11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
திட்ட வளைகோடு _______எனவும் அழைக்கப்படுகிறது.
உரைவடிவ வளைகோடு
நீண்ட கால சராசரி செலவு வளைகோடு
பல குறுகிய கால சராசரி செலவு வளைகோடு
மேற்கூறிய அனைத்தும்
2.
TFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.
300
350
200
150
3.
உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள் ---------------------
மாறாச் செலவு
மாறும் செலவு
உண்மைச் செலவு
சமூகச் செலவு
4.
தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ----------------
உண்மைச் செலவு
வெளியுறு செலவு
பணச் செலவு
உள்ளுறு செலவு
5.
செலவு என்பது
விலை
மதிப்பு
மாறாச் செலவு
உற்பத்தி
6.
சராசரி வருவாய் என்றால் என்ன?
7.
உண்மைச் செலவு என்றால் என்ன?
8.
மிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.
9.
பொருளாதாரச் செலவு என்றால் என்ன?
10.
மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?
11.
உண்மைச் செலவு - இலக்கணம் தருக.
12.
வெளியுறு செலவு - வரையறு.
13.
சராசரி செலவு வளைகோட்டை வரைபடத்துடன் விளக்குக.
14.
சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.
15.
சமூகச் செலவை விளக்குக.
16.
நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.
17.
18.
AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.
19.
மாறாச் செலவை - மாறும் செலவிலிருந்து வேறுபடுத்துக.
20.
மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.
21.
மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி
1.
(d)
மேற்கூறிய அனைத்தும்
2.
(b)
350
3.
(a)
மாறாச் செலவு
4.
(d)
உள்ளுறு செலவு
5.
(d)
உற்பத்தி
6.
1.சராசரி வருவாய் என்பது, ஒரு பண்டத்திற்கான வருவாய் ஆகும்.
2.சராசரி வருவாய் என்பது மொத்த வருவாயை விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AR={TR\over Q}}\)
7.
1. உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடக் கூடிய செலவுகளுடன், நிர்வாகச் செலவையும் சேர்த்துக் கொண்டால் அது முதன்மைச் செலவு எனப்படும்.
2.இச்செலவுகள் நேர்முகச் செலவுகள் என்றும் அழைக்கப்படும்.
3.
8.
1.வியாபார நடவடிக்கைகளுக்கு நேரடியாக தொடர்புடைய செலவுகள் அனைத்தும் மிதக்கும் செலவுகள் எனப்படும்.
2.ஒரு நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு மிக அவசியமான செலவுகள் மிதக்கும் செலவுகள் எனப்படும்.
9.
1.ஒரு நிறுவனத்தின் உற்பத்திக்கு உறுதியான அளிப்பாய் முறைப்படுத்தும் சொந்த வளங்கள் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட செலவுகள் பொருளாதாரச் செலவுகள் எனப்படும்.
2.வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த செலவுகளை உள்ளடக்கியதே பொருளாதாரச் செலவு எனப்படும்.
3.
10.
1. மீட்டு எடுக்க முடியாத கடந்த காலச் செலவுகள் அமிழ்த்தப்பட்ட (அ) மூழ்கும் செலவுகள் ஆகும்.
2. எதிர்கால வியாபாரத்தை தீர்மானிப்பதில் இக்கடந்த காலச் செலவுகள் பொருத்தமற்றதாக இருக்கும்.
11.
"ஆடம் ஸ்மித் கருத்துப்படி, உழைப்பாளர்களின் துன்பங்களும், தியாகங்களுமே உண்மையான செலவு என்று கூறுகிறார்"
12.
1. உற்பத்திக் காரணிகளை வாங்க மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும்.
2. வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு (அ) வெளிச்செலவு (அ) பணச் செலவு என்றும் அழைக்கப்படும்.
13.
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான செலவு எனப்படும்.
2.சராசரி மொத்த செலவு என்பது மொத்தச் செலவை,உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்ககையால் வகுப்பதால் கிடைப்பதாகும்.
3.\(\boxed{AC={TC\over Q}}\) (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
4.சராசரி மாறாச் செலவையும், சராசரி மாறும் செலவையும், கூட்ட கிடைப்பதே சராசரி செலவு ஆகும்.

5.சராசரி செலவு ஆரம்பத்தில் குறைந்து பின் உற்பத்தி அதிகரிக்கும் போது, அந்நிறுவனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குறைந்தபட்ச உற்பத்தி செலவை எட்டுகிறது.
6.அக்குறிப்பிட்ட புள்ளியைத் தாண்டி உற்பத்தி அதிகரிக்கும் போது சராசரி செலவும் அதிகரிக்கும்.
7.மாறும் விளைவு விதி செயல்பாட்டின் காரணமாக சராசரி செலவுக் கோடு 'U' வடிவத்தில் உள்ளது.
14.
சராசரி மாறும் செலவு (AVC) :
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2.மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC\over Q}}\)
TVC =மொத்த மாறும் செலவு
AVC =சராசரி மாறும் செலவு
Q =உற்பத்தி அளவு
அட்டவணை:
| Q | TVC | \(AVC={TVC\over Q}\) |
| 0 | 0 | 0/0=0 |
| 1 | 200 | 200/1=200 |
| 2 | 300 | 300/2=150 |
| 3 | 400 | 400/3=133 |
| 4 | 600 | 600/4=150 |
| 5 | 900 | 900/5=180 |

1.AVC ஆரம்பத்தில் குறைந்து,பின் உற்பத்தி அதிகரிக்கும் போது AVC அதிகரிக்கிறது.
2.விளைவு விதி செயல்பாட்டின் காரணமாக AVC குறைந்து பின்பு அதிகரிக்கிறது. ஆகையால் AVC 'U' வடிவத்தில் உள்ளது.
15.
1. சமூகச் செலவு என்பது உற்பத்தியின் விளைவாக சமுதாயம் எதிர்கொள்ளும் செலவாகும்.
2. மார்ஷலின் கூற்றுப்படி, நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு பண்டத்தினால் சமுதாயத்தில் உள்ள மற்ற மக்கள் ஏற்றுக்கொள்ளும் சங்கடங்களும், தியாகங்களும் சமூகச் செலவு எனப்படும்.
3.சமூகச் செலவு உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கானது அல்லது சமுதாயத்திற்கானதாகும்.
4.(எ.கா.)பெரிய தொழில் நிறுவனங்கள், ஏற்படுத்தும் காற்று மாசு, தண்ணீர் மாசு மற்றும் பல சேதங்களால் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இதற்காக மேற்கொள்ளும் செலவு சமூகச் செலவு எனப்படும்.
16.
நீண்டகாலச் செலவுக் கோடுகள்:
1. நீண்டகாலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக் கூடியவை.
2. நீண்டகாலத்தில் மாறாக்காரணி மற்றும் மாறாச் செலவுகள் இருக்க வாய்ப்பு இல்லை.
3. நீண்ட கால சராசரி செலவுக் கோடுகள்()என்பது நீண்டகால மொத்தச் செலவை மொத்த உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளால் வகுக்கப்படுவதால் பெறப்படும் செலவாகும்.

4. \(\boxed{LAC=LTC/ Q}\)
LAC =நீண்டகால சராசரி செலவு
LTC =நீண்டகால மொத்தச் செலவு
Q =உற்பத்தி அளவு
5.நீண்டகால சராசரி செலவு வளைகோடானது பல குறுகிய கால சராசரி செலவு வளை கோடுகளிலிருந்து பெறப்பட்டதாகும்.
6. குறுகியகால சராசரி செலவு வளைகோடுகளின் மிகத் தாழ்வான புள்ளிகளை ஒருங்கிணைத்து,நீண்ட கால சராசரி செலவு வளைகோடானது அமைந்துள்ளது.
7. நீண்டகால, சராசரி செலவு வளை கோடானது 'திட்ட வளைகோடு' அல்லது 'உரைவடிவ வளைகோடு' என்றும் அழைக்கப்படுகிறது.
17.
18.
சராசரி செலவு (ATC) அல்லது சராசரி செலவு (AC):
1. சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான செலவு எனப்படும்.
2. சராசரி மொத்தத் செலவு என்பது மொத்தச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதாகும்.
3.(எ -கா) TC=1600
Q=4எனில்
ATC=400ஆகும்
அதாவது ATC=TC/Q=1600/4=400
ATC=400
இறுதிநிலை செலவு (MC)
1. இறுதிநிலைச் செலவு என்பது மொத்த செலவில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது.
2. அதாவது கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படுகிறது.
3.இறுதிநிலைச் செலவை கீழ்கண்டவாறு அளவிடலாம்
MC=TCn-TCn-1(or)
MC=TCn-1-TCnஇதில்
MC=இறுதிநிலைச் செலவு
TCn ='n'அலகு பண்டத்திற்கான செலவு
TCn-1=n-1அலகு பண்டத்திற்கான செலவு
TCn-1=n+1அலகு பண்டத்திற்கான செலவு
4. (எ -கா.) TC4= Rs. 1600, TC4-1=Rs.1400
MC=Rs. 200(MC=Rs. 1600-Rs. 1400)
TC4=Rs.1600, TC4+1=Rs. 1900எனில்
MC=Rs. 300
19.
| வ.எண் | மாறாச் செலவுகள் (Fixed Cost) |
மாறும் செலவுகள் (Variable Cost) |
| 1. | மாறாச் செலவுகள் உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடுவதில்லை. | மாறும் செலவுகள் உற்பத்தி மறுபடுவதற்கேற்ப செலவுகள் மாறுபடும். |
| 2. | மாறாக் காரணிகளுக்காக செய்யப்படும் செலவுகள் மாறாச் செலவுகள் எனப்படும். | மாறும் காரணிகளுக்காக செய்யப்படும் செலவுகள் மாறும் செலவுகள் ஆகும். |
| 3. | உற்பத்தி அதிகரித்தாலும், குறைந்தாலும், உற்பத்தி புஜ்ஜியமாக இருந்தாலும் கூட இச்செலவுகள் மாறாமல் நிலையாக இருக்கும். | உற்பத்தி செலவு அதிகரித்தால் இச்செலவு அதிகரிக்கும், குறைந்தால் குறையும், புஜ்ஜியமாக இருந்தால் மாறும் செலவும் புஜ்ஜியமாக இருக்கும். |
| 4. | (எ.கா.) நிறுவனத்தின் வாடகை | (எ.கா.) பணியாளர்களின் கூலி |
20.
1.மொத்த வருவாய் (Total Revenue - TR) என்பது, ஒரு நிறுவனம் தன் உற்பத்தி பண்டங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் மொத்த வருமானமே, மொத்த வருவாய் எனப்படுகிறது.
2.விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையை அப்பண்டத்தின் விலையால் பெருக்கிக் கிடைப்பது மொத்த வருவாய் ஆகும்.
3.\(\boxed{TR = P \times Q}\) இதில் TR -மொத்த வருவாய்,P-விலை, Q-விற்பனை அளவு.
4.உதாரணம்: ஒரு நிறுவனம் 100 கைபேசியை 500 வீதம் விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50000/-ஆகும்.
5.TR= 500 x 100
\(\boxed{\therefore TR=50000}\)
மாறாத விலையில் மொத்த வருவாய்
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 5 | 5 |
| 2 | 5 | 10 |
| 3 | 5 | 15 |
| 4 | 5 | 20 |
| 5 | 5 | 25 |
| 6 | 5 | 30 |

நிலையான விலை:
விலை Rs.5ஆக உள்ளபோது மொத்த வருவாய் போக்கினை மேற்கண்ட வரைபடம் விளக்குகிறது.
விலை குறைவு:
விலை குறையும் போது பண்டத்தின் விற்பனை அதிகரிக்கும் மொத்த வருவாயின் போக்கினை கீழ்கண்ட வரைபடம் விளக்குகிறது.
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 10 | 10 |
| 2 | 9 | 18 |
| 3 | 8 | 24 |
| 4 | 7 | 28 |
| 5 | 6 | 30 |
| 6 | 5 | 30 |
| 7 | 4 | 28 |
| 8 | 3 | 24 |
| 9 | 2 | 18 |
| 10 | 1 | 10 |

21.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்தச் செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
AFC=சராசரி மாறாச் செலவு
AC= சராசரி செலவு
மொத்த செலவு =10+Q3,Q=5 எனில்
மொத்தச் செலவு =10+(5)3
=10+125

2. மொத்தச் செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது. அவை,
3. மொத்த மாறும் செலவு மற்றும் மொத்த மாறாச் செலவு ஆகும்.
4. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும் குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே, TC=10+Q3
5. இங்கு மொத்த மாறாச் செலவு 10 ஆகும்
TC=135,TFC = 10 TVC =?
135 =10+TVC
135 - 10 = TVC
\(\boxed{\therefore 125= TVC}\) மொத்த மாறும் செலவு
TVC = 125, TC = 135, TFC = 10, Q = 5

\(\boxed{\therefore AVC=25}\) சராசரி மாறும் செலவு
\(AFC={TFC\over Q}\) TFC= 10, Q=5

\(\boxed{\therefore AFC=2}\) சராசரி மாறாச் செலவு
\(AC={TC\over Q}\) TC= 135, Q=5

\(\boxed{\therefore AC=27}\) சராசரி செலவு
AC = AFC+AVC
AC = 2 +25
\(\boxed{\therefore AC=27}\) ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards