11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
இயக்க விதிகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?
2.
பாராசூட் மெதுவாகக் கீழே விழுவதன் காரணம் என்ன?
3.
கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?
4.
2 kg நிறையுடைய பொருளின்மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன. \(\overrightarrow { { F }_{ 1 } } =5\hat { i } +8\hat { j } +7\hat { k } \) மற்றும் \(\overrightarrow { { F }_{ 2 } } =3\hat { i } -4\hat { j } +3\hat { k } \) பொருளின் முடுக்கத்தைக் காண்க.
5.
துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?
6.
மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?
நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்
சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்
நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்
7.
மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
எப்பொழுதும் சுழி
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு
முடிவு செய்ய இயலாது
8.
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.
1
1 ஐ விடக் குறைவு
1 ஐ விட அதிகம்
மேற்கண்ட அனைத்தும்
9.
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
நிலைமமற்ற தன்மை
10.
நியூட்டனின் மூன்றாவது விதியைக் கூறுக.
11.
போலி விசை என்றால் என்ன?
12.
7 kg மற்றும் 5 kg நிறையுடைய இரண்டு பொருட்கள் படத்தில் காட்டியுள்ளவாறு மேசையின் முனையில் பொருத்தப்பட்டுள்ள கப்பி ஒன்றின் வழியே செல்லும் மெல்லிய கயிற்றின் இரண்டு முனைகளில் இணைக்கப்பட்டுள்ளன. பொருளுக்கும், பொருள் வைக்கப்பட்டுள்ள பரப்புக்கும் இடையேயான ஓய்வு நிலை உராய்வுக் குணகத்தின் மதிப்பு 0.9 எனில் பரப்பின் மீது வைக்கப்பட்டிருக்கும் 7 kg நிறையுடைய m1 என்ற பொருள் நகருமா? அவ்வாறு நகரவில்லை எனில் m2 நிறையின் எம்மதிப்பிற்கு m1 நிறை நகரத் துவங்கும்?
13.
சறுக்குக் கோணத்தை கண்டறிவதற்கான சோதனையைச் சுருக்கமாக விவரி.
1.
ஆம்.M > 1 உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்கும் போது நிலைமம் அதிகரிக்கும்.
2.
காற்றின் தடையின் காரணத்தினால் பாராசூட் மெதுவாகக் கீழிறங்குகிறது. கீழே விழும் பாராசூட்டின் மீது செயல்படும் விசைகள்
1. கீழ்நோக்கிய காற்றின் தடை
2. மேல்நோக்கிய ஈர்ப்பு விசை
ஈர்ப்புவிசை காற்றின் தடை விசையை விட அதிகம்.
பாராசூட் திறக்கப்பட்டவுடன் காற்றின் தடை அதிகரிக்கும். எனவே பராசூட் மெதுவாகக் கீழிறங்குகின்றது
3.
i) நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் எதிரான அதே அளவிலான வினை ஏற்படும்.
ii) இதன்படி உள்ளிருந்து நாம் காரினை தள்ளும் போது அதற்கு இணையான எதிர்வினையை அது ஏற்படுத்தும்.எனவே காரினை நாம் உள்ளிருந்து தள்ளும் போது எதிர்வினையின் காரணமாக நாம் பின்னோக்கி செல்கிறோம் கார் நிலைத் தன்மையை பெறுகிறது.
iii) ஆகையால் காரினை உள்ளிருந்து தள்ளுவதால் பயனில்லை.
4.
நியூட்டனின் இரண்டாவது விதிப்படி, \(\overrightarrow { { F }_{ net } } =m\hat { a } \) இங்கு \(\overrightarrow { { F }_{ net } } =\overrightarrow { { F }_{ 1 } } +\overrightarrow { { F }_{ 2 } } \)
மேற்கண்ட சமன்பாடுகளின்படி \(\overrightarrow { a } =\frac { \overrightarrow { { F }_{ net } } }{ m } \)
\(\overrightarrow { { F }_{ net } } =\left( 5+3 \right) \hat { i } +\left( 8-4 \right) \hat { j } +\left( 7+3 \right) \hat { k } \)
\(\overrightarrow { { F }_{ net } } =8\hat { i } +4\hat { j } +10\hat { k } \)
\(\overrightarrow { a } =\left( \frac { 8 }{ 2 } \right) \hat { i } +\left( \frac { 4 }{ 2 } \right) \hat { j } +\left( \frac { 10 }{ 2 } \right) \hat { k } \)
\(\overrightarrow { a } =4\hat { i } +2\hat { j } +5\hat { k } \)
5.
துகளின் திசைவேகம் =
\(\overrightarrow { v } =\frac { d\overrightarrow { r } }{ dt } =\frac { d }{ dt } \left( 3t \right) \hat { i } +\frac { d }{ dt } \left( { 5t }^{ 2 } \right) \hat { j } +\frac { d }{ dt } \left( 7 \right) \hat { k } \)
\(\frac { d\overrightarrow { r } }{ dt } =3\hat { i } +10t\hat { j } \)
துகளின் முடுக்கம்
\(\overrightarrow { a } =\frac { d\overrightarrow { v } }{ dt } =\frac { { d }^{ 2 }\overrightarrow { r } }{ { dt }^{ 2 } } =10\hat { j } \)
இங்கு, நேர்குறி y அச்சுத்திசையில் மட்டுமே துகள் முடுக்கமடையும். நியூட்டன் இரண்டாம் விதிப்படி நிகர விசையின் திசையும் நேர்குறி y அச்சின் திசையிலேயே அமையும். மேலும் இத்துகள் நேர்குறி x அச்சுத்திசையில் மாறாத் திசைவேகத்தைப் பெற்றுள்ளது. ஆனால் z அச்சுத்திசையில் எவ்வித திசைவேகத்தையும் பெறவில்லை. எனவே , x அல்லது z திசையில் எந்த நிகர விசையும் செயல்படவில்லை.
6.
(b)
சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
7.
(b)
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
8.
(c)
1 ஐ விட அதிகம்
9.
(a)
திசையில் நிலைமம்
10.
1) எந்தவொரு செயல் விசைக்கும் (Action force) சமமான எதிர் செயல்விசை (reaction force)உண்டு.
2) இங்கு செயல் மற்றும் எதிர்ச்செயல் விசைகளின் சோடி ஒரேபொருளின் மீது செயல்படுவதில்லை.
3) மாறாக,வெவ்வேறு பொருட்களின் மீது செயல்படுகின்றன.
4) \(\xrightarrow { { F }_{ 12 } } =-\xrightarrow { { F }_{ 21 } } \)
11.
மையவிலக்கு என்பதன் பொருள் மையத்தை விட்டு வெளிநோக்கிச் செயல்படுவது என்பதாகும். சுழற்சிக் குறிப்பாயத்தைப் பொருத்து கல்லின் சுழற்சி இயக்கத்தை ஆய்வு செய்யும் போது மட்டும் மையவிலக்கு விசை கல்லின் மீது செயல்படுவதாகத் தோன்றும். இக்காரணத்தினால் தான் மையவிலக்கு விசையை ஒரு போலியான விசை என்று அழைக்கிறோம். இப்போலியான விசை எந்த மூலத்திலிருந்தும் தோன்றுவதில்லை இங்கு போலி விசை தோன்றுவதற்கான காரணம், நாம் கருதும் சுழற்சி குறிப்பாயம் ஒரு நிலைமமற்ற குறிப்பாயம் என்பதாலே ஆகும்.
12.
படத்தில் காட்டியவாறு m1 நிறையின் மீது நான்கு விசைகள் செயல்படுகின்றன
அ) எதிர்க்குறி y அச்சுத்திசையில் கீழ்நோக்கிச் செயல்படும் புவியீர்ப்பு விசை (m1g)
ஆ) நேர்க்குறி y அச்சுத்திசையில் மேல் நோக்கிச் செயல்படும் செங்குத்து விசை (N)
இ) m2 நிறையினால் நேர்க்குறி x அச்சுத்திசையில் செயல்படும் இழுவிசை
ஈ) எதிர்க்குறி x அச்சுத்திசையில் செயல்படும் உராய்வு விசை
இங்கு, நிறை m1 எவ்விதமான செங்குத்து இயக்கத்தையும் மேற்கொள்ளவில்லை. எனவே, m1g = N
.jpg)
நிறை m1 -யின் தனித்த பொருள் விசைப்படம்
.jpg)
பரப்பின் மீது m1 நிறை நகர்கிறதா எனக் கண்டறிய, m1 நிறை வைக்கப்பட்டுள்ள பரப்பு, m1 நிறையின்மீது செலுத்தும் பெரும ஓய்வுநிலை உராய்வினைக் காண வேண்டும். நிறை m1 மீது செயல்படும் இழுவிசை, பெரும ஓய்வு நிலை உராய்வு விசையை விட அதிகமாக இருப்பின் பொருள் நகரத்துவங்கும்
fsmax = μsN = μsm1g
fsmax = 0.9 x 7 x 9.8 = 61.74 N
இழுவிசை = T = m2g = 5 x 9.8 = 49 N
T < fsmax
நிறை m1 மீது செயல்படும் இழுவிசை, ஓய்வு நிறை உராய்வை விடக் குறைவாக இருப்பதனால் நிறை m1 பரப்பின் மீது நகராது.
m1 நிறையை நகர்த்த T > fsmax இங்கு T = m2g
\(m_2={\mu_sm_1g\over g}={\mu_sm_1}\)
\(m_2=0.9 \times 7=6.3kg\)
நிறை m2 மதிப்பு 6.3 kg விட அதிகம் எனில், நிறை m1 பரப்பின் மீது நகரத் தொடங்கும்
பரப்பில் எவ்வித உராய்வும் இல்லை எனில் அதாவது வழுவழுப்பான பரப்பு எனில், நிறை m2 வின் எந்தவொரு மதிப்பிற்கும் நிறை m1 பரப்பின் மீது நகர்ந்து செல்லும் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
சோடிப்பொருட்களின் பரப்புகளுக்கிடையேயான ஓய்வு நிலை உராய்வுக் குணகத்தின் மதிப்பு, அட்டவணை 3.1 இல் காட்டப்பட்டுள்ளது பனிக்கட்டித் துண்டுகளுக்கிடையேயான ஓய்வு நிலை உராய்வுக் குணகம் மிகக்குறைந்த மதிப்பைப் பெற்றுள்ளதை இங்கு கவனிக்கவும். ஒரு பனிக்கட்டித்துண்டை மற்றொரு பனிக்கட்டித் துண்டின்மீது எளிதாக நகர்த்த முடியும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
13.
சாய்தளப் பரப்பின் மீது வைக்கப்பட்டுள்ள பொருள் ஒன்றைக் கருதுக. இந்தச் சாய்தளப் பரப்பு சமதளத்துடன் ஏற்படுத்தும் கோணம் θ என்க. θ வின் சிறிய மதிப்பிற்கு சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள் நகராது.
θ வின் மதிப்பை படிப்படியாக உயர்த்தும் போது, ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு, சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள் நகரத்தொடங்கும். அதுவே சறுக்குக்கோணம் எனப்படும். இதனை அளந்து கொள்ள வேண்டும்.
சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள், கிடைத்தளப் பரப்புடன் சாய்தளம் ஏற்படுத்தும் எக்கோணத்தில் நகரத்தொடங்குகிறகேோ, அக்கோணமே, சறுக்குக்கோணம் எனப்படும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards