11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
Plus One Second Revision Test 2019
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
அல்போன்ஸோ டி அல்புகர்க்
நீனோ டா குன்கா
ஆன்டோனியோ டி நாரான்கா
2.
அக்பரது நிதி நிர்வாகம் ______ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
பாபர்
ஹீமாயூன்
ஷெர்ஷா
இப்ராஹிம் லோடி
3.
முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ________
ரவிதாஸ்
இராமானந்தர்
கபீர்
நாமதேவர்
4.
வாதஸ்யானர் எழுதிய நூல்
மனுஸ்மிருதி
இனடிகா
காமசூத்திரம்
அர்த்தசாஸ்திரம்
5.
விஜயநகர அரசின் அரசு முத்திரை _______
பன்றி
புலி
மீன்
வில்
6.
|மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________
பகல்
இரவு
மாலை
பகல் மற்றும் இரவு
7.
ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
பிந்து சாரர்
பிம்பி சாரர்
சந்திர குப்தர்
அஜாகத் சத்ரு
8.
நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______
காஷ்மீர்
வைசாலி
பாடலிபுத்திரம்
ராஜகிருஹம்
9.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.
சார்லஸ் மேசன்
அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ்
சர் ஜான் மார்ஷ்ல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
10.
சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------
மொக
ருத்ரதாமன்
அஸிஸ்
யசோவர்மன்
11.
12.
_________________ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்
28.கி.கி
27கி.கி
32கி.கி
72கி.கி
13.
கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி
விஷயம் - ராஷ்ட்டிரகூடர்
நம்மாழ்வார் - குருகூர்
14.
15.
16.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
17.
மெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது
இண்டிகா
முத்ராராட்சசம்
அஷ்டத்யாயி
அர்த்தசாஸ்திரம்
18.
____________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
இரும்பு
வெண்கலம்
செம்பு
பித்தளை
19.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
பிராமணங்கள்
சங்கிதைகள்
ஆரண்யகங்கள்
உபநிடதங்கள்
20.
________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
க்யூனிபார்ம்
ஹைரோக்ளைபிக்ஸ்
தேவநாகரி
கரோஷ்டி
21.
நாயக்க அரசுகள் யாவை ? அவை நிறுவப்பட காரணம் என்ன ?
22.
இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத் திகழ்ந்தார்?
23.
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
24.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
25.
”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.
26.
நாற்பதின்மர் அமைப்பு
27.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
28.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
29.
30.
ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
31.
பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
32.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
33.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
34.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?
35.
"வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.
36.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
37.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.
38.
சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன, விவசாய நிர்வாகத் திட்டங்கள் அதிக வருமானத்துக்கு வழிவகுத்தன – ஆராய்ந்து எழுதுக
39.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
40.
தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக
41.
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?
42.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
43.
'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.
44.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
45.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
46.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
47.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
48.
எம்.ஜி. ரானடே
49.
தாராஷூகோ.
50.
சார்லஸ் உட் அறிக்கை
51.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக
52.
டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.
53.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
54.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்.
1.
(a)
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
2.
(c)
ஷெர்ஷா
3.
(d)
நாமதேவர்
4.
(c)
காமசூத்திரம்
5.
(a)
பன்றி
6.
(b)
இரவு
7.
(b)
பிம்பி சாரர்
8.
(a)
காஷ்மீர்
9.
(c)
சர் ஜான் மார்ஷ்ல்
10.
(b)
ருத்ரதாமன்
11.
(a)
12.
(a)
28.கி.கி
13.
(a)
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
14.
(c)
15.
(d)
16.
(a)
ஆந்திரா-கர்நாடகா
17.
(a)
இண்டிகா
18.
(a)
இரும்பு
19.
(b)
சங்கிதைகள்
20.
(a)
க்யூனிபார்ம்
21.
1. விஜயநகர ஆட்சியின்போது தமிழகப் பகுதியில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
2.இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் மனித ஆற்றலையும் (இராணுவ வீரர்களை) திரட்டிக் கொடுப்பதுதான்.
22.
1.சரபோஜி சமய பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803 ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் முதலாவது நவீனப் பொது பள்ளிகளை நிறுவினார்.
2.ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு என தஞ்சாவூர் மற்றும் இதர அண்டை இடங்களில் இலவச தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை நிறுவியது சரபோஜியின் மிக முக்கியமான முன் முயற்சியாகும்.
3.மேன்மக்கள், வேத அறிஞ்ர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆகிய அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
23.
1. வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்த வர்த்தகம்.
2. பாபர் செல்ல விரும்பிய இடத்தைப் பற்றிய (இந்தியா) தகவல்களை வழங்கியது.
3. அவரின் முன்னோர் தைமூர் செய்ததை மீண்டும் செய்ய வேண்டும் என எண்ணினார்.
4. தில்லிசுல்தான் அரசியல் ரீதியாக வீழ்ச்சியுறுவதை கண்ட பாபர் இந்தியாவில் மீது படையெடுக்க தீர்மானித்தார்.
24.
(i) இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
(ii) கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக் கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர்.
(iii) சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்து விஜய நகரத்திற்கும், இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர்.
25.
i) இந்தோ - கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர். (சுமார் பொ.மு.ஆ. 165/ 145-130) நாட்டின் வடமேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாக தெரிகிறது.
ii) அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரபிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
26.
(i) டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
(ii) இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
(iii) கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
(iv) வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
27.
(i) பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
(ii) முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
(iii) பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜீத வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
(iv) போரில் பல்லவ வெற்றிபெற்றார்
v) சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றிபெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
28.
1. பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
2. சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடயாளத்தைப் பராபரிப்பதற்காக ஐந்து கிராமனைகளை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
3. அவரது ஆட்சியில் நாளாந்த பௌத்த மதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
29.
30.
ஹரப்பா நாகரீகம் பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
1. தொடக்ககால ஹரப்பா பொ.ஆ.மு.3000-2600
2. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600-1900
3. பிற்கால ஹரப்பா பொ.ஆ.மு. 1900-1700
ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
31.
ஸ்தவிரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பெளத்தத்தின் முக்கியமான பிரிவுகளை உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம். மஹாயானம் என பெளத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம்:
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பெளத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த 'பால' வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியில் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம் , பீகார் பகுதியில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பெளத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.
32.
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளாமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே.
தொல்பொருள்:
1. தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
2. அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
3. துரைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
4. ஆந்திரா - கர்நாடகப் பகிதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.
நாணயச் சான்றுகள்:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்து.
33.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
34.
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார்.
2.மரிய தேரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகிதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தேரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும்களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
5.போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
6. ஆனால் பார்னெட் என்பவரின் தலைமையிலான ஆங்கிலக் கடற்படை இந்தியக் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
7. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
35.
1.ஷெர்ஷா தனது அரசை மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார்.
2. நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார்.
3. நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு எவ்வாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
4. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
5. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வாரியாக வசூலிக்கப்பட்டது.
6. ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார்.
7. வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார்.
வணிகமும், வர்த்தகமும்:
1. வணிகத்தையும் வர்க்கத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பராமரித்தார்.
2. பழைய சாலைகள் புதுப்பிக்கபட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன.
3. அனைத்துச் சாலைகளிலும் 'சராய்' எனப்படும் சாத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப் பட்டன.
4. இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்தரவாதம் அளித்தன.
5. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.
6. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.
7. மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதிநிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும்.
36.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
37.
1.பாலாஜி விஸ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720-ல் மன்னர் சா ஹீவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
2. ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ராஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார்.
3.முகலாயர்களின் கட்டப்பட்டிலிருந்து புந்தேல்கண்ட் பகுதியை அவர் விடுவித்தார். அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது.
4.பேஷ்வாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731-ல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டார்.
5. தலைமைத் தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக் கொண்டார்.
6.தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738 ல் போர்த்துகீசியரிடமிருந்து கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
7.இச் சமயத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப் பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையை பெற்றார்கள்.
38.
சோழர் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சிகளில் ஒன்று வேளாண் விரிவாக்கம் மற்றும் நீர் பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகும்.
1. வேளாண் விரிவாக்கம்
2. நில வருவாய் மற்றும் நில அளவை முறை
3. பாசன வசதிகளை மேம்படுத்துதல்
4. நீர் மேலாண்மை
இவற்றின் சிறப்பான செயல்பாடுகள் அரசின் அதிக வருமானத்திற்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதைக் காண்போம்.
வேளாண் விரிவாக்கம்:
1. மக்கள் பெரும்பாலும் ஆறுகள் நிறைந்த பகுதிகளில் குடி பெயர்ந்தனர். ஆறுகள், நீர்நிலைகள் இல்லாத இடங்களில் குளம், கிணறு, கால்வாய் போன்ற நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
2. இத்தகைய விரிவாக்கம் உணவு, தானிய உற்பத்தியில் உபரி நிலையை ஏற்படுத்தியது. இதற்கென தனி ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு புறவரித் திணைக்களம் என்ற பெயரில் இயங்கியது. அதன் தலைவர் புறவரி திணைக்கள நாயகம் எனப்பட்டார்.
நில வருவாய்:
1. நில வரியை முறைப்படுத்துவதற்காக சோழர்கள் நிலங்களை வளப்படுத்தி அதன் தரத்திற்கு ஏற்ப வரிகளை விதித்தனர்.
2. நிலத்தின் வளம், உரிமையாளரின் சமூக மதிப்பைப் பொறுத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. ஊர் மட்டத்தில் வரி வசூல் செய்திட 'நாட்டாரும்' நியமிக்கப்பட்டுள்ளனர்.
3. முக்கிய வரிகளாக குடிமை வரி, இறை, காணிகடன், இறைகட்டின காணி கடன், கடமை ஒப்படி, இறை கட்டின நெல்லு போன்றவை விளங்கின.
நில அளவை முறை:
1. நிலத்தை அளவிடுவதற்கு குழி, மா, வெளி, பட்டி பாடகம் போன்ற அலகுகள் பயன்பாட்டில் இருந்தது.
இராஜராஜன் வரி வசூலை முறைப்படுத்தி ஒரு வே (6.5 ஏக்கர்) நிலத்திற்கு 100 தளம் வரியாக வசூல் செய்தனர்.
பாசன வசதிகளை மேம்படுத்துதல்:
1. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஏரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுத்திட 16 மைல் நீளமுள்ள கட்டுமானத்தை எழுப்பி அதற்கு ஜலமய ஜெயஸ்தம்பம் எனப் பெயரிட்டார். முதலாம் இராஜேந்திரன், வடி வாய்க்கால் போன்ற பாசன முறைகள் மூலம் விவசாய நிலங்களுக்கு நீரானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.
(ii) கால்வாய்கள்:
1. உத்தமச் சோழன் வாய்க்கால், பஞ்சவன் மாதேவி வாய்க்கால், கணபதி வாய்க்கால், என பல்வேறு கால்வாய்கள் அரசர், அரசியர் மற்றும் கடவுளின் பெயரில் கட்டப்பட்டது. பாசனத்திற்கு பெரிதும் உதவியது. அனைத்து பாசன ஏரிகளையும் அனைத்து பருவங்களிலும், பராமரிப்பு மற்றும் பராமத்து பணிகள் செய்திட வெட்டி, ஆஞ்சி ஆகிய வடிவங்களில் மக்கள் ஊதியமில்லா உழைப்பு தரும் வழக்கம் இருந்தது.
(iii) நீர் மேலாண்மை:
1. கிணறுகள், ஏரிகளிலிருந்து பெறும் நீரினை முறைப்படுத்திட பல வகையான நீர் உரிமைகள் விளங்கின. நீரைப் பங்கீடு செய்வதற்கு அம்முறைப்படுத்தப்பட்டு குமிழ் (மதகு) தலைவாய் (தலையிடை) வழியாக திறந்து விடப்பட்டது, இதனை தலைவாயர் தலைவாய்ச் சான்றோர், ஏரி அரையர்கள் எனப்படும் சிறப்புக் குழுக்கள் நிர்வகித்தனர்.
2. நீராதாரத்தினை ஆக்கிரமித்தல் அரசுக்கு எதிரான செயல்கள் என அரசு அணைகள் எச்சரித்தன குளங்கள் 'குளத்தார்' எனும் மக்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
3. இவ்வாறு சோழ அரசு பல்வேறு நீர்பாசனத் திட்டங்களையும், புதிய ஏரிகள் மற்றும் கால்வாய்கள் உருவாக்கி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த நிர்வாக அமைப்பையும் உருவாக்கிய நாட்டின் வருமானம் பெருகிட வழிவகுத்தது.
39.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
40.
அரசும் சமூகமும்:
சுல்தானிய அரசு முறையானதோர் இசுலாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும் கலிபாவின் தலைமையை ஏற்பதாக கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினார்.
நீதிமன்ற தலைவராக:
1. ராணுவத் தலைவர் என்ற வகையில் தலைமைத் தளபதியாக மன்னர் இருந்தனர்.
2. நீதி நிர்வாக தலைவர் என்ற வகையில் மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றமும் அவர்தான். சுல்தான்கள் தங்களை கடவுளின் பிரதிநிதியாகக் கருதினர்.
பேரரசு:
முகமது-பின்-துக்ளக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர காஷ்மீர் முதல் கேரளம் உள்பட இந்தியா முழுவதும் டில்லியின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது.
வாரிசுரிமை:
வாரிசுரிமை வரையறுக்கப்படவில்லை. வாரிசுரிமை போட்டி வழக்கமாக நடந்தது.
வரி:
1. 'இக்தா' உரிமையாளர்கள் வரி வசூலித்தனர். குறிப்பிட்ட சில பகுதிகளை தங்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக் கொண்டனர்.
2. உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. இது விவசாயிகளை கிளர்ச்சி செய்ய வைத்தது.
முக்தி:
மாகாண ஆளுநர்கள் முக்தி எனப்பட்டனர்.
வாயுக்கள்:
1. தொடக்க காலத்தில் துருக்கியர்கள் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர்.
2. இசுலாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, நாகூர், ஷா, மஹதா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டது" என்ற பரணியின் குறிப்பிலிருந்து அறியப்படுகிறது. இது இசுலாமியர்களின் நிர்வாகச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.
41.
ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் - சுவாங் தனது குறிப்புகளில் வட இந்தியாவின் நிலையையே குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்
1. சாதி அமைப்பு முறை
2. பெண்கள் நிலை
3. மக்களின் வாழ்க்கைமுறை
4. உணவுப் பழக்கங்கள்
5. கல்வி
1. சாதி அமைப்பு முறை:
இந்து சமூகத்தில் சாதி முறை வலுவாக காலூன்றியிருந்தது.
யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தில் நான்கு பிரிவினர்கள் தொழில்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தோன்றின.
மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
பல்வேறு சாதி அமைப்பு காணப்பட்ட போதிலும் சமுதாய பிரிவினர்களிடையே மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
2. பெண்கள் நிலை
பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை என யுவான் சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
உடன்கட்டை ஏறும் வழக்கம். (சதி) இருந்திருக்கிறது. பிரபாகரவர்தனரின் மனைவி யசோமதிதேவி தன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.
3. வாழ்க்கைமுறை
மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். பருத்தி பாட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர்.
மெல்லிய ஏக துணிகளை தயாரிக்கும் காலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள் பெண்கள் என இருசாராரும் தங்கம் வெள்ளி அணிகலனை பயன்படுத்தினார்.
மோதிரங்கள், கப்புகள், பதக்கங்கள் அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தினர்.
4. உணவுப் பழக்கங்கள்
இந்தியாவிலும் மரக்கறி உணவுப் பழக்கத்தை கொண்டிருந்ததாக யுவான் - சுவாங் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
உணவு தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
சில நேரங்களில் மீனும் ஆட்டிறைச்சியும் உண்டனர்.
5. கல்வி
மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது.
கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது
வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை
ஒழுக்கமும் அறிவுத் திறனும் கொண்ட சாதுக்களையும் பிட்சுகளையும் மக்கள் பெரிதும் மதித்தனர். யுவான் சுவாங் மேற்கண்டவாறு வட இந்தியாவின் நிலை குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
42.
இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:-
1. சமயப் பிரிவினை:
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பெளத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்:
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பெளத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பெளத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரசு ஆதரவை இழத்தல்:
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பெளத்தம் அரசு ஆதரவை இழந்தது. வேத மதம் அரசு ஆதரவை பெற்றது. பெளத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்:
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினார். இதனால் பெளத்தமதவளர்ச்சி பாதித்தது.
5. ஹீணர்கள் படையெடுப்பு:
ஹீண ஆட்சியாளர்களான தோராமானர் மிகுரகுலர் ஆகியோர் பெளத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் பெளத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு:
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவர ஆதரவாளர்கள். ஆதலால் பெளத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொள்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பெளத்த மதம் காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு:
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பெளத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பெளத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.
43.
1. மனிதர்களின் அறிவாற்றல் திறன்களின் மேம்பட்டத்தன்மையை மேல் பழங்கற்கால மக்களிடம் காணமுடிகிறது.
2. கல்லில் வெட்டுக் கருவிகள் செய்யும் தொழிற் கூடங்கள் இக்கால கட்டத்தில் வளர்ச்சி பெற்றன.
3. கருவிகளுக்கான தொழில் நுட்பத்தில் புதுமையை புகுத்தினர்.
4. கற் கருவிகள், கத்தி, வாள்போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
5. மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
6. இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பய்னபடுத்தப்பட்டன.
44.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
45.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
46.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
47.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
48.
(i) எம்.ஜி.ரானடே அவர்கள் பண்டித ராமபாயின் சமூக சீர்திருத்த இயக்கங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
(ii) ரமாபாய், ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்கள் இணைந்து ஆரியமகிளா சமாஜ் என்ற அமைப்பை நிறுவினர்.
(iii) இதில் 300 பெண்கள் வரை கல்வி கற்றனர்.
(iv) அதேபோல் விதவைகளுக்காக சாரதா சதன் (வீடற்றவர்களுக்கான இல்லம்) என்ற அமைப்பையும் அமைத்தனர்.
(v) இவ்வாறாக, ரானடே அவர்கள் சமூக நீதிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்க்காகவும் அரும்பாடுபட்டார்.
49.
1. தாராஷுகோ ஷாஜகானின் மூத்த மகன் ஆவார்.
2. தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஒளரங்கசீப்பிடம் தோற்றுப்போன தாராஷுகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார்.
3. பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய அவர் இந்து மதத்திற்கும், இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தார்.
4. சம்ஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
50.
(i) சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை 1854 இல் ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும் கல்லூரி படிப்பையும் உள்ளடக்கிய ஒருவிரிவான வரைவாகும்.
(ii) பொதுக்கல்வி துறை துவங்கப்பட்டு மூன்று மாகாண தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
(iii) இதன் தொடர்ச்சியாக 1857 இல் சென்னை பல்கலைக்கழகமும் , பம்பாய் , கல்கத்தா பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டன.
(iv) டல்ஹெள சி தாய் மொழி கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தார்.
51.
(i) சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
(ii) உயர்தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேயகிழவர்' என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
(iii) வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
(iv) இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைகாரகள் உழுகுபடி எனப்பட்டனர்.
(v) அடிமட்ட உழைப்பாளிகளான 'சமூகப்படி' எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.
52.
i) இந்தோ - கிரேக்க அரசர்களில் அறியப்பட்ட முதல் அரசர் டெமெட்ரியஸ் ஆவார்.
ii) இந்தோ - கிரேக்கர்கள் நேர்த்தி மிக நாணயங்களை வெளியிட்டனர்.
iii) இந்நாணயங்கள் அவர்களின் ஆட்சியை வேறுபடுத்தி காட்டுகின்ற அம்சங்களோடு வெளியிடப்பட்டன
iv) நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
v) அரசர்கள் பலவிதமான தலைக்கவசங்களோடு இருப்பது தனிசிறப்பு.
vi) இந்நாணயங்கள் தனிமுக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசரின் தோற்றத்தை காட்டுகின்றன.
53.
i) அலெக்ஸ்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
ii) மேற்குலகிற்காக வணிகப் பெரு வலிகள் திறக்கப்பட்டன.
iii) இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்..
iv) இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
v) மெளரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
vi)பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
54.
(i) எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற கோவில் கைலாசர் கோவில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
(ii) மூலக்கோவில், நுழைவுவாயில், நந்திமண்டபம், வாடி முக மண்டபம் என நான்கு பகுதிகளுடைய இக்கோவில் 25அடி உயரமுள்ள மேடையில் கட்டப்பட்டுள்ளது.
(iii) மேடையின் முகப்பில் யானைகளும், சிங்கங்களும் மேடையைத் தாங்குவது போல் உள்ளது.
(iv) 16 சதுர தூண்கள் கொண்ட மண்டபம், துர்க்கை எருதுமுக அரக்கனை கொல்வது போன்ற சிற்பம், ராவணன் கைலாய மலையை தூக்க முயற்சிப்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
(v) அவர்களின் இராமாயணக்காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கைலாசர் கோவிலின் பொதுபண்பு திராவிட கலைப்பாணியைச் சேர்ந்தது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards