11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
வரலாறு முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நாணயத்திற்கான இந்திய சொல்லான___________பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
கசாய்
லிடா
கார்சா
டிடா
2.
ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.
மாடு
நாய்
குதிரை
செம்மறி ஆடு
3.
வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும்
கோசலம்
அவந்தி
மகதம்
குரு
4.
5.
மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.
பழைய கற்காலப்
புதிய கற்காலப்
இடைக்கற்காலப்
செம்புக்காலப்
6.
கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.
7.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
8.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
9.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக
10.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
11.
ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.
12.
சாகர்களை பற்றி எழுதுக.
13.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?
14.
கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.
15.
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.
16.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
17.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:
18.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
19.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.
1.
(c)
கார்சா
2.
(c)
குதிரை
3.
(c)
மகதம்
4.
(c)
5.
(b)
புதிய கற்காலப்
6.
i) குஷாண அரசர்களில் புகழ்பெற்றவர் கனிஷ்கர் ஆவார்
ii) பௌத்தத்தின் மகாயானப்பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார், நான்காம் பௌத்த மகா சங்கத்தை கூட்டியவர்
iii) இவரது காலத்தில் தான் காந்தார கலை வளர்ச்சியுற்றது.
iv) அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்ரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்த தத்துவ ஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
7.
| (i) துன்பம் பற்றிய உண்மை | -பிறப்பு வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது. |
| (ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை | -இன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்றவற்றிற் கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும். |
| (iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்) |
-துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை |
| (iv) துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மை. |
-எண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்) |
8.
i) இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுதும் பாப்போம்.
ii) இச்சொல் பாரசீக மொழியில் கிரேக்கர்களை குறிக்கும். "யாயுனா" என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
iii) இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களை கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
9.
(i) நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
(ii) பிருதிவி-பூமி, அக்னி -நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
(iii) ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபட்டனர்.
(iv) ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.
10.
சிந்து நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
1. கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரீகம் வீழ்ச்சியுற்றது.
2. வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
3. ஆசிரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரீக வீழ்ச்சிக்கு காரணமியிருந்தது.
4. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
5. இதன் காரணங்களைக் சிந்து நாகரீகமும் வீழ்ச்சியுற்றது.
11.
(i) பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வசித்தனர், என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது.
(ii) பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்துகொண்டனர், வேள்விகளில் பங்கெடுத்தனர்.
(iii) திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன.
(iv) பலதார மணம் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறுமணமும் பழக்கத்தில் இருந்துள்ளது.
(v) பதினாறு-பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
(vi) வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
12.
இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொ/மொக ஆவார்.
காந்தாரத்தை கைப்பற்றிய அவர் இந்தோ - கிரேக்க அரசாட்சியில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்
இந்தியாவில் சாகர்கள் இந்து சமூகத்துக்குள் இரண்டறக் கலந்து விட்டனர்
இந்த பெயர்களையும், மத நம்பிக்கைகளையும் கைகொள்ளத் தொடங்கினார்
அவர்களது நாணயங்களின் ஒருபக்கத்தில் இந்துக் கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்டது.
சாகர் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க சத்ரப்களை மகானா ஆளுநர்களாக நியமித்தனர்
சத்ராபாக்கள் பலரும் தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் எனப்பட்டம் சூடிக் கொண்டதோடு நடைமுறையில் சுதந்திர ஆட்சியொயாளர்களாயின.
புகழ் பெற்ற சாக சத்ரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன்.
13.
1. அஜாதத் சத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்து , பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
2. அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மலர்களையும் வென்றார்.
3.பொ.ஆ.மு.461 இல் அஜாகத் சத்ரு மறைந்தபோது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.
14.
i) கிரேக்கர்களின் படையெடுப்பு பரஸ்பரஸ் பண்பாட்டு தாக்கம் ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றது.
ii) பாடபுத்தரத்தில் உள்ள நினைவு சின்னங்களில் கிரேக்க பண்பாட்டு தாக்கம் தெரிந்தது.
iii) மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்க நிர்வாக அமைப்பு முறையை ஒத்திருக்கிறது.
iv) மேற்கு இந்தியாவில் இந்தோ - கிரேக்க அரசாட்சியில் தோன்றியது. இந்திய வரலாற்றில் மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது.
v) மேலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட களை சிந்தனையும், போக்கையும் இந்தியாவில் ஏற்படுத்தியது.
15.
1. ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
2. மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
3. கார்னிலியன்(மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும்,
4. செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
5. சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலனைச் செய்தார்கள்.
6. இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
7. இவை மெசப்பட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
16.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
17.
1. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
2. சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளாமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு,வேறு பகுதியில் இருந்தன.
3. சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை.
4. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
5. தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்தற்குப் பல தொல்லியல் சான்றுகள் சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.
6. பழந்தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகர மயமாக்கத்தின் பகுதிகள் ஆகும்.
7. இந்த தமிழக ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன.
18.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
19.
ஆசீவகம்:
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பெளத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர். நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினார்.
கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறந்தவர் மக்காலி கோசலர், மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.
புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.
தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்பு ரையாளர்கள் எதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.
புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.
பகுத கச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.
அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு ஆகிய அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.
குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பெளத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு குறைவுதான் என்றாலும் நாடு முழுவதும் பரவியிருந்தது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards