11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மிகவும் பிரபலமான விரிஜ்ஜி கண சங்கத்தின் தலை நகரம் ______
மிதிலை
வைசாலி
ராஜகிருஹம்
தட்சசீலம்
2.
தொடக்ககால நூல்களில் _____ மகாஜனபதங்கள் காணப்படுகின்றன.
10
13
16
17
3.
பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.
பெளத்தம்
சமணம்
ஆசீவகம்
வேதம்
4.
அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பெளத்த நூல் _____________
சீவகசிந்தாமணி
அச்சரங்கசூத்திரம்
கல்பசூத்திரம்
சமண்ணப சுத்தம்
5.
6.
புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
7.
பதினாறு மகாஜன பதங்களை கூறுக.
8.
தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
9.
ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.
10.
மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
11.
தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
12.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
13.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
14.
கங்கைச்சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
15.
16.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
17.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
18.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.
19.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவுமலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
1.
(b)
வைசாலி
2.
(c)
16
3.
(b)
சமணம்
4.
(d)
சமண்ணப சுத்தம்
5.
(c)
6.
(i) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள்.
(ii) தர்ம சாஸ்திரங்கள், திரிபீடகங்கள் ஜாதகக் கதைகள் போன்ற நூல்கள், சமண நூல்கள்.
(iii) அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
(iv) தொல்லியல் சான்றுகளும் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
7.
புராண, பெளத்த,சமண மரபுச் சான்றுகளின்படி 16 மகா ஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.
அவையாவன:-
1. காந்தாரம்
2. காம்போஜம்
3. அசகம்
4. வத்சம்
5. அவந்தி
6. சூரசேனம்
7. சேதி
8. மள்ளம்
9. குரு
10. பாஞ்சாலம்
11. மத்ஸ்யம்
12. வஜ்ஜி (விரஜ்ஜி)
13. அங்கம்
14. காசி
15. கோசலம்
16. மகதம்
8.
(i) பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுகிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டது.
(ii) சீனத்துறவி வு-கிங் இந்த பெளத்த மடத்துக்கு வருகை தந்தார்.
(iii) பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயிலை கட்டினார்.
(iv) அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
9.
| ஜனபதங்கள் | மகாஜனபதங்கள் |
| 1. ஜன என்பது இனக்குழுக்கள் | 1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு |
| 2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும். |
2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள் இணைக்கப்பட்ட பிரதேசமாகும். |
| 3. வரி அமைப்பு காணப்படவில்லை | 3. அரசர் உபரி வேளாண் மீது வரி விதித்தார். |
| 4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை. |
4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள், அரசாங்கம், |
10.
(i) மகாவீரருடைய போதனைகளின் மையக் கருத்து அஹிம்சை ஆகும். சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை.
(ii) சமணம் கடவுளின் இருப்பை மறுத்ததோடு உருவ வழிபாட்டையும் எதிர்த்தது.
(iii) கடவுளை வழிபடுவதாலே, வேள்விகள் செய்வதாலோ முக்திபெற என்றார் மகாவீரர்.
(iv) எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமாகவே, ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும் என்றார்.
11.
(i) பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ் நாட்டில் பரவியது.
(ii) மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைக்கைகளோடு கூடிய குகைகள் காணப்படுகின்றன.
(iii) தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் (நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கல காரிகை, நீலகேசி சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது.
(iv) பொ.ஆ.470ல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது.
(v) சமணம் தமிழ் நாட்டில் பரவியதால், பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
(vi) காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் சமணக் கோயில்களில் ஒன்றாகும்.
12.
(i) பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விற்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
(ii) இக்கால கட்டத்தின் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
(iii) அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
(1) கோசலர்
(2) கெளதம்புத்தர்
(3) மகாவீரர்
அஜிதகேசகம்பளி ஆகியோர் ஆவார்.
(iv) இத் துறிவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம். கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
(v) இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
(vi) அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.
13.
வேளாண், உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
(1) ராஜகிருகம், சிராவஸ்தி, கெளசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
(2) உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்.
(3) வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.
14.
(i) ஆரியர்களின் வருகைக்குபிறகு கங்கைப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டது.
(ii) இரும்பு தொழில்நுட்ப பயன்பாட்டினால் வேளாண்மை பகுதி பெருகியது.
(iii) குடியிருப்புகள் உருவாயின.
(iv) கங்கைச்சமவெளி வளமானதால் வேளாண்மை செய்யவும், வணிகம் செய்யவும் ஏற்றபகுதியானது. ஆதனால் மக்கள் இங்கு அதிகம் குடியேற துவங்கினர்.
(v) வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியன கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
(vi) ஆதலால் கங்கைச் சமவெளி எளிதில் நகரமயமாக மாறியது.
15.
16.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
17.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
18.
ஆசீவகம்:
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பெளத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர். நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினார்.
கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறந்தவர் மக்காலி கோசலர், மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.
புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.
தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்பு ரையாளர்கள் எதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.
புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.
பகுத கச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.
அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு ஆகிய அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.
குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பெளத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு குறைவுதான் என்றாலும் நாடு முழுவதும் பரவியிருந்தது.
19.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள்:
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவு சார் கொந்தளிப்பின் காலமாகும்.
இவ்வெழுச்சிக்கான காரணங்கள்:
1. அரசு உருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் காட்டுகிறது.
மத நடைமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீக மதங்கள் உருவாயின.
2. பிரதேச அடையாளங்களின் தோற்றம், சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித் தள்ளியது.
அதிருப்ப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளியில் வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.
3. வேத மதம் முழுமையாக சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை.
எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாக இல்லை.
4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (seths) போன்ற வங்கியாளர்கள் என புதிய வர்க்கம் உருவானது.
5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும்.
அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையை இருந்தது. மேற்குறிய காரணங்களால் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்டது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards