11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
துணை ஏடுகள் - I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் விவரங்களை விஜய் மின் பொருள் விற்பனையகத்தின் கொள் முதல் ஏடு, கொள் முதல் திருப்ப ஏடு, விற்பனை ஏடு, விற்பனைத்திருப்ப ஏடு ஆகியவற்றில் பதிவு செய்க.
| 2017 | |
| ஜனவரி 1 | பிரித்தி நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது |
| 25 மேசை விசிறிகள் ஒன்று ரூ. 1,400 வீதம் | |
| 10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் | |
| ஆட்டோ கட்டணம் ரூ. 100 சேர்க்க்க்கவும் | |
| ஜனவரி 5 | ஷீலா விற்பனையகத்திற்கு கடனுக்கு விற்றது |
| 10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம் | |
| 20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம் | |
| வியாபாரத்தள்ளுபடி 10% குறைக்கவும் | |
| ஜனவரி 10 | பிருந்தா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது |
| 10 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 1,300 வீதம் | |
| ஜனவரி 18 | பிரித்தி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது |
| 5 மேசை விசிறிகள் குறைபாட்டுடன் இருந்தன. அதற்கான்கான ரொக்கம் பெறப்படவில்லை | |
| ஜனவரி 20 | சத்யா மின் பொருளகத்திடமிருந்து வாங்கியது. |
| 10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,200 வீதம் | |
| வியாபாரத்தள்ளுபடி 5% நீக்கவும் | |
| ஜனவரி 21 | ஷீலா விற்பனையகித்திடமிருந்து 3 மின் தேய்ப்பான்கள் குறைபாடு காரணமாக திருப்பி வந்தது. அதற்கான ரொக்கம் செலுத்தப்படவில்லை |
| ஜனவரி 23 | எலிசபெத் நிறுவனத்திடமிருந்து 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ரூ. 4,700 வீதம் கடனுக்கு வாங்கப்பட்டது |
| ஜனவரி 25 | பவானி நிறுவனத்திற்கு கடனுக்கு விற்றது 7 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம் |
| ஜனவரி 27 | சத்யா மின் பொருளகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 சேதமடைந்த மின் விசிறிகளுக்கான ரொக்கம் பெறப்படவில்லை. |
2.
பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:
| 2017 மார்ச் 1 |
மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம் | |
| 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் | |
| இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக | |
| மார்ச் 7 | இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம் | |
| 10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் | |
| மார்ச் 21 | காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் | |
| 15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம் | |
| இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250 | |
| இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக. | |
| மார்ச் 25 | சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து |
| 2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம் அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது. |
3.
இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்
ரொக்க ஏடு
பேரேடு
உரிய குறிப்பேடு
கொமுதல் ஏடு
4.
நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு
கொள்முதல் ஏடு
விற்பனை ஏடு
கொள்முதல் திருப்ப ஏடு
உரிய குறிப்பேடு
5.
விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது
விற்பனை கணக்கு
ரொக்க கணக்கு
கொள்முதல் கணக்கு
உரிய குறிப்பேடு
6.
7.
இடாப்பு என்றால் என்ன?
8.
உரிய குறிப்பேடு என்றால் என்ன?
9.
பற்றுக்குறிப்பு என்றால் என்ன?
10.
கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?
11.
ஏதேனும் நான்கு துணைஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.
12.
சிறு குறிப்பு வரைக
(அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
(ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்
13.
துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?
1.
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எ. | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| ஜனவரி 1 | பிரித்தி நிறுவனம் | ||||
| 25 மேசை விசிறிகள் ஒன்று ரூ 1400 வீதம் | 35,000 | ||||
| 10 மின் விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் | 20,000 | ||||
| 55,000 | |||||
| கூட்டுக: ஆட்டோ கட்டணம் | 100 | 55,100 | |||
| ஜனவரி 20 | சத்யா மின் பொருளாகம் | ||||
| 10 மின் விசிறிகள் ஒன்று ரூ.1, 200 வீதம் | 12,000 | ||||
| கழிக்க; வியாபாரத் தள்ளுபடி 5% | 600 | 11,400 | |||
| ஜனவரி 23 | எலிசபெத் நிறுவனம் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் |
||||
| ஒன்று ரூ. 4,700 வீதம் | 47,000 | ||||
| கொள்முதல் க/கு ப | 1,13,500 | ||||
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| ஜனவரி 5 | ஷீலா விற்பனையகம் | ||||
| 10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம் | 12,500 | ||||
| 20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம் | 9,000 | ||||
| 21,500 | |||||
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 10% | 2,150 | 19,350 | |||
| ஜனவரி 25 | பவானி நிறுவனம் | ||||
| 7 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம் | 10,150 | ||||
| விற்பனை க/கு வ | 29,500 | ||||
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை ரூ | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 | ||||||
| ஜனவரி 18 | பிரித்தி நிறுவனம் | |||||
| 5 மேசை மின் விசிறிகள் | ||||||
| ஒன்று ரூ. 1,400 வீதம் | 7,000 | குறைபாடு | ||||
| ஜனவரி 27 | சத்யா மின் பொருளாகம் | |||||
| 2 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,140 வீதம் | 2,280 | சேதம் | ||||
| (விலை – வியாபாரத்தள்ளுபடி) (1,200 – 60) கொள்முதல் திருப்ப க/கு வ |
9,280 | |||||
| நாள் | விவரம் | வ.கு.எ. | பே.ப.எ. | தொகை ரூ | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 | ||||||
| ஜனவரி | ஷீலா விற்பனையகம் | |||||
| 21 | 3 மின் தேய்ப்பான்கள் | |||||
| ஒன்று ரூ. 1,125 வீதம் | 3,375 | குறைபாடு | ||||
| (பட்டியல் விலை – வியாபாரத்தள்ளுபடி) (1,250 – 125) விற்பனைத் திருப்ப க/கு ப |
3,375 | |||||
2.
| நாள் | விவரம் | இடாப்பு எண் |
பே.ப.எ | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | மோ கன் அறைகலன் நிறுவனம், மதுரை | ||||
| மார்ச் 1 | 20 நாற்காலிகள் ஒன்று ரூ. 450 வீதம் | 9,000 | |||
| 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் | 2,000 | ||||
| 11,000 | |||||
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி @ 10% | 1,100 | 9,900 | |||
| மார்ச் 7 | ரமேஷ் நிறுவனம், ராயப்பேட்டை | ||||
| 2 மர நாற்காலி ஒன்று ரூ.500 வீதம் | 1,000 | ||||
| 10 சுழலும் நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் | 2,000 | ||||
| 3,000 | |||||
| கூட்டுக: வண்டிக்கட்டணம் & அனுப்புகைச் செலவுகள் | 150 | 3,150 | |||
| மார்ச் 21 | கமால் நிறுவனம், காரைக்கால் | ||||
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் | 7,500 | ||||
| 15 இரும்பு அலமாரிகள் ஒன்று ரூ. 1,500 வீதம் | 22,500 | ||||
| 30,000 | |||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி ஒன்று 10% | 3,000 | ||||
| 27,000 | |||||
| கூட்டுக: கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் | 250 | 27,250 | |||
| கொள்முதல் க/கு ப | 40,300 | ||||
3.
(c)
உரிய குறிப்பேடு
4.
(d)
உரிய குறிப்பேடு
5.
(a)
விற்பனை கணக்கு
6.
(c)
7.
இடாப்பு என்பது ஒரு வணிக ஆவணம் அல்லது இரசீது அல்லது அறிக்கை ஆகும். இதனை விற்பனையாளர் தயார்செய்து சரக்கினை வாங்குபவருக்கு அளிக்கிறார். இதில் விற்பனைச்செய்யப்படும் சரக்கின் அளவு, தரம், விலை, மொத்தமதிப்பு போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, இடாப்பு என்பது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் ஒரு முதன்மையான ஆவணமாக உள்ளது.
8.
1. துணை ஏடுகளான ரொக்க ஏடு, கொள்முதல் ஏடு, விற்பனை ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு, விற்பனைத் திருப்ப ஏடு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு போன்ற ஏடுகளில் பதிய முடியாத எஞ்சிய பதிவுகள் உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகின்றது.
2. உரிய குறிப்பேட்டில் அல்லது பொதுக் குறிப்பேட்டில் வேறு எங்கும் எந்த துணைப்பிரிவிலும் பதிவுப்பெறாத நடவடிக்கைகளுக்கான குறிப்பேடுகள் பதிவு செய்யப்படுகின்றன.
9.
1. பற்றுக் குறிப்பு என்பது ஒரு ஆவணம், சீட்டு அல்லது சரக்குத்திருப்பி அனுப்புபவருக்கு அளிக்கப்படும் அறிக்கை ஆகும்.
2. திருப்பி அனுப்பிய சரக்கின் விவரம், யாருக்கு திருப்பி அனுப்பப்பட்டதோ அவரது பெயர், திருப்பி அனுப்பப்பட்ட சரக்கின் நிகரத் தொகை மற்றும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்கள் போன்ற விவரங்களைக் பற்றுக்குறிப்பு கொண்டிருக்கும்.
10.
1. கொள்முதல் திருப்ப ஏடு ஒரு துணை ஏடாகும். இதில், ஏற்கனவே கொள்முதல் செய்து பெறப்பட்ட சரக்குகளை, ரொக்கம் உடனடியாக பெறாமல் சரக்கு அளித்தவருக்கே திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
2. சரக்குகள் அளித்தவருக்கே திரும்பச் செல்வதால், வெளித்திருப்பம் எனப்படுகின்றன.
3. இந்த ஏடு வெளித்திருப்ப ஏடு அல்லது வெளிச்செல் திருப்ப குறிப்பேடு என்று அழைக்கப்படுகிறது.
11.
1. கொள்முதல் ஏடு
2. கொள்முதல் திருப்ப ஏடு
3. விற்பனை ஏடு
4. விற்பனைத் திருப்ப ஏடு
12.
(அ) மேலெழுதுதல்
(1) மாற்றுச்சீட்டின் உரிமையை வேறொருவருக்கு மாற்றித் தருவதற்காக, மாற்றுச்சீட்டின் முன்புறத்தில் அல்லது பின்புறத்தில் கையொப்பம் இடுவதை மேலெழுதுதல் என்பர்.
(2) மாற்றுச்சீட்டை இதற்கென மேலெழுதி மாற்றிக்கொடுப்பவர் மேலெழுதுநர் எனப்படுகிறார்.
(3) மாற்றுச்சீட்டு மேலெழுதி யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவர் மேலெழுதப்பெறுநர் எனப்படுகிறார்.
(4) மேலெழுதப்பெறுநர் மாற்றுச்சீட்டுக்குரிய தொகையைப் பெறும் உரிமையைப் பெறுகிறார்.
(ஆ) தள்ளுபடி செய்தல்
(1) மாற்றுச்சீட்டை வைத்துள்ளவர் அதன் முத்துவுக்கு முன்பே பணம் பெற விரும்பினால், அதனை வங்கியில் தள்ளுபடி செய்து ரொக்கம் பெறலாம். இம்முறைக்கு மாற்றுச்சீட்டினைத் தள்ளுபடி செய்தல் என்று பெயர்.
(2) இதற்காக, வங்கியர் ஒரு சிறு தொகையைத் தள்ளுபடியாகப் பெற்றுக் கொள்வார். மீதமுள்ள தொகையினை உடனடியாக கொடுத்து விடுவார்.
13.
துணை ஏடுகளை பராமரிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
(i) வணிக நடவடிக்கைகளின் சரியான மற்றும் முறையான பதிவு.
ஒவ்வொரு வகையான நடவடிக்கைக்கும் தனித்தனியாக அதற்குரிய ஏடுகள் பயன்படுத்துவதால், நடவடிக்கைகள் சரியான மற்றும் முறையான துணை ஏடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) வசதியான எடுத்தெழுதுதல்
(1) அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்த தன்மையுடையவைகள் ஓரிடத்தில், அதாவது ஒரு துணைஏட்டில் பதிவு செய்யப்படுகின்றன.
(2) இது கொள்முதல்கணக்கு, விற்பனைகணக்கு மற்றும் சம்பந்தப்பட்ட ஆள்சார்கணக்குகளில் எடுத்தெழுதுவதை எளிதாக்குகிறது.
(iii) வேலைப் பகிர்வு
குறிப்பேடு பல துணை ஏடுகளாகப் பிரிக்கப்படுவதால், வேலைப் பகிர்வு ஏற்படுகிறது. அதனால் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு துணை ஏடுகளில் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடிகிறது. எனவே விரைவாக பணியினை முடிக்க முடிகிறது.
(iv) திறன் அதிகரிப்பு
வேலைப்பகிர்வு காரணமாக சிறப்புடைதலின் நன்மை கிடைக்கிறது. ஒரு நபர் வேலையை திரும்பத்திரும்ப செய்வதால் அவ்வேலையைக் கையாள்வதில் அவரது திறமை அதிகரிக்கிறது.
(v) முடிவெடுத்தலுக்கு உதவுகிறது
ஒவ்வொரு நடவடிக்கையில் முழுவிவரமும் தனித்தனியாக துணைஏடுகள் மூலம் கிடைக்கின்றன. இவ்விவரங்களை நிர்வாகம் எதிர்கால முடிவெடுத்தலுக்கு பயன்படுத்த முடியும்.
(vi) பிழைகளும், மோசடிகளும் தடுக்கப்படுகின்றன
அகச்சோதனையில் ஒருவரின் வேலை தானாகவே மற்றொருவரால் சோதனை செய்யப்படுவதால், அது மிகவும் திறன் வாய்ந்ததாக அமைகிறது. துணைஏடுகள் பராமரிப்பில் அகச்சோதனையை பயன்படுத்துவதன் மூலம் பிழைகள் அல்லது மோசடி தடுக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards