11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Model Test
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?
மொத்த வியாபாரி
உற்பத்தியாளர்
சில்லறை வியாபாரி
வாடிக்கையாளர்
2.
அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
அலுவல் சார்ந்த மூலதனம்
தனியார் மூலதனம்
வங்கி மூலதனம்
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
4.
இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.
இடாப்பு
சரக்காணை
விசாரணை
கப்பல் வாடகை முறி
5.
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
6.
வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்
இறக்குமதி
ஏற்றுமதி
மறு ஏற்றுமதி
மீண்டும் ஏற்றுமதி
7.
உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்
1-1-1996
1-1-1997
1-1-1995
1-1-1994
8.
கணக்கீட்டு ஆண்டு என்பது
ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை
ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை
சூலை 1 முதல் சூன் 30 வரை
சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை
9.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
10.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
11.
கூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............
சங்க நடைமுறை விதிகள்
கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள்
கூட்டாண்மைச் சட்டம்
கூட்டாண்மை
12.
உட்புற நிதி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ______
கடனாளிகளிடமிருந்து பெறப்படும் தொகை
வணிக வங்கி கடன்
பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகை
தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி
13.
புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______
உற்பத்திதிறன்
செலவு குறைப்பு
திறன்
அலகுகள்
14.
தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.
பொது நடத்தை
அமைப்பு நடத்தை
நேர்மையான நன்னெறி நடத்தை
தனிநபர் நடத்தை
15.
இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?
வாக்குறுதி பெறுபவர்
கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்
ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி
ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
16.
காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.
மிக்க நம்பிக்கை
கூட்டுறவு
பகர உரிமை
அண்மைக் காரணம்
17.
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
தொடர்வண்டி
சாலை
கடல்
விமானம்
18.
இளவருடன் செய்யும் ஒப்பந்தம்
செல்தகு ஒப்பந்தம்
செல்லாத ஒப்பந்தம்
தவிர்தகு ஒப்பந்தம்
மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்
19.
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____
பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்
பொதுக் பண்டகக் காப்பகங்கள்
இந்திய உணவுக் கழகம்
தானியங்கி பண்டகக் காப்பகங்கள்
20.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.
23.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
24.
வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.
25.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
26.
அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக
27.
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
28.
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
29.
வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?
30.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?
31.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
32.
இந்திய ஒப்பந்தச் சட்டம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை யாவை
33.
ஒப்பந்த விடுவிப்பு என்றால் என்ன?
34.
கப்பல் வாடகை முறி(Charter Party).
35.
தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.
36.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.
37.
இறக்குமதி என்றால் என்ன?
38.
வங்கியின் பொருளை எழுதுக.
39.
மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?
40.
தடையற்ற நிறுவனம் என்றால் என்ன?
41.
போக்குவரத்து -வரையறு.
42.
உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மீதான எதிர்மறை கருத்துக்கள் (Criticism against WTO) விளக்கி எழுதுக
43.
சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி
44.
உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?
45.
சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடூம் பணிகள் யாவை?
46.
வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக.
47.
ஏற்றுமதி ஆணை நிலையத்தின் பணிகளை விளக்கி எழுதுக.
48.
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
49.
ஊதிய வருமானத்தில் இடம்பெறக் கூடிய பத்து வருமானங்களை வரிசைப்படுத்துக்க.
50.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
51.
52.
உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.
53.
தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி
54.
நிறைவேற்றுதல் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?
1.
(a)
மொத்த வியாபாரி
2.
(d)
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
(c)
1980
4.
(a)
இடாப்பு
5.
(c)
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
6.
(a)
இறக்குமதி
7.
(c)
1-1-1995
8.
(a)
ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை
9.
(b)
குடியரசுத் தலைவர்
10.
(c)
25
11.
(b)
கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள்
12.
(d)
தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி
13.
(b)
செலவு குறைப்பு
14.
(c)
நேர்மையான நன்னெறி நடத்தை
15.
(d)
ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
16.
(b)
கூட்டுறவு
17.
(d)
விமானம்
18.
(b)
செல்லாத ஒப்பந்தம்
19.
(c)
இந்திய உணவுக் கழகம்
20.
(a)
போக்குவரத்து
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பல வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அவையாவன
(i) வணிக வங்கிகள்: பொதுத்துறை வங்கிகள் (எ.கா) பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, தனியார் துறை வங்கி (எ.கா) ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் பாங்க், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
(ii) வட்டார ஊரக வங்கிகள்:(எ.கா) பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, வள்ளலார் கிராம வங்கி.
(iii) கூட்டுறவு வங்கிகள்:(எ.கா) தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி (TNSC Bank) மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்.
(iv) குறும நிதி நிறுவனங்கள்: (எ.கா) முத்ரா வங்கி
23.
பல பொருள்கள் விற்குமிடம் அங்காடி என அழைக்கப்பட்டுள்ளது.
பகலில் நடப்பதை நாளங்காடி எனவும்
இரவில் நடப்பதை அல்லங்காடி எனவும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் மதுரை ஒரு இரு பெரு நியாமத் எனப்படும் தூங்காநகரம் எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது இடைவெளியின்றி 24 மணி நேரமும் வியாபாரம் நடந்ததாகக் கூறுகிறார்.
24.
முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.வைப்புகளை ஏற்றல்,கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல், கடனை உருவாக்குதல்.
வைப்புக்களை ஏற்றல்:
இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.பெரிய அளவிலான வைப்பு கணக்குகளை கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகளாக வகைப்படுத்தலாம்.
(i) கேட்பு வைப்புகள்: இந்த வைப்புகள் எந்த நாளிலும் கேட்கும்போது திருப்பி அளிக்கப்பட வேண்டும்.இது சேமிப்பு வைப்புக்கள் மற்றும் நடப்பு வைப்புகளை உள்ளடக்கியது.
(ii) சேமிப்பு வைப்புகள்: பொதுமக்கள் இந்தக் கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு தனிநபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் இந்தக் கணக்கினைத் தொடங்கலாம்.
(iii) நடப்பு வைப்புகள்: நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.|
(iv) கால வைப்புகள்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்புச் செலுத்துகின்ற வகையில் உள்ள நிலையான வைப்புகள்,தொடர் வைப்புகள் அடங்கும்.
(v) நிலையான வைப்புகள்: ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதைக் குறிக்கும்.நிலையான வைப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
(vi) தொடர் வைப்புகள்: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது இந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்வதைக் குறிக்கும்.
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் முன் பணம்:
வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டுகளை தள்ளுபடி செய்தல்.
கடன்கள்: குறுகிய கால மற்றும் நடுத்தரக் காலக் கடன்களை வணிக வங்கிகள் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.வீட்டுக் கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன், கல்விக் கடன்,நகைக் கடன்,இரண்டாம் நிலை பணிகள், முகமைப் பணிகள்,பொதுப்பயன்பாட்டுப் பணிகள்.
25.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
26.
(i) அமெரிக்க வைப்பு இரசீதுகள் அமெரிக்க டாலரில் மட்டும் குறிப்பிடப்படும்.
(ii) அமெரிக்க குடிமக்களாக இருக்கிற முதலீட்டாளருக்கு மட்டுமே வெளியிடப்படும்.
(iii) வெளியிடும் வைப்பக வங்கி அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
27.
ஒரு நிறுமம் இந்தியாவிற்கு அப்பால் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் தொழிலிடம் உள்ள நிறுமம் அயல்நாட்டு நிறுமம் எனப்படும். இந்தியாவில் நிருமத்தை அமைப்பதற்குப் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவைகள்
(i) சாசனத்தின் சான்றிதழ் நகல் அல்லது கூட்டுருவாத்தின் சான்றிதழ் (அ) அமைப்பு முறையேடு மற்றும் சங்க நடைமுறை வழிகள் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
(ii) நிறுமம் பதிவு அலுவலகம் உள்ள இடம்
(iii) இயக்குநர் மற்றும் செயலரின் பட்டியல்.
(iv) இந்தியாவின் தலைமை வியாபார அலுவலகத்தின் முகவரி.
(v) நிறுமச் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கிய இந்திய குடிமகனின் பெயர் மற்றும் முகவரி.
28.
(i) பொருட்களின் தயாரிப்பு , வடிவமைப்பு,
(ii) தளவாட அமைவிடம், சந்தை மூலங்களை தெரிவுசெய்தல்,உற்பத்தி கட்டமைப்பு,
(iii) விநியோகஸ்தர் அல்லது வணிகர் வலையமைப்பு,வடிவமைப்பு,பண்டகசாலை அமைவிடம்,தளவாட வரைபடம் மற்றும் பெயர்ச்சி பங்கீட்டு வடிவமைப்பு,உற்பத்தி திட்டம்,
(iv) சரக்கிருப்பு மேலாண்மை,சரக்கிருப்பின் நிலைகள் போக்குவரத்து வகையைச் தேர்வு செய்தல் சரக்கை கப்பலில் ஈற்றுதலின் அளவு,
(v) வழித்தடத்தை முடிவு செய்தல் மேலும் போக்குவரத்து ஒப்பந்தவியல் தொகுப்பு மூலப் பொருளை கையாளுதல் ஆகும்.
29.
தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாது. அதன் விளைவாக அவரது வியாபாரக் கடன்களை செலுத்த தொழிலின் சொத்துக்கள் போதுமானதாக இல்லையென்றால் தன சொந்த சொத்துக்களிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்த வேண்டும். எனவே அவரின் பொறுப்பு முதலீட்டுத் தொகையுடன் நின்று விடாமல், தன் சொந்த சொத்திற்கு ஈடாகிறது. இதனையே வரையறாப் பொறுப்பு என்கிறோம்.
30.
(i) இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் Insurance Regulatory Development Authority of India): இந்தியாவிலுள்ள காப்பீட்டு நிலையங்கள் யாவும் மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த ஓர் உயரிய தலைமை அமைப்பாக தனித்துச் செயல்படும் சட்டப்படியான ஆணையம் இந்தியக் காப்பீட்டு வளர்ச்சி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகும்.
(ii) இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட(IRDAI Act 1999) சட்டத்தின் படி 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.இதன் தலைமை அலுவலகம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது.
(iii) IRDAI அமைப்பு முறை : இந்தியக் காப்பீடு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் அமைப்பு முறையில் பத்து பேர் கொண்ட குழுவில்,
1.நடுவண் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர் (ஐந்து ஆண்டுகளுக்கு,உயர்ந்தபட்ச வயது 60).
2.ஐந்து முழு நேர உறுப்பினர்கள் (உயர்ந்த பட்ச வயது 62).
3.நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் (5 ஆண்டுகளுக்கு மிகாமல் என்ற அடிப்படையில்) உருவாக்கப்பட்டது.
31.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
32.
இந்திய ஒப்பந்தச் சட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பொது ஒப்பந்தங்கள், சிறப்பு ஒப்பந்தங்கள்.
33.
ஒப்பந்த விடுவிப்பு என்பது ஒப்பந்த நபர்களின் உறவு முடிவுக்கு கொண்டுவருவதை குறிக்கும். ஒப்பந்தம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட உரிமைகள், கடமைகள் செய்தல் முடிவும் போது, ஒப்பந்தம் விடுவிக்கப்படுகிறது. சில நேரங்களில் மற்ற உரிமைகளும் மற்றும் பொறுப்புகளும் ஒப்பந்த விடுவிப்பு விளைவாக தோன்றலாம்.
34.
கப்பல் வாடகை முறி என்பது கப்பல் உரிமையாளருக்கும் ஏற்றுமதியாளருக்கும் அல்லது அவரது முகவருக்கும் இடையே முழு கப்பலையோ அல்லது கப்பலின் ஒரு பகுதியையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ சரக்கை ஏற்றிச் செல்ல செய்து கொள்ளும் உடன்பாடு ஆகும். குறிப்பிட்ட கப்பல் பயணத்திற்கு உடன்பாடு செய்து கொண்டால் அது கப்பல் பயண வாடகை முறி (Vorahe Chater) எனபப்டும்.. குறிப்பிட்ட காலத்திற்கு உடன்பாடு செய்து கொண்டால் அது கால வாடகை முறி (Time Chater) எனப்படும்.
35.
(i) தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்
(ii) தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்
36.
மாநில சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (தமிழ்நாடு) 2017-ன் கீழ் மாநில அரசால் சுமர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
37.
உள்நாட்டுத் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே இறக்குமதி வியாபாரம் ஆகும். உதாரணமாக, இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கூறலாம்.
38.
1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, முதலீடு செய்வதற்கோ, கடன் வழங்குவதற்கோ, கேட்ட உடன் அல்லது காசோலை, வரையோலை அல்லது பணவிடை மற்றுமுள்ள முறைகளில் திரும்பக் கொடுப்பதற்கோ பொதுமக்களிடமிருந்து வைப்பு தொகைகளை பெற்றுக் கொள்ளும் செயல் வங்கியியல் எனப்படும்.
39.
ஒரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தால் அது மறு ஏற்றுமதி வணிகம் எனப்படும். எடுத்துக்காட்டாக இந்திய வியாபார நிறுவனம் ஒன்று, ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து மீண்டும் அதை நேபாள நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது மாரு ஏற்றுமதி வணிகம் ஆகும்.
40.
தொழில் நிறுவனங்கள் சமூக உரிமைகளை மறுத்து அதிக பயன் அடைந்து வருகின்றனர்.எ.கா. அரசு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கலப்படம்,கள்ளச் சந்தை மற்றும் சமூகத்திற்கு எதிரான நடைமுறைகள் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றது.இருந்த போதிலும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றுவது சமூகப் பொறுப்புணர்வின் அவசியமான ஒன்றாகும்.அத்தகைய செயல்பாடுகள் தொழிலில் தடையற்ற முடிவெடுக்கும் உரிமையை பாதிக்கிறது.
41.
கே.கே.செக்சேனா அவர்கள் "ஒரு இருட்டறையில் மெழுகுவர்த்தியின் ஒளிபரவுவது போல் போக்குவரத்து அந்தந்த பகுதிகளில் தனது பணியைச் செய்கிறது" என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.
42.
உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மீது கீழ்கண்ட விமர்சனங்கள் வைக்கப்படுகிறது
(i) தங்கு தடையற்ற வணிகம் வளரும் நாடுகளை விட வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டும் அதிக நலன் தருவதாக குற்றம் சாட்டப்படுகிறது:வளரும் நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள புதிய தொழிற்சாலைகளைக் காப்பாற்ற ஒருவித வணிக பாதுகாப்பு முறைகளை கையாள்கின்றன.பல வளர்ச்சியடைந்த நாடுகள் குறிப்பிட்ட நிலை வரை இந்த வணிக பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தி தங்கள் நாட்டில் உள்ள தொடக்க நிலை தொழில்களை காப்பாற்றிக் கொள்கின்றன.ஆனால் வளரும் நாடுகளுக்கு இந்த வணிக பாதுகாப்பு முறைகள் பயன்படுத்த தங்கள் நாட்டில் உள்ள தொடக்க நிலை தொழில்களுக்குத் தடை விதித்துள்ளது.இதில் பன்னாட்டு நிறுவனங்களில் தலையீடு இருக்கக்கூடும் என ஐயம் எழுகிறது.
(ii) மிகவும் நெருக்கமான நாடு கோட்பாடு: இது உலக வணிக அமைப்பு விதிகளின் மிக முக்கிய கோட்பாடு ஆகும்.இந்த விதியின் கேழ் உறுப்பினர் நாடுகள்,தங்கள் நாட்டில் உள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பாரபட்சம் காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.அதாவது,உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளை தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கிறது.இந்த நடவடிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு நியாயமற்ற நன்மைகளை வழங்குகிறது.இவ்வாறாக உலக வர்த்தக அமைப்பு,பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
(iii) வேளாண்மை மீதான கட்டணத்தை குறைப்பதில் தோல்வி அடைந்துள்ளது: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு வேளாண் பொருட்களுக்கு அதிக வரி விதித்து தங்கள் நாட்டு விவசாயிகளை பாதுகாக்கின்றன.இதை உலக வர்த்தக அமைப்பினால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதனால் வளரும் நாடுகளில் வேளாண் வளர்ச்சி நாடுகளில் வேளாண் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
(iv)வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயிகளின் நலனை புறக்கணிக்கிறது:வளர்ந்து வரும் நாடுகள் தங்களின் முதன்மைத் தொழிலான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்குகின்றன.ஆனால் வளர்ந்த நாடுகள் இந்த வரி விதிப்பு பாதுகாப்பு முறைகளை தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றன .இதனால் உலக வர்த்தக அமைப்பு ,வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உள்ள விவசாயிகளின் நலனை புறக்கணிக்கிறது.
(v) சுற்றுசூழல் பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது: சில நாடுகள் சுற்றுசூழல் பாதுகாப்பை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பேரளவில் பொருட்கள் உற்பத்தி செய்கின்றன.உலக வர்த்தக அமைப்பு அப்பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யத் தூண்டுகிறது.மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறதேயொழய ,சுற்றுசூழல் பாதிப்பை பற்றி அக்கறை கொள்வதில்லை.இன்றைய சூழலில் புவி வெப்பமயமாதல் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுசூழல் பேரழிவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மட்டுமே முக்கியத்துவம் தருகிறது.
(vi) சமூக பண்பாட்டு காரணிகளை புறக்கணிக்கிறது:உலக வர்த்தக அமைப்பானது பன்னாட்டு நிறுவனங்களை வணிக உலகை விட்டு விரட்ட செய்கிறது.பன்னாட்டு நிறுவனங்களில் வளர்ச்சியானது பல வளரும் நாடுகளில் கலாச்சாரத்தையும் பண்பாடு கூறுகளையும் அழிக்கும் என அஞ்சப்படுகிறது.
(vii) வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்கள் உயிர் காக்கும் மறுத்துப் பொருட்களை வாங்க இயலாமை: உலக வர்த்தக அமைப்பு வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்து உரிமைகளின் மூலம் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை பாதுகாக்க முயல்கிறது.இச்செயல் உயிர் காக்கும் மருந்துகளின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.இதனால் வளரும் நாடுகளில் வாழும் மக்கள் தங்களால் அம்மருந்துகளை நியாயமான விலையில் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
43.
சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சுற்றாடும் அல்லது சில்லறை வியாபாரிகள், நிலையிட பேரளவு சில்லறை வியாபார அமைப்புகள், இவற்றை ஒவ்வொன்றையும் மேலும் பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன:
(i) சுற்றாடும் /நடைபாதை வியாபாரிகள்: சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள், தெரு வியாபாரிகள், சந்தை வியாபாரிகள், இடம் பெயர் வியாபாரிகள்.
(ii) நிலையிட சிற்றளவு சில்லறை வியாபாரிகள்: தெருக்கடை வியாபாரிகள், பொதுப் பண்டக சாலைகள், குறிப்பிட்ட வகைப் பண்டக சாலைகள், சிறப்பு பண்டக சாலைகள், இரண்டம் தர பொருட்கள் விற்போர்.
(iii) நிலையிட பேரளவு சிலரை வியாபார அமைப்புகள்: துறைவாரிப் பண்டக சாலைகள் மடங்குக் கடைகள், சிறப்பங்காடிகள் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், வாடகைக் கொள்முதல் முறை மற்றும் தவணை விற்பனை முறை, அஞ்சல்வழி விற்பனை, தானியங்கி விற்பனை எந்திரங்கள், வணிக வளாகங்கள், தொலைத்தொடர்பு வழி சந்தை தளவிற்பனை.
44.
உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்கள்:
(i) இது மற்ற மாற்றுமுறை சாதனங்களைப் போலவே தடையின்றி வியாபாரம் செய்யப்படும் மாற்றுமுறை பிணையமாகும்.
(ii) கடந்த மூன்றாண்டுகளாக வலுவான நிதிநிலையில் செயல்பட்டுவரும் நிறுமங்களுக்கு பன்னாட்டு உலகளாவிய வைப்பு இரசீதுகள் மூலம் நிதிச்சந்தையில் நுழைய அனுமதி தரப்படுகிறது. இருப்பினும் இவற்றைப்பெற நிறுமங்கள், அந்நிய முதலீடு முன்னேற்ற வாரியத்திடமும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
(iii) உலகளாவிய வைப்பு இரசீதுகள் அனைத்தும் நாட்டு முதலீட்ட்டாளருக்கும், அவர்கள் நாட்டு செலாவணியில் அல்லது பொதுவாக ஏற்கப்படும் செலாவணியில் வெளியிடப்படுகிறது.
(iv) உலகளாவிய வைப்பு இரசீதுகள் அந்தந்த நாட்டுப் பணமதிப்பில் குறிப்பிடப்பட்டாலும் அவற்றின் பங்கு மதிப்பு உள்நாட்டு பணமதிப்பு அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
(v) உலகளாவிய வைப்பு இரசீதை வைத்திருப்பவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்கிற்கு உரிய பங்காதாயம் மற்றும் பங்கு மேலுதியம் பெற உரிமை பெற்றவராவார்.
(vi) முதலீட்டாளர் உலகளாவிய வைப்பு இரசீதை நேர்மைப்பங்குகளாக மாற்றி, உள்நாட்டு பாதுகாவலர் மூலம் விற்றுக்கொள்ளலாம். வெளியீடு நிகழ்ந்த பிறகு 45 நாட்கள் கழித்து இவ்வாறு செய்ய முடியும்.
(viii) உலகளாவிய வைப்பு இரசீதினை வழங்கும் நிறுமம், ஒரே தனிப்பட்ட அமைப்பின் மூலம் தனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றுகிறது.
45.
சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடும் சேவைகள் பின்வருமாறு:
(i) நிதிவசதி அளித்தல்: மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிகளுக்கு கடன் விற்பனை செய்வதன் மூலம் நிதி வசதி நல்குகிறார். சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரியிடம் கடன் கொள்முதல் செய்து அவற்றை நுகர்வோருக்கு விற்று அவரிடமிருந்து பணத்தைப் பெற்று மொத்த வியாபாரிகளுக்கு செலுத்தும் வண்ணம் நிதி வசதி அளிக்கிறார்.
(ii) தேவையை பூர்த்தி செய்தல்: சில்லறை வியாபாரிகள் சிறு முதலுடனும் மற்றும் சிறிய அளவு இடவசதிகளுடனும் வியாபாரத்தை நடத்துவதால், அவர்களால் பெருமளவில் பல்வேறு வகையான சரக்குகளை வாங்கி இருப்பு வைக்க இயலாது. மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிக்கு அவரின் தேவைக்கு ஏற்ப சிறிய அளவில் பொருட்களை விற்று அவரின் இந்த இடர்பாட்டை போக்குகிறார்.
(iii) புதிய பொருட்களை அறிமுகம் செய்தல்: மொத்த வியாபாரி புதிய பொருட்கள், மற்றும் அவற்றின் உபயோகம் குறித்த தகவல்களை சில்லறை வியாபாரியின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். எனவே பொருளைப்பற்றிய சிறப்பறிவு மற்றும் ஆலோசனைகளை சில்லறை வியாபாரி பெறுகிறார்.
(iv) விலை நிலைப்பாடு: மொத்த வியாபாரிகள் சந்தையின் தேவையை அறிந்து அதற்கேற்ப பொருள்களின் அளிப்பினைக் கட்டுப்படுத்துவதால், விலை வேறுபாடுகள் மூலம் ஏற்படும் நட்டத்திலிருந்து சில்லறை வியாபாரிகளைப் பாதுகாக்கிறார்.
(v) போக்குவரத்து சிக்கனம்: மொத்த வியாபாரி சில்லறை வியாபாரியின் இடத்திற்கே சென்று பொருட்களை வழங்குவதன் மூலம், சில்லறை வியாபாரியின் நேரத்தையும் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்துகிறார்.
(vi0 முறையான விநியோகம்: மொத்த வியாபாரி பெருமளவில் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு முறையாக, சீராக சில்லறை வியாபாரியின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்குகிறார்.
46.
47.
பணிகள்:
(i) உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கான சந்தையை கண்டறிதல்.
(ii) இறக்குமதியாளர் அல்லது அவரது முகவரை கண்டறிந்து ஏற்றுமதி செய்வதற்கான பதிலை பெறுதல்.
(iii) சரக்கின் வடிவத்தை சந்தை தேவை, தரம், சரக்கை அளிப்பவரின் திறனுக்கு ஏற்றவாறு நிறுவுதல்.
(iv) சரக்கை அனுப்ப போக்குவரத்தை தெரிவு செய்வதற்கு முன் அதன் விலை சேவையின் தரம், பாதுகாப்பை கருத்தில் கொள்ளுதல்.
(v) சரக்கை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப தயார் செய்தல்.
(vi) சரக்கை வாங்குபவரின் கடன் செலுத்துத்திறனை அறிதல்
(vii) சரக்கை காப்பீடு செய்தல்
(viii) வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் சரக்கு மற்றும் சேவைக்கான தொகை செலுத்துதல்.
(ix) பன்னாட்டு வணிகம் தொடர்புடைய ஆவணங்களை தயாரித்தல்.
(x) கோருரிமைகளை தீர்வு செய்தல்.
48.
நிலவியல் சிறப்பு தேர்ச்சி: உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் கனிம வளங்கள், நீர் மின்சக்தி, உலோக வளங்கள் போன்றவை அதிகமாகவும் வேறு சில நாடுகளில் முன்னேறிய உற்பத்தி தொழில்நுட்பம், திறமையான மக்கள் தொகை, மூலதன கருவிகள் ஆகியவை அதிகமாகவும் இருக்கும். எனவே, தன்னிடம் உபரியாக உள்ள வளங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அங்கிருந்து பற்றாக்குறையான வளங்களைப் பெற்று கொள்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
(ii) வளங்களை தேவையான அளவிற்குப் பயன்படுத்துதல்: எந்த நாடு தன்னால் திறமையாக பொருட்களை தயாரிக்க இயலவில்லையோ அது மற்ற நாடுகளிலிருந்து அதாவது திறமையாக பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நாடுகளிலிருந்து உபரியாக உள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற கோட்பாட்டின்படிதான் பன்னாட்டு வணிகம் செயல்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வளங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்த உதவுகிறது.
(iii) பொருளாதார வளர்ச்சி: வளரும் நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் மூலமாக விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் காரணமாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட பன்னாட்டு வணிகத்தின் இறக்குமதி செய்து முடிவற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கும்.
(iv) வேலைவாய்ப்பை உருவாக்குதல்: வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் பன்னாட்டு வணிகம் உதவுவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பையும், அனுப்புகை மற்றும் அகற்றீட்டு முகவர்கள், தேவைக் குறிப்பீட்டகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் புற ஒப்படைப்பு முகமைகள் போன்றவற்றிற்கும் மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
(v) வாழ்க்கைத் தரம் மேம்படுதல்: உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுவிதமான பொருட்கள் அல்லது சேவைகளை பன்னாட்டு வணிகத்தின் மூலம் மக்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடிகிறது. நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(vi) விலை சமனிலைப்படுத்தல்: உலகச் சந்தையில் தினந்தோறும் விலை மாற்றம் அடையக்கூடிய பல்வேறு பொருட்களின் விலையை பன்னாட்டு வணிகம் சமப்படுத்துகிறது. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்டப் பொருட்களின் விலை உள் நாட்டில் உயருகிறதோ அப்பொழுது மற்ற நாடுகளிலிருந்து அப்பொருட்களை இறக்குமதி செய்து விலையைச் சமன் செய்கிறது. அதே போன்று குறிப்பிட்ட பொருள்களின் விலை குறையும் போதெல்லாம் அந்த பொருள்களை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விலையை நிலைப்படுத்துகிறது. உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிக ஏற்றத்தாழ்வாக இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
(vii) அதிக இலாபத்திற்கான வாய்ப்பு: அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பன்னாட்டு சந்தையில் பல்வேறு நாடுகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. ஏதன் பயனாக அதிக இலாபத்தை ஈட்ட முடிகிறது.
(viii) முழுத் திறனையும் பயன்படுத்துதல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிக அளவில் சரக்கு மற்றும் பொருட்களை உலகச் சந்தையில் விற்பதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் தன்னுடைய இயந்திரம் மற்றும் தொழில் நுட்பத்தை முழுமையான அளவில் பயன்படுத்துகிறது.
(ix) பன்னாட்டு அமைதி: உலக நாடுகள் தனித்தனியே இயங்கினாலும் பன்னாட்டு வணிகத்தினால் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிறது. கலாச்சாரம், கருத்துகள் மற்றும் பரஸ்பர புரிந்துணருந்தல் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. பன்னாட்டு வணிகம் உலக மக்களிடையே கலாச்சார சமூக உறவுகளை வளர்க்க உதவுகிறது. ஒட்டு மொத்தமாக உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
49.
வருமானம் (பிரிவு 2(24): வருமானம் வரிச்சட்டத்தின் பிரிவு 2(24) வருமானம் என்ற சொல்லுக்கு இலக்கணம் வழங்கியுள்ளது. அதன்படி வருமானம் என்ற சொல்லின் பின்வருவன அடங்கியுள்ளன.
(i) வியாபாரம் அல்லது தொழிலில் ஏற்பட்ட இலாபம் மற்றும் ஆதாயம்.
(ii) பங்காதாயம்.
(iii) தொண்டு நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளை மருத்துவமனைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் பெறும் நன்கொடைகள்.
(iv) ஊதியத்திற்கு மாற்றாக பெறும் இதர வருமானங்கள்.
(v) ஏற்றுமதிக்காக வழங்கப்படும் பல்வேறு விதமான ஊக்கத்தொகை.
(vi) கூட்டாளி ஒருவர் கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து பெறும் வட்டி, ஊதியம், ஊக்கத்தொகை, கழிவு அல்லது மேல் வருமானம்.
(vii) மூலதன ஆதாயங்கள்.
(viii) தமது உறுப்பினர்களுடன் கூட்டுறவுச் சங்கமாக வங்கியில் வணிகத்தை மேற்கொண்டு பெற்ற இலாபங்களும் ஆதாயங்களும்.
(ix) குதிரைப் பந்தயம் சீட்டு விளையாட்டுகள் மற்றும் அதே வகையான ஏனைய விளையாட்டுகள் உள்ளிட்ட பந்தயங்கள், குறுக்கெழுத்துப்போட்டிகள், பரிசுச்சீட்டுகள் ஆகியவற்றில் கிடைத்த பரிசுத் தொகைகள்.
(x) கருதப்பட்ட வருமானங்கள்.
(xi) சேமநல நிதி அல்லது ஒய்வுகால நிதி போன்றவைகள் மூலமாக பெறப்பட்ட தொகை.
(xii) பிரதான காப்புறுதி காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கூடுதல் சிறப்புத் தொகை (Bonus).
(xiii) வியாபாரத்தோடு தொடர்பில்லாமல் ஏதேனும் செயலில் ஈடுபட்டு இருப்பின் அல்லது தொழில் நுட்ப அறிவு காப்புரிமை மற்றும் பதிப்புரிமை இவைகள் பகிர்ந்து கொள்ளாமல் ஏதேனும் தொகை எந்த ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்டிருந்தால்
(xiv) இயக்குநர் அல்லது நிறுமத்தில் கணிசமான அக்கறை கொண்ட ஒரு நபர் அல்லது அவரது உறவினர் அல்லது இயக்குநர் ஒருவரின் உறவினர் ஆகியோரால் நிறுமத்திலிருந்து பெறப்பட்ட ஏதேனும் பயன் அல்லது மேல் வருமானம்.
(xv) பிரிவு 56(2) (vi)-ன் பெறப்பட்ட நன்கொடை மற்றவைகள்.
50.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
51.
52.
தொழில் முதலீடுகளின் அடிப்படையில் உற்பத்தித் தொழில்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. குறுத்தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள், பெருந்தொழில்கள்.|
(i) குறுத்தொழில்கள்:
குறுகிய காலத்தில் செய்து முடிக்கும் தொழில்கள் குறுத்தொழில்கள் ஆகும்.
(ii) சிறு தொழில்கள்:
சிறிய அளவிலான தொழில்கள் சிறு தொழில்கள் என அழைக்கப்படும்.
(iii) நடுத்தரத் தொழில்கள்:
பெரிய அளவிலான தொழில் எனலாம்.
53.
தொழிலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) பொருளாதார நோக்கங்கள் : தொழில்கள் பொருளாதார நோக்கம் என்பது லாபம் ஈட்டுவதே ஆகும். மேலும் இலாபம் ஈட்டுவதற்கு நுகர்வோரை உருவாக்குதல், புதிய நுட்பங்களை கண்டுபிடித்தல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களே மிக முக்கியமானதாகும்.
(ii) சமூக நோக்கங்கள் : சமூக நலனைப் பேணுவது என்பது சில தொழிலமைப்புகளை, அரிய வகைகளை சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த தொழில் நடவடிக்கைகளையும் சமுதாயத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது.
(iii) நிறுவனம் நோக்கங்கள்: தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம் தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் மயமாக்கம், நுகர்வோருக்கு தரமான பொருள்களை வழங்குதல் நுகர்வோருக்குத் திருப்திப்படுத்துவதில் ஆகியன மூலமாக அமையலாம்.
(iv) மனித நோக்கங்கள்: தொழிலமைப்பு தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். மேலும் இயலாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், நலம் காக்க உதவ வேண்டும். பணியாளர்கள், பொருளாதார, சமூக உளவியல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவையாக அமைய வேண்டும்.
(v) தேசிய நோக்கங்கள்: தொழில் நிறுவனம், ஓரு நாட்டினுடைய மிக முக்கிய அங்கமாக கருதப்படுவதால் அவை நாட்டின் நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகிறது. கடமை வகையில் தன்னுடைய குறிக்கோளை அமைத்துத் தெளிவு வேண்டும். ஒரு நாட்டின் நோக்கம் என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தல், அரசிற்கு வருவாய் ஈட்டுதல், சரக்கு மற்றும் சேவை உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும். எனவே ஒரு தொழில் அமைப்பு தன்னுடைய குறிக்கோளை நிர்ணயம் செய்யும் போது மேற்கூறிய நோக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
54.
நிறைவேறிய ஒப்பந்தம் (Executed contact): ஒபபந்தப்படி அவரவர்களின் கடைமையை முடிக்கும்போது அவ்வொப்பந்தம் நிறைவேறிய ஓப்பந்தமாகும்.உதாரணமாக வியாபாரி ஒருவர் ரொக்கத்திற்கு தொலைக்காட்சி ஒன்றை விற்கிறார் இதில் விற்பவர், வாங்குபவர் ஆகிய இருவரும் தங்கள் கடைமை நிறைவேற்றி உள்ளார்கள்.
நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தம் (executory contact) : ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரு நபரிகளிடையே கடமைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தமாகும்.எடுத்துக்காட்டு A என்பவர் B என்பவருக்கு ரூ 20,000க்கு கட்டில் ஒன்று செய்து தர ஒப்புக்கொள்கிறார்.எனினும் A இன்னும் கிட்டிலைத் தயார் செய்யவில்லை என்றும் B என்பவர் அதற்கான தொகையை செலுத்தவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம். அது நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தமாகும்
ஒரு தலை ஒப்பந்தம் (Unilatral contact) : இதில் ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் ஒருவர் மட்டுமே தன வாக்குறுதி அல்லது கடமையை நிறைவேற்றிய பிறகு மற்றொரு நபர் தனது கடமையை நிறைவேற்றுகிறார். எடுத்துக்காட்டாக x என்பவர் பொருட்களை எடுத்துவருவதாக ரூ 10,000) y என்பவருக்கு தருவதாக
கூறுகின்றார். y என்பவர் பொருட்களை கொண்டு வந்த பிறகு x என்பவர் பணத்தை தருகிறார்.இதில் y பொருட்களை கொண்டு வரும் பொழுதே ஒப்பந்தம் உருவாகின்றது
இருதலை ஒப்பந்தம் (bilateral contact) : ஒப்பந்தம் ஒன்று உருவாகும் பொழுது இரு தரப்பினரும் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டியிருப்பின் அத்தகைய ஒப்பந்தம் இரு தலை ஒப்பந்தம் எனப்படுகிறது. எடுத்துக்காட்டக R என்பவர் ரூ10,00,000 மதிப்புள்ள மகிழ்வுந்தை விற்பனை செய்ய s க்கு வாக்குறுதி அளிக்கின்றார். S என்பவர் பதிலுக்கு பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards