11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.
ROM
RAM
Flash drive
Hard disk
2.
எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
3.
POST – ன் விரிவாக்கம்.
Post on self Test
Power on Software Test
Power on Self Test
Power on Self Text
4.
கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
5.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்தச் சுற்றுகள்
நுண்செயலிகள்
6.
வரைவி என்றால் என்ன?
7.
வருடி (Scanner) - குறிப்பு வரைக.
8.
சுட்டி என்றால் என்ன?
9.
தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?
10.
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
11.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
12.
உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.
13.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
14.
மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?
15.
கணிப்பொறி என்றால் என்ன?
16.
கைரேகை வருடி குறிப்பு வரைக.
17.
திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளைப் பற்றி எழுதுக.
18.
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
19.
ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?
20.
கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
21.
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்
22.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
1.
(b)
RAM
2.
(c)
மூன்றாம்
3.
(c)
Power on Self Test
4.
(b)
வரைவி
5.
(a)
வெற்றிடக்குழுல்
6.
1. வரைவி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் ஆகும்.
2. தாள்களில் வரைகலை வெளியீட்டை அச்சிடப் பயன்படுகிறது.
3. படங்களை வரைய ஓற்றை நிறம் அல்லது பல வண்ணம் கொண்ட பேனாக்களைப் பயன்படுத்துகிறது.
7.
1. வருடி: கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. இந்தக் கருவி ஒரு "உலர் மின்நகல் இயந்திரம்" (Xerox machine) போல் செயல்படுகிறது.
3. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறைத் தகவலாக மாற்றியமைக்கிறது.
8.
1. சுட்டி என்பது திரையில் இடசுட்டியின் (Cursor) இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சுட்டுச் சாதனமாகும்.
2. கணிப்பொறியில் உள்ள பணிக் குறிகள் (icons), பட்டிகள்(menus), கட்டளை பொத்தான்கள் (command buttons) போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துவதற்கு பயன்படுகிறது.
9.
தரவுகளை, தகவல்களாக மாற்றம் செய்யும் செயல்முறை "தரவுச் செயலாக்கம்" என்று அழைக்கப்படுகிறது.

10.
1. சிறியது மற்றும் வேகமானது.
2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டன.
3. கையடக்கக் கணிப்பொறிகள் அறிமுகமாயின.
11.
| முதன்மை நினைவகம் | இரண்டாம் நிலை நினைவகம் |
|---|---|
| 1. அழியும் நினைவகமாகும் | அழியா நினைவகமாகும் |
| 2. மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும். | மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அதில் சேமி்க்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழியாமல் இருக்கும். |
| எ.கா: RAM | எ.கா: வன்வட்டு, குறுவட்டு (CD-ROM) |
12.
| உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
|---|---|
| உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது. உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டி போன்றவை. | பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை |
13.
1. மையச்செயலகம், நினைவகம் \மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
2. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
14.
மையச்செயலகத்தின் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
1. கட்டுப்பாட்டகம் (CU-Control Unit).
2. கணித ஏரணச் செயலகம் (AlU - Arithmetic and Logic Unit)
3. நினைவகம் (MU - Memory Unit) ஆகும்.
15.
கணிப்பொறி என்பது கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று, அதிவேகமாகச் செயல்பட்டு, விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
16.
1. கைரேகை வருடி என்பது கைரேகையை உணர்ந்து கணிப்பொறிக்குப் பாதுகாப்பு வழங்கிடும் ஒரு கருவி.
2. அதன் செயல்திறன் கைரேகை உயரளவையியல் (biometric) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் தன்மை கொண்டது.
3. நினைவில் வைத்துக்கொள்ள முடியாத, கடினமான மற்றும் மோசடிக்கு வழிவகுக்கக் கூடிய கடவுச்சொல்லுக்கு பதிலாக மிகவும் பாதுகாப்பானது மற்றும் வசதியானது கைரேகை படிப்பான் (Fingerprint Reader)/ வருடி (Scanner) ஆகும்.
17.
1. தகவலைத் திரையில் காட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளியீட்டு சாதனம் திரையகம் ஆகும்.இது தொலைக்காட்சி பெட்டியைப் போன்றது.
2. திரையகத்தில் படங்கள் பிக்செல்ஸ் எனப்படும் படக்கூறுகளால் உருவாக்கப்படுகின்றன.
3. ஒரே வண்ணமுடைய திரையகம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்டுகிறது. வண்ணத் திரையகம் பல நிறங்களில்காட்டுகிறது.
4. சிஆர்டி (கத்தோட் ரே டியூப்) - CRT (Cathode Ray tube), எல்சிடி (லிக்விட் கிரிஸ்டல் டிஸ்பிளே)- LCD (Liquid Crystal Display) மற்றும் எல்ஈடி (லைட் ஏமிட்டிங் டையோட்கள் - LED) (Light Emitting Diodes) போன்ற பல்வேறு வகையான திரையகங்கள் கிடைக்கின்றன.
5.திரையகம் தகவலை விஜிஏ (ஒளிஉரு வரைபட வரிசை)- VGA(Video Graphics Array) மூலம் திரையில் காட்டுகிறது.
6. விசைப்பலகை திரையகத்துடன் தொடர்பு கொள்ள ஒளிஉரு வரைபட அட்டை (Video Graphics Card) உதவுகிறது.
7. இது கணிப்பொறி மற்றும் திரையகத்தின் இடையே இடைமுகமாக செயல்படுகிறது. அண்மையில் உள்ள மதர்போர்ட்களில் உள்ளிணைந்த வரைபட அட்டை வழக்கமாக உள்ளது.
18.
1. இந்த வகையில் ஒரு சிறு கம்பி, மை நாடா மீது தட்டி ஒரு புள்ளியை ஏற்படுத்தும் அல்லது ஒரு முழு எழுத்தை தட்டி அந்த எழுத்தை ஏற்படுத்தும்.
2. இந்த அச்சுப்பொறிகள் இயந்திர அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படிகள் எடுக்க வகை செய்கிறது.
எ.கா: வரி அச்சுப்பொறி மற்றும் வரிபுள்ளி அச்சுப்பொறி.
3. புள்ளி அச்சுப்பொறி ஒரு குறிப்பட்ட எண்ணிக்கையிலான செருகி அல்லது கம்பிகளைப் பயன்படுத்தி அச்சிடுகிறது.
4. ஒவ்வொரு புள்ளியும் ஒரு சிறிய உலோகக் கம்பி மூலம் உருவாக்கப்படுகிறது.
5. இதில் பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு வரி உரையே மட்டுமே அச்சிட முடியும்.
6. விரிபுள்ளி அச்சுப்பொறிகள் நிலையான அச்சுத் தலையை அச்சிடப் பயன்படுத்துகிறது.|
7. இந்த அச்சுப்பொறிகளின், அச்சிடும் வேகம் 30 முதல் 1550 சிபிஎஸ் (CPS - Character Per Second) வரை வேறுபடுகிறது.
8. அடிப்படையில், இது ஒரு பக்க அளவிலான புள்ளிகளை அச்சிடுகிறது.
9. வரி அச்சுப்பொறிகள் வினாடிக்கு 1000 க்கு மேற்பட்ட வரிகளை அச்சிடும் திறன் கொண்டது.
19.
1. திரையகம் (Monitor): தகவலைத் திரையில் காட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளியீட்டுச் சாதனம்.
2. வரைவி: தாள்களில் தகவல்கள் மற்றும் வரைகலை வெளியீட்டை அச்சிடப் பயன்படுகிறது.
3. அச்சுப்பொறி: தாள்களில் தகவல்களை அச்சிடப் பயன்படுகிறது.
4. பல்லூடகப் படவீழ்த்தி: கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகிறது.
5. ஒலிப்பெருக்கி: பேச்சு இணைப்பாக்கம் மென்பொருளை இதனுடன் பயன்படுத்திக் கணிப்பொறி குரல் வெளியீட்டை வழங்க முடியும்.
20.
கணிப்பொறியின் தன்மைகள்
1. வேகம் (Speed)
2. துல்லியம் (Accuracy)
3. தளரா ஊக்கம் (Diligence)
4. பல்வகைச் செயலாக்கத்திறன்
5. சேமிப்புத்திறன் (Storage)
1. வேகம் : அதிவேக கணக்கீட்டுத்திறன் கொண்டது.
2. துல்லியம்: வேலையைத் துல்லியமாக செய்து முடிக்கும் திறன் கொண்டது.
3. தளரா ஊக்கம்: மனிதர்களைப் போல் ஒரே வேலையைச் செய்யும் போது தளர்வடைவதில்லை.
4. பல்வகைச் செயலாக்கத்திறன்: பல்வேறு வகையிலான பணிகளைச் செய்யும் திறன் பெற்றவை.
எ.கா: இரயில் முன்பதிவு, வங்கிச் சேவை, வானிலை முன்னறிவிப்பு போன்றவை.
சேமிப்புத்திறன்: மிக அதிக அளவிலானத் தரவுகளைச் சேமிக்கும் திறன் பெற்றவை.
21.
அ) மைபீச்சு அச்சுப்பொறி:
மைப்பீச்சு அச்சுப்பொறிகள் கருஞ்சிவப்பு (Magenta), மஞ்சள்(Yellow) மற்றும் சியான்(Cyan) உள்ளடக்கிய மைகுப்பியைப் பயன்படுத்தி வண்ண சாயலை (color tones) உருவாக்குகிறது. ஒரு நிற வண்ணத்தில் (monochrome) அச்சிடுவதற்கு கருப்பு (black) மைகுப்பியைப் பயன்படுத்துகிறது . மைப்பீச்சு அச்சுப்பொறிகள் ஒரு காகிதத் தாளில் மின்னூட்டம் பெற்ற மையைத் தெளிப்பதன் மூலம் செயல்படுகிறது. இதன் அச்சிடும் வேகம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 1 முதல் 20 பக்கங்களை அச்சிடும் (PPM – Pages Per Minute). மைப்பீச்சு அச்சுப்பொறிகள், வெப்பம் மூலம் மின்கலன் சூடாக்குவதால் மை காகிதத்தில் குமிழிகளாக (bubbles) தெளிக்கப்படும் தொழில்நுட்பத்தை அல்லது தகைவுமின்சாரத்தை (piezoelectricity)பயன்படுத்தி மின்சுற்றுகள் மூலம் கட்டுப்படுத்தபடும் சிறிய மின்னோட்டங்கள் ஜெட் வேகத்தில், அச்சுப்பொறியின் உள்ளே மையைப் பரப்புகின்றன.
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி:
1. பல்லூடகப் படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகின்றது.
2. வகுப்பறைகளில் அல்லது கூட்ட அரங்குகளில் விளக்கக் காட்சிகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்:
1. பட்டைக் குறியீடு என்பது வெவ்வேறு தடிமன் வரிசையில் அச்சிடப்படும் ஒரு வடிவம் ஆகும்.
2. பட்டை குறியீட்டு படிப்பான், பட்டைக் குறியீட்டைப் படித்து அவற்றை மின் துடிப்புகளாக மாற்றி கணிப்பொறி செயலகத்திற்கு அனுப்பும் ஒரு கருவியாகும்.
3. கணிப்பொறியில் தகவலை விரைவாகவும் பிழையின்றிப் பதிவு செய்யவும் பயன்படுகிறது.
4. கியூ.ஆர் (QR - Quick Response) குறியீடாகும். இது ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது.
22.
| கணிப்பொறியின் தலைமுறை | காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் | நிறை/குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை | 1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes) | 1. அளவில் பெரியது 2. அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 3. அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும். 4. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது. eg: ENIAC, EDVAC, UNIVACI |
| இரண்டாம் தலைமுறை | 1955-64 | திரிதடையகம் (Transistors) | 1. முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 2. குறைந்த வெப்பத்தை உருவாக்கியது. 3. துளையிட்ட அட்டை உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. 4. முதல் இயக்க அமைப்பான தொகுப்பு செயலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. 5. இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது eg: IBM 1620, UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை | 1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC) | 1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது. 2. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 3. உயர் நிலை மொழி பயன்படுத்தபட்டது. |
| நான்காம் தலைமுறை | 1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1.சிறியது மற்றும் வேகமானது 2. IBM மற்றும் APPLE போன்ற நுண்கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது. 4. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின. |
| ஐந்தாம் தலைமுறை | 1980-இன்று வரை |
மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3. கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது. 4. நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் 5. செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல். |
| ஆறாவது தலைமுறை | எதிர் காலத்தில் | செயற்கை அறிவு |
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards