11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
வெப்பமும் வெப்ப இயக்கவியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
மீளா செயல்முறைக்கான சில எடுத்துக்காட்டுகளைக் கூறுக.
2.
27°C வெப்பநிலை உள்ள அறை ஒன்றில் உள்ள சூடான நீர் 92°C லிருந்து 84°C வெப்பநிலைக்கு குளிர 3 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதே நீர் 65°C லிருந்து 60°C வெப்பநிலைக்குக் குறைய எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுக.
3.
வெப்ப இயந்திரம் வரையறு.
4.
வெப்பநிலை மாறா நிகழ்விற்கான நிலைச் சமன்பாட்டைத் தருக
5.
6.
ஒரு கலோரி வரையறு.
7.
வெப்ப இயக்கவியலின் சுழி விதியைக் கூறுக.
8.
வெப்பச் சமநிலை என்றால் என்ன?
9.
கரும்பொருள் என்றால் என்ன?
10.
வியன் விதியைக் கூறுக.
11.
வெப்ப விரிவு என்றால் என்ன?
12.
ஒரு மோல் வரையறு.
13.
அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
14.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி கண்டறியக் காரணம் யாது?
15.
வெப்ப இயக்கவியல் குறிப்பு வரைக.
16.
ஒரு வெப்ப இயந்திரம் அதன் சுழற்சி நிகழ்வின் போது 500J வெப்பத்தை வெப்பமூலத்திலிருந்து பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையை செய்தபின்னர் 300J வெப்பத்தை சூழலுக்கு (வெப்ப ஏற்பிக்கு)கொடுக்கிறது. இந்நிபந்தனைகளின்படி அந்த இயந்திரத்தின் பயனுறு திறனைக் காண்க.
17.
மெல்லோட்டப் பயிற்சியை (Jogging) தினமும் செய்வது உடல்நலத்தை பேணிக்காக்கும் என்பது நாமறிந்ததே. நீங்கள் மெல்லோட்டப் பயிற்சியில் ஈடுபடும்போது 500 KJ வேலை உங்களால் செய்யப்படுகிறது. மேலும் உங்கள் உடலிலிருந்து 230 KJ வெப்பம் வெளியேறுகிறது எனில், உங்கள் உடலில் ஏற்படும் அக ஆற்றல் மாறுபாட்டைக் கணக்கிடுக.
18.
வாயு மாறிலி R என்பது _______ இன் இரு தன் வெப்பங்ளின்
விகிதம்
கூடுதல்
பெருக்கம்
வேறுபாடு
19.
பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?
W = O
Q = O
U = O
T = O
20.
வெகு தொலைவிலுள்ள விண்மீனொன்று 350 mm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்வீண்மீனின் வெப்பநிலை ______.
8280 K
5000 K
7260 K
9044 K
21.
சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்.
நிறை
எடை
நிறை மையம்
நிலைமைத்திருப்புத்திறன்
22.
சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.
ஒரு நீள்வட்டம்
ஒரு வட்டம்
ஒரு நேர்க்கோட்டு
ஒரு பரவளையம்
1.
இயற்கையாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மீளா நிகழ்வுகள் ஆகும். சில ஆர்வமூட்டும் எடுத்துக்காட்டுகளை இங்கு காண்போம்.
(a) வாயு அடைத்து வைக்கப்பட்ட குடுவையை திறந்தவுடன், குடுவையில் இருந்த வாயு மூலக்கூறுகள் மெதுவாக அறை முழுவதும் பரவுகின்றன. அவை மீண்டும் குடுவைக்கு வருவதில்லை.

(b) பேனா மைத்துளி சொட்டு ஒன்றைத் தண்ணீரில் விடும்போது, மைத்துளி தண்ணிரில் மெதுவாக பரவும். அந்த பரவிய மைத்துளி மீண்டும் ஒன்று சேராது.
(c) சற்றே உயரமான இடத்திலிருந்து விழும் பொருள் தரையை அடைந்த உடன், பொருளின் மொத்த இயக்க ஆற்றல் தரையின் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது. அதில் ஒரு சிறுபகுதி ஒலி ஆற்றலாக இழக்கப்படுகிறது. தரையின் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது. அதில் ஒரு சிறுபகுதி ஒளி ஆற்றலாக இழக்கப்படுகிறது. தரையின் மூலக்கூறுகளுக்கு மாற்றமடைந்த இயக்க ஆற்றலை மீண்டும் ஒன்றிணைத்து பொருள் தானாகவே மேலே செல்ல இயலாது.
வெப்ப இயக்கவியலின் முதல்விதியின்படி மேலே கூறப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் எதிர்திசையில் நடக்கும் சாத்தியமுண்டு. ஆனால் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி இந்நிகழ்ச்சிகளை எதிர்திசையில் நடக்க அனுமதிக்காது. இயற்கையின் முக்கிய விதிகளின் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியும் ஒன்றாகும். இவ்விதி இயற்க்கை நிகழ்வுகள் நடைபெறும் திசையை தீர்மானிக்கிறது.
2.
3 நிமிடங்களில் சூடான நீரின் வெப்பநிலை 8°C குறைந்துள்ளது. 92°C மற்றும் 84°C இன் சராசரி வெப்பநிலை 88°C. இது அறை வெப்பநிலையைவிட 61°C அதிகமாக உள்ளது. சமன்பாடு (8.8)ஐப் பயன்படுத்தினால்
\(\frac { dT }{ T-{ T }_{ s } } =-\frac { a }{ ms } dt\) அல்லது =\(\frac { dT }{ dt } =-\frac { a }{ ms } (T-{ T }_{ s })\)
\(\frac { { 8 }^{ o }C }{ 3\quad min } =-\frac { a }{ ms } \)(61oC)
இதேபோன்று 65°C மற்றும் 60°C இன் சராசரி வெப்பநிலை 62.5°C ஆகும். இது அறை வெப்பநிலையைவிட 35.5°C அதிகமாக உள்ளது.
\(\frac { { 5 }^{ o }C }{ dt } =-\frac { a }{ ms } \)(35.5oC)
இவ்விரண்டு சமன்பாடுகளையும் வகுக்கும்போது.
\( \frac { \frac { { 8 }^{ o }C }{ 3\quad min } }{ \frac { { 5 }^{ o }C }{ dt } } =\frac { -\frac { a }{ ms } \left( { 61 }^{ 0 }C \right) }{ -\frac { a }{ ms } \left( 35.5^{ 0 }C \right) } \)
\(\frac { 8\times dt }{ 3\times 5 } =\frac { 61 }{ 35.5 } \)
\(dt=\frac { 61\times 15 }{ 35.5\times 8 } =\frac { 915 }{ 284 } =3.22\)நிமிடம்.
3.
வெப்பத்தை உள்ளீடாகப் பெற்று, சுழற்சி நிகழ்வை மேற்கொள்வதன் மூலம் அவ்வெப்பத்தை வேலையாக மாற்றும் ஒரு கருவியே வெப்ப இயந்திரம் ஆகும்.
4.
வெப்பநிலை மாறா நிகழ்வில் வெப்பநிலை ஓர் மாறா மதிப்பினைப் பெற்றிருக்கும். ஆனால் வெப்ப இயக்கவியல் அமைப்பின் அழுத்தம், பருமனும் மாற்றமடையும் நல்லியல்பு வாயுச் சமன்பாடு
\(PV=\mu RT\)
இந்நிகழ்வில் T ஓர் மாறிலி, எனவே வெப்பநிலை மாறா நிகழ்விற்கான நிலைச்சமன்பாடு
PV = மாறிலி
5.
6.
ஒரு கலோரி ஒரு வளிமண்டலம் அழுத்தத்தில் 1 கிராம் நிறையுடைய நீரின் வெப்பநிலையை 1oC உயர்த்தத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு ஆகும். வெப்பமான கலோரி என்ற எண்ணால் அழைக்கப்பட்டது.
1 கலோரி = 4.186 J.
7.
வெப்ப இயக்கவியலின் சுழி விதியின்படி A மற்றும் B என்ற இரண்டும் அமைப்புகள் C என்ற மூன்றாவது அமைப்புடன் வெப்பச் சமநிலையில் இருப்பின், A மற்றும் B என்ற இரண்டும் அமைப்புகளும் ஒன்றுக்கென்று வெப்பச்சமநிலையில் இருக்கும்.
8.
இரு அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒரே வெப்ப நிலையில் நேரத்தைப் பொருத்து மாறாமல் இருப்பது வெப்பச் சமநிலை எனப்படும்.
9.
(i) கரும்பொருள் என்பது அதன்மீது விழுகின்ற அனைத்து அலை நீளங்களும் உடைய வெப்பக் கதிர்வீச்சை உட்கவர்கிறது.
(ii) கரும்பொருள் எந்த வெப்பக்கதிர்வீச்சினையும் எதிரொளிப்பது அல்லது கடத்துவது, சூரியனை கிட்டத்தட்ட ஒரு கரும் பொருளாகக் கருதலாம்.
10.
வியனின் விதிப்படி, ஒரு கரும்பொருள் கதிர்வீச்சினால் உமிழப்படும் பெருமச்செறிவு கொண்ட அலைநீளம் \((\lambda _{ m })\) அக்கரும்பொருளின் கெல்வின் வெப்ப நிலைக்கு (T) எதிர் விகிதத்தில் இருக்கும்.
\(\lambda _{ m }\alpha \frac { 1 }{ T } (or){ \lambda }_{ m }=\frac { b }{ T } \)
இங்கு b என்பது வியன் மாறிலி.
இதன் மதிப்பு 2.898 x 10-3 mK.
11.
வெப்பநிலை மாற்றத்தினால் பொருள்களின் வடிவம், பரப்பு மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றமே வெப்ப விரிவு எனப்படும்.
12.
ஒரு மோல் என்பது அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை 6.023 x 1023 ஆகும். இது அவகேட்ரோ எண்ணிக்கை எனப்படும்.
13.
அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள்:
1.வாயுவை வெப்பப்படுத்தும்போது வாயு வெப்பமடைந்து பின்னர் அது பிஸ்டனைத் தள்ளுகிறது. ஏனவே வாயுவானது வளிமண்டல அழுத்தம் மற்றும் புவியீர்ப்பு விசை இவற்றின் கூடுதலுக்குச் சமமான ஓர் விசையை பிஸ்டனின் மீது செலுத்துகிறது எனில் இந்நிகழ்வு ஓர் அழுத்தம் மாறா நிகழ்வாகும்.

2.நமது வீட்டு சமையல் அறையில் நடைபெறும் பெரும்பாலான சமையல் நிகவுகள் அழுத்தம் மாறா நிகழ்வுகள் ஆகும். திறந்த பாத்திரத்தில் உணவினை சமைக்கும் போது உணவிற்கு மேலே உள்ள அழுத்தம் எப்போதும் வளிமண்டல அழுத்தத்திற்கு சமமாகும்.
14.
1. குளிர்ச்சியான பொருளிலிருந்து சூடான பொருளுக்கு வெப்ப ஆற்றல் பாய்வதையும் வெப்ப இயக்கவியலின் முதல் விதி அனுமதிக்கிறது.
2. எடுத்துக்காட்டாக 5J ஆற்றல் சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு அல்லது குளிர்ச்சியான பொருளிலிருந்து சூடான பொருளுக்கு பாய்ந்தாலும் தொகுபயன் அமைப்பின் மொத்த அக ஆற்றல் மாறாது.
3. ஆனால் 5J வெப்பம் குளிர்ச்சியான பொருளிலிருந்து வெப்பமான பொருளுக்கு எப்போதும் பாயாது. இயற்கையாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு திசையில் மட்டுமே நடைபெறும். எதிர்த்திசையில் நடைபெறுவதில்லை.
4. இந்நிகழ்வுகள் எந்தத்திசையில் நடைபெற்றாலும் அமைப்பின் மொத்த ஆற்றல் மாறாமல் இருக்கும். இருப்பினும் எதிர்த்திசையில் இந்நிகழ்வு நடைபெறாது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
5. வெப்ப இயக்கவியலின் முதல் விதி ஒரு இயற்கை நிகழ்வு எதிர்த்திசையில் ஏன் நடைபெறுவதில்லை என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்கவில்லை பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் மேதைகள் எதிர்த்திசையில் ஒரு நிகழ்வு நடைபெறாததற்கான விளக்கத்தைக் கொடுக்க முனைந்தார்கள். அதன் பயனாக இயற்கையின் ஒரு புதிய விதியினைக் கண்டறிந்தார்கள். அதுதான் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி.
15.
(i) வெப்ப இயக்கவியல் என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு வேலையை வெப்பமாகவும் மற்றும் வெப்பத்தை வேலையாகவும் மாற்றுவதில் உள்ள விதிகளை விவரிக்கிறது.
(ii) வெப்ப இயக்கவியல் விதிகள் பாயில், சாரலஸ், பெர்னூலி ஜூல், கிளாசியஸ், கெல்வின், கார்னோ மற்றும் ஹெல்ம்ஹோல்ட்ஸ் போன்ற அறிவியல் அறிஞர்களின் மூன்று நூற்றாண்டு கால ஆய்வுகளின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டதாகும்.
(iii) அன்றாட வாழ்வில் நம்மைச்சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்களும் ஏன் நமது உடலியக்க நிகழ்வுகள் கூட வெப்ப இயக்கவியல் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றது எனக்கூறினால் அது மிகையாகாது. எனவே வெப்ப இயக்கவியல் என்பது இயற்பியலின் ஓர் இன்றியமையாத பிரிவாகும்.
16.
வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறன்
\(\eta =1-\frac { { Q }_{ L } }{ { Q }_{ H } } \)
\(\eta =1-\frac { 300 }{ 500 } =1-\frac { 3 }{ 5 } \)
\(\eta \) = 1 – 0.6 = 0.4
வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறன் 40% இதிலிருந்து வெப்ப இயந்திரம் கொடுக்கப்பட்ட வெப்பதில் 40% மட்டுமே வேலையாக மாற்றியுள்ளது என்பதை அறியலாம்.
17.

அமைப்பினால் செய்யப்பட்ட வேலை (நமது உடலை அமைப்பு என்று கருதுக)
W = +500 kJ
அமைப்பிலிருந்து ( நமது உடல் ) வெளியேற்றப்பட்ட வெப்பம் Q = –230 kJ
உடலில் ஏற்படும் அக ஆற்றல் மாறுபாடு
= \(\Delta \)U= – 230 kJ – 500 kJ = – 730 kJ
எதிர்குறியானது நமது உடலின் அக ஆற்றல் குறைந்தது என்பதைக் காட்டுகிறது.
18.
(d)
வேறுபாடு
19.
(a)
W = O
20.
(a)
8280 K
21.
(d)
நிலைமைத்திருப்புத்திறன்
22.
(c)
ஒரு நேர்க்கோட்டு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards