11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?
JELLY BEAN
UBUNDU
OS / 2
MITTIKA
2.
அண்ட்ராய்டு ஒரு _____.
மொபைல் இயக்க அமைப்பு
திறந்த மூல
கூகுள் உருவாக்கியது
இவை அனைத்தும்
3.
ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.
வரைகலை பயனர் இடைமுகம் (GUI)
தரவு விநியோகம்
பாதுகாப்பு மேலாண்மை
உண்மையான நேரம் செயலாக்க
4.
இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்
முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய
இவை அனைத்தும்
5.
இயக்க அமைப்பானது _____.
பயன்பாட்டு மென்பொருள்
வன்பொருள்
அமைப்பு மென்பொருள்
உபகரணம்
6.
ஒரு இயக்க முறைமையின் இரண்டு வேறு சில செயல்பாடுகளைக் கூறுக.
7.
இயக்க அமைப்பு என்றால் என்ன?
8.
மென்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.
9.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?
10.
பல் பணியாக்கம் என்றால் என்ன?
11.
பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை?
12.
இயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்?
13.
இயக்க அமைப்பின் வகைகள் யாவை?
14.
இயக்க அமைப்பின் தேவை என்ன?
15.
இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை விளக்குக
16.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
17.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
18.
கோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.
19.
ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.
20.
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக
1.
(a)
JELLY BEAN
2.
(c)
கூகுள் உருவாக்கியது
3.
(a)
வரைகலை பயனர் இடைமுகம் (GUI)
4.
(d)
இவை அனைத்தும்
5.
(c)
அமைப்பு மென்பொருள்
6.
வேலை கணக்கிடுதல். (Job Accounting)
பிழை கண்டுபிடிக்கும் கருவிகள். (Error Detecting Aids)
7.
1.இயக்க அமைப்பு என்பது கணிப்பொறிக்கும், பயனருக்கும் இடைமுகமாக செயல்படும் ஒரு அமைப்பு மென்பொருள் ஆகும்.
2. இது உள்ளீடு வெளியீடு மற்றும் கணிப்பொறி வெளிப்புற சாதனங்களாகிய வட்டு இயக்கி (Disk Drive), அச்சுப்பொறி (Printer) மற்றும் பிற மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
எ.கா: Windows, லினக்ஸ், யூனிக்ஸ்.
8.
மென்பொருள் என்பது கணிப்பொறியில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான கட்டளைகளின் தொகுப்பாகும்.
மென்பொருள் வகைகள்:
மென்பொருள் இரண்டு வகைப்படும்.
1. பயன்பாட்டு மென்பொருள்(Application Software)
2.அமைப்பு மென்பொருள்:(System software)
1. பயன்பாட்டு மென்பொருள்:
பயன்பாட்டு மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பணியை செய்யத் வேவையான நிரல்களின் தொகுப்பாகும். எ. கா : எம். எஸ் .வேர் (MS -word), VLC Player.
2. அமைப்பு மென்பொருள்:
அமைப்பு மென்பொருள் என்பது வன்பொருள்கள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்களை இயக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கணிப்பொறி நிரலாகும்.
எ. கா : இயக்க அமைப்பு (Operating System) மற்றும் நிரல் பெயர்ப்பி.
9.
கணிப்பொறி பயன்படுத்தும் முக்கிய இயக்க அமைப்புகள் பின்வருமாறு:
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
3. லினக்ஸ்
4. iOS
5. அண்ட்ராய்டு
10.
பல் பணியாக்கம் என்பது இயக்க அமைப்பு அம்சங்களில் ஒன்றாகும்.பல செயலாக்க செயல்முறை (வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது.செயலாக்கம் இணையாக செயல்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.
11.
இயக்க அமைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பை வழங்குகிறது.
(i) கோப்பு நிலை
(ii) அமைப்பு நிலை
(iii) வலை நிலை
12.
1. நினைவகத்தில் எந்தப் பகுதியை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.
2. நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறை மற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.
3. முதன்மை நினைவகத்தில், நிரல்களுக்குத் தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல் (பயனற்ற தரவுகளின் தொகுப்பு)
13.
செயலாக்கத் திறன்களைப் அமைப்புகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. ஒற்றைப்பயனார் இயக்க அமைப்பு
2. பல பயனர் இயக்க அமைப்பு
1. ஒற்றைப்பயனார் இயக்க அமைப்பு:
இந்த வகை இயக்க அமைப்பு, ஒரு நேரத்தில், ஒரு பயனரை, ஒரே ஒரு பணியை மட்டுமே செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது "1. ஒற்றை பயனர் மற்றும் ஒற்றை பணி இயக்க அமைப்பு" என அழைக்கப்படுகிறது.
எ. கா: MS DOS.
2. பல பயனர் இயக்க அமைப்பு:
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
எகா: விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ்.
14.
ஒரு பயன்பாட்டை உருவாக்குவதற்கு, பயனர்க்கு இயக்க அமைப்பை பற்றிய அறிவு அவசியமாகிறது. ஆனால் வன்பொருளின் உள் கட்டமைப்பை பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை.
2. இயக்க அமைப்பு அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருள்களை நிர்வகிக்க உதவுகிறது.
3. பயனருக்கும் வன்பொருளுக்குமிடையே இடைமுகமாக செயல்படுவது இயக்க அமைப்பின் அடிப்படைத் தேவையாகும்.
4. இயக்க அமைப்பு ஒரு மொழிப் பெயர்ப்பியாக செயல்பட்டு. பயனர் எழுதும் நிரலை கணிப்பொறி புரிந்துகொள்ளும் இயந்திர மொழியாக (இருநிலை எண்கள்) மாற்றி செயலாக்கம் செய்து, இயக்க அமைப்பிற்கு மீண்டும் திருப்பி அனுப்புகிறது.
5. இயக்க அமைப்பு, செயலாக்கம் செய்த தகவல்களை பயனர் படிக்கக்கூடிய வடிவில் மாற்றியமைக்கிறது.
15.
ஒரு கணிப்பொறியின் செயலிக்கு, தேவையான செயல்முறைகளை ஒதுக்கீடு செய்வதற்கு கீழ்காணும் நெறிமுறைகள் (Algorithms) முதன்மையாகபின்பற்றப்படுகின்றன.
1. முதலில் வந்தது முதலில் செல்லும் (FIFO)
2. சிறியது முதலில் (Shortest Job First)
3. வட்ட வரிசை (Round Robin)
4.முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority)
1.முதலில் வந்தது முதலில் செல்லும் (FIFO- First In First Out):
முதலில் வந்தது முதலில் செல்லும் நெறிமுறை என்பது வரிசை நுட்பத்தை (Queuing Technique) அடிப்படையாக கொண்டது. நுட்ப ரீதியாக, வரிசையில் நுழையும் செயல்முறை முதலில் CPU -யில் செயல்படுத்தப்படும், அடுத்தடுத்து தொடர்கிறது. வரிசையின் அடிப்படையில் செயல்முறை செயல்படுத்தப்படுகின்றன.
2. சிறியது முதலில் (Shortest Job First): இந்த நெறிமுறை, மைய செயலகத்தால் இயக்கப்படும் ஒரு வேலையின் அளவை அடிப்படையாக கொண்டது.
3. வட்ட வரிசை (Round Robin): வட்ட வரிசை திட்டமிடல் "நேரப் பகிர்வு அமைப்பு"-களுக்கு (Time Sharing System) சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நெறிமுறை ஆகும். சுழற்சி முறையில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.
4. முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority): கொடுக்கப்பட்ட வேலை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வேலைகளை விட அதிக முன்னுரிமை கொண்டிருக்கும் வேலை மிகவும் முக்கியமானது.
16.
1.கைபேசிகள், டேப்ளட்கள் மற்றும் எம்பி 3 பிளேயர்கள் போன்ற மொபைல் சாதனங்கள் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகளில் இருந்து வேறுபட்டவை. எனவே அவற்றிற்கு சிறப்பு இயக்க அமைப்புகள் தேவைப்படுகின்றன.
2.பொபைல் சாதனங்களுக்கான இயக்க அமைப்புகள் பொதுவாக முழுமையாக இல்லை டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினி கம்ப்யூட்டிற்காக உருவாக்கப்பட்டவை போல் அனைத்தையும் இயக்க முடியாது. எ. கா : ஆப்பிள் iOS மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு.
17.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் :
1. ஒரே நேரத்தில் பல பணிகளை அல்லது செயல்களைச் செயல்படுத்துகிறது.
2. பல பயன்பாடுகள் தங்குதடையின்றி குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
தீமைகள்:
(i) அதிக வளங்களை எடுத்துக் கொள்வதால் சிறப்பான இயக்க அமைப்பு தேவை.
(ii) அதிக பயனர்களாலும், பல்வேறு பயன்பாடுகள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதாலும் சில நேரங்களில் இயக்க அமைப்பு செயல் இழக்க நேரிடலாம்.
18.
கோப்பு மேலாண்மை என்பது தரவுகளை சேமிக்கும் தொழில் நுட்பங்களைக் கையாளும் ஒரு முக்கிய செயல்பாடாகும்.
இயக்க அமைப்பு ஒரு கணினியில் கோப்புகள். கோப்புறைகள் மற்றும் அடைவு அமைப்புகள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
ஒரு கணிப்பொறியில் எந்த வகைத் தரவுகளும் கோப்பு ஒதுக்கீடு அட்டவணை (FAT -File Allocation Table) மூலம் கோப்பு மற்றும் அடைவுகள் / கோப்புறைகள் வடிவத்தில் சேமிக்கப்படும்.
கோப்புப்பெயர், வகை (உரை அல்லது பைனரி), அளவு. ஆரம்ப முகவரி மற்றும் அணுகல் பயன்முறை (தொடர்/ குறியிடப்பட்ட / குறியிடப்பட்ட - தொடர்ச்சியாக/ நேரடியாக/ தொடர்புடையதாக). போன்றக் கோப்பின் பொதுத் தகவல்கள் FAT ல் கொடுக்கப்படும்.
இயங்குதளத்தின் கோப்பு மேலாளர் கோப்புகளை உருவாக்க, திருத்த, நகலெடுக்க, கோப்புகளுக்கு நினைவகத்தை ஒதுக்க உதவுகிறது. மேலும் கோப்பு ஒதுக்கீடு அட்டவணையை மேம்படுத்தப்படுகிறது.
இயக்க அமைப்பு கோப்புகளைப் படிக்க அல்லது நிறுத்துவதற்கான சரியான அணுகல் உரிமைகளுடன் திறக்கப்படும் கோப்புகளை கவனித்துக் கொள்கிறது.
அடுத்த தலைமுறை கோப்பு முறைமை NTFS (லினக்ஸ்) போன்ற சில கோப்பு மேலாண்மை நுட்பங்களும் உள்ளன.
19.
பயனர் இடைமுகமானது நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் இருக்க பயனர் விரும்புவர்.
இடைமுகம் பயனரின் தேவைகளை திருப்தி செய்ய வேண்டும்.
தட்டச்சு செய்யும் நேரத்தை குறைக்க, வரைகலை கூறுகளான பாட்டிகள், சன்னல் திரைகள். தத்தல், பணிக்குறி போன்றவற்றின் மூலம் பயனரின் விலைமதிப்பற்ற நேரத்தை குறைப்பது இயக்க அமைப்பின் கூடுதல் பயனாகும்.
எந்தவொரு தயாரிப்பின் இறுதி நோக்கமும், வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும். என்பதாகும், அதே போல், பயனர் இடைமுகமும் வாடிக்கையாளரை திருப்பதிப்படுத்த வேண்டும்.
பயனர் செய்யும் தவறுகளை இடைமுகம் குறைக்க வேண்டும், அதே போல் பயனர் குறைந்த பயிற்சியிலும், தவறுகள் குறையும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
20.
நன்மைகள்:
இலவசமாக பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மாற்றிடக் கூடியதாகும்.
உருவாக்கிய மூல நிறுவனத்தையோ அல்லது உருவாக்கிய அறிஞரையோ சார்ந்திருப்பதில்லை. நிறுவனம் இயங்கவில்லை என்றாலும் இயக்க அமைப்பின் குறிமுறை தொடர்ந்து இருக்கும் மற்றும் அதன் பயனர்களால் மேலும் புதுப்பிக்கப்படும்.
தீமைகள்:
வணிக தனி உரிம இயக்க அமைப்புகள் போல பயனர் எளிதாக பயன்படுத்த முடியாது.
திறந்த மூல இயக்க அமைப்பு மற்றும் தனி உரிம இயக்க அமைப்பு இரண்டிலும் இயங்கக் கூடிய பயன்பாட்டு மென் பொருள்கள் குறைவு.
எனவே திறந்த மூல இயக்க அமைப்புக்கு மாறினால், தனி உரிம இயங்கு தளத்தில் இயங்கும் மென்பொருள்களின் ஒத்தியங்கும் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல் வேண்டும்.
திறந்த மூல இயக்க அமைப்புகளின் உருவாக்கம் இணையாக சென்று கொண்டிருக்கும். இது எந்த பதிப்பில் எந்த வகையான செயல்பாடு உள்ளதெனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
திறந்த மூல இயக்க அமைப்புகள் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பிதில்லை.
தற்போது கிடைக்க கூடிய வன்பொருள்கள் திறந்த மூல இயங்கு தளங்களில் ஒத்துப் போவதில்லை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards