11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
முகலாயப் பேரரசு
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இரண்டாம் பானிபட் போர் பற்றி குறிப்பு வரைக.
2.
சராய்- என்பது யாது?
3.
“முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.
4.
சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்
5.
ஔரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில், மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?
6.
சிறு குறிப்பு வரைக. அ) வில்லியம் ஹாக்கின்ஸ்
ஆ) சர் தாமஸ் ரோ
7.
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
8.
இந்தியாவில் கிறித்துவம் பற்றி விவரி.
9.
ராஜா தோடர்மால்-குறிப்பு வரைக.
10.
கபீர்
11.
அக்பரது மன்சப்தாரி முறை.
12.
“வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து
இறந்தார்” – விவரிக்கவும்.
13.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
14.
"வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.
15.
ஷேர்ஷா சூர் தன்னுடைய கல்லறை மாடத்தை __________என்னும் இடத்தில் அமைத்தார்.
சசாரம்
புராணகிலா
டில்லி
ஆக்ரா
16.
"விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்" என நம்பியவர்______________.
அக்பர்
ஹீமாயுன்
தோடர்மால்
ஷேர்ஷா
17.
பாபரின் காலத்தில் ஈரானை ஆட்சி செய்த அரச வம்சம்_________________.
சபாவி
தாரிக்
உஸபெக்குகள்
தைமூர்
18.
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?
இங்கிலாந்தின் எலிசபெத்
ஷேக்ஸ்பியர்
பிரான்ஸின் நான்காம் ஹென்றி
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
19.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ________.
தாயுமானவர்
குமரகுருபரர்
இராமலிங்க அடிகள்
சிவப்பிரகாசர்
20.
பாதுஷா நாமா என்பது ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.
பாபர்
ஹீமாயூன்
ஷாஜகான்
அக்பர்
21.
________ சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.
ஆக்ராவை
குவாலியரை
தில்லியை
மதுராவை
22.
23.
இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஐஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் _________.
குரு அர்ஜுன் தேவ்
குரு ஹர் கோபிந்த்
குரு தேஜ் பகதூர்
குரு ஹர் ராய்
24.
________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் செளசாப் போரில் வெற்றி பெற்றார்.
பாபர்
ஹீமாயூன்
ஷெர்கான்
அக்பர்
25.
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.
காலாப் படை
குதிரைப் படை
பீரங்கிப் படை
யானைப் படை
1.
1.1556-நவம்பர் மாதம் அக்பர் தில்லியை நோக்கிப் புறப்பட்டு ஹெமுறை இரண்டாம் பானிபட் போரில் சந்தித்தார்.
2.போர் ஹெமுவுக்குச் சாதகமாக அம்பொன்று பாய மயக்கமுற்று கீழே விழுந்தார்.
3.தலைமை இல்லாத ஆப்கானியப் படைகளை முகலாயப் படைகள் வெற்றி கொண்டன.
4. ஹெமு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
2.
1.ஷேர்ஷா சூர் ஆட்சிகாலத்தில் நாட்டிலுள்ள பல சாலைகள் சீரமைக்கப்பட்டன.
2.அதே போல் புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன. அனைத்து சாலைகளிலும் சராய் எனப்படும் சாத்திரங்கள் அமைக்கப்பட்டன.
3.இதில் வணிகர்கள், தங்கவும், உணவருந்தவும் வசதிகள் செய்யப்பட்டன.
4. இன்றளவும் இந்த சராய்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
3.
1. முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது.
2. முகலாயரின் நுண் ஓவியங்கள் உலகத்தின் பல அருங்காட்சியகங்களின் முக்கிய இடம் வகிக்கின்றன.
3. குஜராத், மாளவம் ஆகிய பகுதிகளில் உயிர்ப்புடன் செயல்பாட்டிலிருந்த இந்திய ஓவிய மரபுகள், மேற்காசிய ஓவிய மரபுகளின் செல்வாக்கோடு இணைந்து ஓவியக் கலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
4. மத்திய ஆசியாவிலிருந்து ஹுமாயூனோடு இந்தியா வந்த நுண் ஓவியகே கலைஞர்களான அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்திய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர்.
5. முகலாய நுண்ணோவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
4.
i) சீக்கிய மதம்
1. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக் ஆவார்.
2. சீக்கிய மதம் ஒரு கடவுள் கோட்பாட்டை உடையது.
3. சீக்கியரின் புனித நூல் குறு கிரந்த சாகிப்.
4. "கடவுள் ஒருவரே" அக்கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் எனச் சொல்கிறது இம்மதம்.
5. உருவ வழிப்பாட்டையும் மதச் சடங்குகளையும், சாதிமுறையைக் கண்டனம் செய்கிறது.
6. இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது.
ii) சூபியிஸம்:
1. சூபியிஸம் என்பது இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன் வைக்கும் ஒரு மதக் கோட்பாடாகும்.
2. ஈரானில் உதயமான இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
5.
1. வடஇந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள் அரங்கேறின.
2. ஜாட் (மதுரா மாவட்டம்), சத்னாமியர் (ஹரியான பகுதி), சீக்கியர் ஆகியோர் கலகம் செய்தனர்.
3.தொடர்ந்து கலகம் செய்யும் இயல்பினைக் கொண்ட ஜாட்டுகளின் கலகம் 1669 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டது.
4. சத்னாமியரின் கிளிர்ச்சியானது உள்ளூர் இந்து ஜமீன்தார்களின் உதவியோடு ஒடுக்கப்பட்டது.
5. சீக்கியர் கலகமானது சீக்கியரின் ஒன்பதாவது குருவான தேஜ்பகதூர் கொல்லப்பட்டதோடுகிளர்ச்சி முடிவுற்றது.
6.
அ) வில்லியம் ஹாக்கின்ஸ்
1. முகலாயப் பேரரசர் ஐஹாங்கீர் அரசவைக்கு வந்த முதல் ஆங்கிலேயர் வில்லியம் ஹாக்கின்ஸ்.
2. இந்தியாவில் வணிக குடியேற்றங்களுக்கு அரசரிடம் அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டது.
ஆ) சர் தாமஸ் ரோ
இங்கிலாந்திலிருந்து தூதுவராய் வந்த இவர் அரசரிடம் அனுமதி பெற்று சூரத்தில் வணிக மையம் ஒன்றை அமைத்தார்.
7.
1. வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்த வர்த்தகம்.
2. பாபர் செல்ல விரும்பிய இடத்தைப் பற்றிய (இந்தியா) தகவல்களை வழங்கியது.
3. அவரின் முன்னோர் தைமூர் செய்ததை மீண்டும் செய்ய வேண்டும் என எண்ணினார்.
4. தில்லிசுல்தான் அரசியல் ரீதியாக வீழ்ச்சியுறுவதை கண்ட பாபர் இந்தியாவில் மீது படையெடுக்க தீர்மானித்தார்.
8.
1.ஐரோப்பிய வணிகரின் வருகையோடு பிரான்ஸிஸ் சேவியர், ராபர்ட்-டி-நொபிலி போன்ற கிறித்துவ மதப்பரப்பாளர்களும் இந்தியா வந்தனர்.
2. தொடக்ககால கிறித்துவ மதப் பரப்பாளர்கள் கத்தோலிக்கர்களாவர்.
3.டேனியர்களின் ஆதரவின் கீழ் முதல் லுத்தரன் மதப் பரப்பாளர்கள் 1706 இல் தரங்கம்பாடிக்கு வந்தனர். அவர்களில் ஒருவரான சீகன் பால்கு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை 1714 இல் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
9.
1.முகலாயப் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர் ராஜா தோடர்மால்.
2.அக்பரின் அவையில் வருவாய் துறை நிர்வாகத்தில் மிகச் சிறந்து விளங்கியவர்./
3.பின்னாளில் திவானாக பதவி உயர்த்தப்பட்டவர்.
4.இவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஜப்தி முறையானது புகழ்பெற்றது.
5. இதன்படி நிலத்தின் அளவு, விளைவிக்கப்பட்ட பயிர் ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயி பணமாகச் செலுத்த வேண்டிய வரி நிர்ணயிக்கப்பட்டது.
10.
1. பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஆளுமை கபீர் ஆவார்.இவர் முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை முன் வைத்தவர்.
2. உருவ வலிப்பட்டையும், சடங்குகளையும், சாதி முறையையும் கண்டித்தார்.
3. எளிய மொழி நடையில் எழுதப்பட்ட இவரின் பாடல்கள் வாய்மொழியாகவே வடஇந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவின.
4. பிரபலமான தஸ்கிரா-இஸிந்த் எனும் நூல் அவரை சூபி துறவியான ஷேக்தகி என்பவரின் சீடராகச் சித்தரிக்கிறது.
11.
1.அக்பர் ஒரு முறைப்படுத்தப்பட்ட, மையப் படுத்தப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கினார்.
2. பிரபுக்கள், குடிமைப் பணிசார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
3. மன்சப்தார் தகுதி ஜாட், சவார் என இருவகைப் பட்டது.
4. ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதாகும்.
5. அவ்வெண்ணிக்கை 10 முதல் 10.000 வீரர்கள் வரை ஆனதாகும்.
6. சவார் என்பது மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கைக் குறிக்கும்.
7. வீரர்களின் எண்ணிக்கை, குதிரைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் ஒரு மன்சப்தாரின் உயர்வும் தாழ்வும் நிர்ணயம் செய்யப்பட்டன.
12.
1. கன்னோசி போரில் தோற்றுத் தப்பியோடிய ஹுமாயூன் பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்று காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார்.
2. பின்னர் ஹுமாயூன் மீண்டும் பேரரசர் ஆனார்.
3. ஆனால் மிக விரைவிலேயே தில்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுந்து ஹுமாயூன் இறந்து போனார்.
4. ஸ்டேன்லி லேன்பூலின் பொருள் பொதிந்த வார்த்தைகளில் செல்வதென்றால் வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்து ஹுமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்.
13.
காடு சார்ந்த பொருளாதாரம்:
1. முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.
2. காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது.
3. தச்சர், கப்பல்கட்டுவோர், மேல்பூச்சி சாயம் தயாரிப்போர் ஆகியோருக்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன.
4. நெசவு செய்வோர் உருளைகள் செய்வோர்க்குத் தேவையான பக்குவப்படுத்தப்படாத பட்டையை வழங்கியது.
5. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருவாக்குவோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது.
வேளாண் சார்ந்த பொருளாதாரம்:
1. கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
2. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம்.
3. அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது.
4. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
5. அவுரி முகலாய கால முக்கிய வணிகப் பயிராகும்.
நகைப்புறப் பொருளாதாரம்:
1. நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற்கூடங்களைச் சார்ந்திருந்தது.
2. பஞ்சடித்துப்பட்டை இடுபவர் நூல்நூற்போர்,நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப்பதிப்போர், சலவை செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
3. பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. வங்காளம் உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் முக்கிய மையமாக திகழ்ந்தது.
வர்த்தகமும் வாணிகமும்:
1. நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
2. உபரி பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளும், ஒட்டக வண்டிகளும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
3. பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலை தூரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.
4. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
14.
1.ஷெர்ஷா தனது அரசை மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார்.
2. நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார்.
3. நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு எவ்வாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
4. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
5. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வாரியாக வசூலிக்கப்பட்டது.
6. ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார்.
7. வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார்.
வணிகமும், வர்த்தகமும்:
1. வணிகத்தையும் வர்க்கத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பராமரித்தார்.
2. பழைய சாலைகள் புதுப்பிக்கபட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன.
3. அனைத்துச் சாலைகளிலும் 'சராய்' எனப்படும் சாத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப் பட்டன.
4. இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்தரவாதம் அளித்தன.
5. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.
6. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.
7. மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதிநிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும்.
15.
(a)
சசாரம்
16.
(d)
ஷேர்ஷா
17.
(a)
சபாவி
18.
(d)
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
19.
(b)
குமரகுருபரர்
20.
(c)
ஷாஜகான்
21.
(b)
குவாலியரை
22.
(c)
23.
(a)
குரு அர்ஜுன் தேவ்
24.
(c)
ஷெர்கான்
25.
(c)
பீரங்கிப் படை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards