11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.
கிஃபன் முரண்பாடு
மற்றவை மாறாதிருக்கும் போது
வெப்ளன் விளைவு
பயன்பாடு
2.
_________ ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்,
இயல்புகளை
எடுகோளைக்
உற்பத்திக் காரணிகளைக்
பகிர்வைக்
3.
பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு
எதிர்மறை
நேர்மறை
பூஜ்யம்
அதிகரிக்கும்
4.
பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க
இது பயனுக்கும் சமமானது
இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது
இது மகிழ்வுக்கு சமமானது
இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது
5.
பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை
எண்ணற்ற விருப்பங்கள்
அளவற்ற வளங்கள்
பற்றாக்குறை
நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி
6.
சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?
7.
இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.
8.
அளிப்பு விதி என்றால் என்ன?
9.
மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?
10.
பொருளியல் என்றால் என்ன?
11.
AC மற்றும் MC வளைகோட்டில் உள்ள தொடர்புகளை வரைபடம் வரைந்து விளக்குக.
12.
பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
13.
அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?
14.
நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.
15.
மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.
16.
மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.
17.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
18.
அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி
19.
தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
1.
(b)
மற்றவை மாறாதிருக்கும் போது
2.
(c)
உற்பத்திக் காரணிகளைக்
3.
(b)
நேர்மறை
4.
(d)
இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது
5.
(c)
பற்றாக்குறை
6.
1.ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாயானது மொத்த செலவிற்கு சமமாக இருக்கும் (TR=TC)
2. இப்புள்ளிகளில் நிறுவனத்திற்கு இலாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.
3.இந்த புள்ளி சமமுறிவுப் புள்ளி என்று அழைக்கப்படுகின்றன.
7.
| வ.எண் | இலவசப் பண்டங்கள் | பொருளாதாரப் பண்டங்கள் |
| 1. | இயற்கையின் நன்கொடையாக கிடைக்கும் பண்டம் இலவச பண்டம். | பணம் கொடுத்து பெறும் பண்டம் பொருளாதாரப் பண்டம். |
| 2. | பற்றாக்குறையற்றவை, மேலும் சந்தையில் விலை இல்லை. | பற்றாக்குறையானவை மேலும் சந்தையில் விலை உண்டு. |
| 3. | (எ.கா.) காற்று,சூரிய ஒளி. | (எ.கா.)மேசை,நாற்காலி. |
8.
அளிப்பு விதி விலைக்கும் அளிப்புக்கும் உள்ள நேரடியான தொடர்பினை விளக்குகிறது.
9.
1. மீட்டு எடுக்க முடியாத கடந்த காலச் செலவுகள் அமிழ்த்தப்பட்ட (அ) மூழ்கும் செலவுகள் ஆகும்.
2. எதிர்கால வியாபாரத்தை தீர்மானிப்பதில் இக்கடந்த காலச் செலவுகள் பொருத்தமற்றதாக இருக்கும்.
10.
1. ' பொருளியல் 'என்றால் இல்லங்களில் நிர்வாகம் என்று பொருள்படும்.
2. பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் என்னும் பழமையான கிரேக்க சொல்லிலிருந்து வந்தது
3. ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இவ்வியல். பிற்பகுதியில் ' பொருளியல் ' என்று ஆல்ஃபிரட் மார்ஷலால் பெயர் மாற்றப்பட்டது.
11.
சராசரி செலவிற்கும் இறுதிநிலைச் செலவிற்கும் தனித்தன்மையான தொடர்பு உள்ளது.

1.AC குறையும் போது MC அதற்கு கீழே குறைகிறது.
2. AC யின் அடிமட்டப் புள்ளியில் MC சமமாக இருக்கிறது.
3.AC அதிகரிக்கும் போது அதைவிட வேகமாக MC அதிகரிக்கிறது எனவே AC கோட்டிற்கு மேலே MC உள்ளது.
4.AC கோட்டின் மிகத் தாழ்வான புள்ளியை MC கோடு கீழிருந்து மேல் நோக்கி வெட்டிச் செல்கிறது.
12.
1.பகுதிச் சமநிலை:
1. ஒரேயொரு மாரியின் மூலம் கிடைக்ககூடிய சமநிலை பகுதிச் சமநிலை பகுதிச் சமநிலை எனப்படும்.
2.இது தனிச் சமநிலை என்றும் அழைக்கப்படுகிறது.
2.பொதுச் சமநிலை:
பொதுச் சமநிலை என்பது பொருளாதாரத்தில் செயல்படுகின்ற அனைத்து மாறிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு மொத்த பொருளாதாரத்திலும் சமநிலை ஏற்படுவதைக் குறிக்கின்றது.
13.
எடுகோள்கள்:
1. உற்பத்திக் காரணிகளின் விலையில் மாற்றம் இல்லை.
2. முதலீட்டுப் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.
3.இயற்கை வளங்கள் மற்றும் அதன் கிடைப்பளவில் மாற்றம் இல்லை.
4. பதலீட்டுப் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.
5. தொழிநுட்பத்தில் மாற்றம் இல்லை.
6. காலநிலையில் மாற்றம் இல்லை .
14.
நீண்டகாலச் செலவுக் கோடுகள்:
1. நீண்டகாலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக் கூடியவை.
2. நீண்டகாலத்தில் மாறாக்காரணி மற்றும் மாறாச் செலவுகள் இருக்க வாய்ப்பு இல்லை.
3. நீண்ட கால சராசரி செலவுக் கோடுகள்()என்பது நீண்டகால மொத்தச் செலவை மொத்த உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளால் வகுக்கப்படுவதால் பெறப்படும் செலவாகும்.

4. \(\boxed{LAC=LTC/ Q}\)
LAC =நீண்டகால சராசரி செலவு
LTC =நீண்டகால மொத்தச் செலவு
Q =உற்பத்தி அளவு
5.நீண்டகால சராசரி செலவு வளைகோடானது பல குறுகிய கால சராசரி செலவு வளை கோடுகளிலிருந்து பெறப்பட்டதாகும்.
6. குறுகியகால சராசரி செலவு வளைகோடுகளின் மிகத் தாழ்வான புள்ளிகளை ஒருங்கிணைத்து,நீண்ட கால சராசரி செலவு வளைகோடானது அமைந்துள்ளது.
7. நீண்டகால, சராசரி செலவு வளை கோடானது 'திட்ட வளைகோடு' அல்லது 'உரைவடிவ வளைகோடு' என்றும் அழைக்கப்படுகிறது.
15.
1. விருப்பங்கள் எண்ணற்றவை.
2. விருப்பங்கள் பழக்க வழக்கங்களாக மாறும்.
3. விருப்பங்கள் நிறைவேறக் கூடியவை.
4. விருப்பங்கள் மாற்றுப் பொருளால் நிறைவு பெறுபவை.
5. விருப்பங்கள் போட்டியிடுபவை.
6.விருப்பங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.
7. விருப்பங்கள் மீளத் தோன்றுபவை.
16.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்த செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AFC=சராசரி மாறாச் செலவு
AC=சராசரி செலவு
\(\boxed{AC={TC\over Q}}\)
2. TC = 100 + Q3-மொத்த செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது.அவை மொத்த மாறாச் செலவு மற்றும் மொத்த மாறும் செலவு ஆகும்.
3.மொத்த மாறாச் செலவு (TFC)உற்பத்தி அதிகரித்தாலும்,குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே,
TC= 1O+Q3.
4.இங்கு மொத்த மாறாச் செலவு 100 ஆகும்.
TC 100 + Q3 Q = 10 எனில்
TC = 100 + (10)3 (10 x 10 x 10 = 1000)
= 100 + 1000
\(\boxed {\therefore TC=1100}\)மொத்த செலவு
TFC = 100, TC = 1100 எனில்
TVC= ?
TC= TFC+TVC
1100= 100 + TVC
1100 -100= TVC
\(\boxed {\therefore TVC=1000}\)மொத்த மாறும் செலவு
TVC =1000, TC = 1100, TFC = 100, Q = 10 எனில்
\(AFC={TFC\over Q}\)

\(\boxed {\therefore AFC=10}\)சராசரி மாறாச் செலவு
\(AVC={TVC\over Q}\)

\(\boxed {\therefore AVC=100}\) சராசரி மாறும் செலவு
\(AC={TC\over Q}\) (அ) AC=AFC+AVC
(அ) 110= 10+ 100
\( {\therefore AC=110}\) 110=110
AVC=சராசரி மாறும் செலவு =100
AFC=சராசரி மாறாச் செலவு =10
AC=சராசரி செலவு =110
TVC=மொத்த மாறும் செலவு =1000
TFC=மொத்த மாறாச் செலவு=100
TC=மொத்த செலவு=1100 ஆகும்.
17.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
18.
பொருளாதார சிக்கனம்:
பொருளாதார சிக்கனம் என்பது உற்பத்திக்காரணங்களை பயன்படுத்தும் விகிதம் மாறுபடுவதால் வரும் நன்மையாகும்.
பொருளாதார சிக்கனம் இரு வகைப்படும்:
1. அகச் சிக்கனங்கள்
2. புறச் சிக்கனங்கள்
1. அகச் சிக்கனங்கள்:
1. அகச்சிக்கனம் என்பது நிறுவனம் பொருளின் உற்பத்தி செலவினை குறைந்து பெறும் நன்மையினை குறிக்கும்.
2. நிறுவனமானது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதாலும் புதிய முதலீட்டை உருவாக்குவதாலும் உற்பத்தி செலவினை குறைக்கிறது.
(அ) தொழில்நுட்ப சிக்கனங்கள்:
1. தொழில் நுட்ப சிக்கனங்கள் என்பது நிறுவனத்தின் பெரிய அளவாக இருப்பதால் கிடைக்கும் மூலதனமும் அதிகமாக இருக்கும்.
2. ஒரு நிறுவனம் நவீன நுட்பங்களை புகுத்த முடியும்.
(ஆ) நிதிச் சிக்கனங்கள்:
பெரிய நிறுவனங்கள் சந்தையில் பங்கு விற்பனை மூலம் மூலதன பெருக்கத்தை ஏற்படுத்தலாம்.
(இ) மேலாண்மை சிக்கனங்கள்:
பேரளவு உற்பத்தி வேலைப்பகுப்பு முறைக்கு உதவுகிறது. இதன் மூலம் சரியான வேலையாட்கள் சரியான துறையில் இருப்பார்கள்.
(ஈ) உழைப்புச் சிக்கனங்கள்:
பேரளவு உற்பத்தி வேலை பகுப்பு முறைக்கு வழிவகுக்கிறது. சிறப்பு உழைப்பு எனலாம்.
(உ)சந்தை சார்ந்த சிக்கனங்கள்:
1. பேரளவு உற்பத்தியின் காரணமாக மூலப்பொருட்கள் குறைந்த விலைக்கு வாங்க இயலும்.
2. தொலைதூர சந்தையில் பொருட்களை விற்க முடியும்.
(ஊ) சந்தையில் தொடர்ந்திருப்பதன் சிக்கனங்கள்:
1. பெரிய நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
2. உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளின் சந்தையில் தோல்வியுற்று இழப்பு நட்ட மேற்பட்டாலும் வேறொரு பொருளின் இலாபத்தினால் இழப்பினை ஈடு செய்ய முடியும்.
2. புறச்சிக்கனங்கள்:
அ. புறச் சிக்கனங்கள் என்பது நிறுவனத்திற்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால் உற்பத்தியின் முறைகளில் ஏற்படும் மேம்பாடுகளைக் குறிக்கும்.
ஆ. ஒரு நிறுவனம் மட்டும் பெறும் நன்மை அல்லாது அனைத்து நிறுவனங்களும் பெறும் நன்மை அல்லாது அனைத்து நிறுவனங்களும் பெறும் பயனாகும்.
இ. மேம்பட்ட போக்குவரத்து வசதிகள்.
ஈ. வங்கி செயல்பாடு சார்ந்த வசதிகள்.
உ. நகரியல் வளர்ச்சி.
ஊ. தகவல் மற்றும் தொலை தொடர்பு வளர்ச்சி.
19.
விலைத் தேவை நெகிழ்ச்சியை நான்கு வகைகளில் அளவிடலாம்.
1. விழுக்காட்டு முறை:
1. \(EP ={\triangle Q\over \triangle P}\times {P\over Q}\)
2. இதுவிகிதாசார முறை என்றும் அழைக்கப்படுகிறது.
3. விகிதாச்சார முறையில்
\(EP={\% \triangle Q\over \% \triangle P}\)
2. மொத்தத் செலவு முறை:
1. நுகர்வோரின் மொத்த் செலவில் ஏற்படும் மாற்றத்தையோ (அ) நிறுவனத்தின் மொத்த வருவாயின் ஏற்படும் மாற்றத்தையோ அளவிடுவதன் மூலம் தேவையானது நெகிழ்ச்சி உள்ளதா என்பதை எளிய முறையில் அறியமுடியும் என மார்ஷல் குறிப்பிடுகிறார்.
மொத்த வருவாய்= விலை x விற்பனை அளவு
TR= P x Q
மொத்த ஒதுக்கீட்டு முறை

விலைக்கும் மொத்தச் செலவிற்கும் எதிர்மறை உறவு இருக்குமெனில் இங்கு தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்.
3. புள்ளி முறை:
நேர் தேவைக் கோட்டில் குறிப்பிட்ட புள்ளியினுடைய வலப்பகுதியை இடப்பகுதியால் வகுக்க கிடைக்கும் விகிதத்தைக் கொண்டு புள்ளிமுறை அளவிடலாம்.



4. வில்முறை:
1. ஒரு தேவை வளைகோட்டின் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள பகுதியே வில் எனப்படும்.
2.\(EP={Q_1-Q_2 \over Q_1+Q_2}\div {P_1-P_2\over P_1 +P_2}\)
\({\triangle Q \over Q_1+Q_2}\div {\triangle P\over P_1+P_2}\downarrow \uparrow \)
\({\triangle Q \over Q_1+Q_2}\times { P_1+P_2 \over \triangle P}\)
\({\triangle Q \over Q_1+Q_2}\times { P_1+P_2 \over \triangle P}\)
\({\triangle Q \over \triangle P}\times { P_1+P_2 \over Q_1+Q_2 }\)
Q1=பண்டத்தின் முந்தைய அளவு
P1=பண்டத்தின் முந்தைய விலை
\(\triangle\)=மாற்றம்
Q2=புதிய அளவு
P2=புதிய விலை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards