11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
கணினி அமைப்பு
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேச் நினைவகம்
பதிவேடு
2.
பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?
உள்ளீட்டுச் சாதனங்கள்
வெளியீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
3.
கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?
USB
Ps/2
SCSI
VGA
4.
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லொகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
5.
எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?
8
16
32
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
6.
அமைப்புப் பாட்டை (System Bus) என்றால் என்ன?
7.
நுண்செயலி கொண்டுள்ள முக்கியப் பகுதிகள் யாவை?
8.
நுண் செயலி என்றால் என்ன?
9.
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
10.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்றால் என்ன?
11.
நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
12.
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
13.
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
14.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.
15.
கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக
16.
தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக
17.
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
18.
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
19.
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
20.
நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
1.
(c)
கேச் நினைவகம்
2.
(d)
நுண்செயலி
3.
(d)
VGA
4.
(c)
டிகோடர் (Decoder)
5.
(d)
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
6.
அமைப்புப் பாட்டை என்பது நுண்செயலிக்கும் மற்ற சாதனங்களுக்கும் எடையில் இணைப்பை ஏற்படுத்த உதவும் முகவரிப் பாட்டை, தரவுப் பாட்டை மற்றும் கட்டுப்பாட்டு பாட்டை ஆகியவற்றின் தொகுப்பாகும்.
7.
நுண்செயலி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை
(1) கணித ஏரணச் செயலகம் (Arithmetic and Logic Unit-ALU): கணித மற்றும் ஏரண செயல்பாடுகளைக் கட்டளைக்கேற்ப செயல்படுத்தும்.
(2) கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்னைகளைப் பெற்று கணிப்பொறியின் எல்லா பாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
(3) பதிவேடுகள்-உள்ளமைந்த நினைவகம் (Registers -Internal Memory): செயல்பாடுகளுக்குத் தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளைச் சேமிக்கும்.
8.
நுண் செயலியானது ஒரு நிரலாக்கம் செய்யக்கூடிய, பற்பல உபயோகத்திற்கான ஒரு சிலிகான் சிப்பாகும்.
9.
EPROM-ல் தகவல்களை புற ஊதா ஒளி மூலம் அழிக்கப்படுகிறது.
10.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சி கட்டுப்படுத்தயிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம், LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
11.
நிரலில் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச்செயலகத்தில் சேமித்து வைக்கப்பயன்படும். ஒரு சிறப்பு பதிவேடு நிரல் கவுண்ட்டர் (Program Counter) எனப்படும்.மையச்செயலகத்திலுள்ள கணித ஏரணச் செயலகம் செயற்படுத்த வேண்டிய நினைவக முகவரியை நினைவக முகவரி பதிவேட்டில் (Program Counter) சேமித்து வைக்கும்.
12.
| ஃபிளாஸ் நினைவகம் | EEPROM |
| 1. ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும். |
ஒரு சிறப்பு PROM வகையைச் சார்ந்த நினைவகம். |
| 2. வேகமான அணுகல் நேரத்தை (Access time) வழங்குகிறது. |
மெதுவாக இயங்கும் நினைவகம். |
13.
| CD | DVD |
| 1. ஒரு சாதாரண CDன் கொள்ளளவு 700MB ஆகும். |
DVD-4.7GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6-CD க்களின் கொள்ளளவுக்குச் சமமாகும். |
| 2. தரவு எழுதும்/படிக்கும் வேகம் குறைவு. | தரவு எழுதும்/படிக்கும் வேகம் அதிகம். |
| 3. CD-Drive மற்றும் DVD Drive களில் இயக்க முடியும். |
DVD-Drive களில் மட்டுமே இயக்க முடியும். |
| 4. இது பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனது. |
இது கண்ணாடியிழை வட்டு ஆகும். |
14.
பல வகையான தொடர்பு முகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தொடர் தொடர்பு முகம் (Serial Port): பழைய கணினிகளால் வெளிக்கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
2. இணையான தொடர்பு முகம் C (Parallel Port): பழைய கணினிகளால் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
3. USB தொடர்பு முகம்: கேமராக்கள், ஸ்கேனர்கள், மொபைல்கள், வெளிப்புற வன்தட்டு மற்றும் அச்சுப் பொறி போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
4. USB 3.0: பல்வேறு மின்னணுச் சாதனங்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
5. VGA இணைப்பான்: புரொஜெக்டர் அல்லது காட்சித் திரையைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
6. ஆடியோ பிளக்ஸ் (Audio plugs): கணினியுடன் ஒலிபெருக்கி, மைக்ரோஃபோன் மற்றும் தலை தொலை பேசி இணைப்பதற்கு பயன்படுகிறது.
8. SCSI Port: வன்வட்டு, பிணைய இணைப்பிகள் கணினியுடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
9. HDMI: என்பது ஒளிக்காட்சி கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம் LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
15.
1) நுண்செயலியை வகைப்படுத்தும் போது கட்டளைத் தொகுதியின் அளவு ஒரு முக்கியமான கருத்தாக அமையும்.
2) RISC என்பது Reduced Instruction Set Computers.
RISC செயலிக்கு எடுத்துக்காட்டு :Pentium IV , Intel P6, AMD K6 மற்றும் K7.
3) CISC என்பது Complex Instruction Set Computers.
Intel 386 & 486, Pentium, Pentium II, III மற்றும் Motorola 68000 கணினிகள் CISC செயலியைக் கொண்ட கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
16.
தரவின் அகலத்தைப் பொறுத்து நுண் செயலியைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
(i) 8-பிட் நுண்செயலி
(ii) 16-பிட் நுண்செயலி
(iii) 32-பிட் நுண்செயலி
(iv) 64-பிட் நுண்செயலி
17.
| கணிப்பொறி அமைப்பு | கணிப்பொறி கட்டமைப்பு |
| கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இது நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது. |
கணிப்பொறி கட்டமைப்பு என்பது கணிப்பொறி வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளை உள்ளடக்கியது. |
(i) கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம் (CPU), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும்.
(ii) இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இது ஒரு கணினியின் அனைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியும், மேலும் பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றியும் விளக்குகிறது.
(iii) கணினியின் கட்டமைப்பு என்பதும் கணிப்பொறியின் அமைப்பு என்பதும் ஒன்றே. ஆனால் கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. அதே நேரத்தில் கணினி அமைப்பானது, நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது.
18.
இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் தரவு மற்றும் நிரல்களை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகின்றன.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்:
(i) வன்வட்டுகள் (Hard disk)
(ii) குறுவட்டு (Compact Disk -CD)
(iii) டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD)
(iv) ஃபிளாஸ் நினைவக சாதனங்கள்
1. வன்பொருள் (Hard disk):
(i) வன்வட்டு ஒரு காந்தவட்டாகும். இதில் தரவுகளைச் சேமிக்கலாம்.
(ii) வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும்.
(iii) வன்வட்டுகள் ஒற்றை அல்லது இரட்டை பக்க வட்டுக்களாக இருக்கும்.
2. குறு வட்டு (CD):
(i) CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும்.
(ii) மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும்.
(iii) CD-ல் தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits" எனப்படும். இவை அடுக்கின் மேல் ஒரு சுருள் பாதையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு pits -களுக்கு இடையே உள்ள இடைவெளி "lands" என்று அழைக்கப்படும்.
(iv) CD-யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டர் CD-யை சுழற்றும்.
(v) ஒரு சாதாரண CD -ன் கொள்ளளவு 700 MB ஆகும்.
3. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD):
(i) DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc)
(ii) இது 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும், இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும்.
(iii) திரைப்படங்களை சிறந்த தரத்தில் DVD-களில் சேமித்து, லேசர் மூலம் படிக்க முடிகின்றது.
(iv) ஒரு 12 செ.மீ விட்டம் உள்ள வட்டு ஒரு பக்க மற்றும் ஒரு அடுக்கு உள்ள வட்டு சுமார் 4.7 GB கொள்ளளவாகவும் மேலும் ஒரு பக்க இரு அடுக்கு உள்ள வட்டு 8.5 GB கொள்ளளவாக இருக்கும். 8 cm உள்ள DVD 1.5 GB கொள்ளளவைக் கொண்டது.
(v) ஒரு DVD ROM-ன் கொள்ளளவு அதில் உள்ள தரவுப் பக்க எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
4. ஃபிளாஸ் நினைவக சாதனங்கள் (Flash Memory Devices):
(i) ஃபிளாஸ் நினைவகம் ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும்.
(ii) ஃபிளாஸ் நினைவகம் ஒரு EEPROM அல்லது EPROM வகைப்படும்.
எ.கா: பென் டிரைவ் (Pen Drive), மெமரி கார்டு (Memory Card)
(iii) ஃபிளாஸ் நினைவகம் வேகமான அணுகல் நேரத்தை வழங்குகிறது.
5. ப்ளூ -ரே வட்டு (Blu -Ray Disc):
(i) ப்ளூ-ரே வட்டு அதிக அடர்த்தியானக் கண்ணாடி இழை வட்டு வடிவமைப்பு பெற்ற DVD-யை ஒத்ததாகும்.
(ii) ப்ளுரே வட்டு பெரும்பாலும் விளையாட்டு மென்பொருட்களை, உயர் வரையறை திரைப்படங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஒரு இரண்டு அடுக்கு ப்ளூ -ரே வட்டில் 5.2 GB வரைத் தரவுகளைச் சேமிக்கலாம். இதன் கொள்ளளவு 5 DVD மற்றும் 70 CD க்குச் சமமாகும்.
(iv) இந்த வடிவமைப்பு பதிவை இயக்குவதற்கு மீண்டும் எழுதுவதற்கும், உயர் வரையறை வீடியோவை இயக்குவதற்கும், மேலும் மிக அதிகத் தரவுகளைச் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
(v) ப்ளூ-ரே வட்டு, ப்ளூ வைலைட் லேசர்-ஐ தரவை எழுதுவதற்குப் பயன்படுத்துவதால் ப்ளூ-ரே என்று பெயர் பெற்றது.
19.
1. மையச் செயலகம் (CPU), தரவு நினைவகப் பதிவேடுகளையும் (MDR) மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் கொண்டுள்ளது.
2. நினைவகத்திற்கு மற்றும் செயலகத்திற்கு இடையே தேவையானத் தரவைத் தரவு நினைவகப் பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
3. நினைவக முகவரி பாட்டை -நினைவக இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.
4. தரவுப் பாட்டை -தரவை மையச் செயலகத்திற்கும் நினைவகத்திற்கும் கொண்டு செல்ல உதவும்.
5. கட்டுப்பாட்டு பாட்டை-படிக்க மற்றும் எழுதும் செயலைக் கட்டுப்படுத்தும்.
6. படிக்கும் செயல் நினைவகத்திலிருந்து தரவை எடுத்து MDRக்கு கொண்டு செல்லும்.
7. ஒரே ஒரு கட்டுப்பாட்டு இணை 0 மற்றும் 1 மதிப்புகளை ஏற்று படித்தல்/எழுதுதல் வேலைகளைச் செய்யும்.
8. எழுதுதல் செயல் தரவை MDR-ல் இருந்து நினைவகத்திற்கு கொண்டு செல்லும்.

9. RAMல் உள்ள வேர்டின் அளவும், நினைவகத் தரவு பதிவேட்டின் அளவும் ஒன்றாகும்.
10. நினைவக தரவு பதிவேட்டின் அளவு 8 பிட்டாக இருந்தால் நினைவகத்தில் இதை 8-பிட் அளவிலான ஒரு வேர்டுடன் இணைக்கலாம்.
11. நினைவகத் தரவு பதிவேட்டிலிருந்து ஒரு வேர்டிற்கும் அல்லது வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேட்டிற்கும் தரவு பரிமாற்றம் செய்ய தரவுப் பாட்டை 8 இணைக் கம்பிகள் கொண்ட கட்டுப்பாட்டின் (படிக்க அல்லது எழுத) அடிப்படையாகச் செயல்படுகிறது.
12. இந்தக் கட்டளை சமிக சமிக்னை R/W என்று பெயரிடப்பட்டிருக்கும். இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றல் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டைக் குறிக்கும்.

20.
ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (Instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
1. கடிகார வேகம்:
(i) ஒவ்வொரு நுண்செயலியிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்தக் கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும்.
(ii) கணிப்பொறியின் வேகம் மெகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) மற்றும் கிகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) அளவில் அளக்கப்படுகிறது.
2. கட்டளைத் தொகுப்பு:
(i) கணிப்பொறியில் தரவை செயற்படுத்த கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
(ii) ஒரு நுண்செயலி இயக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட அடிப்படையான எந்திர மொழி அறிவுறுத்தல்களின் தொகுப்பு, கட்டளைத் தொகுதி எனப்படும்.
செயல்படுத்தும் செயல்கள்:
(i) தரவு மாற்றம்
(ii) எண் கணித செயல்முறைகள்
(iii) தருக்கச் செயல்முறைகள்
(iv) கட்டுப்பாடு நகர்வு
(v) உள்ளீடு/வெளியீடு
3. வேர்டு அளவு:
(i) வேர்டின் அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
(ii) ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையையும் பொறுத்ததாகும்.
(iii) மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards