11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
சொற்செயலி (Basics)
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?
Ctrl + E
Ctrl + U
Ctrl + Z
Ctrl + n
2.
இவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்?
உரை வடிவூட்டம்
பக்க வடிவூட்டம்
சிறப்பு வடிவூட்டம்
பத்த வடிவூட்டம்
3.
இவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்?
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
வடிவூட்டல் பட்டை
4.
ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?
ஸ்டார் டெக்க்ஸ்டாம்
ஸ்டார் சென்டர்
ஸ்டார் திரை
ஸ்டார் விண்டோ
5.
ரைட்டர் ஆவணத்தில் வடிவங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
6.
புல்லட் குறி மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?
7.
DDE என்றால் என்ன?
8.
தமிழில் தட்டச்சு செய்யப் பயன்படு தமிழ் இடை முகத்தின் நன்மைகள் யாவை?
9.
ஏற்கனவே உள்ள ஆவணத்தை எவ்வாறு திறப்பாய்?
10.
ரூலர் - குறிப்பு வரைக .
11.
ரைட்டர் சன்னல் திரையின் பாகங்கள் யாவை?
12.
சொற்செயலி என்றால் என்ன?
13.
தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
14.
ரைட்டரில் தானியங்கு உரை (Auto Text) என்றால் என்ன?
15.
உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
16.
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
17.
அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?
18.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
19.
ஆவணம் முழுமையும் அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியில் எழுத்துப் பிழையை எவ்வாறுகண்டறியலாம்? விவரி?
20.
ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.
21.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
1.
(c)
Ctrl + Z
2.
(a)
உரை வடிவூட்டம்
3.
(c)
தலைப்புப் பட்டை
4.
(b)
ஸ்டார் சென்டர்
5.
1. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள வரையும் கருவிப்பட்டையின் (Drawing toolbar ) மூலம் பல்வேறு வடிவங்களை உருவாக்க முடியும்,
2. View \(\rightarrow \) Toolbars \(\rightarrow \) Drawing என்ற கட்டளையைக் கிளிக் செய்தால் வரையும் கருவிப்பட்டை (Drawing Toolbar ) தோன்றும்.
6.
1. புல்லட் மற்றும் எண்வரிசை நீக்க வேண்டிய உரையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Bullets பணிக்குறியை
கிளிக் செய்தால் புல்லட் நீங்கும்.
3. Numbering பணிக்குறியை
கிளிக் செய்தால் எண் வரிசை நீங்கும்
7.
1) DDE (Dynamic Data Exchange ) செயல் நுட்பம் கொண்டு மூலத் இணைப்பு '' live '' நகலாக ஓட்டப்படுகிறது.
2. அதாவது மூல உரையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் உடனடியாக அந்த மாற்றம் இலக்கஉரையில் பிரதிபலிக்கும்.
8.
1.தமிழில் தட்டச்சு இடைமுகம் முறையில் unicode தொழில் நுட்பம் பின்பற்றுவதால் , தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2. எந்த ஒரு செயலியிலும் எளிதாக ஆவணத்தை தமிழில் தட்டச்சு செய்யலாம்.
3. '' Arial unicode '' போன்ற unicode எழுத்துகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமில்லாத மற்ற இந்திய மொழிகளிலும் அந்தமொழியின் இடைமுகமாக ஆதரவளிக்கும்.
9.
1. சேமிக்கப்பட்ட ஒரு ஆவணத்தை மீண்டும் திறப்பதற்கு File \(\rightarrow \) Open அல்லது Ctrl + O கட்டளையைப் பய்னபடுத்த வேண்டும்.
2. ஓபன் உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயரை File name உரைப்பெட்டியில் தட்டச்சு செய்து Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
10.
பக்க ஒரங்களைக் காட்டும் அடிக்கோளாக ரூலர் வடிவூட்டல் கருவிப்பட்டையின் கீழ் உள்ளது. இரண்டு வகையான ரூலர்கள் உள்ளன.
1. கிடைமட்ட ரூலர் (Horizontal ): பக்க இடது மற்றும் வலது ஓரங்களை மாற்றியமைக்கப் பயன்படுகிறது.
2. செங்குத்து ரூலர் (Vertical ) : பக்க மேல் மற்றும் கீழ் ஓரங்களை மாற்றியமைக்கப் பயன்படுகிறது.
11.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரை தலைப்பு பட்டை பட்டி பட்டை செந்தரக் கருவிப்பட்டை வடிவூட்டல் கருவிப்பட்டை ரூலர், பணியிடம் மற்றும் நிலைமைப்பட்டை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
12.
ஒரு உரை ஆவணத்தை உருவாக்குதல், மதிப்பித்தல், கையாளுதல், பரிமாற்றம் செய்தல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுத்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்யவும் கணிப்பொறி மென்பொருள் '' சொற்செயலி '' ஆகும்.
13.
| தனியுரிமம் பெற்ற மென்பொருள் | திறந்த மூல மென்பொருள் |
|---|---|
| 1. பயனர் மென் பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு பணம் செலுத்திய பயன்படுத்த வேண்டும். | இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும். |
| 2.பயனர் மென் பொருளை மாற்றியமைக்க முடியாது. | பயனர் மென் பொருளை மாற்றியமைக்க முடியும். |
14.
Auto Text என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில உரைக்கு குறுக்கு வழிகளை ஒதுக்க உதவுகிறது.உதாரணமாக "Tamil nadu" என்ற வார்த்தையை ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்வதற்கு பதிலாக, "tn" மற்றும் F3 அழுத்தினால் "Tamilnadu" என்ற திரையில் தோன்றும்.
15.
படத்தை சேர்ப்பதற்கான வழிமுறைகள் :
1. எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert \(\rightarrow \) Picture \(\rightarrow \) From File \(\rightarrow \) என்ற கட்டளையத் தேர்வு செய்யவும்.
3. Insert picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன் (picture gallery) தோன்றும் அதில் தேவையான படத்தை தேர்வு செய்து open பொத்தாணைக் கிளிக் செய்யவும்
4. தேவையான படம் படத்தொகுப்பில் இல்லையெனில், கோப்புறையில் (Folder) உள்ள தேவையான படத்தை தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
5. தேர்வு செய்யப்பட்ட படம் ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.
16.
வழிமுறை 1 :
தேவையான உரையைத் தேர்வு செய்து வலது பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் மேல் மீட்பு பட்டிப்பட்டையில் உள்ள Line spacing என்றத் தேர்வை கிளிக் செய்யவும் இப்போது தோன்றும் single 1.5 அல்லது double போன்ற ஏதேனும் வரி இடைவெளியைத் தேர்வு செய்யலாம்.
வழிமுறை 2 :
1. Edit \(\rightarrow \) Select All கட்டளையைப் பயன்படுத்தி முழு ஆவணத்தையும் தேர்வு செய்யவும்.
2. Format \(\rightarrow \) paragraph கட்டளையைப் கிளிக் செய்யவும்.
3. paragraph உரையாடல் பெட்டி தோன்றும் இதில் indents & spacing தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Line Spacing வகை யிழு பட்டியல் தேவையான வரி இடைவெளியைத் தேர்வு செய்து ok பொத்தானைக் கிளிக் செய்யவும்.
17.
1. வரிசை மற்றும் நெடுவரிசைகளை உருவாக்க அட்டவனையில் தேவையான இடத்தில வலது கிளிக் செய்யவும்.
2. வரிசையை உருவாக்க Row \(\rightarrow \) insert கிளிக் செய்யவும்அல்லது நெடு வரிசையை உருவாக்க Column \(\rightarrow \) insert ஐக் கிளிக் செய்யவும். ஒரு உரையாடல் பேட்டி தோன்றும். இதில் பயனருக்குத் தேவையான வரிசை அல்லது நெடுவரிசைகளின் எண்ணிக்கைகள் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்கப்படும் வரிசை அல்லது நெடுவரிசைகளை நடப்பு சிற்றரைக்கு முன் அல்லது பின் புதிய வரிசைகளாக அல்லது நெடுவரிசைகளாக சேர்க்க முடியம்.
3. OK பொத்தானைக் கிளிக் செய்தால் உரையாடல் பெட்டி மூடப்படும்.
18.
| நகர்த்தல் | நகலெடுத்தல் |
|---|---|
| 1. நகர்த்த வேண்டிய உரையை தேர்வு செய்ய வேண்டும். | நகலெடுக்க, தேவையான உரையை தேர்வு செய்ய வேண்டும். |
| 2. Ctrl +X அல்லது Cut பணிக்குறி அல்லது Edit → Cut கிளிக் செய்ய வேண்டும். | Ctrl + C அல்லது Copy பணிக்குறி அல்லது Edit → Copy கிளிக் செய்யவும். |
| 3. மூல இடத்திலிருந்து உரை நீக்கப்பட்டு பிடிப்பலகையில் (Clip Board) சேர்க்கப்படும். | நகலெடுக்கப்பட்ட உரை பிடிப்பலகையில் சேர்க்கப்படும். |
| 4. உரை எந்த புதிய இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டுமோ அங்கு செருகும் புள்ளியை கொண்டு செல்லவும். | நகலெடுக்கப்பட்ட உரை எங்கு நகலெடுக்க வேண்டுமோ அங்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும். |
| 5. Ctrl + V அல்லது Paste பணிக்குறி அல்லது Edit → Paste கிளிக் செய்யவும். | Ctrl + V அல்லது Paste பணிக்குறி அல்லது Edit → Paste கிளிக் செய்யவும். |
| 6. தேர்வு செய்யப்பட்ட உரை இப்பொழுது வேண்டிய இடத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கும். | தேர்வு செய்யப்பட்ட உரை இப்பொழுது வேண்டிய இடத்தில் நகலெடுக்கப்பட்டிருக்கும். |
19.
(i) Spelling and Grammer என்ற பொத்தானைக் கிளிக் செய்தால் ஆவணத்தின் முழுமையும் அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியில் பிழையைக் கண்டறியலாம் . என்ற பணிக்குறியைக் கிளிக் செய்து எழுத்து பிழையைச் சரிபார்க்க இயலும்.
(ii) Spelling கருவியில் உள்ள மேலும் சில சிற்பபம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(iii) நெனிகோடிடப்பட்ட வார்த்தையின் மீது சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்தால் பிழையான சொல்லிற்கு பதிலான பல்வேறு விதமான சரியான சொற்களுடன் கூடிய மேல் மீட்புப்பட்டி தோன்றும்.
(iv) அதில் சரியான சொல்லைத் தேர்வு செய்தால் பிழையான சொல்லுக்கு பதிலாக சரியான சொல் தோன்றும்.
(v) அகராதியின் மொழியை மாற்ற முடியும்.உதாரணமாக ஸ்பேனிஸ், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் அகராதியின் மொழிகளை மாற்றலாம்.
(vi) அகராதியில் ஒரு புதிய சொல்லைச் சேர்க்க Add பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
(vii) Options உரையாடல் பி[பெட்டியில் ஆங்கில பெரிய எழுத்துக்களில் உள்ள வார்த்தைகள் அல்லது எண்களுடன் கூடிய வார்த்தைகள் தேர்வு செய்வதற்கான விருப்பங்கள் உள்ளது.
(viii) மேலும் வார்த்தைகளைச் சேர்க்கவோ (அல்லது ) நீக்கவோ ,முடியும். Custom Directories மூலமாகவும் அகராதிகளை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.
20.
சொற்செயலியின் ஒரு முக்கிய பணி பக்க வடிவூட்டலாகும். பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம், பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும். வடிவூட்டல் செய்யப்பட்ட பக்கங்கள் படிப்பதற்கு எளிமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் அமையும்.
பக்க அளவை மாற்ற : ரைட்டரில் ஒரு பக்க அளவு A4 அச்சிடும் தாளின் அளவான 8.5x11” கொடாநிலையாக இருக்கும். பலவகையான ஆவணத்தின் அளவிற்கேற்ப பக்க அளவை பயனர் மாற்றிக் கொள்ளலாம். பக்க அளவை மாற்ற:
1. பக்க அளவை மாற்றுவதற்கான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2. Select Format → Page, என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page Style உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது width மற்றும் Height என்ற விருப்பத்தை பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
பக்கத்தின் ஓரங்களை மாற்ற :
பக்க ஓரம் என்பது, ஒரு பக்கத்தின் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களில் உள்ள வெற்றிடத்தை குறிக்கும். ஒரு பக்கத்தின் உரையில் மேல் ஓரம், தொடங்குமிடம், தட்டச்சு செய்யும் போது கீழ் ஓரம் முடிந்தால் அடுத்த பக்கத்திற்கு செல்ல, இடது ஓரத்திலிருந்து துவங்கி வலது ஓரம் வந்தவுடன், அடுத்த வரிக்கு செல்ல இவையனைத்தும் ரைட்டரின் ஓரங்கள் தீர்மானிக்கும்.
பக்கத்தின் ஓரங்களை மாற்ற அல்லது அமைக்க ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் இரு வழிகள் உள்ளன:
1. ஓரத்தின் அளவுகள் சரியாகத் தெரியாத பொழுது ரூலர்கள் கொண்டு விரைவாகவும் மற்றும் எளிதாகவும் மாற்றலாம்.
2. ஓரத்தின் அளவுகள் சரியாகத் தெரிந்தால் Page style உரையாடல் பெட்டி கொண்டு ஓரங்களை மாற்றலாம்.
21.
1. தலைப்பு என்பது ஒரு பக்கத்தின் மேல் பகுதியைக் குறிக்கும், தலைப்பு பகுதியில், தலைப்பு மற்றும் நூலாசிரியர் பெயர் பேன்றவற்றை சேர்க்கலாம்.
2. அடிக்குறிப்பு என்பது பக்கத்தின் கீழ்பகுதியைக் குறிக்கும், அடிக்குறிப்பில் பக்க எண்கள், தேதி, நேரம் போன்றவற்றை சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்கப்பட்ட, தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் எல்லா பக்கங்களிலும் தோன்றும்.
3. File பட்டிப்பட்டையில் உள்ள Page Preview விருப்பத்தை தேர்வு செய்து தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளை காணலாம்.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளை சேர்க்க
தலைப்பு உருவாக்க
1. Insert \(\rightarrow \) Header \(\rightarrow \) Default என்ற கட்டளையை பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்யவும்.
2. தற்போது தலைப்பு பகுதியும், பணியிடத்தில் தட்டச்சு செய்த பகுதியும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருக்கும்.
3. தலைப்பு பகுதியில் நேரடியாகவே தலைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது எல்லா பக்கங்களிலும் தலைப்பை சேர்க்க தலைப்பு பகுதியில் கிளிக் செய்து Insert→Fields→Title என்ற கட்டளையை தேர்வு செய்து தலைப்பை தட்டச்சு செய்யலாம்.
அடிக்குறிப்புகளை உருவாக்க :
1. Insert \(\rightarrow \) Footer \(\rightarrow \) Default என்ற கட்டளையை பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்தால் அடிக்குறிப்பு உருவாகும்.
2. அடிக்குறிப்பில் செருகும் புள்ளியை வைத்து கிளிக் செய்யவும்.
3. Select Insert \(\rightarrow \) Fields\(\rightarrow \) Date என்ற கட்டளையை தேர்வு செய்தால் எல்லா பக்கங்களுக்கும் கணிப்பொறியின் தேதி புகுத்தப்படும். இவ்வாறு சேர்க்கப்பட்ட, தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் எல்லா பக்கங்களிலும் தோன்றும். File பட்டிப்பட்டையில் உள்ள Page Preview விருப்பத்தை தேர்வு செய்து தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளை காணலாம்.
அடிக்குறிப்பில் பக்க எண்களை புகுத்தி அவற்றை வடிவூட்டம் செய்ய
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு உருவாக்கிய பின் அவற்றில் பக்க எண்களை புகுத்த பின்வரும் வழி முறைகளை பின்பற்றலாம்:
1. செருகும் புள்ளியை அடிக்குறிப்பில் கொண்டு சென்று கிளிக் செய்யவும்.
2. Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \) Page Number என்ற கட்டளையை பயன்படுத்தினால் எல்லா பக்கங்களிலும் பக்க எண்கள் சேர்க்கப்படும்.
அடிக்குறிப்பில் உள்ள பக்க எண்களை வடிவூட்டம் செய்ய
1. Format \(\rightarrow \) page,என்ற கட்டளையை தேர்வு செய்தால் page style உரையாடல் பெட்டி தோன்றும்.
2. இதில் Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. Layout Settings-யில் தோன்றும் Format கீழிறங்கு பட்டிப்பெட்டியில் (drop down combo box)உள்ள விருப்பமான வடிவூட்டல் வகையை தேர்வு செய்து.
4. OK பொத்தானை கிளிக் செய்தால் அடிக்குறிப்பில் பக்க எண்கள் வடிவூட்டம் செய்யப்பட்டிருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards