11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 12/03/2019
+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டரில் எழுத்துப் பிழையைச் சரி செய்வதற்காக உள்ளக் கருவிகள் யாவை?
2.
முழு அட்டவணையை எவ்வாறு நீக்குவாய்?
3.
உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?
4.
சொற்செயலாக்கம் என்றால் என்ன?
5.
ஆம்பியன்ஸ் என்றால் என்ன?
6.
தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?
7.
கோப்பு மற்றும் கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய் ?
8.
விண்டோஸில் எவ்வாறு எந்த நேரத்திலும் திரைமுகப்பிற்குச் செல்லலாம்?
9.
பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?
10.
செயல்முறைகளின் வகைகள் யாவை?
11.
இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?
12.
அமைப்புப் பாட்டை(System Bus) என்றால் என்ன?
13.
ரோபோட்டிக்ஸ்(Robotics)-குறிப்பு வரைக.
14.
தண் தொடக்கம் (cold booting) என்றால் என்ன?
15.
QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?
16.
சுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
17.
தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?
18.
மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
19.
கணினி நன்னெறி என்றால் என்ன?
20.
சமூக வலையகம் என்றால் என்ன?
21.
மின்- சந்தைப்படுத்தல் என்றால் என்ன?
22.
வலையகம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுது
23.
கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?
24.
Slide Master -வரையறு
25.
விரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு
26.
சில்லு அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?
27.
ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
28.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன
29.
வடிகட்டியின் வகைகள் யாவை?
30.
நுண்ணறை முகவரின் வகைகள் யாவை?
31.
நகலெடுத்தல்,வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
32.
காலக்-ல் ஒரு வாய்ப்பாட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக
33.
நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?
34.
லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.
35.
கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?
36.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
37.
பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை ?
38.
பலபயனரின் இயக்க அமைப்பு என்றால் என்ன?
39.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
40.
அறிவுறுத்தல் என்றால் என்ன?
41.
தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?
42.
பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?
43.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.
44.
1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக
45.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
46.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
47.
கணித ஏரண செயலகத்தின் செயல்பாடு யாது?
48.
தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
49.
கணிப்பொறி என்றால் என்ன?
50.
தவறாக தட்டச்சு செய்யப்பட்ட சொல்லை எவ்வாறு சரி செய்வாய்?
51.
மூலத்தரவு என்றால் என்ன?
52.
மெயில் மெர்ஜ் என்றால் என்ன?
53.
ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.
54.
தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
55.
உரை வடிவூட்டம் என்றால் என்ன?
56.
இயக்க அமைப்பின் வகைகள் யாவை?
57.
கேச் (Cache) நினைவகம்- குறிப்பு வரைக.
58.
தட்டல் வகை மற்றும் தட்டா வகை அச்சுப்பொறி- வேறுபடுத்துக.
59.
தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
60.
லேசர் அச்சுப்பொறிகள் பற்றிக் குறிப்பு வரைக.
61.
ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
62.
Ramsomeware-விளக்குக
63.
இ-வாலெட் என்றால் என்ன?
64.
அக இணையத்திற்கு புற இணையத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?
65.
வலைப்பக்கம்,வலை உலவி மற்றும் வலை சேவையகம் ஆகியவற்றை வேறுபடுத்துக
66.
Master slide – என்பதை வரையறு
67.
Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?
68.
இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?
69.
பரப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
70.
ஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக
71.
காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக
72.
Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?
73.
இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை விளக்குக
74.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
75.
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
76.
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
77.
(8BC)16 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக
78.
NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.
79.
ISCII குறிப்பு வரைக.
80.
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
81.
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
82.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
83.
எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?
84.
புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?
85.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
1.
எழுத்துப் பிழையைச் சரிசெய்வதற்க்காக ஓபன் ரைட்டரில்
1. ஒரு அகராதியும் மற்றும்
2. எழுத்துப் பிழை சரிப்பார்ப்பு நிரலும் உள்ளது.
2.
1. Edit→Select All என்ற கட்டளையை பயன்படுத்தியோ அல்லது Ctrl + A என்ற குறுக்குவழி பயன்படுத்தியோ முழு அட்டவணையை தேர்வு செய்ய வேண்டும்.
2. Table→Delete→Table என்ற கட்டளையை பயன்படுத்தினால் தேர்வு செய்யப்பட்ட அட்டவணையை நீக்காலம்.
3.
1. Ctrl +A அல்லது Edit →Select All தேர்வு செய்து முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்கவும்.
2. வடிவூட்டலை நீக்க, Ctrl+M கிளிக் செய்யவும்.
4.
சொற்செயலாக்கம் என்பது கணிப்பொறியில் பொருத்தமான ஒரு மென் பொருளைப் பயன்படுத்தி உரை ஆவணங்களை உருவாக்குதல், பதிப்பித்தல், கையாளுதல்,பரிமாற்றுதல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுக்கும் செயற்பாடாகும்.
5.
பட்டிப்பட்டை (Menubar)யின் கீழே உள்ள திரையில் ஒரு படம் முகப்புத்திரை முழுவதுமாக தோன்றும். இதுதான் உபுண்டுவின் கொடாநிலை பின்னணி வால்பேப்பர் ஆகும். இது ஆம்பியன்ஸ் (Ambiance) எனப்படுகிறது.
6.
1. உபுண்டு-ல் உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்டு (Thunderbird) உள்ளது.
2. இதில், மின்அஞ்சல் பயன்பாட்டிற்கான எக்ஸேஞ்ச் (Exchange),ஜிமெயில் (Gmail).ஹாட்மெயில் (Hotmail) போன்றவற்றை இயக்க வசதி உள்ளது.
7.
கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்கான வழிகள்:
(i) File \(\rightarrow \)Rename என்ற பட்டிப்பட்டைத் தேர்வின் மூலம்
(ii) கோப்பின் மீது வலம் கிளிக் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வை கிளிக் செய்வதன் மூலம்
(iii) கோப்பின் மீது கிளிக் செய்து F2 பொத்தான் மூலம்.
8.
நாம் எந்த பயன்பாட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் Winkey + D அல்லது ஏரோபீக் (Aero Peek) ஐ பயன்படுத்தி எந்த நேரத்திலும் திரை முகப்புக்குச் செல்லலாம்.
9.
1. இயக்க அமைப்பு வலுவான பிழை பொறுத்தல் தன்மையுடன் இருக்க வேண்டும்.
2. எதாவது ஓர் தவறு நேரும்போது , இயக்க அமைப்பு செயல் இழக்கக்கூடாது.
3. மாறாக இயக்க அமைப்பு தவறு சகிப்புத்திறன் கொண்டு இயல்பு நிலைக்கு மாற வேண்டும்.
10.
1. இயக்க அமைப்பு செயல்முறை- அமைப்பு குறியீடாக இயக்கப்படும்.
2. பயனர் செயல்முறை- பயனர் குறியீடாக இயக்கப்படும்.
11.
இயக்கநேரம் என்பது நினைவகம் படிக்க/ எழுதும் கோரிக்கைக்கு எவ்வளவு விரைவாக பதிலளிக்க முட்டும் என்பதைக் குறிக்கின்றது.
12.
அமைப்புப் பாட்டை என்பது நுண் செயலிக்கும் மற்ற சாதனங்களுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த உதவும் முகவரிப் பாட்டை , தரவுப் பாட்டை மற்றும் கட்டுப்பாட்டுப் பாட்டை ஆகியவற்றின் தொகுப்பாகும்.
13.
1. 1921 ஆம் ஆண்டில் ஆர்யூஆர்[ரோசம்ஸ் யுனிவர்சல் ரோபோஸ்] RUR (Rossum's Universal Robots) இல் கரேல் கபீக் (Karel Capek) என்பவரால் "ரோபோட்" என சூட்டப்பட்டது.
2. கைவழியாக அல்லது அதன் சுற்றுச் சூழலில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகளுக்குப் பதிலளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி இயந்திரத்தை விவரிக்க பயன்படுகிறது.
14.
1. ஒரு கணிப்பொறியை முதன்முதலில் தொடங்குவதைக் தண் தொடக்கம் அல்லது வன் தொடக்கம் (Hard booting) எனலாம்.
2. இந்த தொடக்க முறையில், பயனர் மின் இணைப்பைத் தொடங்கும் போது, படிக்க மட்டும் நினைவகத்தில் உள்ள POST நிரல் இயங்கத் தொடங்கும்.
15.
1. கியூ.ஆர் (QR-QuickResponse) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும்.
2. ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது.
16.
1. கிளிக்
2. வலது கிளிக்
3. நகர்த்தல்
4. இரட்டை கிளிக்
5. இழுத்து விடுதல்
17.
தரவுகளை, தகவல்களாக மாற்றம் செய்யும் செயல்முறை "தரவுச் செயலாக்கம்" என்று அழைக்கப்படுகிறது.

18.
1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது .
2. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
3. உயர்நிலை மொழி பயன்படுத்தப்பட்டது .
19.
1.கணிப் பொறி நன்னெறி என்பது விதிமுறைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்:
2. இது கணினி தொழில்நுட்ப நுகர்வு செயல்முறையைச் செயல்படுத்துதல் மற்றும் அதன் தொடர்பானக் கட்டுப்பாடுகளைச் சேதமின்றி அல்லது நன்னடத்தை மதிப்புகளை மீறாமலும் மற்றும் எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பு அல்லது நிறுவனத்தின் நம்பிக்கையை இழக்காமலும் இருக்க வேண்டும்.
20.
சமூக வலையகம் அல்லது சமூக ஊடகமானது கணினி ஊடகத் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு உருவாக்கப்படுவதோடு தகவல். எண்ணங்கள், தொழில்துறை ஆர்வம் மற்றும் பிறவடிவ வெளிப்பாடுகளைமாய சமுதாயம் மற்றும் வலையகத்தின் மூலம் பகிரும் வசதி ஆகும்.
21.
மின் - சந்தைப்படுதல் என்பது மின்னஞ்சல் அனுப்புதல் மற்றும் இணையவழி விளம்பரம், வாடிக்கையாளருக்கு பொருட்களைச் சந்தைப்படுத்தல் மற்றும் வலைத்தள வணிகத்தில், நெரிச்சலை அதிகரித்தலுக்கான உத்தியாகும். இது இலக்க சந்தைப்படுத்துதல் என்றும் அழைக்கப் படுகிறது.
22.
வலையகம் என்பது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கணினியாகும்.
வலையின் வகைகள்
1. தனிப்பட்ட வலை (PAN)
2. குறும்பரப்பு வலை (LAN)
3. நகரப்பரப்பு வலை (MAN)
4. பரந்த வலை (WAN)
23.
(i) இணைப்பில் உள்ள கணிப்பொறியின் வன்பொருள், மென்பொருள், வளங்கள் மற்றும் தரவுகளை அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு இடையகத்தின் வழியே பகிர்ந்து கொள்ளும் அமைப்பாகும்.
(ii) கணிப்பொறி வலையகத்தில் உள்ள கணிப்பொறிகள் கம்பிகள், தொலைபேசி கம்பிகள், வானொலி அலைகள் செயற்கைகோள்கள் அல்லது அகச்சிவப்பு அலைகள் வழியாக இணைக்கப்படுகிறது.
24.
1.Slide Master என்பது முன்கூட்டியே தொகுக்கப்பட்ட 28 சில்லுகளைக் கொண்ட தொகுப்பாகும்.
2.நிகழ்த்துதலில் உள்ள எல்லா சில்லுகளிலும் முழுதளாவிய மாற்றங்களைச் செய்ய Slide Master பயன்படுகிறது.
25.
விரிவாக்கப்பட்ட குறிப்புகள் என்பது குறிப்பிட்ட பணிக்குறி, உரைப்பெட்டி அல்லது பட்டிப்பட்டைக் கட்டளை போன்றவற்றின் மீது சுட்டியை வைக்கும்போது அவைகளின் செயல்பாட்டை சுருக்கமாகத் தரக்கூடிய வசதி ஆகும்.
26.
1.முதன்மை (Impress) சன்னலில் உள்ள பணிப்பலகத்தின் ஒரு பகுதியே சில்லு அமைப்பு (Layout) ஆகும்.
2.முன்னரே தொகுக்கப்பட்ட சில்லு அமைப்புகள் Layout ல் காட்டப்பட்டுள்ளது.
3.இதில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, மாற்றம் செய்து தனித் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
27.
| சில்லு | சில்லுக் காட்சி Slideshow |
| உரை, படங்கள், ஒளிக் காட்சிகள், அசைவுப் படங்கள்,இணைப்பு ஒலி வரை,படங்கள், பட்டியல்கள் அட்ட வணைகள் போன்ற கூறுகளைக் கொண்ட நிகழ்த்தலுக்கான அடிப்படை உறுப்பாகும். | ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை வரை படச் சில்லுகளாகவோ ஆவணப் பக்கங்களாகவோ கொடுக்கும் ஒரு காட்சியாகும். |
28.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்பது சில தலைப்புகள் (ஆவணத்தலைப்பு, நூலாசிரியர் பெயர் அல்லது மேற்கோள்கள் (அதாவது பக்க எண், பக்கங்களில் எண்ணிக்கை, தேதி) அல்லது குறிப்புரைகள் ஆகியவை பக்கத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டால் அவை தலைப்பு எனவும், பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டால் அடிக்குறிப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.
29.
கால்க்-ல் மூன்று வகையான வடிக்கட்டல்கள் உள்ளன. அவை :
1. தானியங்கு வடிகட்டல் (Auto filter)
2. செந்தர வடிகட்டல் (Standard filter) மற்றும்
3. மேம்பட்ட வடிகட்டல் (Advanced filter)
30.
இரண்டு வகையான நுண்ணறைப் பார்வையிடல் முறைகள் உள்ளது. அவை,
1. ஒப்பீட்டு நுண்ணறைப் பார்வையிடல் அல்லது ஒப்பீட்டு நுண்ணறை முகவரி
2. தனித்த நுண்ணறைப் பார்வையிடல் அல்லது தனித்த நுண்ணறை முகவரி.
31.
| செயல் | குறுக்குவழிச்சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl +C |
| வெட்டுதல் | Ctrl +X |
| ஓட்டுதல் | Ctrl +V |
32.
ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பு : நுண்ணறை முகவரி < செயற்குறி > நுண்ணறை முகவரி2
வாய்ப்பாடுகள், = அல்லது + அல்லது - குறியுடன் தொடங்கி மதிப்புகள். செயற்குறிகள் மற்றும் நுண்ணறை முகவரிகளுடைய தொகுப்பாக அமையும். சமக்குறியுடன் தொடங்குவது சிறந்த முறையாகும்.
எ.கா:-A1+ B1*5
33.
அட்டவணைத்தாள் முழுவதும் நகர்த்தக் கூடிய செவ்வக வடிவிலான பெட்டி போன்ற அமைப்பு "நுண்ணறைச் சுட்டி" என்று அழைக்கப்படுகிறது.
34.
லினக்ஸ்(Linux)-ன் மிகப் பிரபலமான சேவையக பகிர்மானங்கள் :
1. உபுண்டு லினக்ஸ்
2. ஆர்க் லினக்ஸ்
3. பெடோரா
4. ஸென்ட் OS
5. லினக்ஸ் மின்ட்
6. டீப்பன்
7. டெபியான்
35.
1. கோப்பு விரிவாக்கம் என்பது கோப்பின் வகையைக் கண்டறியப் பயன்படும் கோப்புப் பெயரின் ஒரு பகுதியாகும்.
2. கோப்பின் விரிவாக்கம் முக்கியமானதாகும். ஏனெனில் அவை கோப்பினைக் குறிக்க எந்தப் பணிக்குறியைப் பயன்படுத்துவது மற்றும் எந்தப் பயன்பாடு அந்தக் கோப்பைத் திறக்கமுடியும் என்பதைக் கணிப்பொறிக்கு அறிவிக்கின்றன.
எ .கா: doc என்ற விரிவாக்கம், கோப்பானது Microsoft word என்றப் பயன்பாட்டின் கோப்பு என்பதைக் தெரிவிக்கிறது .
36.
1. பல் பணியாக்கம் அல்லது பல செயலாக்கம் என்பது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும். பல செயலாக்க செயல்முறை(வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது.
2. செயலாக்கம் இணையாக செய்யப்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.
3. ஒவ்வொரு செயலாக்கமும் ஒரே வேலையில் வெவ்வேறு பகுதிகளில் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பணிகளைச் செய்கிறது.
37.
இயக்க அமைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பை வழங்குகிறது.
1. கோப்பு நிலை
2. அமைப்பு நிலை
3. வலை நிலை
1. கோப்பு நிலை:
ஒரு கோப்பினை யார் யார் படிக்க, மாற்ற முடியும் என்பது போன்ற தகவல்களைப் பெற்று அதன்படி கோப்பு அணுக்கத்தைக் (access) கட்டுப்படுத்த வேண்டும். இந்த தகவல்களை, கோப்பினை உருவாக்கியவர் அல்லது கணிப்பொறி நிர்வாகித்து கொடுக்கலாம்.
2. அமைப்பு நிலை:
இதில் ஒரு பயனர் குறிப்பிட்ட கடவுச் சொல்லை கொடுத்தாலொழிய கணிப்பொறியைப் பயன்படுத்த இயலாது.
3. வலை நிலை :
வலை பாதுகாப்பு என்பது சற்று சிக்கலான விஷயம். ஏனென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கணிப்பொறியை அணுகலாம்.உரிய பாதுகாப்பு அளிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
38.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள். தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
39.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
40.
கணிப்பொறியில் தரவைச் செயற்படுத்தக் கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
41.
42.
43.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான பல்வேறு குறியீட்டு முறைகள்:
1. BCD- Binary Coded Decimal.
2. EBCDIC- Extended Binary Coded Decimal Interchange Code.
3. ASCII- American Standard Code for Information Interchange
4. ISCII- Indian Standard Code for Information Interchange
5. Unicode
44.
படிநிலை1: கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணுக்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
படிநிலை2: மாற்றப்பட்ட இருநிலை எண் 8 பிட்டுகளாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.8 பிட்டுக்கும் குறைவாக இருப்பின், முன்னொட்டாக 0 க்களை சேர்த்து 8 பிட்டுகளாக மாற்றவும்.
படிநிலை2: அனைத்து பிட்டுகளையும், தலைகீழாக மாற்றவும்.(அதாவது 1 என்பதை 0 எனவும் 0 என்பதை 1 எனவும் மாற்றுக.)
45.
| முதன்மை நினைவகம் | இரண்டாம் நிலை நினைவகம் |
|---|---|
| 1. தரவு மற்றும் நிரல் கட்டளைகள், நிறைவேற்றத் தயாராக இருக்கும் போது அதனைத் தாற்காலிகமாகச் சேமிக்கப் பயன்படுகிறது. |
தரவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப்பயன்படுகிறது . |
| 2. அழியும் வகை நினைவகம். அதவாது மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும். |
அழியா வகை நினைவகம். மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழியாமல் இருக்கும். |
| எ. கா : RAM | எ. கா : வன்வட்டு,குறுவட்டு (CD-ROM ) |
46.
(i) மையச்செயலகம், நினைவகம் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பட்டகம் கட்டுப்படுத்துக்கிறது.
(ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துக்கிறது.
47.
1. மையச் செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம். பல கணிப்பீடு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது .
2. கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் மற்றும் சுருக்கு அல்லது தருக்கச் செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது .
48.
| தரவு | தகவல் |
|---|---|
| 1. பல்வேறு வகையிலும் திரட்டப்படும் அடிப்படைச் செய்தித் துணுக்கு தரவு எனப்படும். இது தொடர்பு கொள்வதற்கும் , விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது. | முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும் . |
| 2. அர்த்தமற்றவை . | அர்த்தமுள்ளவை |
| எ.கா : 16, அருண் , 'c' | எ.கா : அருண் வயது 16 |
49.
கணிப்பொறி என்பது கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று,அதிவேகமாகச் செயல்பட்டு,விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
50.
தவறாகத் தட்டச்சு செய்யப்பட்ட சொல்லின் மீது சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்தால், பிழையான சொல்லிற்குப் பதிலான பல்வேறு விதமான சரியான சொற்களுடன் கூடிய ஒரு பட்டித் தோன்றும். அதில் சரியானச் சொல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.
51.
ஒரு மூலத்தரவு என்பது அஞ்சல் பட்டியலைத் தருவிக்கப் பயன்படும் பெயர்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கியத் தரவுத்தளம் அல்லது மற்றத் தகவல்களின் பதிவுகளாகும்.
52.
சொற்செயலியின் முக்கிய அம்சம் மெயில் மெர்ஜ் ஆகும். பெயர்கள் மற்றும் முகவரிகளின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
53.
1. ஆவணத்தில் எந்த இடத்தில் சிறப்பு எழுத்துக்கள் தோன்ற வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert→Special Character என்ற கட்டளையைத் தேர்வு செய்தால், தோன்றும் Special Character உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான சிறப்பு எழுத்தின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
3. தேவையான சிறப்பு எழுத்து கண்டறிய முடியவில்லை எனில் வேறு எழுத்துரு வகையைத் தேர்ந்தெடுத்து அந்த சிறப்பு எழுத்தைப் பெறலாம்.
4. OK பொத்தானை கிளிக் செய்யவும்.
54.
| தனியுரிமம் பெற்ற மென்பொருள் | திறந்த மூல மென்பொருள் |
|---|---|
| 1. பயனர் மென் பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு பணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும். |
இணையத்தில் இலவசமாகப் கிடைக்கும். |
| 2. பயனர் மென் பொருளை மாற்றியமைக்க முடியாது. |
பயனர் மென் பொருளை மாற்றியமைக்க முடியும். |
55.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடாநிலையாக உள்ள எழுத்துவகை, அளவு , நிறம்,வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது "உரை வடிவூட்டல்" எனப்படும்.
எ.கா: தடிமனாக்குதல்,சாய்வெழுத்தாக்குதல், அடிக்கோடிடல் போன்றவை பொதுவான வடிவூட்டல் தேர்வுகளாகும்.
56.
செயலாக்கத் திறன்களைப் பொறுத்து இயக்க அமைப்புகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. ஒற்றைப்பயனர் இயக்க அமைப்பு
2.பலபயனர் இயக்க அமைப்பு
1. ஒற்றைப்பயனர் இயக்க அமைப்பு :
இந்த வகை இயக்க அமைப்பு, ஒரு நேரத்தில், ஒரு பயனரை ஒரே ஒரு பணியை மட்டுமே செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது "ஒற்றை பயனர் மற்றும் ஒற்றை பணி இயக்க அமைப்பு " என அழைக்கப்படுகிறது.
எ .கா: MS-DOS.
2.பல பயனர் இயக்க அமைப்பு:
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள். தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
எ .கா: விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ்.
57.
1. கேச் நினைவகம் அதிவேகமான, விலை உயர்ந்த நினைவகம் ஆகும்.
2. நினைவகத்தில் உள்ளத் தரவை திரும்ப எடுத்தலை துரிதப்படுத்துவதற்கு பயன்படும் நினைவகம் ஆகும்.
3. அதனால் மையச்செயலகத்தில் முதன்மை நினைவகத்தின் அளவை விட இதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.
4. கேச் நினைவகம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம், இந்த நினைவகத்தில் அடிக்கடித் தேவைப்படும் மற்றும் அணுகக்கூடியத் தரவுகள் சேமிக்கப்படும்.
5. இது விரைவான பதிலளிப்பு நேரத்தை தக்க வைக்க உதவுகிறது.
58.
| தட்டல் வகை | தட்டா வகை |
|---|---|
| 1. சிறு கம்பி , மை நாடா மீது தட்டி ஒரு புள்ளியை அல்லது முழு எழுத்தை ஏற்படுத்தும். |
லேசர் மற்றும் நிலை மின்னோட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. |
| 2. இயந்திர அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படிகள் எடுக்க முடியும். |
பல படிகள் எடுக்க முடியாது. |
| 3. வேகம் மற்றும் தரத்தில் குறைந்தது | வேகம் மற்றும் தரத்தில் சிறந்தது |
| எ.கா: புள்ளி அச்சுப்பொறி, வரிப்புள்ளி அச்சுப்பொறி | எ.கா: லேசர் அச்சுப்பொறி மை பீச்சு அச்சுப்பொறி |
59.
கணிப்பொறியுடன் இணைக்கப்பட்ட அனைத்து புறக்கருவிகளும் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்த பிறகு " அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு முறைமை" (BIOS- Basic Input Output System) இயக்கப்படும்.இந்தச் செயல்முறை தொடங்குதல் (Booting) என அழைக்கப்டுகிறது.
இரண்டு வகையான தொடங்குதல் முறைகள்:
1. தண் தொடக்கம்(Cold booting)
2. உடன் தொடக்கம்(Warm booting)
60.
1. லேசர்(Laser) அச்சுப்பொறிகள் பெரும்பாலும் படியெடுப்பான் (photo copiers) பயன்படுத்தும் ஒத்த தொழில்நுட்பத்தையே பயன்படுகிறது.
2. அச்சுப்பொறியின் உள்ளே ஒரு உருளை(drum) முழுவதும் லேசர் கதிர் முன்னும் பின்னுமாக வருடும் போது ஒரு நிலையான மின்சாரம் ஒரு வடிவத்தை உருவாக்குகிறது.
3. வரைகலைப் படங்களைத் திறன்பட உருவாக்குகிறது.
4. லேசர் அச்சுப்பொறியின் முக்கியச் சிறப்பியல்புகளில் ஒன்று அவற்றின் பிழிதிறன் (resolution0 என்பது 1200 dpi க்கு கிடைக்கக்கூடிய பிழிதிறன் வரம்பு, ஏறக்குறைய ஒரு நிமிடத்தில் 100 பக்கங்களை அச்சிடலாம் (PPM- Page Per Minute).
61.
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு.
2.கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல்.
4. இயற்கை மொழிச் செயலாக்கம்.
5. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல்.
62.
Ransomeware : ஒரு கணிப்பொறி அமைப்பில் இணையத் தாக்குதல் தொடங்கிய பிறகு, பணம் கோரி தீங்கு இழைக்கத் திட்டமிடக்கூடிய ஒரு வகைத் தீம்பொருள் ஆகும்.
63.
e - வாலெட் என்பது ஒரு கணிப்பொறி அல்லது ஸ்மார்ட்போன் மூலமாக நிகழ்நேரத்தில் பணப் பரிமாற்றம் செய்யப் பயன்படும் மின் அட்டை ஆகும்.
64.
| அக இணையம் (INTRANET) | புற இணையம் (EXTRANET) |
| 1.இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,பல்வேறு இடங்களில் உள்ள ஒரே நிறுவனத்தின்கணிப்பொறிகளைக் கொண்ட வலை. |
இணையத் தொழில்நுட்பத்தையும், பொதுத் தொலைத் தொடர்பு வசதிகளையும் பயன்படுத்துகின்ற ஒரு தனியார் வலையமைப்பு ஆகும். |
| 2.பணியாளர்கள் நிறுவனத்தைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ளவும்,கொள்கைகள்,விதிமுறைகள், பணியாளர்களின் விவரங்கள் விவரக்கையேடுகள். துறைகள் பற்றியத் தகவல்கள், கருவிகள் மற்றும் சமூகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவும். |
வியாபாரம் தொடர்பானத் தகவல்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை வழங்குவோர்கள் , விற்பனையாளர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது பிற வணிகர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. |
| 3.இணையத்தைச் சார்ந்தது. | இணையத்தையும், அக இணையத்தையும் சார்ந்தது. |
| 4.ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது. | ஒன்று அல்லது பல நிறுவனங்களுக்குச் சொந்தமானது. |
65.
1. வலைப்பக்கம் - உலகளாவிய வலையில் உள்ள ஆவணங்கள்
2. வலை உலவி - வலையில் உள்ள தகவல்களை பார்க்க மற்றும் ஆய்வு செய்ய அனுமதிக்கும் பயன்பாட்டு மென்பொருள்.
3. வலை சேவையகம் - HTTP Protocol - யை பயன்படுத்தி வலைப்பக்கத்தைத் தேடி உலவிக்கு அனுப்புதல்.
66.
1. முதன்மை சில்லு என்பது மற்ற சில்லுகளுக்குத் தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தப்படும் சில்லுவாகும். அனைத்து சில்லுகளுக்கான அடிப்படை வடிவமைப்பைக் கட்டுப்படுத்துகிறது.
2. ஒரு சில்லு நிகழ்த்துதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Slide Master இருக்கலாம்.
3. ஒரு முதன்மை சில்லு. பின்னணி நிறம், வரைகலை அல்லது சாய்வு, பொருள்கள் பின்னணித் தலைப்பு, அடிக்குறிப்புகள், உரையாடல் மற்றும் உரைச்சட்டங்கள் அளவு மற்றும் உரை வடிவமைத்தல் போன்ற வரையறுக்கப்பட்ட தொகுப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
4. சில்லு Master ன் அனைத்து குணங்களும், பாணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
67.
1.சில்லுக்காட்சியில் ஒரு சில்லுவைக் காண்பிக்கும் போது தோன்றும் சிறப்பு விளைவுகளே சில்லு மாற்று விளைவுகள் எனப்படும்.
2.நடப்புச் சில்லு மறைவதற்கு பின்பும் அடுத்த சில்லு தோன்றுவதற்கு முன்பும் மாற்று விளைவுகள் தோன்றும்.
3.சில்லுகளுக்கிடையேயான மாற்று விளைவுகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி ஆகும்.
4. இவ்விளைவுகள் சில்லுகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
68.
Impress ல் ஐந்து வகையானக் காட்சிகள் வழங்கப்படுகின்றன.
1. Normal View தனித்தனி சில்லுவை உருவாக்கவும், பதிப்பிக்கவும் உதவுகிறது.
2.Outline View சில்லுவின் பெயர் மற்றும் தலைப்புகளைத் தேவைக்கேற்ப பதிப்பித்துக் கொள்ள உதவுகிறது.
3.Notes View- சில்லுகளின் குறிப்புகளைச் சேர்க்கவும், ஏற்கனவே உள்ளக் குறிப்புகளைப் பார்க்க உதவுகிறது.
4.Slide Sorter - எல்லா சில்லுகளையும் சிறிய வடிவத்தில் பார்க்க உதவுகிறது.
5.Handout View - சில்லுவின் அளவை மாற்றி. பல சில்லுகள் ஒரே பக்கத்தில் வருமாறு சில்லுகளை அச்சிட்டுக் கைப்பிடி அறிக்கைகளாக வழங்க உதவுகிறது.
69.
ஒரு நுண்ணறையிலிருந்து இன்னொரு நுண்ணறை வரைத் தொடர்ச்சியாக உள்ள நுண்ணறைகளின் தொகுப்பு பரப்பு எனப்படும்.
எ.கா : A1:A5
70.
| ஒப்பீட்டு நுண்ணறை முகவரி | தனித்த நுண்ணறை முகவரி |
| கொடா நிலை முகவரி முறை. | கொடா நிலை முகவரி முறை அல்ல . |
| நுண்ணறை முகவரியில் எந்தச் சிறப்புக்குறியீடும் இடப்படுவதில்லை |
நுண்ணறைமுகவரியில் $ என்ற குறியீடு பயன்படுத்தப்படும் |
| நுண்ணறையில் உள்ள வாய்ப்பாடு அல்லது செயற்கூறு, நகலெடுத்து ஒட்டப்படும் போது ஒட்டப்பட்ட நுண்ணறையின் வரிசை மற்றும் நெடுவரிசைக்கு ஏற்ப அதன் முகவரி தானாகவே மாற்றம் பெறும். எ.கா := A1+5. | நுண்ணறையில் உள்ள வாய்ப்பாடு அல்லதுசெயற்கூறு. நகலெடுத்து ஒட்டும் போது முகவரியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எ.கா:= A1+5 |
71.
1) நெடுவரிசையை சேர்க்கும் வழிமுறைகள் :
படிநிலை 1 எந்த நெடுவரிசையில் ஒரு புதிய நெடுவரிசை சேர்க்கப்பட வேண்டுமோ, அந்த நெடுவரிசையின் பெயரின் மீது கிளிக் செய்து. தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
படிநிலை 2 : தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நெடுவரிசையின் பெயரில். சுட்டியை வைத்து, வலது கிளிக் செய்யவும். இப்போது ஒரு மேல் மீட்பு பட்டிப் பட்டை தோன்றும்.
படிநிலை 3 : தோன்றும் மேலமீட்பு பட்டிப் பட்டையிலிருந்து, "Insert Columns" என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
வழிமுறை 2 :
1. Insert ---> Columns கட்டளையை பயன்படுத்தியும், ஒரு புதிய நெடுவரிசையை சேர்க்க முடியும்.
ii ) நுண்ணறைகளைச் சேர்த்தல் :
1.ஏற்கனவே உள்ள நுண்ணறைகளுக்கு இடையே ஒரு புதிய நுண்ணறையைச் நுண்ணறையின் மேல் வலது கிளிக் செய்யவும்.
2.இப்போது தோன்றும் மேல் மீட்பு பட்டியிலிருந்து "Insert" கட்டளையைக் கிளிக் செய்யவும்.
3. இப்போது "Insert Cells" உரையாடல் பெட்டியில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள் :
1. Shift cells down 2. Shift cells right
3. Entire row 4. Entire Column
இந்த நான்கு விருப்பத் தேர்வுகளில், ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
1. Shift cells down - தற்போது நுண்ணறை எங்கு உள்ளதோ, அங்கு புதிய நுண்ணரை செருகப்படும். ஏற்கனவே உள்ள
நுண்ணறைகள் கீழ்பக்கமாக நகர்ந்துவிடும்.
2. Shift cells right - தற்போது நுண்ணரை எங்கு உள்ளதோ. அங்கு புதிய நுண்ணறை செருகப்படும். ஏற்கனவே உள்ள
நுண்ணறைகள் பக்கமாக நகர்ந்துவிடும்.
3. Entire row - ஒரு புதிய வரிசையை சேர்க்க.
4. Entire Column - ஒரு புதிய நெடுவரிசையை சேர்க்க.
72.
1. Cortana என்பது குரல் செயலியக்க தனி உதவியாளர் வசதியாகும். இது Windows 10 இயக்க அமைப்பு பதிப்பின் முக்கியப் பகுதியாகும்.
2. இது வலைகளை தேடல் மற்றும் தொடக்கப்பட்டி விண்டோஸ் தேடல் போன்ற இரு வேலைகளைச் செய்கிறது.
3. மேலும் குரல் மூலம் தேடல் செய்யும் திறன் பெற்றது.
73.
ஒரு கணிப்பொறியின் செயலிக்கு, தேவியான செயல்முறைகளை ஒதுக்கீடு செய்வதற்கு கீழ்காணும் நெறிமுறைகள் (Algorithms) முதன்மையாகபின்பற்றப்படுகின்றன.
1. முதலில் வந்து முதலில் செல்லும் (FIFO)
2. சிறியது முதலில் (Shortest Job First)
3. வட்ட வரிசை (Round Robin)
4. முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority)
1. முதலில் வந்து முதலில் (FIFO- First In First Out ):
முதலில் வந்து முதலில் செல்லும் நெறிமுறை என்பது வரிசை நுட்பத்தை (Queuing Technique) அடிப்படையாக கொண்டது. நுட்ப ரீதியாக, வரிசையில் நுழையும் செயல்முறை முதலில் CPU-யில் செயல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து தொடர்கிறது. வரிசையின் அடிப்படையில் செயல்முறை செயல்படுத்தப்படுகின்றன.
2. சிறியது முதலில் (Shortest Job First):
இந்த நெறிமுறை, மைய செயலகத்தால் இயக்கப்படும் ஒரு வேலையின் அளவை அடிப்படையாக கொண்டது.
3. வட்ட வரிசை திட்டமிடல் (Round Robin):
வட்ட வரிசை திட்டமிடல் "நேரப் பகிர்வு அமைப்பு" களுக்கு (Time Sharing System) சிறப்பாக வடிவமைக்கப்ட்ட நெறிமுறை ஆகும். சுழற்சி முறையில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.
4. முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority):
கொடுக்கப்பட்ட வேலை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வேலைகளை விட அதிக முன்னுரிமை கொண்டிருக்கும் வேலை மிகவும் முக்கியமானது.
74.
1. கைபேசிகள்,டேப்ளட்கள் மற்றும் எம்பி 3 பிளேயர்கள் போன்ற மொபைல் சாதனங்கள் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகளில் இருந்து வேறுபட்டவை. எனவே அவற்றிறிக்கு சிறப்பு இயக்க அமைப்புகள் தேவைப்படுகின்றன.
2. மொபைல் சாதனங்களுக்கான இயக்க அமைப்புகள் பொதுவாக முழுமையாக இல்லை டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினி கம்ப்யூட்டிற்காக உருவாக்கப்பட்டவை போல் அனைத்தையும் இயக்க முடியாது.
எ.கா: ஆப்பிள் IOS மற்றும் கூகிள் ஆன்ட்ராய்டு.
75.
| ஃபிளாஷ் நினைவகம் | EEPROM |
|---|---|
| 1. ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும். |
ஒரு சிறப்பு PROM வகையைச் சார்ந்த நினைவகம். |
| 2. வேகமான அணுகல் நேரத்தை (Access time) வழங்குகிறது. |
மெதுவாக இயங்கும் நினைவகம். |
76.
| கணிப்பொறி அமைப்பு | கணிப்பொறி கட்டமைப்பு |
|---|---|
| கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இது நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது. |
கணிப்பொறி கட்டமைப்பு என்பது கணிப்பொறி வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளை உள்ளடக்கியது. |
77.

78.
79.
1. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்துருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர் முறை ISCII ஆகும்.
2. இதுவும் 8 பிட் குறியீட்டு முறையாகும். எனவே, இந்த முறையில் 256 எழுத்துருக்களை கையாள முடியும்.
3. இந்திய அரசின் மின்னணு துறையின் (Department of Electronics)கீழ் அமைக்கப்பட்ட தரநிர்ணயக் குழுவால் 1986-88 ஆண்டு வாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு இந்திய தரநிர்ணயக் குழுமத்தால்(Bureau of Indian Standards -BIS) ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது .
4. தற்போது இந்த குறியீட்டு முறை யுனிகோட் முறையில் இணைந்து விட்டது.
80.
ஒவ்வொரு எண் முறையும் அதன் அடிமான மதிப்பைக் கொண்டு அடையாளம் காணப்படும். அடிமானம் என்பது ஆங்கிலத்த்தில் Radix அல்லது Base எனப்படும். அடிமானம் ஒவ்வொரு எண்முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு உருக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எ.கா:
| பதின்ம எண்முறை | அடிமானம் 10 |
| இருநிலை எண்முறை | அடிமானம் 2 |
| எண்ணிலை எண்முறை | அடிமானம் 8 |
| பதினாறு நிலை எண்முறை | அடிமானம் 16 |
81.
| ஒளியியல் சுட்டி | லேசர் சுட்டி |
|---|---|
| 1. ஒளிப் பயன்படுத்தப்படுகிறது | அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது |
| 2. இதில் மூன்று பொத்தான்கள் உள்ளன. | அதிகளவாக 12 பொத்தான்கள் வரை இருக்கும். பயனர் தனக்கேற்ற வகையில் அவைகளை நிரலாக்கம் செய்து கொள்ள முடியும் . |
| 3. குறைவான உணர்திறன் கொண்டது. | மிகுந்த உணர்திறன் கொண்டது. |
| 4. கடினமான மேற்பரப்பில் செயல்படாது. | எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
82.
கணிப்பொறிகள் பயன்பத்தப்படும் பல்வேறு துறைகளில் சில:
1. கல்வி மற்றும் ஆராய்ச்சி
2. சுற்றுலா
3. வானிலை முன்னறிவிப்பு
4. சமூக வலைதளம்
5. மின் வணிகம் (e-commerce)
6. இரயில்,வானுர்தி மற்றும் திரைப்படம் முன்பதிவு
7. பொழுதுபோக்கு
83.
அட்டவணையில் வரிசைகளை சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
1. எளிமையான வழி, அட்டவணையின் கடைசி சிற்றரையில் Tab சாவி பொத்தானை அழுத்த வேண்டும்.
2. அட்டவணையில் ஒரு வரிசையைச் சேர்க்க செருகும் புள்ளியைத் தேவையான சிற்றறைக்கு கொண்டு சென்று Table Formatting கருவிப்பட்டையில் உள்ள Insert row பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளைச் சேர்க்க Table → Insert → Rows என்ற கட்டளையைப் பயன்படுத்த வேண்டும்.Insert Rows உரையாடல் பெட்டி தோன்றும். இதில், சுழல் அம்புக்குறிகளை நகர்த்தியோ அல்லது வரிசையின் எண்ணிக்கைகளை நேரடியாகத் தட்டச்சு செய்தோ தேவையான எண்ணிக்கையிலான வரிசைகளைச் சேர்க்கலாம்.Before அல்லது After ரேடியோ பொத்தானை தேர்வு வரிசை எங்கு சேர்க்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
4. OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகளைச் சேர்க்க:
1. அட்டவணையில் நெடுவரிசையை எங்கு சேர்க்க வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியை கொண்டு சென்று Insert column பணிக்குறியை கிளிக் செய்தால், செருகும் புள்ளிக்கு வலது புறத்தில் ஒரு புதிய நெடுவரிசை சேர்க்கப்படும்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசைகளைச் சேர்க்க செருகும் புள்ளியை அந்த நெடுவரிசையில் கொண்டு சென்று Table → Insert → columns என்ற கட்டளையைப் பயன்படுத்தினால் Insert columns உரையாடல் பெட்டி தோன்றும். இதில், சுழல் அம்புக்குறிகளை நகர்த்தி அல்லது எண்ணிக்கையை நேரடியாகத் தட்டச்சு செய்யலாம்.
3. Position விருப்பத்தில் உள்ள Before அல்லது After ரேடியோ பொத்தான் மூலம் சேர்க்கப்படும் நெடுவரிசையின் இடத்தைத் தேர்வு செய்யலாம்.
4. OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
84.
1. புல்லட் மற்றும் எண்வரிசை நீக்க வேண்டிய உரையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Bullets பணிக்குறியை
கிளிக் செய்தால் புல்லட் நீங்கும்.
3. Numbering பணிக்குறியை
கிளிக் செய்தால் எண் வரிசை நீங்கும்.
85.
| நகர்த்தல் | நகலெடுத்தல் |
|---|---|
| 1. இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரையானது மூல இடத்திலிருந்து நீக்கப்பட்டு, இலக்கு இடத்தில் வைக்கப்படும். |
இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரை, மூல இடத்திலிருந்துநகலெடுக்கப்பட்டு, இலக்கு இடத்தில்அனுப்பப்படும்.. |
| 2. Cut மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
Copy மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards