11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Model Question Paper
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் சார்ந்த சரியான கூற்று?
private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறுகிறது.
private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.
அடிப்படை இனக்குழுவின் public உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது
அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், இனக்குழுவிற்கு வெளியே மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது.
2.
பின்வரும் எந்த சிறப்பு செயர்கூறு ஓர் இனக்குழுவின் சான்றுறு பயன்பாட்டுக்கு வரும்போது இயக்கப்படும்?
அழிப்பு
உள்ளமை இனக்குழு
அடைப்பு இனக்குழு
ஆக்கி
3.
பின்வரும் கூற்றுகளில் சரியா, தவறா என்பதை எழுதுக.
(i) struct என்னும் சிறப்பு சொல்லை பயன்படுத்தி கட்டுரு அறிவிக்கப்படும்.
(ii) array என்னும் சிறப்பு சொல்லை பயன்படுத்தி அணி அறிவிக்கப்படும்.
(iii) கட்டுரு வரையறுப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள பொருள்கள் உள்ளமை பொருள்களாக அழைக்கலாம்.
(iv கட்டுருவில் உள்ள அனைத்து மாறிகளும் தானமையாக அணுகியலயை சார்ந்துள்ளது.
i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி
i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு
i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி
i-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி
4.
C++ நிரல் செயற்பாட்டினை தொடங்க பின்வரும் எந்த செயற்குரு மிக அவசியம்?
பயனர் வரையறுக்கும் செயற்கூறு
உள்ளமைந்த செயற்கூறு
main () செயற்கூறு
iostream.h தலைப்பு கோப்பு
5.
பல்லுருவாக்கம் என்ற சொல்
வேறுபட்ட வடிவங்கள்
பல வடிவங்கள்
பயன்படுத்தப்பட்ட வடிவங்கள்
பயன்படுத்தாத வடிவங்கள்
6.
கீழ்க்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும் தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?
இனக்குழு
பொருள்
கட்டமைப்பு
உறுப்பு
7.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?
'A'
'Welcome'
1232
"1232"
8.
மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
மடக்கின் தொடக்கத்தில்
ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்
ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்
நெறிமுறையின் தொடக்கத்தில்
9.
மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்?
1 -- i+j = 0
2 i , j := i+1 , j -1
3 -- ?
i+j > 0
i+j < 0
i+j = 0
i = j
10.
0 < i இயக்குவதற்கு முன், i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு
0 < i
0 ≤ i
i = 0
0 ≥ i
11.
விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.
My document
My picture
Document and settings
My Computer
12.
கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது
கோப்புகள்
கோப்புறைகள்
அடைவு அமைப்புகள்
இவை அனைத்தும்
13.
14.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்தசுற்றுகள்
நுண்செயலிகள்
15.
16.
கட்டுரு மற்றும் அணியை தொடங்குதல் போன்று இனக்குழு பொருள் அதன் அறிவிப்பு நேரத்தில் தொடங்க இயலாது?ஏன்?
17.
தாவுதல் கூற்றின் வகைகளை எழுதுக
18.
அணியின் உறுப்பை அணுகும் முறையை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
19.
செயற்கூறுகள் -வரையறை
20.
விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?
21.
வேர்டு நீளம் பற்றி குறிப்பு எழுதுக
22.
நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .
23.
கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?
24.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
25.
முழு எண் மாறிலியின் வகைகளைப் பற்றி விவரி.
26.
குறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
27.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.
28.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
// constructor declared as outline member function
#include<iostream>
using namespace std;
class Perimeter
{
int 1, b, p;
public;
Perimeter ( );
Perimeter (int);
Perimeter (int,int);
Perimeter (Perimeter&);
void Calculate( );
};
Perimeter:: Perimeter( )
{
cout << "\n Enter the value of length and breath";
cin >> I >> b;
cout << "\n \n NonParameterized constructor";
}
Perimeter::Perimeter(int a)
{
I=b=a;
cout << "\n\n Parameterized constructor with one argument";
}
Perimeter::Perimeter(int 11, in b1 )
{
cout<<"\n\n Parameterized constructor with 2 argument";
1=1;
b=b1;
}
Perimeter: :Perimeter(perimeter &p)
{6
1=p.1;
b=p.b;
cout << "\n \n copy constructor";
}
void Perimeter ::Calculate( ){
p = 2*(1+b);
cout << p;
}
int main ( )
{
Perimeter Obj;
cout << "\n perimeter of rectangle is";
Obj.Calculate ( );
Perimeter Obj 1(2);
cout << "\n perimeter of rectangle";
Obj 1.Calculate( );
Perimeter Obj2 (2,3);
cout << "\n perimeter of rectangle";
Obj2.Calculatete ( );
perimeter obj3 (Obj2);
cout <<"\n perimeter of rectangle";
obj3.Calculate ( );
return 0;
}
29.
பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
class Personal
{
int Class,Rno;
char Section;
protected:
char Name[20];
public:
personal();
void pentry();
voidPdisplay();
};
class Marks:private Personal
{
float M{5};
protected:
char Grade[5];
public:
Marks();
void M entry();
void M display();
};
class Result:public Marks
{
float Total,Agg;
public:
char FinalGrade, Commence[20];
Result();
void R calculate();
void R display();
}:
1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.
3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
4. அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
(a) Personal (b) Marks (c) Result
6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
30.
கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
31.
பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக
32.
ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.
33.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
34.
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்
35.
உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.
36.
மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்?
37.
பின்வரும் செயற்கூறுவின் செயல்பாட்டை எழுதுக.
(i) display () , (ii) display (x , y ), (iii) x = display (), (iv) x = display (x, y )
38.
பின்வரும் குறிமுறையானது S என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக்கொண்டே அனைத்து
மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் கூட்டு தொகையை கணக்கிட்டு திரையில் காட்டுகிறது.
இதற்கு தேவையான விடுபட்ட கூற்றுகளை நிரப்பவும்.
struct student {intexamno,lang,eng,phy,che,mat,csc,total;char name[15];};
int main()
{
student s[20];
for(int i=0;i < 20;i++)
{
…………………….. //accept student details
}
for(int i=0;i < 20;i++)
{
…………………….. // “S” என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்
……………………. // சரிபார்த்த பெயடரை திரையில் காட்டவும்.
}
return 0;
}
39.
“=” மற்றும் “==” வேறுபடுத்துக.
40.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.
41.
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
42.
விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.
43.
NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.
1.
(b)
private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.
2.
(d)
ஆக்கி
3.
(a)
i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி
4.
(c)
main () செயற்கூறு
5.
(b)
பல வடிவங்கள்
6.
(b)
பொருள்
7.
(d)
"1232"
8.
(d)
நெறிமுறையின் தொடக்கத்தில்
9.
(c)
i+j = 0
10.
(b)
0 ≤ i
11.
(d)
My Computer
12.
(d)
இவை அனைத்தும்
13.
(d)
14.
(a)
வெற்றிடக்குழுல்
15.
(c)
16.
இனக்குழு பொருள் அதன் அறிவிப்பு நேரத்தில் தொடங்கி வைப்பது (initialization)கட்டுரு அல்லது அணியை தொடங்குதல் போன்றது அல்ல. ஏனென்றால், இனக்குழு உறுப்புகள் அதனோடு தொடர்புடைய அணுகியல்பைக் கொண்டிருக்கும் (public,private or protected).
17.
தாவுதல் கூற்றின் வகைகள்
(i) goto கூற்று
(ii) break கூற்று
(iii) continue கூற்று
18.
அணியின் ஒவ்வொரு உறுப்பும் அதன் பொது பெயருடன் கூடிய அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் கீழொட்டு மதிப்பை கொண்டு குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக num [3] என்பது num என்ற அணியின் உறுப்பைச் சுட்டும்.
19.
ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க முடியும் அவ்வாறு பிரிக்கப்படும் அத்தனை நிரல் செயற்கூறு என்று அழைக்கப்படுகிற ஒவ்வொரு செயற்கூறும் அதற்குரிய செயற்பாடுகளை செயல்படுத்தும் , நிரலின் நீளத் தையும் மற்றும் சிக்கற்பாட்டையும் குறைக்கவும் நிரலை எளிதில் புரிந்து கொள்ளவும் , பிழைகளைக் கண்டறிந்து திருத்தவும் செயற்கூறுகள் வழிவகுக்கிறது.
20.
i) பொதுவாக விவரக்குறிப்புகளை மூன்று பகுதி வடிவத்தில் எழுதலாம்:
ii) நெறிமுறையின் பெயர் மற்றும் உள்ளீடுகள்
iii) உள்ளீடு: உள்ளீடுகளின் பண்புகள்
iv) வெளியீடு: உள்ளீடு - வெளியீடு உறவு
21.
1. வேர்டு நீளம்(word length) என்பது ஒரு கணிப்பொறியின் மைய செயலகத்தில் எத்தனை பிட்டுகள் செயற்படுத்தப்படும் என்பதை குறிக்கும்.
2. எடுத்துக்காட்டாக வேர்டு நீளம் - 8 பிட்டுகள், 16 பிட்டுகள், 32 பிட்டுகள் மற்றும் 64 பிட்டுகளின் அளவில் அமைக்கப்படும்.
3. இன்றைய கணிப்பொறிகள் 32 பிட்டுகள் அல்லது 64 பிட்டு வேர்டு நீளத்தில் வடிவமைக்கப்டுகிறது.
22.

23.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட்விண்டோஸ்
3.லினக்ஸ்
4.டைளு
5. அண்ட்ராய்டு
24.
| வ.எண் | முதன்மைநினைவகம் | இரண்டாம் நிலை நினைவகம் |
|---|---|---|
| 1 | முதன்மைநினைவகத்துக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும். | இரண்டாம்நிலை நினைவகத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழியாமல் இருக்கும். |
| 2 | முதன்மைநினைவகத்திற்கு எடுத்துக்காட்டு, நேரடி அணுகல் நினைவகம் (RAM - Random Access Memory) ஆகும். | வன்வட்டு (Hard disk), குறுவட்டு (CD - ROM) மற்றும் டிவிடி ரோம் (DVD ROM) போன்றவை இரண்டாம் நிலை நினைவகத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். |
25.
முழு எண் மாறிலிகள் / நிலையான புள்ளி மாறிலிகள் (Integer Constants (or) Fixed point constants):
பின்ன மதிப்புகள் இல்லாத எண்கள் முழு எண்களாகும். ஒரு முழு எண் மாறிலி எந்த ஒரு தசம புள்ளியும் இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது மறை குறியீடு அல்லது குறியீடு இல்லாமல் இருக்கும் மறை குறியீடு உள்ள முழு எண்கள் எதிர்மறை எண்ணாக கருதப்படுகின்றன. காற்புள்ளிகள் மற்றும் வெற்று இடைவெளிகள் ஆகியவை ஒரு பகுதியாக அனுமதிக்கக்கூடாது.
C++ இல், மூன்று வகையான முழு எண் மாறிலிகள் உள்ளன:
(i) பதின்மம்
(ii) எண்ணிலை
(iii) பதினாறு நிலை
(i) பதின்மம் (Decimal) : 0 முதல் 9 வரையான, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண் இலக்கங்களின், வரிசை.
| சரி | தவறு |
| 725 | 7,500 (காற்புள்ளி அனுமதியில்லை) |
| -27 | 66 5 (வெற்று இடைவெளி அனுமதியில்லை) |
| 4.56 | 9$ (சிறப்பு குறியீடு அனுமதியில்லை) |
4.56 என்ற எண்ணை ஒரு முழுஎண் மாறியாக கொடுக்கும்போது, 4ஐ மட்டும் எடுத்துக்கொள்ளும், .56 என்ற மதிப்பு நிராகரிக்கப்படும்.
(ii) எண்ம. எண்ணிலை (Octal): ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ம இலக்கங்களின் வரிசை (0 ... 7) எண்ம மாறிலிகள் 0 என்ற முன்னொட்டுன் தொடங்குகிறது.
| சரி | தவறு |
| 012 | 05,600 (கார்புள்ள ஏற்காது) |
| -027 | 04.56 (தசம புள்ளியை ஏற்காது)** |
| +0231 | 0158 (8 எண்ம எண் இல்லை எனவே, இது ஏற்புடையதல்ல) |
(iii) பதினாறுநிலை (Hexadecimal): ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதினாறுநிலை இலக்கங்களின் வரிசை (0 ....9, A ......F). பதினாறுநிலை மாறிலிகள் 0x அல்லது 0X என்ற முன்னொட்டு உடன் தொங்குகிறது.
| சரி | தவறு |
| 0 x 123 | 0 x 1,A5 (காற்புள்ளி அனுமதிக்காது) |
| 0 x 568 | 0 x 14E (கொடுக்கப்பட்டுள்ளவாறு தசமபுள்ளியை அனுமதிக்காது) |
பொதுவாக, ஒரு முழு எண்ணுடன், L அல்லது l மற்றும் U அல்லது u ஆகியவற்றுள் ஒன்றை பின்னொட்டாக கொடுக்கும் போது அது long அல்லது unsigned வகை மாறிலியாக கருதிக்கொள்ளும்.
26.
இந்த முறையில் அளபுருவின் குறிப்பை அல்லது முகவரியை முறையான அளபுருவில் நகலெடுக்கும் முகவரியின் மூலம் அழைப்பதால் முறையான அளபுருவின் மதிப்பில் ஏதேனும் மாற்றம் செய்தால் மெய்யான அளபுருவில் அந்த மாற்றம் பிரிதிபலிக்கும்.
#include < iostream >
using namespace std;
void display(int &x) //passing address of a//
{
x=x*x;
cout << "\n\n The Value inside display function (n1 x n1):" <<x;
}
int main()
{
int n1;
cout << "\n Enter the Value for N1:";
cin >> n1;
cout << "\n The Value of N1 is inside main function Before passing: " << n1;
display(n1);cout << "\n The Value of N1 is inside main function After passing (n1 x n1):" << n1; return(0);
}
வெளியீடு:
Enter the Value for N1:45
The Value of N2 is inside main function Before passing:45
The Value inside display function (n1 x n1):2025
The Value of N1 is inside main function After passing (n1 x n1):2025.
27.
மறுபயனாக்கம் (RE- usability): ஒரு முறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் இனக்குழு பயன்படுத்தி இதை நிறைவேற்றலாம்.
மிகைமை (Redundancy):
மரபுரிமம் தரவு மிகைமைக்கு சிறந்த சான்றாகும். பல இனக்குழுக்களுக்கு வேவையான ஒரே செயல்பால்பாட்டை ஒரு பொது இனக்குழுவின் மூலம் வரையறுத்து அவற்றை மரபுரிமம் தருவிக்கப்பட்ட இனக் குழுவின் மூலம் தருவித்துக்கொள்ளலாம்.
எளிய பராமரிப்பு (Easy Maintenance) : ஏற்கனவே இருக்கும் குறிமுறையில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய பொருளை உருவாக்க முடியும். மேலும் இதை பராமரிப்பது மாற்றங்கள் செய்வதும் எளிது.
பாதுகாப்பு (Security): தரவு மறைப்பு மற்றும் அருவமாக்கம் தேவையான தரவுகளை மட்டும் கொடுப்பதால் தரவு பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் தீமைகள் (Disadvantages of OOP )
அளவு (Size ): பொருள் நோக்கு நிரலானது மற்ற நிரல்களை விட அளவில் பெரியது.
உழைப்பு (Effort) : பொருள் நோக்கு நிரலை உருவாக்குவதற்கு அதிக உழைப்பு வேவைப்படுகிறது.
வேகம் (Speed): பொருள் நோக்கு நிரல்கள் அதிக அளவின் காரணமாக பிற நிரல்களை விட மெதுவாக செயல்படுகிறது.
28.
Enter the value of length and breath 10 20
Non Parameterized constructor perimeter of rectangle is 60
Parameterized constructor with one argument perimeter of rectangle 8
Parameterized constructor with 2 argument perimeter of rectangle 10
copy constructor perimeter of rectangle 10
29.
1) பலநிலை மரபுரிமம்.
2) Private, Public
3) Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
Constructors:
(i) Personal ( )
(ii) Marks( )
(iii) Result( )
Destructor:
(i) Result ( )
(ii) Marks ( )
(iii) Personal( )
4) Base Classes: Personal
Derived Classes: Marks, Result.
5) (a) 25 bytes
(b) 25 bytes
(c) 29 bytes.
6) Total, Agg, Grade, Final Grade, Commence.
7) RCalculate ( ), Rdisplay ( ), Mentry ( ), Mdisplay ( ); Pentry ( ), Pdisplay ( ).
8) Total, Agg, Grade; final grade, commence Rcalculate ( ), Rdisplay ( ), Mentry ( ), Mdisplay ( ), Pentry ( ), Pdisplay ( ).
30.
கட்டுப்பாட்டு கூற்றுகள் : கட்டளைகளின் பாய்வு வரிசை முறையை மாற்றி அமைக்கும். கூற்றுகள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசை முறையில் நிறைவேற்றப்பட்டால், இந்த பாய்வை வரிசை முறைப் பாய்வு என்கிறோம். சில சூழ்நிலைகளில், கிளை பிரித்தல், மடக்கு, தாவுதல் மற்றும் செயற்கூறு அழைப்பு போன்ற கூற்றுகள் பாய்வின் ஓட்டத்தை மாற்றியமைக்கும், இந்த செயல்முறையை பாய்வுக் கட்டுப்பாடு (Control Flow) என்கிறோம்.
(i) வரிசைமுறை கூற்று; வரிசை முறை கூற்றுகள் என்பது மேலிருந்து கீழாக ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூறுகளாகும். இத்தகைய கூற்றுகள் பாய்வு ஓட்டத்தை மாற்றி அமைக்காது. இவை எப்பொழுதும் அரைப்புள்ளியுடன் (;) முற்றுப்பெறுகிறது.

(ii) தேர்ந்தெடுப்புக் கூற்று: நிபந்தனை அடிப்படையில் நிறைவேற்றப்படும் கூற்றுகள் எனப்படும்.கொடுக்கப்பட்ட நிபந்தனை சரி எனில் சரி கட்டளைத் தொகுதி (கூற்றுகளின் தொகுப்பு) இயக்கப்படும். இல்லையெனில் தவறு கட்டளைத் தொகுதி இயக்கப்படும். நிறைவேற்றப்பட்ட வேண்டிய கூற்றுகளின் தொகுப்பை தீர்மானிக்க உதவுவதால், இக்கூற்றினை தீர்மானிப்புக் கூற்று அல்லது தேர்ந்தெடுப்பு கூற்று எனலாம்.
(iii) மடக்குக் கூற்று: மடக்குக் கூற்று என்பது ஒரு கட்டளைத் தொகுதியை நிபந்தனை அடிப்படையில் மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் கொடுக்கப்பட்ட நிபந்தனை சரி என இருக்கும் வரை, கட்டடளைத் தொகுதி மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்படும். நிபந்தனை தவறாகும்போது தொடர்ந்து இயக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. இதனை மடக்குக் கூற்று அல்லது பண்முறைச் செயல் கூற்று என்கிறோம்.
(iv) if-else கூற்று: ஒரு if-எல்ஸ் கூற்று என்பதும் கட்டுப்பாட்டு பாய்வு கூற்றாகும். இது நிபந்தனையில் அடிப்படையில் ஒரு செயலை செய்ய பயன்படுகிறது. if-else கூற்றில், முதலில் கோவை அல்லது நிபந்தனை சரியா அல்லது தவறா என மதிப்பிடப்படுகிறது. கிடைக்கப்பெற்ற விடை தவறு எனில், தவறு திதியினுள் இடம் பெரும் கூற்றுகள் இயக்கப்படும், சரித்தொகுதி நிறைவேற்றப்படாது.
if (rem ==0)
cout << "\n the given number" << num << "
is Even";
else
cout << "\n The given number " << num << "
os Odd";
31.
1. Start மற்றும் END என்று குறிக்கப்பட்ட சிறப்பு பெட்டிகள் ஒரு இயக்கத்தின் மற்றும் முடிவை குறிப்பிடப் பயன்படுகிறது
2. உள்ளீடு மற்றும் வெளியிடுகள், நாற்கர வடிவ பெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
3. வெளியேறும் ஒற்றை அம்புக்குறியுடன் தோன்றும் ஒரு செவ்வகபெட்டியிலுள்ள கூற்று அடுத்து இயக்கப்படும்
4. கட்டுப்பாட்டு கூற்று இரண்டு வெளியேறும் அம்புக்குறிகளை ''true'' மற்றும் ''flase'' என்ற விவரத் துணுக்குகளை கொண்ட ஒரு வைரவடிவ பெட்டியின் உள்ளேகுறிப்பிடப்பட்டுள்ளது
'5. 'true'' என்ற குறிக்கப்பட்ட அம்புக்குறி , கொடுக்கப்பட்ட நிபந்தனை மெய் எனில் , இயக்கப்பட்ட வேண்டிய அடுத்த பெட்டியைகுறிக்கும்
'' false'' என்ற குறிக்கப்பட்ட அம்புக்குறி , கொடுக்கப்பட்ட நிபந்தனை பொய் எனில் , அடுத்து இயக்கப்பட்ட வேண்டிய அடுத்த பெட்டியைகுறிக்கும்
32.
நெறிமுறை வடிவமைப்பாளருக்கும் மற்றும் நெறிமுறைபயனர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தமாக ஒரு நெறிமுறை குறிப்பிடப்படுகிறது, ஏனென்றால் வடிவமைப்பாளர் மற்றும் பயனரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அது வரையறுக்கிறது.
i) உள்ளீடுகளின் தேவையான பண்புகளை திருப்திப்படுத்துவது பயனரின் பொறுப்பு, ஆனால் அது வடிவமைப்பாளரின் உரிமை.
ii) விரும்பிய உள்ளீடு -வெளியீடு உறவு வடிவமைப்பாளரின் பொறுப்பு மற்றும் பயனரின் உரிமை.
iii) பயனர் உள்ளீடுகளின் பண்புகளை முக்கியமாக, திருப்திசெய்யாவிட்டால், விரும்பியஉள்ளீடு வெளியீடு உறவைதிருப்தி செய்யவடிவமைப்பாளரின் கட்டளையிலிருந்து விடுபடலாம்.

33.
1.டிஜிட்டல் பிணையம்(இணைய தளம் / உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்டதரவுகளை, பயன்பாட்டுக்கு இந்தஅம்சம் கவனித்து கொள்கிறது.
2.பரவல்இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் வசிக்கும் கோப்புகளையும் அணுகுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவை கையாளமுடியும். பயனர்கள் தங்கள் சொந்தகணினியில் கோப்புகளை கையாளும் போது உணருவர்.
முக்கிய இயக்க அமைப்பு பின்வருமாறு:
1.யுனிக்ஸ் 2.மைக்ரோசாஃப்ட்வின்டோஸ் 3.லினக்ஸ் 4.டைளு 5.அண்ட்ராய்டு
1.நவீன இயக்க அமைப்புகள் ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தை(முருஐ ) பயன்படுத்துகின்றன.முருஇ-யின் பனிக்குறிகள், பொத்தன்கள், மெனுக்கள் போன்ற எல்லாவற்றையும் தெளிவாகவரைகலையில்(கிராபிக்ஸ்) மற்றும் உரைஉறுப்புகளின் (text elements)வகையைப் பயன்படுத்தி திரையில் கட்டபடுவதை கிளிக் செய்யப்பயன்படுகின்றன.
2.இயக்க அமைப்பு ஓர் வணிகதனி உரிமம் கொண்டதாகவும் அல்லது திறந்தமூலமாகவோ இருக்கலாம்.
3.ஒவ்வொரு இயங்குதளத்தின் வரைகலைபயனர் இடைமுகம் வெவ்வேறு தோற்றம் மற்றும் உணர்வைக்கொண்டுள்ளது, எனவே நாம் வேறு இயக்க அமைப்புக்கு மாற்றினால், இது முதலில் அறிமுகமில்லாததாகதோன்றலாம். இருப்பினும், நவீன இயக்க அமைப்புகள் பயன்பாட்டிற்கு எளிதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் பின்வருமாறு:
1. ஒரே இடத்தில் உள்ள பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றொரு இடத்த்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2.பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது
4.பரவலான/புரவலர்(ழடிளவ) கணினியில் உள்ள சுமையைகுறைக்கிறது
34.
அ) மைபீச்சு அச்சுபொறி (Inkjet Printers):
i) மைப்பீச்சு அச்சுப்பொறிகள் கருஞ்சிவப்பு (Magenta), மஞ்சள் (Yellow) மற்றும் சியான் (Cyan) உள்ளடக்கியமைகுப்பியைப்பயன்படுத்தி வண்ணசாயலை (Color tones) உருவாக்கியது.
ii) ஒரு நிறவண்ணத்தில் (monochrome) அச்சிடுவதற்கு கருப்பு (black) மைகுப்பியை பயன்படுத்துகிறது.
iii) மைப்பீச்சு அச்சுப்பொறிகள் ஒரு காகிதத் தாளில் மின்னூட்டம் பெற்றமையைத் தெளிப்பதன் மூலம் செயல்படுகிறது.
iv) இதன் அச்சிடம் வேகம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 1 முதல் 20 பக்கங்களை அச்சிடும் (PPM -Page Per Minute)
v) மைப்பீச்சு அச்சுப்பொறிகள், வெப்பம் மூலம் மின்கலன் சூடாக்குவதால் மைகாகிதத்தில் குமிழிகளாக (bubbles) தெளிக்கப்படும் தொழில்நுட்பத்தை அல்லது தகைவு மின்சாரத்தை (piezoelectricity) பயன்படுத்தி மின்சுற்றுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் சிறிய மின்னோட்டங்கள் ஜெட்வேகத்தில், அச்சுபொறியின் உள்ளே மையைப்பாப்புகின்றன.
ஆ) பல்லூடகப்படவீழ்த்தி (Multimedia Projector):
i) பல்லூடகப்படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப்பெரியதிரையில் திரையிடப்பயன்படுகிறது.
ii) இவைகள் வகுப்பறையில் அல்லது கூட்ட அரங்குகளில் விளக்கக் காட்சிகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
இ) பட்டைக் குறியீடு / கியூ. ஆர் படிப்பான் (Bar Code / QR Code Reader):
i) பட்டைக் குறியீடு என்பது வெவ்வேறு தடிமன் வரிசையில் அச்சிடப்படும் ஒரு வடிவம் ஆகும்.
ii) பட்டைக் குறியீடு படிப்பான், பட்டைக் குறியீட்டைப் படித்து அவற்றை மின் துடிப்புகளாக (electric pulses) மாற்றி கணிப்பொறி செயலகத்திற்கு அனுப்பும் ஒரு கருவியாகும்.
iii) கணிப்பொறியில் தகவலை விவராகவும் பிழையின்றிப் பதிவு செய்யவும் இது பயன்படுகிறது.
iv) கியூ.ஆர் (Q.R - Quick Response) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும், இது ஒரு கேமரா மூலம் படிக்கப்படடுப் படத்தை உணர்த்துகிறது.
35.
| உள்ளார்ந்த அழைப்பு | வெளிப்படையான அழைப்பு |
|---|---|
| இந்த முறையில் எப்பொழுதெல்லாம் பொருள் உருவாக்கப்படுகிறதோ அப்பொழுது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது | இந்த முறையில் ஆக்கியின் பெயரை வெளிப்படையாக கொடுக்கும்போது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி அழைக்கப்படுகிறது. அதனால் பொருளை உருவாக்கி தொடங்கி வைக்க முடிகிறது. |
| எடுத்துக்காட்டு: simple s1 (10, 20); இதில் s1 என்ற பொருளை உருவாக்கும்போது அளபுருவை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது. | எடுத்துக்காட்டு: simple s1 = simple(10,20); //வெளிப்படையான அழைப்பு. |
36.
மரபுரிமத்தின் நன்மைகளாவன:
(i) இது நடைமுறை வாழ்வில் உள்ள உறவு நிலையை சிறப்பாக எடுத்துக்காட்ட உதவுகிறது.
(ii) நிரல் குறிமுறையின் மறுபயனாக்கத்தை சாத்தியமாக்கி உள்ளது.
(iii) இது மாற்றங்களை ஆதரிக்கும்.
37.
| (i) | display () | செயலுருப்பு ஏற்காது மற்றும் எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாத அழைப்பு செயற்கூறு. |
| (ii) | display (x , y ) | செயலுருபுக்களை ஏற்கும் மற்றும் எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாத அழைப்பு செயற்கூறு. |
| (iii ) | x = display () | செயலுருபு ஏற்காது மற்றும் மதிப்பைத் திருப்பி அனுப்பும் அழைப்பும் செயற்கூறு. |
| (iv) | x = display (x, y ) | செயலுருபுக்களை ஏற்கும் மற்றும் மதிப்பை த் திருப்பி அனுப்பும் அழைக்கும் செயற்கூறு. |
38.
//accept Student details
cout << " Enter Examnumber" <<endl;
cin >> s[i].examno;
cout >>" Enter student name" <<endl;
cout << " Enter language mark" << endl;
cin >> s[i].eng;
cout << " Enter English mark" << endl;
cout <<'' Enter Physics mark" << endl;
cout <<'' Enter Chemisty mark" << endl;
cout << " Enter Maths mark" << endl;
cout << " Enter Comp.science mark" << endl;
// 'S' என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்.
// சரிபார்த்த பெயரை திரையில் காட்டவும்.
if (s[i].name = ='S')
{
cout << "Exam number" << s[i].exam << endl;
cout << "Name:"<<s[i].name << endl;
cout << "language" << s[i].lang << endl;
cout << "English" << s[i].eng << endl;
cout << "Physics" << s[i].phy <<endl;
cout << "Chemistry" << s[i].che << endl;
cout << "Maths" << s[i].mat << endl;
cout << "Computer Science" << s[i].csc << endl;
total=s[i] .lang+s[i] .eng+s[i].mat+s[i] .phy+s[i].che+s[i].csc;
coutc << "Total:" << total;
}
39.
| = | == |
| இது மதிப்பிருந்து செயற்குறி | இது ஒரு ஒப்பீட்டுச் செயற்குறி. |
| ஒரு மதிப்பிருந்து கூற்றின் வலது பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருந்தும். |
செய்லேற்பிகளிக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. |
| எ.கா. a = b, b யின் மதிப்பு a-ன் மாறியில் இருத்தும் | எ.கா. (a = b) செயலெற்பி a, செயலெற்பி b யுடன் ஒப்பிட்டு ஒப்பீட்டின் அடிப்படையில் 0 அல்லது 1 வரும். |
40.
1. கணித ஏரணச் செயலகம்: கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை கட்டளை கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை பெற்று கணிப்பொறியில் எல்லாபாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்: உள்ளமைந்தநினைவகம் செயல்பாடுகளுக்கு தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளை சேமிக்கும்.
41.
P (m, n) = m + 3n 6T6Ifilro,
P (m, n) [m, n := m + 3, n - 1]
= m + 3n [m, n:= m + 3, n- 1]
=(m+3)+3(n-l)
=m+3 +3n- 3
=m+3n
=P(m, n)
(m + 3n) [m, n := m + 3, n - I] = m + 3n என்பதால் +3n v < gJ m, n := in + 3, n - 1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றமிலியாகும்
42.
i) விசைப்பலகை (கம்பி / கம்பியில்லா / மாய) கணிப்பொறிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுசாதனம் ஆகும்.
ii) எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளுக்கான தனித்தனிப் பொத்தான்களை மொத்தமாக 'எழுத்துரு பொத்தான்கள்" எனலாம்.
iii) கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை, தட்டச்சுப்பொறிகளில் (typewriter) உள்ள விசைப்பொத்தான்களின் அடிப்படையில் தருவிக்கப்படுகிறது.
iv) தரவுகளும், தகவல்களும் விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்து கணிப்பொறியில் உள்ளிடப்படுகின்றது.
v) எழுத்து மற்றும் எண் வகை பொத்தான்களைக் தவிர வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கான பிறசெயல்பாட்டு பொத்தான்களும் (function keys) உள்ளன.
vi) விசைப்பலகையில் பல்வேறு வகைபொத்தான்களின் தொகுப்புகள் உள்ளன, அவை எழுத்துவகை, எண்வகை, செயல்பாட்டு வகை, நுழைவு மற்றும் பதிப்பாய்வு பொத்தான்கள் ஆகும்.
43.
1. அடிப்படை தருக்க (AND , OR , NOT )வாயில்களை இவற்றின் மூலம் உருவாக்கலாம். எனவே அவை பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன
2. வட்டமிட்ட ஹசூனு வாயிலின் வெளியீடும் NOR வாயிலின் வெளியீடும் ஒன்றாகயிருக்கும். NOR வாயிலை வட்டமிட்ட NAND வாயிலை வட்டமிட்ட வாயிலின் மூலம் குறிப்பிடலாம் . மாறாக இவ்விரண்டு வாயில்களும் ஒன்றோடு ஒன்று மாற்றியமைக்காலம்
3. எனவே \(\left( \overline { A+B } \right) =\overline { A } .\overline { B } \)
4. வட்டமிட்ட டீசு வாயில் மற்றும் சூஹசூனு வாயிலின் மெய்பட்டியல்களை ஒப்பீடு செய்தால் இரண்டும் ஓன்றாகவே இருக்கும். ஆகவே இவ்விரண்டு சுற்றுகளும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றியமைக்காலம்
5. அதாவது, \(\left( \overline { A.B } \right) =\bar { A } +\bar { B } \)
6. எத்தகைய வாயிலையும் XNOR மற்றும் NOR வாயில்கள் மூலம் உருவாக்கலாம் . எனவே அவை பொதுமைவாயில்கள் என்றழைக்கப்படுகின்றன
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards