11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
வணிகவியல் முதல் இடைத்தேர்வு
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்
கட்டுமானத் தொழில்கள்
தயாரிப்புத் தொழில்கள்
உற்பத்தித் தொழில்கள்
சேவைத் தொழில்கள்
2.
கூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை.
2
10
20
15
3.
எந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்
கூட்டூ நிறுவனம்
அரசு நிறுவனம்
கூட்டூறவுச் சங்கம்
தனியாள் வணிகம்
4.
மருத்துவர் தொழில் என்பது
வேலைவாயுப்பு
தொழில்
சிறப்புத் தொழில்
தனியார் வணிகம்
5.
_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்
பால்பன்
வாஸ்கோடகாமா
அக்பர்
அலாவுதீன் கில்ஜி
6.
ஜானகர் என்பவர் யார்?
7.
துறைவாரி அமைப்புகளுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிடுக.
8.
கூட்டாண்மைக் கலைப்பு எத்தனை வகைப்படும்?
9.
கூட்டூருசாரா பேரளவு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக
10.
வேலை என்றால் என்ன?
11.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
12.
கூட்டுறவு உழவுச் சங்கம் பற்றிச் சிறு குறிப்பு வரைக
13.
தனி நிறுமம் என்றால் என்ன?
14.
தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக
15.
சிறு குறிப்பு வரைக.(அ) தொழில் (ஆ) சிறப்புத் தொழில்
16.
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
17.
18.
தனியாள் வணிகத்தின் குறைபாடுகளை விவரி
19.
1.
(a)
கட்டுமானத் தொழில்கள்
2.
(c)
20
3.
(d)
தனியாள் வணிகம்
4.
(c)
சிறப்புத் தொழில்
5.
(a)
பால்பன்
6.
தமிழர்களுடன் வர்த்தகம் செய்த அரேபியர்கள் ஜானகர் என்று அழைக்கப்பட்டனர்.
7.
(i) இறுதியான பொறுப்பு
(ii) அரசின் நிதியுதவி
(iii) கணக்கியலும் தணிக்கையும்
(iv) மேலாண்மை
(v) சட்டவிலக்களிப்பு.
8.
(i) உடன்பாட்டால் கலைப்பு
(ii) கட்டாய கலைப்பு
(iii) சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு
(iv) அறிக்கையால் கலைப்பு
(v) நீதி மன்றத்தால் கலைப்பு என வகைப்படும்.
9.
கூட்டாண்மை, இந்துக் கூட்டுக் குடும்பம்.
10.
வேலை என்பது கூலி அல்லது ஊதியத்திற்காக மற்றவர்களுக்கு பணி ஆற்றுவது ஆகும். மற்றவர்களை பணியமர்த்துபவர் பணியமர்த்துநர் என்றும் அவரால் பணியமர்த்தப்பட்டவர்கள் பணியாளர்கள் மற்றும் வேலையாட்கள் என்று அழைக்கப்படுகிறது.
11.
பல பொருள்கள் விற்குமிடம் அங்காடி என அழைக்கப்பட்டுள்ளது.
பகலில் நடப்பதை நாளங்காடி எனவும்
இரவில் நடப்பதை அல்லங்காடி எனவும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் மதுரை ஒரு இரு பெரு நியாமத் எனப்படும் தூங்காநகரம் எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது இடைவெளியின்றி 24 மணி நேரமும் வியாபாரம் நடந்ததாகக் கூறுகிறார்.
12.
உள்ளுரில் இருக்கும் வேளாண்குடிகள் தங்களின் நிலங்களை தனித்தனியே பயித்திடுவதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களின் நிலங்களை ஒன்றாக திரட்டி பேரளவில் விவசாயம் செய்ய உதவும் சங்கமே கூட்டுறவு உழவுச் சங்கம் எனப் பெயர். அனைத்து விவசாயிகள் நிலத்தை ஒன்று திரட்டி சங்கமாக செயல்பட்டாலும் அவர்களின் நிலா உரிமை பாதிக்கப்படாது. அவர்கள் அனைவரும் சங்கம் அமைத்து அவர்களே நிர்வாககக் குழுவை தேர்ந்தெடுத்து உழவுச் சங்கத்தை நிர்வாகிக்க வேண்டும். கூட்டாக பயிரிட வேண்டும். நிலத்தை பங்காக கொடுத்த விவசாயிக்கு வாடகையும் நிலத்தில் உழைத்ததிற்கு கூலியும் பெறுவார்கள். இம்முறை இரஷ்யாவில் மிகவும் வெற்றி கண்டது.
13.
(i) தனி நிறுமம் என்பது நிறுமங்களில் ஒரு வகை இந்நிறுமம் குறைந்தபட்சம் 2 பங்குதாரர்கள் மற்றும் 2 இயக்குநர்களைக் கொண்டு செயல்படலாம். குறைந்தபட்சத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட மூல தனம் ரூ. 1,00,000 என்பது நிருமச்சட்டம் (திருத்தம்) 2015-ல் விதிக்கப்பட்டுள்ளது.
(ii) இச்சட்டம் 29-5-2015 அன்று அமல்படுத்தப்பட்டது தனி நிறுமங்களில் பங்குகள் மாற்றம் செய்வதைச் சங்க நடைமுறை விதிகள் தடைசெய்கிறது.
(iii) பத்திரங்களுக்காக அழைப்பு விடுப்பதையும் தடைசெய்கிறது. தற்பொழுது நிறுமத்தின் பங்குதாரர்களாக அதிகபட்சமாக 200 நபர்கள் வரை அனுமதிக்க நிறுமச் சட்டம் அனுமதி அளிக்கிறது. ஒரு தனி நிறுமத்தை மூன்று முறைகளில் அமைக்கலாம். தனி நிறுமம், சிறிய தனி வரையறுக்கப்பட்ட நிறுமம், ஒரு நபர் தனி நிறுமம்.
14.
தனியாள் வணிகம் என்பது வியாபார அலகின் ஒரு வகையாகும். அதில் ஒரு நபர் தனது சொந்த பொறுப்பில் மூலதனத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் இடர்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு வியாபாரத்தை மேலாண்மை செய்வதாகும்.
15.
(அ) தொழில் :
தொழில் என்பது இலாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
(ஆ) சிறப்புத் தொழில் :
சிறப்புத் தொழில் என்பது அந்தந்த அதற்கென நிர்ணயம் செய்யப்பட உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் ஆகும்.
16.
பண்டங்கள் மற்றும் பணிகள் பரிமாற்றத்தினூடே ஏற்படும் தடைகளும் இடையூறுகளும் அவற்றை நீக்கும் வழி வகைகளும் பின் வருமாறு :-
1. ஆள்சார் தடை
பொருள்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. இக்குறைபாடே ஆள்சார் தடை எனப்படும். உற்பத்தியின் அளவு அதிகரிக்க நுகர்வோரை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. வணிகத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.
2. இடத் தடை
பொருட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில், விமானம், கடல் மற்றும் நில போக்குவரத்து போன்றவை நுகர்வோர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லமுக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
3. காலத் தடை
நுகர்வுத் தேவைப்படும் பொழுதும் வாங்கவிரும்பும் பொழுதும் பொருட்கள் கிடைக்க வேண்டும். தேவையைக் கணக்கில் கொண்டு பேரளவு உற்பத்தி செய்யப்படுவதும் நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்ஆண்டு முழுவதும் தேவைஏற்படும். எனவே பொருட்களைப் பண்டகக் காப்பகங்களில் சேகரித்துக் வைத்துக் கொள்வதன் மூலம் நுகா; பொருள் தொடர்ந்து கிடைக்கவழி ஏற்படும்.
4. இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத் தடை: பொருட்கள்முறையானசிப்பம் கட்டுதல் மற்றும் நவீனகுளிர்சாதனவசதி கொண்டபண்டகசாலைகள்ஆகியவற்றால் பொருட்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருட்கள்பூச்சிகள், எலிகள், ஆவியாதல் போன்றவைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.
5. இடர்பாட்டுத் தடை
போக்குவரத்துக் கட்டுமம் உள்ளிட்டவைகள் மூலம் சரக்குகள் கொண்டு சென்றாலும், ஆட்களாலும், இயற்கையாலும் ஏற்படக்கூடிய நட்டங்களைத் தவிர்க்கமுடிவதில்லை, இந்நட்டத்தைஈடுகட்டக் காப்பீடு செய்யப்படுகிறது. தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு ஆகியவற்றின் வழியாக நட்டத்தைப் சரிக்கட்டமுடியும்.
6. அறிவுசார் தடை
சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய் விடக்கூடும். இத்தடைக்கு அறிவுசார் தடை என்கிறோம். நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் மூலம் அத்தடையை நீக்கலாம்.
7. பண்டப் பரிமாற்றத் தடை
பணம் பண்டப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. பொருட்களுக்கு உண்டான சரியான விலையை செலுத்துவதன் மூலம் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
8. நிதித் தடை
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைப்பதில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிதியை வணிக ரீதியாக செயல்படுத்துவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் நிதி உதவுகிறது.
9.பொருட்களைத் துல்லியமாக தயாரிப்பதில் தடை: ஆராய்ச்சிகளின் மூலம் நுகர்வோரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்க முடிகிறது.
10.பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடி வீட்டிற்கு கொண்டு செல்லுதல் மின்னணு வணிகம் மூலம் பொருட்களை வீட்டிலிருந்தே வாங்கல் ஆணை பிறப்பிக்கலாம். பொருட்களை பெற்றுக்கொண்ட பின் அதற்குண்டான தொகையினை செலுத்தலாம்.
17.
18.
(i) அளவான முதல் : தனியாள் வணிகரின் மூலதனம் வரையறுக்கப்பட்டது. ஆகவே அவரின் வியாபார நடவடிக்கைகளின் ஓர் எல்லையைத் தாண்டி செல்ல வாய்ப்புக் குறைவு. அவரின் கடன் பெரும் திறனும் குறைவாகவே இருப்பதாலும் மற்றும் அதிகமாக மூலதனம் தேவைப்படும் தொழிலைத் துவக்க முடியாமையும் குறைபாடுகளாக இருக்கின்றன.
(ii) வரையறுக்கப்பட்ட மேலாண்மை திறன்: வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் தனி ஒரு மனிதரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவரின் அறிவும் திறமையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வியாபார நடவடிக்கையில் செலுத்த வேண்டி இருப்பதால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுவதுடன் தவறான முடிவெடுக்க ஏதுவாகிறது. வரையறுக்கப்பட்ட மேலாண்மைத் திறமையே அவரின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதை தடை செய்கிறது.
(iii) வரையறாப் பொறுப்பு : வியாபாரத்தின் உரிமையாளரின் பொறுப்பு என்பது வரையறுக்கப்படாதது. கடனீந்தோர்கள் தமது கடன்களைத் தனியாள் வணிகரின் சொந்தத் சொத்துக்களிலிருந்து சரிக்கட்டிக் கொள்ள வாய்ப்பு இருப்பதால், தனிநபரின் பொறுப்பு வரையறாப் பொறுப்பாக உள்ளது .
(iv) சிறப்பு தேர்ச்சியின்மை: தனியாள் வணிக அமைப்பு சிறிய அளவில் இருப்பதால் அதன் நிதி ஆதாரம் வரையறுக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களையும் பணியமர்த்த போதிய பொருளாதார வளம் இல்லாத காரணத்தினால் அதிக நன்மைகளை பெய இயலாது. அவர் ஒருவரே உற்பத்தி, சந்தையிடுதல், கணக்குப்பதிவியல், கடிதத் தொடர்பு போன்ற பணிகளை ஒருவரே கையாள முடியாது.
(v) அவசர முடிவு: அவசர முடிவுகள் நிறுவனத்திற்கு நன்மை பயப்பதாக இருந்தாலும் சில நேரங்களில் வியாபாரத்தை அழிவுப் பாதைக்குச் செல்ல வழி வகுத்துவிடும். அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழிக்கு இணங்க இச்செயலும் இருக்கும்.
19.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards