11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
நுகர்வுப் பகுப்பாய்வு
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
சம நோக்கு வளைகோடுகள்
செங்குத்துக் கோடுகள்
படுக்கைக் கோடுகள்
நேர்மறைச் சரிவுடையது
எதிர்மறைச் சரிவுடையது
2.
சமநோக்கு வலைகோட்டை முதன்முதலில் தோற்றுவித்தவர்.
ஹிக்ஸ்
ஆலன்
கீன்ஸ்
எட்ஜ்வொர்த்
3.
நுகர்வோர் சமநிலையில் இருக்கும்போது இறுதிநிலை பயன்பாடானது……. இருக்கும்
குறைவாக
அதிகபட்சமாக
சமமாக
கூடுதலாக
4.
தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.
375
175
200
50
5.
நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
ராபின்ஸ்
ரிக்கார்டோ
6.
காஸன் முதல்விதி ……… என்றும் அழைக்கப்படுகிறது.
சமஇறுதி நிலை பயன்பாட்டு விதி
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
தேவை விதி
குறைந்து செல் விளைவு விதி
7.
முரண்பட்டதை தெரிவு செய்க.
ஆடம்பர பண்டங்கள்
வசதிபண்டங்கள்
அத்தியாவசிய பண்டங்கள்
விவசாயப் பொருட்கள்
8.
விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன?
9.
அங்காடித் தேவை என்றால் என்ன?
10.
நுகர்வு என்றால் என்ன?
11.
மொத்தப் பயன்பாட்டை வரையறு.
12.
13.
சமநோக்கு வளைகோடுகள் என்றால் என்ன?
14.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி
15.
விருப்பங்களை வகைப்படுத்து.
16.
பயன்பாட்டை வரையறு.
17.
பண்டங்களின் வகைகளை விளக்குக.
18.
நுகர்வோர் சமநிலை என்ற கருத்தை சுருக்கமாக விவரி.
19.
தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.
20.
நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.
21.
மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.
22.
தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
23.
1.
(d)
எதிர்மறைச் சரிவுடையது
2.
(d)
எட்ஜ்வொர்த்
3.
(c)
சமமாக
4.
(d)
50
5.
(b)
மார்ஷல்
6.
(b)
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
7.
(d)
விவசாயப் பொருட்கள்
8.
1.விளம்பரத்தினாலோ (அல்லது) பிற வியாபாரத்தை உயர்த்தும் செலவுகளாலோ தேவையில் மாற்றம் ஏற்பட்டால் அதை விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்று அழைக்கிறோம்.
2.
9.
தனிநபர் தேவைப் பட்டியலின் அடிப்படையில் விலை, இடம் மற்றும் நேரத்தை இணைத்து அங்காடித் தேவை வளைகோட்டைப் பெறலாம்.
10.
ஒருவரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துவது நுகர்வு ஆகும்.
11.
1. ஒரு பண்டத்தின் எல்லா அலகுகளையும் நுகர்வதால் கிடைக்கும் பயன்பாட்டின் கூடுதலே மொத்தப் பயன்பாடு ஆகும்.
2.TU=MU1+MU2+MU3+......+MUn
(அ)
\(\boxed{TU=\sum MU}\)
12.
13.
ஒரு வளைகோட்டில் உள்ள இரு பண்டங்களின் அனைத்து கலவையும் நுகர்வோருக்கு சமஅளவு திருப்தியைத் தருமாயின் அது சமநோக்கு வளை கோடாகும்.
14.
விலையில் ஏற்படும் பிரதிபலிப்பின் காரணமாக தேவை ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை\((EP= \alpha)\)
2.முற்றிலும் நெகிழ்ச்சியுற்ற தேவை \((EP= 0)\)
3. மிகை தேவை நெகிழ்ச்சி \((EP>1)\)
4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத்தேவை நெகிழ்ச்சி \((EP<1)\)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி \((EP=1)\)
15.
விருப்பங்களில் வகைகள் மூன்று.
1. இன்றியமையாத விருப்பம்.
2. வசதிக்கான விருப்பம்.
3. ஆடம்பரத்திற்கான விருப்பம்.
16.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை நுகரும்போது நுகர்வோருக்கு கிடைப்பதாக நுகர்வோர் கருதுவது.
2. விருப்பத்தை நிறைவு செய்யும் ஆற்றல்.
17.
பண்டங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
அவை,
1.இன்றியமையாத பண்டங்கள்
2. வசதிப் பண்டங்கள்
3.ஆடம்பரப் பண்டங்கள்
1.இன்றியமையாத பண்டங்கள்:
1.மனிதன் உயிர் வாழத் தேவையான மற்றும் தவிர்க்க முடியாத பண்டங்கள் இன்றியமையாத பண்டங்கள் எனப்படும்.
2.(எ.கா)உணவு,உடை மற்றும் இருப்பிடம்.
2.வசதிப் பண்டங்கள்:
1.நம்முடைய வாழ்வை எளிதாக, சுகமாக மற்றும்வசதியாக வைத்துக் கொள்ள பயன்படக் கூடியவை வசதிப் பண்டங்கள் ஆகும்.
2.(எ.கா) குளிர்சாதன பெட்டி
3.ஆடம்பரப் பண்டங்கள்
1.சிலவகை பண்டங்கள் மிக முக்கியமானவை அல்ல ஆனால் விலை உயர்ந்தவை.இவற்றை ஆடம்பரப் பண்டங்கள் என்கிறோம்.
2.(எ.கா)வைரங்கள்
18.
நுகர்வோர் சமநிலை:
நுகர்வோர் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்களை வாங்க செலவிடுவதன் மூலம் அதிகபட்ச திருப்தியை பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.

வரைபட விளக்கம்:
1. சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக் கோடு தொடும் புள்ளியில் நுகர்வார் சமநிலை அடைகிறார்.
2. AB என்ற வரவு செலவுக்கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3. இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வலைகோடாகும்.
4.எனவே, புள்ளி-T'ல் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
\(\boxed{MRS_{xy}={P_x\over P_y}}\)
19.
தேவை விரிவு:
குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்குவது தேவை விரிவு ஆகும்.
தேவை சுருக்கம்:
அதிக விலையில் குறைந்த பொருட்களை வாங்குவது தேவை சுருக்கம் ஆகும்.
தேவை விரிவும், தேவை சுருக்கமும்:
விலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே தேவை அளவில் மாற்றம் ஏற்பட்டால் அதனை ' தேவை விரிவு ' மற்றும் 'தேவை சுருக்கம் 'என அழைக்கிறோம்
20.
மார்ஷலின் நுகர்வோர் எச்சம்:இலக்கணம்
"ஒரு பொருளை வாங்காமல் இருப்பதை விட வாங்குவதே மேல் என முடிவுசெய்து, கொடுக்க நினைத்த விலைக்கும், நுகர்வோர் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வித்தியாசம் நுகர்வோர் எச்சம்" எனப்படும் என்று மார்ஷல் கூறுகிறார்.

(அ)
நுகர்வோர் எச்சம் =(மொத்தப் பயன்பாடு)-(உண்மைவிலை x பண்ட அலகுகள்)
\(\boxed{CS=TU-P \times Q}\)

வரைபட விளக்கம்:
1. X- அச்சில் தேவையில் அளவும்,Y - அச்சில் விளையும் குறிக்கப்பட்டுள்ளது
2. DDI என்பது நுகர்வோரின் பல்வேறு பண்ட அலகுகளின் மூலம் பெறும் பயன்பாட்டைக் குறிக்கும்.
3.விலை OP2 ஆக இருக்கும் போது தேவை அளவு OQ5ஆக உள்ளது.
4. எனவே, உண்மை விலை OPCQ-10 ஆகும். தகுவிலை (மொத்தப் பயன்பாடு ) ODCQ ஆகும்

=20-10=10

21.
1. விருப்பங்கள் எண்ணற்றவை.
2. விருப்பங்கள் பழக்க வழக்கங்களாக மாறும்.
3. விருப்பங்கள் நிறைவேறக் கூடியவை.
4. விருப்பங்கள் மாற்றுப் பொருளால் நிறைவு பெறுபவை.
5. விருப்பங்கள் போட்டியிடுபவை.
6.விருப்பங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.
7. விருப்பங்கள் மீளத் தோன்றுபவை.
22.
விலைத் தேவை நெகிழ்ச்சியை நான்கு வகைகளில் அளவிடலாம்.
1. விழுக்காட்டு முறை:
1. \(EP ={\triangle Q\over \triangle P}\times {P\over Q}\)
2. இதுவிகிதாசார முறை என்றும் அழைக்கப்படுகிறது.
3. விகிதாச்சார முறையில்
\(EP={\% \triangle Q\over \% \triangle P}\)
2. மொத்தத் செலவு முறை:
1. நுகர்வோரின் மொத்த் செலவில் ஏற்படும் மாற்றத்தையோ (அ) நிறுவனத்தின் மொத்த வருவாயின் ஏற்படும் மாற்றத்தையோ அளவிடுவதன் மூலம் தேவையானது நெகிழ்ச்சி உள்ளதா என்பதை எளிய முறையில் அறியமுடியும் என மார்ஷல் குறிப்பிடுகிறார்.
மொத்த வருவாய்= விலை x விற்பனை அளவு
TR= P x Q
மொத்த ஒதுக்கீட்டு முறை

விலைக்கும் மொத்தச் செலவிற்கும் எதிர்மறை உறவு இருக்குமெனில் இங்கு தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்.
3. புள்ளி முறை:
நேர் தேவைக் கோட்டில் குறிப்பிட்ட புள்ளியினுடைய வலப்பகுதியை இடப்பகுதியால் வகுக்க கிடைக்கும் விகிதத்தைக் கொண்டு புள்ளிமுறை அளவிடலாம்.



4. வில்முறை:
1. ஒரு தேவை வளைகோட்டின் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள பகுதியே வில் எனப்படும்.
2.\(EP={Q_1-Q_2 \over Q_1+Q_2}\div {P_1-P_2\over P_1 +P_2}\)
\({\triangle Q \over Q_1+Q_2}\div {\triangle P\over P_1+P_2}\downarrow \uparrow \)
\({\triangle Q \over Q_1+Q_2}\times { P_1+P_2 \over \triangle P}\)
\({\triangle Q \over Q_1+Q_2}\times { P_1+P_2 \over \triangle P}\)
\({\triangle Q \over \triangle P}\times { P_1+P_2 \over Q_1+Q_2 }\)
Q1=பண்டத்தின் முந்தைய அளவு
P1=பண்டத்தின் முந்தைய விலை
\(\triangle\)=மாற்றம்
Q2=புதிய அளவு
P2=புதிய விலை
23.



11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards