11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
+1 Economics Interior Questions
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?
2.
இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.
3.
B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக
4.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
5.
மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.
6.
மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.
7.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
8.
ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.
9.
ஊரக முன்னேற்றத்திற்கான தேவையை பற்றி விளக்குக.
10.
ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.
11.
நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.
12.
அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?
13.
உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.
14.
மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.
15.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
16.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.
17.
இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.
18.
தமிழ்நாட்டின் வங்கியியல் வளர்ச்சி பற்றி விவரி.
19.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
20.
முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை?
21.
பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி.
22.
பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக.
23.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
24.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
25.
சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?
1.
1.நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
2.இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மின்சாரம் இன்றி நம்மால் வாழ்வது சிரமம்.
3.ஆற்றல் இரண்டு வகைப்படும்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது.அவை தீர்ந்துவிட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது.
2.மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும்.
3.உதாரணம் :நிலக்கரி, பெட்ரோலியம்,இயற்கை வாயு மற்றும் பல.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டு பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை.
2.ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன.அவை,
1.சூரிய சக்தி.
2.காற்று சக்தி.
3.அலைகள் சக்தி
4.புவி வெப்ப சக்தி
5.உயிரி எரிவாயு சக்தி
3.சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு.
4.காரணம் இவ்வளங்கள் கொண்டு முன்காலங்களில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட வில்லை அல்லது வழக்கத்தில் இல்லை எனலாம்.
2.
1.அதிக மக்கள் தொகை:
1.மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது.
2.மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது.
3.மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000பேருக்கு 1.7 என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது.
4.ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.
2.ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை:
1.இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு நிலை நீடிக்கிறது.
2.அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
3.சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது.
3.அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும் அத்தியாவசியப் பண்டங்களும் விலை தொடர்ந்து உயர்கிறது.
4.உள் கட்டமைப்பு பலவீனம்:
கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து,பண்டங்கள், பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.
5.வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை:
அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது.
6.பழமையான தொழில் நுட்பம்:
வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும் வழக்கொழிந்ததாகவும் உள்ளது.
3.
B.R.அம்பேத்கர் அவருடைய பொருளாதார கருத்துக்கள் நான்கு தலைப்புகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.நிதிப் பொருளாதாரம்.
2.வேளாண்மை பொருளாதாரம்.
3.மதப் பொருளாதாரம்.
4.சமதர்ம பொருளாதாரம்.
1.நிதிப் பொருளாதாரம்:
1.அம்பேத்கருடைய பெரும்பாலான நூல்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த 1913-1923 வரையிலான காலத்தில் எழுதப்பட்டவை.
2.நிதிப் பொருளாதாரம் குறித்து நிறைய எழுதி இருக்கிறார் மாகாண நிதி பெருக்கத்தை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்.
1.ஒப்படைப்பு வரவு செலவுத் திட்டம் (1871-72முதல் 1876-77)முடிய.
2.ஒதுக்கீடு வரவு செலவு திட்டம் (1877-78முதல் 1881-82முடிய )
3.வருவாய் பங்கீடு வரவு செலவுத் திட்டம் (1882-83 முதல் 1920-21முடிய)
2.வேளாண்மை பொருளாதாரம்:
1. 1918ல் அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள் என்ற கட்டுரையை எழுதினார்."
2.ஆடம்ஸ்மித்தின் நாடுகளில் செல்பத்தை போல் நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை கூறுகிறார்.
3.மதப் பொருளாதாரம்:
1.சமூக முன்னேற்றத்திற்கு சாதி மிகப் பெரிய தடையாக இருப்பதாக அம்பேத்கர் நம்பினார்.
2.சாதி முறை அரசியல் ஜனநாயகத்தை விடவும் சமூக ஜனநாயகத்தை அமைப்பதில் தோல்வியடைந்திருக்கிறது என்று அவர் கூறகிறார்.
4. சமதர்ம பொருளாதாரம்:
1.அம்பேத்கர் ஒரு சமதர்மவாதி சமூக நீதியின் பாதுகாவலர் அவர் அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்றும் நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2.அம்பேத்கர் மிகச் சிறந்த பொருளியல் அறிஞர் என்பதில் ஐயமில்லை.இருப்பினும் சட்டம் மற்றும் அரசியல் அவருடைய அளப்பரிய பங்களிப்பு அவருடைய பொருளாதார பங்களிப்பை குறைத்து காட்டிவிட்டன.
3.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி.
4.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
5.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்த செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AFC=சராசரி மாறாச் செலவு
AC=சராசரி செலவு
\(\boxed{AC={TC\over Q}}\)
2. TC = 100 + Q3-மொத்த செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது.அவை மொத்த மாறாச் செலவு மற்றும் மொத்த மாறும் செலவு ஆகும்.
3.மொத்த மாறாச் செலவு (TFC)உற்பத்தி அதிகரித்தாலும்,குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே,
TC= 1O+Q3.
4.இங்கு மொத்த மாறாச் செலவு 100 ஆகும்.
TC 100 + Q3 Q = 10 எனில்
TC = 100 + (10)3 (10 x 10 x 10 = 1000)
= 100 + 1000
\(\boxed {\therefore TC=1100}\)மொத்த செலவு
TFC = 100, TC = 1100 எனில்
TVC= ?
TC= TFC+TVC
1100= 100 + TVC
1100 -100= TVC
\(\boxed {\therefore TVC=1000}\)மொத்த மாறும் செலவு
TVC =1000, TC = 1100, TFC = 100, Q = 10 எனில்
\(AFC={TFC\over Q}\)

\(\boxed {\therefore AFC=10}\)சராசரி மாறாச் செலவு
\(AVC={TVC\over Q}\)

\(\boxed {\therefore AVC=100}\) சராசரி மாறும் செலவு
\(AC={TC\over Q}\) (அ) AC=AFC+AVC
(அ) 110= 10+ 100
\( {\therefore AC=110}\) 110=110
AVC=சராசரி மாறும் செலவு =100
AFC=சராசரி மாறாச் செலவு =10
AC=சராசரி செலவு =110
TVC=மொத்த மாறும் செலவு =1000
TFC=மொத்த மாறாச் செலவு=100
TC=மொத்த செலவு=1100 ஆகும்.
6.
1.மொத்த வருவாய் (Total Revenue - TR) என்பது, ஒரு நிறுவனம் தன் உற்பத்தி பண்டங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் மொத்த வருமானமே, மொத்த வருவாய் எனப்படுகிறது.
2.விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையை அப்பண்டத்தின் விலையால் பெருக்கிக் கிடைப்பது மொத்த வருவாய் ஆகும்.
3.\(\boxed{TR = P \times Q}\) இதில் TR -மொத்த வருவாய்,P-விலை, Q-விற்பனை அளவு.
4.உதாரணம்: ஒரு நிறுவனம் 100 கைபேசியை 500 வீதம் விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50000/-ஆகும்.
5.TR= 500 x 100
\(\boxed{\therefore TR=50000}\)
மாறாத விலையில் மொத்த வருவாய்
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 5 | 5 |
| 2 | 5 | 10 |
| 3 | 5 | 15 |
| 4 | 5 | 20 |
| 5 | 5 | 25 |
| 6 | 5 | 30 |

நிலையான விலை:
விலை Rs.5ஆக உள்ளபோது மொத்த வருவாய் போக்கினை மேற்கண்ட வரைபடம் விளக்குகிறது.
விலை குறைவு:
விலை குறையும் போது பண்டத்தின் விற்பனை அதிகரிக்கும் மொத்த வருவாயின் போக்கினை கீழ்கண்ட வரைபடம் விளக்குகிறது.
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 10 | 10 |
| 2 | 9 | 18 |
| 3 | 8 | 24 |
| 4 | 7 | 28 |
| 5 | 6 | 30 |
| 6 | 5 | 30 |
| 7 | 4 | 28 |
| 8 | 3 | 24 |
| 9 | 2 | 18 |
| 10 | 1 | 10 |

7.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
8.
(1) நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:
(i) ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகிறது.
(ii) கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு செய்கின்றனர்.
(2) பண்ணை சாராத தொழில்களில் வேலை வாய்ப்பின்மை:
அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
(3) பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.
(4) பணவீக்கம்:
பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்த ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
(5) குறைந்த உற்பத்தித் திறன்:
ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
(6) வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை:
பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால் சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளது.
(7) குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
(8) பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்:
இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
(9) சமூக குறைபாடுகள்:
சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
9.
(i) விவசாயம் மற்றும் விவசாயம் சாரா துறைகளில் ஊரக உண்மை வருமானம் உருவாக்கும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.
(ii) வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருமானம் உண்டாக்குதல், ஊரக தொழில் மயமாக்குதல், உடல்நல மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படுகின்றன.
(iii) கல்வி வசதி, வீடு வசதி மற்றும் பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
(iv) அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூகத் தேவைத் திட்டங்கள் மேம்படுத்துவதற்கு முதலீடுகளை அதிகரிக்க செய்தல் வேண்டும்.
(v) தற்போதுள்ள பிரச்சனையை தீர்க்க ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் தீட்டுவதுடன் அதன் மூலம் நிலையான வளர்ச்சியினை பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும்.
(vi) வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் போது ஊரக பகுதி மக்களின் பிரச்சனைகளை அறிந்த நபர்களையோ அல்லது தலைவர்களையோ மற்றும் தொலைநோக்கு பார்வையுள்ள சிந்தனையாளர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.
10.
செல்வ இலக்கணம்:
1. ஆடம்ஸ்மித்(1723-1790)"நாடுகளின் செல்வத்தின் இயல்பும்,காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு"(1776)என்ற தனது நூலில் "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்."
2.அவர் ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை விளக்குகின்றார்.
3.தனி மனிதர்கள் தங்கள் சுய இலாபத்தை முன்னேற்ற விரும்பி செயல்படும் போது,அவர்களை திரைக்குப் பின்னாலிருந்து 'ஒரு புலனாக உந்து சக்தி"வழி நடத்துகிறது என்கிறார்.
4. ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக ஸ்மித் கூறகிறார்.
5.உற்பத்தி அளவினை அதிகரிக்க "வேலை பகுப்பு முறையை" அறிமுகப்படுத்துவதை ஆதரிக்கின்றார்.
6.சமுதாயம் மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்க உதவுகின்றன.
திறனாய்வு:
1.ஸ்மித்தைப் பொறுத்தவரை பொருளியல் என்பது 'செல்வத்தைத் திரட்டுதல்' மற்றும் 'செல்வத்தைச் செலவிடுதல்' சார்ந்த நடவடிக்கைகளாகும்.
2.பொருட்சார் செல்வம் என்ற ஒன்றிற்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் தரப்பட்டு முக்கிய பகுதியான 'மனித நலம்' அவரால் புறக்கணிக்கப்படுள்ளது.
3.மதம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் மேலோங்கியிருந்த காலக் கட்டத்தில் ஸ்மித் தனது வரையறையை வழங்கியுள்ளார்
4.இரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர் நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தை கற்றுதருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுவதால், பொருளியலை 'ஓர் இருண்ட அறிவியல்'எனக் கூறியுள்ளார்.
11.
நிலையான சமநிலை:
1. சமநிலை என்பது மாற்றமில்லா நிலையை அடைவது என்று ஸ்டிக்லர் குறிப்பிடுகிறார்.
2. நுகர்வோர் உச்ச மனநிலைவை பெருகின்றபோது சமநிலையடைகிறார்.
3.உற்பத்தியாளர் உச்ச இலாபம் பெறுகின்ற போது சமநிலையடைகிறார்.
4.உற்பத்தி காரணிகள் முழு வேலை வாய்ப்பையும்,உச்ச வெகுமதியையும் பெறும் போது சமநிலை அடைகின்றன.
5.எனவே, நிலையான சமநிலை என்பது நிலையான வேலை, அளவு,வருமானம்,தொழில்நுட்பம்,மக்கள் தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

வரைபட விளக்கம்:
1. X- அச்சு தேவை மற்றும் அளிப்பின் அளவையும்,
Y- அச்சு விலையையும் குறிக்கிறது.
2. DD-என்பது கீழ்நோக்கி சரியும் தேவைக்கோடு மற்றும்
SS-என்பது மேல்நோக்கி செல்லும் அளிப்பு கோடு ஆகும்.
3.OP-என்பது சமநிலை விலை.
4.OM-என்பது சமநிலை அளவு ஆகும்.
5.புள்ளி-E-ல் தேவை கோடும்,அளிப்புக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கிறது.
6.புள்ளி-E-ல் தேவையும், அளிப்பும் சமமாகி சமநிலை அடைகிறது.
12.
அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும்:
1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1)
2. பொருளின் விலையின் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும்போது பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும்.
2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1)
2. விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீதம் மாற்றமே ஏற்படும்.
3.குறைவான நெகிழ்ச்சி அளிப்பு:
1.அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே
அமையும் (Es<1)
2.விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தை விடக்குறைவாக இருக்கும்.
4.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி புஜ்ஜிசியத்திற்கு சமமாக உள்ளது (Es=0)
2.விலையில் ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5.முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு:
1.அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (Es=\(\alpha\))
2. விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை ஏற்படுத்தும்.





13.
1. உழைப்பு அழியக்கூடியது.
2.உழைப்பை "உழைப்பாளரிடமிருந்து" பிரிக்க இயலாது.
3. உழைப்பு இடங்களுக்கிடையேயும், தொழில்களுக்கிடையேயும் மெதுவாக நகரக்கூடியது.
4. உழைப்பு இடம் பெயரக்கூடியது.
5.உழைப்பு செயல் உற்பத்திக் காரணியாகும்.
6. உழைப்பு என்பது பல வகைப்படும். இது உடலுழைப்பு மற்றும் அறிவு திறன் சார்ந்த உழைப்பு (ஆசிரியர்)
7.உழைப்பாளர் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் உள்ளார்.
8. உழைப்பின் அலகுகள் பலவகைப்பட்டவை.
9. கூலியானது உழைப்பாளரின் அளிப்பையும் திறனையும் பொருத்து அமையும்.
14.
(i) இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது.
(ii) இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு , கல்வித் குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது.
(1) வாழ்நாள் (ஆயுட்காலம் ) என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது.
(2) கல்வி அடைவுகள் .
(3) வாழ்க்கைத் தரமானது வாங்கும் சக்தியின் அடிப்படையிலானா தனிநபர் வருமானத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
(iii) மனித மேம்பாட்டுக் குறியிட்டைக் கணக்கிடுவதற்கு முன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் ஒவ்வொரு குறியீட்டிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
15.
(i)ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது.
(ii) ஆங்கில பொருளாதார கொள்கைகள் இந்தியாவின் மூலதன ஆக்கத்தை குன்றச் செய்து தடுத்து நிறுத்தியது.
(iii) நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயரின் மூலதன முன்னேற்றத்திற்கும் நிதியுதவி செய்தன
(iv) இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் வேளாண்மையை சார்ந்து இருந்தபோது இந்திய வேளாண்மைத் தொழில் தேக்கமடைந்து நலிவுற்றது.
(v) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் நவீன தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எவ்வித பங்களிப்பும் வழங்காமல் இந்தியாவின் கைவினைத் தொழில் நிறுவனங்கள் சரிவடைவதற்கும் காரணமாக இருந்தது.
(vi) ஆங்கில காலனி ஆதிக்கத்தால் தோட்டக்கலை, சுரங்கங்கள் , சணல் ஆலைகள் , வங்கிகள் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
16.
19 ஜூலை 1969 :
(1) அலகாபாத் வங்கி
(2) பாங்க் ஆப் பரோடா
(3) பாங்க் ஆப் மகாராஷ்டிரா
(4) கனரா வங்கி
(5) மத்திய வங்கி
(6) தேனா வங்கி
(7) இந்தியன் வங்கி
(8) இந்தியன் ஓவர்சிஸ் வங்கி
(9) பஞ்சாப் நேஷனல் வங்கி
(10) சிண்டிகேட் வங்கி
(11) யூனியன் வங்கி
(12) யுனைடெட் வங்கி
(13) யுகோ வங்கி
(14) பாங்க் ஆப் இந்தியா
(ii) 15 ஏப்ரல் 1980 :
(1) ஆந்திரா வங்கி
(2) கார்பரேஷன் வங்கி
(3) நியு பாங்க் ஆப் இந்தியா
(4) ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
(5) பஞ்சாப் - சிந்து வங்கி
(6) விஜயா வங்கி
17.
நிறைகுறைப் போட்டியில் இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு:
நிறைகுறைப் போட்டியில் காரணியின் விலை தீர்மானம் விளக்கப்பட்டுள்ளது. இதனை கீழ்க்கண்ட வரைபடம் விளக்குகிறது.
வரைபட விளக்கம்:
(i) AFC என்பது காரணியின் சராசரி செலவுக்கோடு, காரணிகளை வழங்கப்பட்ட விலையை குறிக்கிறது.
(ii) AFC உயரும்போது MFC ஆனது AFC க்கு மேலே மேல்நோக்கிச் செல்லும் கோடாக அமைந்துள்ளது.
(iii) MFC என்பது காரணிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிநிலைச் செலவை குறிக்கிறது.
(iv) Q என்ற புள்ளியில் MFC யும், MRP யும் சமநிலையில் உள்ளது.
(v) இப்புள்ளியில் உற்பத்தியாளர் அதிகபட்ச இலாபத்தைப் பெறுகிறார்.
(vi) காரணிக்கு செய்த சராசரி செலவு NR மற்றும் சராசரி வருவாய் NQ ஆகும்.
(vii) ஒவ்வொரு அலகு காரணியும் RQ அளவுக்கு சுரண்டப்படுகிறது.
(viii) மொத்த காரணிகளின் எண்ணிக்கை ON க்கு சமம்.
(ix) உற்பத்தியாளர் காரணியை மொத்தமாக சுரண்டிய அளவு.
(கோடிடப்பட்ட பகுதி)
(x) எனவே நிறைகுறைப் போட்டியில் சமநிலையில் உற்பத்திக் காரணி சுரண்டப்படுகிறது.
18.
(i) தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கித் சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 52% பகுக்களுடன் 5,337 கிளைகள் பணியாற்றுகின்றன.
(ii) தனியார் வணிக வங்கிகள் 30% (3,060 கிளைகள் ) பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 13% (1,364 கிளைகள்) ஆகும்.
(iii) வட்டார கிராமிய வங்கிகள் 5% (537 கிளைகள்) மற்றும் 2 அயல்நாட்டு வணிக வங்கிகளும் சேவையில் உள்ளன.
(iv) தமிழ்நாடு வங்கிகளின் மொத்த வைப்பு நிதியானது ஒவ்வொரு ஆண்டும் 14.32% உயர்கிறது.
கடன் வழங்கல்:
(i) முதன்மைத் துறைமுகங்களுக்கான கடன் தொகையானது 45.5%
(ii) வேளாண்மைத் துறைகளுக்கான கடன் வழங்கல் 18%
(iii) தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் இந்தியாவிலேயே அதிககடன் வைப்பு வீதமாக 119.15% விழுக்காட்டைக் கொண்டுள்ளது.
(v) இந்திய அளவில் இதன் வீதம் 77.5% மட்டுமே உள்ளது.
19.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
20.
வீணாக்கப்பட்ட சக்தி :
(i) வீணாக்கப்பட்ட சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும் உண்மை அளவு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
(ii) நீண்ட காலத்தில் நிறுவனங்கள் குறைந்தளவு சராசரிச் செலவு இருந்தாலும் உத்தம அளவு உற்பத்தி விட வேண்டுமென்றே குறைந்த அளவு உற்பத்தி செய்கின்றன.
(iii) முற்றுரிமைப் போட்டியில் இந்த அளவு சக்தி வீணாக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.
வேலையின்மை:
(i) முற்றுரிமையாளர் போட்டியில் நிறுவனங்கள் உத்தம அளவை விட குறைவாக உற்பத்தி செய்வதால் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை.
(ii) உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தபடுவதில்லை.
(iii) இதனால் மனிதர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது.
விளம்பரம் :
(i) முற்றுரிமை போட்டியில் போட்டியின் காரணத்தினால் விளம்பரத்திற்காக அதிகப் பணம் செலவிடப்படுகிறது.
(ii) வீண் விளம்பரங்களினால் நுகர்வோருக்கு விலை அதிகரிக்கிறது.
(iii) விளம்பரங்களில் உண்மையற்ற தகவல் மூலம் நுகர்வோர் ஏமாற்ற படுவதும் நடக்கிறது.
பல்வேறு விதமான பண்டங்கள்:
முற்றுரிமை போட்டியில் ஒரே பயனுக்கு பல்வேறு விதமான பண்டங்களை அறிமுகப்படுத்துவது மற்றொரு வீண் செலவாகும்.
செயல்திறன் குறைந்த நிறுவனங்கள்:
(i) முற்றுரிமை போட்டியில் சில செயல்திறன் குறைந்த நிறுவனங்கள் தமது இறுதிநிலைச் செலவை விட அதிக விலை வசூலிக்கின்றனர்.
(ii) நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்,ஆனால் நுகர்வோர் பெரும்பாலும் உணர்ச்சி தூண்டுதலால் இத்தகைய நிறுவனப் பொருட்களை வாங்குவதால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
(iii) திறமையான நிறுவனங்கள் நுகர்வோரைக் கவரும் வகையில் விளம்பரம் செய்ய போதிய அளவு செலவு செய்வதில்லை இதனால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
21.
(i) மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகிறது.
(ii) கேரளா கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.
(iii) தமில்நாடானது சுகாதாரம், உயர்கல்வி, சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது.
(iv) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவதாக உள்ளது.
(v) புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
(vi) பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது.
22.
| வ.எண் | இயல்புகள் | நிறைவுப் போட்டி | முற்றுரிமை | முற்றுரிமைப் போட்டி |
|---|---|---|---|---|
| 1. | உற்பத்தியாளர்கள்/விற்பனையாளர்கள் | எண்ணற்றவர்கள் | ஒருவர் மட்டுமே | அதிகம் |
| 2. | உற்பத்தியின் தன்மை | ஓரியல்பானவை முழுமையான பதிலீட்டு பண்டம் உண்டு |
தனித்துவமானவை (பதிலீட்டு பண்டம் இல்லை) |
பல்வேறு விதமான பண்டம் (நெருங்கிய பதிலீட்டு பண்டம்) |
| 3. | விலை மீது கட்டுப்பாடு | அங்காடி விலையை ஏற்பவர்கள் | விலையை நிர்ணயிப்பவர் | முத்திரை அங்கீகாரம் மூலம் ஓரளவு கட்டுப்பாடு. |
| 4. | உட்புகுதல் வெளியேறுதல் | தடையற்றது | தடையுள்ளது | எளிது. |
| 5. | இலாபம் | குறுகிய காலம் - மிகை இலாபம் நீண்ட காலம்-இயல்பு இலாபம். |
முற்றுரிமை இலாபம் | குறுகிய காலம் - அதிக இலாபம் நீண்ட காலம்-இயல்பு இலாபம். |
| 6. | அங்காடி பற்றி அறிதல் | முழுவதும் | முழுவதும் | எளிது |
| 7. | AR கோடு | பட்டைக்கோடு X - அச்சிற்கு இணையானது | கீழ் நோக்கியது.நெகிழ்ச்சி குறைவு | கீழ்நோக்கியது.அதிக நெகிழ்ச்சி உடையது. |
| 8. | விற்பனை அளவு | அதிகம் | நிறைவு போட்டி ஒப்பிடுகையில் குறைவு | கணிசம் |
| 9. | விலை | ஒரே மாதிரி விலை மற்றும் குறைவு | அதிகம் | மிதமான மற்றும் மாறுபட்ட விலைகள். |
| 10. | அங்காடி சக்தி | இல்லை | அதிகம் | சிறிது. |
23.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
24.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
25.
இடுபொருள்களின் செலவு உயர்வு:
(i) விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும்.
(ii) தாராள மயமாக்குவதற்கு முன் மாநில அரசாங்கத்திடமிருந்தே விவசாயிகள் விதைகளை வாங்கின.
(iii) தாராள மயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்துவிடப்பட்டன.
(iv) கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு, மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன.
(v) இதன் விளைவாக, விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகின.
வேளாண்மை மானியக் குறைப்பு:
தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உரமானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன. மின் கட்டணங்களும் அதிகரித்தன ஆனால் விவசாயப் பொருட்களின் விலை உயரவில்லை.
இறக்குமதி சுங்க வரி குறைப்பு:
(i) உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டன.
(ii) மேலும் 1500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டன.
(iii) இதன் விளைவாக, சந்தையில் பொருட்கள் குவிந்து, பருத்தி மற்றும் மிள்கு போன்ற பயிர்களின் விலை சரிந்தது.
கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்:
(i) 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையின் பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை.
(ii) விவசாயிகள் வட்டிக்காரரைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards