11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/03/2019
+1 Public Exam March 2019 Creative 2 Mark Questions and Answers
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
2.
ஆக்கி மற்றும் அழிப்பி எப்போது இயக்கப்படுகிறது?
3.
அழிப்பி எப்போது அழைக்கப்படுகிறது?
4.
ஹேக்கிங் குறிப்பு வரைக.
5.
இணைய சட்டங்கள் பற்றி எழுதுக.
6.
அழிப்பி-சிறு குறிப்பு வரைக.
7.
நகல் ஆக்கி என்பது என்ன? அதன் பயன் யாது?
8.
அளபுரு ஏற்கும் ஆக்கி என்றால் என்ன|? அதன் பயன் யாது?
9.
தானமைவு ஆக்கி என்றால் என்ன?
10.
ஆக்கி-சிறு குறிப்பு வரைக
11.
மரபுரிமத்தில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன?
12.
நிரல் பெயர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கிறது காரணம் தருக.
13.
தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் கட்டளையமைப்பை எழுதுக.
14.
மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.
15.
தொடக்க மதிப்பிடுதலுக்கும், இயங்குநிலை தொடக்க மதிப்பிருத்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது?
16.
தரவினங்கள் குறிப்பு வரைக.
17.
ட்ரோஜன் குறிப்பு வரைக.
18.
நச்சு நிரல் பற்றி எழுதுக.
19.
தீம்பொருள் என்றால் என்ன?
20.
மதிப்புப்புள்ளி மாறிலிக்கு இரட்டை தரவினத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?
21.
அடிப்படை தரவு வகைக்கும், தருவிக்கப்பட்ட தரவு வகைக்கும் எகா தருக?
22.
இணைய தாக்குதல் என்றால் என்ன?
23.
கிராக்கிங் வகைகளை பெயரிடுக.
24.
அங்கீகரிக்கப்படாத அணுகல் என்றால் என்ன?
25.
குறிப்புகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.
26.
மென்பொருள் திருட்டின் கீழ் எவை எல்லாம் வருகிறது?
27.
இணைய குற்றம் என்றால் என்ன?
28.
கணிப்பொறி நன்னெறி செயல்முறை குறிப்பு வரைக.
29.
வரையெல்லை செயற்குறியின் பயன் யாது?
30.
எப்போது உறுப்பு செயற்கூறு அணுக பொருளானது தேவைப்படாது?
31.
பொருள்களின் அணிகள் என்றால் என்ன?அவற்றை எவ்வாறு உருவாக்கலாம்?
32.
பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்றால் என்ன?
33.
மாறிகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.
34.
தருவிக்கப்பட்ட தரவு வகைகளுக்கு எ.கா. தருக.
35.
பயனர் வரையறுக்கும் தரவு வகைகளுக்கு எ.கா. தருக.
36.
If a = 12, b = 8 எனில் aன் மதிப்பை கண்டுபிடி a* = ++ a/6+ b++ % 3;
37.
வடிவற்ற குறியுருக்கள் என்றால் என்ன?
38.
ஒப்பீட்டு செயற்குறி பயன் யாது?
39.
பிட்நிலை ஒன்றின் நிரப்பு செயற்குறி பற்றி எழுதுக.
40.
Size of செயற்குறியின் பயன் யாது?
41.
Dev C++ பற்றி குறிப்பு வரைக.
42.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
int i = 20;
int n = i++ % 5;
43.
பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? if i = 20 முதலில்
a) ++i < = 20 b) i++ < = 20
44.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
char n = 'a'; int m;
m = (n == 'a') ? 'a' : 'A'
cout << "m =" << m;
45.
inline செயற்கூறின் நன்மைகளை எழுதுக.
46.
ஒருங்குறி பற்றி எழுதுக.
47.
தமிழ்பொறி பற்றி குறிப்பு வரைக.
48.
தமிழ் அலுவலக மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
49.
பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள் பற்றி எழுதுக.
50.
தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருளின் பயன் யாது?
51.
மின் நூலகங்களின் பயன் யாது?
52.
மின் அரசாண்மை என்றால் என்ன?
53.
இனக்குழு உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய்?
54.
C++ மொழியில் செயலுருப்புக்களை செயற்கூறுக்கு அனுப்பும் வழிகளை எழுதுக.
55.
'/' மற்றும் '%' செயற்குறிக்கான வேறுபாடு யாது?
56.
const சிறப்புச் சொல்லை பற்றி குறிப்பு வரைக.
57.
ஒரும செயற்குறிக்கும் இரும செயற்குறிக்கும் உள்ள வேறுபாடு யாது?
58.
main () செயற்கூறுவின் முக்கியத்துவத்தை எழுதுக.
59.
தொடர்புறுத்தம் என்றால் என்ன?
60.
இனக்குழுவின் பொருளானது உருவாக்கப்படும் முறைகளை எழுதுக.
61.
Inline செயற்கூறுகள் என்றால் என்ன?
62.
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறு இனக்குழுவிற்கு உள்ளே வரையறுத்தலின் முக்கியதுவத்தை எழுதுக.
63.
இனக்குழுவின் உறுப்பு செயர்கூறு வரையறுக்கப்படும் விதங்களை எழுதுக.
64.
C++-ல் பயன்படும் மூன்று அணுகியல்பு வரையறுப்பிகள் யாவை?
65.
நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.
66.
return எனும் சிறப்புச் சொல்லின் பயன் யாது?
67.
செயற்குறித் தொடராக்கம் என்றால் என்ன?
68.
srand () மற்றும் rand () செயற்கூறின் பயன் யாது?
69.
வெளியீட்டை எழுதுக .
(i) strcpy ('' Computer '', '' Science '');
(ii) strcat ('' Computer '' , '' Science '');
70.
மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில் இணைக்கும் செயற்கூறினை பற்றி சிறுகுறிப்பு வரைக.
71.
இனக்குழுவின் உடற்பகுதியானது எதனை கொண்டுள்ளது
72.
இனக்குழுவை வரையறுப்பதற்கான பொது வடிவத்தை எழுதுக.
73.
மூன்று வகையான பிட்நிலை செயற்குறிகளை குறிப்பிடுக.
74.
பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? a = 5; b = 6; c = ?
(i) (a > b) && (b < c)
(ii) (a = = b) && (a > c)
(iii) c! (a > b)
75.
செயற்குறிகள் மற்றும் செயலேற்பிகள் பற்றி எழுதுக.
76.
ஏதேனும் நான்கு விடுபடுவரிசை மற்றும் வடிவற்ற குறியுறு தருக.
77.
பூலியன் நிலையுருக்கள் பற்றி குறிப்பு வரைக.
78.
மெய் மாறிலிகள் அல்லது மிதப்புப்புள்ளி மாறிலிகள் பற்றி குறிப்பு வரைக.
79.
எண் மாறிலிகளை வகைப்படுத்துக
80.
நிலையுருக்கள் வகைகளை எழுதுக.
81.
C++ ன் குறியுறுத் தொகுதி யாது?
82.
C++ னால் உருவாக்கப்பட்ட ஏதேனும் நான்கு பயன்பாட்டு மென்பொருளை எழுதுக
83.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீடு என்ன?
#include < iostrem >
#include < stdio.h >
#include < ctype.h>
using namespace std;
int main ()
{
char ch;
ch = 'A'
cout << ''\n The return value of isalpha (ch)
is: '' << isalpha (ch);
}
84.
islower () செயற்கூறின் பயண யாது?
85.
வெளியீட்டை எழுதுக.
(i) isdigit (4)
(ii)isdigit ( 'A' )
(iii) isapha ('3')
(iv) isalpha ( ' a' )
86.
செயற்கூறினுக்கு கட்டுருக்களை அனுப்பும் முறைகளை எழுதுக.
87.
இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?
88.
இரு பரிமாண அணி என்றால் என்ன?
89.
குறியுறு அணியை தெரிவிப்பதற்காக தொடரியலை எழுதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
90.
ஒரு அணியை உருவாக்கும் முன் எதனை அறிந்திருத்தல் வேண்டும் ஏன்?
91.
நிரலில் முன்செயலி நெறியுறுத்தும் கூற்றின் பயன் யாது?
92.
செயற்கூறு getchar () மற்றும் putchar () செயலை எழுதுக
93.
செயற்கூறுகளை எவ்வாறு பிரிக்கலாம்?
94.
continue கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக.
95.
தாவுதல் கூற்றின் வகைகளை எழுதுக
96.
do-while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
97.
Dev C++-ல் பின்வரும் தரவுவகை நினைவகத்தில் எத்தனை பைட்டுகள் ஒதுக்கீடு செய்யும்?
(i) double
(ii) long
(iii) float
(iv) char
98.
அணிக்கு தொடக்க மதிப்பு இருத்தலுக்கான தொடரியலை எழுதுக.
99.
அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.
100.
கீழொட்டின் விதிகளை எழுதுக.
101.
கீழொட்டு என்றால் என்ன?
102.
வெற்று மடக்கு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
103.
for loop -ன் பொது வடிவத்தை எழுதுக.
104.
மடக்கு என்றால் என்ன?
105.
ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல் வடிவத்தின் கட்டளையமைப்பை எழுதுக.
106.
மடக்கின் உடற்பகுதி என்றால் என்ன?
107.
ஒரு நிரலில் உள்ள கூற்றுகள் எவ்வாறு இயக்கப்படுகிறது?
108.
C++ நிரலில் பயன்படுத்தப்படும் கூற்றுகளைக் எழுதுக.
109.
கட்டுப்பாடு கூற்றுகள் என்றால் என்ன?
110.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் பலன்களை பட்டியலிடுக.
111.
மரபுரிமம் என்றால் என்ன?
112.
தரவு பிணைப்பு என்றால் என்ன?
113.
உறைபொதியாக்கம் என்றால் என்ன?
114.
செயற்குறி பணி மிகுப்பின் கட்டளையமைப்பை எழுதுக.
115.
பல்லுருவாக்கம் ஏதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?
116.
பணிமிகப்பு என்றால் என்ன?
117.
C++- ன் பொருள் என்றால் என்ன?
118.
C++- ன் இனக்குழு என்றால் என்ன?
119.
பொருள் நோக்கு கருத்தியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
120.
உயர் வரையறை பல்லூடக இடைமுகம் என்றால் என்ன?
121.
நேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை?
122.
கட்டளை தொகுதியின் செயல்கள் யாவை?
123.
அடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களை காட்டு
124.
சுழற்சிக்கூற்று (Iterative statement) என்றால் என்ன?
125.
தொடர் கூற்று என்பது என்ன?
126.
பாய்வுப்படம் (flowchart) என்பது என்ன?
127.
போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன?
128.
நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன?
129.
நெறிமுறை குறியிட்டூ முறைகள் யாவை?
130.
131.
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
132.
ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?
133.
வழிமுறை என்றால் என்ன?
134.
தருக்க செயற்குறிகள் என்றால் என்ன?
135.
குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.
136.
வருடி (Scanner) என்றல் என்ன?
137.
பதின்ம , இருநிலை , எண்ணிலை எண்களுக்கான பட்டியல் இடு.
138.
வேர்டு நீளம் பற்றி குறிப்பு எழுதுக
139.
பிட் என்றால் என்ன?
140.
(1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :
1.
2.
ஆக்கி செயற்கூறு இனக்குழு பொருளுக்கு நினைவகத்தில் இடம் ஒதுக்குகிறது மற்றும் தொடங்கி வைக்கிறது.
அழிப்பு என்ற சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடிந்து அழியும்போது அழைக்கப்படுகிறது.
3.
அழிப்பி என்ற சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடிந்து அழியும்போது அழைக்கப்படுகிறது. பொதுவாக Public பகுதியில் அறிவிக்கப்படுகிறது.
4.
உரிமையாளர் அனுமதி இல்லாமல் கணினி மூலம் அங்கீகரிக்கப்படாத அணுகல்.
5.
இணைய உலகில் உள்ள இணைய குற்றங்கள் கையாளப்பட வேண்டும். ஆகவே, இணைய சட்டங்கள் அல்லது இணைய வெளிச் சட்டங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் அல்லது இணைய சட்டங்கள் கொண்டு கையாளப்பட வேண்டும்.
6.
அழிப்பி என்பது, ஒரு பொருளை உருவாக்கும்போது, ஆக்கியால் பொருளுக்கென ஒதுக்கப்படும் நினைவாகப் பகுதியை விடுவிக்கும் ஒரு செயற்கூறாகும். இதுவும் இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும்.அனால் \(\sim \)என்னும் குறியைப் பெயரின் முன்னொட்டாக கொண்டிருக்கும். இது எந்த மதிப்பையும் திருப்பி அனுப்புவதில்லை, எந்த தரவினத்தோடும் தொடர்புடையவை அல்ல.
7.
ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் பொருளுக்குக் குறிப்புகளைக் கொண்ட ஆக்கிக்கு நகல் ஆக்கி என்று பெயர். மாறாக, நகல் ஆக்கி என்பது ஆக்கியின் ஒரு வகை, இது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் பொருளை நகலெடுக்கப் பயன்படுகிறது.
8.
அளபுருக்களை ஏற்கும் ஆக்கி,அளபுரு ஏற்கும் ஆக்கியாகும்.வேறுபட்ட தொடக்க மதிப்புகளைக் கொண்ட பொருள்களை உருவாக்க இந்த வகை ஆக்கி பயன்படுகிறது. செயர்கூறுக்கு அளபுருக்களை அனுப்புவதன் மூலம் இது சாத்தியமாகிறது.
9.
அளபுருக்களை ஏற்காத ஆக்கி தானமைவு ஆக்கி என்றழைக்கப்படுகிறது.
10.
ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டுக்கு வரும்போது ஆக்கி எனப்படும் சிறப்பு செயற்கூறு இயக்கப்படுகிறது. ஆக்கியின் பெயர் இனக்குழுவின் பெயராகவே இருக்க வேண்டும். இது எதையும் திருப்பி அனுப்பாது. இதற்கு எந்த தரவினத்தோடும் தொடர்பு இல்லை. இனக்குழு வரையறுப்பின் உள்ளே அல்லது வெளியே இதனை வரையறுக்கலாம்.
11.
ஆக்கிகள் மரபுரிமம் பெற்ற இனக்குழுக்களின் வரிசையில் இயக்கப்படுகின்றன. அதாவது, அடிப்படை இனக்குழுவில் தொடங்கி இறுதியாக தருவிக்கப்பட்ட இனக்குழு வரையில் அழிப்பிகள் தலைகீழ் வரிசையில் இயக்கப்படும்.
12.
ஒரு தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பொருளை உருவாக்கும் போது, நிரல் பெரியர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கும்,.அதன்பின் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் ஆக்கியை அழைக்கும். ஏனெனில், தருவிக்கப்பட்ட இனக்குழு உறுப்புகள் அடிப்படை இனக்குழுவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
13.
class தருவிக்கப்பட்ட_இனக்குழு_பெயர்: அணுகியல்பு வரையறுப்பி அடிப்படை_இனக்குழுவின்_பெயர்
{
// தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள்
};
14.
(i) ஒருவழி மரபுரிமம்
(ii) பல வழி மரபுரிமம்
(iii) படிமுறை மரபுரிமம்
(iv) பலநிலை மரபுரிமம்
(v) கலப்பு மரபுரிமம் என மரபுரிமம் ஐந்து வகைப்படும்.
15.
மாறி அல்லது மாறிகள் அறிவிக்கப்படும் போதே அதற்கு தொடக்க மதிப்பு வழங்குதலை தொடக்க மதிப்பிடுதல் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா. int a;
a = 10;
நிரலின் இயக்கத்தின் போது ஒரு மாறிக்கு தொடக்க மதிப்பு இருத்த முடியும் இது இயங்குநிலை தொடக்க மதிப்பிடுத்தல் எனப்படும்.
எ.கா. int num 1, num 2, num 3;
1; num 3 = num 1 + num 2;
16.
மாறியில் எந்த தரவை நாம் சேமிக்க போகிறோம் என்பதை சுட்டிக் காட்டுவதே தரவினத்தின் வேலையாகும்.
17.
ஒரு ட்ரோஜன் நச்சு நிரல் என்பது ஒரு செயல்பட்டு.எடுத்துக்காட்டாக கூறலாம். உண்மையில் நச்சு நிரல் செயல்படுத்தப்படும் போது தீங்கிழைக்கும் செயல்களை செய்கிறது.
18.
ஒரு நச்சு நிரல் என்பது கணிப்பொறி குறியீட்டின் ஒரு சிறிய பகுதி ஆகும். அது தன்னை மீண்டும் மீண்டும் ஒரு கணிப்பொறியில் இருந்து மற்றொரு கணிப்பொறிக்கு கோப்புடன் இணைக்கும் வகையில் பரவுகிறது.
19.
தீம்பொருள் சட்ட விரோதமான அணுகல் மற்றும் சேதம் விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மென்பொருள் ஆகும்.
20.
மதிப்புப்புள்ளி மாறிலி தசமபுள்ளி மதிப்புகளை மட்டுமே குறைந்த அளவு இடத்தை எடுத்துக் கொண்டு சேமிக்கும். இதன் மதிப்பு பரப்பானது.
-3.E + 38 to 3.4E + 38 ஆகும்
ஆனது இரட்டை தரவினமும் தசம புள்ளி மதிப்புகளை சேமிக்க அதிக அளவு இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதன் மதிப்பு பரப்பானது -1.7E + 308 to 1.7E + 908
21.
(i) அடிப்படை தரவு வகை; int, float, double, void
(ii) தருவிக்கப்பட்ட தரவு வகை; Array, class, reference
22.
ஒரு கணிப்பொறிக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது ஒரு நபரிடமிருந்து அல்லது ஒரு நிறுவனத்திடமிருந்து முக்கியத் தகவல்களை திருடுவதாகவோ, இணைய தாக்குதல்கள் எனப்படும்.
23.
(i) மென்பொருள் சிதைவு
(ii) கடவுச்சொல் விரிசல்.
24.
அங்கீகாரமற்ற அணுகல் என்பது ஒரு வலைதளம், நிரல், சேவையகம் அல்லது பிற முறைமைக்கான அணுகல் முறையான பயனர் கணக்கை மீறுவதன் மூலம் அது அங்கீகரிக்கப்படாத அணுகல் எனப்படும்.
25.
கட்டளை அமைப்பு:
< type > <& reference_variable > = < original_variable >
26.
மென்பொருள் திருட்டு என்பது ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு நிறுவனத்தின் முதலில் உருவாக்கப்பட்ட மென்பொருளை பதிப்புரிமை பெறாமல், சட்ட விரோதமாக குறியீடுகள், தகவல்கள், நிரல்கள் மற்றும் பிற தகவல்களை திருடுதல். அங்கீகாரம் இல்லாமல், நகல்களில் பிரிதிகளை உருவாக்கி இந்த தரவை சொந்த நலனுக்காக, அல்லது வணிக இலாபத்திற்காக பயன்படுத்துவது ஆகும்.
27.
இணைய குற்றம் என்பது அறிவுசார் வெள்ளைக்காலர் குற்றமாகும். இந்த குற்றங்களை செய்வோர் பொதுவாக கணிப்பொறியை திறன்பட இயக்குபவராக இருப்பார்கள்.
28.
கணிப்பொறி நன்னெறி செயல்முறை என்பது மதிப்புகள், நடைமுறைகள் முதலியவற்றை கையாள்கிறது. நுகர்வோர் செயல்முறையை. கணிப்பொறி தொழில்நுட்பத்தின் மாற்றம் அது தொடர்புடைய ஒழுக்கத்தை, சேதமோ அல்லது நீதி நெறியை மீறியதாகவோ மற்றும் தனிமனித நிறுவனம் ஆகியவற்றில் நீதி நெறி மீறாமல் நிர்வகிப்பதாகும்.
29.
ஒரே பெயரினைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் வெவ்வேறு தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றில் முழுதளாவிய மாறிகளைக் குறிப்பிட (::) வரையெல்லை செயற்குறியானது பயன்படுகிறது.
30.
ஒரு உறுப்பு செயற்கூறானது அதே இனக்குழுவின் உள்ள மற்றொரு உறுப்பு செயற்கூற்றை அணுக பொருளானது தேவையில்லை.
31.
இனக்குழு உறுப்புகளை (பொருள்களை)வரிசையாகக் கொண்ட அணிகள் பொருள்களின் அணிகள்எனப்படும். மற்ற வகையான அணிகளை அறிவித்து வரையறுப்பது போன்றே பொருள்களின் அணிகளையும் உருவாக்கலாம்.
32.
பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்பது பொருளுக்கு செய்தியை அனுப்புவது அல்லது தொடர்பு கொள்ளுதல் ஆகும்.
33.
மாறிகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பு:
< தரவினம் > < மாறியின் பெயர் >;
34.
Array, function, Pointer, Reference.
35.
Structures, union, Class, Enumeration.
36.
a* = ++ a/6+ b++ % 3
= a * (++a/6 + b++ %3)
= 12 * (13/6 + 8% 3)
= 12 * (2 + 2)
= 48
37.
C++ சில அச்சிட முடியாத எழுத்துக்களை குறியுறு மாறிலிகளாக ஏற்கிறது. அச்சிட முடியாத எழுத்துக்கள், வடிவற்ற - குறியுருக்கள் என அழைக்கப்படுகின்றன.
38.
ஒப்பீட்டுச் செயற்குறிகள் செயலேற்பிகளுக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது.
39.
பிட்நிலை ஒன்றின் நிரப்பு செயற்குறி ~ (Tilde) இருநிலை எண்ணில் உள்ள பிட்டு 1 எனில் 0 எனவும், 0 எனவும் 1 எனவும் மாற்றும். இது ஒரு ஒரும செயற்குறி ஆகும்.
40.
Size of இது ஒரு தொகுப்பு நேர செயற்குறி (compile time operator). இது மாறியின் அளவை பைட்டுகளில் கொடுக்கிறது.
41.
Dev C++ ஒரு திறந்த மூல (Open Source) பல இயக்க அமைப்புகளிலும் இயக்கும் பணித்தளம் (Cross platform). லினக்ஸ் இயக்க அமைப்பில் பதிப்பு Dev C++ alpha பதிப்பை பயன்படுத்தலாம். இந்த பதிப்பு பகிர்தளிக்கப்பட்ட GNU (General Public license) யுடன் கூடிய முழுமையான ஒருங்கிணைந்த உருவாக்க சூழல் ஆகும். இது Delphi யில் உருவாக்கப்பட்டுள்ளது.
42.
i = 11
n = 0
43.
a) false
b) True
44.
m = 97
45.
nline செயற்கூற்றுகளின் நன்மைகள் :
(i) inline செயற்கூறுகள் வேகமாக செயல்படும் ஆனால் அதிக நினைவகை இடத்தை எடுத்துக் கொள்ளும்
(ii) அடுக்கங்களை பயன்படுத்தும் போது உள்ள சிக்கல்பாட்டினைக் குறைக்கிறது.
46.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறைதான் ஒருங்குறி என்று அழைக்கப்படும் யுனிகோட். இதன் முதல் பதிப்பான யுனிகோட் 1.0.0 என்பது அக்டோபர் 1991ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டபோது, தமிழ் உள்ளிட்ட 23 மொழிகளை கையாளும் திறன் பெற்றிருந்தது. தமிழை கையாள பல குறியீட்டு முறைகள் இருப்பினும், இன்று ஒருங்குறியே சிறந்த ஒன்றாக திகழ்கிறது.
47.
(i) தமிழ்பொறி என்ற மென்பொருள், சுமார் 30000க்கும் அதிகமான ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை உள்ளடக்கியது.
(ii) இதன் மூலம், சிறிய ஆங்கில சொற்றொடர்களுக்கு இணையான தமிழ் மொழி பெயர்ப்பை பெறலாம்.
(iii) மேலும், கூகுள் நிறுவனம், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பு நிகழ்நேர பயன்பாட்டை வழங்கி வருகின்றது.
48.
முழுவதும் தமிழிலேயே இயங்கும் அலுவலக மென்பொருள்களும் பயன்பாட்டில் உள்ளது. அவற்றில் தமிழ் லிபரெ ஆபீஸ், தமிழ் ஓபன் ஆபீஸ், அழகி, யுனிகோட் எடிட்டர், பொன்மொழி, மென்தமிழ், கம்பன், வாணி போன்ற அலுவலக மென்பொருள்கள் முழுவதும் தமிழில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
49.
(i) NHM Writer, e-கலப்பை மற்றும் லிப்பிகார் - போன்றவை ஆங்கில ஒலியியல் முறையில், தமிழ் யுனிகோட், தமிழ் 99 போன்ற தட்டச்சு முறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருட்கள் ஆகும்.
(ii) செல்லினம் மற்றும் பொன்மடல் - ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒளியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருட்கள் ஆகும்.
50.
(i) கணிப்பொறியை பயன்படுத்தி சொற்செயல்களில் ஆவணங்களை தட்டச்சு செய்யவும், இணையத்தின் வழியே தகவல்களை தேடவும், பெறவும் மட்டுமே தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
(ii) கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில், தமிழ் இடைமுக மென்பொருள்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறை தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
(iii) கணிப்பொறிகள் மட்டுமின்றி ஸ்மார்ட் கைப்பேசிகளிலும், இம்முறையில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும்.
51.
மின்னூல்களை (e-Books) தொகுத்து வழங்குபவை மின் நூலகங்கள், லட்சக்கணக்கான தமிழ்நூல்களைக் கொண்ட மின்நூலகங்கள் பல நிறுவப்பட்டுள்ளது. இவை, இணையத்தின் வழியே அச்சு புத்தகங்கள் போய் சேரமுடியாத இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு நல்ல பல தமிழ்நூல்களை கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றன.
52.
ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும். நமது தமிழ்நாடு அரசு தனது அனைத்து சேவைகளையும் இணையத்தின் வழியே வழங்கி வருகின்றது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அரசுடன் உடனடியாக இணையத்தின் வழியே தொடர்பு கொள்ள முடியும். முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள், அரசின் திட்டங்கள், சேவைகள் போன்றவை இணையத்தின் வழியே கிடைக்கின்றது.
53.
இனக்குழுவின் உறுப்புகளை அணுகுவதற்கு புள்ளி (.DOT operator )செயற்குறியானது பயன்படுகிறது. இனக்குழு பொருளின் பெயரைத் தொடந்து புள்ளி செயற்குறியும், அதைத் தொடர்ந்து அணுக வேண்டிய தரவு உறுப்பு/உறுப்பு செயற்கூறின் பெயரைத் தர வேண்டும்.
54.
C++ மொழியில் செயலுருப்புக்களை செயற்கூறுக்கு இரு வழிகளில் அனுப்பலாம். செயலுருப்புக்களை அனுப்பும் முறையை பொறுத்து , செயற்கூற்றை அழைக்கும் வழிமுறைகள் மதிப்பு மூலம் அழைத்தல் ( கால் by Value ) மற்றும் குறிப்பு மூலம் அல்லது முகவரி மூலம் அழைத்தல் (கால் பய reference or Address ) என்று இரு வகைப்படுத்தப்படும்
55.
(i) '/' செயற்குறியானது ஒரு எண்ணை வேறு எண்ணோடு வகுக்கும் போது அதன் ஈவை மதிப்பிடுத்தும்
(ii) '%' செயற்குறியானது வகுத்தலின் மீதியை கண்டுபிடிக்கும்.
56.
const சிறப்புச் சொல்லை பயன்படுத்தி மாறிலிகளை அறிவிக்கலாம் . const சிறப்புச்சொல் ஒரு மாறியின் மதிப்பை மாறாத தன்மை கொண்டதாக ஆகும்.மாறிலியின் மாறிகள் அறிவிக்கும் போதே அதனுடைய தொடக்க மதிப்புடன் அறிவிக்க வேண்டும். const என்னும் பண்புணர்த்தி (modifier ) மூலம் ஒரு மாறியில் இருதப்படும் மதிப்பை செயற்கூற்றின் உடல் பகுதியில் மாற்றப்பட வேண்டும்.
57.
| ஒரும செயற்குறி | இரும செயற்குறி |
| ஒரே ஒரு செயலேற்பியை மட்டும் ஏற்கும். |
இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும் |
|
எ.கா.: ++, --, & |
எ.கா.: +, =, <=, >= |
58.
நிரல் செயற்பாட்டினைத் தொடங்க கண்டிப்பாக ஒரே ஒரு main () செயற்கூறு இருக்க வேண்டும் . வரையறுக்கும் போது செயற்கூறுகளை நாம் அவற்றை நம் விருப்பப்படி எந்த வரிசையில் வேண்டுமானாலும் எழுதலாம். பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் main () செயற்கூற்றின் முன் அல்லது பின் அமைக்கலாம்.மாறியை அறிவிப்பது போன்று. ஒரு செயற்கூறையும் நிரலில் அதை பயன்படுத்தும் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும்.செயற்கூறு அறிவிப்பு கூற்றை main () செயற்கூற்றின் வெளியே கொடுக்க வேண்டும்
59.
செயற்குறிகள் முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. செயலேற்பிகளும், செயற்குறிகளும் குறிப்பிட்ட தருக்க முறைப்படி குழுவாக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. இத்தகைய குலுவாக்கம் தொடர்புறுத்தம் எனப்படும்.
60.
இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகிறது.
1.முழுதளாவிய பொருள் (Global Object)
2. உள்ளமை பொருள் (Local Object)
61.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறானது inline செயற்கூறு போல இயங்குகின்றன.அவை inline உறுப்பு செயற்கூறுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
62.
செயற்கூறானது inline செயல்கூறாக அறிவிக்கப்பட்டால் நிரலின் தொகுப்பு நேரத்தில் அச்செயற்கூறு அழைக்கப்படும் இடங்களில் எல்லாம் நிரல் பெயர்ப்பியானது அச்செயற்கூறின் குறிமுறையை பதிலீடு செய்யும்.
63.
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறானது இரண்டு விதங்களில் வரையறுக்கப்படுகிறது.
1.இனக்குழவிற்கு உள்ளே வரையறுத்தல்
2.இனக்குழுவிற்கு வெளியே வரையறுத்தல்.
64.
Private,Protected மற்றும் Public என்ற சிறப்புச் சொற்களானது அணுகியல்பு வரையறுப்பிகள் என அழைக்கப்படுகின்றன.
65.
நிறுத்தற்குறிகள் என்பவை குறிப்பிட்ட பணியைச் செய்யும் குறியுருக்களாகும். C++ நிரலில் நிறுத்தற்குறிகள் வரம்புச்சுட்டி (Seperator) அல்லது வரம்புக்குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. கீழ்வரும் நிறுத்தற்குறிகள் C++ -ல் பயன்படுத்தப்படுவது போலவே C மற்றும் Java -நிரலாக்க மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
66.
return எனும் சிறப்புச் சொல் ஒரு செயற்கூற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பை திருப்பி அனுப்ப பயன்படுகிறது.
67.
ஒன்றுக்கு மேற்பட்ட தரவு மதிப்புகளை >> எனும் செயற்குறி மூலம் பெற்ற உரிய மாறிகளில் இருத்தி வைக்க முடியும். இதற்கு செயற்குறித் தொடராக்கம் (cascading of operator) என்று பெயர்.
68.
C++ -ல் srand () செயற்கூறு rand () செயற்கூற்றைப் பயன்படுத்தி போலி சீரற்ற எண்களை உருவாக்கலாம்.
69.
(i) Science
(ii) Computer Science
70.
Strcat() என்ற செயற்கூறு இலக்கு மற்றும் மூலம் என்ற இரு செயலுருபுகளை எடுத்துக் கொள்ளும் . இந்த செயற்கூறு மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில் இணைக்கும்.
71.
1.இனக்குழுவின் உடற்பகுதியானது தரவு மாறிகள் மற்றும் செயல்கூறுகளின் அறிவிப்பை கொண்டிருக்கும்.(தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயர்கூறுகள்)
2. இனக்குழுவின் உடற்பகுதியானது மூன்று அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டுள்ளது (private, protected மற்றும் public).
72.
இனக்குழுவை வரையறுப்பதற்கான பொது வடிவம்:
{
private:
தரவு உறுப்புகள் அறிவிப்பு;
செயல் கூறுகள் அறிவிப்பு;
Protected:
தரவு உறுப்புகள் அறிவிப்பு;
செயல் கூறுகள் அறிவிப்பு;
public:
தரவு உறுப்புகள் அறிவிப்பு;
செயல் கூறுகள் அறிவிப்பு;
};
73.
மூன்று வகையான பிட்நிலை செயற்குறிகள் உள்ளன.
அவை:
(i) தருக்க பிட்நிலை செயற்குறிகள் (Logical bitwise operators)
(ii) பிட்நிலை நகர்வு செயற்குறிகள் (Bitwise shift operators)
(iii) பிட்நிலை ஒன்றின் நிரப்பு செயற்குறிகள் (One's compliment operators)
74.
(i) 0 (false)
(ii) 0 (false)
(iii) 1 (true)
75.
செயற்குறிகள் என்பது சில கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை செய்ய பயன்படும் குறியீடுகளாகும். செயலேற்பிகள் (Operands) என்பது செயற்குறிகளால் செயல்படுத்தப்படும் தரவு கூறுகள் அல்லது மதிப்புகளை குறிக்கிறது.
76.
| விடுபடு வரிசை | வடிவற்ற குறியுறு |
| \n | புதியவரி/ வரிச்செலுத்தி |
| \o | மதிப்பிலி |
| \t | கிடைமட்டத் தத்தல் |
| \v | செங்குத்து தத்தல் |
77.
பூலியன் நிலையுருக்கள் பூலியன் மதிப்புகளில் ஒன்றான மெய் அல்லது பொய் என்பதை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. மெய் எனில் மதிப்பு 1-என்னும் மற்றும் பொய் எனில் மதிப்பு 0-எனவும் எடுத்துக்கொள்ளும்.
78.
ஒரு மேற்கு அல்லது மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி ஆகும். இந்த மாறிலிகள் பின்ன வடிவில் அல்லது அடுக்கு வடிவத்தில் எழுதப்படலாம்.
79.
எண் மாறிலிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
(i) முழு எண் மாறிலிகள் / நிலையான புள்ளி மாறிலிகள் (Integer Constants / Fixed point constants)
(ii) மெய் எண் மாறிலிகள் / மிதப்புப் புள்ளி மாறிலிகள் (Real constants / Floating point constants)
80.
நிலையுருக்கள் (மாறிலிகள்):
(i) எண் மாறிலிகள்
முழு எண் (மாறிலிகள்)
மதிப்புள்ள எண் மாறிலிகள்
(ii) பூலியன் மாறிலிகள்
(iii) எழுத்துரு மாறிலிகள்
(iv) சர மாறிலிகள்
81.
| எழுத்துக்கள் | A....Z, a ....... z |
| எண் | 0 ..... 9 |
| சிறப்பு குறியீடு | +-*/~@#$%^&[]() {}= > < _ \|?.,:"; |
| இடைவெளி | வெற்று இடைவெளி, கிடைமட்டத்தத்தல் (➝), செலுத்தி திருப்பல் (↵) புதிய வரி, வரி செலுத்தி |
| மற்ற குறியீடுகள் | C++, 256, ASCII உருக்களை தரவுகளாக செயல்படுத்தும் |
82.
போட்டா சாப், மாயா, அமேசான், பேஸ்புக்
83.
வெளியீடு -1;
Enter a character : 3
The Return value of isdigit (ch) is : 1
84.
islower () செயற்கூறு உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து சிறிய எழுத்தாக உள்ளதா அல்லது இல்லையா என்று சரிபார்க்கும்.
85.
i -1, ii-0, iii-0,iv -1
86.
செயற்கூறினுக்கு கட்டுருக்களை மதிப்பு மூலம் அழைத்தல் அல்லது குறிப்பு மூலம் அழைத்தல் முறையில் அனுப்பப்படுகிறது. கட்டுருக்கள் அல்லது அதன் குறிப்புகளை செயற்கூறுகள் திருப்பி அனுப்பும்.
87.
இருபரிமாண அணியில் ஒரு உறுப்பை அணுகுவதற்கு இரண்டு சுட்டு மதிப்புகளை பயன்படுத்த வேண்டும். இதில் முதல் சுட்டு வரிசையின் மதிப்பையும் இரண்டாவது சுட்டு நெடுவரிசையின் மதிப்பையும் குறிக்கும்.
88.
இரு பரிமாண அணி என்பது ஒரே தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுதியாகும். மேலும் இவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிசை மற்றும் நெடுவரிசையில் சேமிக்கப்படும்.
89.
(குறியுறு அணியை தெரிவிப்பதற்கான தொடரியல்:
char array -name [size]
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடரியல் அணியின் அளவு (Size) எப்பொழுதும் குறையில்லாத முழு எண் மதிப்பாக தான் இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டு: char country [6];
90.
ஒரு அணியை உருவாக்கும் முன் அதனுடைய அளவை (நீளம்) அறிந்திருத்தல் வேண்டும். ஏனெனில் நினைவகமானது அணியின் அளவிற்கு தகுந்தவாறு ஒதுக்கப்படும். அணியானது உருவாக்கப்பட்ட பின்னு அதன் நீளத்தை இயக்க நேரத்தில் மாற்றமுடியாது.
91.
இந்தக் கூற்றுகள் நிரல் தொகுப்புக்கு முன்னதாகவே செயல்பட தொடங்கும். அதே போல் தலைப்பு கோப்பினை நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு நிரல் பெயர்ப்பிக்கு உணர்த்துகிறது.
92.
முன்னரே வரையறுக்கப்பட்ட getchar () என்ற செயற்கூறினைப் பயன்படுத்தி விசைப்பலகையின் மூலம் ஒரு எழுத்தையும் உள்ளீடு செய்யலாம் மற்றும் putchar () என்ற செயற்கூறின் மூலம் அந்த எழுத்தையும் வெளி யிடும் செய்யலாம்.
93.
செயற்கூறுகளை இரு வகைகளாக பிரிக்கலாம்.
(i) வரையறுக்கப்பட்ட (அல்லது ) உள்ளமைந்த (அல்லது) நூலக செயற்கூறுகள்.
(ii) பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள்.
94.
continue கூற்று break கூற்றைப்போல் செயல்படுகிறது. ஆனால், மடக்கை அடுத்து சுழற்சிக்கு இட்டுச் செல்லும். ஓர் மடக்கினுள் Continue கூற்று இயக்கப்படும் பொழுது, கோன்டினுக்கே கூற்றை தொடர்ந்து வரும் கூற்றுகள் தவிர்க்கப்பட்டு, மடக்கின் அடுத்த சுழற்சியை தொடங்க செய்யும்.
95.
தாவுதல் கூற்றின் வகைகள்
(i) goto கூற்று
(ii) break கூற்று
(iii) continue கூற்று
96.
do-while மடக்கின் கட்டளை அமைப்பு:
do
{
மடக்கின் உடற்பகுதி;
} while ( நிபந்தனை சோதிப்பு கோவை);
97.
(i) 8
(ii) 4
(iii) 4
(iv) 1
98.
அணிக்கு தொடக்க மதிப்பு இருத்தலுக்கான தொடரியல்:
< data type > < array name > [size] = {value 1, value-2, ..... value-n} ;
99.
(i) அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாடு.
(ii) அணியின் தரவினத்துக்கு ஒதுக்கப்படும் பைட்டுகளின் எண்ணிக்கை உறுப்புகளின் எண்ணிக்கை.
100.
கீழொட்டு எப்பொழுதும் 0 என்ற எண்ணிலிருந்து தொடங்கும். மேலும் இது, குறியில்லா முழுஎண்ணாக இருக்க வேண்டும்.
101.
ஒவ்வொரு உறுப்புக்கும் (நினைவக பெட்டி) தனித்தன்மையுடைய சுட்டு எண் 0-விலிருந்து தொடங்கும், இந்த எண் "கீழொட்டு" என்றழைக்கப்படும்.
102.
ஒரு மடக்கில் எந்த கூற்றும் இடம் பெறவில்லை என்றால் அது வெற்று மடக்கு எனப்படும். பின்வரும் மடக்கு ஒரு வெற்று மடக்கு ஆகும்.
எ.கா: for (i 0; i < i < = 5; + = i);
103.
for (தொடக்க மதிப்பிருத்தல்; சோதிப்பு நிபந்தனை; மிகுப்பு கோவைகள்)
{
நிரல் கூற்று 1;
நிரல் கூற்று 2;
________
}
நிரல் கூற்று -க்ஸ்;
104.
பன்முறைச் செயல் அல்லது மடக்கு என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள், நிபந்தனை நிறைவேறும் வரை திரும்பத் திரும்ப இயக்கப்படுவதை குறிக்கும். இந்த கூற்றுகளை பாய்வுக் கட்டுப்பாட்டு கூற்றுகள் எனவும் கூறலாம். இது நிரலின் நீளத்தை குறைக்கவும், நேரத்தை குறைக்கவும், நிரல் இயக்கவும், குறைவான நினைவாக இடத்தை எடுத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
105.
if (கோவை)
{
மெய் பகுதியின் உடற்பகுதி;
}
else
{
if (கோவை)
{
மெய் பகுதி கூற்றுகள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
}
106.
மீண்டும் மீண்டும் இயக்கப்படும் கட்டளைத் தொகுதியினை மடக்கின் உடற்பகுதி என்கிறோம்.
107.
ஒரு நிரலிலுள்ள கூற்றுகள், வரிசைமுறை, தேர்ந்தெடுப்பு மற்றும் மடக்கு போன்ற கட்டுப்பாட்டு கூற்றுகளாக இயக்கப்படுகிறது.
108.
C ++ நிரலில் இரு வகையான கூற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை
(i) வெற்றுக் கூற்று (Null Statements)
(ii) கலவைக் கூற்று ( காம்பௌண்ட் Statements)
109.
பாய்வுக் கட்டுப்பாடு நிரலின் ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தாவச் செய்கிறது. அத்தகைய தாவலுக்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாடு கூற்றுகள் எனப்படும்.
110.
(i) மறுபயனாக்கம்
(ii) மிகைமை
(iii) எளிய பராமரிப்பு
(iv) பாதுகாப்பு
111.
மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின் அடிப்படையில் புதிய இனக்குழுவை (தருவிக்கப்பட்ட இனக்குழு) உருவாக்கும் செயல்முறையாகும்.
112.
தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைப்பது தரவு பிணைப்பு ஆகும்.
113.
தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைத்துவைக்கும் செயல்நுட்பம் உறைபொதியாக்கம் எனப்படுகிறது. இது அருவமாக்கத்தை செயல்படுத்துகிறது.
114.
செயற்குறி பணிமிகுப்பின் கட்டளையமைப்பு:
சிறப்புத் சொல் பணிமிகுக்கப்பட வேண்டிய செயற்குறி
\(\nwarrow \) \(\nearrow \)
ReturnType classname :: Operator Operator Symbol(செயலுருபுகளின் பட்டியல்)
{
\\Function body
}
115.
C++ மொழியில், பல்லுருவாக்கம் செயற்கூறு பணிமிகுப்பு மற்றும் செயற்குறி பணிமிகுப்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
116.
பணிமிகப்பு என்பது ஒரே பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு பொருளைக் குறிப்பது. அதைப்போல் செயற்கூறு பணிமிகப்பு என்பது ஒரே செயற்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் கொண்டதாகும்.
117.
பொருள் என்பது தொடர்புடைய செயற்கூறுகள், அச்செயற்கூறுகளுக்கான தரவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவாகும்.
118.
C++- ன் இனக்குழு ஆனது தரவுகளையும் அதற்கு தொடர்பான செயல்கூறுகளையும் ஒரு தொகுதிக்குள் இணைக்கப்பட்டு உருவாக்கப்படுவது.
119.
பொருள் நோக்கு கருத்தியல், தரவு மற்றும் பண்பியல்புகளைக் கொண்ட பொருள்களின் தொகுப்பை மென்பொருளாக அமைக்க அனுமதிக்கிறது. இது தளர்வாக இணைக்கப்பட்ட தரவு மற்றும் பண்பியல்புகளைக் கொண்ட மரபுசார் செயற்கூறு நிரலாக்கப் பயிற்சிக்கு மாறுபட்டது.
120.
உயர் வரையறை பல்லூடக இடைமுகம் ஒலி / ஒளி இடைமுகம் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளி தரவுகளை கணிப்பொறி திரையகத்திற்கு, டுஊனு புரொஜக்ர், டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு கொடுக்க பயன்படுகிறது.
121.
1. மாறும் முதன்மை நினைவகம் [Dynamic RAM - DRAM]
2. நிலையான முதன்மை நினைவகம் [Static RAM - SRAM]
122.
1. தரவு மாற்றம்
2. எண்கணித செயல்முறைகள்
3. தருக்க செயல்முறைகள்
4. கட்டுப்பாட்டு நகர்வு
5. உள்ளீடு / வெளியீடு
123.
124.
1.C என்ற நிபந்தனையை பொருத்து ஒரு கூற்றை மீண்டும் , மீண்டும் இயக்கும் செயல்நுட்பம் சுழற்சி'' எனப்படும்
2. C என்பது இரு நிபந்தனை, S என்பது ஒரு கூற்று எனில்
whileC .
S
மேற்காண் கூற்று ஒரு சுழற்சி கூற்றாகும்
125.
1. தொடர் கூற்று என்பது, தொடர்ச்சியான ஒன்றுக்கும் மேற்பட்டகூற்றுகள் ஒன்றினைந்த அமைப்பாகும்
2. நெறிமுறையில் அவை எந்த வரிசையில் எழுதப்பட்டதோ, அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக இயங்குவதால், அவை தொடர் கூற்றுகள் என்று அழைக்கப்படுகின்றது
126.
1. பாய்வுப்படம் என்பது , நெறிமுறைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுகள்
2. ஒன்றினைந்த அமைப்பாகும்ஒரு நெறிமுறை செயல்படுத்தும் போதும், கட்டுப்பாட்டு பாய்வை (control Flow ) படவடிவில் காட்சிப்படுத்த இது பயன்படுகிறது
127.
1. போலிக்குறிமுறை நிரலாக்க மொழிக்கு நிகரானதாகும்
2. போலிக்குறிமுறையாக குறிப்படப்படும் நெறிமுறைகளை கணிப்பொறிகளில் இயக்க முடியாது. நெறிமுறையைபடிப்பவர் , சிக்கல் தீர்வு வழிமுறையை புரிந்து கொள்வது பயன்படுகிறது
128.
நிரலாக்க மொழி என்பது , ஒரு நெறிமுறையை கணிப்பொறியில் இயக்கி சிக்கலைத்திர்க்கும் ஒரு குறியிட்டூ முறையாகும்
129.
நெறிமுறைகளை குறிப்பிட சில குறியிட்டூ முறைகள் தேவைப்படுகின்றது. ஒரு நெறிமுறையை குறிப்பிட மூன்று முதன்மை குறியிட்டூ முறைகள் உள்ளது.அவை
1. நிரலாக்க மொழி (programming Language)
2. போலிக் குறிமுறை (Pseudo code)
2. பாய்வுப்படம் (Flowchart)
130.
131.
i) நாம் முக்கியநெறிமுறைகளை செயல்பாடுகளாக பிரிக்கிறோம்.
ii) முக்கியநெறிமுறை மற்றும் பிறசெயல்பாடுகளை தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம்.
iii) இறுதியாக, நாம் செயல்பாடுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம்.
இந்த செயல் பிரித்தல் (Decomposition) எனப்படுகிறது.
132.
i) மதிப்பளிக்கூற்று மற்றும் கட்டுப்பாடுபாய்வு கூற்றுகள் ஒரு நெறிமுறையை உருவாக்குகின்றது.
ii) ஒரு கட்டுப்பாட்டு பாய்வு கூற்று ஒரு நிபந்தனையின் நிலையை சோதித்து அதன் மதிப்பு அடிப்படையில் அடுத்த கூற்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறது.
133.
i) வழிமுறை ஒரு சிக்கலைதீர்க்கும் அறிக்கைகள் வரிசை ஆகும்.
ii) வழிமுறைநிறைவேற்றப்படுகையில், சிக்கல் தீர்க்கப்படும் ஒரு செயல்முறை உருவாகிறது.
iii) வழிமுறை என்பது, சிக்கல் தீர்க்கும் நெறிமுறைகள் கட்டமைப்பை உள்ளடக்கியது.
134.
1. AND, OR மற்றும் NOT போன்ற அடிப்படை தருக்க செயற்பாடுகள் முறையே புள்ளி (.), கூட்டல் குறி () மற்றும் மேல்கோடு அல்லது அபாஸ்ட் ரஃபி குறி என்பவற்றால் குறிப்பிடலாம்.
2. இந்தகுறிகளை ''தருக்க செயற்குறிகள் '' என்றழைக்கப்படும்.
135.
i) நுண்பேசி ஒரு குரல் உள்ளீடு சாதனமாகச் செயல்படுகிறது.
ii) இது குரல் தரவைப்பெற்று கணிப்பொறிக்கு அனுப்புகிறது.
iii) நுண்பேசியுடன், பேச்சினை உணர்ந்து கொள்ளும் மென்பொருளைப் பயன்படுத்திக் கணிப்பொறிக்கு உள்ளிடப்படும் தகவலுக்கான முற்றிலும் புதிய அணுகுமுறையை வழங்க முடியும்.

136.
i) கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ii) இந்தக் கருவி ஒரு "உலர் மின்நகல் இயந்திரம்" (xerox machine) போல் செயல்படுகிறது.
iii) எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட, புகைப்படங்களை உள்ளிடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறை தகவலாக மாற்றியமைக்கிறது.
137.
| பதின்ம எண் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| இருநிலை எண் | 0000 | 0001 | 0010 | 0011 | 0100 | 0101 | 0110 | 0111 | 1000 | 1001 |
| எண்ணிலை எண் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 10 | 11 |
138.
1. வேர்டு நீளம்(word length) என்பது ஒரு கணிப்பொறியின் மைய செயலகத்தில் எத்தனை பிட்டுகள் செயற்படுத்தப்படும் என்பதை குறிக்கும்.
2. எடுத்துக்காட்டாக வேர்டு நீளம் - 8 பிட்டுகள், 16 பிட்டுகள், 32 பிட்டுகள் மற்றும் 64 பிட்டுகளின் அளவில் அமைக்கப்படும்.
3. இன்றைய கணிப்பொறிகள் 32 பிட்டுகள் அல்லது 64 பிட்டு வேர்டு நீளத்தில் வடிவமைக்கப்டுகிறது.
139.
1. பிட் -இருநிலை எண்களான 0 அல்லது 1 பிட் என அழைக்கப்படும்
2. இது கணிப்பொறி தரவின் அடிப்படை அலகு ஆகும். க்ஷவை என்ற ஆங்கில வார்த்தைக்ஷயேசல னபைவை என்பதின் சுருக்கம்.
140.
(1101)2 = 1 × 23 + 1 × 22 + 0 × 21 + 1 × 20
= 8 + 4 + 0 + 1
= (13)10
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards