11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/03/2019
11th Public Exam March 2019 Important 5 Marks Questions
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
2.
முகலாயர் காலத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தது விவரி?
3.
சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதுக.
4.
பிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.
5.
விவசாயிகள், பழங்குடிகள் - கிளர்ச்சி பற்றி தொகுத்து எழுதுக.
6.
விஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.
7.
வேலுநாச்சியார் பற்றி விவரிக்கவும்.
8.
தமிழ்நாட்டில் மராத்தியரின் ஆட்சி நிறுவப்படுவதற்கான சூழ்நிலைகள் யாவை?
9.
நீர்பாசன வசதிகள் குறித்து கட்டுரை வரைக.
10.
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:
11.
பக்தி இயக்க வழிபாட்டின் ஆரம்ப கால மோதல்களை பற்றி விவரி.
12.
பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.
13.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
14.
பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
15.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
16.
இந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.
17.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
18.
இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.
19.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?
20.
21.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
22.
ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?
23.
அக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?
24.
இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக
25.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
26.
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.
27.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
28.
சிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நிலவருவாய் முறையோடு ஒப்பிடுக.
29.
முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
30.
விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
31.
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக
32.
பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
33.
கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக
34.
35.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
36.
ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக
37.
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
38.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
39.
40.
பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
41.
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
42.
ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.
43.
குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.
44.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
45.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
46.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
47.
48.
தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
49.
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
50.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
1.
சோழர்கால உள்ளாட்சி தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
பொ.ஆ.919 மற்றும் 921ல் கிடைத்த உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் சோழர் கால உள்ளாட்சி தேர்தல் முறையை அறிய முடிகிறது.
இவை ஒரு பிராமணக் குடியிருப்புகளை பணிகளை மேற்கொள்வதற்கு வெவ்வேறு குழுக்களை சேர்ந்த உறுப்பினரை தேர்வு செய்யும் முறையை தெரிவிக்கின்றன.
தேர்வு செய்யும் முறை:
i) கிராமம் 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
ii) ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
iii) தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்கினார்
iv) ஆவி பொதுப்பணிக்குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்சநிவாரண குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியனவாகும்.
உறுப்பினாராகத் தகுதிகள்:
i) ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.
ii) போட்டியாளர் 35 வயதுக்கு மேலும் 75 வயதுக்கு கீழும் உள்ளவராக இருக்க வேண்டும்.
iii) சொத்தும், சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.
iv) வேதங்களிலும், பாஷ்யங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
குடவோலை முறை:
i) ஒரு பிரிவில் பி[ஒட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களில் தனித்தனிப் பனையோலைகளில் எழுதப்படும்.
ii) பின்னர் அவ்வோலை ஒரு பானையில் இடப்படும்
iii) சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கும்படி கூறுவர்.
iv) அந்த சிறுவன் எடுக்கும் ஓலையில் உள்ள பெயருக்கு உரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
இவ்வாறு மேற்கண்ட செய்திகள் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2.
1. நீர் இறைப்பதற்காகபி பல பீப்பாய்கள் இணைக்கப்பட்ட சக்கரமான பாரசீக்ச் சக்கரம் பாபர் காலத்தில் அறிமுகமானது.
2. வரிசையாக விசைக் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் பதேபோர் சிக்ரயில் நிறுவப்பட்டது.
3. வெடியுப்பை பயன்படுத்தி நீரைக் குளிர்விக்கும் முறையைப் பரவலாக்கிய பெருமை அக்பரைச் சாரும்.
4. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழப்படுகின்றார்.
5. இத்தொழில் நுட்பத்தின்படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும். அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களைக் கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது.
6. ஒரு சில இயந்திரத் தொழில்நுட்ப சாதனங்களை இறுக்கமான இணைப்பதற்கான திருகாணிகள், உடல் உழைப்பாலும், வார்களாலும் இயக்கப்படும் துளைப்பான் வைரத்தை பட்டை தீட்டும் கருவி போன்றவை பயன்பாட்டில் இருந்தன.
7. வேளாண் கருவிகள் முன்னர் இருந்ததைப் போலவே தொடர்ந்தன. அவை பெரும்பாலும் மரத்தாலானவை.
8. பழைய பாணியிலானத் துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருந்தன.
9. செலவுமிக்க செம்பிலான பீரங்கிகளை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
3.
சீர்திருத்த இயக்கங்களும் சீர்திருத்தவாதிகளும் வெறும் மதத்தில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.
மிக முக்கியமாக சமூகத்தில், அதிலுள்ள மக்களிடமும் தங்கள் கருத்துகளைக் கொண்டு சென்றனர்.
இதன் காரணமாக வைதீகப் பிரிவைச் சார்ந்தோரால் அதிக எதிர்ப்புக்கு உள்ளாயினர்.
சீர்திருத்தவாதிகள் பல நேரங்களில் அடக்குமுறைக்கு ஆளாயினர்.
அவர்களுக்கு எதிராக ஆணைகளும், கொலை முயற்சியும் நடத்தப்பட்டன.
இருந்தபோதிலும், சமூகத்தில் அடங்கியிருந்த மக்களின் விடுதலைக்கு வித்திட்டது.
சமய நூல்கள் பிராந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
இதனால் சமய நூல்களில் சொல்லப்பட்ட சடங்குகள், உரிமைகள் எளிமைப்படுத்தப்பட்டன.
இப்படியாக, இறைவழிபாடு என்பது ஒரு தனி அனுபவமாக மாறிப்போயின.
சிந்திக்கும் பகுத்தறிவை வளர்க்கும் மனிதர்களுக்கும் சீர்திருத்த இயக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.
சமய நடவடிக்கைகளில் இருந்து ஊழலை களைவதற்கு உதவினர்.
தங்கள் சமூகமும், மதமும், கீழானவை, பின்தங்கியவை என்பதை களைவதற்கு மக்களுக்கு உதவினர்.
மத்திய தர மக்கள் பின்பற்றுவதற்கான வேர்களையும், பாதைகளையும் சீர்திருத்த இயக்கங்கள் உருவாக்கிக் கொடுத்தனர் என்றே சொல்லலாம்.
4.
1. புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரேஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர்.
2. தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பிரான்சும் ஹாலந்தும் 1672 இலிருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன.
3. இந்தியாவில் பிரேஞ்சுக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் இவை வங்காளத்திலிருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஆகவே 1693 இல் புதுச்சேரியை டச்சுக்காரர் எளிதாக கைப்பற்ற முடிந்தது.
4. புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது, 1697 இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுகாரருக்குத் தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699 இல் தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
5. 1706 இல் பிரான்சிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும்வரை அதன் ஆளுநராக இருந்தார்.
6. பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெருமுயற்ச்சியின் விளைவாக 1725 இல் மாகியையும், 1739 இல் காரைக்காலையும் பெற்றனர்.
7. வங்காளப் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுப்படுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர். பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668 - 1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார்.
8. இருந்தபோதிலும் தங்களைவிட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
9. இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர். பிரேஞ்சுக்காரரின் செல்வாக்கை புதுச்சேரி, காரைக்கால், மாகி சந்தன்நகர் ஆகிய இடங்களில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
5.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கம்பெனி அரசின் நில உரிமையும், வருவாய் ஈட்டும் முறையும் இந்திய கிராமச் சமூகத்தை கடுமையாகப் பாதித்தது.
விவசாயிகள் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இன்னலுற்றனர்.
வரி, வசூலித்த ஒப்பந்தக்காரர்கள் அதை கட்டாயமாக வசூலித்தனர்.
இதைப் பற்றி கம்பெனிக்கு புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோபமுற்ற விவசாயிகள், பாதிக்கப்பட்டோர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
மலபார் கிளர்ச்சி:
1840 - 1850 களில் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் மலபார் கிளர்ச்சியாக வெளிப்பட்டது.
மலபார் என்பவர்கள் மலபார் பகுதிகளில் நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்பவராக, சில்லரை வியாபாரிகளாக, மீன்வர்களாக வாழ்ந்தனர்.
1792 ஆங்கிலேயர் இப்பகுதியை கைப்பற்றி கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கோல்களின் கிளர்ச்சி 1831 - 1832
கோல் என்ற பழங்குடியினர் பீகார், ஒரிசா, சிங்பும் பகுதிகளில் வாழ்ந்தனர்.
சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களை பழங்குடியல்லாதோர்க்கு குத்தகைக்கு விட்டதே கிளர்ச்சிக்கான காரணங்கள்.
கோல்கள் உயிர்தேசம் இல்லாமல் சொத்துகளை சேதப்படுத்தி கிளர்ச்சி செய்தனர்.
இவர்களுக்கு தலைமை தாங்கியவர் புத்தபகத் என்பவர்.
புத்தபகத் போராட்டத்தால் கொல்லப்பட்டார்.
1832 ஆண்டு மற்றுமொரு கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
சந்தால் கிளர்ச்சி (1855-56):
சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினர்.
பல்வேறு காட்டுப்பகுதிகளில் ஆங்காங்கே வாழ்ந்தார்கள்.பல்வேறு காரணங்களால் தாய் மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அவர்கள், ரஜ்மகால் குன்றுகளை சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறினர்.
இதை டாமின்-இ -கோ (சந்தர்களின் நிலம்) என்று அழைத்தார்கள்.
பழங்குடி நிலங்கள் ஜமீன்தார்களுக்கும், வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டது.
இதுபோக உள்ளூர் காவல் துறையாரும், தொடர் வண்டி அமைப்போரும் மக்களை அடக்கு முறைக்கு உட்படுத்தினர்.
இதன் காரணமாக, சந்தால்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1832 - ஆம் ஆண்டு கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட போது சுமார் 15 முதல் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிகிறது.
முண்டா கிளர்ச்சி (1899 - 1900):
முண்டாக்கள் பீகார் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர்.
இவர்களின் கிளர்ச்சியை வழி நடத்தியவர் பிர்சா முண்டா என்பவர்.
பிச்சா முண்டா 1874 -இல் விவசாயிக் குடும்பத்தில் பிறந்தவர். தன்னை முண்டாக்களின் புனித தூதர் என்று அழைத்துக் கொண்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முண்டாக்களின் நிலங்களை ஜாகீர்தார்களும், திக்காடர்களும் (பெரும் விவசாயி), வட்டிக்கடைக்காரர்களும் பிரித்துக் கொண்டனர்.
சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியை துவக்கிய பிர்கா முண்டா வெற்றிகரமாக வழி நடத்தினார்.இறுதியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1900 - ஆம் ஆண்டு தியாகி ஆனார்.
இவ்வாறு அங்காங்கே சிறுசிறு துளியாக துவங்கப்பட்ட விவசாயிகள் பழங்குடியினரின் போராட்டம், மிகப்பெரிய எழுச்சியைத் தராவிட்டாலும், மக்களின் ஒற்றுமைக்கு விதை விதைத்தது என்றே சொல்லலாம்.
6.
(i) தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்ககால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும்.
(ii) பாமினி விஜயநகர் அரசுகளின் காலமும் எதற்கு விதிவிலக்கல்ல. கண்களால் பார்த்த சாட்சியங்களின் குறிப்புகள் அதிக அளவில் கிடைப்பதால் இவ்வம்சம் பெரியதாகவே தெரிகிறது.
(iii) மற்றொரு முக்கியமான, நூற்றாண்டுகளைக் கடந்து நீடித்திருக்கும் விளைவு மக்கள் இடம் விட்டு இடம் சென்றதும் புலம் பெயர்ந்துமாகும். மூன்று நூற்றாண்டு காலப்பகுதிகளில் அனைத்தும் இடங்களிலும் இது போன்ற குடிபெயர்வைக் காணமுடிகிறது.
(iv) பாமினி அரசவைகளில் நடைபெற்ற மோதல்களுக்குத் தக்காணப் பகுதிகளில் துருக்கியர், ஆப்கானியர், பாரசீகர் ஆகியோர் குடியேறியதே காரணமாயிற்று.
(v) விஜயநகரப் பகுதிகளைப் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தோரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலும் நாயக்கத் தலைவர்கள் இவ்விரு மொழியினரே.
(vi) மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும். அனைத்து அயல்நாட்டு பயணிகளும், அரசர்கள், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், விஜயநகரம், பீஜப்பூர் போன்ற நகரங்களில் வாழ்ந்தோரின் செல்வச் செழிப்பையும் ஆடம்பர வாழ்வையும் குறிப்பிடும்போதே பெருவாரியான மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
(vii) அடிமை முறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
7.
இராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியப் பகுதியை ஆட்சி செய்தவர் சேதுபதி மன்னர்கள்.
இராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள் வேலுநாச்சியார்.
அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரிய உடையாரை மணந்தார்.
வேலுநாச்சியாரின் கணவர் கொல்லப்பட்டதும், திண்டுக்கல் அருகே ஹைதர் அலியின் பாதுகாப்பில் இருந்தனர்.
பின்னர் வேலு நாச்சியார் ஒரு படையை உருவாக்கிய ஹைதர் அலி, கோபால நாயக்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரில் வென்றார்.
ஆற்காடு நவாப்பை முறியடிக்கும் வண்ணம் சிவகங்கைக்குள் நுழைந்த நவாப்பை தோற்கடித்து சிறை வைத்தார்.
பின்னர் மருது, சகோதர்களின் துணையுடன் இராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
சின்ன மருது, நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப் பட்டனர்.
1783 இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.
அதுமட்டுமல்லாது, நாச்சியார் ஒரு பெண்கள் படையும் வைத்திருந்தார். அதில் பெண்கள் உளவாளிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள்.
வேலுநாச்சியார் இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தர்.
இறுதியாக வேலுநாச்சியார் 1796-ல் நோயுற்று இறந்தார்.
8.
1.கிருஷ்ணதேவராயர் தனது ஆட்சிக் காலத்தில் (1509-1529) நயங்கரா அமைப்பை உருவாக்கினார். இதன்படி தமிழகம், செஞ்சி,தஞ்சாவூர், மதுரை என மூன்று மிகப்பெரிய நயங்காரக்களாக பிரிக்கப்பட்டது.
2.இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.
3. சோழ சாம்ராஜ்யத்தின் பகுதியாக முதலிலிருந்து தஞ்சாவூர் பின்னர் பாண்டிய அரசின் பகுதியாக உருவானது. பின்னர் இது ,மதுரை சுல்தானியத்தின் பகுதியாக உருவெடுத்தது கடைசியில் நாயக்கர் கைகளுக்குச் சென்றது.
4.மதுரை நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்கரிடையே நிலவிய பகை கடைசியில் 1673 இல் தஞ்சாவூரில் நாயக்க ஆட்சியை முடிவுறச் செய்தது.
5.தஞ்சாவூரில் 1676 இல் மராத்திய தளபதி வெங்கோஜி தன்னை அரசராக அறிவித்தார். இவ்வாறாக மராத்தியர் ஆட்சி தஞ்சாவூரில் துவங்கியது
9.
(i) பாசனவசதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது. இந்திய அரசுகள் வெட்டிச் சென்ற பழைய கால்வாய்களும் குளங்களும் பயனற்றுக் கிடப்பதை கண்டபோதும் அவற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொடுக்கவோ புதுப்பிக்கவோ கம்பெனி முயற்சி செய்யவில்லை.
(ii) சென்னையில் நாம் பின்வரும் பக்கிங்களில் விரிவாகக் காணப்போவது போல் ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.
(iii) கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையை கட்டினார்.கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
(iv) பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுபாட்டுக்குள் இந்தியா செல்வதற்கும் முன்பாக வட இந்தியாவில் 1830 இல் யமுனா கால்வாய்யும் , 1857 இல் கங்கைக் கால்வாய்யை 450 மைல்கள் வரை நீட்டித்த பணியும் , 1856 இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத் துறைக் கால்வாய் தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிட்டத்தக்க முக்கியபணிகளாகும்.
(v)ஆனால் ககால்வாய்கள் மண்ணில் உப்புத் தன்மையை கூட்டவும் , தேவையில்லாத இடங்களில் தண்ணிர் தேங்கவும் வழிவகுத்தது.
10.
1. இலக்கிய சான்றுகள்
2. கல்வெட்டுச் சான்றுகள்
3. நாணய ஆதாரங்கள்
இலக்கிய சான்றுகள்:
1. நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யானர் ஸ்மிருதிகள்
2. அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதி சாரம் என்ற தரும சாஸ்த்திரம்
(பொ.ஆ.400)
3. விசாகதத்தரின் தேவி சந்திர குப்தம், முத்ராராட்சகம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்கள் அளிக்கின்றன,
4. புத்த, சமண இலக்கியங்கள்
5. காளிதாசர் படைப்புகள்
6. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள்.
கல்வெட்டுச் சான்றுகள்:
1. மெஹரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
2. அலகாபாத் தூண் கல்வெட்டு: சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.இதனைப் பொறித்தவர் ஹரிசேனர் இது 33 வரிகளில் நாகரி வரி வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நாணய ஆதாரங்கள்:
1. குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
2. இந்தக் தங்க நாணயங்கள் குப்தா அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
11.
(i) பல்லவர் காலத்தில் தான் முதன் முதலாகச் சைவமும், வைணவமும் ஒருபுறமாகவும் சமணம் மறுபுறமாகவும் இருந்து மோதிக்கொண்டன.
(ii) முதலாம் மகேந்திரப் பல்லவர், சமணத்தைப் பின்பற்றியதால் ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்தினார்.
(iii) அப்பர் தொடக்கத்தில் சமணராகவும், பின்னர் சைவ மதத்தையும் தழுவினார்.
(iv) சில சமணர்களால் தூண்டப்பட்ட மகேந்திரவர்மன் அப்பரை மீண்டும் சமணராக மாறும்படி வற்புறுத்தினார்.
(v சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ நூல்கள் பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்குகின்றன,
(vi) பக்தி இலக்கியங்களும், திருத்தொண்டர்களைப் பற்றிய நூல்களும் மோதல்களால் ஏற்பட்ட நிகழ்வுகளையும், புறச்சமயத்தார் தோற்கடிக்கப்பட்டத்தையும் விளக்குகின்றன.
(vii) பக்தி இயக்கம் நிலவுடைமைச் சாதிகளிடையேயிருந்து தோன்றியதால் அது பௌத்தத் தையும், சமணத்தையும் விமர்சனம் செய்தது. இதன் விளைவாக அரசர்களின் ஆதரவை பெறுவதில் மோதல்கள் ஏற்பட்டன.
12.
(i) சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமான கோயில்களை கட்டுவதற்கு வேசர கலைப்பாணியை பின்பற்றினர். ஐஹோலே, பாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமான கோயில்களை காணலாம்.
(ii) அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களை காணலாம். பாதாமி, அஜந்தா, குகைக் கோயில்களில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காண முடிகிறது. 2ம் புலிகேசி ஒரு பாரசீக தூது குழுவிற்கு வரவேற்பளிப்பது போன்று ஓவியத்தில் சித்திகரிக்கப்படுகின்றன.
சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம்:
முதல்நிலை:
ஐஹோலே மற்றும் பாதாமியில் முதனிலை கோயில்கள் உள்ளன. ஐஹோலேவில் உள்ள 70 கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.
கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.
1. லட்கான் கோயில் - சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ளது.
2. ஒரு யுத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கைக் கோயில்
3. ஹீச்சிமல்லி குடி கோயில்
4. மெகுதி என்ற இடத்தில் உள்ள சமண கோயில்
பாதமியிலுள்ள முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் கட்டிடக்கலைக்கும், அழகிற்கும் பெயர் பெற்றவை.
இரண்டாம் நிலை:
1. பட்டாடக்கல் என்ற இடத்தில் பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணி, ஆறு திராவிட கலைப்பாணியில் அமைந்தவை.
2. வட இந்திய கலைப்பாணியில் அமைந்துள்ள பாபநாதர் கோவில் திராவிட கலைப்பாணியில் அமைந்த சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை.
3. இரண்டாம் விக்கிரமாதித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது.
4. காஞ்சியில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டது என்று கருதப்பட்டது.
13.
1.பாடலிபுத்திரம் மெளரியப் பேரரசின் மாபெரும் தலைநராகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.
2. இது 14 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.
3. சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பிற்காகவும் , கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.
4. அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.
14.
ஸ்தவிரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பெளத்தத்தின் முக்கியமான பிரிவுகளை உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம். மஹாயானம் என பெளத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம்:
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பெளத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த 'பால' வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியில் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம் , பீகார் பகுதியில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பெளத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.
15.
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளாமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே.
தொல்பொருள்:
1. தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
2. அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
3. துரைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
4. ஆந்திரா - கர்நாடகப் பகிதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.
நாணயச் சான்றுகள்:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்து.
16.
1. மேய்ச்சல் சுமூக மக்கள், வேளாண்மை செய்வோம், வேட்டையாடிகள் -உணவு சேகரிப்பவர்கள், வணிகர்கள் போன்ற பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தனர்.
2. இத்தகைய மக்கள் இக்கால கட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து-காஷ்மீர் வரையிலும், குஜராத்திலிருந்து அருணாசலப்பிரதேசம் வரையிலும் பரவி இருக்கலாம்.
3. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து நாகரிகமும் செழிப்புற்றிருந்த பொது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன.
4. இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும்(கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்தனர்.
5. படகு போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
6. தென்னிந்தியாவின் வடபகுதி குறிப்பாக கர்நாடக, ஆந்திரப்பிரதேசம் ஆகியவை புதிய கற்கால பண்பாடுகளுடன் மேய்ச்சல் மற்றும் கலப்பைச் சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
7. புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் -கங்கைச்சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதியிலும், மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்பு கால பண்பாடு நிலவியது.
8. இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரீக காலத்தில் பல்வேறு பண்பாடுகளில் கலவை நிலப்பகுதியாக விளங்கியது.
17.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
18.
1. 1746-வாக்கில் துய்ப்ளே இந்திய பிரெஞ்ச் பகுதியான பாண்டிச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2. தான் தலைமையேற்ற சிறிது காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அமைதியுடனேயே கையாண்டார்.
3. ஐரோப்பாவில் ஆங்கிலேயர்க்கும் பிரான்சுக்கும் போர் மூண்ட போது இங்கு அமைதி காக்கும் படி சென்னை ஆங்கிலேய ஆளுநர் டோர்கிடம் கேட்டுக் கொண்டார்.
4. இருந்தபோதிலும் 1746-48ல் நடந்த முதல் கர்நாடகப்போரில் பிரான்சு ஆங்கிலேயரை தோற்கடித்தது.
5. துய்ப்ளே இங்கு சில பகுதிகளை தனதாக்கி பிரான்சின் ஆதிக்கத்திற்கு துய்ப்ளே அடித்தளமிட்டார்.
19.
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார்.
2.மரிய தேரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகிதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தேரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும்களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
5.போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
6. ஆனால் பார்னெட் என்பவரின் தலைமையிலான ஆங்கிலக் கடற்படை இந்தியக் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
7. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
20.
21.
1. முகலாயர் காலத்தில் இந்தியாவில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலககே கலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
2. கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனைகள் மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும், நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும், படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகாலயக் கட்டங்கள் பெயர் பெற்றவையாகும்.
3. சூர் வம்சத்து அரசர்கள், தில்லியில் புராணகிலா, பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோர் கண்களைக் கவரும் கட்டடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
4. அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹூமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது.
5. சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
6. பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட இக்கல்லறை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு முன்மாதிரியைத் திகழ்ந்தது.
7. மணற்கற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.
8. பதேப்பூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற் பகுதியும், அக்பர் சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாஸாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயரின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
9. தாஜ்மஹால், மோதிமசூதி, ஜும்மா மசூதி , செங்கோட்டை, பாதுஷாகி மசூதி, ரபீயா உத்தௌராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது முகலாயர் கால சிறப்பாகும்.
10. திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹூரம்ஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன.
22.
1. ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கையானது வளர்ந்து வந்த மரத்தியரின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது.
2. ஷியா பிரிவைச் சேர்ந்த தக்காணச் சுல்தானியங்களானக் கோல்கொண்டா, புஜாப்பூர் ஆகியவற்றின் கிளர்ச்சிப் போக்கிற்கு அணை போடுவது.
3. தக்காணத்தைப் புகலிடமாகக் கொண்ட தனது மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது.
4. ஒளரங்கசீப் 1682 இல் தக்காணம் வந்தார்.
5. 1707 இல் தனது மரணம் வரை தக்காணத்திலேயே தங்கியிருந்தார்.
6. பீஜப்பூரின் அடில்சாஹி வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் அடில்ஷா ஒளரங்கசீப்பின் பல படையெடுப்புகளை எதிர்த்து நின்றார்.
7. ஒளரங்கசீப் 1685 இல் தனது மகன் அசாம் ஷாவை அனுப்பி வைத்ததில் பயனேதுமில்லை.
8. பின்னர் மற்றொரு மகன் ஷா ஆலமை பீஜப்பூரைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார்.
9. ஷியா முஸ்லீமான பீஜப்பூர் சுல்தான் திறமையுடன் கோட்டையைப் பாதுகாத்தார்.ஆனால் ஒளரங்கசீப்பே நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கி இறுதிவரை போரிடும்படி தனது படைக்களுக்கு உற்சாகம் அளித்ததால் பீஜப்பூர் சுல்தான் தோல்வியடைந்தார் .
10. கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் 1687 இல் தோக்கடிக்கப்பட்டு கோல்கொண்டா கைப்பற்றப்பட்டது.
11. இவ்வாறாக ஒளரங்கசீப் தனது கடைசி காலகட்டங்கள் முழுவதையும் தக்கனத்தில் செலவிட்டதால் முகலாயரின் அழிவை அவருக்கு பின் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
23.
மாறுபட்ட மதக்கொள்கைகள்
| அக்பர் | ஒளரங்கசீப் |
| 1. இவர் பிற மதங்கள் தொடர்பான கோட்பாடுகளை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர். |
இவர் பிற மதங்கள் மீதான கோட்பாடுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. |
| 2. அனைவருக்கும் அனுமதி என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தார் |
ஒளரங்கசீப் 'ஜிஸியா' வரியை மீண்டும் விதித்தார் |
| 3. அக்பர் இபாதத் கானா என்னும் வழிப்பாட்டுக் கூடத்தை நிறுவினார். |
புதிய கோவில்கள் கட்டப்படக்கூடாது என ஆணைகள் பிறப்பித்தார். |
| 4.இபாதத் கானாவில் கூடி ஆன்மீக விசயங்கள் குறித்து அனைத்து மதத்தினரும் விவாத்திக்க அனுமத்தித்தார். |
கோவில்கள் தொடர்பான ஒளரங்கசீப்பின் சட்டங்களும் பழமையானதாகவே இருந்தது. |
| 5. அக்பரின் உண்மையான நோக்கம் மதசார்பற்ற கோட்பாடுகளை பல்வேறு நம்பிக்கைகளை சார்ந்தவர்களுக்கு சமமான சகிப்புத்தன்மையும் மதிப்பையும் உருவாக்குவதாகும். |
பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் அவருடைய மத நம்பிக்கைகளில் மட்டும் வேர் கொண்டு இருக்கவில்லை; மாறாக அரசியல் நிர்பந்தங்களும் அவை வேர்கொண்டிருந்தன. |
24.
இந்தியாவில் கிறித்துவ மதப்பரப்புக் குழுவினர் சமூகப் பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகள்:
(i) மதப்பரப்புக் குழுவினர் சமூகப் பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர்.
(ii) அரசுப் பணிகளில் அவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்றனர்.
(iii) பொது சாலைகளைப் பயன்படுத்துவது, தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிந்து கொள்வது போன்ற சமூக உரிமைகளுக்காகவும் சமய பரப்புக் குழுவினர் போராடினர்.
(iv) அனாதைக் குழந்தைகளையும், ஆதரவற்றோரையும் தங்கள் நிறுவனங்களில் தங்க வைத்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி வழங்கினர்.
(v) கிராமப்புறங்களில் வாழும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பை கிறித்துவ சமய நிறுவனங்களே தன்னார்வத்துடன் ஏற்றுக் கொண்டன.
(vi) மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
25.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
26.
துணைப்படைத் திட்டத்தின் கூறுகளாவன :
(i) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகாரக (resident) ஏற்க வேண்டும்.
(ii) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும்.அது முடியாதபோது மாகானத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
(iii) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசை பிற ஐரோப்பிய நாடுகளுக்கான தொடர்பை த் துண்டித்துத் கொள்ள வேண்டும்.அதிலும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்ககூடாது.
(iv) பிரிட்டிஷார் அனுமதிக்காமல் மார் ஐரோப்பியறை பணியிலமர்த்தக் கூடாது.
(v) பிற இந்திய அரசுகளாடு கம்பெனியின் அனுமதியில்லாமல் பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடாது.
(vi) எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சிலைகளில் தலையிடக் கூடாது.இவ்வாறு சுதேச அரசுகள் தங்கள் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனி சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.
(vii) துணைப்படைத் திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஓட்டுமொத்த திறனையும் கூட்டியது.அதன் உடனடி விளைவு என்பது சொந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில் முறை போர் வீரர்கள் வேலை இழந்ததே ஆகும்.
(viii)அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட வீரர்கள் கொள்ளைக்கரைகளாக மாறினார்கள்.பிண்டாரிகள் (கூட்டமாக சூறையாடுவோர)எண்ணிக்கை துணைப்படைத் திட்டத்திற்கு பின் கனிசமாக உயர்ந்தது.
(xi ) அரசர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதும், பாதுகாப்பிற்குள்ளிருந்த பல அரசுகளின் நிர்வாகம் திறம்பட இல்லை எனக் குற்றம் சுமத்தி அவற்றை இலகுவாக இணைப்பதும் நடந்தேறியது.
27.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
28.
1. சிவாஜியின் வருவாய் நிர்வாகம் நியாயமானதாக உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அமைந்து இருந்தது.
2. நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது. மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ அல்லது பொருளாகவோ செலுத்த்தப்பட்டது. பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
3. செலுத்த வேண்டிய வரித் தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
4.பஞ்சகாலத்தில் அரசு பணத்தையும் உணவு தானியங்களையும் உழவர்களுக்கு முன்பணம் அல்லது முன்பொருளாகக் கொடுத்தது. பின்னர் அவற்றை அவர்கள் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். விவசாயிகள், கால்நடை வாங்க, விதைப்புக்காக இன்ன பிற தேவைகளுக்காகக் கடன்கள் வழங்கப்பட்டன.
பேஷ்வாவின் நிலவருவாய்:
1.நில வருவாய்தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2. சிவாஜியின் ஆட்சியில் பின்போற்றப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர்.
3.நில வரியை வசூலிக்க குத்தகை நடை முறையைப் பின்பற்றினர்.
4. அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் நிலம் வழங்கப்பட்டிருந்தது.
5.நிலத்தின் உற்பத்தி திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
6.காடுகளிலிருந்து வருவாய் கிடைத்தது.கட்டணத்தின் பேரில் மரங்களை வெட்டுவதற்கு , மேய்ச்சல் வெளிகளைப் பயன்படுத்தவும் உரிமங்கள் வழங்கப்பட்டன.
7.புல், மூங்கில், எரிபொருள், தென் போன்ற பொருட்களை விற்பதன் வருவாய் கிடைத்தது.
29.
(i) முதலாம் முகமது சிறந்த அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசுமுறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
(ii) அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன்படி,
1. வகில் உஸ்சுல்தானா : படைத்தலைவர்; அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்.
2. வசீர் குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற் பார்வையிடுபவர்.
3. அமீர் இஜூம்லா : நிதியமைச்சர்.
4. வசீர் இஅஷ்ரப் வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர்.
5. நசீர்: நிதித்துறை இணையமைச்சர்.
6. பேஷ்வா: அரசப் படைகளின் பொறுப்பாளர்.
7. கொத்வால்: காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி.
8. சதர் இஜஹான்: தலைமைநீதிபதி; சமய அறநிலையத்துறை அமைச்சர்.
(iii) வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
(iv) நிறுவன மற்றும் புவியியல் ரீதியாக முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
30.
1. பதினாறாம் நூற்றாண்டில், நாயக்க நிர்வாக முறையில் நாயக்குகள் நெசவு போன்ற கைவினைத் தொழில்களை வளர்ப்பதற்காக அவ்வப்போது வரிச்சலுகை வழங்கினார்.
2. விஜயநகர அரசின் காலத்தில் வேளாண் சாராத கைவினைத் தொழில் உற்பத்தி வியத்தகு வளர்ச்சியை அடைந்தது.
3. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பொருளாதாரம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்திருந்தது.
4. பணப் பொருளாதாரத்தின் தொடக்கத் தோடு, நாணயப் பணத்தின் பயன்பாடும் அதன் செலாவணியும் பலமடங்காகப் பெருகியது.
5. சமூகத்த்தில் நெசவு செய்வோர், உலோக வேலை செய்வோர், கட்டடக்கலைஞர்கள் போன்ற கைவினைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
6. வேளாண் அல்லாத பிரிவுகளைச் சார்ந்த 'பட்டடை' அல்லது 'காஸய வர்க்கம்' என்றழைக்கப்பட்ட இவர்கள் வரிகளைப் பணமாகவே வழங்கினர்.
7. தமிழகத்தின் வடபகுதி, ராயலசீமை, ஆந்திரக் கடற்கரைபகுதி ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் வணிக மையங்களும் நெசவு மையங்களும் உருவாயின.
8. இயல்பாகவே தென்னிந்தியத் துறை முகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களில் ஜவுளி முக்கியப் பண்டமாக விளங்கியது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஜவுளி வணிகமானது.
9. இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர் மற்றும் ஏனைய ஐரோப்பிய வணிகர்களைப் பெரிதும் ஈர்த்த ஒன்றாகும்.
31.
(i) பக்தி இயக்கச் சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் 'போதித்தனர்.
(ii) பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான பற்றும், நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் என கருத்தை முன் வைத்தனர்.
(iii) இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
(iv) குருவானவர் வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.
(v) உலக சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தனர்.
(vi) உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
(vi) ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டுமென வலியுறுத்தினார்.
(vi) பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கும் சாதிமுறையைக் கண்டனம் செத்தனர்.
(vi) சடங்குகள் சம்பிரதாயங்கள், புனித யாத்திரைகள், விருந்துகள் ஆகியவற்றை எதிர்த்தனர்.
32.
பாசன வசதிகள்:
(i) பாண்டிய அரசர்கள் பெருமளவில் பாசன வளங்களை மேம்படுத்திட ஏரிகளையும், வாய்க்கால்களையும் வெட்டினர்.
(ii) பாசன வேலைகள் மேற்பார்வையிடுதல், பராமரிப்புப்பணி ஆகியவற்றை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள்.
(iii) உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஏரிகள்:
(i) அரச குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாசுதேவப்பேரேரி, வீரபாண்டிய பேரேரி, ஸ்ரீ வல்லபப்பேரேரி, வீரபாண்டியபேரேரி போன்றவை உருவாக்கப்பட்டன.
(ii) பொது ஏரிகளுக்கு திருமால் ஏரி, கயன்ஏரி, காடன் ஏரி எனப் பெயரிடப்பட்டது.
(iii) ஆறுகளின் கரைகளில் நீர்பாசனத்திற்கான நீரை குளங்களுக்கு கொண்டு செல்ல கால்வாய்கள் வெளிப்பட்டன.
(iv) ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஏரி இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.
பாசன தொழில்நுட்பம்:
(i) பாசனத்தொழில் நுட்பத்தில் பல்லவர் பாணியை பின்பற்றினார்.
(ii) ஏரிகரைகளை அமைக்கும்போது கரை மட்டத்தைச் சமமாக்க நூல் பயன்படுத்தினர்.
(iii) உட்பகுதிகளை வலுப்படுத்த கல் அடுக்குகளைப் பயன்படுத்தியமை இவர்களின் சிறந்த தொழில் நுட்பத்திற்கு சான்றாகும்.
(iv) வறட்சிப் பகுதியான இராமசாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன.
(v) வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இருகரைகளிலும் அவற்றின் நீரைப் பாசன குளங்களுக்கு கொண்டு செல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
(vi) பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.
வணிகர்களும், ஏரிவெட்டுதலும்:
(i) வணிகர்களும் பல பாசன ஏரிகளை வெட்டினார்கள்.
(ii) இருப்பைகுடி கிழவன் என்ற உள்ளூர் தலைவன் பல ஏரிகளை வெட்டியதுடன் பல ஏரிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
(iii) நில உரிமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர்.
(iv) இவர்களை நாட்டு மக்கள் என்று அழைப்பர். இவர்களின் சமுதாயக் குழசித்திர மேழி பெரியநாட்டார் என்று அழைக்கப்பட்டது.
33.
சோழர் காலத்தில் கோயில்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோயில்கள் விளங்கின.
கோயில் நிர்வாகம்:
கோயிராமர் -கோயில் கணக்கு, தேவகன்னி, ஸ்ரீவைஷ்ணவர், கண்டேசர் மற்றும் பிறர் முதல் நிலை கோயில் அதிகாரிகள் ஆவார். கோயில் கணக்கு என்பவரால் அதன் வரவு, செலவுகள் நிர்வகிக்கப்பட்டது.
சமூகப்பணி:
கோயில்கள் சமூகத்திருவிழாக் கூடமாக மாறியது. சித்திரைத்திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகியவை கொண்டாடப்பட்டண. திருவிழாக்கள் இராஜ இராஜனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இராஜ இராஜ நாடகம் தஞ்சாவூர் கோயிலில் நடத்தப்பட்டது.
கல்விப்பணி:
கோயில்களில் பாடப்பட்ட வழிப்பாடல்கள் வாய்மொழி கல்வியை வளர்த்ததாக கூறப்படுகிறது.
வேதம், இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தால் கோயில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது.
மக்களின் தொண்டு:
மேய்ச்சலை தொழிலாகக் கொண்டவர்கள் அணையா விளக்குக்கு கால்நடைகளை தானமாக வழங்கினார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் எண்ணெய் வழங்கி கோயில் அன்றாட நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கபாடியவர் என அழைக்கப்பட்டனர். பஞ்ச காலங்களில் கோயில்களில் தங்களை தாங்களே அடிமைகளாக உற்றுக்கொண்டனர்.
வங்கிகள்:
கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன் கொடிகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கோயில்கள் வங்கிகள் போன்று செயல்பட்டன.
மேற்கண்ட செய்திகளின் மூலம் கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டும் அல்லாமல் சமூக நிறுவனமாகவும் விளங்கியது என்பது தெளிவாகிறது.
34.
35.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
36.
முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார். இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை:
(i) பிரபுக்கள் வகுப்பாரிடமும், மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
(ii) பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
(iii) அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையே ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
(iv) பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
அடிமைகள் நலத்துறை:
(i) அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
(ii) முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
(iii) அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
(iv) 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
(v) கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை:
(i) ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
(ii) அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
(iii) இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
மதக் கொள்கை:
(i) வைதீக இசுலாமை ஆதரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
(ii) மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
(iii) இசுலாமியர் அல்லாதவருக்கு 'ஜிஸியா' என்றும் வரியை விதித்தார்.
(iv) புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
(v) இசுலாமியர் -அல்லாதோர் உள்படக் கற்றறிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.
பொதுப்பணிகள்:
(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.
(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,
(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன.
இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.
37.
கோரி முகமதுவின் வட இந்திய போர்களில் முக்கியமானது தரைன் போர்களாகும். தெற்கு ஆசிய இஸ்லாமிய ஆட்சி அமைய அடித்தள மிட்டவரும் இவரே.
முதல் தரைன் போர் 1191:
அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகானுக்கும் கோரி முகமதுவுக்கும் இடையே 1191ல் முதல் தரைன் போர் நடைபெற்றது. இதில் கோரி முகமது தோல்வியுற்றார். காயம் அடைந்த கோரி முகமதுவை ஒரு குதிரை வீரன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.
இரண்டாம் தரைன் போர் 1192:
1. முதல் தரைன் போரில் தோல்வியுற்ற கோரி முகமது மீண்டும் பிருத்விராஜ் சௌகான் மீது 1192 2வது தரைன் போர் நிகழ்த்தினார்.
2. இம்முறை கோரியின் ஆற்றலை பிருதிவிராஜ் குறைத்து மதிப்பிட்டார். தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
3. சிறிய படைக்குழுவுக்குத் தலைமை தாங்கி 2வது தரைன் போரில் ஈடுபட்டார்.
4. 2வது தரைன் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
5. இந்திய வரலாற்றின் திருப்பு 2வது தரைன் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி பிருதிவிராஜிடமமே ஆட்சியை ஒப்படைத்தார்.ஆனால் ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரைக் கொன்றார்.
6. தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப்பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
இவ்வாறாக இரண்டாவது தரைன் போர் ராஜபுத்திர ஆட்சியின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சிக்கும் வழிவகை செய்தது எனலாம்.
38.
1.அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மெளரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன.
2. 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும்.
3.2 கல்வெட்டுக் கட்டளைகள்
4. 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள்
5. சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள்
6. மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டு கட்டளைகள் கிடைத்துள்ளன.
7. இந்த மெளரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கிலபரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.
8. இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியீயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; "சோழர்கள், பாண்டியர்கள், சத்திய புத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி,யோன (பவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகஸ் அருகில் இருந்த நம்பிக்கை, மக்களது நல்வாழ்வின் மெது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன.
9.வன்முறை, போர் ஆகியவற்ரநிராகரித்து, அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் எண்டு அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.
39.
40.
(i) பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகள் வாணிபம் சார்ந்தே இருந்தன.
(ii) பல்லவர் கால வணிகர்கள் வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு "நானாதேசி" ஆகும். "நானாதேசியின்" செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.
(iii) இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
(iv) தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வாணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா, சம்பா, ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
(v) மேற்கு கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரேபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
(vi) அயல் நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
(vii) மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது.
மேற்கண்டவாறு பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை வரையறுத்துக் கூறலாம்.
41.
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பொ.ஆ.770-815)
தர்மபாலரும் பௌத்தமும்:
பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடலாயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த மையமாக உருவானது
சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் - ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடலாயத்தையும் காட்டினார்
ஹரிஷபத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
தேவபாலரும் பௌத்தமும்
பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்
சுவரணதீப் அரசன் பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடலாயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
இவரது ஆட்சியில் நாளாந்தா பௌத்தமதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானபிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்
பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்த மடலாயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
42.
சிவ வழிபாட்டிலிருந்து பௌத்தராக மாறுதல்:
ஹர்ஷர் சிவா வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார்
அனல் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார்
பௌத்த மாதத்தில் மகாயானபிரியவை பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தவர்.
பௌத்த மாநாடுகள்:
ஹர்ஷர் பொ.ஆ 643ல் இரண்டு பௌத்த மதக்கூட்டங்களை கூட்டினார். முதலாவது கன்னோசியிலும் 2வது பிரயாகையிலும் கூட்டப்பட்டது.
கன்னோசியில் பௌத்த மாநாடு:
காமரூப அரசன் பாஸ்கரவர்மன் உட்பட 20 அரசர்கள் பங்கு கொண்டனர்.
பௌத்தம், சமணம், வேதம் கற்றோர் என பல மாநிலத்தை சேர்ந்த அறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
புத்தரின் மூன்று ஆதி உயர தங்கத்தாலான சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.
பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம்
ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் "மகாமோட்ச பரிஷத்" ந அழைக்கப்பட்ட மதக்கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார்
தான் சேகரித்த செல்வதை பௌத்த மதத்தினர் - வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார்
கூட்டம் நடந்த நான்கு நாட்களும் புத்ததுறவிகளுக்கு எண்ணற்ற பரிசு பொருட்களை வழகினார்.
யுவான் சுவாங்கின் கூற்று
ஹர்ஷர் காலத்தில் மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழக்கப்பட்டிருந்தது.
வேறுபட்ட மதங்களை பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
ஹர்ஷர் புத்த பிட்சுகளையம் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாக பாவித்து கொடைகளையும் சமமாக பகிர்ந்தளித்தார் என யுவன் சுவாங் பதிவு செய்துள்ளார்.
43.
குப்தர் காலத்தில் அரசு சார்பில் ஏராளமான பாசன பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது. பஹார்பூர் செப்பேடு அரசர் தன நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுகிறது. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தாபலா என்ற அதிகாரி நிலா பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்தார். கிராமநிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராமகணக்கர் பராமரித்தார். குப்தர் காலத்தில் நிலம் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டிருந்தன.
பெயர் நிலப்பிரிவு
1.க்ஷேத்ர - பயிரிடக் கூடிய நிலம்
2. கிலா - தரிசுநிலம்
3. அப்ரஹதா - காடு அல்லது தரிசுநிலம்
4. வாஸ்தி - குடியிருக்கத் தகுந்த நிலம்
5. கபடசஹாரா - மேய்ச்சல் நிலம்
பல்வேறு விதமான நிலக்குத்தகை முறை:
1. நிலக்குத்தகை வகை - உரிமையின் தன்மை
2. நிவி தர்மா - அறக்கட்டளை மூலம் நிலமான்யம்
3. நிவிதர்ம அக்சயினா - நிரந்தர அறக்கட்டளை பெற்றவர் அதன் வருவாயை பயன்படுத்தி கொள்ளலாம்.
4. அப்ரதா தர்மா - வருவாயை பயன்படுத்தலாம். தானம் செய்ய முடியாது நிர்வாக உரிமை கிடையாது.
5. பூமி சித்ராயனா - தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுபவர்க்கு தரப்படும் உரிமை - குத்தகை விலக்கு
6. அக்ரஹாரா மானியம் - பிராமணர்களுக்கு தரப்படுவது வரிகிடையாது.
7.தேவக்கிரஹாரமானியம் - கோயில் மராமத்து வழிபாடு போன்றவற்றிற்காக கொடுக்கப்படுவது
8. சமயச் சார்பற்ற மானியம் - நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம்.
44.
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெறுவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:
1. தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
2. அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
3. இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்ட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
(திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது).
4. மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கீயத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
5. சோழரின் சின்னம் புலி ஆகும்.
சேரர்:
1. மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
2. வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
3. சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
4. சேரர்களின் சின்னம் வில்அம்பு ஆகும்.
பாண்டியர்:
1. மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியச் துறைமுகமாகும்.
2. இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகவும். கொற்கை பெரிப்ளஸின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. பாண்டியரின் சின்னம் மீன்.
4. மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.
45.
இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:-
1. சமயப் பிரிவினை:
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பெளத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்:
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பெளத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பெளத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரசு ஆதரவை இழத்தல்:
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பெளத்தம் அரசு ஆதரவை இழந்தது. வேத மதம் அரசு ஆதரவை பெற்றது. பெளத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்:
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினார். இதனால் பெளத்தமதவளர்ச்சி பாதித்தது.
5. ஹீணர்கள் படையெடுப்பு:
ஹீண ஆட்சியாளர்களான தோராமானர் மிகுரகுலர் ஆகியோர் பெளத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் பெளத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு:
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவர ஆதரவாளர்கள். ஆதலால் பெளத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொள்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பெளத்த மதம் காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு:
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பெளத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பெளத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.
46.
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.
திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)
ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வே தாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது.
பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபுத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.
47.
48.
புதிய கற்கால பதொடக்கம்:
1. வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது.
பரவல்:
புதிய கற்கால பண்பாட்டின் பழைமையான சான்றுகள் எகிப்தின் செழுமை பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்து பகுதி, கங்கைப்பள்ளத்தாக்கு, சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலம் : பொ.ஆ.மு. 10,000-5,000
வேளாண்மை:
1. தாவரங்களையும், விலங்குகளையும் பழக்கப்படுத்தியதின் மூலம் உணவு தானியங்கள் கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
2. ஆறுகளின் மூலம் படியும் செம்பலான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தனியா உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
புதிய கற்கால புரட்சி :
1. பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
2. எனவே இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதியகற்கால புரட்சி எனப்படுகின்றன.
49.
வரலாற்றின் முந்தைய காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து கிடைத்துள்ள கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள் கலைப்பொருட்கள், உலோக கருவிகள் போன்ற தொல் பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை
1. பழங்கற்காலம் 2. இடைக்கற்காலம் 3. புதியகற்காலம் 4. உலோகக்கலாம் என வகைப்படுத்தலாம்.
பழங்கற்காலம்:
இது 1. கீழ்பழங்கற்காலம் (60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை) 2. இடைப்பழங்கற்காலம்(பொ.ஆ.மு. 3,85,000-40,000) 3. மேல்பழங்கற்காலம் (பொ.ஆ.மு. 40,000-10,000)
1. பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பொழுது நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ளன.
2. பழங்கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடித் கொண்டனர். இவர்களை உணவு சேகரிப்போர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
3. பழங்கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை.
இடைக்கற்காலம் :
1. இது பொ.ஆ.மு.10,000த்தில் தோன்றியது. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிய முடிகிறது.
2. உணவு சேகரிக்க, வேட்டையாட அதிகபட்சம் 5 செ.மீ நீளமுடைய நுண்கருவிகளை கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
3. வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினார். ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி வாழும் போக்கு வளர்த் தொடங்கியது.
4. பயிரிடுதல், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்கள் ஆரம்பித்தன.
புதியகற்காலம்:
1. பொது ஆண்டுக்கு முன்பு 7000-5500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
2. வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கருவிகளை பளபளப்பகுதல் சக்கரத்தின் மூலம் மட்பாண்டம் செய்தல் போன்றவை இக்கால பண்பாட்டின் புதிய கூறுகளாகும்.
3. கிராம சமுதாயங்களை உருவாக்கினர். புல்லால் ஆன குடிசைகளுக்குபதில் களிமண் கற்களால் ஆன குடிசைகள் அமைக்கப்பட்டன.
4. இறந்தோரை புதைத்தனர். பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
5. கோதுமை, பார்லி, நெல் தினை போன்றவை பயிரிடப்படுகின்றன.
உலோகக் கலாம்
1. இக்காலத்தில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப்படுகிறது. உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
2. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செப்புக்கற்கால பண்பாடு வளர்ச்சி அடைந்தன. ஹரப்பா பண்பாடு செம்புகற்கால பண்பாட்டின் ஒரு பகுதியே.
3. தமிழ்நாட்டில் பையம் பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பாலான பொருள்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
4. தென்னிந்தியாவில் செம்பு காலமும்- இரும்பு காலமும் சமகாலம். கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், இரும்பு மண்வெட்டி, அரிவாள் சிறு ஆயுதங்கள் காணப்படுகின்றது.
50.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards