11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
சொற்செயலி ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஏற்கனவே செய்த செயலை தவிர்கக்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?
Ctrl +E
Ctrl + U
Ctrl + Z
Ctrl + n
2.
இவற்றுள் எந்த பகுதி செயற்பாட்டின் பெயரை திரையின் மேல் புறத்தில் காட்டும்?
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பத்த வடிவூட்டம்
3.
ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?
Find
Find All
Replace
Replace All
4.
Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?
File
Edit
Tools
Format
5.
Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும்
File ⟶ Table properties
Format ⟶ Table properties
Table ⟶ Table Properties
Edit ⟶ Table Properties
6.
பக்க வடிவூட்டல் என்றால் என்ன?
7.
சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
8.
சொற்செயலாக்கம் என்றால் என்ன?
9.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரின் சில அம்சங்களை எழுதுக
10.
ஆவணத்தில் எவ்வாறு திருத்தங்கள் செய்வாய்?
11.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?
12.
உரை வடிவூட்டம் என்றால் என்ன?
13.
ரைட்டர் ஆவணத்தில் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை எவ்வாறு சேர்ப்பாய்?
14.
புல்லட்குறி மற்றும் எண் வரிசையின் பயன் யாது?
15.
ரூலர்-குறிப்பு வரைக.
16.
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
17.
ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை?
18.
புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?
19.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
20.
ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக
21.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
1.
(a)
Ctrl +E
2.
(a)
பட்டிப்பட்டை
3.
(a)
Find
4.
(a)
File
5.
(a)
File ⟶ Table properties
6.
பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம்,பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும்.
7.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. சுட்டெலியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்.
3. உரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொத்தானை விட்டு விட வேண்டும்.
8.
சொற்செயலாக்கம் என்பது கணிப்பொறியில் பொருத்தமான ஒரு மென் பொருளைப் பயன்படுத்தி உரை ஆவணங்களை உருவாக்குதல், பதிப்பித்தல், கையாளுதல்,பரிமாற்றுதல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுக்கும் செயற்பாடாகும்.
9.
1. வார்ப்புருகள் மற்றும் பாணிகள்
2. சட்டங்கள், நெடுவரிசைகள் மற்றும் அட்டவணைகள் உள்ளிட்ட பக்க வடிவமைப்பு முறைகள்.
3. வரைபடங்கள், அட்டவணைச் செயலிகள் மட்டும் பிற பொருட்களை உட்பொதித்தல் அல்லது இணைத்தல்
4. வரைதலுக்கான உள்ளிணைந்த கருவிகள்.
5. பல ஒற்றை ஆவணங்களை ஒரு முதன்மை ஆவணமாக உருவாக்குதல்.
6. ஆவணங்களைத் திருத்தும் போது அதன் நடையை மாற்றும் வசதி.
7. நூலகத் தரவுத்தளப் பட்டியில் சேர்த்தலுடன் இணைந்த தரவுத்தள ஒருங்கிணைப்பு.
8. ஆவணத்தை PDF வடிவிற்கு ஏற்றம் செய்தல்.
10.
1. Backspace பொத்தான்: செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்கும்.
2. Delete பொத்தான்: செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்கும்.
11.
ஓபன் ஆஃபீஸ் பல்வேறு அலுவலக தொகுப்புகள் உருவாக்கக்கூடிய கீழ்க்கண்ட மென்பொருள்களை கொண்டுள்ளது.
1. ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் (OpenOffice Writer)
(i) உரை ஆவணங்களை உருவாக்கப் பயன்படும் சொற்செயலி.
2. ஓபன் ஆஃபீஸ்கால்க் (OpenOffice Calc)
(i) அட்டவணைத் தாள்களை உருவாக்கப் பயன்படும் அட்டவணை செயலி.
3. ஓபன் ஆஃபீஸ் பேஸ் (OpenOffice Base)
(i) தரவு தளங்களை உருவாக்கப் பயன்படும்.
4. ஓபன் ஆஃபீஸ் இம்ப்ரெஸ் (Open Office Impress)
(i) நிகழ்த்துதலை உருவாக்கப் பயன்படும்.
5. ஓபன் ஆஃபீஸ் ட்ரா (OpenOffice Draw)
(i) படங்கள் வரையப் பயன்படும் மென் பொருள்.
6. ஓபன் ஆஃபீஸ் பார்முலா (OpenOffice Formula)
(i) வாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடுகளை உருவாக்கப் பயன்படுகிறது.
12.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடாநிலையாக உள்ள எழுத்துவகை, அளவு , நிறம்,வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது "உரை வடிவூட்டல்" எனப்படும்.
எ.கா: தடிமனாக்குதல்,சாய்வெழுத்தாக்குதல், அடிக்கோடிடல் போன்றவை பொதுவான வடிவூட்டல் தேர்வுகளாகும்.
13.
1. Insert →→Header→→Default என்ற கட்டளையைப் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்யவும்.
2. தற்போது தலைப்பு பகுதியும், பணியிடத்தில் தட்டச்சு செய்த பகுதியும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருக்கும்.
3. தலைப்பு பகுதியில் நேரடியாகவே தலைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது Insert →Fields→Title என்ற கட்டளையைத் தேர்வு செய்து தலைப்பை தட்டச்சு செய்யலாம்.
4. Insert →Footer→Default என்ற கட்டளையைத் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்தால் அடிக்குறிப்பு உருவாகும்.
5. அடிக்குறிப்பில் செருக்கும் புள்ளியை வைத்து கிளிக் செய்யவும்.
6. Select Insert → Fields → Date என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் எல்லா பக்கங்களிலும் கணிப்பொறியின் தேதி புகுத்தப்படும்.
14.
1. முக்கிய குறிப்புகளைப் பட்டியலிட, எளிதாகப் படிக்க மற்றும் பின்பற்ற புல்லட் மற்றும் எண் வரிசைப் பயன்படுகிறது.
2. படிப்பவருக்கு தகவலைப் பட்டியலிட்டு, பிரித்து மற்றும் ஒருங்கிணைப்பதற்கு மிகவும் சிறந்த முறையாகும்.
3. பத்திநிலை பண்புகளான புல்லட் குறியீடு மற்றும் எண் வரிசையின் மூலம்,பத்தியின் தொடக்கத்திற்கு புல்லட்குறி அல்லது எண் வரிசையிடலாம்.
4. ஆவணத்திலுள்ள முக்கியமானப் பகுதிகளைப் பட்டியலிடுவதற்கு புல்லட் குறி பயன்படுகிறது.
5. உரையை வரிசைப்படுத்த எண் வரிசையிடல் மிகப் பொருத்தமான முறையாகும்.
6. எண் வரிசையிடப்பட்ட பட்டியலில், பயனர் ஒரு பத்தியைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்தால் பட்டியல் தானாகவே எண்களை மாற்றிக் கொள்ளும்.
15.
பக்க ஓரங்களைக் காட்டும் அடிக்கோளாக ரூலர் வடிவூட்டல் கருவிப்பட்டையின் கீழ் உள்ளது. இரண்டு வகையான ரூலர்கள் உள்ளன.
1. கிடைமட்ட ரூலர்(Horizontal): பக்க இடது மற்றும் வலது ஓரங்களை மாற்றியமைக்கப் பயன்படுகிறது.
2. செங்குத்து ரூலர்(vertical):பக்க மேல் மற்றும்கீழ் ஓரங்களை மாற்றியமைக்கப் பயன்படுகிறது.
16.
வழிமுறை1:
தேவையான உரையைத் தேர்வு செய்து வலது பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் மேல் மீட்பு பட்டிப்பட்டையில் உள்ள Line Spacing என்றத் தேர்வை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் Single, 1.5 அல்லது Double போன்ற ஏதேனும் வரி இடைவெளியை தேர்வு செய்யலாம்.
வழிமுறை 2:
1. Edit\(\rightarrow \)Select All கட்டளையைப் பயன்படுத்தி முழு ஆவணத்தையும் தேர்வு செய்யவும்.
2. Format \(\rightarrow \)Paragraph கட்டளையைபக் கிளிக் செய்யவும்.
3. Paragraph உரையாடல் பெட்டி தோன்றும்,இதில் Indents & Spacing தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Line Spacing வகையிழு பட்டியில் தேவையான வரி இடைவெளியைத் தேர்வு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
17.
1. File \(\rightarrow \)Save அல்லது File \(\rightarrow \)SaveAs அல்லது Ctrl+S கிளிக் செய்தால் "SaveAs" என்ற உரையாடல் பெட்டி தோன்றும்.
2. ஆவணத்தை சேமிக்கும் இடத்ததைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. ஆவணத்தின் பெயரை File Name உறைப்பு பெட்டியில் தட்டச்சு செய்ய வேண்டும்.
4. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள அனைத்து ஆவணங்களும் .odt நீட்டிப்புடன் சேமிக்கப்படும். பயனர் ஓபன் ஆஃபீஸ் ஆவணத்தை மைக்ரோசாப்ட்வேர்டு (Microsoft Word) ஆவணம் அல்லது PDF வடிவில் சேமிக்கலாம்.அவ்வாறு செய்ய "Save As type" பட்டியல் பெட்டியில் உள்ள கோப்பு வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
5. இறுதியாக Save பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
18.
1. புல்லட் மற்றும் எண்வரிசை நீக்க வேண்டிய உரையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Bullets பணிக்குறியை
கிளிக் செய்தால் புல்லட் நீங்கும்.
3. Numbering பணிக்குறியை
கிளிக் செய்தால் எண் வரிசை நீங்கும்.
19.
| நகர்த்தல் | நகலெடுத்தல் |
|---|---|
| 1. இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரையானது மூல இடத்திலிருந்து நீக்கப்பட்டு, இலக்கு இடத்தில் வைக்கப்படும். |
இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரை, மூல இடத்திலிருந்துநகலெடுக்கப்பட்டு, இலக்கு இடத்தில்அனுப்பப்படும்.. |
| 2. Cut மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
Copy மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
20.
சொற்செயலியின் ஒரு முக்கியப் பணி பக்க வடிவூட்டலாகும்.
1. பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம்,பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும்.
2. ரைட்டரில் பல்வேறு பக்க வடிவூட்டல் தேர்வுகள் Page style உரையாடல் பெட்டியின் மூலம் செய்யப்படுகிறது.
3. Format \(\rightarrow \)Page என்றக் கட்டளையின் மூலம் Page style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
1. பக்க அளவு மற்றும் பக்க அமைவை மாற்று:
1. Page style உரையாடல் பெட்டியில், Page தொகுதியைத் தேர்வு செய்யவும்.
2. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது Width மற்றும் Height என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
3. Orientation குழுவில் Portrait அல்லது Landscape பொத்தானைத் தேர்வு செய்து பக்கத்தின் அமைவை மாற்றலாம்.
2. பக்கத்தின் நிறத்தை மாற்று:
Page style உரையாடல் பெட்டியில் உள்ள Background தொகுதியிலுள்ள Color கீழிறங்கு பெட்டியைக் கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு அல்லது "graphic" தேர்வு செய்தால் பக்கத்தின் பின்னணியில் வண்ணம் அல்லது படத்தைச் சேர்க்கலாம்.
3. எல்லையை மாற்று:
Page style உரையாடல் பெட்டியிலுள்ள Borders தொகுதியைத் தேர்வு செய்து.பயனர் வரையறுத்த பகுதியில் உள்ள எல்லைகளின் அளவு. எல்லைக் கோடுகளின் பாணி எல்லைகளின் நிறம் ஆகியவற்றை மாற்றியமைக்கலாம்.
4. தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளைச் சேர்க்க:
Insert \(\rightarrow \)Header\(\rightarrow \)Default என்ற கட்டளையைப் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்யவும்.
1. தற்போது தலைப்பு பகுதியும், பணியிடத்தில் தட்டச்சு செய்த பகுதியும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருக்கும்.
2. தலைப்பு பகுதியில் நேரடியாகவே தலைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது Insert \(\rightarrow \)Fields\(\rightarrow \)Title என்ற கட்டளையைத் தேர்வு செய்து தலைப்பை தட்டச்சு செய்யலாம்.
3. Insert \(\rightarrow \)Footer\(\rightarrow \)Default என்ற கட்டளையைத் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்தால் அடிக்குறிப்பு உருவாகும்.அடிக்குறிப்பில் செருக்கும் புள்ளியை வைத்து கிளிக் செய்யவும்.
4. Select Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \) Date என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் எல்லா பக்கங்களிலும் கணிப்பொறியின் தேதி புகுத்தப்படும்.
21.
1. தலைப்பு என்பது ஒரு பக்கத்தின் மேல் பகுதியைக் குறிக்கும். தலைப்புப் பகுதியில் தலைப்பு மற்றும் நூலாசிரியர் பெயர் போனற்வற்றைச் சேர்க்கலாம்.
2. அடிக்குறிப்பு என்பது ஒரு பக்கத்தின் கீழ்பகுதியைக் குறிக்கும். அடிக்குறிப்பில் பக்க எண்கள்,தேதி, நேரம் போன்றவற்றைச் சேர்க்கலாம். இவ்வாறுச் சேர்க்கப்பட்ட, தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் எல்லா பக்கங்களிலும் தோன்றும்.
3. செருகும் புள்ளியை அடிக்குறிப்பில் கொண்டு சென்று கிளிக் செய்யவும்.
4. Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \)Page Number என்ற கட்டளையைப் பயன்படுத்தினால் எல்லா பக்கங்களிலும் பக்க எண்கள் சேர்க்கப்படும்.
அடிக்குறிப்பில் உள்ள பக்க எண்களை வடிவூட்டம் செய்ய.
1. Format \(\rightarrow \)Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page style உரையாடல் பெட்டி தோன்றும்.
2. இதில் Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. Layout Settings-ல் தோன்றும் Format, கீழிறங்கு பட்டிப் பெட்டியில் உள்ள விருப்பமான வடிவூட்டல் வகையைத் தேர்வு செய்து, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards