11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
அரசு அமைப்புகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
2.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
3.
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
பொதுத் துறை நிறுவனம்
துறைவாரி அமைப்பு
பன்னாட்டு நிறுவனம்
சட்டமுறை நிறுவனம்
4.
விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.
சட்டமுறை நிறுவனங்கள்
துறைவாரி நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்
5.
அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.
75%
60%
95%
51%
6.
2001 ஆம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் படி பொதுத்துறைக்கு சில தொழில்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.அந்த தொழில்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
7.
தேசிய பாதுகாப்பு திட்டத்திற்கு பொருத்தமான பொதுத்துறை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுக.
8.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுக.
அ)தனியார்துறை நிறுவனங்கள்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்
இ)பொதுத்துறை நிறுவனங்கள்
9.
துறைவாரி அமைப்புகளுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிடுக.
10.
பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
11.
அரசு நிறுமம் என்றால் என்ன?
12.
துறைவாரி நிறுவனம் என்றால் என்ன?
13.
பொதுத்துறையின் கீழ்வரும் சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.அவற்றை வகைப்படுத்தவும்.
14.
பொதுத்துறையின் கீழ்வரும் பல்வேறு வகையான அமைப்புகள் என்னென்ன?
15.
மத்திய அல்லது மாநில அரசுகள் எந்தெந்த பகுதிகளில் தொழில் தொடங்கலாம்.அவ்வாறு தொடங்கினால் நீங்கள் எந்தப் பகுதியை முன்மொழிவீர்கள்.
16.
துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் யாவை?
17.
18.
பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பியல்புகள் யாவை?(ஏதேனும் ஐந்து மட்டும்)
19.
துறைவாரி நிறுவனங்களின் நன்மைகள் விவரி.
1.
(c)
2.
(b)
குடியரசுத் தலைவர்
3.
(b)
துறைவாரி அமைப்பு
4.
(b)
துறைவாரி நிறுவனங்கள்
5.
(d)
51%
6.
(i) இந்திய நிலக்கரி லிமிடெட்
(ii) இந்திய எஃகு ஆணையம்
(iii) தமிழ்நாடு போக்குவரத்து கழகம்
(iv) இந்திய எரிவாயு ஆணையம் லிமிடெட் (GAIL)
7.
(i) பாதுகாப்பு தொழிற்சாலை
(ii) அணுசக்தி தொழிற்சாலை
(iii) போர்க் கருவிகள் உற்பத்தி தொழிற்சாலை
(iv) எரிவாயு.
8.
அ)தனியார்துறை நிறுவனம்:
(i) CMS கம்பியூட்டர் பிரைவேட் லிமிடெட்
(ii) சத்யம் கம்பியூட்டர் பிரைவேட் லிமிடெட்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்:
(i) IBM இன்டர்நேஷனல் பிசினஸ் மெசின்
(ii) கோகோ கோலா கழகம்.
இ)பொதுத்துறை நிறுவனங்கள்:
(i) இந்திய உணவுக்கழகம் (FCI)
(ii) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
9.
(i) இறுதியான பொறுப்பு
(ii) அரசின் நிதியுதவி
(iii) கணக்கியலும் தணிக்கையும்
(iv) மேலாண்மை
(v) சட்டவிலக்களிப்பு.
10.
(i) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
(ii) இந்தியன் ஏர்லைன்ஸ்
(iii) ஏர் இந்தியா
(iv) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
11.
2013 - ஆம் ஆண்டு நிறுமச் சட்டப் பிரிவு 2(45)ன் கீழ் அரசு நிறுமம் என்பது மைய அரசு, மாநில அரசுகள் தனித்தனியாகவோ, கூட்டாகவோ ஒரு நிறுமத்தின் பங்கு முதலில் குறைந்தபட்சம் 51 விழுக்காட்டுக்கு மேல் மைய அரசோ, ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளோ அல்லது மைய அரசும் ஒன்று அல்லது மேற்பட்ட மாநில அரசுகளுமோ வைத்திருப்பின் அந்நிறுவனம் அரசு நிறுமம் ஆகும். ஒரு அரசு நிறுமத்தின் துணை நிறுமமும் அரசு நிறுமமாகவே கருதப்படும்
12.
அரசுத் தொழில்களின் வடிவமைப்புகளில் இது மிகவும் தொன்மையானதாகும். பொது நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இன்றைய சூழ்நிலையில் அதன் பணிகளில் வேறுபாடு இருப்பதில்லை. தொடக்க காலத்தில் நிறுவப்பட்ட பெரும்பாலான அரசுரிமை நிறுவனங்கள் அனைத்தும் துறைவாரி அமைப்புக்கு சான்றுகளாகும். இத்துறைவாரி அமைப்புகள் அத்துறையின் உட்பிரிவாகவும் அத்துறையின் முழு கட்டுப்பாட்டிலும் இயங்கக் கூடியதாகும்.
13.
(i) அனைத்திந்திய வானொலி - துறைவாரி அமைப்பு
(ii) இந்திய ரிசர்வ் வங்கி - சட்டமுறை நிறுமம்
(iii) அரசுப் போக்குவரத்துக் கழகம் - அரசு நிறுமம்.
14.
பொதுக் கழகம் என்பது அதற்கெனப் பாராளுமன்றமோ சட்டமன்றமோ இயற்றும் தனிச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு தன்னாட்சி உரிமை பெற்ற நிறுவனமாகும். அதன் அமைப்புகள் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், இந்தியன் ஏர்லைன்ஸ் , ஏர் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC).
15.
மத்திய, மாநில அரசுகள் நாட்டின் எப்பகுதிகளில் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். அவ்வாறு தொடங்கினால், நான் எங்கள் பகுதியில் தொடங்குமாறு முன்மொழிவேன்.
16.
சிறப்பியல்புகள்:
(i) இறுதியான பொறுப்புகள்: துறைவாரி நிறுவனங்களின் பொறுப்பு என்பது அத்துறையின் அமைச்சகத்துடன் தொடர்புடையது. பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில அரசின் சட்டசபை பொறுப்புடையது ஆகும். துறைவாரி நிறுவனங்களுக்கு அத்துறையின் அமைச்சரிடமிருந்து அதிகாரம் கீழ்நோக்கியவாறு செல்கிறது.
(ii) அரசின் நிதியுதவி: பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் படி நிதியுதவி கிடைக்கிறது. அரசின் கருவூலத்திலிருந்து நிறுவனத்திற்கு செல்கிறது.
(iii) கணக்கியலும் தணிக்கையும்: துறைவாரி நிறுவனங்கள் சாதாரண வரவு செலவுத் திட்டமிடுதல் கணக்கியல் மற்றும் தணிக்கை நடைமுறைகள் அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
(iv) மேலாண்மை: துறைவாரி நிறுவனங்களை அரசு அலுவலர்களே மேலாண்மைச் செய்கின்றன. அரசு அலுவலர்களுக்கு மணிச்சூழல் எவ்வாறு உள்ளதோ அதை ஒத்த பணிச்சூழல் இங்கும் நிலவுகிறது.
(v) சட்ட விலக்களிப்பு: அரசின் ஒப்புதலின்றி இந்நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலாது.
17.
18.
(i) தனித்து இயங்கும் சட்டத் தன்மை: பொதுக்கழகம் என்பது மத்திய அல்லது மாநில அரசால் இயற்றப்படும் தனிச்சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படுகிறது. அச்சட்டத்தின் மூலம் அதற்கான அதிகாரங்கள், நோக்கங்கள், பணிகள் மற்றும் பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் மூலம் உருவாக்கப்பட்ட அமைச்சகத்துடன் தொடர்புள்ளது.
(ii) நீடித்த நிலைத்தன்மை: பொது முத்திரையுடன் நீடித்த நிலைத்த தன்மையுடன் சட்டபூர்வமாக செயல்படும். அரசுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல் தனித்து இயங்கக்கூடியது. இதன் சொத்துக்கள் அனைத்தும் தனக்குச் சொந்தமானதும் தன் பெயரிலேயே உடன்படிக்கை செய்யும் வழக்குப் பதியவும் இயலும்.
(iii) அரசின் முதலீடு: பொதுக்கழகம் அதற்குத் தேவையான முதல் முழுவதையும் அரசிடமிருந்து பெறுகிறது.எனினும் பொதுக்கழகம் முதலீட்டுச் சந்தையிலிருந்தும் மூலதனத்தை திரட்டுகின்றன.
(iv) நிதி தன்னாட்சியுரிமை: பொதுக்கழகங்கள் நிதி தன்னாட்சி பெற்றவை தனக்கான வரவு செலவு திட்டத்தை தானே தயாரித்துக் கொள்ளவும், அதற்க்கான அதிகாரம் பெற்றுக் கொள்ளவும் மற்றும் வியாபாரத்தில் அந்த நிதியைப் பயன்படுத்தவும் அதிகாரம் பெற்றவையாகும்.
(v) இயக்குநரவையால் நிர்வாகம்: அரசால் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்ட இயக்குநரவைக்கு மேலாண்மை செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால் கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இல்லை.
19.
நன்மைகள்:
(i) எளிமையான அமைப்பு: துறைவாரி நிறுவனங்களை அமைப்பது எளிது. இவ்வமைப்புகளை நிர்வாக முடிவெடுத்து அரசு அமைப்பது எளிய முறையாகும்.
(ii) பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாடு: துறைவாரி நிறுவனங்களின் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் மூலமாக மட்டுமே நேரடியாக கட்டுப்படுத்தப்படும். அதற்கு அத்துறை அமைச்சரே பொறுப்பாவார்.
(iii) இரகசியம் காத்தல்: பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறைகள் போன்றவை அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அத்துறைகளில் பணியாளர்கள் தங்களது பணிகள் கொள்கைகள் மற்றும் செயல்பாட்டினைப் பற்றிய இரகசியங்களை பாதுகாத்து வைக்க இயலும்.
(iv) பொதுமக்களுக்கு வரிச்சுமை குறைவு: இத்தொழில் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை அரசு கருவூலங்கள் மூலம் செலுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு குறைந்த வரியே விதிக்கப்படும்.
(v) சமூக மாற்றத்திற்கான கருவி: அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை அரசுத் துறை நிறுவனங்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
(vi) பொதுமக்களின் நிதியை தவறாகப் பயன்படுத்துவதினால் ஏற்படும் இடர்ப்பாடு குறைவு.
(vii) அமைச்சகத்தின் விதிகள் மற்றும் செயல்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படும்.
குறைகள்:
(i) தாமதமும், சிகப்பு நாடா போக்கும்: அரசின் நெகிழ்வற்ற நடைமுறைகளையும் மரபுகளையும் வழுவாது பின்பற்றுவதும் காலதாமதமும் மிகப்பிபெரிய குறைபாடாகும். வணிக நிறுவனங்கள் காலதாமாக முடிவெடிப்பது ஏற்கத்தக்கது அல்ல.
(ii) கூடுதல் வரிச்சுமை: துறைவாரி நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட அரசின் கருவூலத்திலிருந்து தொகையை வழங்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மீது மேலும் வரியை சுமத்தி வரிச்சுமை கூட்டுகிறது.
(iii) போட்டியின்மை: வணிக அனுபவமோ அல்லது வியாபார வெளிப்பார்வையோ இல்லாத அரசு அலுவலர்கள் துறைவாரி நிறுவனங்களை நிர்வாகம் செய்வதினால் அவர்களால் துறைவாரி நிறுமங்களை செய்வதினால் அவ்ர்களால் துறைவாரி நிறுமங்களை முறையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.
(iv) பணியில் சராசரி அணுகுமுறை: அரசு அலுவலர்கள் தங்களது பணியில் சராசரி அணுகுமுறை போன்றே இந்நிறுவன பணியிலும் ஈடுபடுகிறார்கள்.
(v) அரசின் தலையீடு: துறைவாரி நிறுவனங்களின் மீது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு விதிகள் ஆகியவற்றை அரசு சுமத்துகிறது. இத்துறைவாரி நிறுவனங்கள் தன்னாட்சியுடன் செயல்பட விடுவதில்லை.
(vi) மேலாண்மைத் திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அச்சம். துறைவாரி அமைப்பின் மேலாளர்கள் அரசு அலுவலராக இருப்பதால் அவர்களின் மெத்தனப்போக்கு அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பதில்லை.
(vii) நிதி சார்பு: துறைவாரி நிறுவனங்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் அரசின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டை சார்ந்தும் இருக்க வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards