11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/09/2019
ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?
Text பணிக்குறி
Text Box பணிக்குறி
Draw பணிக்குறி
Draw Box பணிக்குறி
2.
Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?
Ctrl + F5
Ctrl + F8
Ctrl + F10
Ctrl + F12
3.
"Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?
File ⟶ Table properties
Format ⟶ Table properties
Table ⟶ Table Properties
Table ⟶ Table format
4.
ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?
5.
ஒரு அட்டவணையில் எவ்வாறு ஒரு சிற்றறையை பல சிற்றறைகளாக பிரிப்பாய் மற்றும் பல சிற்றறைகளை எவ்வாறு ஒன்றாக சேர்ப்பாய்?
6.
ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?
7.
பின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்?
8.
வரைவி கருவிப்பட்டி பற்றி குறிப்பு வரைக
9.
ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?
10.
படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?
11.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
1.
(a)
Text பணிக்குறி
2.
(a)
Ctrl + F5
3.
(a)
File ⟶ Table properties
4.
1. Word Art வார்த்தை கலை என்பது Open Office Writer யில் உள்ள உரை மாற்றப்படும் அம்சமாகும்.
2. ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு நிழல்கள்,வரைபடங்கள், வண்ணங்கள்,சாய்வு 3D விளைவுகள் போன்ற தாக்கங்கள் (effects) இதன் மூலம் பெறலாம்.
3. Word Art-ல் உள்ள சிறப்பு தாக்கங்கள் மூலம் உரையை மேலும் படிப்பதற்கு எளிமையாக மற்றும் தூண்டுவதாகவும் அமைக்க முடியும்.
5.
(i) குழுவாக உள்ள சிற்றரைகளை இணைக்க :
1. இணைக்க வேண்டிய சிற்றறைகளைத் தேர்வு செய்யவும்.
2.Table Cell→Merge Merge Cells கட்டளை அல்லது Merge Cells பணிக்குறி அல்லது வலது கிளிக் செய்து தோன்றும் மேல் மீட்புப் பெட்டியில் Cell → Merge என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
(ii) ஒரு சிற்றரையை இணைக்க :
1.பிரிக்க வேண்டிய அந்த ஒரு சிற்றரைக்குள் செருகும் புள்ளியை அமர்த்த வேண்டும்.
2.Table→Split Cells கட்டளை அல்லது பணிக்குறி அல்லது வலது கிளிக் செய்து தோன்றும் மேல் மீட்புப் பெட்டியில் Cell → Split என்பதை தேர்வு செய்தால் Split Cells உரையாடல் பெட்டி தோன்றும்.
3. இதில் சுழற் அம்புக்குறிகளை நகர்த்தி பிரிக்க வேண்டிய எண்ணிக்கையைத் தேர்வு செய்யலாம் அல்லது நேரடியாக எண்ணிக்கையைத் தட்டச்சு செய்யலாம்.
4.சிற்றரைகளின் வரிசைகளாகப் பிரிக்க கிடக்கையாக (Horizontally) என்றத் திசையைத் தேர்வு செய்யலாம் அல்லது நெடுவரிசையாகப் பிரிக்க நெடுக்கையாக (Verti cally) என்றத் திசையைத் தேர்வு செய்யலாம்.
5. தேர்வு செய்யப்பட்ட ஒரு சிற்றரை, நாம் விரும்பிய எண்ணிக்கையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளாக பிரிக்கப்பட்டுயிருக்கும்.
6.
1. எந்த இடத்தில் படத்தை சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert\(\rightarrow \)Picture\(\rightarrow \)From file என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
3. Insert Picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன்(Picture gallery) தோன்றும்.அதில் தேவையான படத்தைத் தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
7.
1. சேர்க்கப்பட்ட படத்தின் மேல் கிளிக் செய்தால் Picture கருவிப்பட்டை தோன்றும்.
2. Transparency பணிக்குறி உதவியுடன் படத்தின் தோற்றத் தெளிவை சதவீதத்தில் ( % ) மாற்றலாம்.
8.
View →Toolbars→ Drawing என்ற கட்டளையை கிளிக் செய்தால் வரையும் கருவிப்பட்டை(Drawing toolbar) தோன்றும்.
(i) வரையும் கருவியை (Drawing Tool) பயன்படுத்துவதற்கான வழிகள்:
1. ஆவணத்தில் எந்த இடத்தில் வரைய வேண்டுமோ அந்த இடத்தில் கிளிக் செய்யவும்.
2. வரையும் கருவிப்பட்டையிலிருந்து தேவையானக் கருவியை தேர்வு செய்யவும்.
3. சுட்டியின் வடிவம் Cross hair Pointer -ஆக மாறும். கிறுக்கு வடிவில் உள்ள சுட்டியை ஆவணத்தில் எந்த இடத்தில் வரைபடம் தோன்ற வேண்டுமோ அங்கு கிளிக் செய்து கொண்டே இழுத்து வரைபடத்தை உருவாக்கலாம். சுட்டியை அழுத்துவதை விட்டுவிட்டால் வரைதலுக்கான தேர்வு செயலில் இருக்கும். இதனால் பயனர் தேவைப்பட்டால் வேறு வடிவங்களை வரையலாம்.
4. தேர்வு செய்யப்பட்ட வரைபட செயல்பாட்டை ரத்து செய்ய ESC சாவியை அழுத்தவும் அல்லது Drawing கருவிப்பட்டையில் உள்ள Select பணிக்குறியைப் பயன்படுத்தலாம்.
5. வரைபடத்தின் பண்புகளை Fill color, LineType போன்று மாற்றுவதற்கு Drawing Object properties கருவிப்பட்டை அல்லது உரையாடல் பெட்டியிலுள்ள விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
6. T பணிக்குறியைப் பயன்படுத்தி உரைப்பெட்டியை உருவாக்கலாம்.
9.
ஆவணத்தை அச்சிடும் முன் பார்வையிடும் வழிமுறைகள்:
(i) File → Page Preview அல்லது Page Preview பொத்தானை கிளிக் செய்யவும். ரைட்டர் தற்போதைய பக்கத்தைத் திரையில் காட்டும்.
(ii) Page Preview கருவிப்பட்டையில் Multiple pages பணிக்குறியை கிளிக் செய்து எத்தனை பக்கங்கள் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
(iii) Close Preview பொத்தானை கிளிக் செய்தால் இத்திரை மூடப்படும்.
அச்சுப்பொறியின் அமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1. File → Print (அ ) Ctrl + P (அ) Print File பணிக்குறியை கிளிக் செய்தால் Print உரையடால் பெட்டி தோன்றும்.
2. General தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. பல்வேறு அச்சுப்பொறிகளின் தொகுப்பு பட்டியலிருந்து தேவையான அச்சுப்பொறியை கிளிக் செய்யவும்.
4. Range and Copies பகுதியில் தோன்றும் All Pages விருப்பத்தை தேர்வு செய்தால் எல்லா பக்கங்களும் அச்சிடப்படும் Pages விருப்பத்தை தேர்வு செய்தால் தேவையான ஒரு பக்கம் அல்லது பக்கங்கள் மட்டும் அச்சிடப்படும்.
5. Number of Copies சுழல் பெட்டியில் பக்கத்தை எத்தனை நகல் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிடலாம்.
6. Print பொத்தானை கிளிக் செய்யவும்.
10.
சேர்க்கப்பட்ட படத்தின் வடிவூட்டத்தை மாற்ற ரைட்டரில் உள்ள Picture கருவிப்பட்டை உதவுகிறது. படத்தின் மேல் கிளிக் செய்தால் Picture கருவிப்பட்டை தோன்றும்.இதன் உதவியுடன் படத்தின் அளவு மாற்றலாம். எல்லைகளை அமைக்கலாம். படத்தின் உயரம் மற்றும் அகலம் பின்னணி போன்ற பல்வேறு வடிவூட்டல்களை படத்திற்கு செய்யலாம்.
1. படத்தின் நான்கு மூலைகளை கிளிக் செய்து இழுத்தால் அதன் அளவை பெரிதாக்க மற்றும் சிறிதாக்க முடியும்.
2. Crop விருப்பத்தை தேர்வு செய்தால் Cropping கைப்பிடிகள் தோன்றும். இவற்றை கிளிக் செய்து இலுத்தால் படத்தை வேண்டிய அளவிற்கு வெட்டலாம்.
3. Crop கட்டளையை கிளிக் செய்தால் Crop கருவி தேர்வு நீக்கப்பட்டுவிடும்.
4. Default கீழிறங்கு பெட்டியில் அம்புகுறியை கிளிக் செய்தால் Black and White, Grey and Scale அல்லது Water Mark ( Background) போன்ற விருப்பங்கள் தோன்றும். இதில் Default விருப்பம் அசல் படத்தை காட்டும்.
5. Flip Horizontally பணிக்குறியைக் தேர்வு செய்தால் படம் கிடைக்கை திசையில் புரட்டப்பட்டிருக்கும்.
6. Flip Vertically பணிக்குறியைக் தேர்வு செய்தால் படம் கிடைக்கை திசையில் புரட்டப்பட்டிருக்கும்.
7. Transparency பணிக்குறி உதவியுடன் படத்தின் தோற்றத் தெளிவை சதவீதத்தில் ( % ) மாற்றலாம்.
11.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards