11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
இயக்க விதிகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
மையநோக்கு விசைக்கு எ.கா மூன்றினைக் கூறுக.
2.
ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றுமா?
3.
பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை குறைவதற் குப்பதிலாக அதிகரிப்பதன் காரணம் என்ன?
4.
கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?
5.
தளம் ஒன்றில் இயங்கும் துகளின் திசைவேகம் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. துகள் மீது செல்படும் விசையின் திசையைக் காண்க.

6.
துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?
7.
இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிர்வுத் தாங்கிகள் (shock absorbers) பயன் என்ன?
8.
கிரிக்கெட் வீரர், வேகமாக வரும் பந்தினை பிடிக்கும் போது அவரின் கரங்களை பந்து வரும் திசையிலே படிப்படியாக தாழ்த்துவதன் காரணம் என்ன?
9.
நேர்கோட்டு இயக்கம்,சுழல் இயக்கம் -ஒப்பிடுக.
10.
உந்தமாறாவிதியின் பொருள் தருக.
11.
படத்தில் காட்டியுள்ள A, B மற்றும் C என்ற கனச் செவ்வகத்துண்டுகளின் மீது செயல்படும் விசைகளை காண்க.

12.
புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரண்டாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளை ஆராய்க.
13.
மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்?
புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை
புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை
புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை
மேற்கண்ட எதுவுமில்லை
14.
வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம்_______.
எண்மதிப்பில் மட்டும் மாறும்
மாறாமல் இருக்கும்
திசையில் மட்டும் மாறும்
எண்மதிப்பிலும் திசையிலும் மாறும்
15.
துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது அதன் முடுக்கம்_________.
தொடுகோட்டின் வழியே ஏற்படும்
ஆரத்தின் வழியே ஏற்படும்
வட்டப்பாதை வழியே ஏற்படும்
சுழி
16.
எதனடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது?
நியூட்டனின் முதல் இயக்க விதி
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
நியூட்டனின் முதல் மற்றும் இரண்டாம் இயக்க விதிகள்
17.
பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?
திசைவேகம்
நிறை
பரப்பு
பருமன்
18.
நியூட்டனின் முதல் இயக்கவிதியில் இருந்து அறியப்படும் கருத்து________.
ஆற்றல்
வேலை
உந்தம்
நிலைமம்
19.
மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்
20.
மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?
நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்
சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்
நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்
21.
படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன, முதல் நிலையில் F1 விசை இடப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F2 _______.
1: 1
1: 2
2: 1
1: 3
22.
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
நிலைமமற்ற தன்மை
23.
24.
மையநோக்கு மற்றும் மையவிலக்கு விசைகளுக்கிடையேயான ஒத்த, வேறுபட்ட கருத்துகளை விவரி.
1.
1.நூலில் கட்டப்பட்ட கல் வட்டப்பாதையில் சுற்றும் போது நூலில் ஏற்படும் இழுவிசை மையநோக்கு விசையை தருகிறது.
2.வளைவுப் பாதையில் செல்லும் காரின் டயருக்கும்,சாலைக்கும் இடையில் ஏற்படும் உராய்வு விசை மையநோக்கு விசையை தருகிறது.
3.சூரியனை சுற்றும் கோள்கள் இயக்கத்தில் ஈர்ப்பு விசை மையநோக்கு விசையை தருகிறது.
2.
தனித்த விசை இயற்கையில் தோன்றாது. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின்படி ஒவ்வொரு விசைக்கு அதற்குச் சமமான எதிர் விசை நிகழும். எடுத்துக்காட்டாக A மற்றும் B என்ற பாறைகள் ஒன்றையொன்று விசையுடன் மோதினால், அவை சம விசையுடன் குறிப்பிட்ட தொலைவிற்கு பின் திசையில் செல்லும்.
3.
பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை அதிகரிப்பதன் காரணம் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை அதிகரிப்பதே ஆகும்.
4.
i) நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் எதிரான அதே அளவிலான வினை ஏற்படும்.
ii) இதன்படி உள்ளிருந்து நாம் காரினை தள்ளும் போது அதற்கு இணையான எதிர்வினையை அது ஏற்படுத்தும்.எனவே காரினை நாம் உள்ளிருந்து தள்ளும் போது எதிர்வினையின் காரணமாக நாம் பின்னோக்கி செல்கிறோம் கார் நிலைத் தன்மையை பெறுகிறது.
iii) ஆகையால் காரினை உள்ளிருந்து தள்ளுவதால் பயனில்லை.
5.
துகளின் திசைவேகம் \(\overrightarrow { v } ={ v }_{ x }\hat { i } +{ v }_{ y }\hat { j } +{ v }_{ z }\hat { k } \) படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று துகள் x, y தளத்தில் இயங்குகிறது. z அச்சில் எவ்வித இயக்கமும் இல்லை, எனவே vz = 0. திசைவேகத்தின் x கூறு vx மற்றும் y கூறு vy எனக் t = 0 வினாடியிலிருந்து t = 3 வினாடிவரை உள்ள நேர இடைவெளியில் y அச்சுதிசையில் வெக்டரின் நீளம் அதிகரிப்பதை காணலாம். எனவே y அச்சுதிசையில் திசைவேகத்தின் கூறு (vy) நேரத்தைப் பொருத்து அதிகரிக்கிறது. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி y அச்சுதிசையில் துகள் ஒரு முடுக்கத்தினைப் பெறும். எனவே y அச்சுதிசையில் துகளின் மீது ஒரு விசை செயல்படும் x அச்சுதிசையில் வெக்டரின் நீளம் மாறாமதிப்பினைப் பெற்றுள்ளது. இதன்மூலம் துகள் x அச்சில் மாறாத்திசைவேகத்துடன் இயங்குவதைக் காட்டுகிறது. எனவே x அச்சில் நிகர விசை சுழியாகும்.
6.
துகளின் திசைவேகம் =
\(\overrightarrow { v } =\frac { d\overrightarrow { r } }{ dt } =\frac { d }{ dt } \left( 3t \right) \hat { i } +\frac { d }{ dt } \left( { 5t }^{ 2 } \right) \hat { j } +\frac { d }{ dt } \left( 7 \right) \hat { k } \)
\(\frac { d\overrightarrow { r } }{ dt } =3\hat { i } +10t\hat { j } \)
துகளின் முடுக்கம்
\(\overrightarrow { a } =\frac { d\overrightarrow { v } }{ dt } =\frac { { d }^{ 2 }\overrightarrow { r } }{ { dt }^{ 2 } } =10\hat { j } \)
இங்கு, நேர்குறி y அச்சுத்திசையில் மட்டுமே துகள் முடுக்கமடையும். நியூட்டன் இரண்டாம் விதிப்படி நிகர விசையின் திசையும் நேர்குறி y அச்சின் திசையிலேயே அமையும். மேலும் இத்துகள் நேர்குறி x அச்சுத்திசையில் மாறாத் திசைவேகத்தைப் பெற்றுள்ளது. ஆனால் z அச்சுத்திசையில் எவ்வித திசைவேகத்தையும் பெறவில்லை. எனவே , x அல்லது z திசையில் எந்த நிகர விசையும் செயல்படவில்லை.
7.
1.மேடுபள்ளங்களில் வாகனம் செல்லும் போது ஒரு திடீர் விசையானது உடனடியாக வாகனத்தின் மீது செலுத்தப்படுகிறது.
2.இவ்விசை பயணிகளை உடனடியாகத் தாக்காமல் அதன் தாக்குதல் நேரத்தை நீட்டிக்க அதிர்வுத் தாங்கிகள் பயன்படுகின்றன.
3.எனவே பயணிகள் பெருமவிசையை உணர்வதிலிருந்து தடுக்கப்படுகின்றனர்.
4.அதிர்வுத்தாங்கிகள் சரிவர இயங்காத வாகனங்களில் பயணம் செய்வது நமது உடலை பாதிக்கும்.
8.
1.கிரிக்கெட் வீரர் பந்தைபிடித்த உடன் தன்னுடைய கரங்களை தாழ்த்தாமல் உடனடியாக நிறுத்தினால் பந்து உடனடியாக ஓய்வுநிலைக்கு வரும்.
2.அதாவது பந்தின் உந்தம் உடனடியாக சுழியாகிறது.இதனால் கரங்களின் மீது பந்து செலுத்தும் சராசரி விசைப்பெருமமதிப்பை பெரும்.
3.எனவே கிரிக்கெட் வீரரின் கரங்கள் வேகமாகதாக்கப்பட்ட அவர் அதிக வலியினை உணர்வார்.
4.இதனைத் தவிர்ப்பதற்காகத் தான் அவர் தன்னுடைய கரங்களை படிப்படியாக தாழ்த்துகிறார்.
9.
| நேர்கோட்டு இயக்கம் | சுழல் இயக்கம் |
| ஒரு குறிப்பிட்ட அச்சின் வழியேயான இயக்கம் | ஒரு குறிப்பிட்ட அச்சை பொருத்த இயக்கம் |
| இதை பொருளின் நிறை எதிர்க்கிறது. | இதை பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதிர்க்கிறது. |
| இதில் அனைத்து துகள்களும் சம இடப்பெயர்ச்சியைப் பெறுகின்றன. | இதில் ஒவ்வொரு துகளும் சுழற்சி அச்சிலிருந்து அது உள்ள தொலைவை சார்ந்து வெவ்வேறு இடப்பெயர்ச்சியைப் பெறுகின்றன. |
10.
1.உந்த மாறாவிதி ஒரு வெக்டர் விதியாகும்.இவ்வித மொத்த நேர்க்கோட்டு உந்தத்தின் எண்மதிப்பு மற்றும் திசை மாறாதவை எனக்காட்டுகிறது.சிலநேரங்களில் மொத்த நேர்க்கோட்டு உந்தம் சுழி மதிப்பையும் பெறலாம்.
2.பொருளொன்றின் இயக்கத்தினைப் பகுப்பாய்வு செய்யும்போது நியூட்டனின் இரண்டாம் விதி அல்லது நேர்கோட்டு உந்த மாறாவிதியை நாம் பயன்படுத்தலாம்.நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த வேண்டுமானால் நாம் பொருளின் மீது செயல்படும் விசைகளைக் குறிப்பிட வேண்டும்.நடைமுறைச் சூழலில் இது கடினமாகும்.ஆனால் உந்த மாறாவிதியில்.இவ்வாறு விசைகளை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே உந்த மாறாவிதி பயன்படுத்துவதற்கு எளிமையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
11.
கனச்செவ்வகத்துண்டு A யின் மீது செயல்படும் விசைகள் :
(i) புவி ஏற்படுத்தும் கீழ்நோக்கிய ஈர்ப்பு விசை (mAg)
(ii) பொருள் B ஏற்படுத்தும் மேல் நோக்கிய செங்குத்து எதிர்விசை (NB)
A யின் “தனித்த பொருளின் விசைப் படம் கீழே காட்டப்பட்டுள்ளது.
A ன் மீது செயல்படும் விசை
.jpg)
பொருள் B மீதான விசைகள்:
(i) கீழ் நோக்கிச் செயல்படும் புவியீர்ப்பு விசை (mBg)
(ii) கனச்செவ்வகத் துண்டு A ஏற்படுத்தும் கீழ் நோக்கிய விசை (NA)
(iii) கனச்செவ்வகத் துண்டு C ஏற்படுத்தும் மேல் நோக்கிய விசை (NC)
B ன் மீது செயல்படும் விசை
.jpg)
கனச்செவ்வகத் துண்டு C இன் மீது செயல்படும் விசை :
(i) கீழ் நோக்கிச் செயல்படும் புவியீர்ப்பு விசை (mcg)
(ii) கனச்செவ்வகத் துண்டு B ஏற்படுத்தும் கீழ் நோக்கிய விசை (NB)
(iii) மேசை ஏற்படுத்தும் மேல் நோக்கிய செங்குத்து விசை (Ntable)
C ன் மீது செயல்படும் விசை
.jpg)
12.
நிலைமக்குறிப்பாயமாகக் கருதப்படும் புவியைப் பொருத்து பொருளொன்று ஓய்வு நிலையில் உள்ளது எனக். அப்பொருளின் மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன அவை.
.jpg)
(i) எதிர்க்குறி y அச்சுதிசையில் செயல்படும் புவியீர்ப்பு விசை (mg)
(ii) நேரக்குறி y அச்சுதிசையில் செயல்படும் புவிப்பரப்பு செங்குத்துவிசை (N) பொருளின் விசைப்படம் பின்வருமாறு.
.jpg)
\(\overrightarrow { { F }_{ g } } =-mg\hat { j } \)
\(\overrightarrow { N } =N\hat { j } \)
தொகுபயன் விசை \(\overrightarrow { { F }_{ net } } =-mg\hat { j } +N\hat { j } \) ஆனால், பொருள் எவ்வித முடுக்கத்தையும் பெறவில்லை எனவே \(\overrightarrow { a } =0\)
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
\(\left( \overrightarrow { { F }_{ net } } =m\overrightarrow { a } \right) \)
இருபுறமும் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடும்போது
\(\left( -mg+N \right) \hat { j } =0\)
- mg + N = 0
N = mg
மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து நாம் அறிவது என்னவெனில், பொருள் ஓய்வு நிலையில் உள்ளபோது செங்குத்து விசையின் எண்மதிப்பும் புவியீர்ப்பு விசையின் எண்மதிப்பு ஒன்றுக்கொன்று சமமாகும்.
13.
(c)
புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை
14.
(c)
திசையில் மட்டும் மாறும்
15.
(b)
ஆரத்தின் வழியே ஏற்படும்
16.
(c)
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
17.
(b)
நிறை
18.
(d)
நிலைமம்
19.
(a)
அதிகரிக்கும்
20.
(b)
சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
21.
(c)
2: 1
22.
(a)
திசையில் நிலைமம்
23.
24.
| மையநோக்கு விசை | மையவிளக்கு விசை |
| 1.புவியீர்ப்பு விசை,கம்பியின் இழுவிசை செங்குத்துவிசை போன்ற புறவிசைகளினால் பொருளின் மீது செலுத்தப்படும் உண்மை விசையாகும். |
இது போலியான அல்லது பொய்யான விசையாகும் இவ்விசை புவியீர்ப்பு விசை,கம்பியின் இழுவிசை செங்குத்து விசை போன்ற புறவிசைகளினால் தோன்றாது |
| 2.நிலைம மற்றும் நிலமை மற்ற குறிப்பாயங்கள் இரண்டிலும் இவ்விசை செயல்படும் |
நிலைமமற்ற சுழலும் குறிப்பாயங்களில் மட்டுமே இவ்விசை செயல்படும். |
| 3.சுழல் அச்சினை நோக்கிச் செயல்படும் வட்டப்பாதை இயக்கத்தில் வட்டத்தின் மையத்தை நோக்கி செயல்படும். | சுழல் அச்சிலிருந்து வெளிநோக்கிச் செயல்படும்.மேலும் வட்ட இயக்கத்தில் வட்டமையத்திலிருந்து ஆரத்தின் வழியே வெளிநோக்கிச் செயல்படும். |
| \(\left|F_{c p}\right|=m \omega^2 r=\frac{m v^2}{r}\) | \(\left|F_{c f}\right|=m \omega^2 r=\frac{m v^2}{r}\) |
| 4.இது ஒரு உண்மையான விசை, இதன் விளைவுகளும் உண்மையானவை | இது ஒரு போலிவிசை,ஆனால் இதன் விளைவுகள் உண்மையானவை. |
| 5.இரண்டு பொருட்களுக்கிடையேயான உறவே (interaction) மையநோக்கு விசைக்கு அடிப்படையாக அமைகிறது | ஒரு பொருளின் நிலைமத் தன்மையே (interial property) மையவிலக்கு விசைக்கு அடிப்படையாக அமைகிறது.இவ்விசை பொருட்களுக்கிடையேயான உறவால் (interaction) தோன்றாது. நிலைமக் குறிப்பாயம் ஒன்றின் இயங்கும் பொருளின் நிலைம இயக்கம் தான்,சுழற்சிக் குறிப்பாயத்தில் மையவிலக்கு விசயாகத் தோன்றுகிறது. |
| 6.நிலைமக் குறிப்பாயத்தில் தனித்த பொருளின் விசைப்படம் வரையும்போது,மையநோக்கு விசையை குறிப்பிட வேண்டும். | நிலைமக் குறிப்பாயத்தில் மையவிலக்கு விசை இல்லை.சுழலும் குறிப்பாயத்தில்,மையநோக்கு விசை மற்றும் மையவிலக்குவிசை இரண்டையும் தனித்த பொருளின் விசைப்படத்தில் குறிப்பிட வேண்டும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards