11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2019
+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பொருளாதார கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?
2.
முன்னேறிய நாடுகளின் இயல்புகள் யாவை?
3.
மாறாச் செலவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக
4.
மிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.
5.
தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?
6.
அங்காடித் தேவை என்றால் என்ன?
7.
வரவு செலவுக் கோட்டை வரையறு.
8.
சுய உதவிக் குழுக்கள் சிறு குறிப்பு வரைக?
9.
ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?
10.
பணிகளின் இயல்புகள் யாவை?
11.
ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை குறை கூறியவர்கள் யார்?
12.
தேசிய ஊரக நல அமைப்பு பற்றி எழுதுக.
13.
அளிப்பு விதி என்றால் என்ன?
14.
சம அளவு உற்பத்தி என்றால் என்ன?
15.
தொழில் முனைவோர் யார்?
16.
சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக
17.
வளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்றால் என்ன?
18.
தமிழ்நாட்டில் உள்ள சில சுரங்கத்திட்டங்களின் பெயர்களை கூறுக.
19.
திட்ட விடுமுறை குறிப்பு வரைக.
20.
கூலிக் கோட்பாடுகள் யாவை?
21.
பகிர்வுச் சார்பு என்றால் என்ன?
22.
குவித்தல்(Dumping) சிறுகுறிப்பு வரைக?
23.
சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன?
24.
முற்றுரிமை போட்டி என்றால் என்ன?
25.
தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.
26.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ளடக்கியுள்ள மண்டலங்கள் யாது?
27.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?
28.
இலாபம் என்றால் என்ன?
29.
பகிர்வின் வகைகள் யாவை?
30.
மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.
31.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.
32.
இந்தியாவின் காலனித்துவ சுரண்டலின் நிலைகள் யாவை?
33.
பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?
34.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.
35.
ஊரகப் வீட்டுவசதி பிரச்சனைக்கான காரணங்களில் ஏதேனும் இரண்டு கூறு.
36.
திறந்த நிலை வேலையின்மை என்றால் என்ன?
37.
ஊரக பொருளாதாரம் – வரையறு.
38.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதன் பொருள் என்ன?
39.
தனியார் மயமாக்கல் என்றால் என்ன?
40.
புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.
41.
பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.
42.
உபரி சக்தி – விளக்குக
43.
தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு
44.
“அங்காடி” வரையறு
45.
அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?
46.
காரணியின் இறுதிநிலை உற்பத்தியை வரையறு
47.
உழைப்பு – வரையறு
48.
வெளியுறு செலவு - வரையறு.
49.
50.
நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.
51.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி
52.
விருப்பங்களை வகைப்படுத்து.
53.
இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க
54.
55.
பொருளியல் என்றால் என்ன?
56.
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.
57.
செலவு கட்டுப்பாடு விளக்குக.
58.
சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.
59.
நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.
60.
ஊரக கடன் சுமைகளின் இயல்புகள் யாவை?
61.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
62.
பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
63.
அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?
64.
அகச்சிக்கனம் மற்றும் புறச்சிக்கனம் வேறுபாடு தருக.
65.
ஊக வணிக நோக்கத்தை விளக்குக.
66.
இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.
67.
முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை?
68.
விலைபேதம் காட்டுதலின் வகைகளை விளக்குக.
69.
பசுமைப்புரட்சி - விளக்குக
70.
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக
71.
72.
தமிழ்நாட்டின் ஜவுளித்துறை முன்னேற்றம் பற்றி விவரி
73.
வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.
74.
MUDRA வங்கியின் நோக்கங்களை பட்டியலிடுக.
75.
76.
சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.
77.
GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
78.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.
79.
பொருளாதார முன்னேற்றம் – வரையறு.
80.
81.
தொழில் முனைவோரின் பணிகள் யாவை?
82.
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
83.
மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.
84.
நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளியலுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை
85.
பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக
1.
1.பொருளாதார கட்டமைப்பு வசதிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.
2.உதாரணமாக இருப்புப் பாதைகள்,சரக்கு வாகனங்கள்,தபால் மற்றும் தொலை தொடர்பு நிலையங்கள், துறைமுகங்கள்,கால்வாய்கள்,மின் உற்பத்தி நிலையங்கள்,வங்கிகள், காப்பீட்டு நிறுனங்கள் ஆகியவை பொருளாதார கட்டமைப்புக்கு உதவுகின்றன.
2.
1.உயர்ந்த நாட்டு வருமானம்
2.உயர்ந்த தனிநபர் வருமானம்.
3.உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
4.முழு வேலை வாய்ப்பு.
5.தொழில் துறையின் ஆதிக்கம்.
6.உயர் தொழில் நுட்பம்.
3.
1.நிறுவனத்தின் வாடகை.
2.காவலரின் ஊதியம்.
3. குறைந்தபட்ச உபகாரணத்திற்காக செலுத்தும் செலவு
4.காப்பீட்டு செலவு.
5.மின்சாரத்திற்கான காப்புக் கட்டணம்
6.உரிமக் கட்டணம் போன்றவை ஆகும்.
4.
1.வியாபார நடவடிக்கைகளுக்கு நேரடியாக தொடர்புடைய செலவுகள் அனைத்தும் மிதக்கும் செலவுகள் எனப்படும்.
2.ஒரு நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு மிக அவசியமான செலவுகள் மிதக்கும் செலவுகள் எனப்படும்.
5.

6.
தனிநபர் தேவைப் பட்டியலின் அடிப்படையில் விலை, இடம் மற்றும் நேரத்தை இணைத்து அங்காடித் தேவை வளைகோட்டைப் பெறலாம்.
7.
1.நுகர்வோர் வருமானத்தைப் பொருத்து,கொடுக்கப்பட்டுள்ள விலையில் பண்டங்களை எவ்வளவு வாங்க முடியும் என்பதை அறிய வரவு செலவுக் கோடு பயன்படுகிறது.
2. வரவு செலவுக் கோடு 'விலை விகிதக் கோடு'எனவும் அழைக்கப்படுகிறது.
8.
(i) "சுய உதவிக்குழு: என்பது ஒரே மாதிரியான சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை (சராசரியாக 14 பேர்) கொண்ட தன்னிச்சையான அமைப்பு ஆகும்.
(ii) இவற்றின் உறுப்பினர்கள் சுயஉதவி மற்றும் பரஸ்பர உதவி மூலம் பொதுவான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முயல்கின்றனர்.
(iii) சுயஉதவிக் குழுக்கள் உறுப்பினர்களின் சிறு சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன.
9.
(i) குடிசைத் தொழில்கள்
(ii) ஊரக தொழில்கள்
(iii) சிறு தொழில்கள்
(iv) குறுந்தொழில்கள் மற்றும்
(v) வேளாண்சார்ந்த தொழில்கள்
10.
பணிகளின் இயல்புகள்.
1. புலனாகாப் பொருட்கள்
2. பலதரப்பட்ட பண்டங்கள்
3. பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது
4. அழியக் கூடியவை.
11.
1. 'இரஸ்கின் மற்றும் கார்லைல்'போன்றோர், நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தைக் கற்றுத் தருவதாக பொருளியலை வர்ணிக்கின்றனர்.
2. எனவே பொருளியலை ஓர் "இருண்ட அறிவியல்" (Dismal science)எனக் கூறியுள்ளனர்.
12.
(i) தேசிய ஊரக நல அமைப்பு (NRHM), 12 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
(ii) நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
13.
அளிப்பு விதி விலைக்கும் அளிப்புக்கும் உள்ள நேரடியான தொடர்பினை விளக்குகிறது.
14.
1. ஒன்றுக்கு மேற்பட்ட மாறும் உற்பத்திக் காரணிகளை பல்வேறு இணைப்பில் ஈடுபடுத்தி ஒரு குறிப்பிட்டஅளவு உற்பத்திச் செய்வதை காட்டும் கோடு சம அளவு உற்பத்திக்கோடு எனப்படும்.
2. ஐசோ(ISO),குவான்ட (quant) என்றும் இணைப்புத்தான் சம அளவு உற்பத்திக் கோடு என்று அழைக்கப்படுகிறது.
15.
1. ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் "தொழில் அமைப்பாளர் "(அ) "'தொழில் முனைவோர் "ஆவார்.
2. தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்திக் காரணி ஆவார்.
16.
(i) இந்திய போன்ற நாட்டிற்கு சணல் தொழில் மிக முக்கியமானதாகும்
(ii) இத்தொழில் அதிகவெளிநாட்டு செலவாணி ஈட்டப்படுகிறது .
(iii) இது கணிசமான வேலைவாய்ப்பை அளிக்கிறது
17.
வளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்பது தொழிற்துறையில் சிறந்த மற்றும் அதிக தலாவருமானத்தை ஈட்டித் தருவதாகும்.
18.
டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட் லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் ஆகும்.
19.
(i) இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.
(ii) வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
20.
(i) பிழைப்பு மட்ட கூலிக் கோட்பாடு
(ii) வாழ்க்கைத்தர கூலி கோட்பாடு
(iii) கூலி நிதிக் கோட்பாடு
(iv) எச்ச உரிமை கூலி கோட்பாடு
(v) இறுதிநிலை உற்பத்தித் திறன் கூலிக் கோட்பாடு
21.
(i) உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல் மற்றும் தொழில் முனையும் திறன் போன்றவை உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
(ii) இந்த உற்பத்திக் காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை பகிர்வுச் சார்பு கோட்பாடு விளக்குகிறது.
22.
(i) குவித்தல் என்றால் ஒரு முற்றுரிமையாளர் தனது உற்பத்தி பண்டத்திற்கு உள்ளூர் அங்காடியில் அதிக விலையும். வெளியூர் அங்காடியில் குறைந்த விலையும் நிர்ணயிப்பது ஆகும்.
(ii) உதாரணமாக இந்தியாவில் மின்னணு சாதன அல்லது சீனாவில் மின்னணுப் பொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது.
23.
(i) சில்லோர் முற்றுரிமை அங்காடியில் சில நிறுவனங்களே ஒரே மாதிரியான அல்லது வித்தியாசமான பண்டங்களை உற்பத்தி செய்யும்.
(ii) சில்லோர் முற்றுரிமைப் போட்டியில் எத்தனை நிறுவனங்கள் என்பதைக் குறிப்பிட முடியாது.
(iii) சில நிறுவனங்களே இருப்பதால், ஒரு நிறுவனத்தின் நடவடிக்கை மற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
24.
(i) Mono என்ற சொல் ஒன்று, Poly என்ற சொல் விற்பதையும் குறிக்கும்.
(ii) முற்றுரிமை என்பது ஒரு பண்டத்தை அங்காடியில் ஒருவரே விற்பனை செய்வதாகும்.
(iii) முற்றுரிமை போட்டியில் நெருங்கிய பதிலீட்டு பண்டங்கள் கிடையாது.
25.
1191-ன் புதிய தொழிற் கொள்கையின் கீழ் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
26.
சுதந்திர வர்த்தக மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப முன்னேற்ற மண்டலங்கள், உயர் தொழில் நுட்ப மண்டலங்கள் , அறிவியல் மற்றும் புதுமைப் பூங்காக்கள், இலவசத் துறைமுகங்கள், நிறுவன மண்டலங்கள் போல இன்னும் பல.
27.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
28.
தொழில்முனைவோரின் தொழில் திறமையைப் பயன்படுத்துவதற்கான வெகுமதி இலாபம் ஆகும்.
29.
(i) தனிநபர் பகிர்வு
(ii) பணிசார் பகிர்வு
30.
(i) HDI1 ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கையினை பொருத்துள்ளது).
(ii) HDI 2 (வாழ்க்கைதரம் )
(iii) HDI3 (வறுமை ஓழிப்பு) மற்றும் HDI4 (நகரமயமாதல்) ஆகிய நான்கும் மனித மேம்பாட்டுக் குறியீடுகளாகும்.
31.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன :
(i) பருவ மழையை நம்பியிருப்பது.
(ii) விதைகள் , பூச்சிக் கொல்லிகள் , தண்ணீர் போன்ற உள்ளீடுகளுக்காக பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
(iii) பெரு , சிறு மாற்று குறு விவசாயிகளுக்குகிடயே வருமான இடைவெளி அதிகரித்திருப்பது.
(iv) பண்ணைகள் இயந்திரமயமாக்கப் படுத்தல் ஆகிய இவை அனைத்தும் பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன.
32.
இந்திய நீண்டகாலமாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.இதன் சுரண்டல் நிலைகள் கிழ்க்கண்டவாறு இருக்கும்
(i) அதிகாரம் செலுத்தும் நிலையில் உள்ள நாடு தன அதிகாரம் செலுத்தும் நாட்டின் மீது அரசியல் கட்டுப்பாடு மட்டுமில்லாமல் பொருளாதார கொள்கைகளையும் தீர்மானிக்கிறது.
(ii)அடிமைநாட்டு மக்கள் தங்கள் நாட்டின் வழங்களையும் பயன்படுவதிலும் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பர்.
33.
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் (மதுரை), ஸ்ரீரங்கநாதா சுவாமி கோயில் (ஸ்ரீரங்கம்), பிரகதீஸ்வரர் ஆலயம் (தஞ்சாவூர்) மற்றும் மகாபலிபுர சிற்பகோயில்கள் ஆகியவை பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
34.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
35.
(i) அனைவரும் தனிக்குடும்பமாக வசிக்க முனைவதால் வீடுகள் பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
(ii) வீடுவசதி என்பது வீடு மனை வீடுகள் தருவது மட்டுமின்றி முறையான குடிநீர் வசதி, நல்ல சுகாதார வசதி, முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தும் வழி ஆகியவற்றை செய்து தர வேண்டியுள்ளது.
36.
திறந்த நிலை வேலையின்மை என்பது வேலைக்கு தயாராக இருந்தும் வேலையில்லாத நிலையில் இருப்பது ஆகும். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக கைவினைஞர்கள் மற்றும் கற்றவர் ஆகியோர் இப்பிரிவினைச் சார்ந்தவர்கள்.
37.
(i) ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும்.
(ii) ஊரக பொருளாதாரம் என்பது கிராமங்களையும் ஊரக சமுதாய மற்றும் கிராமங்களில் வாழும் மக்களையும் குறிக்கும்.
38.
சிறப்பு பொருளாதார மண்டலம் எனபது அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் உருவாக்கப்பட்டது.
39.
தனியார் மயமாக்கல் என்பது பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் மனித உரிமையை தனியாருக்கு மாற்றுவதைக் குறிக்கும்.
40.
1. மீண்டும் உருவாக்கப்பட முடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள் புதுப்பிக்கப்படஇயலாத ஆற்றல் வளங்கள் ஆகும்.
2.(எ.கா.) நிலக்கரி, பெட்ரோலியம், கனிமங்கள், படிம எரிபொருட்கள்
41.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.
42.
உபரி சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும், உண்மை உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
43.
நிறைவுப் போட்டியை தூய போட்டி என்றும் அழைக்கலாம்.அவற்றின் பண்புகளானவன.
(i) எண்ணற்ற வாங்குபவர் மற்றும் விற்போர் இருப்பர்.
(ii) ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை இருக்கும்.
(iii) உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை.
(iv) போக்குவரத்து செலவு இல்லை.
(v) அங்காடி நிலைபற்றி அறிந்திருப்பர்.
44.
(i) பொதுவாக 'அங்காடி' என்பது பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும்.
(ii) பொருளாதாரத்தில் 'அங்காடி'என்பது ஒரு பொருளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பரிமாற்றம் முறையையேக் குறிக்கும்.
45.
1. ஒரு பண்டத்தின் விலை உயர்வால் அளிப்பு அதிகரிக்கும்,விலை குறைந்தால் அளிப்பும் குறையும்.
2. ஆகவே, அளிப்பு கோடானது கீழிலிருந்து மேல் நோக்கி செல்லும்.
46.
1. ஓர் உற்பத்தி காரணியின் அளவில் ஒரு அதிகரிப்பு செய்யும்போது மொத்த உற்பத்தியில் ஏற்படும் கூடுகின்ற நிகர அளவு உற்பத்தியே இறுதிநிலை உற்பத்தி ஆகும்.
2. வேறு வகையில் கூறினால் இறுதி நிலை ஆக்கம் என்பது மொத்த உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தினை உள்ளீடுகளில் ஏற்படும் மாற்றத்தினால் வகுப்பதாகும்.
3. \(MP=\triangle TP / \triangle N\) (அ ) \(MP=TP_n-TP_{(n-1)}\)
47.
மார்ஷலின் கூற்றுப்படி, உழைப்பு என்பது உற்பத்தி காரணியான உழைப்பாளர் வருமானம் ஈட்டுவதற்காக தனது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்துவதாகும்.
48.
1. உற்பத்திக் காரணிகளை வாங்க மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும்.
2. வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு (அ) வெளிச்செலவு (அ) பணச் செலவு என்றும் அழைக்கப்படும்.
49.
50.
1. ஒரு பொருளுக்கு நுகர்வோர் கொடுக்க விரும்பும் விலைக்கும் உண்மையிலேயே கொடுக்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே நுகர்வோர் எச்சம்.
2. நுகர்வோர் எச்சம் =TU-(P x Q)
அல்லது
3. நுகர்வோர் எச்சம் = தகுவிலை - உண்மை விலை.
TU =மொத்தப் பயன்பாடு
P =விலை
Q =பண்ட அளவு
51.
விலையில் ஏற்படும் பிரதிபலிப்பின் காரணமாக தேவை ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை\((EP= \alpha)\)
2.முற்றிலும் நெகிழ்ச்சியுற்ற தேவை \((EP= 0)\)
3. மிகை தேவை நெகிழ்ச்சி \((EP>1)\)
4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத்தேவை நெகிழ்ச்சி \((EP<1)\)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி \((EP=1)\)
52.
விருப்பங்களில் வகைகள் மூன்று.
1. இன்றியமையாத விருப்பம்.
2. வசதிக்கான விருப்பம்.
3. ஆடம்பரத்திற்கான விருப்பம்.
53.
1. இயல்புரை அறிவியல், உள்ளதை உள்ளவாறு கூறுகிறது.
2. நிரூபிக்க இயலும்
3. காரண காரியங்களை தொடர்புபடுத்துகிறது.
4. உண்மையின் அடிப்படையில் அமைந்தது
5. வெளிப்படையானது, என்ன என்பதைக் கூறுகிறது.
54.
55.
1. ' பொருளியல் 'என்றால் இல்லங்களில் நிர்வாகம் என்று பொருள்படும்.
2. பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் என்னும் பழமையான கிரேக்க சொல்லிலிருந்து வந்தது
3. ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இவ்வியல். பிற்பகுதியில் ' பொருளியல் ' என்று ஆல்ஃபிரட் மார்ஷலால் பெயர் மாற்றப்பட்டது.
56.
1."மொத்த நாட்டு மகிழ்ச்சி"என்ற தொடர் 1972 ஆம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
2.இரு நிலைத்த முன்னேற்றம் சுற்றுக்சுழல் பாதுகாப்பு கலாச்சார மேம்பாடு சிறந்த நிர்வாகம்.
3.வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுமான நாடுகளை குறிக்கும்.
4.(எ.கா.)அமெரிக்க ஐக்கிய நாடுகள்,கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ் மற்றும் ஜப்பான்.
57.
1. இலாபத்தை உச்சமாக்கி நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு செலவை கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.
2. செலவுக் கட்டுப்பாடு என்பது உற்பத்திக்கு செய்யப்படும் செலவை குறைப்பதாகும்.
3.உற்பத்திக்கான செலவு என்பது மூலதனச் செலவு, கூலி, சம்பளம், உழைப்புச் செலவு, இயந்திரங்களின் தேய்மானம் ஆகியவற்றை குறிக்கும்.
58.
சராசரி மாறும் செலவு (AVC) :
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2.மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC\over Q}}\)
TVC =மொத்த மாறும் செலவு
AVC =சராசரி மாறும் செலவு
Q =உற்பத்தி அளவு
அட்டவணை:
| Q | TVC | \(AVC={TVC\over Q}\) |
| 0 | 0 | 0/0=0 |
| 1 | 200 | 200/1=200 |
| 2 | 300 | 300/2=150 |
| 3 | 400 | 400/3=133 |
| 4 | 600 | 600/4=150 |
| 5 | 900 | 900/5=180 |

1.AVC ஆரம்பத்தில் குறைந்து,பின் உற்பத்தி அதிகரிக்கும் போது AVC அதிகரிக்கிறது.
2.விளைவு விதி செயல்பாட்டின் காரணமாக AVC குறைந்து பின்பு அதிகரிக்கிறது. ஆகையால் AVC 'U' வடிவத்தில் உள்ளது.
59.
1.பயன்பாட்டை அளவிட முடியும்.
2.பணத்தின் இறுதிநிலை பயன்பாட்டில் மாற்றமில்லை.
3.பதிலீட்டுப் பண்டங்கள் இல்லை.
4.நுகர்வோரின் சுவை,வருமானம் மற்றும் செயல்பாட்டில் மாற்றமில்லை.
5.ஒரு பண்டத்தின் பயன்பாடு மற்றொரு பண்டத்தை சார்ந்திருப்பதில்லை.
6.எதிர்பார்க்கும் திருப்திக்கும்,நிறைவேற்றப்படும் திருப்திக்கும் உள்ள வேறுபாட்டை காட்டியுள்ளார்.
60.
(i) இந்தியாவில் ஏறக்குறைய 4ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
(ii) சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம்.
(iii) விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
(iv) பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மட்டும் உற்பத்தி இயல்பற்றவை.
(v) அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் சதவிகிதமே அதிகமாக உள்ளது.
(vi) பெரும்பான்மையான கிராம மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்கள்.
61.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
62.
1.பகுதிச் சமநிலை:
1. ஒரேயொரு மாரியின் மூலம் கிடைக்ககூடிய சமநிலை பகுதிச் சமநிலை பகுதிச் சமநிலை எனப்படும்.
2.இது தனிச் சமநிலை என்றும் அழைக்கப்படுகிறது.
2.பொதுச் சமநிலை:
பொதுச் சமநிலை என்பது பொருளாதாரத்தில் செயல்படுகின்ற அனைத்து மாறிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு மொத்த பொருளாதாரத்திலும் சமநிலை ஏற்படுவதைக் குறிக்கின்றது.
63.
எடுகோள்கள்:
1. உற்பத்திக் காரணிகளின் விலையில் மாற்றம் இல்லை.
2. முதலீட்டுப் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.
3.இயற்கை வளங்கள் மற்றும் அதன் கிடைப்பளவில் மாற்றம் இல்லை.
4. பதலீட்டுப் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.
5. தொழிநுட்பத்தில் மாற்றம் இல்லை.
6. காலநிலையில் மாற்றம் இல்லை .
64.
| அகச்சிக்கனங்கள் | புறச்சிக்கனங்கள் | |
| 1. | நிறுவனத்தின் வரி வர்க்கத்தினால் தோன்றும். | தொழிற்சாலையின் மீது வரி வர்க்கத்தினால் ஏற்படுவது. |
| 2. | நீண்டகால சராசரி செலவு குறைவாக இருக்கும். | நன்மைகள் பெரும்பான்மையான அனைத்து நிறுவனத்திற்கும் கிடைக்கும். |
| 3. | நிறுவனத்தின் பேரளவினால் உற்பத்தித் திறன் உற்பத்தித் திறன் மேம்பட்டு இருக்கும். | ஒருங்கிணைந்த சிக்கனங்கள் கிடைக்கும். |
| 4. | அகச் சிக்கனங்கள் எ.கா.தொழில்நுட்பம் மற்றும் நிதி சிக்கனங்கள் இருக்கும். | நகரங்களின் அதிவேக வளர்ச்சி பற்றி விளக்கப் பயன்படுகிறது. |
65.
(i) முதலீட்டுச் சந்தையில் பங்குகள் மற்றும் பத்திரங்களின் எதிர்கால விலை மாற்றத்திற்கேற்ப அதனுடைய நன்மைகளைப் பெற பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்க தேவையான பணத்தை மக்கள் ரொக்கமாக வைத்திருக்க வேண்டியுள்ளது.
(ii) இவ்வாறு எதிர்காலத்திற்கான ரொக்கமாக வைத்திருப்பதை ஊக நோக்கமாகும்.
(iii) இந்த நோக்கத்திற்காக கையில் சேமிப்பாக வைத்திருக்கும் தொகையின் அளவு வட்டி வீதத்தைப் பெற்றுத்தரும்.
(iv) இங்கு நீர்மை விருப்பத்திற்கும் வட்டி வீதத்திற்கும் எதிர்மறையான உறவு இருக்கும்.
66.
மொத்த இலாபம் :
(1) ஒரு நிறுவனம் தனது மொத்த வருவாயிலிருந்து மொத்த செலவை கழிக்கும் போது கிடைக்கும் உபரி மொத்த இலாபம் ஆகும்.
(2)
(ii) நிகர இலாபம் /தூய இலாபம் /உண்மையான இலாபம்:
(1) நிகர (அ) தூய(அ) பொருளாதார (அ) உண்மை இலாபம் என்பது மொத்த இலாபத்திலிருந்து தொழில் முனைவோர் சொந்த உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தியதற்கு எடுத்துக்கொண்டது போக மீதி உள்ளதே நிகர இலாபம் ஆகும்.
(2)
(iii) இயல்பு இலாபம் :
தொழில் நீடித்திருக்க எதிர்பார்க்கும் குறைந்தபட்ச இலாபம் இயல்பு இலாபம் ஆகும்.
(iv) மிகை இலாபம்:
(1) இயல்பு இலாபத்திற்கு மேல்பெறப்படும் தொகை மிகை இலாபம் ஆகும்.
(2)
67.
முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள்:
(i) எண்ணற்ற வாங்குவோர் மற்றும் விற்போர்.
(ii) நிறுவனங்கள் விலை நிர்ணயிக்க முடியாமல் அவர்களே தங்கள் பண்டங்களுக்கு விலை நிர்ணயிப்பர்.
(iii) நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்த பண்டங்களை மற்றவர்களின் பண்டங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயற்சிப்பதே முற்றுரிமைப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.
(iv) தொழிலில் உள்ளே நுழைய மற்றும் வெளியேற நிறுவனங்களுக்கு தடையில்லை.
(v) ஒவ்வொரு நிறுவனமும் தன் உற்பத்தி பண்டத்தின் விற்பனையை அதிகரிக்க அதிக விற்பனை செலவை (Selling cost) மேற்கொள்கிறது.
(vi) விலை அல்லா போட்டி (Non price competition) ஒவ்வொரு நிறுவனமும் சுதந்திரமான விலைக் கொள்கையை பின்பற்றும்.
68.
விலைபேதம் காட்டுதல் மூன்று வகைப்படும்.அவை,
(i) தனிநபர் பேதம்
(ii) இட பேதம்
(iii) பயன் அடிப்படையில் பேதம்
(i) தனிநபர் பேதம்:
(1) பல விதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது.
(2) (உம்) இரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிப்பது.
(ii) இட பேதம் :
(1) ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு விலைகளை நிர்ணயித்தல்
(2) (உம்) ஒரு புத்தகத்திற்கு இந்தியாவிற்குள் ஒரு விலையும் அதே புத்தகத்திற்கு வெளிநாடுகளில் வேறு விலையும் பெறுவது.
(iii) பயன் அடிப்படையில் பேதம் :
(1) ஒரு பண்டத்தின் பயனின் அடிப்படையில் பல்வேறு விலைகள் பெறுதல்
(2) (உம்) தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வை வீட்டிற்கு பயன்படுத்தினால் குறைந்த விலையும் அதே மின்சாரத்தை கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் அதிக விலையும் வசூலிக்கிறது.
69.
(i) பசுமைப்புரட்சி என்பது வேளாண் துறை தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது
(ii) 1960 க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில் நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன.
(iii) ஆரம்பமாகா 1960 -61 ல் ஏழு மாவட்டங்களில் ''வழிநடத்தும் திட்டம் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது
(iv) அதிக விளைச்சல் தரும் ரகங்களைஉற்பத்தி செய்வதற்கான திட்டம் (HYVP)
70.
(i) ஜோசப் A சும்பீட்டர் புத்தாக்க இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) சும்பீட்டர் கருத்துப்படி, ஒரு தொழில்முனைவோர் உற்பத்தி செயல்பாடுகளில் வணிகத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கம் புனைபவராகவும் இருக்கிறார்.
(iii) புத்தாக்கம் புனைவதற்கான வெகுமதியே இலாபம்.
(iv) சும்பீட்டரின் கூற்றுப்படி, புத்தாக்கம் புனைதல் என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
(1) புதிய பண்டங்களை அறிமுகப்படுத்துதல்.
(2) புதிய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துதல்.
(3) புதிய சந்தைகளைத் தொடங்குதல்.
(4) புதிய மூலப்பொருட்களைக் கண்டறிதல்.
(5) தொழில்/நிறுவனங்களை மறு சீரமைத்தல் புத்தாக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தான் அதிக இலாபம் பெற முடியும்.
திறனாய்வு:
புத்தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே காரணமல்ல. மேலும் இது இடர் தங்கும் பணியைப் புறக்கணித்துவிட்டது
71.
72.
(i) தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளித்துரை உற்பத்தி மையமாகும்.
(ii) தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.
(iii) இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41% சதவீத நூல் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
(iv) 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பையும், மொத்த ஏற்றுமதி வருவாய் 35% ஜவுளித்துறையிலிருந்து கிடைக்கிறது.
(v) உற்பத்தி துறையில் 14% பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது.
(vi) கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்கள் ஜவுளி ஆலைகளுக்கு புகழ் வாய்ந்தவை.
(vii) பின்னலாடைகளின் நகரம் என அழைக்கப்படும் திருப்பூர் 3-மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது.
(viii) உள்நாட்டு ஜவுளி தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.
(ix) ஈரோடு மாவட்டம் தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆலைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ளது.
73.
(i) பொருளாதார திட்டமிடலின் முதன்மை நோக்கம் சமூக நலமாகும்.
(ii) சுதந்திரத்திற்கு முன்னர் வணிக வங்கிகள் தனியார் வசமிருந்தன.
(iii) இவ்வங்கிகள் அரசாங்கம் திட்டமிடலுக்கான சமூக இலக்கு களை அடைவதற்கு உதவி செய்யத் தவறின.
(iv) ஆகையால் அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19,1969 அன்று தேசிய மயமாக்க முடிவு செய்தது.
(v) 1980 ஆம் ஆண்டின் அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசிய மயமாக்கியது.
74.
(i) குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்தல்.
(ii) சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள் சுய உதவிக்குழுக்கள் தனிநபர்களுக்கு நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.
(iii) அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல்.
(iv)சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்தல்.
(v) கடன் வழங்குதல், கடன் பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றிற்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்.
75.
76.
1. மனித வளங்களை மேம்படுத்துவதும் பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணைசெய்வதுமான அமைப்புகளை சமூகக் கட்டமைப்புகள் என்கிறோம்.
2. இந்த அமைப்புகள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு வெளியே இருக்கின்றன.
3. சமூக அமைப்புகளின் மேம்பாடு மனித வளங்களின் திறமையையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்கின்றன.(எ.கா.) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது வசதி மற்றும் இதர குடிமை வசதிகள்.
4.குறைவான சமூக அடிப்படைக் கட்டமைப்பினால் இந்திய பணியாளர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறது.
77.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும்.
GST-யின் நன்மைகள்:
(i) அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
(ii) ஒரு முனை வரியாக உள்ளது.
(iii) பதிவுக்கான வாசலாக உள்ளது.
(iv) சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளது.
(v) இணையவழி வசதி மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
(vi) மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
(vii) தளவாடங்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(viii) அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.
78.
(i) பொருளாதார சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்க்கும் மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கும் சிவப்பு கம்பள வரவேற்பு தருவதாகும்.
(ii) நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளது.
(iii) அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது.
(iv) 1991ல் சில உயர் தொழில்நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழ்ற்சாலைகளுக்கு அனுமதியளித்தது.
(v) 51% பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
(vi) இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74% பின்னர் 100% மாற்றியமைக்கப்பட்டது.
79.
1. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நல்வாழ்வையும் உள்ளடக்கியதாகும்.
2. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடுகள் என்பது.
1. மனிதவள மேம்பாட்டு குறியீடு
2.வாழ்க்கைத் தரக்குறியீடு
3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றை பொறுத்தது.
80.
81.
1. தொழில் முனைவோர் தொழிலை தொடங்கி, தன்னிடம் உள்ள வளங்கள் மற்றும் சூழ்நிலைக்கேற்றவாறு திட்டமிட்டு உற்பத்தியை மேற்கொள்வர்.
2. வெற்றிகரமான தொழில் முனைவோர் புத்தாக்கம் புனைவர் மற்றும் உற்பத்தியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துபவர்.
3. தொழில் முனைவோர் சரியான உற்பத்திக்கு காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்பவர்.
4. கட்டுப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையிடுதல்.
5. இடர்பாடுகளை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை மேற்கொள்ளுதல்.
6. உற்பத்திக்காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து, உற்பத்தியில் இலாபம் பெற முயல்வர்.
82.
| வ.எண் | வெளியுறு செலவு | உள்ளுறு செலவு |
| 1. | உற்பத்திக் காரணிகளை வாங்கு மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும். | நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும். |
| 2. | ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்கு தேவையான காரணிகளை விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு அமர்த்தியோ உற்பத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒட்டு மொத்த செலவு வெளிப்படையான செலவு. | நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் மற்றும் சுய உழைப்பிற்கான செலவுகள் உள்ளார்ந்த செலவுகள். |
| 3. | வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு அல்லது பணச் செலவு என்று அழைக்கப்படும். | உள்ளார்ந்த செலவு என்பது மறைந்திருக்கும் செலவு அல்லது எட்டுச் செலவு என்றழைக்கப்படும். |
83.
1. ஒரு பண்டத்தின் எல்லா அலகுகளையும் நுகர்வதால் கிடைக்கும் பயன்பாட்டின் கூடுதலே மொத்தப் பயன்பாடு ஆகும்.
2. கூடுதலாக ஓர் அலகு பண்டத்தை நுகர்வதால், மொத்தப் பயன்பாட்டில் ஏற்படும் கூடுதல் அல்லது மாற்றமே இறுதிநிலைப் பயன்பாடு ஆகும்.
3. \(\boxed{MU_n=TU_N-TU_{n-1}}\)
மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள தொடர்பு.
| வ.எண் | இறுதிநிலைப் பயன்பாடு | மொத்தப் பயன்பாடு |
| 1. | இறுதிநிலைப் பயன்பாடு குறையும். | மொத்தப் பயன்பாடு அதிகரிக்கும். |
| 2. | இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்ஜியத்தை அடையும். | மொத்தப் பயன்பாடு உச்ச நிலை அடையும். |
| 3. | இறுதிநிலைப் பயன்பாடு எதிர்மறையில் செல்லும். | மொத்தப் பயன்பாடு குறையும். |
84.
| வ.எண் | நுண்ணியல் பொருளியல் | பேரியல் பொருளியல் |
| 1. | சிறிய அளவை ஆராய்கிறது. | பெரிய அளவை ஆராய்கிறது. |
| 2. | தனி ஒரு பண்டத்தின் விலை, தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில், குடும்பங்கள் பற்றி ஆராய்கிறது. | நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத் செயல்பாடுகள் பற்றி முழுமையாக ஆராய்கிறது. |
| 3. | விலைக்கோட்பாட்டின் கீழ் விளக்கப்படுகிறது. | வருமானக் கோட்பாட்டின் கீழ் விளக்கப்படுகிறது. |
| 4. | ஆல்பிரட் மார்ஷல் நுண்ணியல் பொருளியலில் தந்தை என அழைக்கப்படுகிறார். | J.M. கின்ஸ் பேரியல் பொருளியலில் தந்தை என அழைக்கப்படுகிறார். |
85.
பொருளாதார நடவடிக்கைகள் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகியவைகளாகும்.
நுகர்வு:
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
உற்பத்தி:
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
பரிமாற்றம்:
பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
பகிர்வு:
உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards