11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
n-ன் மதிப்பை காண்க. (n + 1)! = 20(n - 1)!
2.
10 மாணவர்களுக்கு 12 வெவ்வேறான பரிசுகளை எத்தனை வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்?
3.
10 இருக்கைகள் உள்ள அரங்கில் மூன்று நபர்கள் நுழைகிறார்கள். எத்தனை வழிகளில் அவர்கள் அந்த இருக்கைகளில் அமரலாம்
4.
10Pr = 7Pr + 2 எனில், r ஐக் காண்க
5.
மதிப்பிடுக,\(\frac { n! }{ r!\left( n-r \right) ! } \) இங்கு n = 7, r = 5 எந்த n -க்கும்.
6.
காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் ஒரு பெண் ஒரு பட்டுப் புடவையையும், ஒரு சுங்குடி புடவையையும் வாங்க நினைக்கிறார். கடையில் 20 வெவ்வேறு வகையான பட்டுப் புடவைகளும், 8 வெவ்வேறு வகையான சுங்குடி புடவைகளும் உள்ளன. புடவைகளை எத்தனை வகையில் அவரால் தேர்ந்தெடுக்க முடியும்?
7.
மதிப்பிடுக: 8P4
8.
17 மாணவர்கள், 29 மாணவிகள் உள்ள வகுப்பிலிருந்து ஒரு போட்டிக்காக ஒரு மாணவியையோ அல்லது மாணவனையோ எத்தனை வேறுபட்ட வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
9.
GARDEN என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்திக் கிடைக்கும் எழுத்துச் சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது, கீழ்க்காணும் வார்த்தைகளின் தரத்தைக் காண்க.
(i) GARDEN
(ii) DANGER
10.
1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் கூடுதலைக் காண்க.
11.
நான்கு வெவ்வேறான இலக்கங்களைக் கொண்ட 4-இலக்க எண்களை 1,2,3,4 மற்றும் 5 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கும்போது, கீழ்க்கண்டவற்றை காண்க.
(i) இவ்வாறான எத்தனை எண்களை உருவாக்கலாம்
(ii) இவற்றில் எத்தனை எண்கள் இரட்டைப்படை?
(iii) இவற்றில் எத்தனை எண்கள் சரியாக 4 ஆல் வகுபடும்.
12.
கணிதத் தொகுத்தறிதல் முறையில் n≥1 -க்கு \(1^{3}+2^{3}+3^{3}+...+n^{3}=(\frac{n(n+1)}{2})^{2}\)என நிரூபிக்க.
13.
கணிதத் தொகுத்தறிதல் கொள்கையை பயன்படுத்தி, எல்லா முழு எண்கள் n ≥ 1-க்கு என 1+2+3+...+n =\(\frac{n(n+1)}{2}\) நிறுவுக.
14.
4 கணிதப் புத்தகங்கள், 3 இயற்பியல் புத்தகங்கள், 2 வேதியியல் புத்தகங்கள் மற்றும் 1 உயிரியல் புத்தகத்தை ஓர் அலமாரியில் ஒரே பாட புத்தகங்கள் ஒன்றாக வரும் வகையில் எத்தனை வழிகளில் அடுக்கலாம்?
15.
10Pr -1 = 2×6Pr எனில், r ஐக் காண்க
16.
1,2,3,4,2,1 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி இரட்டைப் படை எண்கள் இரட்டை இடத்தில் வருமாறு எத்தனை எண்களை உருவாக்கலாம்?
17.
4 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகளை ஒரே வரிசையில் மாணவனும் மாணவியும் அடுத்தடுத்து வருமாறு எத்தனை வழிகளில் நிற்க வைக்கலாம்?
18.
கணிதத் தொகுத்தறிதல் மூலம் என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் n≥2, 3n ≥n2 என நிரூபி.
19.
முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என தொகுத்தறிதல் முறையில் நிறுவுக.
20.
Pr என்பது rPr ஐ குறித்தால் 1+P1+2P2+3P3+..+nPn என்ற தொடரின் கூடுதல் ______.
Pn+1
Pn+1-1
Pn-1+1
(n+1)P(n-1)
21.
எந்த இரண்டு கோடுகளும் இணையாக இல்லாமலும் மற்றும் எந்த மூன்று கோடுகளும் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளாமலும் இருக்குமாறு ஒரு தளத்தின் மீது 10 நேர்க்கோடுகள் வரையப்பட்டால், கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ______.
45
40
10!
210
22.
\(^{ { a }^{ 2 }-a }{ C }_{ 2 }=^{ { a }^{ 2 }-a }{ C }_{ 4 }\) எனில் a-ன் மதிப்பு ______.
2
3
4
5
23.
3 விரல்களில், 4 மோதிரங்களை அணியும் வழிகளின் எண்ணிக்கை ______.
43-1
34
68
64
24.
2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்______.
432
108
36
18
1.
(i) (n + 1)! = 20 (n - 1)! கொடுக்கப்பட்டுள்ளது
\(\Rightarrow \) (n + 1) (n) (n - 1)! = 20 (n - 1)!
\(\Rightarrow \) (n + 1) (n) = 20
\(\Rightarrow \) n2 + n - 20 = 0
\(\Rightarrow \) (n + 5) (n - 4) = 0
n = -5 ஆக இருக்க முடியாது
\(\therefore \) n = 4
2.
ஒவ்வொரு முதல் பரிசும் எந்த ஒரு மாணவர்களுக்கும் 10 வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்
\(\therefore \) 12 பரிசுகளை ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும்
= 10 x 10 x 10 x 10 x 10 x 10 x10 x 10 x 10 x 10
= 1012 வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்
3.
முதல் மனிதர் ஒரு இருக்கையில் = 10 வழிகளில் அமரலாம்.
இரண்டாவது மனிதர் ஒரு இருக்கையில் = 9 வழிகளில் அமரலாம்.
மூன்றாவது மனிதர் ஒரு இருக்கையில் = 8 வழிகளில் அமரலாம்.
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி மூன்று மனிதர்கள் = 10 x 9 x 8 = 720 வழிகளில் அமரலாம்.
4.
10Pr = 7Pr + 2
\(\frac { 10! }{ \left( 10-r \right) ! } =\frac { 7! }{ \left( 5-r \right) ! } \)
\(\frac { 10\times 9\times 8\times 7! }{ \left( 10-r \right) \times \left( 9-r \right) \times \left( 8-r \right) \times \left( 7-r \right) \times \left( 6-r \right) \times \left( 5-r \right) ! } =\frac { 7! }{ \left( 5-r \right) ! } \)
\(\left( 10-r \right) \times \left( 9-r \right) \times \left( 8-r \right) \times \left( 7-r \right) \times \left( 6-r \right) =10\times 9\times 8\)
\(\left( 10-r \right) \times \left( 9-r \right) \times \left( 8-r \right) \times \left( 7-r \right) \times \left( 6-r \right) =6\times 5\times 4\times 3\times 2\)
(10× 9 × 8 ஐ ஐந்து அடுத்தடுத்த எண்களின் பெருக்கலாக இறங்கு வரிசையில் எழுத)
எனவே, 10 - r = 6 ⇒ r = 4.
5.
n = 7, r = 5 எனில்
\(\frac { n! }{ r!\left( n-r \right) ! } =\frac { 7! }{ 5!\left( 7-5 \right) ! } =\frac { 7\times 6\times 5! }{ 5!\times 2! } =\frac { 7\times 6 }{ 1\times 2 } =21\)
6.
ஒரு பெண் ஒரு பட்டுப் புடவையும் மற்றும் ஒரு சுங்குடி புடவையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பெண் பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுக்க 20 வழிகளும் சுங்குடி புடவையை தேர்ந்தெடுக்க 8 வழிகளும் உள்ளன. இந்த இரண்டு புடவைகளையும் தேர்ந்தெடுக்க பெருக்கல் விதிப்படி, 20 x 8 = 160 வழிகள் உள்ளன.
7.
8P4= 8×7×6×5 = 1680
8.
முதல் செயலான ஒரு மாணவியை தேர்ந்தெடுக்க 29 வழிகளும், இரண்டாவது செயலான ஒரு மாணவனை தேர்ந்தெடுக்க 17 வழிகளும் உள்ளன. எனவே இந்த தேர்வினை செய்ய எண்ணுதலின் கூட்டல் விதியின்படி, 17 + 29 = 46 வழிகள் உள்ளன.
9.
(i) GARDEN இதில் உள்ள எழுத்துகளை ஆங்கில எழுத்துகள் வரிசையில் எழுத A, D, E , G,N, R கிடைக்கும் இதில் எந்த எழுத்தும் திரும்ப வரவில்லை.
\(\therefore \) A என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 5! = 120
D என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 5! = 120
E என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 5! = 120
GAD என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 3! = 6
GAE என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 3! = 6
GAN என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 3! = 6
GARDE என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை = 1! = 1
\(\therefore \) GARDEN என்ற வார்த்தையின் தரம் = 120 + 120 + 120 + 6 + 6 + 6 + 1 = 379
(ii) DANGER என்ற வார்த்தையில் உள்ள எழுத்தகளை ஆங்கில எழுத்துகளின் வரிசையில் A, D, E, G, N, R என எழுதலாம்
DANGER என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் = 6.
எந்த ஒரு எழுத்தும் ஒரு தடவைக்கு மேல் வரவில்லை .
\(\therefore \) A யை வைத்து துவங்கும் வார்த்தையின் எண்ணிக்கை = 5! = 120
DAE யை வைத்து துவங்கும் வார்த்தையின் எண்ணிக்கை = 3! = 6
DAG யை வைத்து துவங்கும் வார்த்தையின் எண்ணிக்கை = 3! = 6
DANG யை வைத்து துவங்கும் வார்த்தையின் எண்ணிக்கை = 2! = 2
DANGER யை வைத்து துவங்கும் வார்த்தையின் எண்ணிக்கை = ! = 1
DANGER என்ற வார்தையில் உள்ள எழுத்துச்சரம் = 120 + 6 + 6 + 2 + 1 = 135
10.
கொடுக்கப்பட்ட 5 இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் 4-இலக்க எண்களின் எண்ணிக்கை 5P4 = 120 நாம் முதலில் ஒன்றாம் இடத்தில் உள்ள எல்லா 120 எண்களின் கூடுதலைக் காண்போம். ஒன்றாம் இடத்தில் 1ஐ அமைத்து, மற்ற இடங்களில் மீதமுள்ள 4 எண்களை 4P3 = 24 வழிகளில் வரிசைப்படுத்தலாம். இதுபோலவே, 2, 4, 6, 8 ஆகிய இலக்கங்கள் ஒன்றாம் இடத்தில் 24 முறை வருகின்றன. எல்லா 120 எண்களின் ஒன்றாம் இடத்தில் வரும் இலக்கங்களின் கூட்டுத்தொகை கிடைக்கும். எனவே
\(\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 1 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 2 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 4 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 6 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 8 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times \left( 1+2+4+6+8 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times \)(இலக்கங்களின் கூடுதல்)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times 21\)
இதுபோலவே, 10ஆம் இடத்தில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\) இது 10ஆம் இடத்தில் உள்ளதால் இதன் மதிப்பு .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 10\) இதுபோலவே, 100ஆம் இடம் மற்றும் 1000மாவது இடத்தில் உள்ள எண்களின் மதிப்புகள் முறையே \(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 100\)மற்றும் .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 1000\) எனவே, 1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களைக் கொண்டு உருவாகும் எல்லா 4-இலக்க எண்களின் கூட்டுத்தொகை
\(\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 10 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 100 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 1000 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\left( 21\times 1111 \right) \)
\(=24\times 21\times 1111\)
= 559944
11.
(i) நான்கு-இலக்க எண்களின் எண்ணிக்கையானது கொடுக்கப்பட்ட 5 இலக்கங்களிலிருந்து 4 இலக்கங்களைக் கொண்டு உருவாக்கப்படும் வரிசை மாற்றங்களின் எண்ணிக்கைக்கு சமம். எனவே, இதன் மதிப்பு \(^{ 5 }{ P }_{ 4 }=5\times 4\times 3\times 2=120\)
(ii) இரட்டைப்படை எண்ணிற்கு கடைசி இலக்கம் 2 அல்லது 4 ஆக இருக்கவேண்டும். எனவே, கடைசி இலக்கத்தை 2P1 வழிகளில் நிரப்பலாம். மேலும் மீதி இருக்கும் 3 இடங்களை மீதி இருக்கும் 4 இலக்கங்களை கொண்டு 4P3 வழிகளில் நிரப்பலாம். எனவே தேவையான இரட்டைப்படை எண்களின் எண்ணிக்கை \(^{ 2 }{ P }_{ 1 }\times ^{ 4 }{ P }_{ 3 }=2\times 24=48\)

(iii) ஓர் எண் 4 ஆல் வகுபட அந்த எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4 ஆல் வகுபட வேண்டும். எனவே, கடைசி இரண்டு இலக்கங்கள் நிரப்ப 12, 24, 32, 52 (4 வழிகள்) என இருக்க வேண்டும். மீதமுள்ள முதல் இரண்டு இடங்களை மீதமுள்ள 3 இலக்கங்களை கொண்டு 3P2 வழிகளில் நிரப்பலாம். எனவே, 4 ஆல் வகுபடும் எண்களின் எண்ணிக்கை \(^{ 4 }{ P }_{ 1 }\times ^{ 3 }{ P }_{ 2 }=4\times 6=24\)

12.
P(n) என்பது கொடுக்கப்பட்டுள்ள தொடர் என்க .
13 +23 + 33 + .... +n3 = \(\left[ \frac { n\left( n+1 \right) ^{ 2 } }{ 2 } \right] \)
படி (1) n = 1 என்க.
\(\Rightarrow \) 13 = \(\left[ \frac { 1\left( 1+1 \right) ^{ 2 } }{ 2 } \right] =\left[ \frac { 1\left( 2 \right) }{ 2 } \right] ^{ 2 }\quad \)
1 = 1 எனவே p(1) உண்மை
படி (2)
p (n) = p(k); 13 + 23 + 33 + ......k3 = \(\left[ \frac { k\left( k+1 \right) }{ 2 } \right] ^{ 2 }\)...... (1)
படி (3)
p (k + 1) ம் உண்மை என நிரூபிக்க
p(k +1)13 + 23 + ...k3 + (k + 1)3 = \(\left[ \frac { \left( k+1 \right) \left( k+2 \right) }{ 2 } \right] \)
LHS = 13 + 23 + .....k3 + (k +1)3
= \(\left[ \frac { k\left( k+1 \right) }{ 2 } \right] ^{ 2 }\) + (k + 1)3 (1) பயன்படுத்தப்பட்டது
= (k +1)2 \(\quad \left[ \frac { { k }^{ 2 } }{ 4 } +k+1 \right] \) = (k +1)2 = \(\left[ \frac { { k }^{ 2 }+4k+4 }{ 4 } \right] \)
= \(\frac { \left( k+1 \right) ^{ 2 }\left( k+2 \right) ^{ 2 } }{ 4 } \) = \(\left[ \frac { \left( k+1 \right) \left( k+2 \right) }{ 2 } \right] \) = RHS
எனவே P (k + 1) என்பது உண்மை
எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின் படி n -ன் எல்லா மதிப்புகளும் p(n ) உண்மையாகும் என நிரூபிக்கப்பட்டது.
13.
P(n):=1+2+3+...+n=\(\frac{n(n+1)}{2}\) என்க.
n = 1 என பிரதியிட
P(1)=\(\frac{1(1+1)}{2}\)=1
எனவே, n = 1-க்கு இது உண்மை. அதாவது P(1) என்பது உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே,
P(K)=1+2+3+...+k=\(\frac{k(k+1)}{2}\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மையென நிறுவவேண்டும்.
P(k+1)=\(\underbrace { 1+2+3+...+k } +(k+1)=\frac { k(k+1) }{ 2 } +(k+1)\)
P(k+1)=\(\frac{k(k+1)+2(k+1)}{2}=\frac{(k+1)(k+2)}{2}\)
எனவே, P(k + 1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக்கொண்டு P(k + 1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே, கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின் படி, எல்லா முழு எண்கள் n-≥1-க்கும் 1+2+3+...+n=\(\frac{n(n+1)}{2}\) .
14.
நான்கு பாடப்புத்தகங்கள் 4! வழிகளில் அடுக்கலாம் .
4 கணித பாடப்புத்தகங்களை 4! வழிகளிலும்
3 இயற்பியல் பாடப்புத்தகங்களை 3! வழிகளிலும்
2 வேதியியல் பாடப்புத்தகங்களை 2! வழிகளிலும்
1 உயிரியல் பாடப்புத்தகங்களை 1! வழிகளிலும் அடுக்கலாம்.
எனவே மொத்த புத்தகங்களையும் = 4! x 4! x 3! x 2! x 1! வழிகளில் அடுக்கலாம்
= (4 x 3 x 2 x 1 ) (4 x 3 x 2 x 1) (3 x 2) (2 x 1)
= (24) (24) (6) (2)
தேவையான எண்ணிக்கை = 6912 வழிகள்
15.
10Pr -1 = 2×6Pr என கொடுக்கப்பட்டுள்ளது
\(\Rightarrow\) \(\frac { 10! }{ \left( 10-r+1 \right) ! } =2\times \frac { 6! }{ \left( 6-r \right) ! } \left[ \because n{ P }_{ r }=\frac { n! }{ (n-r)! } \right] \)
\(\Rightarrow\) \(\frac { 10\times 9\times 8\times 7\times 6! }{ \left( 11-r \right) ! } =\frac { 10\times 9\times 8\times 7\times 6! }{ \left( 11-r \right) ! } \)
\(\Rightarrow\) \(\frac { 10\times 9\times 8\times 7 }{ \left( 11-r \right) 10-r\left( 9-r \right) \left( 8-r \right) \left( 7-r \right) \left( 6-r \right) } =\frac { 2 }{ \left( 6-r \right) ! } \)
\(\Rightarrow\) \(\frac { 10\times 9\times 8\times 7 }{ \left( 11-r \right) 10-r\left( 9-r \right) \left( 8-r \right) \left( 7-r \right) } =2\)
\(\Rightarrow\) (11- r) (10 -r)(9 -r)(8 -r)(7 -r) = 5 x 9 x 8 x 7
\(\Rightarrow\) (11- r) (10 -r)(9 -r)(8 -r)(7 -r) = 7 x 6 x 5 x 4 x 3
\(\Rightarrow\) (11- r) (10 -r)(9 -r)(8 -r)(7 -r) = (11 - 4) (10 - 4) (9- 4) (8 -4) (7 -4)
\(\Rightarrow\) r = 4
16.
இதில் காணப்படும் 6 இடங்களில் உள்ள 3 இரட்டைப்படை இடங்களில் 2,4,2 என்ற இரட்டைப்படை எண்கள் வரவேண்டும். 2,4,2 என்ற இலக்கங்களை 3 இரட்டைப்படை இடங்களில்\(\frac { 3! }{ 2! } =3\) வழிகளில் வரிசைப்படுத்தலாம். மீதமுள்ள, 1,3,1 என்ற இலக்கங்களை மீதமுள்ள 3 இடங்களில் \(\frac { 3! }{ 2! } =3\) வழிகளில் வரிசைப்படுத்தலாம். எனவே, தேவையான எண்களின் எண்ணிக்கை 3 x 3 = 9
17.
4 மாணவர்களை ஒரு வரிசையில் நிற்க வைக்கும் வழிகள் 4P4 = 4! மாணவனவனை முதலாவதாகக் கொண்டு, இந்த ஒவ்வொரு வரிசையும் 4 இடைவெளிகளை உருவாக்கும். இந்த 4 இடங்களில் 4 மாணவிகளை 4P4 = 4! வழிகளில் அமர வைக்கலாம்.
B1_B2_B3_B4_ or G1_G2_G3_G4_
எனவே, மாணவனை முதலாவதாக கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) இதுபோலவே, மேற்கூறிய வழிமுறையின்படி மாணவியை முதலாவதாகக் கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) எனவே கூட்டல் விதிப்படி, மாணவனையோ அல்லது மாணவியையோ முதலாவதாகக் கொண்ட வரிசை மாற்றங்களின்,மொத்த எண்ணிக்கை. \(\left( 4!\times 4! \right) +\left( 4!\times 4! \right) =2{ \left( 4! \right) }^{ 2 }=1152. \)
18.
n≥2-க்கு 3n ≥n2 என்பதை P(n) என்ற கூற்று என்க. முதல்படி n = 2 ஆகும்.
P(2)=32=9 மேலும் 22=4
9 > 4 ஆதலால் P(2) உண்மை.
n = k-க்கு P(n) உண்மை எனக் கொள்க.
எனவே, P(k) > k2
P(k+1) = 3 × 3k = 3 × P(k)
>3k2
>(k+1)2
எனவே n≥2 என உள்ள அனைத்து முழு எண்களுக்கும் 3n>n2.
19.
P(n)=1+3+5+...+(2n-1) என்க.
எனவே, P(1)=1=12 என்பது உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே,
P(k)=1+3+5+...+(2k-1)
அதாவது P(k)=k2
இப்பொழுது P(k+1)=(k+1)2 என நிறுவவேண்டும்.
P(k+1)=1+3+5+...+(2(k+1)-1)
=\(\underbrace { 1+3+5+7+...+(2k-1) } +2k+1\)
=P(k)+2k+1
=k2+2k+1=(k+1)2
எனவே, P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே, கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா முழு எண்கள் n≥1-க்கும்,முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என நிறுவப்பட்டது.
20.
(b)
Pn+1-1
21.
(a)
45
22.
(b)
3
23.
(d)
64
24.
(b)
108
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards