11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
_______ வலையமைப்பினால் குறைகின்றது.
செலவு
நேரம்
உழைப்பு
இவை அனைத்தும்
2.
____________ என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாதனங்களின் தொகுப்பாகும்.
வலையமைப்பு
WiFi
இணையம்
மோடம்
3.
யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?
Data Card
Pen Drive
Dongles
Memory Card
4.
பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?
LAN
PAN
WLAN
CAN
5.
வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.
10 கி.மீ
5 கி.மீ
25 கி.மீ
20 கி.மீ
6.
WLAN - என்பதன் விரிவாக்கம் _____.
Wireless Local Area Network
Wired local Area Network
Wireless Local Area Netware
Wireless Area Netbande
7.
ஃபிஷிங் (Phishing) என்றால் என்ன?
8.
மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?
9.
வலைத்தளம் என்றால் என்ன
10.
URL - முகவரியில் உள்ள கூறுகள் யாவை?
11.
தேடு பொறி என்றால் என்ன?
12.
வலையமைப்பு என்றால் என்ன?
13.
ஏதேனும் நான்கு வலைகளின் பெயர்களை பட்டியலிடு
14.
மின்னஞ்சலின் நன்மைகள் யாவை?
15.
வலைத்தளம், வலைப்பக்கம் வேறுபடுத்துக
16.
டேட்டாகார்டு (Data card) மற்றும் டாங்கில்ஸ் (Dongles) வேறுபடுத்துக
17.
TCP/IP என்றால் என்ன?
18.
தனிநபர் வலையமைப்பு (PAN) மற்றும் வளாக பகுதி வலையமைப்பு (CAN) வேறுபடுத்துக.
19.
மின் அரசாண்மையில் உள்ள பல்வேறு வகையான ஊடாடுதல் பற்றி விவரி
20.
ஏதேனும் 5 இணைய பயன்பாடுகள் பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விவரி?
1.
(b)
நேரம்
2.
(a)
வலையமைப்பு
3.
(c)
Dongles
4.
(c)
WLAN
5.
(b)
5 கி.மீ
6.
(a)
Wireless Local Area Network
7.
ஃபிஷிங் (Phishing): தனியார் பற்றிய தகவல்களை பெற சைபர் குற்றவாளிகளின் மோசடி முயற்சிகள் ஆகும். இவை மின்னஞ்சல் போன்ற வடிவமைக்கப்பட்டிருக்கும், மேலும், சட்டப்பூர்வமான இடத்திலிருந்து வந்தது போல் முகப்பில் தோற்றமளிக்கும்.
எ.கா: ஃபிஷிங் செய்திகள் உங்கள் வங்கி அல்லது மின்னஞ்சல் சேவை வாங்குபவரின் வலைத்தளத்தைப் புதுப்பிக்கவும், உங்கள் கணக்கர் தகவலை துல்லியப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு மின்னஞ்சலில் உள்ள இணைப்பை Click செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்குமாறு உங்களை கவரக்கூடிய செய்தியாகும்.
8.
பொதுத் தேர்வு முடிவுகள், நுழைவுத் தேர்வு முடிவுகள் போன்றவற்றை வெளியிடும் வலைதளமானது பயனர் உள்ளிடும் பதிவெண்ணிற்கு ஏற்ப வலைப்பக்கம் மாறும். இதுபோன்ற வலைதளங்கள் மாறக்கூடியவை எனப்படும்.
எ.கா:
அரசினுடைய வலைதளம், நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் வலைதளம்.
9.
1. வலைதளம் என்பது வலைப்பக்கங்களின் தொகுப்பாகும். ஒரு நிறுவனமானது sricompany.com என்ற பெயரில் இணையதளம் வைத்திருப்பதாகக் கொள்வோம்.
2. இவ்விணையத்தளமானது, முதல் பக்கம் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் (About us), இல்லம் (Home) தொடர்பு கொள்ள (Contact us), சான்றுகள் (Testimonials), பொருளகள் (products), சேவைகள் (Services), FAQ's மற்றும் பல வலைப்பக்கங்களைக் கொண்டிருக்கும்.
3. வலைதளத்தின் முதல் பக்கமானது இல்லப்பக்கம் (Home page) எனப்படும். இவ்வாறான பக்கங்கள் இணைந்தது வலைதளம் எனப்படும்.
10.
இணைய முகவரியானது சொற்களை அடிப்படையாகக் கொண்டு தரப்படுகின்றது. இது URL என அழைக்கப்படுகின்றது. எனவே URL இணையதள முகவரி என்பதும் IP (இணைய நெறிமுறை) என்பதும் ஒன்றே ஆகும்.

URL என்ற முகவரி உலகளாவிய வலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேடி காண்பிக்கிறது. URL என்பது Uniform Resource Locator என்பதன் குறுக்கமாகும்.
11.
தேடுபொறிகள் என்பது தேவையான தகவலை உலகிலாவிய வலையில் இருந்து (WWW) தேடி தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளாகும்.
எ.கா : பரவலாக பயன்படும் தேடுபொறிகள்:
Yahoo, Lycos, Altavista, Hotbot, Google மற்றும் Askjeeves.
12.
வலையமைப்பு என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாதனங்கள் தொகுப்பாகும்.
எ.கா: கணிப்பொறி, அச்சுப்பொறி etc., போன்றவை.
13.
வலையமைப்பின் இடத்தைப் பொருத்து வலையமைப்பு பின்வரும் வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. குறும்பரப்பு வலையமைப்பு (LAN)
2. நகர்ப்புற வலையமைப்பு (MAN)
3. பரந்த வலையமைப்பு (WAN)
4. தனிப்பட்ட பகுதி வலையமைப்பு or தனிநபர் வலையமைப்பு (PAN)
5. வளாகப் பகுதி வலையமைப்பு (CAN)
6. கம்பியில்லாத குறும்பரப்பு வலையமைப்பு (W-LAN)
14.
மின்னஞ்சலின் முக்கியமான நன்மைகள்:
1. இலவச விநியோகம் (Free delivery):
மின்னஞ்சல் அனுப்புவது இணைய செலவை தவிர்த்து கிட்டத்தட்ட இலவசமாகவே உள்ளது. கடிதத்தை அனுப்புவதை போல அஞ்சல் வில்லைகள் வாங்க வேண்டிய தேவை இல்லை.
2. உலகளாவிய விநியோகம் (Global delivery):
மின்னஞ்சலானது உலகின் எந்தப் பகுதியில் உள்ள எந்த நாட்டிற்கும் அனுப்பப்படும்.
3. உடனடி விநியோகம் (Instant delivery):
மின்னஞ்சலானது இணையத்தின் மூலமாக உடனடியாக அனுப்பப்பட்டு பயனரால் பெறப்படும்.
4. கோப்புகளை இணைத்தல் (File attachment):
மின்னஞ்சலானது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இணைப்புகளை கொண்டிருக்கலாம். ஆவணங்கள், படங்கள் அல்லது மற்ற கோப்புகளை இணைத்து அனுப்ப வகை செய்கிறது.
5. நீண்ட கால சேமிப்பு (Long - term storage)
மின்னஞ்சலானது மின்னணு முறையில் சேமிக்கப்படுவதால் நீண்ட காலத்திற்கு தகவல்கள் தேக்கி வைக்கவும், பாதுகாக்கவும் அனுமதிக்கிறது.
6. சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் (Environmentally friendly):
மின்னஞ்சல் அனுப்புவதற்கு காகிதம் தேவையில்லை. அட்டைகளோ அல்லது பேக்கிங் டோப்புகளோ தேவையில்லை. காகித வளத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
15.
| வலைப்பக்கம் | வலைதளம் |
| 1. ஒரு ஆவணத்தைக் கொண்டு வலை உதவியால் வெளிக்காட்டப்படுவதாகும். |
பல வலை ஆவணங்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டு வலை உலவியால் வெளிக்காட்டப்படும். |
| 2. தனிப்பட்ட டொமைன் பெயருடன் பகிரப்படும். |
வலைத்தளமானது தனித்துவமான டொமைன் பெயரை கொண்டுள்ளது. |
| 3. வலைத்தளத்தை உருவாக்க உதவுகிறது. |
ஒன்று அல்லது பல வலைப்பக்கங்களை கொண்டிருக்கும். |
16.
டாங்கிள்ஸ் (Data Card) மற்றும் தரவு அட்டை (Dongle) இடையேயான வேறுபாடு:
| Dongle | Data Card |
| கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நீக்கக்கூடிய (removable) கூறுகளை குறிக்கிறது. |
இது தரவுகளை சேமித்து வைக்க பயன்படும். இது நீக்கக்கூடிய மின்னணு அட்டை ஆகும். |
| யு.எஸ்.பி. டாங்கிளின் வகைகள்: 1. WiFi டாங்கிள் 2. Bluetooth 3. Memory டாங்கிள் |
Data Card ன் வகைகள் : 1. Expansion card 2. Memory Card or Flash Card 3. Identification Card |
17.
1. உலகளாவிய வலை அமைப்பான இணையம். TCP/IP - Transmission Control Protocol / Internet ப்ரோடோகால் நெறிமுறையைப் பயன்படுத்தி பல்வேறு ஊக்கங்கள் வழியாக தரவு பரிமாற்றத்தை செய்கிறது. TCP/IP என்பது ஒரு வலையமைப்பிற்கான விதிமுறை அல்ல.
2. TCP/IP என்ற நெறிமுறைகளை / படிநிலைகளை உள்ளடக்கிய நெறிமுறைகளின் தொகுப்பாகும்.
3. எந்த வடிவ தகவல் பரிமாற்றமானாலும் இரண்டு நிலைகள் தேவை. அவை செய்தியை பரிமாற்றம் செய்தல் வேண்டும். மேலும் நம்பகத் தகுந்த முறையில் பரிமாற்றம் செய்தல் வேண்டும். (Internet Protocol) IP என்பது ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஒரு முகவரியை வழங்குகின்றது. இதன்மூலம் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் கணிப்பொறிகளுள் ஒன்றை அடையாளம் காண உதவுகின்றது.
18.
| தன்மைகள் | தனிப்பட்ட பகுதி வலையமைப்பு Personal Area Network (PAN) |
வளாகப் பகுதி வலையமைப்பு Campus Area Network (CAN) |
| வரம்பு | 100 Mts வரை | 5 Mts வரை |
| அமைவு | ஒரு கட்டிடத்திற்குள் தனிநபரால் நிர்வகிக்கக் கூடியது. மிகக் குறைந்த தூரத்தை உள்ளடக்கி இருக்கும் |
குறும்பரப்பு வலையமைப்பை விட பெரிதாகவும் இருக்கும் எ,கா: பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம், சிறிய தொழில் நிறுவனங்கள். |
| வேகம் | 250 kbps வரை | 40 KB/s முதல் 1 MB/s வரை |
| நன்மைகள் | திறன் மிக்கது, செலவு குறைவானது, வசதியானது. தனிநபரால் கட்டுப்படுத்தக் கூடியது. 8 சாதனங்கள் வரை இணைக்க இயலும் (Hotspot). |
விலை குறைவானது, கம்பி (or) கம்பியில்லா இணைப்பு, அதிக அலைக்கற்றையுடன் கூடிய பல துறை வலை அமைப்புகளை அமைக்கும் வசதி. |
| குறைபாடுகள் | மிகக் குறைந்த இடத்தை (10 mts வரை மட்டும்) உள்ளடக்குதல், தரவு செல்லும் வேகம் மற்ற வலையமைப்புடன் ஒப்பிடுகையில் குறைவு. |
நிர்வகிப்பது கடினம். |
19.
1. அரசாங்கம் - அரசாங்கம் (G2G): அரச துறைகளுக்கான சுற்றளவில் தகவல்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்ளும் முறை ஆகும்.
2. அரசாங்கம் - குடிமகன் (G2C): இம்முறையானது அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையேயான தொடர்பு ஆகும். அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைமுகம் ஆகும். பொது மக்கள் அரசாங்கத்தின் பல்வேறு வகைப்பட்ட சேவைகளையும், அணுகுவதற்கு வழிசெய்கின்றது. பொதுமக்கள் அரசினுடைய திட்டங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களையும் மனக்குறைகளையும் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் பகிர வகை செய்கின்றது.
3. அரசாங்கம் - வணிகர்கள் (G2B): இம்முறையில் வணிக வர்க்கத்தினர் அரசாங்கத்துடன் ஊடாடுவதற்கு உதவுகின்றது. இதன் மூலம் அரசாங்கத்துடன் ஊடாடுவதால் சிவப்பு - நீக்குகிற, செலவைக் குறைத்து வணிகச் சூழலில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க உதவுகிறது.
4. அரசாங்கம் - பணியாளர்கள் (G2E): எந்த நாட்டிலும் அரசாங்கம் என்பது மிகப்பெரிய முதலாளி ஆகும்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பமானது, அரசாங்கமும், பணியாளர்களும், விரைவாகவும், செயல்திறனுடனும் ஊடாடுவதற்கும், அதனோடு அவர்களின் திருப்தி நிலையை அதிகரிப்பதன் மூலம் மேலும் பலன்கள் கிடைக்க உதவுகின்றது.
மின் அரசாண்மையானது அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் அனைத்து பணிகளையும் ஆதரித்து மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. ஏனெனில் இது பணியினை ஒருபுறம் எளிதாக்குவதிலும், மறுபுறம் வேலையின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
20.
1. இணைய தொலைபேசி
2. வேலை தேடல்
3. இணையத்தில் பொருட்களை வாங்குதல்
4. பங்குச்சந்தை பற்றிய தகவல்களை பெறுதல்
5. பயணங்கள்
6. ஆராய்ச்சி
7. காணொளிக்காட்சி
8. மின்வணிகம்
9. இணையம் வழி பணம் செலுத்துதல்
10. சமூகவலையமைப்பு
11. குரல் வழி செய்தி
12. அரட்டை
13. மின் வங்கி
14. மின் கற்றல்
1. இணைய தொலைபேசி (INTERNET TELEPHONY) : இணையம் மூலம் வழங்கப்படும் சேவைகளுல் இணைய வழி தொலைபேசி என்பது மற்றுமொரு பொதுவான சேவையாகும். (எ.கா.) Skype) இணையத்தின் மூலமாக நடைபெறும் அனைத்து குரல் வழி பரிமாற்றங்களும் VOIP (VOICE-OVER-INTERNET PROTOCOL) என்ற நெறிமுறையின் அடிப்படையில் செயல்படுகிறது.
2. வேலை தேடல் (JOB SEARCH) : இன்றைய நாட்களில் இணையத்தின் மூலம் வேலை தேடுதல் அதிகரித்துள்ளது இணையத்தின் மூலம் வேலை தேடும் போது விரைவாகவும் மேலும் பல்வேறு துறைகளில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான காலிப்பணியிட விவரங்களையும் பெறமுடியும், வேலை தேடுபவர்கள் குறிப்பிட்ட வேலைக்காக தங்களை பற்றிய விவரங்களை (RESUME) இணையத்தில் பதிய இயலும் naukri.com, monster.com, summerjob. com, recruitment.com போன்ற நிறுவனங்களின் வலைதளங்கள் இச்சேவையை வழங்குகின்றன.
3. இணையத்தில் பொருள்களை வாங்குதல் (ONLINE SHOPPING) : இணையமானது மெய் நிகர் சந்தைகளால் (Online Shopping) கட்டமைக்கப்பட்டு உள்ளடக்கிய புதிய சந்தை முறை வசதியை அறிமுகப்படுத்துகின்றது. (www) சேவையங்கள் மூலம் பொருள்களை பற்றிய விபரங்களையோ அல்லது வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்களையோ வலைத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும். இணைய சேவை வாடிக்கையாளர் குறிப்பிட்ட பொருள்களை பற்றிய விவரங்கள் மற்றும் விலை விகரங்கள் போன்ற கோரிக்கைகளை கேட்டு பெறலாம். (எ.கா.) amazon.com உலகளாவிய வலையை அடிப்படையாக கொண்டு (இணையத்தை) இணையத்தில் செயல்படும் புத்தக கடை ஆகும். இதில் சர்வதேச நூல்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அதாவது புத்தகத்தை நாம் இணைய வழியில் பெற இயலும்.
4. பங்குச் சந்தை பற்றிய தகவல்களை பெறுதல் (Stock market updates) இணையத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே நிறுவனங்களின் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். ndtvprofit.com, moneypore.com போன்ற வலைதளங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான தகவல்களை கொண்டுள்ளன.
5. பயணங்கள் (Travel): சுற்றுலா தளங்கள் பற்றிய விபரங்களை ஒருவர் இணையத்தின் மூலம சேகரிக்க முடியும். இதன் மூலம் விடுமுறை கால சுற்றுலாக்களை முன் கூட்டியே பதிவு செய்வது, மேலும் தங்கும் இடங்கள் (hotels), புகைவண்டி (train), பேருந்து (bus), விமானம் (flights) வாடகை வண்டிகள் போன்றவற்றையும் பதிவு செய்ய இணையமானது உதவுகின்றது goibibo.com, makemytrip.com, olacabs.com போன்ற வலைத்தளங்கள் இச்சேவையை வழங்குகின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards