11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/09/2019
பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை .
காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரியானது. காரணம் தவறானது
கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .
2.
3.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
பிராமணங்கள்
சங்கிதைகள்
ஆரண்யகங்கள்
உபநிடதங்கள்
4.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக
5.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
6.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
7.
தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.
8.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
9.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
10.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
1.
(b)
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
2.
(c)
3.
(b)
சங்கிதைகள்
4.
(i) நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
(ii) பிருதிவி-பூமி, அக்னி -நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
(iii) ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபட்டனர்.
(iv) ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.
5.
(i) ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக -ஈரானிய நூல் ஜொராஸ்டிய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
(ii) இந்தோ-ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
(iii) இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
(iv) இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.
6.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
7.
| தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகள். | |||
| எண் | தொடக்க வேதகால சமூகம் | பிந்தைய வேதகால சமூகம் | |
| 1 | செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது. | 1 | இரும்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது. |
| 2 | செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள்நிற மண்[மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. | 2 | சாம்பல் நிற (ஓவியம் தீட்டப்பட்ட) மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. |
| 3 | சமூகம் சமத்துவம் தன்னை கொண்டதாகவே இருந்துள்ளது. | 3 | பிற்காலத்தில் சமூக வேறுபாடுகள் தோன்றியுள்ளன. |
| 4 | பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர். | 4 | பிந்தைய வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது. |
| 5 | கால்நடை வளர்ப்பு என்பது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது கால்நடைகள் சொத்தாக கருதப்பட்டது. | 5 | வேளாண்மைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. |
| 6 | இந்திரனே மிக முக்க்கிய கடவுளாவார் | 6 | பிரஜாபதி முக்கியக் கடவுளானார். அக்னி, இந்திரன் ஆகிய கடவுள் செல்வாக்கை இழந்தனர். |
8.
(i) ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
(ii) சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
(iii) இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
(iv) வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
(v) சிறுதானியங்கள், பயிறு வகைகள், கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
(vi) இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.
9.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
10.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards