11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
கணினி அமைப்பு
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?
தொகுதி
பகுதி
பிட்ஸ்
தடங்கள்
2.
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8GB
2.2 GB
3.
எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?
8
16
32
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
4.
பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேஷ் நினைவகம்
பதிவேடு
5.
பின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?
உள்ளீட்டுச் சாதனங்கள்
வெளியீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
6.
நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?
7.
அமைப்புப் பாட்டை(System Bus) என்றால் என்ன?
8.
நுண் செயலி என்றால் என்ன?
9.
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
10.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
11.
ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?
12.
முதல் வணிக நோக்கு நுண்செயலி பற்றி எழுதுக.
13.
வேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.
14.
கணிப்பொறியின் வேகம் எவ்வாறு அளவிடப்படுகிறது.
15.
நுண்செயலி கொண்டுள்ள முக்கிய பகுதிகள் யாவை?
16.
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
17.
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
18.
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
19.
இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்
20.
நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
1.
(a)
தொகுதி
2.
(a)
4.7 GB
3.
(a)
8
4.
(a)
கணித ஏரணச்செயலகம்
5.
(a)
உள்ளீட்டுச் சாதனங்கள்
6.
1. நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி செயல்படுத்தும் செயல்கள்:
2. தரவு மாற்றம்
3. எண் கணித செயல்முறைகள்
4. தருக்கச் செயல்முறைகள்
5. கட்டுப்பாட்டு நகர்வு
6. உள்ளீடு/ வெளியீடு
7.
அமைப்புப் பாட்டை என்பது நுண் செயலிக்கும் மற்ற சாதனங்களுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த உதவும் முகவரிப் பாட்டை , தரவுப் பாட்டை மற்றும் கட்டுப்பாட்டுப் பாட்டை ஆகியவற்றின் தொகுப்பாகும்.
8.
நுண் செயலியானது ஒரு நிரலாக்கம் செய்யக்கூடிய, பற்பல உபயோகத்திற்கான ஒரு சிலிக்கான் சிப்பாகும்.
9.
EPROM- ல் தகவல்கள் புற ஊதா ஒளி செலுத்தும் வரை சேமித்து வைக்கப்படுகின்றன. புற ஊதா ஒளியைச் செலுத்தி EPROM-ன் உள்ளடக்கத்தை அழித்து, மீண்டும் வேறு நிரல்களை எழுதலாம்.
10.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
11.
ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
12.
1. முதல் வணிக நோக்கு நுண்செயலி Intel 4004 என்ற 4-bit நுண்செயலி ஆகும்.
2. இதில் 4 உள்ளீடு மற்றும் 4 வெளியீடு ஊசிகள் உள்ளன. உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் எண்ணிக்கை எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கும்.
3. ஒரு நேரத்தில் 4-bit களை செயற்படுத்த முடியும் என்பதால் இது 4-bit செயலி எனப்படும்.
13.
1. வேர்டு அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
2. ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையையும் பொறுத்ததாகும்.
3. மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.
14.
1. ஹெர்ட்ஸ் (Hertz) கணினி செயலியின் வேகத்தை அளவிடப் பயன்படுகிறது.
2. உதாரணமாக, ஒவ்வொரு மைய செயலகத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட கடிகார வேகத்தில் மதிப்பிடப்படுகிறது.
3. இந்த எண் ஒவ்வொரு செயலியும் நொடிக்கு எத்தனை வழிமுறை சுழற்சிகளை இயக்கும் என்பதைக் குறிக்கிறது.
4. நவீன செயலிகளில் ஒரு நொடிக்கு மில்லியன் அல்லது பில்லியன் செயல்களை செய்ய முடியும் என்பதால் கடிகார வேகம் பொதுவாக மெகா ஹெர்ட்ஸ் அல்லது கிகா ஹெர்ட்ஸில் அளவிடப்படுகிறது.
15.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது அவை:
1. கந்த ஏரணச் செயலகம் (Arithmetic and Logic Unit - ALU): கணித மற்றும் ஏரண செயல்பாடுகளைக் கட்டளைக்கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞகளைப் பெற்று கணிப்பொறியின் எல்லா பாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்- உள்ளமைந்த நினைவகம் (Registers- Internal Memory): செயல்பாடுகளுக்குத் தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளைச் சேமிக்கும்.
16.
| ஃபிளாஷ் நினைவகம் | EEPROM |
|---|---|
| 1. ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும். |
ஒரு சிறப்பு PROM வகையைச் சார்ந்த நினைவகம். |
| 2. வேகமான அணுகல் நேரத்தை (Access time) வழங்குகிறது. |
மெதுவாக இயங்கும் நினைவகம். |
17.
| CD | DVD |
|---|---|
| 1. ஒரு சாதாரண CDன் கொள்ளளவு 700MB ஆகும். |
DVD-4.7GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6-CDக்களின் கொள்ளளவுக்குச் சமமாகும். |
| 2. தரவு எழுதும்/ படிக்கும் வேகம் குறைவு. |
தரவு எழுதும்/ படிக்கும் வேகம் அதிகம். |
| 3. CD-Drive மற்றும் DVD Drive களில் இயக்க முடியும். |
DVD - Drive களில் மட்டுமே இயக்க முடியும். |
| 4. இது பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனது |
இது கண்ணாடியிழை வட்டு ஆகும் |
18.
இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் தரவு மற்றும் நிரல்களை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகின்றன.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்:
1. வன்வட்டுகள் (Hard disk)
2. குறுவட்டு (Compact Disk - CD)
3. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/ டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD)
4. ஃபிளாஷ் நினைவக சாதனங்கள்
5. ப்ளூ-ரே வட்டு (BIu - Ray Disc)
I. வன்வட்டுகள் (Hard disk):
1. வன்வட்டு ஒரு காந்தவட்டாகும். இதில் தரவுகளைச் சேமிக்கலாம்.
2. வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும்.
II. குறுவட்டு (CD):
1. CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும்.
2. மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும்.
3. CD ல் தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits " எனப்படும். இவை அடுக்கின் மேல் ஒரு சுருள் பாதையில் வடிவமைக்கப் பட்டிருக்கும், இரண்டு pits-களுக்கு இடையே உள்ள இடைவெளி "lands" என்று அழைக்கப்படும்.
4. CD-யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டர் CD-யை சுழற்றும்.
5. ஒரு சாதாரண CD-ன் கொள்ளளவு 700 MB ஆகும்.
III. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/ டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD):
1. DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc)
2. இது ஒரு 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும்.
3. திரைப்ப்டங்களை சிறந்த முறையில் DVD-களில் சேமித்து, லேசர் மூலம் படிக்க முடிகின்றது .
4. ஒரு 12 செ.மீ விட்டம் உள்ள வட்டு ஒரு பக்க மற்றும் ஒரு அடுக்கு உள்ள வட்டு சுமார் 4.7GB கொள்ளளவாகவும் மேலும் ஒரு பக்க இரு அடுக்கு உள்ள வட்டு 8.5GB கொள்ளளவாக இருக்கும்.8 cm உள்ள DVD 1.5GB கொள்ளளவைக் கொண்டது.
5. ஒரு DVD ROM-ன் கொள்ளளவு அதில் உள்ள தரவுப் பக்க எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
IV. ஃபிளாஷ் நினைவக சாதனங்கள் (Flash Memory Devices) :
1. ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும்.
2. ஃபிளாஷ் நினைவகம் ஒரு EEPROM அல்லது EPROM வகைப்படும் . எ.கா : பென் டிரைவ், மெமரி கார்டு.
3. ஃபிளாஷ் நினைவகம் வேகமான அணுகல் நேரத்தை வழங்குகிறது.
4. ஃபிளாஷ் நினைவகம் 1 ஜிகா பைட்ஸ் (GB)-யிலிருந்து 2 டெரா பைட்ஸ்(TB) கொள்ளளவு வரையில் கிடைக்கும்.
V .ப்ளூ-ரே வட்டு (BIu - Ray Disc):
1. ப்ளூரே வட்டு அதிக அடர்த்தியானக் கண்ணாடி இழை வட்டு வடிவமைப்பு பெற்ற DVD-யை ஒத்ததாகும்.
2. ப்ளூரே வட்டு பெரும்பாலும் விளையாட்டு மென்பொருட்களை உயர் வரையறைத் திரைப்படங்களைச் சேமிக்கப் பயன்படுகிறது
3. ஒரு இரண்டு அடுக்கு ப்ளூரே வட்டில் 5.5 GB வரை தரவுகளைச் சேமிக்கலாம். இதன் கொள்ளளவு 5 DVD மற்றும் 70CD க்குச் சமமாகும்.
4. இந்த வடிவமைப்பு பதிவை இயக்குவதற்கும் , மீண்டும் எழுதுவதற்க்கும் . உயர் வரையறை வீடியோவை இயக்குவதற்கும், மேலும் மிக அதிகத் தரவுகளைச் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
5. ப்ளூரே வட்டு ப்ளூ- வைலட் லேசர்-ஐ தரவை எழுதுவதற்க்கு பயன்படுத்துவதால் ப்ளூ-ரேஎன்று பெயர் பெற்றது.
19.
கணிப்பொறி நினைவகம் என்பது மனித மூளையைப் போன்றதாகும். கணிப்பொறி நினைவகம் தரவுகளையும் கட்டளைகளையும் சேமித்து வைக்கப் பயன்படுகிறது. நினைவத்தில் சேமித்து வைக்கப்பட்ட தரவுகளும் கட்டளைகளும் இரண்டு வகையில் கையாளப் படுகின்றன. (படிக்க/எழுத) அவை :
1. தொடர்ச்சியான அணுகல் முறை
2.நேரடி அணுகல் முறை
1. தொடர்ச்சியான அணுகல் முறை :
நினைவகம் முதலிலிருந்து கடைசி வரை ஒவ்வொன்றையும் வரிசையாக அணுகும்.
2.நேரடி அணுகல் முறை:
நினைவகம் ஒவ்வொன்றாக அணுகுவதற்குப் பதிலாக நேரடியாக அணுகும்.

20.
ஒரு நுண்செயலியின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
I. கடிகார வேகம்:
1. ஒவ்வொரு நுண்செயலியிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்தக் கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும்.
2. கணிப்பொறியின் வேகம் மெகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) மற்றும் கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) அளவில் அளக்கப்படுகிறது.
II. கட்டளை தொகுப்பு :
1. கணிப்பொறிகளில் தரவை செயற்படுத்த கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
2. ஒரு நுண்செயலி இயக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட, அடிப்படையான எந்திர மொழி அறிவுறுத்தல்களின் தொகுப்பு, கட்டளைத் தொகுதி எனப்படும்.
3. நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி .செயல்படுத்தும் செயல்கள்:
(i) தரவு மாற்றம்
(ii) எண் கணித செயல்முறைகள்
(iii) தருக்கச் செயல்முறைகள்
(iv) கட்டுப்பாட்டு நகர்வு
(v) உள்ளீடு/ வெளியீடு
III. வேர்டு அளவு :
1. வேர்டு அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
2. ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையையும் பொறுத்ததாகும்.
3. மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards