11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
இயற்பியல் என்றால் என்ன?
2.
ஒரு வட்டத்தின் ஆரம் 3.12 m எனில் அதன் பரப்பு முக்கிய எண்ணுருக்களில் கணக்கிடுக.
3.
சோனார் கருவி (sonar) பொருத்தப்பட்ட ஒரு நீர்மூழ்கி கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட துடிப்பு 80 வினாடிகளுக்கு பிறகு எதிரொலியாக எதிரி நீர்மூழ்கி கப்பலிலிருந்து பெறப்படுகின்றது. நீரில் ஒலியின் திசைவேகம் 1460 ms-1 எனில் எதிரி நீர்மூழ்கி கப்பல் உள்ள தொலைவு யாது?
4.
விழுக்காட்டுப்பிழை என்றால் என்ன?
5.
தனிப்பிழை என்றால் என்ன?
6.
அலகு என்றால் என்ன?
7.
அனைத்து அலகுகளின் அணுப்படித்தரம் மிகவும் பயனுள்ளதா - விவரி.
8.
ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே (5.7 ± 0.1) cm மற்றும் (3.4 ± 0.2) cm எனில் செவ்வகத்தின் பரப்பை பிழை எல்லையுடன் கணக்கிடுக.
9.
R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?
10.
தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.
11.
புவிஈர்ப்பு மாறிலி (G) ன் SI அலகு
kg2 m-2
kg ms-1
Nm2 kg-2
Nm-1
12.
ஒரு லூனார் மாதம்______
29 நாட்கள்
27.3 நாட்கள்
365 நாட்கள்
30 நாட்கள்
13.
ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?
\(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)
\(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)
\(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)
\(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)
14.
விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு_______.
[MLT0]
[MLT-1]
[ML-2T]
[ML-1T0]
15.
ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.
[ML3T-2]
[M-1L3T-2]
[M-1L-3T-2]
[ML-3T2]
16.
t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b -இன் பரிமாணம் _______.
[L]
[LT-1]
[LT-2]
[LT-3]
17.
π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு _______.
9.8596
9.860
9.86
9.9
18.
அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.
Kg2
m3
s-1
m
19.
ஒரு பொருளின் திசைவேகத்தின் சமன்பாடு v = b/t + ct2 + dt3 எனில் b இன் பரிமாணத்தைப் பெறுக.
20.
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)
21.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?
22.
இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:
23.
பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக
24.
1.
இயற்பியல் (Physics) என்ற சொல்லானது, இயற்கை என்ற பொருளுடைய ஃபியுசிஸ்) (fusis) எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இயற்பியல் என்பது இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகளைப் பற்றி பயிலுவதாகும். எனவே, இயற்பியலே அறிவியலின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அடிப்படையானதாகக் கருதப்படுகிறது.
2.
வட்டத்தின் ஆரம் r = 3.12 m
வட்டத்தின் பரப்பு A = πr2
= 3.14 x (3.12)2
\(=3.14 \times 3.12 \times 3.12=30.5660 \mathrm{~m}^2 \)
\(\mathrm{~A} =30.6 \mathrm{~m}^2\)
3.
நீரில் ஒலியின் வேகம் v = 1460 ms-1
காலம் t = 80 s
\(v=\frac{2 d}{t} \)
\(\therefore 2 \mathrm{~d}=\mathrm{v} \times \mathrm{t} \)
\(=140 \times 80=11680 \mathrm{~m} \)
\(\therefore\) நீர் மூழ்கி கப்பல் உள்ள தொலைவு
\(\mathrm{d}=\frac{11680}{2}=58.40 \mathrm{~km} .\)
4.
ஒப்பீட்டுப்பிழையினை விழுக்காட்டில் குறிப்பிட்டால், அது விழுக்காட்டுப்பிழை எனப்படும்.
விழுக்காட்டுப்பிழை \(={\triangle am\over am}\times 100\)
5.
ஓர் அளவின் உண்மையான மதிப்பிற்கும் அளவிடப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு தனிப்பிழை எனப்படும்.
\(a_m={a_1+a_2+a_3+....+a_n\over n}\)
அல்லது
\(a_m=1/n\sum^n_{i=1}ai\)
6.
அளவு ஒன்றை அளந்தறிய, நாம் எப்பொழுதும் அதனை ஒரு படித்தர அளவுடன் ஒப்பிடுகிறோம். இந்தப் படித்தர அளவே அலகு ஆகும்.
7.
1.அனைத்து அலகுகளின் அணுப்படித்தரம் பயனுள்ளதாகவே உள்ளது.
2. ஏனெனில் முற்காலத்தில் பலவகையான அளவுமுறைகள் பயன்படுத்தப்பட்டது.இதனால் இடத்திற்கு இடம் அளவுகளின் மாறுபாடு காணப்பட்டது
3.இதனை போக்கும் வகையில் போக்கும் வகையில் International standards- அமைப்பு உருவாக்கப்பட்டது
4.அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் படியான அளவுகள் அமைக்கப்பட்டது
5.இதனால் அளவீடுகளில் மாற்றம் ஏற்படாமல் உலகின் அனைத்து இடங்களில் ஒரே அளவீடு அமைந்துள்ளது.
6.பொதுவாக இந்த அளவீடுகள் 10-ன் மடங்குகளாக அமைவதால் கணக்கீடு செய்வது எளிதாக உள்ளதால் இந்த அளவு முறை ஏற்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
8.
நீளம் l = (5.7 ± 0.1) cm
அகலம் b = (3.4 ± 0.2) cm
பிழை எல்லையுடன் கூடிய பரப்பு (A + ΔA) =?
பரப்பு A = l × b = 5.7 × 3.4 = 19.38 = 19.4 cm2
\({ΔA\over A}=\left({Δl\over l}+{Δb\over b}\right)\)
\(ΔA=\left({Δl\over l}+{Δb\over b}\right)A\)
\(ΔA=\left({0.1\over5.7}+{0.2\over3.4}\right)\times19.4\)
= (0.0175 + 0.0588) × 19.4
= 1.48 = 1.5
பிழை எல்லையுடன் கூடிய பரப்பு
A = (19.4 ± 1.5) cm2
9.
R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω
தொகுபயன் மின்தடை R = ?
R = R1 + R2
= (100 ± 3) + (150 ± 2)
= (100 + 150) ± (3 + 2)
R = (250 ± 5) Ω
10.
கோணம் θ = 60˚
மரத்திற்கும் புள்ளிக்கும் இடையேயான தொலைவு (x) = 50 m
மரத்தின் உயரம் (h) = ?
முக்கோண முறைப்படி \(\tan\theta ={h \over x }\)
h = x tan θ
h = 50 × tan 60°
= 50 × 1.732
∴ மரத்தின் உயரம் h = 86.6 m
11.
(c)
Nm2 kg-2
12.
(b)
27.3 நாட்கள்
13.
உட்புகுதிறனின் பரிமாணம்
\(\varepsilon=\left[\mathrm{A}^2 C^2 N^{-1} m^2\right]\)
போல்ட்ஸ்மேன் மாறிலியின் பரிமாணம்
\(k_B=\left[\mathrm{ML}^2 \mathrm{~T}^{-2} \mathrm{~K}^{-1}\right]\)
வெப்பநிலை பரிமாணம் = T
ஒரலகு பருமனில் உள்ள மின்னூட்டங்களின் எண்ணிக்கை = பரிமாணம் இல்லை
மின்னூட்டத்தின் பரிமாணம் = AT
நீளத்தின் பரிமாணம் = L
\(\sqrt{\frac{\varepsilon k_B T}{n g^2}}\) இன் பரிமாணம்
\(=\sqrt{\frac{\left[A^2 L^2 N^{-1} m^{-2}\right]\left[M L^2 T^{-2} K^{-1}\right][T]}{[A T]^2}} \)
\(=\sqrt{L^2}=L\)
= நீளத்தின் பரிமாணம்
\(\therefore l=\sqrt{\frac{\varepsilon k_B T}{n q^2}}\)
14.
\(\mathrm{F}=\mathrm{kv}^2\)
k- இன் பரிமாணம்
= F- இன் பரிமாணம் / V2- இன் பரிமாணம்
\(=\frac{M L T^{-2}}{\left(L T^{-1}\right)^2}=\frac{M L T^{-2}}{L^2 T^{-2}} \)
\(=M L^{1-2} T^{-2+2}=M L^{-1} T^0\)
15.
ஈர்ப்பு மாறிலி
\(\mathrm{G}=\frac{F r^2}{m_1 m_2}\)
G - இன் பரிமாணம்
\(\Rightarrow \frac{\left[M L T^{-2}\right]\left[L^2\right]}{[M][M]}=\frac{M L^3 T^{-2}}{M^2}=M^{-1} L^3 T^{-2}\)
16.
\(\mathrm{v}=\mathrm{at}+\mathrm{bt}^2\)
பரிமாண சமன்பாடு
\(\mathrm{LT}=\mathrm{at}+\mathrm{bT}^2\)
b - இன் பரிமாணம்
\(=\frac{L T^{-1}}{T^2} \mathrm{LT}^{-1-2}=\mathrm{LT}^{-3}\)
17.
π = 3.14
π2 = 3.14 x 3.14 = 9.8596
= 9.86
18.
h இன் அலகு-(h-பிளாங்க் மாறிலி)-Js
C இன் அலகு-(ஒளியின் திசைவேகம்) ms-1
G இன் அலகு-(புவி ஈர்ப்பு மாறிலி)- \( \frac{\mathrm{Nm}^2}{\mathrm{~kg}^2}\)
\(\therefore \frac{h c}{G}\) இன் அலகு \(=\frac{J s \times m s^{-1}}{N m^2 / \mathrm{kg}^2} \)
\(=\frac{(\mathrm{Nm}) s \times m \mathrm{~s}^{-1} \times \mathrm{kg}^2}{\mathrm{Nm}^2} \)
\({[J} =\mathrm{Nm}]=\mathrm{kg}^2\)
19.
(b/t) ஆனது திசைவேகத்தின் பரிமாணத்தைப் பெறும்
b = (திசைவேகம் \(\times\) காலம்)
[b] = [LT 1] [T] = [L] = [M0L1 T0]
20.
ஆற்றலானது நிறை மற்றும் ஒளியின் திசைவேகத்தைப் பொறுத்தது எனில்
E \(\alpha \) ma cb
E = kma cb இங்கு k என்பது மாறிலி
ஆற்றலின் பரிமாண வாய்ப்பாடு E = [ML2 T2]
நிறையின் பரிமாண வாய்ப்படு = [M]
திசைவேகத்தின் பரிமாண வாய்ப்பாடு
c = [LT-1]
பரிமாண மதிப்புகளை சமன்பாட்டில் பிரதியிட
[ML2T2] = K [M]a [LT 1]b
அடுக்குகளை இருபுறமும் சமன்செய்ய,
a = 1
b = 2
E = k.mc2
இங்குமாறிலி k = 1
E = mc2
இதுவே நிறை ஆற்றல் சமன்பாடாகும்.
21.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள்:
(i) எண்கள் TT, e (ஆய்லா் எண்) போன்ற பரிமாணமற்ற மாறிலிகளின் மதிப்பை இம்முறையின் மூலம் பெற முடியாது.
(ii) கொடுக்கப்பட்டுள்ள அளவு வெக்டா் அளவா? அல்லது ஸ்கேலா் அளவா? என்பதை இம்முறை மூலம் தீா்மானிக்க முடியாது.
(iii) திரிகோணமிதி, அடுக்குக்குறி மற்றும் மடக்கை சாா்புகள் உள்ளடங்கிய சமன்பாடுகளின் தொடா்புகளைக் கண்டறிய இம்முறையில் இயலாது.
(iv) மூன்றுக்கு மேற்பட்ட இயற்பியல் அளவுகள் உள்ளடங்கிய சமன்பாடுகளுக்கு இம்முறையைப் பயன்படுத்த இயலாது.
(v) இம்முறையில் ஒரு சமன்பாடு பரிமாணமுறையில் சரியானதா, என்றே மெய்ப்பிக்க முடியும் அதன் உண்மையான சமன்பாட்டைக் கண்டறிய முடியாது.
(vi) எடுத்துக்காட்டாக, s = ut + 1/3 at2 என்பது பரிமாண முறைப்படி சரி. ஆனால் உண்மையான சமன்பாடு s = ut + 1/2 at2 ஆகும்.
22.
(i) இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒன்று அடிப்படை அளவுகள், மற்றொன்று வழி அளவுகள்.
(ii) வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
(iii) அவை நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு (amount of a substance) ஆகும்.
(iv) அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எடுத்துக்காட்டு: பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், விசை மற்றும் பல.
23.
பரிமாணங்களில் ஒருப்படித்தான நெறிமுறைப்படி ஒரு சமன்பாட்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் பரிமாணங்களும் சமமாகும். எடுத்துக்காட்டாக, v2 = v2 + 2as என்ற சமன்பாட்டில் v2, u2மற்றும் 2as ஆகியவற்றின் பரிமாணங்கள் ஒத்ததாகவும்[L2T-2] க்கு சமமாகவும் இருக்கும்.
பயன்கள்:
இம்முறையானது,
(i) இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையிலிருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு மாற்றப் பயன்படுகிறது.
(ii) கொடுக்கப்பட்ட சமன்பாடு பரிமாண முறைப்படி சரியானதா என சோதிக்கப் பயன்படுகிறது.
(iii) வெவ்வேறு இயற்பியல் அளவுகளுக்கிடையே உள்ள தொடா்பினைப் பெற பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு-1
பரிமாணங்கள் முறையில் 76 cm பாதரச அழுத்தத்தை Nm-2 என மாற்றுதல்.
தீர்வு
CGS முறையில் 76 cm பாதாச அழுத்தம் (P1) = 76 x 13.6 x 980 dyne cm-2
SI முறையில் P - ன் மதிப்பு (P2) = ?
அழுத்தத்தின் பரிமாண வாய்ப்பாடு \(\left[M L^{-1} T^{-2}\right]\)
\(\mathrm{P}_1\left[M_1^a L_1^b T_1^c\right] =\mathrm{P}_2\left[M_2^a L_2^b T_2^c\right] \)
\(\therefore P_2 =P_1\left[\frac{M_1}{M_2}\right]^a\left[\frac{L_1}{L_2}\right]^b\left[\frac{T_1}{T_2}\right]^c \)
\(\mathrm{M}_1 =1 \mathrm{~g} ; \quad \mathrm{M}_2=1 \mathrm{~kg} \)
\(\mathrm{~L}_1 =1 \mathrm{~cm} ; \quad \mathrm{L}_2=1 \mathrm{~m} \)
\(\mathrm{~T}_1 =1 \mathrm{~s} ; \quad \mathrm{T}_2=1 \mathrm{~s} \)
எனவே \(\mathrm{a} =1 \mathrm{~b}=-1 \mathrm{c}=-2\)
\(\therefore P_2 =76 \times 13.6 \times 980\left[\frac{1 \mathrm{~g}}{1 \mathrm{~kg}}\right]^{\mathrm{l}}\left[\frac{1 \mathrm{~cm}}{1 \mathrm{~m}}\right]^{-1}\left[\frac{1 \mathrm{~s}}{1 \mathrm{~s}}\right]^{-2} \)
\(=76 \times 13.6 \times 980\left[\frac{10^{-3} \mathrm{~kg}}{1 \mathrm{~kg}}\right]^1\left[\frac{10^{-2} \mathrm{~m}}{1 \mathrm{~m}}\right]^{-1}\left[\frac{1 \mathrm{~s}}{1 \mathrm{~s}}\right]^{-2} \)
\(=76 \times 13.6 \times 980 \times\left[10^{-3}\right] \times 10^2 \)
\(=1.01 \times 10^5 \mathrm{Nm}^{-2}\)
\(\frac{1}{2} m v^2=m g h\) என்ற சமன்பாட்டை பரிமாணப்பகுப்பாய்வு முறைப்படி. சரியானதா என கண்டறிதல்.
\(\frac{1}{2} m v^2\) இன் பரிமாண வாய்ப்பாடு \(=\lceil\mathrm{M}\rceil\left\lceil\mathrm{LT}^{-1}\right\rceil^2=\left\lceil\mathrm{ML}^2 \mathrm{~T}^{-2}\right\rceil \)
mgh இன் பரிமாண வாய்ப்பாடு \(=[\mathrm{M}]\left[\mathrm{LT}^{-2}\right][\mathrm{L}]=\left[\mathrm{ML}^2 \mathrm{~T}^{-2}\right\rceil \)
\(\therefore\left[\mathrm{ML}^2 \mathrm{~T}^{-2}\right] =\left[\mathrm{ML}^2 \mathrm{~T}^{-2}\right]\)
இருபுறங்களிலும் பரிமாணங்கள் சமம். எனவே \(\frac{1}{2} m v^2=m g h\) என்ற சமன்பாடு பரிமாண முறைப்படி சரி.
தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான கோவையை பரிமாண முறையில் பெறுதல். அலைவு நேரமானது. (i) ஊசல் குண்டின் நிறை 'm' (ii) ஊசலின் நீளம் 'l' (iii) அவ்விடத்தில் புவியீ்ர்ப்பு முடுக்கம் g ஆகியவற்றைச் சார்ந்தது.' (மாறிலி k = 2π)
\(T \propto m^a l^b \dot{g}^c \)
\(T=k \cdot m^{\mathrm{a}} l^{\mathrm{b}} g^c\)
k என்பது பரிமாணமற்ற மாறிலி. மேற்கண்ட சமன்பாட்டில் பரிமாணங்களை பிரதியிட
\({\left[\mathrm{T}^{\mathrm{l}}\right] } =\left[\mathrm{M}^{\mathrm{a}}\right]\left[\mathrm{L}^{\mathrm{b}}\right]\left[\mathrm{LT}^{-2}\right] \)
\({\left[\mathrm{M}^0 \mathrm{~L}^0 \mathrm{~T}^1\right] } =\left[\mathrm{M}^{\mathrm{a}} \mathrm{L}^{\mathrm{b}+\mathrm{c}^2} \mathrm{~T}^{-2 \mathrm{c}}\right]\)
சமன்பாட்டின் இருபுறமும் உள்ள M, L, T ன் படிகளை சமன் செய்ய
\(\mathrm{a}=0, \mathrm{~b}+\mathrm{c}=0 .-2 \mathrm{c}=1\)
சமன்பாடுகளைத் தீர்க்க
\(\mathrm{a}=0, \mathrm{~b}=1 / 2 \) மற்றும் c = -1 / 2
a,b மற்றும் c மதிப்புகளை சமன்பாடு (1) இல் பிரதியிட
\(\mathrm{T}=\mathrm{k} \cdot \mathrm{m}^0 l^{1 / 2} g^{-1 / 2} \)
\(\mathrm{~T}=\mathrm{k}\left(\frac{l}{g}\right)^{1 / 2}=k \sqrt{\frac{l}{g}}\)
சோதனை மூலம் பெறப்பட்ட k யின் மதிப்பு k = 2 π, எனவே
\(\mathrm{T}=2 \pi \sqrt{\frac{l}{g}}\)
24.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards