11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________
கரிகாலன்
நெடுஞ்செழியன்
செங்குட்டுவன்
மகேந்திரன்
2.
"சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________
கூரம் செப்பு பட்டயம்
ஐஹோல் கல்வெட்டு
அலகாபாத் கல்வெட்டு
பூலாங்குறிச்சி கல்வெட்டு
3.
|மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________
பகல்
இரவு
மாலை
பகல் மற்றும் இரவு
4.
பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________
முசிறி
தொண்டி
புகார்
கொற்கை
5.
சேரர்களின் துறைமுக நகரம் _______________
தொண்டி
புகார்
கொற்கை
நெல்கிண்டா
6.
_______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார்.
சேர
சோழ
பாண்டிய
சாதவாகன
7.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
8.
இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது.
மணிமேகலை
சிலப்பதிகாரம்
அசோகர் கல்வெட்டு
சேரர் நாணயம்
9.
_____________ராஜசூய யாகத்தை நடத்தினார்
பெருநற்கிள்ளி
முதுகுடுமிப் பெருவழுதி
சிமுகா
அதியமான்
10.
கரிகாலன் ________________ மகனாவார்
செங்கண்ணன்
கடுங்கோ
இளஞ்சேட்சென்னி
அதியமான்
11.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.
12.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?
13.
யுவான் -சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?
14.
பண்டமாற்று முறையை விளக்கு
15.
சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?
16.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
17.
கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.
18.
சோழ அரசர்களில் தலை சிறந்தவன் கரிகாலன்.
19.
களப்பிரர் என்போர் யார் ? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
20.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
1.
(a)
கரிகாலன்
2.
(d)
பூலாங்குறிச்சி கல்வெட்டு
3.
(b)
இரவு
4.
(d)
கொற்கை
5.
(a)
தொண்டி
6.
(d)
சாதவாகன
7.
(a)
ஆந்திரா-கர்நாடகா
8.
(a)
மணிமேகலை
9.
(a)
பெருநற்கிள்ளி
10.
(c)
இளஞ்சேட்சென்னி
11.
நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்) ஆகியோரின் கூட்டுப்படைகளைத் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார்.
மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும்.
கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.
12.
நாணயச் சான்றுகள்:
i) ஆந்திரா-கர்நாடகா பகுதிகளின் சாதவாகனர் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள்.
ii) சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெளியிட்ட நாணயங்கள்.
(iii) தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்.
13.
சீனப்பயணி யுவான் சுவாங் தலைநகர் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தபோது காஞ்சி பற்றிய அவரது வருணனை குறிப்பிடத்தக்கது.
1. மிகப்பெரிய, அழகிய நகரான அது ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது எனக் கூறியுள்ளார்.
2. அங்கு நூறு புத்த சமய மடாலயங்கள் இருந்தன.
3. பத்தாயிரம் புத்த சமையத்துறவிகள் அவற்றில் வாழ்ந்தனர்.
4. கல்விக்குப் பெயர் பெற்றது காஞ்சி மாநகர்.
14.
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமாக பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.
15.
நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது.
நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது.
இது காலப்போக்கில் நிலத்தை அடிப்டையாகக் கொண்ட சமூகப் படிநிலைகாலுகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.
16.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
17.
சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சாதகர்னி பெரும் அரசனாவார். சாக அரசர் 'நாகபனா' வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார். அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேதயாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
18.
1. இளஞ்சேட் சென்னியின் மகனான கரிகாலன் சங்க கால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். "பட்டினப்பாலை" அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
2. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணி போர்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும்.
3. காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தன் மூலம் வேளாண்மையே வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார்.
19.
1. சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ. ஆ. 300 - 600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது.
2. களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளாக மூவேந்தர்களையும் கோற்கடித்ததால் இக்காலமானது களபிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர்.
3. தமிழ்ப்பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.
4. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே.
5. இக்கால கட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும்.
6. இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது.
7. தொடக்கத்தில் இந்தநாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ - வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர்
8. சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.
20.
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெறுவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:
1. தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
2. அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
3. இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்ட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
(திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது).
4. மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கீயத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
5. சோழரின் சின்னம் புலி ஆகும்.
சேரர்:
1. மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
2. வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
3. சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
4. சேரர்களின் சின்னம் வில்அம்பு ஆகும்.
பாண்டியர்:
1. மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியச் துறைமுகமாகும்.
2. இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகவும். கொற்கை பெரிப்ளஸின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. பாண்டியரின் சின்னம் மீன்.
4. மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards