11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
குப்தர்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
குப்த மரபின் கடைசி பேரரசர் ________
குமார குப்தர்
ஸ்கந்த குப்தர்
விஷ்ணு குப்தர்
ஸ்ரீகுப்தர்
2.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____
இட் சிங்
யுவான் சுவாங்
பாஹியான்
அ-வுங்
3.
4.
_______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
5.
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இலக்கியச் சான்றுகள்
கல்வெட்டு சான்றுகள்
நாணயச் சான்றுகள்
கதைகள், புராணங்கள்
6.
சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?
7.
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை ? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
8.
குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
9.
விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக
10.
11.
ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?
12.
குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.
13.
அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.
14.
மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.
15.
ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக
16.
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:
17.
குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க .
18.
குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.
19.
1.
(c)
விஷ்ணு குப்தர்
2.
(c)
பாஹியான்
3.
(b)
4.
(b)
சமுத்திரகுப்தர்
5.
(d)
கதைகள், புராணங்கள்
6.
i) சமுத்திர குப்தரே 'கவிராஜா' என்று புகழ்பெற்ற காளிதாசர் இயற்கை அழகை எழுதிய கவிஞர். சகுந்தலம் மளவிகாக்னிமித்ரம் விகரமோர் வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். சூத்ரகரின் மிருச்சகடிகம்
ii) விசாகதத்தரின் முத்ராராட்சசம், தேவி சந்திரகுப்தர் ஆகியப்படைப்புகள் வெளியாயின.
iii) அதே சமயம் அதிகம் புகழ் பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படையெடுப்புக்கு இலக்கிய மதிப்பீடுகளுக்கு பங்காற்றின.
7.
உள்நாட்டு பூசல்களும் அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாயின.
பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்தும் இவர்கள் பேரரசை விரிவுபடுத்துவதிலோ, ராணுவ படையெடுப்புகாலிலே கவனம் செலுத்தாததும் பேரரசை பலவீனப்படுத்தியது.
அத்ததுடன் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளபட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.
ஹூணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது. பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது. ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்கு காரணங்களாயின.
8.
சுழியம் என்ற கருத்தாக்கத்தை கண்டு பிடித்தது இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையே சாரும்.
ஆரியப்பட்டர்:
சூரிய சித்தாந்தா என்ற நூலில் சூர்யா கிரகணங்கள் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
தனது 'ஆர்யபட்டீயம்' என்ற நூலில் கணிதம் கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறது.
வராகமிகிரர்:
வராகமிகிரரின் பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல் இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலை களஞ்சியமாகும். பஞ்சசித்தாந்திகா, பிருஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும்.
பிரம குப்தர்:
கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான 'பிருமஸ்புத - சித்தாந்த, கண்டாகாதீயாக' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
9.
விக்ரமசீலா பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது.
பாலர் வம்சத்தை சேர்ந்த 'தர்மபாலர்' விக்ரமசீலா என்ற பௌத்த மடாலயத்தை நிறுவினார்.
இது பின்னாளில் விக்ரமசீலா பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.
தர்மபாலர் புத்த மதத்தின் பெரும ஆதரவாளராக இருந்த படியால், விக்ரமசீலாவில் பௌத்த கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்க வழி வகை செய்தார்.
இங்கு அதிஷா, சரகர், திலோபா போன்ற அறிஞர்கள் கல்வியைப் போதித்தனர்.
10.
11.
i) ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹூணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்
ii) ஸ்கந்தகுப்தர் ஹூணர்களை விரட்டினாலும், குப்தர்களின் கருவூலம் காலியானது.
iii) ஆறாம் நூற்றாண்டில் ஹூணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றை கைப்பற்றினார்
iv) ஹூணர்களின் படையெடுப்பால், நாட்டின் மெது குப்தர்களின் பிடி தளர்ந்தது,
12.
i) விவசாயிகளின் நிலைமையை கீழ் நிலையில் இருந்தது.
ii) சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்ப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்கு தலைப்பட்டனர்.
iii) அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல
iv) மாறாக எப்போது வேண்டுமானலும் குத்தகையைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்
v) விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்ட வேண்டி இருந்தது.
13.
i) மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
ii) அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
iii) இதனை பொறித்தவர் ஹரிசேனர்
iv) இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதபட்டது.
14.
இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் சீன அறிஞர் பாஹியான் இந்தியாவிற்கு வந்தார். மதுராவை பற்றி சில தகவல்களை அளிக்கிறார்.
மதுராவில் மக்கள் தொகை அதிகம் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்
அவர்கள் தமது குடும்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்கு தரவேண்டும்.
சூழலை பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது என சுட்டிக் காட்டிடுகிறார்.
15.
i) ஸ்ரீகுப்தர் - பொ. ஆ. 240-280
ii) கடோத்கஜர் - பொ. ஆ. 280-319
iii) முதலாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 319-335
iv) சமுத்திரகுப்தர் - பொ. ஆ. 335-370
v) ராமகுப்தர் - பொ. ஆ. 370-375
vi) இரண்டாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 375-415
vii) முதலாம் குமாரகுருபர் - பொ. ஆ. 415-455
viii) ஸ்கந்தகுப்தர் - பொ. ஆ. 455-467
16.
1. இலக்கிய சான்றுகள்
2. கல்வெட்டுச் சான்றுகள்
3. நாணய ஆதாரங்கள்
இலக்கிய சான்றுகள்:
1. நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யானர் ஸ்மிருதிகள்
2. அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதி சாரம் என்ற தரும சாஸ்த்திரம்
(பொ.ஆ.400)
3. விசாகதத்தரின் தேவி சந்திர குப்தம், முத்ராராட்சகம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்கள் அளிக்கின்றன,
4. புத்த, சமண இலக்கியங்கள்
5. காளிதாசர் படைப்புகள்
6. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள்.
கல்வெட்டுச் சான்றுகள்:
1. மெஹரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
2. அலகாபாத் தூண் கல்வெட்டு: சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.இதனைப் பொறித்தவர் ஹரிசேனர் இது 33 வரிகளில் நாகரி வரி வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நாணய ஆதாரங்கள்:
1. குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
2. இந்தக் தங்க நாணயங்கள் குப்தா அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
17.
வணிகர்கள்:
"சிரேஷ்டி", "சார்ந்தவஹா" என்ற இரு வேறுபட்ட வகைகளை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.சிரேஷ்டி என்பவர் ஒரே இடத்தில தங்கி இருந்து வாணிபம் செய்பவர் ஆவார். சார்த்தவஹா என்பவர் ஊர் ஊராக சென்று வாணிபம் செய்பவராக இருந்தார்.
வணிகக்குழுக்கள்:
குப்தர் காலத்தில் பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகர் குழுக்களின் பங்கு அதிக அளவு இருந்தது. இக்குழுக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருந்தன. இவர்களது சட்டதிட்டங்கள் அரசாங்கம் மதித்தது. இந்த வணிக குழுக்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறித்து "நாரத ஸ்மிருதி" "பிருகஸ்பதி ஸ்மிகுதி" போன்ற நூல்கள் விளக்குகின்றன.
ஒரு குழுவில் ஒரு குழுத்தலைவர் மற்றும் ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவைக் குறிப்பிடுகின்றன. குழுச்சட்டங்கள் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் தகராறு களின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குழு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் நலன்கள்:
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சாத்திரங்கள் கோயில்கள், தோட்டங்கள், மட்பாண்டங்கள் ஏற்படுத்தி தரும் கொடைநடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்கள் ஈடுபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
மேலும் வணிகத்தில் அதிகலாபம் ஈட்டுவதற்காக பானம் கடனாக பெறப்பட்டது அதிக வட்டிக்கு விடப்பட்டதற்கு குறிப்புகள் இக்கால சான்றுகளில் காணப்படுகின்றன.
இவ்வாறு குப்தர் கால வணிகக்குழுக்கள் தங்களது பங்களிப்பினை வணிகத்தில் செலுத்தி வாணிபம் பெறுக உதவி செய்தது.இதன் மூலம் குப்தர்களின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்தது.
18.
குப்தர் காலத்தில் அரசு சார்பில் ஏராளமான பாசன பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது. பஹார்பூர் செப்பேடு அரசர் தன நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுகிறது. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தாபலா என்ற அதிகாரி நிலா பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்தார். கிராமநிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராமகணக்கர் பராமரித்தார். குப்தர் காலத்தில் நிலம் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டிருந்தன.
பெயர் நிலப்பிரிவு
1.க்ஷேத்ர - பயிரிடக் கூடிய நிலம்
2. கிலா - தரிசுநிலம்
3. அப்ரஹதா - காடு அல்லது தரிசுநிலம்
4. வாஸ்தி - குடியிருக்கத் தகுந்த நிலம்
5. கபடசஹாரா - மேய்ச்சல் நிலம்
பல்வேறு விதமான நிலக்குத்தகை முறை:
1. நிலக்குத்தகை வகை - உரிமையின் தன்மை
2. நிவி தர்மா - அறக்கட்டளை மூலம் நிலமான்யம்
3. நிவிதர்ம அக்சயினா - நிரந்தர அறக்கட்டளை பெற்றவர் அதன் வருவாயை பயன்படுத்தி கொள்ளலாம்.
4. அப்ரதா தர்மா - வருவாயை பயன்படுத்தலாம். தானம் செய்ய முடியாது நிர்வாக உரிமை கிடையாது.
5. பூமி சித்ராயனா - தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுபவர்க்கு தரப்படும் உரிமை - குத்தகை விலக்கு
6. அக்ரஹாரா மானியம் - பிராமணர்களுக்கு தரப்படுவது வரிகிடையாது.
7.தேவக்கிரஹாரமானியம் - கோயில் மராமத்து வழிபாடு போன்றவற்றிற்காக கொடுக்கப்படுவது
8. சமயச் சார்பற்ற மானியம் - நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம்.
19.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards