11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
மராத்தியர்கள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.
2.
ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக.
3.
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?
4.
சிறு குறிப்பு வரை க. அ) செளத் ஆ) சர்தேஷ்முகி
5.
புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?
6.
நவீனக் கல்விமுறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக
7.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.
8.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?
9.
ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்கள்
10.
நயங்கார முறை
11.
1775-1782 நடைபெற்ற போர்
12.
மூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்
13.
மராத்தியர்களின் எழுச்சிக்கான காரணங்கள்
14.
______________என்ற இடத்தில் சிவாஜி கைப்பற்றியதன் மூலம் மராத்தியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
ஜாவ்லி
ராஜகிரி
பிரதாப்கர்
சதாரா
15.
_____________ முகலாயர்களின் முக்கிய துறைமுகமாக இருந்தது.
மும்பை
காண்ட்லா
சூரத்
தண்டி
16.
ஜாகிர் என்பது____________ ஆகும்
காடுகள்
ஆறுகள்
மலைகள்
நிலம்
17.
கீழ்க்கண்டவற்றுள் இரண்டால் சரபோஜி எழுதாத புத்தகம் எது?
குமாரசம்பவ சம்பு
தேவேந்திர குறவஞ்சி
முத்ராஷ்ஸ்சாயா
குமார சம்பவம்
18.
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க ____________இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.
சரஸ்வதி மஹால்
முக்தாம்பாள் சத்திரம்
நவ வித்யா
தன்வந்திரி மஹால்
19.
கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத்த தளங்களை கட்டியவர்_____________ ஆவார்.
பாலாஜி பாஜிராவ்
நானா சாகிப்
இரண்டாம் பாஜிராவ்
பாலாஜி விஸ்வநாத்
20.
இரண்டாவது ஆங்கிலோ-மராத்தியப் போரின் போது ஆங்கிலேய கவர்னர்- ஜெனரலாக இருந்தவர்____________.
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
21.
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அழகின் தலைவராக ____________ இருந்தார்.
நாயக்
ஹவில்தார்
பர்கிர்
ஹைலோதார்
22.
புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் _____________க்கும் இடையே கையெழுத்தானது.
அஃப்சல்கான்
செயிஷ்டகான்
ஜெய்சிங்
ஒளரங்கசீப்
23.
வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்_______________.
மராத்தியர்
முகலாயர்
ஆங்கிலேயர்
நாயக்கர்
1.
1.மராத்தியரின் வழிவந்தவரான பாலாஜி விஸ்வநாதர் காலத்தில் மேற்கு கரையோரத்தில் தளபதியாக இருந்தவர் கனோஜி ஆங்கிரே.
2. அங்கு அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகவும் திகழ்ந்தார்.
3.உள்நாட்டுப் போரின் பொது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
2.
1.1817-ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி மராத்தியர்களை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினர்.
2.பூனா ஒப்பந்தத்தின் காரணமாக மராட்டியக் கூட்டமைப்பின் தலைமையிலிருந் பேஷ்வா பதவி விலகினார்.
3.கொங்கணப் பகுதியை ஆங்கிலேயருக்கு வழங்கியதோடு கெயிக்வாரின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.
4. மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்க ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா,போன்ஸ்லே, ஹோல்கர் ஆகியோருடன் சதி திட்டம் திட்டியதாகப் பேஷ்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
3.
1.1761-ல் நடந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தில் மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது.
2.போர்க்களத்தில் கிட்டத்தட்ட 25,000-க்கும் மேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
3.பின்னர் நடந்த ஆங்கிலேய மராத்தியப் போர்களில் மராத்தியரின் வலிமை முற்றிலுமாக குறைக்கப்பட்டது.
4. சிவாஜியின் வழித் தோன்றலான பிரதாப் சிங் ஒரு சிறிய பகுதிக்கு அரசராகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
4.
அ) செளத் :
1. சிவாஜி தனது சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளில் முகலாய மாகாணங்களிடமிருந்தும், பிஜப்பூர் சுல்தானிடமிருந்தும் வசூலித்த ஒரு வகை வரி செளத் எனப்படும்.
2. இது மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது.
ஆ) சர்தேஷ்முகி :
1. தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார்.
2. மரபு வழியாகத் தனது நாட்டின் சர்தேஷ்முக்காக சிவாஜி விளங்கினார்.
3. தனது தகுதியின் காரணமாக கூடுதல் வருவாயில் 10% ஐ சர்தேஷ்முகி என்னும் வரி மூலம் பெற்றார்.
5.
1.புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
2. மன்சப்தாராகச் செயல்பட்டு பிஜப்பூரைக் கைப்பற்றி முகலாயருக்கு உதவ ஒப்புக் கொண்டார்.
6.
1.சரபோஜி, சமபரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803 ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார்.
2. ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு எனத் தஞ்சாவூர் மற்றும் இதர அண்டை இடங்களில் இலவச தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன் முயற்சியாகும்.
3.அனைத்து நிலைகளிலான பள்ளிகள், நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும்.
4.அரசவை மேன்மக்கள், வேத அறிஞர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆக அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
5.புதிய அல்லது நவீன கல்வி முறைக்காக 'நவவித்யா' முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன் முயற்சியாகும்.
6. சிவாஜி தனது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் படங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் அவரது அதிநவீனத் திட்டமாக இருந்தது.
7.
1.பாலாஜி விஸ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720-ல் மன்னர் சா ஹீவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
2. ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ராஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார்.
3.முகலாயர்களின் கட்டப்பட்டிலிருந்து புந்தேல்கண்ட் பகுதியை அவர் விடுவித்தார். அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது.
4.பேஷ்வாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731-ல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டார்.
5. தலைமைத் தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக் கொண்டார்.
6.தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738 ல் போர்த்துகீசியரிடமிருந்து கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
7.இச் சமயத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப் பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையை பெற்றார்கள்.
8.
1. சிவாஜியின் நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகிர் வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது.
2.காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை , ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
3. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரிய போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
4.ரெஜிமண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாப்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தார்.
5. ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.
6. சாரிநெளத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார்.
7.ஒவ்வொரு குதிரைப் படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பார்கிர்கள் என்றும், தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
8.இது தவிர நீர் கொண்டு செல்லலும் குதிரைப் பரட்டை வீரர்களும், லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
9.
1.ராஜா தேசிங்கு நவாபுக்கு எதிராக அவெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.
2.1714-ல் சுவரூப் சிங் மறைந்த பிறகு அவரது மகன் ராஜா தேசிங்கு செஞ்சியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.
3.முகலாய மன்னருக்கு கப்பம் கட்ட மறுத்ததை அடுத்து நவாப் சதத்-உல்-லா கானின் போபத்திற்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 22 வயதே ஆன ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார்.
4.அவரது இளவயது மனைவி உடன்கட்டை ஏறினார்.
10.
1.கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சிக் காலத்தில் நயங்காரா அமைப்பை உருவாக்கினார்.
2.இதன்படி தமிழகம் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என மூன்று பிரிவாக நயங்காரக்களாக பிரிக்கப்பட்டது.
3.இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். பாளையக்காரர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
11.
1.நானாபட்நாவில் ஆட்சியில் மாதவ்ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவின முதலாம் மாதவ்ராவின் மாமா ரகுநாத்ராவ் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
2.இது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வேலையைப் பார்க்க கம்பெனி நிர்வாகத்துக்கு வாய்ப்புக் கொடுத்தது.
3. சால்செட், பேசின் ஆகிய பகுதிகளை ரகுநாத்ராவ் திரும்பப்பெற பம்பாயிலிருந்து கம்பெனி நிர்வாகம் ஆதரவாக இருந்தது.
4.மகாதாஜி சித்தியாவும், நாக்புரின் போன்ஸ்லேயும் ஆங்கிலேய ஆதரவாளராக ஆனதை அடுத்து மராத்தியர் சால்செட், தானே ஆகியப் பகுதிகளை ஆங்கிலேயருக்கு தாரை வார்க்க நேரிட்டது.
5.சால்பை உடன்படிக்கையின்படி 1782-ல் ரகுநாதத்ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார். இதனை அடுத்து கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே சுமார் இருப்பது ஆண்டு காலத்துக்கு அமைதி நிலவியது.
12.
1.மூன்றாம் பானிபட் போரின் காரணமாக மராட்டியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது.
2.பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ்ராவ், சதாசிவராவ் மற்றும் எண்ணற்ற மராட்டிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
3.போர்க்களத்தில் 28,000 பேரின் உடல்கள் கிடந்தன. ஹோல்கர் தப்பியோடினார்.
4.சிந்தியாவின் படைகள் ஹோல்கரை துரத்தியது. இந்தச் துயரச் செய்தியை கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார்.
5.இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761-ஜூனில் மரணமடைந்தார்.
6.பானிபட் போருக்குப் பிறகு அப்தலி இரண்டாம் ஷா ஆலத்தை தில்லியின் மன்னராக அங்கீகரித்தார்.
7. ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் கப்பம் கிடைத்தது.
13.
1.மக்களின் இயல்பும், அதன் புவியியல் கூறுகளும் மராத்தியரின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2. பக்தி இயக்கமும் அதன் தாக்கமும் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.
3.பிஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடையே வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர்.
4.தக்காண போர்களின் காரணமாக முகலாயர்களின் கருவூலம் காலியானது.
5. சிதறிக் கிடந்த மராட்டியரை சிவாஜி ஒன்று திரட்டினார்.
14.
(a)
ஜாவ்லி
15.
(c)
சூரத்
16.
(d)
நிலம்
17.
(d)
குமார சம்பவம்
18.
(d)
தன்வந்திரி மஹால்
19.
(d)
பாலாஜி விஸ்வநாத்
20.
(b)
வெல்லெஸ்லி பிரபு
21.
(a)
நாயக்
22.
(c)
ஜெய்சிங்
23.
(a)
மராத்தியர்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards