11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
Higher Secondary First Year Important Questions
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
Qd = 200 -10p மற்றும் Qs =10p என்பது முறையே தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் ஆகும் இதனைக் கொண்டு சமநிலை விலை மற்றும் அளவைக் காண்க.
2.
இந்தியப் பொருளாதாரத்தின் பலன் 5ஐ எழுதுக.
3.
உண்மைச் செலவு என்றால் என்ன?
4.
மொத்தப் பயன்பாட்டை வரையறு.
5.
ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் மூன்றினை எழுதுக.
6.
இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.
7.
இராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?
8.
அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக
9.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
10.
காற்றழுத்த விசைக்குழாய் நகரம்' என்றழைப்பது ஏன்?
11.
கடன் நிதிகளின் தேவையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
12.
முற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை?
13.
பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
14.
15.
பகிர்வு என்றால் என்ன?
16.
மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.
17.
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
18.
ஊரகப் வீட்டுவசதி பிரச்சனைக்கான காரணங்களில் ஏதேனும் இரண்டு கூறு.
19.
தனியார் மயமாக்கல் என்றால் என்ன?
20.
பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.
21.
உபரி சக்தி – விளக்குக
22.
உற்பத்தி சார்பினை குறிப்பிடுக
23.
வெளியுறு செலவு - வரையறு.
24.
பயன்பாட்டை வரையறு.
25.
நுண் பொருளியல் என்றால் என்ன?
26.
ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.
27.
நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.
28.
சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.
29.
தேசிய ஊரக நல அமைப்பு பற்றி விளக்குக?
30.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
31.
சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.
32.
இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?
33.
இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.
34.
விலைபேதம் காட்டுதலின் வகைகளை விளக்குக.
35.
தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.
36.
LPG க்கு எதிரான கருத்துக்கள் யாவை?
37.
MS Excel Sheet செயல்பல்படுத்துவதில் உள்ள நிலைகளை விளக்குக.
38.
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் - குறிப்பு வரைக.
39.
1991 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்கையின் ஏதேனும் மூன்று நோக்கங்களைக் குறிப்பிடுக.
40.
ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?
41.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.
42.
அளிப்பு நெகிழ்ச்சியைப் பற்றிக் கூறுக.
43.
44.
நுகர்வோர் எச்சத்திற்கு மார்ஷலின் இலக்கணத்தைத் தருக.
45.
பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.
1.
Qs = Qd என்றும் போது சமநிலை ஏற்படுகிறது.
10p=200-10p
10p+10p=200
20p = 200

p=10 எனில்
அளிப்புச் சார்பில்
Qs= lOp
= 10 x 10
\(\boxed{\therefore QS =100}\)
தேவைச்சார்பு
Qd=200-10p
= 200 - (10 x 10)
=200-100
\(\therefore\) Qd= 100
எனவே p = 10, Qs = 100, Qd = 100
விலை ரூ. 10 என்கின்ற போது தேவையின் அளவு அளிப்பின் அளவிற்குச் சமமாக 100 அலகுகளாக உள்ளது.
2.
1.கலப்பு பொருளாதாரம்.
2.வேளாண்மை.
3.புதிய தொழிற் கொள்கை.
4.வளர்ந்து வரும் அங்காடி.
5.பேரளவு நுகர்வு.
3.
1. உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடக் கூடிய செலவுகளுடன், நிர்வாகச் செலவையும் சேர்த்துக் கொண்டால் அது முதன்மைச் செலவு எனப்படும்.
2.இச்செலவுகள் நேர்முகச் செலவுகள் என்றும் அழைக்கப்படும்.
3.
4.
1. ஒரு பண்டத்தின் எல்லா அலகுகளையும் நுகர்வதால் கிடைக்கும் பயன்பாட்டின் கூடுதலே மொத்தப் பயன்பாடு ஆகும்.
2.TU=MU1+MU2+MU3+......+MUn
(அ)
\(\boxed{TU=\sum MU}\)
5.
(i) வேளாண்மை பருவகாலம் சார்ந்தது
(i) துணை தொழில்களின்மை
(iii) மூலதன செறிவு தொழில்நுட்பம்
6.
| வ.எண் | இலவசப் பண்டங்கள் | பொருளாதாரப் பண்டங்கள் |
| 1. | இயற்கையின் நன்கொடையாக கிடைக்கும் பண்டம் இலவச பண்டம். | பணம் கொடுத்து பெறும் பண்டம் பொருளாதாரப் பண்டம். |
| 2. | பற்றாக்குறையற்றவை, மேலும் சந்தையில் விலை இல்லை. | பற்றாக்குறையானவை மேலும் சந்தையில் விலை உண்டு. |
| 3. | (எ.கா.) காற்று,சூரிய ஒளி. | (எ.கா.)மேசை,நாற்காலி. |
7.
1.மனிதர்கள் எல்லையற்ற தேவைகளை உடையவர்கள்.
2.எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன.
3.பற்றாக்குறையான வளங்கள் மாற்று வழிகளில் பயன்தரக்கூடியவையாக உள்ளன.
4. எனவே இராபின்ஸ் கூற்றுப்படி பொருளியல் என்பது தேவைகளை தேர்வு செய்யும் அறிவியலாகும்.
8.
\(Es={\triangle Qs\over Qs}\div{\triangle P\over P}\)
\(Es={\triangle Qs\over Qs}\times{ P\over \triangle P}\)
\(\therefore \boxed {Es={\triangle Qs\over \triangle P}\times{ P\over Qs }}\)
Q=அளிப்பின் அளவு
P=விலை
\(\triangle\) =மாற்றம்
9.
(i) ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது.
(ii) ஆங்கிலப் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவின் மூலதன ஆக்கத்தை குறைய செய்து வளிர்ச்சிய தடுத்து நிறுத்தியது.
(iii) நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயர்களின் மூலதனமாக மாறியது.
10.
(i) இந்தியாவில் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை கோயம்புத்தூர் கொடுக்கிறது.
(ii) எனவேதான் கோயம்புத்தூரை 'காற்றழத்த விசைக் குழாய் நகரம்' என்றழைக்கப்படுகிறது.
11.
கடன் நிதிகளின் தேவை கீழ்கண்டவைகளை அடிப்படையாக கொண்டது. அவை,
(i) முதலீட்டுத் தேவை(Investment)
(ii) நுகர்வுத் தேவை (Consumption)
(iii) பதுக்குவதற்கான தேவை(Hoarding)
12.
(i) இயற்கை முற்றுரிமை
(ii) அரசு முற்றுரிமை
(iii) சட்ட முற்றுரிமை
13.
பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 29-3-2017 அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
14.
15.
பகிர்வு என்பது நான்கு உற்பத்திக் காரணிகளுக்கு வருவாயை பகிர்ந்தளிப்பதைக் குறிக்கும்.
16.
| வ.எண் |
மனித மேம்பாட்டுக் குறியிட்டென்(HDI) |
வாழ்க்கைத் தரக்குறியீட்டென் (PQLI) |
|---|---|---|
| 1 | ஐக்கிய நாடுகள் முன்னேற திட்டம் (UNDP) வெளியிடப்பட்டது | ஒரு நாட்டின் வாழ்க்கைத்தரத்தினை அளவிடப் பயன்படுகிறது |
| 2 | இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் கூறியடூ, கல்விக்குரியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது | இதில் எதிர்பார்ப்பு ஆயட்காலம் , குழந்தை இறப்பு வீதம், மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தினார். |
| 3 | பாகிஸ்தானின் பொருளியல் அறிஞர் மஹாபூப் உள் ஹக் என்பவரும் இந்தியாவை சார்ந்த அமர்த்திய குமார் சென் என்பவரும் இக்கோட்பாட்டை மேம்படுத்தினர் | மோரிஸ் டி மோரிஸ் என்வரால் உருவாக்கப்பட்டது |
17.
எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
18.
(i) அனைவரும் தனிக்குடும்பமாக வசிக்க முனைவதால் வீடுகள் பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
(ii) வீடுவசதி என்பது வீடு மனை வீடுகள் தருவது மட்டுமின்றி முறையான குடிநீர் வசதி, நல்ல சுகாதார வசதி, முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தும் வழி ஆகியவற்றை செய்து தர வேண்டியுள்ளது.
19.
தனியார் மயமாக்கல் என்பது பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் மனித உரிமையை தனியாருக்கு மாற்றுவதைக் குறிக்கும்.
20.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.
21.
உபரி சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும், உண்மை உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
22.
பல்வகை உள்ளீடுகளின் அளவுகளுக்கு வெளியீட்டு பொருள்களின் அளவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பே உற்பத்தி சார்பு ஆகும்.
23.
1. உற்பத்திக் காரணிகளை வாங்க மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும்.
2. வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு (அ) வெளிச்செலவு (அ) பணச் செலவு என்றும் அழைக்கப்படும்.
24.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை நுகரும்போது நுகர்வோருக்கு கிடைப்பதாக நுகர்வோர் கருதுவது.
2. விருப்பத்தை நிறைவு செய்யும் ஆற்றல்.
25.
1. தனிப்பட்ட மனிதர்கள், இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லது தொழில்களின் பொருளாதார
நடவடிக்கைகளை நுண்ணியல் பொருளியல் என்கிறோம்.
2. பல்வேறுபட்ட சந்தை சூழலில் தொழில் நிறுவனங்கள், வாங்குபவர்கள், விற்பவர்கள் இணைந்து வெவ்வேறு விலையைத் தீர்மானிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை நுண்ணிய பொருளியல் தெளிவுபடுத்துகிறது.
26.
TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20
தரப்பட்டுள்ளது. இறுதிநிலை செலவுச் சார்பினை காண Qஐ பொருத்து வகைப்படுத்த.
MC(Q)= \({d(TC)\over dQ}\)
= 3Q3-1 -36 (2) Q2-1 + 182(l)Q1-1 + 20
= 3Q2-72Q1 + 182 Qo+ 20
= 3Q2- 72Q + 182 (1) + 20
= 3Q2 -72Q + 182 + 20
= 3Q2-72Q + 202
Q=6 எனில்,
MC (Q) = 3(6)2 - 72 (6) + 202
= 3 (36) - 432 + 202
= 108 - 432 + 202
= 310 - 432
\(\boxed{\therefore MC(Q)=122}\)
TC (Q) = Q3 - 36Q2 +182Q +20
AVC=?
TVC (Q) = Q3 - 36Q2 + 182Q என அறிகிறோம்.
(மாறிலி மதிப்பு என்பது மாறாச் செலவு ஆகும் )
AVC (Q) = TVC (Q) /Q
\(={Q^3-36Q^2+182Q\over Q}\)

= Q2-36Q+182
Q = 6 எனில்,
AVC (Q) = (6)2 - 36 (6) +182
= 36 - 216 + 182
=218-216
\(\boxed {AVC (Q) =2}\)
குறிப்பு:
மாறாச்செலவு =20
சராசரி மாறாச் செலவு =\({20\over Q }\)

=Q2-36Q+182+\({20\over Q }\)
27.
1.உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்"என்று குறிப்பிடுகிறது.
3.பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும்.உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6%ஆக இருந்தது.
4.இதன் மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதாரம் வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.
28.
சராசரி மாறும் செலவு (AVC) :
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2.மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC\over Q}}\)
TVC =மொத்த மாறும் செலவு
AVC =சராசரி மாறும் செலவு
Q =உற்பத்தி அளவு
அட்டவணை:
| Q | TVC | \(AVC={TVC\over Q}\) |
| 0 | 0 | 0/0=0 |
| 1 | 200 | 200/1=200 |
| 2 | 300 | 300/2=150 |
| 3 | 400 | 400/3=133 |
| 4 | 600 | 600/4=150 |
| 5 | 900 | 900/5=180 |

1.AVC ஆரம்பத்தில் குறைந்து,பின் உற்பத்தி அதிகரிக்கும் போது AVC அதிகரிக்கிறது.
2.விளைவு விதி செயல்பாட்டின் காரணமாக AVC குறைந்து பின்பு அதிகரிக்கிறது. ஆகையால் AVC 'U' வடிவத்தில் உள்ளது.
29.
(i) தேசிய, ஊரக நல அமைப்பு (NRHM) 12, ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
(ii) நலிவடைந்த ஊரக மக்களக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது இதன் நோக்கம் ஆகும்.
(iii) உடல் நலத்தை தீர்மானிக்கும் காரணிகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூக மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றை அடைவதற்காக சிறப்பாக செயல்படும்.
(iv) சமூகத்தை பரவலாக்கப்பட, நல விநியோகம் முறையை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் மிக முக்கியமான நோக்கமாகும்.
(v) இனப்பெருக்கம், தாய்மைப்பேறு, சிசு மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரின் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது.
(vi) மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
30.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
31.
1.சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதி என்பது உற்பத்திக் காரணிகளின் பல்வேறு இணைப்பில் உள்ள பல சம அளவு உற்பத்தி கோடுகளின் தொகுதி ஆகும்.
2. ஒவ்வொரு சமநோக்கு வளைகோடும் வேறுபட்ட உற்பத்தியைக் கொண்டவை.
3.சுருங்கக்கூறின் சமநோக்கு வளைகோட்டின் குடும்பம் சம அளவு உற்பத்தி வரைபடமாகும்.
சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதி

4. சம அளவு உற்பத்திக் கோடு மேலேச் செல்ல செல்ல அதிக உற்பத்தியையும், கீழேச் செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியையும் கொடுக்கும்.
5. வரைபடத்தில் x-அச்சு உழைப்பையும்,y-அச்சு மூலதனத்தையும் குறிக்கிறது.
6.ஒன்றுக்கு மேற்பட்ட பல சம அளவு உற்பத்திக் கோடுகள் இருந்தால் அது சம அளவு உற்பத்திக் கோட்டுத்தொகுதி எனப்படும்.
32.
(i) ஒரு ஏக்கருக்கான உற்பத்தியை இரண்டு மடங்காகத் தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தல்
(ii) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை சந்தைப்படுத்த தனியார் துறையின் பங்களிப்பை உறுதி செய்தல்
(iii) பாசன வசதிகளைத் துரிதபடுத்துவதிலும் , நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதிலும் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
(iv) நதி நீர் இணைப்பின் மூலம் உபரி நீரை பற்றாக் குறையுள்ள பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்
33.
மொத்த இலாபம் :
(1) ஒரு நிறுவனம் தனது மொத்த வருவாயிலிருந்து மொத்த செலவை கழிக்கும் போது கிடைக்கும் உபரி மொத்த இலாபம் ஆகும்.
(2)
(ii) நிகர இலாபம் /தூய இலாபம் /உண்மையான இலாபம்:
(1) நிகர (அ) தூய(அ) பொருளாதார (அ) உண்மை இலாபம் என்பது மொத்த இலாபத்திலிருந்து தொழில் முனைவோர் சொந்த உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தியதற்கு எடுத்துக்கொண்டது போக மீதி உள்ளதே நிகர இலாபம் ஆகும்.
(2)
(iii) இயல்பு இலாபம் :
தொழில் நீடித்திருக்க எதிர்பார்க்கும் குறைந்தபட்ச இலாபம் இயல்பு இலாபம் ஆகும்.
(iv) மிகை இலாபம்:
(1) இயல்பு இலாபத்திற்கு மேல்பெறப்படும் தொகை மிகை இலாபம் ஆகும்.
(2)
34.
விலைபேதம் காட்டுதல் மூன்று வகைப்படும்.அவை,
(i) தனிநபர் பேதம்
(ii) இட பேதம்
(iii) பயன் அடிப்படையில் பேதம்
(i) தனிநபர் பேதம்:
(1) பல விதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது.
(2) (உம்) இரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிப்பது.
(ii) இட பேதம் :
(1) ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு விலைகளை நிர்ணயித்தல்
(2) (உம்) ஒரு புத்தகத்திற்கு இந்தியாவிற்குள் ஒரு விலையும் அதே புத்தகத்திற்கு வெளிநாடுகளில் வேறு விலையும் பெறுவது.
(iii) பயன் அடிப்படையில் பேதம் :
(1) ஒரு பண்டத்தின் பயனின் அடிப்படையில் பல்வேறு விலைகள் பெறுதல்
(2) (உம்) தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வை வீட்டிற்கு பயன்படுத்தினால் குறைந்த விலையும் அதே மின்சாரத்தை கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் அதிக விலையும் வசூலிக்கிறது.
35.
(i) சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும்.
(ii) நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகங்களாகும்.
(iii) மேலும் 23 சிறு துறைமுகங்களும் உள்ளன.
(iv) தற்போது ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டவை.
(v) 24% அனைத்து சிறிய துறைமுகங்களும் தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
(vi) சென்னை துறைமுகம் கன்டெயினர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகமாகும்.
(vii) இது 4,00,000 வாகனங்களைக் கையாளக்கூடிய அர்ப்பணிப்பு முனையமாக தற்போது மேம்படுத்தப்பட்டு அனைத்து விதமான நிலக்கரி மற்றும் கனிம போக்குவரத்துக்களை கையாள்கிறது.
36.
(i) தாராளமயமாக்கும் கொள்கை வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வசதியாகிவிட்டது.
(ii) தனியார் மயமாக்குதல், பெரிய நிறுவனங்களுக்கு முற்றுரிமை சக்தியினை ஏற்படுத்தும் இதில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது.
(iii) ஏற்கனவே வளர்ந்த நாடுகள் மேலும் வளர சாதகமாகவும், வளர்ச்சி குறைந்த நாடுகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.
37.
ஆரம்பம்(Start)
(i) பல்வேறு முறைகளில் MS Excel ஐ பயன்படுத்தலாம்.
⇒Click Start
⇒ Program
⇒ Micro Soft Excel (அ) Desktop MS Excel ஐகானை இருமுறை கிளிக் செய்க.
(ii) இதில் நிறைகளை, நிரல்களும் ஒன்றையென்று வெட்டிக்கொள்ளும் சிறு அலகிலான அறைகள் 'Cell' எனப்படுகிறது.
(iii) MS Excel 2007 வடிவம் (Version) 10 இலட்சம் நிரைகள் மற்றும் 16 ஆயிரம் நிரல்களைக் கொண்ட பணத்தாளில் (Work Sheet) விவரங்கள் பதிய முடியும்.
38.
(i) டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட் லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.
(ii) நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் ஒரு முன்னோடி திட்டம் எனலாம்.
(iii) இதன் வளர்ச்சியால் அனல்மின்நிலையம், உரதொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன.
(iv) சேலத்தில் மாங்கனீசு சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன.
(v) மாலிப்டினம் எனும் இராசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.
39.
(i) ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறிப்பாக தொழில் மயமாதலை சார்ந்துள்ளது.
(ii) சுதந்திரம் அடைந்த போது இந்திய பலவீ னமான தொழில் அடிப்படை பெற்றிருந்து.
(iii) சுதந்திரம் பெற்றதற்கு பிந்தைய காலத்தில், இந்திய அரசு வலிமையான தொழில் அமைப்பை உருவாக்குவதற்கான சிறப்பு வலியுறுத்தல்களை மேற்கொண்டது.
40.
(i) இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மற்றும் முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
(ii) பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
(iii) நகர்புறத்திற்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
(iv) ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நாற்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
(v) வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம் ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலை வாய்ப்புகளையம் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க முடியும்.
(vi) கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பு தேடி திறமைசாலிகள் இடம் பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிபெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
(vii) ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
(viii) கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினைகுறைக்க முடியும்.
41.
(i) விவசாயப் பொருட்களுக்கான அங்காடிக்குழு, வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது கால்நடைப் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பு ஆகும்.
APMC-ன் செயல்பாடுகள்
(i) வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியார்களிடையே கூட்டுறவை வளர்ச்சிப் பெறச் செய்தல்.
(ii) சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.
(iii) விலை நிர்ணயம் மற்றும் அங்காடிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருதல்.
(iv) விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதே நாளில் விவசாயிகளுக்குப் பணம் செலுத்துவதை உறுதி செய்தல்.
(v) வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
(vi) வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துதல்.
42.
1. அளிப்பு நெகிழ்ச்சி என்பது விலை மாற்றத்திற்கு ஏற்ப அளிப்பில் ஏற்படும் மாற்ற வீதம் ஆகும்.
2. 
3. \(\boxed{e_s ={({\triangle Q_s/Q_s})\over(\triangle P/P)}};e_s = {\triangle Q_s \over \triangle P}\times {P\over Q_s}\)
4.இதில் Qsஎன்பது அளிப்பு, Pஎன்பது விலை \(\triangle\)என்பது மாற்றம்.
43.
44.
1. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தொன்மை பொருளியல் அறிஞர்கள் ஆவார்.
2. காலப்போக்கில் ஜீல் டுபூட் மற்றும் ஜீவன்ஸ் 1884-ல் இக்கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினர்.
3. ஆனால் நுகர்வோர் எச்சம் என்ற இக்கருத்தை சீர்படுத்தி வழங்கியவர் மார்ஷல் ஆவார்.
இலக்கணம்:
"ஒரு பொருளை வாங்காமல் இருப்பதைவிட வாங்குவதே மேல் என முடிவு செய்து, கொடுக்க நினைத்த விலைக்கும், நுகர்வோர் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வித்தியாசம் நுகர்வோர் எச்சம்" என்று மார்ஷல் கூறுகிறார்.
எடுகோள்கள்:
1. பயன்பாட்டை அளவிட முடியும்.
2. பதிலீட்டு பண்டங்கள் இல்லை.
3.நுகர்வோரின் சுவை, வருமானம் மற்றும் செயல்பாட்டில் மாற்றமில்லை.

45.
பொருளியல் என்பது "விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே "ஆகும் என இலயனல் ராபின்ஸ கூறியுள்ளார்.
ராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்புயல்புகள் :
1. மனித விருப்பங்கள் எண்ணற்றவை.
2. மனிதனின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்பு பற்றாக் குறையாக உள்ளன.
3. பற்றாக்குறையான வளங்கள் மாற்று வழிகளில் பயன்தரக்கூடியவையாக உள்ளன.
திறனாய்வு:
1. ராபின்ஸ் மனிதர்களுக்கு நலன் தரக்கூடிய பொருட்கள் அல்லது நலன்தரா பொருட்கள் என்று தரம் பிரிக்கவில்லை.
2. அரிசியை உற்பத்தி செய்வதால் மனிதனின் நலன் மேம்படுகிறது.
3. பொருளியல் என்பது நுண்ணியப் பொருளியில் மட்டுமல்லாமல் பேரியல் பொருளாதார நிகழ்வுகளான தேசிய வருமானம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் உள்ளடக்கியது.
4. இவ்விலக்கணமானது பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கவில்லை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards