11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 06/03/2019
Plus One Public Official Model Question 2019
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நுண்கணிதத்தின் அடிப்படை செயலி ________ஆகும்.
அணிக்கோவை
வகையீடு
நேர்கோட்டுச் சமன்பாடு
சார்பு
2.
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் _______என்று அழைக்கப்படுகின்றன.
வளர்ந்த வரும் நாடுகள்
பின்தங்கிய நாடுகள்
முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள்
வளர்ச்சி குன்றிய நாடுகள்
3.
விலை அதிகமாக இருக்கும்பொழுது தேவை _________இருக்கும்.
அதிகமாக
குறைவாக
நிலையாக
எதுவுமில்லை
4.
_____ கொடு வருமானம் [அ] நுகர்வோர் தொடர்புள்ளது.
வறுமை
செல்வம்
வேலைவாய்ப்பு
எதுவுமில்லை
5.
________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.
உற்பத்தி
நுகர்வு
பகிர்வு
பொதுநிதி
6.
பொருளாதாரச் சிக்கனம் _________ வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
7.
ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான். ரே மற்றும் ___________ஐச் சாரும்.
போம் போகுவர்க்
பென்ஹாம்
வாக்கர்
நட் விக்செல்
8.
மிகக் குறுகிய கால அங்காடி ______ அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது.
நீண்ட காலம்
குறுகிய காலம்
அங்காடிக்காலம்
தொலைநோக்குக் காலம்
9.
______________ ல் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது.
உடல்நலம்
உயர்கல்வி
குழந்தை இறப்பு வீதம் மற்றும் மகப்பேறு வீதம்
மேற்கூறிய அனைத்தும்
10.
x + y = 5, x - y =3 என்றால் x ன் மதிப்பு ____________ ஆகும்.
4
3
16
8
11.
12.
வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
1989-1991
1990-1992
2000-2001
1981-1983
13.
குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்
I
II
III
IV
14.
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புபடுத்தி குறிப்பது
நுட்பம்
சார்ந்திருப்பு
இரட்டை தன்மை
சமமின்மை
15.
இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.
மும்பை
சென்னை
காண்ட்லா
கொச்சி
16.
விலையின் மற்றொரு பெயர்______
சராசரி வருவாய்
இறுதிநிலை வருவாய்
மொத்த வருவாய்
சராசரி செலவு
17.
ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?
நுகர்வு சார்பு
உற்பத்தி சார்பு
சேமிப்பு சார்பு
முதலீட்டு சார்பு
18.
வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.
சமூக
பொருளாதார
பண
மாறா
19.
கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
தேவை விரிவு மற்றும் சுருக்கம்
தேவை இடப்பெயர்வு
தேவை கூடுதல் மற்றும் குறைதல்
மேற்காண் அனைத்தும்
20.
21.
எப்பொழுது மிகைத் தேவை நெகிழிச்சி தோன்றும்?
22.
உற்பத்தி என்றால் என்ன?
23.
நிகர வட்டி என்றால் என்ன?
24.
AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?
25.
தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.
26.
தேவைச் சார்புச் சமன்பாடு x = 20-2p-p2 இல் p விலையையும் x அளவையும் குறிப்பிடும் என்றால் p = 2.5 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு காண்
27.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.
28.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.
29.
பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.
30.
31.
Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.
32.
இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.
33.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
34.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
35.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
36.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
37.
Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண்.
38.
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.
39.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?
40.
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.
41.
காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.
42.
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
43.
குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி
44.
பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு
45.
ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.
46.
நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.
47.
எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?
48.
அளிப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
49.
தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?
50.
சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.
51.
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக
52.
ஊரக வளர்ச்சியின்மை காரணங்களை விளக்குக.
53.
GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
54.
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
1.
(b)
வகையீடு
2.
(c)
முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள்
3.
(b)
குறைவாக
4.
(a)
வறுமை
5.
(a)
உற்பத்தி
6.
(b)
இரண்டு
7.
(a)
போம் போகுவர்க்
8.
(c)
அங்காடிக்காலம்
9.
(d)
மேற்கூறிய அனைத்தும்
10.
(a)
4
11.
(a)
12.
(b)
1990-1992
13.
(a)
I
14.
(c)
இரட்டை தன்மை
15.
(c)
காண்ட்லா
16.
(a)
சராசரி வருவாய்
17.
(b)
உற்பத்தி சார்பு
18.
(b)
பொருளாதார
19.
(a)
தேவை விரிவு மற்றும் சுருக்கம்
20.
(b)
21.
விலையில் ஏற்பட்ட மாற்ற விகிதத்தைவிட தேவை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால் மிகைத் தேவை நெகிழ்ச்சி தோன்றும்.
22.
(i) உற்பத்தி என்பது பல்வேறு வகையான இரு பொருட்களைப் பயன்படுத்தி இறுதிப் பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வுக்காக வழங்குதல் ஆகும்.
(ii) உற்பத்தி என்பது புதிதாக உருவாக்குதல் ஆகும்.
(iii) உற்பத்தி என்பது உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றுவது ஆகும்.
23.
(i) மொத்த வட்டியில் ஒரு பகுதியே நிகர வட்டி ஆகும்.
(ii) மூலதனத்தை பயன்படுத்த மட்டுமே நிகர வட்டி வழங்கப்படுகிறது.
(iii) அரசு பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி நிகர வட்டிக்கு எடுத்துக்காட்டாகும்.
24.
சூத்திரம் :
AR=100, AC=32, உற்பத்தி=5
TP=(AR-AC)xஉற்பத்தி
=(100-32)x5
=68x5
∴ மொத்த இலாபம் = 340
25.
1191-ன் புதிய தொழிற் கொள்கையின் கீழ் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
26.
\(\boxed{\eta d={p\over x}{dx\over dp}}\)
\({dx\over dp}=-2-2p\)
\(\eta d={-p\over 20-2p-p^2}(-2-2p)\)
\(={2p(1+p)\over 20-2p-p^2}\)
இதில் p=2.5எனில்,
\(={2(2.5)(1+2.5)\over 20-2(2.5)-(2.5)^2}\)
\(={5(3.5)\over 20-5-6.25}\)
\(={17.5 \over 15-6.25}\)

27.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன :
(i) பருவ மழையை நம்பியிருப்பது.
(ii) விதைகள் , பூச்சிக் கொல்லிகள் , தண்ணீர் போன்ற உள்ளீடுகளுக்காக பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
(iii) பெரு , சிறு மாற்று குறு விவசாயிகளுக்குகிடயே வருமான இடைவெளி அதிகரித்திருப்பது.
(iv) பண்ணைகள் இயந்திரமயமாக்கப் படுத்தல் ஆகிய இவை அனைத்தும் பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன.
28.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
29.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.
30.
31.
Microsoft power point
கணினி வாயிலாக தகவல்களை வழங்கிட உதவும் ஒரு மென்பொருள் ஆகும்.
(MS power point)தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகள்:
1.துவங்க (Start)செயலியை அமுக்கு
2.செயற்கட்டளை (Program)யை அமுக்கு
3.Microsoft power point ஐ தெரிவு செய்.
4.புதிய power point கோப்பானது திறக்கும்.
5.அதன் பிறகு தலைப்பு மற்றும் துணை தலைப்புகளை விரும்பினால் தட்டச்சு செய்யும்.
6.புதிய படிவம் ('New Slide')என்ற குறியீடு (Icon) அல்லது 'ctrl +m' என்ற பொத்தானை அழுக்குவதன் மூலம் புதிய படிமத்தை நுழைக்கலாம்.
7.பாடப்பொருள், அட்டவணையை உள்நுழைத்தல் போன்றவற்றை உள்ளடக்கமாக தர முடியும்.
8.வடிவமைப்பு 'Design' என்ற செயலி நழுமங்களை வடிவமைக்க உதவுகிறது.
9.நழுமக்காட்சி (slide show) என்ற செயலியை அமுக்குவதன் மூலம் ஒருவர் நழுமக்காட்சிகளை துவக்கத்திலிருந்தோ அல்லது தற்போதைய நழுமக்காட்சிலிருந்தோ இயக்க முடியும்.
முடிவுரை:
1. குறிப்பிட்ட தலைப்பிலான தகவல்களை புரிந்துகொண்டு நினைவில் வைப்பதற்குரிய குறிப்பு Power Point Presentation வசதிப்படுத்துகிறது.
2.கற்பித்தலில் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உயர்ந்த தரம் வாய்ந்த கல்வியினை வழங்கிட Power Point Presentation (PPP)உதவுகிறது.
32.
1.அதிக மக்கள் தொகை:
1.மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது.
2.மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது.
3.மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000பேருக்கு 1.7 என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது.
4.ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.
2.ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை:
1.இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு நிலை நீடிக்கிறது.
2.அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
3.சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது.
3.அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும் அத்தியாவசியப் பண்டங்களும் விலை தொடர்ந்து உயர்கிறது.
4.உள் கட்டமைப்பு பலவீனம்:
கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து,பண்டங்கள், பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.
5.வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை:
அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது.
6.பழமையான தொழில் நுட்பம்:
வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும் வழக்கொழிந்ததாகவும் உள்ளது.
33.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
34.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
35.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
36.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
37.
Pd=1600-x2
Ps =2x2+100
\(\boxed { { P }_{ d }={ P }_{ s } } \)
⇒ 1600-x2=2x2+400
1600-x2-2x2=400
-3x2=400-1600
+3x2=+1200
\(x ^{2}= \pm \sqrt {400}\)
∴ x=20
x=20 எனில் p0x0= 1600-x02
=1600-(20)2
=1600-400
p0=1200
p0x0=1200x20
=24000
நுகர்வோர் உபரி (c.s)=\(\int_{0}^{x0}f(x)dx-p_{0}x_{0}\)
i) \(\int_{0}^{20}(1600-x^{2})dx-24,000\)
ii) \(|1600x-\frac{x^{3}}{3}|^{20}_{0}-24,000\)
=\(32000-\frac{8000}{3}-24000\)
=\(8000-\frac{8000}{3}\)
=\(\frac{24000-8000}{3}\)
உற்பத்தியாளர் உபரி (p.s)=P0x0 - \(\int^{x0}_{0}g(x)dx\)
=\(24000-\int^{20}_{0}(2x^{2}-400)dx\)
=\(24000-[\frac{2x^{3}}{3}+400x]^{20}_{0}\)
=24000-\([\frac{2(20)^{3}}{3}+400(20)]^{20}_{0}\)
=24000-\([\frac{2\times 8000}{3}+8000]\)
=24000-\(\frac{16000}{3}-8000\)
=16000-\(\frac{16000}{3}\)
=\(\frac{48000-16000}{3}\)
38.
மின் ஆற்றல்:
(i) மின் ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு பிற தென்மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.
(ii) முப்பந்தல் காற்றாலை மையம் கிராம மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது.
(iii) நாகர்கோயில் மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலையிலிருந்து இந்தியாவிற்கு 2% மின் தேவைகளை நிறைவு செய்கிறது.
அணுமின் ஆற்றல்:
கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அணுமின் நிலையங்களாகும்.
வெப்ப ஆற்றல்:
(i) தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் அதிக அளவு அத்திப்பட்டு, எண்ணூர், மேட்டூர், நெய்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
(ii) டீசலை அடிப்படையாகக்கொண்டு அனல்மின் உற்பத்தியில் 34% க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.
புனல் மின்சாரம்:
(i) தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட புனல்மின் நிலையங்கள் உள்ளது.
(ii) குந்தா, மேட்டூர், மரவகாண்டி, பார்சன் வேலி ஆகியன முக்கியவையாகும்.
சூரிய சக்தி மின்சாரம்:
(i) தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
(ii) தென்தமிழகம் சூரிய மின்சக்தி திட்டங்களைச் செயல்படுத்த உகந்த மண்டலமாக திகழ்கிறது.
காற்றாலை மின்சாரம்:
(i) இந்திய அளவில் தமிழ்நாடு அதிகஅளவு காற்றுவழி மின்சார தயாரிக்கும் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது.
(ii) கடற்கரை காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏதுவான இடமாக திருநெல்வேலி , தூத்துக்குடியின் தெற்குப்பகுதி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்கள் உள்ளன.
39.
பிரிட்டன் நாடு, இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்து வந்தது.
காலனி ஆதிக்கம் சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்றுப் பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாக பிரித்தனர்.அவை
(i) வணிக மூலதனக் காலம்.
(ii) தொழில் மூலதனக் காலம்.
(iii) நிதி மூலதனக் காலம்.
(1) வணிக மூலதனக் காலம்.
(i)1757 லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதன காலம் ஆகும்.
(ii) கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நோக்கம் இந்திய மற்றும் கிழக்கிந்திய பொருட்களை ஒருவர் முற்றுரிமையாக வாணிபம் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும்.
(iii) பிரிட்டன் தொழில் மூலதனத்தை முன்னேற்ற இந்தியா ஒரு மிக முக்கியமான சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்திய கம்பெனி கருதப்பட்டது.
(iv) 1750 மற்றும் 1760 களில் வங்காளமும் தென்னிந்தியாவும் கிழக்கிந்திய கம்பெனி அரசியல் நெருக்கடிக்கு உள்ளான போது முற்றுரிமை வணிகத்தின் (அல்லது) வாணிபத்தின் நோக்கம் நிறைவேறியது.
(v) எல்லாவற்றிற்கும் மேலாக இக்கம்பெனயின் அலுவலர்கள் அனைவரும் நேர்மையற்று , ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்
(2) தொழில் மூலதனக் காலம்.
(i)1813 முதல் 1858 வரையிலான காலம் தொழில் மூலதன காலமாகும்.
(ii) பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது.
(iii) இந்தியாவிலிருந்து மலிவு விலையில் பெறப்பட்ட கச்சாப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு முழுமை பெற்ற பொருட்கள் இந்தியாவிற்கு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தூக்கி எறியப்பட்டன.
(3) நிதி மூலதனக் காலம்.
(i)19 ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான காலம் மூன்றாவது கட்டமான நிதி மூலதன காலமாகும்.
(ii) இக்கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள் செலவாணி, ஏற்றுமதி இறக்குமதி , நிறுவனங்கள் மாற்று வங்கிகள் மற்றும் சில மூலதன ஏற்றுமதிகளில் நிதி ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.
(iii) இந்திய மூலதனத்தை கொள்ளையடித்து இந்தியாவில் இருப்ப பாதை சாலை வசதிகள் , அஞ்சலக துறை , பாசனம் , ஐரோப்பிய வங்கி முறை கல்வியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய பிரிட்டன் முடிவு செய்தது.
(iv) பிரிட்டன் இரயில்வே கட்டமைப்பு கொள்கையானது கற்பனை செயய் முடியாத பொருளாதார பயணில்லாக் கொள்கையாகும்
(v)1858 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.
40.
(1) ஊரக ஒரு நிறுவனம்:
கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(2) வேளாண்மையை சார்ந்திருத்தல்:
ஊரக பொருளாதாரம் இயற்கையையும் வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(3) ஊரக மக்களின் வாழ்க்கை முறை:
ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது.
(4) மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும் வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகிறது.
(5) வேலைவாய்ப்பு:
(i) வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
(ii) வேலையின்மை என்பது தொழிலாளர்கள், வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
(6) வறுமை:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலை.
(7) கடன் சுமைகள்:
(i) ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும்.
(ii) ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கின்றான்.
(8) ஊரக வருமானம்:
ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்புகளையோ தர இயலவில்லை.
(9) சார்ந்திருத்தல்:
ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்ய தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
(10) இரட்டைத் தன்மை:
எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டை தன்மை ஆகும்.
(11) ஏற்றத்தாழ்வு:
ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
(12) குடிப்பெயர்ச்சி:
(i) ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்கலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
(ii) "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் சிறியது அழகு என்ற நூலில் விளக்குகிறார்.
41.
காந்தியடிகள்:
1.காந்தியப் பொருளாதாரம் நன்னெறியை அடிப்படையாகக் கொண்டது.
2.காந்தி "ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது பாவமானது "என எழுதுகிறார்.
காந்தியப் பொருளாதார சிந்தனை:
1.கிராமக் குடியரசு:
1.காந்தியடிகள் கிராமங்களில் தான் இந்தியா வாழ்வதாகக் கருதினார்.
2.தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேறுவதை அவர் விரும்பினார்.
3.அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் நகர்மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்.
2.இயந்திரங்கள்:
1.காந்தியடிகள் இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என்று வர்ணித்தார்.
2.இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்பட வேண்டும், அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
3.இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணர வேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும். அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றார்.
3.தொழில் மயம்:
தொழில் மயம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு என்று காந்தி கருதினார்.
4.உற்பத்தி பரவலாக்கம்:
1.உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார்.
2. சிறிய அளவிலும் அல்லது வீடுகளிலேயே உற்பத்தி நடைபெற வேண்டுமென்றும் விரும்பினார்.
5.கிராம சர்வோதயா:
1."உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ,புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான் இருக்கிறது"என்று கூறினார்.
2.கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
6. உடல் உழைப்பு:
1.மனித உழைப்பின் மகத்துவம் உணர்ந்தவர் காந்தியடிகள்.
2.மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி உறுதிபடக் கூறினார்.
7.அறக்கட்டளைக் கோட்பாடு:
தற்போதைய முதலாளித்து முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அறக்கட்டளைக் கோட்பாடு என்று கூறினார்.
7.உணவுப் பிரச்சனை:
1.உணவுப் பொருட்களின் மீதான எவ்விதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். ஏனெனில் அது செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கும் என்றார்.
2. தற்போது, உணவு தானியம், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி போன்ற அதிக அளவு உற்பத்தி செய்து உலக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளன.
9.மக்கள் தொகை:
1. காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை எதிர்த்தார்.
2.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார்.
10.மதுவிலக்கு:
1. காந்தியடிகள் "மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வதில்லை மாறாக நோயைத் தருகிறது" என்றார் காந்தியடிகள்.
2."இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என்றார்.
42.
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
1. மாறும் விகித விளைவு விதி:
ஒரே ஒரு உள்ளிட்டினை மட்டும் அதிகப்படுத்தி, பிற உள்ளீடுகளை மாற்றாமல், உற்பத்தியைப் பெருக்க முயன்றால் மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் உயர்ந்து பின்பு குறிப்பிட்ட புள்ளியில் நிலையான பின் குறைந்து செல்லும்.
2. இலக்கணம்:
ஸ்டிக்லரின் கூற்றுப்படி,"உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிற காரணிகளின் அளவு நிலையாக இருக்கும் போது, ஓர் உற்பத்திக் காரணி சம உயர்வாக அதிகரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு பிறகு உற்பத்தியின் அளவு குறையும், அதாவது இறுதிநிலை உற்பத்தி குறையும்."
3. எடுகோள்கள்:
1. ஒரே ஒரு உற்பத்திக் காரணியின் அளவு மட்டும் உயர்த்தப்பட்டு, ஏனைய உற்பத்திக் காரணிகளின் அளவு மாறாமல் இருக்கிறது.
2. மாறும் உற்பத்திக் காரணிகள் ஒரே தன்மையுடையவை.
3. உற்பத்திப் பொருளானது பரும அலகுகளால் அளவிடப்படுகிறது.
4. தொழில் நுட்ப நிலையில் மாற்றம் இல்லை.
5. பொருளின் விலையில் மாற்றம் இல்லை.
4. அட்டணை:
| மாறும் உள்ளீடுகளின் (L)அலகுகள் | மொத்த உற்பத்தி (TPL) | இறுதிநிலை உற்பத்தி | சராசரி உற்பத்தி | நிலைகள் |
| 1 2 3 |
2 6 12 |
2 4 6 |
2 3 4 |
I |
| 4 5 |
16 18 |
4 2 |
4 3.6 |
II |
| 6 7 |
18 16 |
0 -2 |
3 2.28 |
III |
1. அட்டவணையின்படி உற்பத்தி மூன்று நிலைகளை கொண்டது.
2. முதலில் அதிகரித்து, பின்பு நிலையாகி, பின்பு குறைகிறது.
3. முதலில் குறைந்த பின்பு பூஜ்ஜியமாகி பின்பு எதிர்கணய செல்கிறது.

வரைபட விளக்கம்:
உழைப்பாளர்களின் எண்ணிக்கை X-அச்சிலும், TP, AP மற்றும் MP Y-அச்சிலும் குறிக்கப்பட்டுள்ளன.
முதல் நிலை (I):
1. இறுதிநிலை உற்பத்தி (MP)3 உழைப்பாளர்களை பயன்படுத்தும் வரை அதிகரிக்கிறது.
2.MP>AP
3.மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் அதிகரிக்கிறது. இங்கு A-என்ற புள்ளி "வளைவு மாற்றப்புள்ளி" ஆகும்.
இரண்டாம் நிலை (II):
1. இறுதிநிலை உற்பத்தி குறைந்து 6-அலகு உழைப்பை பயன்படுத்தும் போது புஜ்ஜியமாகிறது.
2. நான்காவது உழைப்பை பயன்படுத்தும் போது MP-AP இதில் MP வளைகோடானதுAP வளைகோட்டைவிட கீழ் அமையும்.
3. TP குறைந்து செல் வீதத்தில் அதிகரிக்கும்.
மூன்றாம் நிலை(III):
1. 7அலகு உழைப்பாளர்களை பயன்படுத்தும் போது MP எதிர்கணியமாகிறது.
2. AP குறைந்து சென்றாலும் நேர்மறை மதிப்பாகவே இருக்கும்.1 அலகு உழைப்பு பயன்படுத்தும்போது TP குறையத் தொடங்கும்.
43.
மொத்த மாறாச் செலவு (TFC):
1. மாறாத உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மொத்த மாறாச் செலவாகும்.
2. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும், குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறுபடுவதில்லை.
மொத்த மாறும் செலவு (TVC):
1. மாறும் உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மாறும் செலவாகும்.
2.உற்பத்தி புஜ்ஜியமாக இருக்கும் போது மாறும் செலவு புஜ்ஜியமாக உள்ளது.
மொத்தச் செலவு(TC):
1. ஓர் உற்பத்தியில் ஏற்படுகின்ற பல்வேறு செலவுகளில் மொத்த கூடுதல் அந்நிறுவனத்தின் மொத்தச் செலவு எனப்படுகிறது.
2.

சராசரி மாறாச் செலவு (AFC):
1. சராசரி மாறாச் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறாச் செலவு என்பதாகும்.
2. சராசரி மாறாச் செலவு என்பது, மொத்த மாறாச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AFC={TFC\over Q}}\)

சராசரி மாறும் செலவு (AVC):
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2. மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC \over Q}}\)

4.AVC- வளைகோடு 'U'வடிவத்தில் இருக்கும்.
சராசரி செலவு(AC):
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான ஓர் அலகு செலவு ஆகும்.
2. (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
\(\boxed{AC={TC\over Q}}\)

| Q in unit | TFC in (Rs) | TVC in (Rs) | TC(TFC+TVC) in (Rs) | ATC TC/Q(in Rs) | AFC (TFC / Q )in (Rs) | AVC (TVC / Q)in (Rs) | ATC (AFC+AVC)(in Rs) |
| 0 | 1000 | 0 | 1000 | 1000/0=\(\alpha\) | 0 | 0 | 0+0=0 |
| 1 | 1000 | 200 | 1200 | 1200/1=1200 | 1000 | 200 | 1000+200=1200 |
| 2 | 1000 | 300 | 1300 | 1300/2=650 | 500 | 150 | 500+150=650 |
| 3 | 1000 | 400 | 1400 | 1400/3=466 | 333 | 133 | 333+133=466 |
| 4 | 1000 | 600 | 1600 | 1600/4=400 | 250 | 150 | 250+150=400 |
| 5 | 1000 | 900 | 1900 | 1900/5=380 | 200 | 180 | 200+180=380 |
இறுதிநிலைச் செலவு (MC):
1.கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படும்.
2.\(\boxed{MC=\triangle TC / \triangle Q}\) (or) \(\boxed{MC= TC_n-TC_{n-1}}\)

44.
பொருளியில், நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1. நுகர்வு:
1. மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
2. மனித விருப்பங்களின் இயல்புகளின் அடிப்படையில், நுகர்வோரின் நடத்தை குறைந்துசெல் பயன்பாடு, நுகர்வோரின் உபரி போன்ற பல விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
2.உற்பத்தி:
1. உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
2. நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு மேலும் உள்ளீடு, வெளியீடுகளுக்கிடையேயான உறவு ஆகியவையாகும்.
3. பரிமாற்றம்:
1. பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
2. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்றபோதுதான் பரிமாற்றம் சாத்தியமாகிறது.
4.பகிர்வு:
1. பகிர்வு என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
2. பகிர்வு என்னும் பகுதி உற்பத்தி காரணிகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை விளக்குகிறது.
45.
TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20
தரப்பட்டுள்ளது. இறுதிநிலை செலவுச் சார்பினை காண Qஐ பொருத்து வகைப்படுத்த.
MC(Q)= \({d(TC)\over dQ}\)
= 3Q3-1 -36 (2) Q2-1 + 182(l)Q1-1 + 20
= 3Q2-72Q1 + 182 Qo+ 20
= 3Q2- 72Q + 182 (1) + 20
= 3Q2 -72Q + 182 + 20
= 3Q2-72Q + 202
Q=6 எனில்,
MC (Q) = 3(6)2 - 72 (6) + 202
= 3 (36) - 432 + 202
= 108 - 432 + 202
= 310 - 432
\(\boxed{\therefore MC(Q)=122}\)
TC (Q) = Q3 - 36Q2 +182Q +20
AVC=?
TVC (Q) = Q3 - 36Q2 + 182Q என அறிகிறோம்.
(மாறிலி மதிப்பு என்பது மாறாச் செலவு ஆகும் )
AVC (Q) = TVC (Q) /Q
\(={Q^3-36Q^2+182Q\over Q}\)

= Q2-36Q+182
Q = 6 எனில்,
AVC (Q) = (6)2 - 36 (6) +182
= 36 - 216 + 182
=218-216
\(\boxed {AVC (Q) =2}\)
குறிப்பு:
மாறாச்செலவு =20
சராசரி மாறாச் செலவு =\({20\over Q }\)

=Q2-36Q+182+\({20\over Q }\)
46.
1.உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்"என்று குறிப்பிடுகிறது.
3.பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும்.உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6%ஆக இருந்தது.
4.இதன் மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதாரம் வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.
47.
1. என்ன உற்பத்தி செய்வது? எவ்வளவு உற்பத்தி செய்வது?
1. உணவுப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?(அ) ஆடம்பரப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?
2. விவசாயப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?(அ)தொழிற்சாலைப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?
3. நுகர்வுப் பண்டங்களை அதிகம் வைத்துக் கொள்வதா?(அ) முதலீட்டுப் பண்டங்களை வைத்துக் கொள்வதா?
4. வளங்களை அதிகமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதா?(அ) ராணுவப் பணிகளுக்கு பயன்படுத்துவதா?
2.எவ்வாறு உற்பத்தி செய்வது?
உழைப்பு செறிவு மிக்க தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதா?(அ) மூலதனச் செறிவு மிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதா?
3.யாருக்காக உற்பத்தி செய்வது?
உற்பத்தி செய்த பண்டங்களை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுப்பது?யார் அதிகம் பெறுகிறார்கள்?யார் குறைவாக பெறுகிறார்கள்?

48.
1. பொருள்களின் விலை
2. பிற பண்டங்களின் விலை
3. காரணிகளின் விலை
4. விலை பற்றிய எதிர்பார்ப்பு
5. தொழில்நுட்பம்
6. இயற்கை காரணிகள்
7. புதிய கச்சா பொருட்களின் கண்டுபிடிப்பு
8. வரிகள் மற்றும் சலுகைகள்
9. நிறுவனத்தின் நோக்கம்.
49.
(i) உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது.
(ii) தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
(iii) தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவ கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
(iv) 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல்தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக்கல்லுரிகளும் உள்ளது.
(v) ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்பம் பயில்கின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
50.
(i) இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) மொத்த புத்தங்களில் 60 முதல் 70 சதவீதம் சிறு தொழில்கள் சிறு தொழில் மூலமாக கிடைத்தவையே
(iii) இன்றைய பெரிய தொழில்களின் பெரும்பான்மையான தொழில்கள் சிறு தொழில்களாக உருவாக்கப்பட்டு பின் வளர்ந்து பெரிய தொழில்களாக மாறியுள்ளன
(iv) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறு தொழில்களின் பங்கு மிகப் பெரியதாகும்
51.
(i) ஜோசப் A சும்பீட்டர் புத்தாக்க இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) சும்பீட்டர் கருத்துப்படி, ஒரு தொழில்முனைவோர் உற்பத்தி செயல்பாடுகளில் வணிகத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கம் புனைபவராகவும் இருக்கிறார்.
(iii) புத்தாக்கம் புனைவதற்கான வெகுமதியே இலாபம்.
(iv) சும்பீட்டரின் கூற்றுப்படி, புத்தாக்கம் புனைதல் என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
(1) புதிய பண்டங்களை அறிமுகப்படுத்துதல்.
(2) புதிய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துதல்.
(3) புதிய சந்தைகளைத் தொடங்குதல்.
(4) புதிய மூலப்பொருட்களைக் கண்டறிதல்.
(5) தொழில்/நிறுவனங்களை மறு சீரமைத்தல் புத்தாக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தான் அதிக இலாபம் பெற முடியும்.
திறனாய்வு:
புத்தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே காரணமல்ல. மேலும் இது இடர் தங்கும் பணியைப் புறக்கணித்துவிட்டது
52.
(i) மக்கள் தொடர்புடைய பிரச்சனை.
(ii) வேளாண்மை சார்ந்த பிரச்சனை
(iii) உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை
(iv) பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள்
(v) தலைமை சார்ந்த பிரச்சனைகள்
(vi) நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள்.
மக்கள் தொடர்புடைய பிரச்சனை:
எதிர்பார்த்த அளவு எழுத்தறிவின்மை, போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றை சார்ந்து வாழ்க்கைதரம் அமைதல் ஆகியன ஊரக மக்களின் பிரச்சனையாகும்.
வேளாண்மை சார்ந்த பிரச்சனை:
(i) எதிர்பார்த்த அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவின்மை, திறன் மாற்றம் மனப்போக்கு போன்றவை இன்மை.
(ii) உள்ளீடுகள் கிடைக்கப்பெறாமை.
(iii) அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு, பற்றாக்குறையான பணியாளர்கள் மற்றும் சேவைகள்.
(iv) பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை.
53.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும்.
GST-யின் நன்மைகள்:
(i) அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
(ii) ஒரு முனை வரியாக உள்ளது.
(iii) பதிவுக்கான வாசலாக உள்ளது.
(iv) சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளது.
(v) இணையவழி வசதி மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
(vi) மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
(vii) தளவாடங்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(viii) அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.
54.
| வ.எண் | வெளியுறு செலவு | உள்ளுறு செலவு |
| 1. | உற்பத்திக் காரணிகளை வாங்கு மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும். | நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும். |
| 2. | ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்கு தேவையான காரணிகளை விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு அமர்த்தியோ உற்பத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒட்டு மொத்த செலவு வெளிப்படையான செலவு. | நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் மற்றும் சுய உழைப்பிற்கான செலவுகள் உள்ளார்ந்த செலவுகள். |
| 3. | வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு அல்லது பணச் செலவு என்று அழைக்கப்படும். | உள்ளார்ந்த செலவு என்பது மறைந்திருக்கும் செலவு அல்லது எட்டுச் செலவு என்றழைக்கப்படும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards