும் போது நைட்ரோ ஆல்கேன் உருவாகிறது.
2.ஏனெனில் பிணைப்பு Ag-O சகப்பிணைப்பு.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+AgN{ O }_{ 2 }\rightarrow { CH }_{ 3 }{ CH }_{ 2 }N{ O }_{ 2 }+AgBr\)
48.
கரிமச் சேர்மத்தின் எடை = 0.20
அமிலத்தின் திறன் = \(\frac { N }{ 20 } \)
அமோனியாவால் நடுநிலையாக்கப்பட்ட = 15 ml
திட்ட அமிலத்தின் கன அளவு
1000 மேல் 1N அமோனியாவால் = 14 கி நைட்ரஜன் உள்ள நைட்ரஜன்
\(\frac { N }{ 20 } \) திறனுள்ள 15 ml = \(\frac { 14\times 15\times 1 }{ 1000\times 20 } \)
அமோனியாவால் உள்ள நைட்ரஜன்
0.20 கி சேர்மத்திலுள்ள நைட்ரஜன் = \(\frac { 14\times 15 }{ 1000\times 20 } \)
100 கி சேர்மத்திலுள்ள நைட்ரஜன் = \(\frac { 14\times 15\times 100 }{ 1000\times 20\times 0.20 } \)
= 5.25 %
49.
\({ K }_{ c }=\frac { { [{ NH }_{ 3 }] }^{ 4 }{ [{ O }_{ 2 } }]^{ 5 } }{ { [NO] }^{ 4 }{ [{ H }_{ 2 }O }]^{ 6 } } \)
வேதிச்சமன்பாடானது,
4 NO + 6H2O ⇌ 4NH3 + 5O2
50.
1- பியூட்டைன் மற்றும் 2 - பியூட்டை ஆகியவற்றை AgNO3 அயனியாக்களுடன் வினைப்படுத்தி வேறுபடுத்திக் காட்டலாம்
1- பியூட்டைன் அமோனியாக்கலுடன் வினைபுரிந்து விழ்படிவைத் தருகிறது.
இதற்கு காரணம் 1- பியூட்டைனில் அமில ஹைட்ரஜன் இருப்பதே ஆகும்.
ஆனால் 2 - பியூட்டைனில் அமில ஹைட்ரஜன் இல்லாததால் வினை நிகழ்வதில்லை.

51.
a) H2(g) + I2(g) ⇌ 2 HI
இங்கு வினைபடு பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை வினைவிளை பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது.
எனவே, இச்சமநிலையின் மீது கனஅளவு மாறுபாடு எவ்வித பதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
இங்கு வினைவிளை பொருட்களின் அளவினை அதிகரிக்க கன அளவினை கன அளவை அதிகரிக்க வேண்டும்.
c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
இங்கு வினைவிளை பொருட்களின் அளவினை அதிகரிக்க கன அளவினை குறைக்க வேண்டும்.
52.
(1)
1. மூவினைய பியூட்டைல் குளோரைடானது நீர்த்த KOH உடன் புரியும் வினை
SN1 வினை வழிமுறையாகும்.
2. இவ்வினை இருபடிகளில் நிகழ்கிறது.
3.முதல் படிகளில் கார்பன் நேர் அயனியும் (மெதுவான வினை)
4.இரண்டாம் படியில் கருக்கவர் பொருள் கார்பன் நேரயனியுடன் வினையும் (விரைவாக) புரிகிறது.
5.அனால், n-பியூட்டைல் குளோரைடானது SN2 வினை வழிமுறையை பின்பற்றுகிறது.
6.இவ்வினை ஒரேபடியில் நிகழ்வதாகவும், பகுதி பிணைப்பு பிணைக்கப்பட்டு இடைநிலை உருவாவதாலும் இது SN2 வினை வழிமுறையில் அமைந்துள்ளது.
(2)
1.ஆர்த்தோ மற்றும் மெட்டா டை குளோரோ பென்சீனைக் காட்டிலும், பாரா டைகுளோரோ பென்சீன் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளது.
2.p-மாற்றியத்தின் உருகு நிலைக்குக் காரணம் அதன் சிர்மைத் தன்மை ஆகும்.
3.இதன் விளைவாக படிகத்தில் அதன் மூலக்கூறுகள் நெருங்கி பொதிந்துள்ளன.
4.மேலும், மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை அதிகமாக உள்ளது. எனவே உருக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.
53.
ஹைட்ரஜன் ஹாலைடுகளில் இருந்து:

பாஸ்பரஸ் ஹாலைடுகளில் இருந்து:

தயோனைல் ஹாலைடுகளில் இருந்து :

54.
எத்திலீனில் காணப்படும் பிணைப்பு
(i) எத்திலீனில் பிணைப்பு உருவாதலை இனக் கலப்பதால் கோட்பாட்டினைப் பயன்படுத்தி விளக்கலாம். எத்திலீனின் மூலக்கூறு வாய்பாடு C2H4. கார்பனின் இணைதிறன் 4 ஆகும். அதன் இணைதிற கூட்டு எலட்ரான் அமைப்பு 1 அடி ஆற்றல் நிலையில் [He] 2s2 2px1 2py1 2pz0 . கார்பனின் நான்கு இணை திறனை நிறைவு செய்யும் பொருட்டு, 2s ஆர்பிட்டலிலிருந்து ஒரு எலக்ட்ரானை 2pz ஆர்பிட்டலுக்கு கிளர்வுறச் செய்க.

(ii) எத்திலீனில் இரு கார்பன் அணுக்களும் அவற்றின் 2s, 2px மற்றும் 2py ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று கலந்து sp2 இனக்கலப்பாதலுக்கு உட்படுகின்றன. இதன் விளைவாக மூன்று சமமான sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்கள் உருவாகின்றன. இந்த ஆர்பிட்டால்கள் ஒன்றக்கொன்று 1200 கோண இடைவெளியில் XY தளத்தில் அமைகின்றன. இனக்கலப்படையாத 2Pz ஆர்பிட்டால் இந்த XY தளத்திற்கு செங்குத்தான திசையில் அமைகின்றது.

சிக்மா பிணைப்பு உருவாதல்:
(i) மூலக்கூறு அச்சில் (x-அச்சு) அமைந்த ஒவ்வொரு கார்பன் அணுவின் ஒரு sp2 இனக்கலப்பு அடைந்த ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று நேர்கோட்டில் மேற்பொருந்தி C-C சிக்மா பிணைப்பினை உருவாக்குகிறது. இரண்டு கார்பன் அணுக்களின் மற்ற இரு sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்களும் நேர்கோட்டில் மேற்பொருந்துவதால், ஒவ்வொரு கார்பனும், ஹைட்ரஜனுடன் இரு C-H சிக்மா பிணைப்புகளை உருவாக்குகின்றன.

π-பிணைப்பு உருவாதல்:
இரு கார்பன் அணுக்களின் இனக்கலப்பாதலுக்கு உட்படாத இரு 2pz ஆர்பிட்டால்களும் மூலக்கூறு அச்சில் அமையாததால் பக்கவாட்டின் வழியாக மட்டுமே மேற்பொருந்த இயலும். இத்தகைய பக்கவாட்டு மேற்பொருந்துதலால் இரு கார்பன் அணுக்களுக்கும் இடையே படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு π பிணைப்பு உருவாகின்றது.

55.
(i) வாயு நிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு பிணைப்பு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
(ii) பிணைப்பு ஆற்றலின் அலகு KJ mol-1
56.
(i) BeCl2
(ii) அடி ஆற்றல் நிலையில் உள்ள பெரிலியம் அனுவின் இணைதிற கூட்டு எலக்ட்ரான் அமைப்பு பின்வருமாறு:

(iii) பெரிலியத்தின் 2s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது கிளர்வுற்று 2p ஆர்பிட்டலுக்குச் செல்கிறது.
(iv) இப்போது 2s மற்றும் 2p ஆர்பிட்டால்கள் இனக்கலப்பாதலுக்கு உட்பட்டு, இரு சமமான sp இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்களைத் தருகின்றன.
(v) இந்த புதிய ஆர்பிட்டால்கள் 50%, s-பண்பினையும், 50% p-பண்பினையும் பெற்றுள்ளன.

(vi) pz ஆர்பிட்டால் நேர்க்கோட்டில் மேற்பொருந்துவதால் Be மற்றும் Cl க்கு இடையே சகப்பிணைப்பு உருவாகிறது.
MgCl2:
(i) மெக்னீசியம் குளோரைடில் உள்ள இரு Mg-Cl பிணைப்பு நேர்க்கோட்டில் உள்ளது.
(ii) அடி ஆற்றல் நிலையில் உள்ள மெக்னீசியம் அணுவின் இணைதிற கூட்டு எலக்ட்ரான் அமைப்பு பின்வருமாறு:

(iii) மெக்னீசியத்தின் 3s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது கிளர்வுற்று 3p ஆர்பிட்டாலுக்குச் செல்கிறது.
(iv) இப்போது 3s மற்றும் 3p ஆர்பிட்டால்கள் இனக்கலப்பாதலுக்கு உட்பட்டு, இரு சமமான sp இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்களைத் தருகின்றன.

(v) குளோரினின் pz ஆர்பிட்டல் நேர்க்கோட்டில் மேற்பொருந்துவதால் Mg மற்றும் Clக்கு இடையே சகப்பிணைப்பு உருவாகிறது.

57.
இரு அணு ஆர்பிட்டால்கள் பக்கவாட்டில் மேற்பொருந்தும்போது சகபிணைப்பு பை பிணைப்பு (π) எனப்படும். x-அச்சு மூலக்கூறு அச்சாக கருதும் நேர்வில் py-py மற்றும் pz-pz ஆகிய ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதலால் π பிணைப்பு உருவாகிறது.
58.
1. ஒலிபீன் கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதிகளைப் பொறுத்து ஆல்கீன்கள் அமிலம் கலந்த KMnO4 கரைசலுடன் , ஆக்ஸிஜனேற் றம் அடைந்து கீட்டோன்கள் அல்லது கார்பாக்ஸிலிக் அமிலங்களைத் தருகின்றன.
2.இவ்வினையில் , ஊதா நிறக்கரைசல் நிறமற்றதாக மாறுகிறது.
3. எனவே , இவ்வினையானது நிறைவுறா தன்மையை அறிய உதவும் ஒரு சோதனையாகும்.

59.
ஹக்கல் என்பவர் அரோமேட்டிக் தன்மை என்பது எல்க்ட்ரான் அமைப்பினை பொறுத்து அமைகிறது என முன்மொழிந்தார் . ஒரு சேர்மம் அரோமேட்டிக் தன்மையை பெற்றிருக்க கீழ்கண்ட விதிகளை நிறைவு செய்ய வேண்டும்.
மூலக்கூறு சமதளத்தில் அமைய வேண்டும்.
வளையத்தில் உள்ள \(\pi \) எலக்ட்ரான்கள் முழுமையும் உள்ளடங்காத் தன்மையினைப் பெற்றிருக்க வேண்டும்
வளையத்தில் (4n + 2) \(\pi \) எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும் . இங்கு n என்பது முழுக்கள் ஆகும் (n =0,1,2..... )
இதுவே ஹக்கல் விதி எனப்படும்.
ஹக்கல் விதியை பின்பற்றி சில சேர்மங்களின் அரோமேட்டிக் தன்மை பின்வருமாறு தீர்மானிக்கப்படுகிறது .
| 1. | ![]() |
(i) பென்சீன் சமதள மூலக்கூறாகும். இது ஹக்கலின் (4n + 2) \(\pi \) விதியை பின்பற்றுகிறது. எனவே பென்சீன் அரோமேட்டிக் சேர்மமாகும். |
| 2. | ![]() |
(i) நாப்தலீன் சமதள மூலக்கூறாகும் (ii) இதில் பத்து உள்ளடங்கா \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளன . (iii) 4n + 2 = 10 4n = 10 - 2 4n = 8 n = 8/4 = 2 எனவே நாப்தலீன் அரோமேட்டிக் சேர்மமாகும் |
| 3 | ![]() |
(i) இது சமதள வளைய அமைப்பையும் 14 உள்ளடங்கா \(\pi \) எல்க்ட்ரான்களையும் கொண்டுள்ளது. ஹக்கல் விதியை பயன்படுத்தினால் n = 3 (ii) 4n + 2 = 14 \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளன அரோமேட்டிக் சேர்மமாகும் |
| 4 | ![]() |
(i) இது சமதள வளைய அமைப்பை பெற்றுள்ளது. (ii) இதில் நான்கு \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளன.ஆனால் இந்த \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளடங்கா தன்மையை பெற்றிருப்பதில்லை. எனவே இச்சேர்மம் , அரோமேட்டிக் தன்மை அற்றது. |
| 5. | ![]() |
(i) சமதள அமைப்பு இல்லை (ii) எனவே இது அரோமேட்டிக் சேர்ம்ம் இல்லை. |
60.

61.

கூடுதலாக கிரிக்னார்டு விளைபொருள் இருப்பின் மூவிணையா ஆல்கஹால் உருவாகிறது.
62.
1. மீத்தேனின் குளோரினேற்ற துவக்க வினையானது தனி உறுப்பு வினை வகையைச் சார்ந்தது.
2.இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குளோரினின் பிணைப்பை உடைத்து தனி உறுப்பை தோற்றுவிக்க அதிக ஒளி மற்றும் வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.
3. புற ஊதாக் கதிர் (<400nm-\(\lambda \)=ஒளியின் அலைநீளம்)அல்லது உயர் வெப்பநிலையில் மீத்தேனின்நான்குஹைட்ரஜன் அணுக்களையும் பதிலீடு செய்ய முடியும்.
4. இது இருளில் சாத்தியமல்ல.
63.
சமநிலையை அடைந்த பின்னர் மீளும் தன்மையுடைய வேதிவினைகள் நீகழாமல் நின்றுவிடுவதில்லை.
சமநிலையில் முன்னோக்கிய வினை மற்றும் பின்னோக்கிய வினை ஆகிய இரண்டும் சமமான வேகத்தில் நிகழ்ந்து கொண்டுருக்கின்றன.
பேரளவு மாற்றங்கள் ஏதும் உணரப்படுவதில்லை. எனவே வேதிச் சமநிலையானது இயங்குச் சமநிலை என அழைக்கப்படுகிறது.
64.
(i) திரவத்துடன் சமநிலையில் உள்ள ஆவியின் அழுத்தமானது, கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் திரவத்தின் ஆவி அழுத்தம் என்றழைக்கப்படுகிறது.
(ii) ஒரு திரவத்தின் ஆவி அழுத்தமானது அதன் தன்மை, வெப்பநிலை மற்றும் மேற்பரப்பின் பரப்பளவு ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
65.
ஒரு தனித்த வினை செயல் தொகுதியினைப் பெற்றுள்ள இரு அடுத்தடுத்த சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாடு CH2 என்ற தொகுதியால் தொடர்ச்சியான கரிமச் சேர்மங்கள் படிவரிசைச் சேர்மங்கள் எனப்படும்.
படிவரிசைச் சேர்மங்கள் ஒரு பொதுவான வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகின்றன.
(i) ஆல்கேன்கள் -C n H2n+2
(ii) ஆல்கீன்கள் -C n H2n
(iiii) ஆல்கைன்கள் - C n H2n-2
66.
1.வளிமண்டலத்தில் உள்ள CO2 மழை நீரில் கரைந்திருப்பின் காரணத்தால் சாதாரணமாக மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக உள்ளது.
2.மழை நீரின் pH மதிப்பு 5.6 க்கு கீழ் குறையும்போது, அது அமில மழை என்றழைக்கப்படுகிறது.
3.காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், மேகங்களில் உலா நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அறியப்படுகிறது.
அமில மழையின் தீய விளைவுகள்:
1.அமில மழையானது, கட்டிடங்கள் மற்றும் பளிங்கு கட்டமைப்பு பொருளின்மீது அதிகமான பாதிப்பை உருவாக்குகிறது. பளிங்குக்கற்களின் மீது நிகழும் இந்தத்தாக்குதல் "கல்குஷ்டம்" எனப் பெயரிடப்படுகிறது.
\(CaCO_{ 3 }+{ H }_{ 2 }{ { { SO }_{ 4 } } }\longrightarrow CaSO_{ 4 }+{ H }_{ 2 }O+{ CO }_{ 2 }\uparrow \)
2.அமில மழையானது,நீர்ச் சூழலில் உள்ள தாவர மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது.
3.தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அமில மழை கரைத்து நீக்குவதன் மூலம் இது விவசாயம், மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு கேடு விளைவிக்கின்றன.
4.இது தண்ணீர் குழாய்களை அரித்து, இரும்பு, லெட் மற்றும் காப்பர் போன்ற கன உலோகங்களை குடிநீரில் கரைகிறது. இவை நச்சுவிளைவுகளை உருவாக்கும் தன்மை கொண்டவை.
5.இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளில் சுவாசக் கோளாறுகளை உருவாக்குகிறது.
67.
துகள் மாசுபடுத்திகள் என்பவை, சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலைநிறுத்தப்பட்ட திரவ துளிகள் ஆகும்.
(i) புகை: இது,திண்ம துகள்கள் அல்லது கரிம பொருட்களை எரிப்பதால் உருவாகும் திண்ம மற்றும் நீர்ம துகள்களின் கலவையை கொண்டுள்ளது.
(ii) தூசி: இது திண்ம பொருட்களை இடித்தல் மற்றும் அரைக்கும் பொது உருவாகும் நுண்ணிய திண்ம துகள்களால் ஆனது.
(iii) மூடுபனி:காற்றில் தெறிக்கப்படும் திரவ துளிகள் மற்றும் காற்றில் உள்ள குளிர்ந்த ஆவிநிலை மூலக்கூறுகளால் மூடுபனி உருவாகிறது.
68.
ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் காற்று மாசுபடுத்திகள் நிரம்பிய மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கையால் சூரிய ஒளி முன்னிலையில் உண்டாகிறது.
69.
பூமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால், பூமியின் சராசரி புறப்பரப்பு வெப்பநிலை -18°C (0°F) ஆக்கத்தான் இருக்கும்.
70.
கருக்கவர் பொருள்:
1. நேர்மின் தன்மையுடைய மையத்தின் மீது அதிக நாட்டமுடைய வினைக் காரணிகள் கருக்கவர் பொருள்கள் எனப்படும்.
2. இக்கருக்கவர் பொருள்கள் பிணைப்பில் ஈடுபடா எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்களைப் பெற்றிருப்பதால் நேர்மின் தன்மையுடைய பகுதியினைப் பெற்றுள்ள அணுவின் மீது நாட்டத்தினைப் பெற்றிருப்பதுடன் அதனுடன் எலக்ட்ரானைப் பங்கீடு செய்து சகப்பிணைப்பினை உருவாக்குவதன் மூலம் நிலைப்புத்தன்மையைப் பெறுகின்றன.
3. மேலும் இவைகள் வழக்கமாக எதிர் மின் சுமையுடைய அயனிகளாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த எலக்ட்ரான் இரட்டையினைக் கொண்டுள்ள நடுநிலை மூலக்கூறுகளாகவோ இருக்கும்.
3. அனைத்து லூயி காரங்களும் கருக்கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.
| வகைகள் | உதாரணம் | எலக்ட்ரான் அடர்த்தி மிகுந்த பகுதி |
|---|---|---|
| பங்கிப்படாத எலக்ட்ரான் இரட்டையினைப் பெற்றுள்ள நடுநிலை மூலக்கூறுகள் | NH3 மற்றும் RNH2 | N: |
| H2O, ROH R-O-R | :O: | |
| H2S, RSH | :S: | |
| எதிர்மின்சுமை பெற்றுள்ள கருக்கவர் பொருள்கள் | CI-, Br-, I- | X- |
| OH-, RO-, RCOO- | O- | |
| CN- | N- |
எலக்ட்ரான் கவர் பொருள்:
1. எலக்ட்ரான் அடர்வுமிகு மையத்தினை நோக்கியோ அல்லது எதிர்மின் சுமையை நோக்கியோ கவரப்படும் வினைப் பொருள்கள் எலக்ட்ரான் கவர் பொருள்கள் எனப்படும்.
2. இவைகள் நேர்மின் சுமையுடைய அயனிகளாகவோ அல்லது எலக்ட்ரான் பற்றாக்குறை உடைய நடுநிலை மூலக்கூறுகளாகவோ இருக்கலாம்.
3. அனைத்து லூயி அமிலங்களும் எலக்ட்ரான் கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.
4. SnCI4 போன்ற மற்றவைகளிலிருந்து பெறும் எலக்ட்ரானை ஏற்கும் காலியான d-ஆர்பிட்டால்களைக் கொண்டுள்ள நடுநிலை மூலக்கூறுகளும் எலக்ட்ரான் கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.
| வகை | எடுத்துக்காட்டு | எலக்ட்ரான் பற்றாக்குறை பகுதி |
|---|---|---|
| நடுநிலை எலக்ட்ரான் கவர்பொருள் | CO2, : CCI2 | C |
| AICI3, BF3, FeCI3 | உலோகம் (M) | |
| நேர்மின் சுமையுடைய எலக்ட்ரான் கவர்பொருள் | R+ (கார்பன் நேர் அயனி) | C+ |
| ஆல்கைல் ஹாலைடுகள் (RX) | X+ | |
| புரோட்டான் (H+) | H+ | |
| H3O+, NO+ | O+ | |
| +NO2 | N+ |
71.
1. ஒரு மோல் சேர்மத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வின் உயர்த்த அச்சேர்மத்தால் உறிஞ்சப்பிடும் வெப்ப ஆற்றலின் அளவு அதன் மோலார் வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
2. மோலார் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு JK-1mol-1
72.
மாறாத கனஅளவு அல்லது மாறாத அழுத்தத்தில் ஒரு வினை ஒருபடியில் நிகழ்ந்தாலோ அல்லது பலபடிகளில் நிகழ்ந்தாலோ அதன் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் மாறாதிருப்பின், அவ்வினையின் மொத்த என்தால்பி மதிப்பு மாறாமல் இருக்கும்.

73.
| விரவுதல் | பாய்தல் |
|---|---|
| ஒரு வாயுவின் மூலக்கூறுகள் மற்றொரு வாயுவின் வழியே நகரும் பண்பு | ஒரு கலனில் உள்ள வாயுவானது ஒரு மிகச்சிறிய துளையின் விழியே வெளியேறும் நிகழ்வு |
74.
PV = nRT என்ற சமன்பாடானது ஒரு வாயுவின் கனஅளவு மற்றும் மோல்களை தொடப்படுத்தும் கணிதமுறை வாய்ப்பாடு ஆகும்
இங்கு
P = அழுத்தம்
V = கன அளவு
T = வெப்ப நிலை
n = வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை
R = வாயு மாறிலி
75.
1.கார மண் உலோகங்களின் அணு ஆரம் சிறியது மற்றும் அதன் அடர்த்தி கார உலோகங்களை விட அதிகம்.
2.கார மண் உலோகங்களின் உலோகப்பிணைப்பு கார உலோகங்களை காட்டிலும் வலிமையானது.
3.எனவேதான் , கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினத்தன்மை உடையவை.
76.
1.கார உலோகங்களின் புளூரைடுகள் பின்வரும் கரைதிறன் வரிசையைக் கொண்டுள்ளன.
LiF < NaF < Kf < RbF < CsF
2.LiF ன் கரைதிறன் மிகக்குறைவு.Li+ மற்றும் F- ன் சிறிய உருவளவு காரணமாக மிகக்குறைந்த கரைத்திறனைக் கொண்டுள்ளது.
77.
| n | l | துணை ஆற்றல் நிலை | ml மதிப்புகள் | ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை |
| 4 | 2 | 4d | -2,-1,0,+1,+2 | ஐந்து 4d ஆர்பிட்டால்கள் |
| 5 | 3 | 5f | -3,-2,-1,0,+1,+2,+3 | ஏழு 5f ஆர்பிட்டால்கள் |
| 7 | 0 | 7s | 0 | ஒரு 7s ஆர்பிட்டால் |
78.
| ஆக்சிஜனேற்றம் | ஒடுக்கம் | |
|---|---|---|
| (i) | ஆக்சிஜனேற்ற சேர்த்தல் மற்றும் ஹைட்ரஜனை நீக்குதல் | ஹைட்ரஜனை சேர்த்தால் மற்றும் ஆக்சிஜனை நீக்குதல் |
| (ii) | எலக்ட்ரானை இழத்தல் \(Fe^{2+}\to Fe^{3+}+e^-\) |
எலக்ட்ரானை ஏற்றல் \(Cu^{2+}+2e^-\to Cu\) |
| (iii) | ஆக்சிஜனேற்ற எண் அதிகரித்தல் | ஆக்சிஜனேற்ற எண் குறைத்தல் |
79.
1.008 kg ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்சிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அல்லது அயனியின் நிறையே, அதன் கிராம் சமான என வரையறுக்கப்படுகிறது.
80.
ஒரு அனுவின் சராசரி அணுநிறைக்கும், ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம்.
ஒப்பு அணு நிறை (Ar) = அனுவின் சராசரி நிறை / ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறை
81.
ஓர் அணுவில் அணுக்கருவை சுற்றியுள்ள பகுதியில் அதிகபட்ச அடர்த்தியை கொண்டுள்ள எலக்ட்ரானின் நிகழ்தகவு ஆகும்.
| ஆர்பிட்டால் | n | l |
| 3px | 3 | 1 |
| 4\(d_{x^{2}-y ^{2} }\) | 4 | 2 |
82.
1. சரிபாதி நிரப்பப்பட்ட d - ஆர்பிட்டாலானது, p -ஆர்பிட்டாலை விட அதிக நிலைப்புத்தன்மை உடையது.
2. ஏனெனில், d - ஆர்பிட்டாலின்
(i) அதிக பரிமாற்ற ஆற்றல் மற்றும்
(ii) சமச்சீர் தன்மை
83.
| குவாண்டம் எண் | குறிப்பிடுவது | |
|---|---|---|
| (i) | முதன்மை குவாண்டம் எண் | உருவளவு மற்றும் ஆற்றல் |
| (ii) | கோண உந்தக் குவாண்டம் எண் | வடிவம் |
| (iii) | காந்தக் குவாண்டம் எண் | திசையமைப்பு |
84.
1. 15-ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளுடன் ஒப்பிட NH2 ஆனது அதிக கொதிநிலை மற்றும் உருகுநிலையைப் பெற்றுள்ளது.
2. இதற்கு காரணம் மூலக்கூறுக்கிடைப்பட்ட ஹைட்ராஜன் பிணைப்பு காணப்படுவதே ஆகும்.
85.
(அ) வாயு:
1. மூலக்கூறுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படாததால் வாயுவாக உள்ளது.
(ஆ) திண்மம்:
1. NaH அனது ஒரு அயனி ஹைட்ரைடாகும்
2. இது சோடியம் உலோகத்தில் இருந்து ஒரு எலக்ட்ரானை ஹைட்ரஜனுக்கு இடப்பெயர்ச்சி செய்வதால் உருவாகிறது.
86.
1. எந்த நிலையிலும் பனிக்கட்டியானது நீரில் மூழ்குவதில்லை. ஆனால் 0°c உள்ள பனிக்கட்டியை 0°c உள்ள திரவ நீரில் வைக்கும் போது சமநிலையை அடைகிறது.
2. எனவே, உருகுதல் அல்லது உறைதல் நிகழ்வு ஏற்படுகிறது.
3. இதே நிலையில் உள்ள பனிக்கட்டியை 0°c உள்ள கன நீரில் (D2O) வைக்கும் போது மூழ்குகிறது.
87.
(i) சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள ஒரு அணுவானது, சகப்பிணைப்பில் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினைச் தன்னை நோக்கி ஒப்பீட்டு அளவில் கவரும் பண்பு எலக்ட்ரான் கவர்தன்மை எனப்படும்.
(ii) எலக்ட்ரான் கவர்தன்மை ஒரு அளவிடத்தக்க பண்பு அல்ல.
88.
(i) மேற்கண்ட வரையறை தவறானது
(ii) அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைத்தன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிற கூட்டில் இருந்து இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எனப்படும்.
இதுவே சரியான வரையறை.
89.
வெவ்வேறு தனிமங்களின் அயனிகள் ஒரே எலக்ட்ரான் எண்ணிக்கையை கொண்டிருப்பது ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் எனபப்டும்.
உதாரணம்:
| வெவ்வேறு தனிம அயனிகள் | Na+ | Mg2+ | AI3+ | F- | O2- | N3- |
| எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | 10 | 10 | 10 | 10 | 10 | 10 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards