11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
வெப்ப இயக்கவியல்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் கெல்வின்-பிளாங்க் கூற்றை கூறுக.
2.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு
3.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.
4.
ஒரு மோல் சோடியம் குளோரைடை உருக்க 30.4KJ அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.உருகுதலின் போது நிகழும் என்ட்ரோபி மாற்றம் 28.4JK-1mol-1 னில் சோடியம் குளோரைடின் உருகுநிலையை காண்க.
5.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.
6.
நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.
7.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக
8.
அகஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக.
9.
எரிதல் வெப்பம் எப்பொழுதும்
நேர்குறி மதிப்பு உடையது
எதிர்க்குறி மதிப்பு உடையது
பூஜ்ஜியம்
நேர்குறி அல்லது எதிர்குறி மதிப்பு உடையது
10.
இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளை _________ திசையில் நடக்கின்றன.
என்ட்ரோபி குறையும்
என்தால்பி அதிகரிக்கும்
கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்
கட்டிலா ஆற்றல் குறையும்
11.
ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது
வெப்பநிலை மாறா விரிவடைதல்
வெப்பநிலை மாறா சுருங்குதல்
வெப்பம் மாறா விரிவடைதல்
வெப்பம் மாறா சுருங்குதல்
12.
25°C வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன், 55.85 கிராம் இரும்பு (( மோலார் நிறை 55.85 கிராம் மோல்-1) வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை
-2.48kJ
-2.22kJ
+2.22kJ
+2.48kJ
13.
ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில்
\(\Delta\)H>\(\Delta\)U
\(\Delta\)H-\(\Delta\)U=0
\(\Delta\)H+\(\Delta\)U=0
\(\Delta\)H<\(\Delta\)U
1.
1. ஒரு சுற்றுச்செயல்முறையில் சூடான வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி அவ்வெப்பதின் ஒரு பகுதியை குளிர்ந்த நிலையிலுள்ள மூலத்திற்கு மாற்றாமல் முழுவதும் வேலையாக மாற்றக்கூடிய இயந்திரத்தினை வடிவமைக்க இயலாது.
2. இதுவே வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் கெல்வின்-பிளாங்க் கூற்று ஆகும்.
2.
1. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை பின்வருமாறு வரையறுக்கலாம்.
\(\boxed{G=H-TS}\)
2. G ஒரு பொண்மை சார் பண்பாகும். மேலும் G என்பது ஒற்றை மதிப்புடைய நிலைச்சார்பாகும்.
3.
1. ஒரு வகையான ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாறினாலும் ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி ஆகும்.
2. இது " ஆற்றல் அழிவின்மை விதி" என அறியப்படுகிறது.
4.
கொடுக்கப்பட்டவை
\(\triangle { H }_{ f }\left( NaCl \right) =30.4kJ=30400J{ mol }^{ -1 }\)
\(\triangle { S }_{ f }\left( NaCl \right) =28.4J{ k }^{ -1 }{ mol }^{ -1 }\)
\({ T }_{ f }=?\)
\(\triangle { S }_{ f }=\frac { \triangle { H }_{ f } }{ { T }_{ f } } \)
\({ T }_{ f }=\frac { \triangle { H }_{ f } }{ \triangle { S }_{ f } } \)
\({ T }_{ f }=\frac { 30400J{ mol }^{ -1 } }{ 28.4J{ K }^{ -1 }{ mol }^{ -1 } } \)
\({ T }_{ f }=1070.4K\)
5.
(i) என்ட்ரோபி கூற்று:
1. ஒரு தன்னிச்சை செயல்முறை நிகழும்போது ஒரு தனித்த அமைப்பின் என்ட்ரோபி அதிகரிக்கிறது.
2. என்ட்ரோபி என்பது ஒரு அமைப்பின் மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற தன்மையை அளவிடும் வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பு.
(ii) கெல்வின்-பிளாங்க் கூற்று
1.ஒரு சுற்றுச்செயல் முறையில் சூடான வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி அவ்வெப்பத்தின் ஒரு பகுதியை குளிர்ந்த நிலையிலுள்ள மூலத்திற்கு மாற்றாமல் முழுவதும் வேலையாக மாற்றக்கூடிய இயந்திரத்தினை வடிவமைக்க இயலாது.
(iii) கிளாசியஸ் கூற்று
எந்த ஒரு வேலையும் செய்யாமல் குளிர்ந்த வெப்ப மூலத்திலிருந்து சூடான வெப்ப மூலத்திற்கு வெப்பத்தை மாற்ற முடியாது.
6.
நிலைச்சார்பு:
நிலைச்சார்பு என்பது அமைப்பின் ஒரு வெப்ப இயக்கவியல் பண்பாகும். இது அமைப்பின் கொடுக்கப்பட்ட ஒரு நிலைக்கு ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய பின்பற்றப்பட்ட விதியினை பொறுத்து அமைகின்றன.
எடுத்துக்காட்டு:
1. அழுத்தம் (P)
2. கனஅளவு (V)
3. வெப்பநிலை (T)
4. அகஆற்றல் (U)
5. என்தால்பி(H)
6. கட்டியா ஆற்றல்(G)
வழிச்சார்பு:
வழிச்சார்பு என்பது ஒரு வெப்ப இயக்கவியல் பண்பாகும். அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றமடையும் வழியினைப் பொறுத்து இதன் மதிப்பு அமையும்.
எடுத்துக்காட்டு:
1. வேலை (W)
2. வெப்பம் (q)
7.
1. G=H-TS, H, Sஆகியவை நிலைச்சார்புகளை அடைவதால் G யும் ஒரு நிலைச்சார்பு
2. G என்பது ஒரு அளவு சார்ந்த பண்பாகும். ஆனால் தொடக்கநிலை மற்றும் இறுதிநிலையின் நிறை மாறாமலிருக்கும்போது இது ஒரு உள்ளார்ந்த பண்பாகும்.
3. G அல்லது அமைப்பின் ஒற்றை மதிப்புடைய வெப்ப இயக்கவியல் பண்பாகும்.
4. G மற்றும் \(\triangle\)Gமதிப்புகள் அமைப்பை மட்டுமே சார்ந்தவை
5. \(\triangle\)Gகுறியீடு
| செயல் | தன்னிச்சை செயல் | சமநிலை |
தன்னிச்சையற்ற |
| \(\triangle\)G | -ve | O | +ve |
6. கட்டிலா ஆற்றல் மாற்றக்குறைவு மாறாத வெப்பம் மாறாத அழுத்தத்தில் விரிவடையும் வேலையைத் தவிரத அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலையைக் குறிக்கிறது.
7. U=-788 KJ mol -1
8. \(\triangle\)G =\(\triangle\)H -T\(\triangle\)S ....(1)
9. வெப்ப இயக்கவியல் முதல் விதிப்படி
H =\(\triangle\)E-P\(\triangle\)V ........(2)
10. இங்கு
E=q - w ........(3)
11. சமன்பாடு (3)ஐ (2) ல் பிரதியிட
\(\triangle\) H =q-w-P\(\triangle\)V .......(4)
12. சமன்பாடு (4)ஐ (1)ல் பிரதியிட
\(\triangle\) G=q-w-P\(\triangle\)V-T\(\triangle\)S.......(5)
13. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதிப்படி
\(\triangle\)S=\({q \over T}\)
q=T\(\triangle\)S ......(6)
14. சமன்பாடு (6)ஐ (5)ல் பிரதியிட

=-w +P\(\triangle\)V
G=w-P\(\triangle\)V
15.அதாவது கட்டிலா ஆற்றல் மாற்றம் குறைவது அமைப்பின் விரிவடையும் வேலையைத் தவிர அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலையைக் குறிக்கிறது.
8.
அக ஆற்றலின் சிறப்பியல்புகள்:
1. ஒரு அமைப்பின் அக ஆற்றலானது ஒரு பொருண்மை சார்பண்பாகும். ஒரு அமைப்பிலுள்ள பொருளின் அளவை பொறுத்து இது அமைகிறது.
2. அமைப்பிலுள்ள பொருளின் அளவை இரு மடங்காக்கும் போது, அக ஆற்றலும் இரு மடங்காகிறது.
3. ஒரு அமைப்பின் அக ஆற்றல் ஒரு நிலைச்சார்பு. இது அமைப்பின் நிலை மாறிகளை (T,P,V,K மற்றும் n )மட்டுமே சார்ந்து அமைகிறது.
4. அக ஆற்றல் மாற்றமானது, இறுதிநிலையையை அடைய எந்த வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதை பொறுத்து அமையாது.
5.அமைப்பின் அக ஆற்றல் மாற்றமானது \(\triangle U=U_f-U_i\) எனகுறிப்பிடப்படுகிறது.
6.சுற்று செயல்முறைகளில், அக ஆற்றலில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.
\(\triangle U=0\)
7. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது அதன் ஆரம்பநிலைஅக ஆற்றலைவிட குறைவாக இருக்கும் நிலையில்\(\triangle U\) ஆனது எதிர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=ve(U_f
8. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது (Uf),அதன் ஆரம்பநிலை (Ui)அக ஆற்றலை விட அதிகமாக இருக்கும் நிலையில் ஆனது நேர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=+ve(U_f
9.
(b)
எதிர்க்குறி மதிப்பு உடையது
10.
(d)
கட்டிலா ஆற்றல் குறையும்
11.
(c)
வெப்பம் மாறா விரிவடைதல்
12.
(a)
-2.48kJ
13.
(d)
\(\Delta\)H<\(\Delta\)U
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards