11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
ஊரக பொருளாதாரம்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
“இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்” இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
ஆடம் ஸ்மித்
காந்தி
அமர்தியா சென்
சர் மால்கம் டார்லிங்
2.
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?
1965
1970
1975
1980
3.
ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக
வேளாண்மை சாரா வேலையின்மை
அதிக வேலை நிலை
குறைந்த பணவீக்க வீதம்
அதிக முதலீடு
4.
ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு
2100
2200
2300
2400
5.
ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது
மொசமான தகவல் தொடர்பு
சிறிய அளவு நில உடைமை
ஊரக ஏழ்மை
மோசமான வங்கி செயல்பாடுகள்
6.
எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது ________
பஞ்சாயத்து
வருவாய் கிராமம்
நகரம்
நகராட்சி
7.
ஊரக சாலைகள் பற்றி எழுதுக.
8.
ஊரக மின் மயமாக்கல்: வரையறு.
9.
குடிசை தொழில் வரையறு.
10.
மறைமுக வேலையின்மை என்றால் என்ன?
11.
ஊரக ஏழ்மை – வரையறு.
12.
ஊரக பொருளாதாரம் – வரையறு.
13.
சிறிய அலகு முன்னேற்றம் பற்றி எழுதுக.
14.
SHG யின் பண்புகளைக் கூறுக
15.
ஊரக வறுமையை நீக்குவதற்குகான வழிமுறைகளை கூறுக
16.
ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?
17.
ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.
18.
ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.
1.
(d)
சர் மால்கம் டார்லிங்
2.
(c)
1975
3.
(a)
வேளாண்மை சாரா வேலையின்மை
4.
(d)
2400
5.
(b)
சிறிய அளவு நில உடைமை
6.
(b)
வருவாய் கிராமம்
7.
(i) போக்குவரத்து முறைகளில் சாலை போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
(ii) ஊரக பொருளாதாரத்தில் ஊரக சாலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
(iii) இது கிராமங்களை பிற நகர்புற மையங்களோடு இணைக்கிறது.
8.
ஊரக மின்மயமாக்கல் என்பது ஊரக பகுதிகளுக்கு மின் வசதியை ஏற்படுத்தி தருவதாகும்.
9.
பொதுவாக குடிசைத் தொழில்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளன. இதன் மூலம் ஊரக மக்கள் முழுநேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.
10.
தகுதிக்கு குறைந்த வேலையில் ஈடுபடுதல், உபரியான வேலையாட்கள் நியமிக்கபடுதல், வேலையிலிருந்து சிலரை நீக்கினாலும் உற்பத்தியின் அளவு குறையாது ஏனெனில் அவர்களின் இறுதிநிலை உற்பத்தித்திறன் ஒன்றுமில்லை இவ்வகையான சூழலையே மறைமுக வேலையின்மை என்கிறோம்.
11.
(i) கிராமங்களில் காணப்படும் வறுமையை ஊரக ஏழ்மை எனலாம்.
(ii) ஏழ்மை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலையாகும்.
12.
(i) ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும்.
(ii) ஊரக பொருளாதாரம் என்பது கிராமங்களையும் ஊரக சமுதாய மற்றும் கிராமங்களில் வாழும் மக்களையும் குறிக்கும்.
13.
(i) இதுஒரு பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும்.
(ii) இது சிறு, குறு நிதிநிறுவனங்களுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது.
(iii) இது ஏப்ரல் 8, 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
(iv) குறு அலகுகள் வளர்ச்சி மற்றும் மறு நிதியாக்கம் நிறுவனம்.
(v) குறு நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் மறு நிதியாக்கம் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது.
14.
(i) சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள்.
(ii) சுய உதவிக் குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களை கொண்டவை.
(iii) SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்டச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளன.
(iv) தொடர்ச்சியாக கூட்டம் நடத்துதல் மற்றும் முறையாக பதிவேடுகளை பராமரித்தல் சேமிப்பு மற்றும் கடன் வழங்குதல் ஆகிய ஒழுங்கினை அவை கடைபிடிக்கின்றன.
(v) SHG க்கள் முழு பங்கேற்பினை அளித்து அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுடன் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்கின்றனர்.
15.
(i) ஊரக வேலையின்மையும் ஊரக வறுமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் மூலமாக வறுமையை ஒழிக்கலாம்.
(ii) வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தல் மற்றும் தொகுக்கப்படுதல்.
(iii) திட்டங்கள் மற்றும் செயல்படுத்தல் விரிவாக்கம் செய்தல் ஆகியன நடைபெறுகின்றன.
(v) வேலையின்மை, பிச்சையெடுத்தல் மற்றும் குடிசைகளில் வாழ்வோர் போன்ற நிலைகள் நீக்கப்பட வேண்டும்.
(vi) வேலை வாய்ப்பின்மை ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது ஆகையால் ஊரக வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
16.
(i) இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மற்றும் முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
(ii) பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
(iii) நகர்புறத்திற்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
(iv) ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நாற்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
(v) வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம் ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலை வாய்ப்புகளையம் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க முடியும்.
(vi) கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பு தேடி திறமைசாலிகள் இடம் பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிபெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
(vii) ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
(viii) கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினைகுறைக்க முடியும்.
17.
ஊரகக் கடன் சுமை:
ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஊரகக் கடன்களுக்கான காரணங்கள்:
விவசாயிகளின் ஏழ்மை நிலை:
வறுமைக்கொடும் சுழலானது நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்ப விழாக்களுக்காகவும், விவசாயிகளின் கடன் பெறத் தூண்டுகிறது.
பருவமழை பொய்த்தல்:
(i) அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது.
(ii) விவசாயம் எப்போதும் சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை.
வழக்குகள்:
(i) நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதிக கடன் பெறுகிறார்கள்.
(ii) கல்வியறிவின்மையாலும், அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகிறது.
வட்டிக்கு கடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்:
உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் (ம) அசலுடன் வட்டியை சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உளது.
18.

ஊரக பொருளாதாரப் பிரச்சனைகள்:
(1) மக்கள் தொடர்புடைய பிரச்சனை:
எழுத்தறிவின்மை போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றை சார்ந்து வாழ்க்கைத்தரம் அமைத்தல் ஆகியன ஊரக மக்களின் பிரச்சனைகள்.
(2) வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள்:
(i) எதிர்பார்த்தல் அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை.
(ii) உள்ளீடுகள் கிடைக்கப்பெறாமை.
(iii) அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு.
(iv) பற்றாக்குறையாக பணியாளர்கள் மற்றும் சேவைகள்.
(v) பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை.
(vi) நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்.
(vii) பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல்.
(viii) குறைவான அரசு முதலீடு மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம்செய்ய இயலாமை.
(3) உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள்:
ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, நிறுவனங்கள், தகவல் தொடர்பு, மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, பண்டக சேமிப்பு வசதி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.
(4) பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள்:
அதிகச் செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை, நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள் குறைவான வருமானம், கடன் சுமை, நிலவுடைமை மற்றும் சொத்துகளில் உள்ள ஏற்றத் தாழ்வு ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளாக உளது.
(5) தலைமை சார்ந்த பிரச்சனைகள்:
(i) ஊரக பகுதிகளில் தலைமை தொடர்பான பிரச்சனைகள் உள்ளன.
(ii) தகுதியற்ற மற்றும் செயல்படாத நபர்கள் தலைமை பொறுப்பை வகிப்பு போன்றவை ஆகும்.
(6) நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள்:
(i) அரசியல் தலையீடு ஊக்கமின்மை, ஆர்வமின்மை, குறைந்த கூலி, வரவு செலவுகளை சரிவர முறையாக பயன்படுத்தாமை.
(ii) கிராமப்புற வறுமை கிராமப்புற வேலையின்மை, கிராமப்புற தொழிற்சாலைகள், சிறு நிதி, ஊரக நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards