11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 15/03/2019
+1 Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
கோவை பற்றி குறிப்பு வரைக.
2.
ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.
3.
ஏதேனும் ஒரு குறியுருவை பெற்ற அதனுடைய அடுத்த குறியுருவை தெரிவிக்கும் C++ நிரலை எழுதுக.
4.
இரண்டு முழுஎண்களை பெற்று அதனுடைய கூட்டுத் தொகையை காண்பிக்கும் C++ நிரலை எழுதுக.
5.
உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.
6.
பின்னலான இனக்குழுவை உருவாக்கும் வழிகளை எழுதுக.
7.
C++ ன் கோவைகளை வகைப்படுத்துக.
8.
பின்வரும் கூற்றில் a ன் மதிப்பு யாது if a is முழு எண் 2) a is ரியல் எண் a = 5/3.
9.
ஒரும, இரும, மும்ம செயற்குறிகள் வேறுபாடு எடுத்துக்காட்டு தருக?
10.
Using name space std என்ற கூற்றின் பயன் யாது?
11.
பின்வரும் கூற்றை if else பயன்படுத்தி மாற்றி எழுதுக.
Com = (Sales > 15000) ? sale * 5/100 : 0;
12.
C ன் மதிப்பை கண்டுபிடி if a = 4, b = 3.
13.
தரவுவிடுப்பு அல்லது தரவுதரும் செய்றாக்குறி பற்றி எழுதுக.
14.
செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?
15.
பொருள்களுக்கான நினைவக இட ஒதுக்கீடு பற்றி சிறுகுறிப்பு வரைக.
16.
இனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.
17.
தரவு மறைப்பு பயன்பாட்டின் காரணத்தை எழுதுக.
18.
டிஜிட்டல் கையெப்பம் பற்றி விளக்குக.
19.
தகவல்களை பாதுகாக்க எந்த தகவல்களை நினைவில் கொள்ள வேண்டும்?
20.
பொதுக்குரியக்கம் சிறுகுறிப்பு வரைக.
21.
மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்?
22.
உள்ளீட்டுச் செய்றாக்குறி பற்றி எழுதுக.
23.
நிபந்தனைச் செயற்குறி பற்றி குறிப்பு வரைக.
24.
ஒப்பீட்டு செயற்குறிகள் அதன் செயல்பாடுகளை எழுதுக.
25.
பொதுவாக செயற்குறிகள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன?
26.
எப்பொழுது அடிப்படை ஆக்கிகள் தாமாகவே அழைக்கப்படும்?
27.
This சுட்டு என்றால் என்ன/ அதன் பயன யாது?
28.
மேலிடல் சிக்கல் எப்போது நிகழும்? அதனைத் தீர்க்க வழி யாது?
29.
தீம்பொருள் பற்றி எழுதுக.
30.
இணைய உலகில் உள்ள சில தர நிலைகள் பற்றி எழுதுக.
31.
private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக.
32.
நமக்கு மரபுரிமத்தின் தேவை யாது?
33.
குறிப்பெயர்களுக்கு பெயரிடுவதற்கான விதிகள் யாது?
34.
C++ ன் வரலாறு பற்றி எழுதுக.
35.
பயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?
36.
பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?
37.
return கூற்றின் பயனை எழுதுக.
38.
செயற்கூறுகளின் தேவைகளை எழுதுக.
39.
முன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?
40.
Inline செயற்கூறு குறிப்பி வரைக.
41.
தலைப்பு கோப்புகள் பற்றி சிறு குறிப்பு வரைக.
42.
1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரலை எழுதுக.
43.
வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று
44.
switch கூற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் யாவை?
45.
for மடக்கு இயங்கும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
46.
goto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக
47.
பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் வகைகளை எழுதுக.
48.
கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.
49.
பின்னலான if கூற்று என்றால் என்ன?அவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.
50.
getline() செயற்கூறு பற்றி வரைக.
51.
cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
52.
அணியின் உறுப்புகளை அணுக கீழொட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கலாம்?
53.
ஒரு பரிமாண அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
54.
பின்வரும் எண்கள் எந்தஎண் முறைசார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.
55.
பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.
56.
நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.
57.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.
58.
A என்ற ஒரு முழு எண்னை B என்ற எண்ணால் வகுத்து , ஈவு மற்றும் மீதியை கணக்கிடும் நெறிமுறைக்கு பாய்வுப்படம் வரைக.
59.
பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை?
60.
போலிக்குறிமுறையை விவரி.
61.
நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?
62.
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
63.
ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற வேண்டிய முறைக்க யாவை?
64.
வழிமுறைகளை பண்புகள் யாவை?
65.
ஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.
66.
கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?
67.
விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.
68.
தரவு மற்றும் தகவல் விவரி.
69.
எதிர்மறைஎண்களுக்கனா 2ன் நிரப்பி கண்டறியும் விதம் பற்றி எழுதுக
70.
எண் முறைகள் பற்றி எழுதுக
71.
ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)
72.
பின்வரும் பதின்ம எண்களை இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண்களாக மாற்றுக. 1920
73.
74.
கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 6247
75.
கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 145
76.
கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: A6
77.
கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65
78.
இருநிலை எண் வடிவில் கூட்டுக: 2310 + 1210
79.
கூட்டுக: 10112 + 10012
80.
(-24)10 கான 1ன் நிரப்பு காண்க.
81.
நெறிமுறை வர்க்க மூலத்தின் விவரக்குறிப்பைக் கவனியுங்கள்
82.
ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை (square root) கணக்கிடுவதற்கு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதவும்
83.
ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.
84.
குரோம்லேண்டின் பச்சோந்திகள் பிரச்சனை -கருதுக
85.
இரண்டு எண்களைக் கூட்டுவது?
86.
(25F)16 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக
87.
கொடுக்கப்பட்டுள்ள (11.011)2 இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.
88.
(1111010110)2 க்கு நிகாரான பதினாறு நிலை எண்ணாக மாற்றுக.
89.
(65)10 என்ற எண்ணை எண்ம நிலை எண்ணாக மாற்றுக
90.
2516 என்ற பதினானாறு நிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக
1.
கோவை ஒரு மதிப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட செயலேற்பிகள் மற்றும் சுழியம் அல்லது அதற்கு மேற்பட்ட செய்குறிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2.
#include < iostream >
using namespace std;
int main()
{
float r, area;
cout << "\n Enter Radius: ";
cin >> r;
area = 3.14 * r * r;
cout << " \n The Area of the circle is " << area;
}
3.
# include < iostream >
using namespace std;
int main()
{
char ch;
cout << "\n Enter a character: ";
cin >> ch;
ch = ch + 1;
cout << "\n The Next character: " << ch;
}
வெளியீடு
Enter a character: A
The Next character: B
4.
# include < iostream >
using namespace std;
int main()
{
int num 1, num 2, sum;
// variables num 1, num 2, and sum are declared as integers
cout << "\n Enter Number 1: ";
cin >> num 1;
cout << "\n Enter Number 2: ";
cin >> num 2;
sum = num 1 + num 2;
cout << "\n The sum of " << num 1 << " and " << num 2 << " is " << sum;
}
5.
| உள்ளார்ந்த அழைப்பு | வெளிப்படையான அழைப்பு |
|---|---|
| இந்த முறையில் எப்பொழுதெல்லாம் பொருள் உருவாக்கப்படுகிறதோ அப்பொழுது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது | இந்த முறையில் ஆக்கியின் பெயரை வெளிப்படையாக கொடுக்கும்போது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி அழைக்கப்படுகிறது. அதனால் பொருளை உருவாக்கி தொடங்கி வைக்க முடிகிறது. |
| எடுத்துக்காட்டு: simple s1 (10, 20); இதில் s1 என்ற பொருளை உருவாக்கும்போது அளபுருவை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது. | எடுத்துக்காட்டு: simple s1 = simple(10,20); //வெளிப்படையான அழைப்பு. |
6.
பின்னலான இனக்குழுவை இரண்டு வழிகளில் உருவாக்கலாம்.
(i) ஓர் இனக்குழுவிற்குள் மற்றொரு இனக்குழுவை அமைத்தல்.
(ii) ஓர் இனக்குழுவின் பொருளை மற்றொரு இனக்குழுவின் உறுப்பாக அறிவித்தல்.
7.
C++ ல், ஏழுவிதமான் கோவைகள் உள்ளன.
அவையாவன:
(i) மாறிலிக் கோவை
(ii) முழு எண் கோவை
(iii) மிதப்புப் புள்ளி கோவை
(iv) ஒப்பீட்டுக் கோவை
(v) தருக்கக் கோவை
(vi) பிட்நிலை கோவை
(vii) சுட்டுக் கோவை
8.
(i) 1.6666
(ii) 1
9.
(i) ஒரும செயற்குறி ஒரே ஒரு செயலேற்பியை மட்டும் ஏற்கும் - ++,--
(ii) இரும செயற்குறி இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும் -%,/,+,
(iii) மும்ம செயற்குறிகள் மூன்று செயலேற்பியை மட்டும் ஏற்கும் - ? :
10.
using namespace std: என்னும் வரியானது, standard namespace -சைப் பயன்படுத்துமாறு நிரல் பெயர்ப்பிக்கு கூறுகிறது. Namespace என்பது இனக்குழு, பொருள் மற்றும் மாறிகளுக்குத் தேவையான குறிப்பெயர்களின் தொகுப்பாகும். ஒரு பெரிய செயல்த்திட்டத்தில் ஏற்படும் பெயர் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகளை namespace கொடுக்கிறது. ANSI C++ தரக்குழுவினால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11.
if (sales > 15000)
com = sales + 5/100
else
com = 0;
12.
(a) C = a++ * 6+ ++b * 5 +10;
C = a++ * 6+ ++b * 5 +10
= 4 * 6 + 4 * 5 + 10
= 24 + 20 + 10 = 54
(b) a ன் மதிப்பை கண்டுபிடு if x = 4
a = ++ a/6 + b++ % 3
= 12 * (++9/6 + b++%3)
= 12 * (13/6 + 8 % 3)
= 12 * (2+2) = 48
13.
<< என்பது C++ ல் உள்ள வெளியீட்டு செயற்குறியாகும். வலதுபக்கம் உள்ள மாறியின் மதிப்புகளைப் பெற்று இடப்பக்கம் உள்ள முன் வரையறுக்கப்பட்டுள்ள பொருளான cout-க்கு அனுப்புகிறது. இது தரவு விடுப்பு (insertion) அல்லது தரவு தரும் (put-to) செயற்குறியாகும். இரு ஒரு இரும செயற்குறியாகும்.
14.
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு அளபுருவாக மற்ற தரவுகளை/தரவு வகைகளை அனுப்புவது போல் பொருளையும் அளபுருவாக அனுப்பி வைக்க முடியும். பொருளானது இரண்டு விதங்களில் அளபுருவாக அனுப்பி வைக்க முடியும்.
(i) மதிப்பு மூலம் அனுப்புதல் (Call by Value)
(ii) குறிப்பு மூலம் அனுப்புதல் (Call by Reference)
15.
இனக்குழு வரையறுப்பின் ஒரு பகுதியாக உறுப்பு செயற்கூறுகள் வரையறுக்கப்பட்டால் மட்டுமே அவை உருவாக்கப்பட்டு நினைவகத்தில் இருத்தப்படுகின்றன. அந்த இனக்குழுவைச் சார்ந்த அனைத்துப் பொருள்களும் ஒரே உறுப்பு செயற்கூறை பயன்படுத்திக் கொள்வதால், ஒவ்வொரு பொருள் உருவாக்கப்படும் போதும் உறுப்பு செயற்கூறுகளுக்கு தனித்தனி நினைவக இடம் ஒதுக்கப்படுவதில்லை. உறுப்பு மாறிகளுக்குத் தேவையான நினைவக இடம் மட்டும் ஒவ்வொரு பொருள் உருவாக்கப்படும் போதும் தனித்தனியே ஒதுக்கப்படும். ஏனெனில் ஒவ்வொரு பொருளின் தரவு உறுப்புகள்/உறுப்பு மாறிகள் வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
16.
இனக்குழுவானது உறுப்புகளை உள்ளடக்கியதாகும். உறுப்புகளானது தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயற்கூறுகள் என வகைப்படுத்தப்படும், தரவு உறுப்புகள் என்பவை தரவு மாறிகள் எனப்படும். இவை இனக்குழுவின் பண்புக்கூறுகளைக் குறிப்பதாகும். உறுப்பு செயற்கூறுகள் என்பவை ஓர் இனக்குழுவானது குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய உதவும் செயற்கூறுகளாகும். உறுப்பு செயற்கூறுகளானது வழிமுறைகள் (Methods) எனவும் தரவு உறுப்புகளானது பண்புக்கூறுகள் (attributes) எனவும் அழைக்கப்படும்.
17.
பொருள்நோக்கு நிரலாலாக்க மொழியின் மிக முக்கியமான பண்புக்கூறுகளுள் ஒன்று தரவு மறைப்பு (Data hiding) என்பதாகும். இது நிரலில் உள்ள செயற்கூறானது, இனக்குழவிற்குள் அறிவிக்கப்பட்டிருக்கும் உறுப்புகளை (தரவு உறுப்புகள், உறுப்புச் செயல் கூறுகள்) அணுகுவதற்குத் தடை விதிக்கிறது. இனக்குழுவின் உறுப்புகளை அணுக தடைவிதிப்பதற்கு இனக்குழுவினுள் அணுக தடைவிதிப்பதற்கு இனக்குழுவினுள் அறிவிக்கப்பட்டிருக்கும் Private, protected மற்றும் Public என்ற சிறப்புச் சொற்கள் பயன்படுகிறது.
18.
டிஜிட்டல் கையெப்பம்: டிஜிட்டல் கையெப்பம் என்பது சமச்சீரற்ற குறியாக்கத்தின் அடிப்படையிலானது மின்னணு ஆவணத்தின் நிலை மின்னணு ஆவண பரிவர்த்தனை அல்லது செய்தியின் தோற்றம் அல்லது அடையாளம் மற்றும் நிலைக்கான ஆதாரங்களை வழங்க முடியும். அத்துடன் கையொப்பமிட்ட தகவல்களையும் ஒப்புக்கொள்ளுதல் ஆகும்.
19.
(i) இணையதளத்தை பயன்படுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
(ii) மின்னணு அஞ்சல்களை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்பக் கூடாது.
(iii) ஆன்டி நச்சுநிரலை நிறுவி மேம்பட்டு செய்து (Update) கொள்ள வேண்டும்.
20.
பொது குரியக்கம் :
(i) பொது குறியீடு குறியாக்கத்தை சமச்சீரற்ற குறியாக்கவியல் என்று அழைக்கப்படுகின்றது. இது முக்கிய மதிப்பின் ஜோடியின் கருவியை பயன்படுத்துகிறது.
(ii) குரியக்கம் மற்றும் மறை குரியக்கம் செயல்முறைக்கு வேறுபட்ட குறியீடு பயன்படுகிறது.குறியீடு ஒன்று என்பது பொதுவாக தனிப்பட்ட குறியீடு என்று அழைக்கப்படுகிறது.
(iii) தனிப்பட்ட குறியீடு உரிமையாளரால் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. பொதுகுறியீடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது அல்லது பொது மக்களுக்கு அதிகமாக கிடைக்கிறது. பெருநபரின் பொதுவிசையுடன் குறியாக்கப்பட்ட தரவு தொடர்புடைய தனிப்பட்ட குறியீடு மூலமே குறியாக்கம் செய்யப்படும்.
21.
மரபுரிமத்தின் நன்மைகளாவன:
(i) இது நடைமுறை வாழ்வில் உள்ள உறவு நிலையை சிறப்பாக எடுத்துக்காட்ட உதவுகிறது.
(ii) நிரல் குறிமுறையின் மறுபயனாக்கத்தை சாத்தியமாக்கி உள்ளது.
(iii) இது மாற்றங்களை ஆதரிக்கும்.
22.
>> என்பது C++ ன் உள்ளீட்டு செயற்குறியாகும். இது விசைப்பலகையின் மூலம் மதிப்புகளைப் பெற்று வலப்பக்கம் உள்ள மாறியில் மதிப்பை இறுத்துகிறது. எனவே, இது தரவு ஈர்ப்பு (extraction) அல்லது தரவு பெரும் (get from) செயற்குறி எனப்படும்.
இந்த செயற்குறிக்கு இரு செயலேற்பிகள் தேவைப்படுவதால், இது ஒரு இரும செயற்குறியாகும். விசைப் பலகையின் மூலம் பெறப்படும் உள்ளீட்டினை, முன்னதாகவே வரையறுக்கப்பட்ட cin என்னும் பொருளால் (சி-இன் என்று உச்சரிக்கப்படுகிறது) அடையாளம் காண்கிறது, இது முதல் செயலேற்பியாகும். இரண்டாவது செயலேற்பி ஒரு மாறியாக இருக்க வேண்டும்.
23.
நிபந்தனைச் செயற்குறி (Conditional Operator):
C++ இல் உள்ள ஒரே ஒரு நிபந்தனைச் செயற்குறி (?;) உள்ளது. இது ஒரு மும்ம செயற்குறி ஆகும். இந்த செயற்குறி if else கட்டுப்பாட்டு கூற்றுக்கு மாற்றாக பயன்படுகிறது.
24.
| செயற்குறி | செயல்பாடு | எடுத்துக்காட்டு |
| > | விடப்பெரிது | a > b |
| < | விடச் சிறிது | a < b |
| >= | விடப்பெரிது அல்லது நிகர் |
a >= b |
| <= |
விடச் சிறிது |
a <= b |
| == | நிகரானது | a == b |
| != | நிகரில்லை | a != b |
25.
C++ செயற்குறிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
(i) கணக்கீட்டுச்செயற்குறிகள் (Arithmetic Operators)
(ii) ஒப்பீட்டுச்செயற்குறிகள் (Relational Operators)
(iii) தருக்கச்செயற்குறிகள் (Logical Operators)
(iv) பிட் நிலைச்செயற்குறிகள் (Bitwise Operators)
(v) மதிப்பிருந்து செயற்குறிகள் (Assignment Operators)
(vi) நிபந்தனைச்செயற்குறிகள் (Conditional Operator)
(vii) பிற செயற்குறிகள் (Other Operators).
26.
அடிப்படை இனக்குழுவின் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் மரபுவழியாக பெறப்படுவதில்லை. ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழவில் ஒரு பொருளை உருவாக்கும் போது, அடிப்படை இனக்குழுவின் ஆக்கிகள் தாமாகவே அழைக்கப்பட்டுவிடும்.
27.
'this' சுட்டு ஓர் மாறிலி சுட்டு ஆகும்; அது நடப்பு பொருளின் நினைவக முகவரியை நிறுத்திவைக்கிறது. இது நடப்பில் அழைக்கப்படும் பொருளை அடையாளம் கண்டுகொள்கிறது. இது, உறுப்புச் செயற்கூறுகளின் அளபுரு மாறியின் பெயரும், உறுப்பு தரவுகளின் பெயரும் ஒன்றாக இருக்கும் போது பயனுள்ளதாக இருக்கும். தரவு உறுப்புகளை அடையாளம் காண "this தரவு உறுப்பின் பெயர்" என்று கொடுக்கப்பட வேண்டும்.
28.
தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும், அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும் ஒரே பெயரை பெற்றிருந்தால், தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அடிப்படை இனக்குழுவின் மரபுவழி பெறப்பட்ட செயற்கூறுகளை நிழலிடும்/மறைக்கும். இதை செயற்கூறு மேலிடல் என்கிறோம். இந்த சிக்கலை தீர்க்க அடிப்படை இனக்குழு பெயர் அடுத்து : : மற்றும் உறுப்பு செயற்கூறு பெயர் குறிப்பிட வேண்டும்.
29.
(i) இணையவழி தொந்தரவு பல்வேறு செயல்களான திருடுதல்;
(ii) மறையாக்கம் அல்லது முக்கியமான தரவுகளை நீக்கம் செய்தல்,
(iii) எச்சரிக்கை அல்லது கணிப்பொறி செயல்பாடுகளை நடத்துதல்,
(iv) செயல்பாடுகளை அனுமதி இல்லாமல் கண்காணித்தல்.
30.
இன்றைய இணைய உலகில் சில தர நிலைகள் உள்ளன.
(i) திருட்டு மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது.
(ii) அடுத்த பயனரின் கணக்கை அனுமதியின்றி பயன்படுத்தாமல் இருப்பது.
(iii) அடுத்தவரின் கடவுச்சொல்லை திருடாமல் இருப்பது.
(iv) ஊடுருவல் செய்யாமல் இருப்பது.
31.
(i) private என வகைப்படுத்தப்பட்ட அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் ஆனால் அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பண்புக்கூறுகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இனக்குழுவிற்கு இது பொருந்தாது.
(ii) protected என வகைப்படுத்தப்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே எடுத்தாள முடியும். இனக்குழுவிற்கு வெளியே அதனை எடுத்தாள முடியாது.
(iii) public என வகைப்படுத்தப்பட்ட அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழு மட்டுமல்லாது, இனக்குழுவுக்கு வெளியேயும் எடுத்தாள முடியும்.
32.
(i) பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய பண்புக்கூறான மரபுரிமம், நிரல் குறிமுறையின் மறு பயனாக்கத்திற்கு வழி செய்கிறது. மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின் அடிப்படையில் (அடிப்படை இனக்குழு) புதிய இனக்குழுக்களை தருவிக்கும் (தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள்) செயல்முறை ஆகும்.
(ii) மரபுரிமம் ஒரு இனக்குழுவிலிருந்து மற்றொரு இனக்குழுவிற்கு அனைத்து குறிமுறைகளையும்(Private என வகைப்படுத்தப்பட்ட தரவு உறுப்புகள், உறுப்பு செயற்கூறுகள் தவிர்த்து) தருவித்துக் கொள்ள அனுமதிக்கிறது.
(iii) தருவிக்கப்பட வேண்டிய இனக்குழுவை அடிப்படை இனக்குழு அல்லது தாய் இனக்குழு (parent class) என்றும் ஒரு இனக்குழுவிலிருந்து மரபுரிமையாக பெறப்பட்ட இனக்குழுவை தருவிக்கப்பட்ட இனக்குழு அல்லது சேய் இனக்குழு என்று கூறுகிறோம்.
(iv) தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்திமிக்கவை. இது கூடுதல் பண்புக்கூறுகளையும், செயல் முறைகளையும் பெற்றுக்கொண்டு செயல்திறனை அதிகரிக்க செய்கிறது.
33.
(i) ஒரு குறிப்பெயரின் முதல் எழுத்து கண்டிப்பாக எழுத்து அல்லது அடிக்கோடிட்டு (-) இருக்க வேண்டும்.
(ii) எழுத்துக்கள், எண்கள் மற்றும் அடிக்கோடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பிற சிறப்பு எழுத்துக்கள்
(iii) C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தியாகும் (case sensitive) பெரிய (Uppercase) மற்றும் சிறிய (lowercase) எழுத்துக்கள் வெவ்வேறாக கருதப்படுகின்றன.
(iv) சிறப்புச் சொற்கள் (Keywords) அல்லது காப்புச் சொற்கள் (Reserve words) குறிப்பெயரின் பெயராக பயன்படுத்த முடியாது.
(v) ANSI தரநிலைகளின் படி, C++ -ல் குறிப்பெயர்களுக்கான எழுத்தின் நீளத்திற்கு எந்த எல்லையும் இல்லை. எனவே அனைத்து எழுத்துக்களும் குறிப்பிடத்தக்கவை.
(vi) மாறியின் பெயரை பல்வேறு பகுதிகளாக பிரிக்க, மாறியின் பெயர்களில் அடிக்கோடிட்டுக் கொள்ளலாம் (எ.கா.: total_scale என்பது சரியான குறிப்பெயர்,total sales ஒரு தவறான குறிப்பெயர் ஆகும்.)
(vii) tamilMark போன்ற பாணி கொண்ட மாறியை பயன்படுத்தலாம். இரண்டாவது வார்த்தையின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் இருப்பதைக் காணலாம்.
34.
(i) C++ ஆனது 1979 ஆம் ஆண்டில் AT & T பெல் ஆய்வகத்தில் ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரப் (Bjarne Stroustrup) - ஆல் உருவாக்கப்பட்டது. C++ மொழி முதலில் C மொழியில் இருந்து தருவிக்கபட்டது மற்றும் சிமுலா (Simula), பி.சி.பி.எல்.(BCPL), அடா (Ada), எம்.எல்.(ML), சி.எல்.யு.(CLU) மற்றும் அல்கால் 68 (ALGOL 68) போன்ற பல மொழிகளால் தாக்கத்தை ஏற்படுத்தியது. " புதிய சி" மற்றும் இனக்குழு உடன் சி என்று 1983 வரை வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு, C++ என ரிக் மாஸ்கிட்யால் (Rick Mascitti.) பெயர் சூட்டப்பட்டது.
(ii) சர்வதேச தரநிர்ணய அமைப்பால் (ISO - International Organization for standardaization) - வால் C++ மொழி தரப்படுத்தப்பட்டது.
(iii) டிசம்பர் 2017-ல் வெளியிடப்பட்ட சமீபத்திய நிலையான பதிப்பு ISO / IEC 14882: 2017 என அழைக்கப்படுகிறது. முதல் தரப்படுத்தப்பட்ட பதிப்பு 1998 இல் ISO / IEC 14882: 1998 ஆக வெளியிடப்பட்டது. பின்னர் C++ 03 (ISO/ IEC 14882: 2003), C++ 11 (ISO / IEC 14882: 2011) மற்றும் C++ 14 (ISO / சிஎச் 14882: 2014). அடுத்த நிலையான பதிப்பு 2020 இல் C++ 20 ஆக இருக்கும்.
(iv) C++ - 9 ன் தாக்கம் C # (சி- ஷார்ப்) (C - Sharp), டி (D), ஜாவா (Java) மற்றும் c -இன் புதிய பதிப்புகளில் உள்ளது.
35.
பயனர் வரையறுத்த செயற்கூறை செயல்படுத்த அதன் பெயர் மற்றும் தேவையான செயலுருபுக்கள் கொண்டு அழைக்க வேண்டும். செயற்கூறை அழைக்கப்படும் போது நிரல்பெயர்ப்பி செயற்கூறின் முன் வடிவத்தை பயன்படுத்தி செயற்கூறு சரியாக அழைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கும் முன்வடிவில் உள்ள செயலுருபின் தரவு வகையும் அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுக்களின் தரவு வகைகள் பொருத்தமாக இல்லையெனில் தரவு வகை மாற்றம் தானகவே செய்ய முடியும் என்றால் நிரல்பெயர்பி அதை செய்யும். இல்லையெனில் நிரல்பெயர்பி இதற்கு பிழை அறிக்கை அறிவிக்கும்.
36.
(i) திருப்பி அனுப்பும் தரவு வகை என்பது C++ ஏற்கும் ஏதேனும் ஒரு ஏற்கதகு தரவின வகையில் அமைக்கலாம்.
(ii) செயற்கூறின் பெயர் என்பது பயனர் வரையறுத்த குறிப்பெயர்கள்.
(iii) அளபுருக்களின் பட்டியல் , கொடுப்பது அவசியமில்லை . இது மாறிகளின் பட்டியல் இதில் கொடுக்கப்பட்டுள்ள மாறியின் முன்பாக அதன் தரவினத்தை அறிவிக்கப்பட்டு , மாறிகள் காற்புள்ளியுடன் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(iv) செயற்கூறின் உடற்பகுதி - செயற்கூறின் உடல் பகுதியில் இந்த செயற்கூறு செயற்படுத்த வேண்டிய C++ கூற்றுகளை கொண்டிருக்கும்.
37.
செயற்கூறிலிருந்து கட்டுப்பாட்டை திரும்பப் பெற return கூற்று பயன்படுகிறது.இதை தரவும் கூற்றாக வகைப்படுத்தலாம்,ஏனென்றால் இந்த கூற்றை இயக்கியவுடன் செயற்கூறின் இயக்கம் நிறுத்தப்பட்டு கட்டுப்பாடு அழைக்கும் கூற்றுக்கு திரும்ப அனுப்பலாம். return கூற்று அதனோடு தொடர்புடைய மதிப்பு உடன் அல்லது மதிப்பு இல்லமலோ இருக்கலாம். மதிப்பு உடன் உள்ள return கூற்று அழைப்பு கூற்றுக்கு அந்த மதிப்பை திருப்பி அனுப்பும் , void செயற்கூறிற்க்கும் அளபுரு ஏற்காத return கூற்றைப் பயன்படுத்தி அந்த செயற்கூற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்.
தொடரியல் : return கோவை/மாறி
38.
பிரித்தலும் மற்றும் சேர்த்தலும் (divide and Conquer );
(i) சிக்கலான நிரல்களை மேலாண்மை செய்ய அவற்றை துணை நிரல்களாகப் பிரிக்கலாம்.
(ii) தனிப்பட்ட செயற்கூறுகளை உருவாக்குவதல் பிழை கண்டறிதல் மற்றும் சோதனை செய்தல் போன்றவற்றில் நிரலர்கள் கவனம் செலுத்தலாம்.
(iii) பல நிரலர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு செயற்கூறுகளில் பனியாற்றலாம்.
மறுபயனாக்கம் (Reusability ) : நிரலில் உள்ள சில வரிகளை மீண்டும் மீண்டும் வெவ்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தலாம். ஒரு நிரலின் பல்வேறு நகல்களை நீக்க செயற்கூறுகள் பயன்படுகின்றன. மேலும் செயல்கூறுகள் நிரலை பராமரிக்கவும் அவற்றின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. சில செயற்கூறுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் பல்வேறு உள்ளீடுகளை கொண்டு அழைக்கலாம்.
39.
மாறியில் தொடக்க மதிப்பிருந்தும் வடிவில் முன்னியல்பு மதிப்பு தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
void defaultvalue (int n1 = 10, n2 = 100);
ஒரு செயற்கூறின் அழைப்புக் கூற்றில் சில செயலுறுப்புகளை விட்டுவிடவோ அல்லது செயலுருபுக்கள் இல்லாமல் அழைக்கவோ முன்னியல்பு செயலுருபுக்கள் வழி வகுக்கின்றன.
எடுத்துக்காட்டு :
defaultvalue (x, y);
defaultvalue (200, 150);
defaultvalue (150);
default value (x, 150);
முன்னி யல்பு மதிப்புகள் செயற்கூறு முன்வடிவில் செயலுருபுப் பட்டியலில் இறுதியாகவோ இடம் பெற வேண்டும்.பட்டியலில் தொடக்கத்திலோ , நடுவிலோ இடம் பெறக்கூடாது.
40.
ஒரு செயற்கூறை அழைக்கும் கூற்று நிரல் பெயர்ப்பியை செயற்கூறுக்கு (வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அடுக்கங்களில் (STACKS) சேமிக்கப்படும் தாவச்செய்து மற்றும் செயற்கூறு செயல்பாட்டின் மின் அழைப்புக்கூறுக்கு அடுத்திருக்கும் கட்டளைக்குத் தாவச் செய்கிறது.இதனால் நிரலின் இயக்க நேரத்தின் வேகம் குறையும்.சிறிய செயற்கூறின் வரையறுப்புக்கு அடுக்கங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க Inline செயற்கூறுகள் பயன்படுத்தலாம்.
inline செயற்கூறு மூல நிரலில் சாதாரணச் செயற்கூறு போன்றே தோற்றமளிக்கும்.ஆனால் செயற்கூறின் கட்டளைகள் முழுமையும் அழைப்புக்கு கூற்றுக்குப் பதிலாக அப்படியே நிரலில் செருகப்பட்டுவிடும்,Inline சிறப்புச் சொல்லை செயற்கூறின் தலைப்பில் இணைத்து அந்த செயற்கூற்றை inline செயற்கூற்றாக மாற்ற முடியம்.
41.
நூலக செயற்கூறுகளுக்கு தேவையான செயற்கூறு முன்மாதிரி மற்றும் வரையறுப்புகளை தலைப்புக் கோப்புகள் கொண்டுள்ளது. நூலக செயற்கூறுகளில் உபயோகிக்கக்கூடிய தரவின் வகைகள் மற்றும் மாறிலிகளை பற்றிய வரையறுப்புக்களும் தலைக்கோப்பு கொண்டுள்ளது. தலைப்பு கோப்பின் விரிவாக்கம். h என்ற அறியப்படும். ஒரு தலைக்கோப்பில் பல உள்ளிணைந்த செயற்கூறுகளைப் பற்றிய வரையறுப்புகள் கொண்டிருக்கும்.
உதாரணமாக: stdio.h என்ற தலைப்பு கோப்பில் உள்ளீட்டு /வெளியீட்டிற்கான செயற்கூறுகளைபற்றி முன்னரே வரையறுக்கப்பட்டுள்து.
42.
# include < iostream >
using namespace std;
int main ( )
{
int i, sum = 0;
for (i =1; i < = 10; i++)
{
sum=sum +i
}
cout << " The sum of 1 to 10 is " << sum;
return 0;
வெளியீடு
The sum of 1 to 10 is 55
43.
break மற்றும் continue ஒப்பீடு
| break | continue |
| break மடக்கினை விட்டு வெளியேற செய்யும் | continue கூற்று மடக்கை விட்டு வெளியேற செய்யாது. |
| இது பன்முறை செயலை முடித்து வைக்கும் | இது பன்முறை செயலை தவிர்க்கச் செய்யும் |
| இந்த கூற்றை இயக்கப்படும் பொழுது கட்டுப்பாட்டை மடக்கினை விட்டு வெளியேறி மடக்கிற்கு அடுத்து வரும் கூற்றுகளை இயக்கம். | இந்த கூற்று இயக்கப்படும்பொழுது மடக்கைவிட்டு வெளியேறாமல் மடக்கின் அடுத்த சுழற்சிக்குச் தாவச் செய்யும். |
| break கூற்று மடக்கு மற்றும் switch கூற்றுடன் பயன்படுத்தலாம். | continue கூற்று மடக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும், switch கூற்றுடன் பயன்படுத்தப்படாது. |
44.
switch கூற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:
(i) switch கூற்று, தரத்தை ஒப்பிடுதலுக்கான பணிக்கு மட்டுமே பயன்படுகிறது.
(ii) switch கூற்றில் இரு வெல்வேறு case கூற்றுகளுக்கு ஒரே மதிப்புகள் இருக்கக் கூடாது.
(iii) switch கூற்றில் குறியுறு மாறிலிகள் பயன்படுத்தப்பட்டால், அவை தாமாகவே ASCII குறியீட்டின் சமமான மதிப்பிற்கு மாறிக்கொள்ளும்.
(iv) பல தேர்வுகளிலிருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில், switch கூற்று மிகவும் பொருத்தமான தேர்வு.
45.
for மடக்கு இயங்கு முறை

இங்கே மடக்கின் உடற்பகுதியில் ஒரே ஒரு நிரல் கூற்று மட்டுமே உள்ளது. எனவே அதனை நெளிவு அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், முதலில் கட்டுப்பாட்டு மாறி iக்கு தொடக்க மதிப்பிருத்தபப்டும், பின்னர் i மாறியின் தொடக்க மதிப்பு 10 என்ற எண்ணுடன் ஒப்பிடப்படும். ஒப்பீட்டின் முடிவு சரி என இருந்தால், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு, இயக்கப்பட்ட வேண்டிய நிரல் கூற்று cout << " vallue ofi:" << endl; என்பதை இயங்கும். பின்னர், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு for மடக்கின் மிகுப்பு கோவைக்குச் செல்லும். அங்கு i ன் மதிப்பு மிகுக்கப்படும் எண்கள் வெளியிடப்படும். நிபந்தனை சோதிப்பு தவறாகும்போது, கட்டுப்பாட்டு பாய்வு மடக்கை விட்டு வெளியேறும்.
46.
goto கூற்று நிபந்தனையில்லா கட்டுப்பாட்டு கூற்றாகும். இது நிரலில் ஒரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிற்கு எந்த வித நிபந்தனையும் இன்றிச் தாவச் செய்யும்.

47.
பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் சோதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு, மடக்குகளை நுழைவு சோதிப்பு மடக்கு மற்றும் வெளியேறல் சோதிப்பு மடக்கு என இரண்டு வகையாகக் பிரிக்கப்டுகிறது.
நுழைவு சோதிப்பு மடக்கில், நிபந்தனை கோவை மடக்கினுள் நுழையும் முன் சோதிக்கப்டுகிறது. அவ்வாறின்றி வெளியேறல் சோதிப்பு மடக்கில் நிபந்தனைக் கோவை மடக்கினை விட்டு வெளியேறும் முன்பாக சோதிக்கப்படுகிறது.
48.
# include < iostream >
using namespace std;
int main ( )
{
int num, rem;
coout << "\n Enter a number:";
cin >> num;
rem = num%2;
if (rem ==0)
cout << " \n The given number " << num << " is Even ";
else
cout << "\n The given number " << nim << " is Odd";
return 0;
}
49.
ஒரு if கூற்று, மற்றொரு if கூற்றை கொண்டிருந்தால் அது பின்னாலான if கூற்று என்று அழைக்கப்படுகிறது. பின்னலான if கூற்றுகள், பின்வரும் மூன்று வடிவங்களில் அமைக்கப்படும்.
(i) ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
(ii) ஒரு if கூற்றின் எல்ஸ் கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
(iii) ஒரு if கூற்றுக்கு உள் ஒரு if கூற்றும், எல்ஸ் கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
50.
C++ மொழியில் getline () என்ற செயற்கூறும் ஒரு முழு வரியிலான இடைவெளிகளுடன் கூடிய உரையை உள்ளீட்டு தாரையின் மூலம் உள்ளெடு செய்யப்பயன்படுகிறது. இது குறியுருக்கான நகர்த்தி திரும்பலை (newline charcter) அல்லது வரம்புக்குறியை (delimiter) பயனர் உள்ளீடு செய்யும் வரை உள்ளீட்டை ஏற்கும். < string > என்ற தலைப்பு கோப்பில் இந்த செயற்கூறுக்கு உரிய அறிவிப்புகள் உள்ளது.
51.
C++ மொழியில் cin.get() என்ற செயற்கூறானது வேற்று இடைவெளிகளுடன் கூடிய ஒரு முழு நீள வரியை உள்ளீடாக பெற பயன்படுகிறது. இந்த செயற்கூறு இரண்டு செயலுருபுகளை ஏற்கும். முதல் செயலுருபு சரத்தின் பெயரையும் இரண்டாவது செயலுருபு அணியின் அதிகப்படியான அளவையும் குறிக்கும்.
52.
(i) அணியின் உறுப்புகளை அணுக அணியின் பெயருடன் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கீழொட்டின் மதிப்பை கொடுக்க வேண்டும்.
(ii) அடைப்பு குறிக்குள் கொடுக்கப்படும் கீழொட்டு ஒரு மாரியாகவோ, ஒரு மாறிலியாகவோ அல்லது ஒரு கோவையாகவோ இருக்கலாம்.
(iii) கோவையாக இருந்தால் அதன் விடையானது ஒரு முழு எண் மதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
53.
இது ஒரு எளிய வடிவிலான அணி ஆகும். ஒரு பரிமாண அணியில் மதிப்புகள் ஒரே வரிசை அல்லது ஒரே நெடுவரிசையில் சேமிக்கப்படும்.
அணியை அறிவித்தலுக்கான தொடரியல்:
< data type > < array-name > (< array-size >);
(i) Data-type அணியின் தரவுவகையை குறிக்கும், அதாவது அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் தரவுவகையாகும்.
(ii) Array-name அணியின் பெயரை குறிக்கும், அணியை அணுக இந்த பெயரே உதவும்.
(iii) Array-size அணியின் அளவை குறிப்பதற்கு பயன்படுகிறது. அணியின் அளவு எப்பொழுதும் [] என்ற அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்.
எடுத்துக்காட்டு:
int num 10;
மேலே அறிவிக்கப்பட்டுள்ள "num" என்ற அணியானது 10 முழு எண் மதிப்புகளை சேமிக்கும் அணியாகும்.
54.
| வ.எண் | எண்கள் | எண் முறை |
|---|---|---|
| 1. | (1010)10 | பதின்மஎண் முறை |
| 2. | (1010)2 | இருநிலை எண் முறை |
| 3. | (989)16 | பதினாறுநிலைஎண் முறை |
| 4 | (750)8 | எண்ம எண் முறை |
| 5. | (926)10 | பதின்மஎண் முறை |
55.
1. கணிப்பொறி "பயனர் நட்பு"டன் (User Friendly) இயங்கும் ஒரு இடைமுகத்தை கொண்டிருக்கவில்லை எனில் பயனர் தனது அன்றாடவாழ்விலிருந்து கணிப்பொறியின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வர்.
2. இதுவே "வரைகலைபயனர் இடைமுக" (Graphical User Interface-GUI) அடிப்படையிலான இயக்க அமைப்புகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
56.
1.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் ஒரு அழியாநினைவகம் ஆகும்.இதில் தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும்.
2. PROM-ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.முதன்மை நினைவகம் போன்று அல்லாமல் கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும்,PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
3. PROM-ROM ல் இருந்து மாறுபட்டதாகும் தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும்,அனால் தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது.
4. ஆனல் PROMல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எடுத்துக்கொள்ளலாம்.
5. PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் எழுதப்படுகின்றன.இந்தவகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
57.
1. கணித ஏரணச் செயலகம்: கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை கட்டளை கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை பெற்று கணிப்பொறியில் எல்லாபாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்: உள்ளமைந்தநினைவகம் செயல்பாடுகளுக்கு தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளை சேமிக்கும்.
58.

59.
1. நெறிமுறைகளை கணிப்பொறி நீரலாக்க மொழி அல்லது போலிக்குறிமுறை ஆகியவற்றில் குறிப்பிடுவதை விட பாய்வுபடங்கள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன
2. நெறிமுறையின் அடிப்படை படிநிலை அமைப்பு தெளிவற்றதாக இருக்கும்
3. தேர்ந்தெடூப்பு கூற்றுகள் மற்றும் மடக்குகள் (Loops ) போன்றவை முறையாக வரையறுக்கபட்ட கட்டுப்பாட்டு பாய்வு அமைப்புகளாகும்.பாய்வுப்படங்கள் இது போன்ற அமைப்புகளை வரைவதை கட்டுப்படுத்துவதில்லை
60.
1. போலிக்குறிமுறை என்பது கணிப்பொறி நிரலாக்க மொழியை போன்ற கட்டமைப்பும் , எளிய ஆங்கிலமும் கலந்த ஒரு குறியிட்டூ முறை ஆகும்
2. இந்த குறியிட்டூ முறை ஒரு முறையான தல்ல.நிரலாக்க மொழியின் கட்டுமான தொகுதிகளான மாறிகள் கட்டுப்பாட்டு பாய்வுகள் போன்றவற்றை, போலிகுறிமுறைகளும் பயன்படுத்தி கொள்கின்றன
3. போலிக்குறிமுறையாக குறிப்டப்படும் நெறிமுறைகளை நேரடியாக கணிப்பொறியில் இயக்க முடியாது. ஆனால் இவைபடிப்பவர்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே பயன்படுத்த படுகிறது. எனவே போலி குறிமுறைகள் நிரலாக்க மொழியின் கட்டளை அமைப்பை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை
4. போலிக் குறிமுறைகள் சரியானதாக இருப்பினும் புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கும். எனினும் போலிக் குறிமுறைகள் , நெறிமுறைகளை குறிப்பிடுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியிட்டூ முறையாகும்
61.
(i) மடக்கின் தொடக்கத்தில் (அதாவது,மடக்கிற்கு முன்பு)
(ii) ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்தில் (அதாவது மடக்கின் உற்பகுதிக்கு முன்பு)
(iii) ஒவ்வொரு சுற்றின் முடிவில் (அதாவது மடக்கின் உற்பகுதிக்குப் பின்பு)
(iv)மடக்கின் இறுதியிலும் (அதாவது, மடக்கிற்கு பின்பு)
62.
P (m, n) = m + 3n 6T6Ifilro,
P (m, n) [m, n := m + 3, n - 1]
= m + 3n [m, n:= m + 3, n- 1]
=(m+3)+3(n-l)
=m+3 +3n- 3
=m+3n
=P(m, n)
(m + 3n) [m, n := m + 3, n - I] = m + 3n என்பதால் +3n v < gJ m, n := in + 3, n - 1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றமிலியாகும்
63.
(i) மடக்கின் தொடக்கத்தில், மடக்கின் மாற்றமிலியை மெய் என அமைக்க வேண்டும்.
(ii) மடக்கின் உடற்பகுதிகியானது,மடக்கின் இறுதியை நோக்கி நகரும் வகையில்,மாரிகளின் மடிப்பை மாற்ற வேண்டும்.அதே நேரத்தில் மடக்கின் மாற்றமிலியை மாறாமல் பராமரிக்க வேண்டும்.
(iii)மடக்கு முடியும்போது, அதன் முடிவு நிபந்தத்தையும்,மடக்கு மாற்ற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு வெளியிட்டு உறவை பொய்யாக்க வேண்டும்.
64.
i) ஒரு வழிமுறையின் விவரக்குறிப்பு என்பது வழிமுறையின் பெயர் (உள்ளீடுகளுடன் ஒன்றாக), உள்ளீடு பண்புகள் மற்றும் விரும்பிய உள்ளீடு -வெளியீடு தொடர்பு ஆகும்.
ii) ஒரு வழிமுறையின் விவரக்குறிப்பு என்பது வடிவமைப்பாளர் மற்றும் பயனர்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்த வழிமுறை ஆகும்.
iii) கருப்பொருள் என்பது விவரங்களை மறைக்க அல்லது புறக்கணிக்கப்படும் செயல்முறையாகும் அதன் அத்தியாவசிய அம்சங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
iv) பிரச்சினையின் அத்தியாவசிய மாறிகள் மூலம் ஒரு சிக்கலைசுருக்கிறது.
v) வழி முறையில் உள்ள மாறிகளின் மதிப்புகள் செயல்பாட்டின் நிலையை வரையறுக்கின்றன.
65.
i) உருளையின் ஆரம் ச மற்றும் உயரம் என்றால்.
ii) நாம் இரண்டு செயல்பாடுகளை அடையாளம் காண வேண்டும்.
iii) ஒன்று வட்டத்தின் சுற்றளவு மற்றொன்று ஒரு வட்டத்தின் பரப்பளவு பகுதியை கணக்கிடுவதற்கு.
iv) வட்டத்தின் பகுதி (2 ச2) மற்றும் வட்டத்தின் சுற்றளவு (2 சா) என இரண்டும் செயல்பாடுகளை நாம் சுருக்கினால், பின்னர் உருளையின் மேற்பரப்பு பகுதி
v) \(A =2\pi r^2+2\pi rh\)
vi) உருளையின் பகுதி (r, h) 2 வட்டத்தின் பகுதி (r) வட்டத்தின் சுற்றளவு (r) x h
66.
i) தொடர் கட்டுப்பட்டு பாய்வு (ளநளூரநவேயைட உடிவேசடிட கடடிற), கூற்றுகள் அவை எழுதப்பட்டிருக்கும் அதேவரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
ii) தேர்ந்தெடுப்பு கட்டுப்பாட்டு பாய்வு (யடவநசயேவஎந உடிவேசடிட கடடிற), கூற்றின் நிலை சோதிக்கப்பட்டு, நிபந்தனை உண்மை என்றால், ஒரு கூற்று செயல்படுத்தப்படுகிறது; நிபந்தனை தவறானது என்றால், மாற்று கூற்று செயல்படுத்தப்படுகிறது.
iii) சுழற்சி கட்டுப்பாட்டு பாய்வு (iterative control flow) நிலை சோதிக்கப்பட்டு, நிபந்தனை உண்மை என்றால், ஒரு கூற்று செயல்படுத்தப்படுகிறது. நிபந்தனையை சோதிக்கும் இரண்டு படிமுறைகளும், நிபந்தனை தவறாகும் வரைகூற்றுக்களை மீண்டும், மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
67.
i) விசைப்பலகை (கம்பி / கம்பியில்லா / மாய) கணிப்பொறிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுசாதனம் ஆகும்.
ii) எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளுக்கான தனித்தனிப் பொத்தான்களை மொத்தமாக 'எழுத்துரு பொத்தான்கள்" எனலாம்.
iii) கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை, தட்டச்சுப்பொறிகளில் (typewriter) உள்ள விசைப்பொத்தான்களின் அடிப்படையில் தருவிக்கப்படுகிறது.
iv) தரவுகளும், தகவல்களும் விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்து கணிப்பொறியில் உள்ளிடப்படுகின்றது.
v) எழுத்து மற்றும் எண் வகை பொத்தான்களைக் தவிர வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கான பிறசெயல்பாட்டு பொத்தான்களும் (function keys) உள்ளன.
vi) விசைப்பலகையில் பல்வேறு வகைபொத்தான்களின் தொகுப்புகள் உள்ளன, அவை எழுத்துவகை, எண்வகை, செயல்பாட்டு வகை, நுழைவு மற்றும் பதிப்பாய்வு பொத்தான்கள் ஆகும்.
68.
தரவு :
i) பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் அடிப்படை செய்தித் துணுக்கு தரவு எனப்படும்.
ii) இது தொடர்பு கொள்வதற்கும், விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது.
iii) எடுத்துக்காட்டாக 134, 16 'கவிதா', 'சி' போன்றவை தரவிற்கு உதாரணம்.
தகவல் :
i) தகவல் என்பது முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும்.
ii) சரியான பொருள் கொண்ட / அர்த்தமுள்ள தகவலை தருகின்றது.
iii) எடுத்துக்காட்டாக, கவிதாவின் வயது 16.
69.
எதிர்மறைஎண்களுக்கனா 2ன் நிரப்பி வழிமுறைகள் வருமாறு:
1. இருநிலைஎண்களின் அனைத்தும் பிட்டுகளையும் தலைகிழாக்குக. (அதாவது , 1களை 0 ஆகவும் , 0 யை 1 ஆகவும் மாற்றுக )
2. பின்னர் குறைமதிப்பு பிட்டுடன் 1யை கூட்டவும்.
(-24)10ன் நிரப்பியைகாண்க.
| +24 க்கு நிகரான இருநிலை எங்களை | 11000 |
| 8பிட் வடிவில் | 00011000 |
| 1ன் நிரப்பி | 11100111 |
| குறைமதிப்பு பிட்டுடன் 1யை கூட்டுதல் | 1 |
| -24க்கான 2ன் நிரப்பி | 11101000 |
70.
1. எண் முறைகள் எண்களை குறிக்கும் ஒரு வழிமுறையாகும்
2. நடைமுறையில் நாம் பயன்படுத்தும் மிகவும் பொதுவான எண் முறை பதின்ம எண் முறையாகும்
3. இவைதவிர இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண் முறைகளும் பயன்பாட்டில் உள்ளது
4. ஒவ்வொரு எண் முறையும் அதன் அடிமான மதிப்பை கொண்டு அடையாளம் காணப்படும்
5. அடிமானம் ஒவ்வொரு எண் முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு இருக்காள் உருக்களின் எண்ணிக்கையை குறிக்கும்
71.
length (s)
-- inputs : s
-- outputs : sன் நீளம்
if sல் ஒரு வாடிக்கையாளர் உள்ளார் எனில்
அடிப்படை நிலை
1
else
1 + length (tail (s)) - -தற்சுழற்சி நிலை
72.
| பதின்ம எண் | இருநிலை எண் | எண்ணிலை எண் | பதினாறு நிலை எண் |
| 1920 | 11110000000 | 3600 | 780 |
73.
74.
| எண்ணிலை எண் | இருநிலை எண் |
| 6247 | 110010100111 |
75.
| எண்ணிலை எண் | இருநிலை எண் |
| 145 | 1100101 |
76.
| பதினாறு நிலை எண் | இருநிலை எண் |
| A6 | 1010 0110 |
77.
| பதின்ம எண் | இருநிலை எண் | 1ன் நிரப்பி | 2ன் நிரப்பி |
| -65 | 0100 0001 | 1011 1110 | 1011 1111 |
78.
படிநிலை 1: 23 மற்றும் 12யை இருநிலை எண் வடிவில் மாற்றுதல்:
| 2310 | ||||||||||||
| (1) 23 – 16 = 7 (2) 7 – 4 = 3 (3) 3 – 2 = 1 (4) 1 – 1 = 0 |
||||||||||||
2310 = 000101112 |
| 1210 | ||||||||||
| (1) 12 – 8 = 4 (2) 4 – 4 = 0 | ||||||||||
1210 = 000011002 |
படிநிலை 2:
23 மற்றும் 12யை இருநிலை எண் வடிவில் கூட்டுதல்:
| Carry Bit | 1 | 1 | |||||
| 2310 = 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 | 1 |
| 1210 = 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 |
| 3510 = 0 | 0 | 1 | 0 | 0 | 0 | 1 | 1 |
79.

10112 + 10012 = 101002
80.
| கொடுக்கப்பட்ட பதின்ம எண் | இருநிலை எண் | 1 ன் நிரப்பு |
| (-24)10 | 00011000 | 11100111 |
81.
square_root (n)
உள்ளீடு : n என்பது ஒரு முழு எண், n ≥ 0.
வெளியீடு : y என்பது ஒரு முழு எண் y2 = n.
நெறிமுறை வடிவமைப்பாளர், கொடுக்கப்பட்ட எண்ணானது எதிர்மறை எண் அல்ல, மேலும் நெறிமுறை உருவாக்கவும் முடியும். பயனர் கொடுக்கப்பட்ட எண் வர்க்க மூலத்தின் எண்ணாக வெளியீட்டாக எதிர்பார்க்கலாம்.கொடுக்கப்பட்ட எண்ணின் வெளியீடு எதிர்மறை வர்க்க மூல எண்ணாக இருக்கவேண்டும். வெளியீடு நேர்மறை வர்க்க மூல எண் என்று குறிப்பிடப்படவில்லை. பயனர் உள்ளீடாக எதிர்மறை எண்ணைக் கொடுத்தால், வெளியீடு எண்ணின் வர்க்க மூல எண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லைல்லை.
82.
1. நெறிமுறை, வர்க்க மூலம் என பெயரிடுவோம்.
2. இது எண்ணை உள்ளீடாக எடுக்கும். உள்ளீட்டை நாம் n என பெயரிடலாம். n எதிர்மறை எண்ணாக இருக்கக்கூடாது.
3. இது வர்க்க மூலத்தின் n ஐ வெளியீடுகிறது. வெளியீட்டை y என பெயரிடுவோம். பின்னர் n வர்க்க மூலத்தின் y ஆக இருக்க வேண்டும்.
இப்ப்போது நெறிமுறையின் விவரக்குறிப்பு
square_root (n)
உள்ளீடு : என்பது ஒரு முழு எண், n ≥ 0.
வெளியீடு : y என்பது ஒரு முழு எண் y2 = n.
83.
வகு (22, 5) = 4, 2 – ( ஈவு – 4, மீதி – 2)
வகு (15, 3) = 5, 0 – ( ஈவு – 5, மீதி – 0)
A மற்றும் B ஐ உள்ளீடு மாறிகள் என்று கருதுவோம். மாறி q – ல் ஈவையும் மற்றும் மாறி r –ல் மீதியையும் சேமித்து வைப்போம். Q மற்றும் r ஆகியவை வெளியீடு மாறிகள் ஆகும்.
84.
குரோம்லேண்ட் தீவில் மூன்று வெவ்வேறு வகையான பச்சோந்திகள் உள்ளன: சிவப்பு பச்சோந்தி, பச்சை பச்சோந்தி மற்றும் நீல பச்சோந்தி. வெவ்வேறு நிறங்களின் இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவை இரண்டும் மூன்றாவது நிறத்தில் உள்ள பச்சோந்தி நிறத்துக்கு மாறும். சிவப்பு, பச்சை மற்றும் நீல பச்சோந்திகள் எத்தனை முறை சந்திக்கும்போது அவை அனைத்தும் ஒரே நிறத்தில் காணப்பப்படும்.
இது ஒரு நெறிமுறை சிக்கலாகும், ஏனென்றால் பச்சோந்திகள் இடையில் சந்திக்க செய்ய ஒரு நெறிமுறை உள்ளது. நெறிமுறையின் சில பண்புகளை பயன்படுத்தி, நாம் பச்சோந்திகளின் ஆரம்ப எண்ணிக்கையை கண்டுபிடிக்க முடியும், இலக்கையும் அடைய முடியும்.
85.
இரண்டு எண்களை கூட்ட, நாம் முதலில் மிக வலதுபக்கமாக உள்ள இரண்டு எண்களின் இலக்கங்களை கூட்டவேண்டும், பிறகு அடுத்த வலதுபக்கமாக உள்ள இலக்கங்களைக் கூட்டி முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விளைந்த தொகு (carry) எண்ணை சேர்த்து கூட்டவேண்டும். இதேபோல் மீதமுள்ள எண்களை கூட்டவேண்டும். 2586 மற்றும் 9237 ஐ கூட்டுவதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

86.
| கொடுக்கப்பட்டபதினாறு நிலை மதிப்புகள் | 2 | 5 | F |
| 16 ன் அடுக்கு நிலை மதிப்பு | 162 | 161 | 160 |
| நிறை மதிப்பு | 256 | 16 | 1 |
| பெருக்கல் தொகை | 512 | 80 | 15 |
(25F)16 = 512 + 80 +15
(25F)16 = (607)10
87.
கொடுக்கப்பட்ட இருநிலை எண்ணின் முழு எண் பகுதி: 11
மிதப்புப் புள்ளி பகுதி: .011
| கொடுக்கப்பட்ட இருநிலை எண்கள் | 1 | 1 | . | 0 | 1 | 1 |
| 2ன் அடுக்கு நிலை மதிப்புகள் | 21 | 20 | . | 2-1 | 2-2 | 2-3 |
| நிறை மதிப்புகள் | 2 | 1 | 1/2 | 1/4 | 1/8 | |
| 0.5 | 0.25 | 0.125 | ||||
| பெருக்கல் மதிப்பு | 2 | 1 | . | 0 | 0.25 | 0.125 |
(11.011)2 = (2+1). (0.25 + 0.125)
(11.011)2 = (3.375)10
88.
படிநிலை 1: கொடுக்கப்பட்ட இருநிலை எண்களை வலமிருந்து இடமாக நான்கு பிட்டுகளாக குழுவாக்குக.
| 0011 1101 0110 |
குறிப்பு: இடது ஓரக் குழு நான்கு பிட்டுகளாக அமையவில்லை. எனவே, அதனை நான்கு பிட்டாக மாற்ற 0 முன்னொட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.
படிநிலை 2: "2ன் அடுக்கு நிலை நிறை முறை”-யை பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவிலும் உள்ள இருநிலை மதிப்புக்களுக்கு நிகரான பதின்ம எண்களை கணக்கிட வேண்டும்.

படிநிலை 3: ஒவ்வொரு பதின்ம எண்ணுக்கும் நிகரான பதினாறு நிலை எண்களாக எழுதவேண்டும்.

89.

90.
(25)16 = 2×161 + 5×160
= 32+5
= (37)10
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards