11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
அரபியர், துருக்கியரின் வருகை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________
முபாரக் ஷா
ஆலம் கான்
கிசர் கான்
துக்ரில் கான்
2.
3.
மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்
அடிமை
அரசர்
இராணி
படைவீரர்
4.
உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______
ராஷ்டிரகூடர்
டோமர்
சண்டேளர்
பரமர்
5.
பாலம் பவோலி கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது
சமஸ்கிருதம்
பாரசீக மொழி
அரபி
உருது
6.
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் ______ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்
15
17
18
19
7.
குத்புதீன் ஐபக் -குறிப்புத் தருக.
8.
இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்
9.
நாற்பதின்மர் அமைப்பு
10.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
11.
கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்
12.
இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.
13.
14.
முகமது-பின்-காஸிமின் இராணுவப் படையெடுப்புகளுக்கான உடனடிக் காரணங்களை விவரி.
15.
அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்
16.
கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக
17.
கஜினி மாமூதினுடை ய கொள்ளைத் தாக்குதல்கள் மதநோக்கில் என்பதைக் காட்டிலும் அதிக அரசியல் - பொருளாதாரத் தன்மை கொண்டவை – விளக்குக.
1.
(b)
ஆலம் கான்
2.
(a)
3.
(a)
அடிமை
4.
(c)
சண்டேளர்
5.
(a)
சமஸ்கிருதம்
6.
(b)
17
7.
(i) குத்புதீன் ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
(ii) அவரது திறமையையும், விசுவாசத்தையும் கண்டா முகமது கோரி, இந்தியாவில் தான் வெற்றி பெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.
(iii) குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206-1210) ஆட்சி புரிந்தார்.
(iv) அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210ல் லாகூரில் சௌகான் எனும் விளையாட்டின் போது நடந்த ஒரு விபத்தில் இறந்தார்.
8.
(i) ராப்ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை இசுலாமியர் கொண்டு வந்தனர்.
(ii) இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.
(iii) சுஸ்பி துறவி பிர் போதன் இக்காலத்தில் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
(iv) ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக் தர்பன் என்ற இந்திய இந்திய சமஸ்கிருத நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்தனர்.
9.
(i) டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
(ii) இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
(iii) கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
(iv) வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
10.
(i) கஜினி முகமது இந்தியா வரும்போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
(ii) அல்பெருனி ஹிதாப் -இ-ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
(iii) பாரசீக கவிஞரான பிர்தொளசி, ஷாநாமாவை இயற்றினார்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி, சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
11.
(i) இந்தியாவில் இசுலாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுப்படுத்த சபுக்தஜின் நடவடிக்கை எடுத்தார்.
(ii) ஆப்கன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்து அங்கு தனது மூத்த மகன் மாமூதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
(iii) 997ல் சபுக்தாஜின் இறந்தபோது மாமுது 7 குரசனில் இருந்ததால் இளையமகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
(iv) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து ஏழு வயதில் கஜினியின் அரசராக மாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
(v) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து ஏழு வயதில் கஜினியின் அரசராகமாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
12.
(i) இசுலாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள் அபகரிப்புகள் இருந்தாலும் இந்து மதத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான மனதுடன் காணப்பட்டனர்.
(ii) இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி தனது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.
(iii) 1325ல் முகமது -பின்-துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணையிட்டார்.
(iv) இவரே கூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.
(v) பரணி என்ற வரலாற்று ஆசிரியர் தனது நூலில் குறிப்பிடும் போது "பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும், பஞ்சணையில் அமரவைத்து சகல மரியாதைகளையும் செய்கிறார்" என்று குறிப்பிடுகிறார்.
(vi) மேலும் "இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோயில்கள் கட்டிக் கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இசுலாமிய வேலையாட்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்".
(vii) "இசுலாமியர்களுக்கு நிகராக வாய், ராணா, தாகூர், ஷா, மஹதா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன" என்றும் பரணி எழுதுகிறார்.
இவைகள் இசுலாமியர் ஆட்சியின் சிறப்பு வாய்ந்த முக்கியத்துவம் ஆகும்.
13.
14.
(i) ஈராக்கின் அரபு ஆளுநர் ஹெஜஜ் -பின்- யூசுஃப் கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி சிந்து அரசர் தாகீரை எதிர்த்து, தரைவழி, கடல்வழி என இரு தனித்தனி படைப்பிரிவுகளை அனுப்பினார்.
(ii) ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தாகீரால் தோற்கடிக்கப்பட்டு அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
(iii) இதனால் கோபமுற்ற யூசுப் பெரும்படை ஒன்றை தன் மருமகன் முகமது -பின்- காசிம் தலைமையில் தாகீருக்கு எதிராக அனுப்பினார்.
(iv) அரசர் தாகீர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.
(v) மக்களும் மன்னர் மீது அதிருப்தி அடைந்த சூழலில் முகமது -பின்- காசிம் பிராமணபாத்தை எளிதில் கைப்பற்றி, தாகிரை விரட்டிச் சென்று போரில் கொன்றார்.
(vi) தேபல் துறைமுக நகரத்தை அழித்து கொள்ளையடித்தார்.
இதுவே முகமது-பின்-காசிமின் படையெடுப்பிற்கு உடனடிக் காரணமாகும்.
15.
அலாவுதின் கில்ஜியின் பரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
நிர்வாக சீர்திருத்தங்கள்:
(i) பிரபுக்கள் குவித்து வைத்திருந்த செல்வம் பறிமுதல் செய்தார். பிரபுக்கள் சதிகள் எய்வதற்கான வாய்ப்பை தடுக்க எடுத்த முதல் நடவடிக்கை இது.
(ii) சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
(iii) கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த மரபுரிமைகளை பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களை தடைச் செய்தார்.
(iv) ஊழல் அரசு அலுவலர்களை கடுமையாகத் தண்டித்தார்.
சமூக சீர்திருத்தம்:
(i) உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டது.
(ii) இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.
(iii) அலாவுதீன் விதித்த வரிசுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
(iv) தனது பேரரசின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
சந்தை சீர்திருத்தங்கள்:
(i) படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக கொடுத்த முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார் குறைந்த ஊதியமும் அளிக்கப்பட்டது.
(ii) அத்யாவசியப்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஒற்றர் முறையை பயன்படுத்தினார்.
(iii) கொடுக்கல், வாங்கல், பேரங்கள் அனைத்து விபரங்களையும் ஒற்றர் மூலம் அறிந்து கொண்டனர்.
(iv) அத்யாவசியப் பொருள்களின் விலை குறித்து அலுவலர்களும், ஒற்றர்களும் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
தண்டனை:
(i) விலை ஒழுங்கு முறை விதிகளை மீறுவோர் கடமையாக தண்டிக்கப்பட்டனர்.
(ii) ஏதேனும் எடைக்குறைவு கொண்டு பிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண்முன்னே வீசப்பட்டது.
இவ்வாறாக எளியோர் மீது வரியை குறைத்து செல்வந்தர்கள் மீது அதிக வரியை புகுத்தி, தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தினார்.
16.
| கஜினி முகமது | கோரி முகமது |
|---|---|
| 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர் | 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர் |
| 2. கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை அடிக்கும் நோக்கம் கொண்டவை | 2. கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். |
| 3. படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் | 3. அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 4. சிறந்த போர்திறமை பெற்றவர். இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார். | 4. குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது. |
| 5. போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார். | 5. ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார். |
| 6. காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. | 6. நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். |
| 7. படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. | 7. ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர். |
| 8. இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும். | 8. இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும். |
| 9. இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர். | 9. இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினர். |
| 10. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை. | 10. கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார். |
17.
கஜினி முகமது:
1. 27வது வயதில் கஜினியின் பொறுப்பேற்ற கஜினி மாமுது 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சி காலத்தில் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு மத ஆதிக்கம் என்பதை விட அரசியல் பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதேயாகும்.
வட இந்தியத் தாக்குதல்:
1. ஷாஹி அரசர் அனந்த பாலர் தோற்கடிக்கப்பட்டார். இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. கங்கைச் சமவெளியைக் கடந்து பஞ்சாப், கன்னோகி சென்றடைவதற்கு முன் மதுரா சூறையாடப்பட்டது.
3. 1025ல் குஜராத் கடற்கரையில் உள்ள சோம்நாத் கோயில் நகர படையெடுப்பாகும். ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தனர்.
படையெடுப்பின் தன்மை
1. கஜினியின் இக்கொள்கைகளை மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதை விட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டது என்பதே பொருந்தும்" என பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
2. கஜினி முகமதுவின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே, மேலும் கஜினி முகமது கொள்ளை அடித்தது. அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடு செய்யும் தேவையினால் ஏற்பட்டது.
வரலாற்றறிஞரின் கூற்று:
1. வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர் "இத்தகைய திடீர் ராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்பு வாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர் முறைகளிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையுமே அவை வெளிப்படுத்துகின்றன" என்கிறார்.
2. எனவே இவரது தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவையே என்றால் மிகையாகாது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards