11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Biology All Chapter Important Questions)
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
செயற்கை வகைப்பாட்டு முறை _______ என்றும் அழைக்கப்படுகிறது.
இயற்கை வகைப்பாட்டு முறை
இனப்பரிணாம வழி வகைப்பாட்டு முறை
பரிசோதனை வகைப்பாட்டு முறை
பாலின வகைப்பாட்டு முறை
2.
கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாது
பூக்கும் தாவரங்கள்
பிரையோபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்ஸ்
பூஞ்சைகள்
3.
கோப்பை வடிவ செல்கள் சுரப்பவை ________
எளிய புரதம்
அமைப்பு புரதம்
வருவிய புரதம்
இணைவு புரதம்
4.
தோல் கருநீல நிறமாக மாறுவது எப்பொழுது?
இரத்தத்தில் O2 அளவு குறையும் போது
காற்றில் O2 அளவு குறையும் போது
இரத்தத்தில் CO2 அளவு அதிகரிக்கும் போது
காற்றில் CO2 அளவு அதிகரிக்கும் போது
5.
இதனுடன் O2 இணைவதில்லை.
ஆக்ஸிஹீமோகுளோபின்
கார்பாக்ஸி ஹீமோகுளோபின்
கார்பமினோ ஹீமோகுளோபின்
மெட் ஹீமோகுளோபின்
6.
இயல்பான சுவாச வீதம் _______________ முறை / நிமிடம்.
6
8
10
12
7.
தவளையின் கண்களைப் பாதுகாப்பது
மேல் இனம்
கீழ் இமை
நிக்டிடேடிவ் சவ்வு
இவை அனைத்தும்
8.
கரப்பான்பூச்சியில் இதயத்தோடு இணைந்திருப்பது
ஸ்டிக்மேட்டா
அலரித்தசைகள்
ஆஸ்டியா
ட்ரக்கியோல்கள்
9.
துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?
பின்னோக்கு வளர் உருமாற்றம்
மறைமுக கருவளர்ச்சி
டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.
இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.
10.
இத்துணைத் தொகுதியை/தொகுதியைச் சார்ந்த விலங்குகளின் உடல் டியூனிக் எனும் உரையால் மூடப்பட்டுள்ளது.
செஃபலோகார்டேட்டா
யூரோகார்டேட்டா
ஹெமிகார்டேட்டா
கார்டேட்டா
11.
சரியானவற்றை பொருத்துக
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| 1 | ஆர்தோடியல் சவ்வு | a | தலை அமைவு |
| 2 | ஆர்தோப்டீரஸ் | b | டார்சோமியர்கள் |
| 3 | போடோமியர்கள் | c | வாயுறுப்பு வகை |
| 4 | ஹைபோ நேத்தஸ் | d | ஸ்கிளிரைடுகளை இணைகிறது |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| d | c | b | a |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| a | d | c | b |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| b | c | d | a |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| c | b | a | d |
12.
ஈரடுக்கு உயிரிகளின் உடற்சுவரில் காணப்படுவது
புறப்படை மற்றும் அகப்படை மட்டுமே உள்ளது.
புறப்படை, அகப்படை மற்றும் நடுப்பதை உள்ளது
மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது
தளர்வான நிலையில் இணைந்துள்ள செல்கள்
13.
நுரையீரல் இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பிக்கும் இடம்
வலது ஆரிக்கிள்
வலது வெண்ட்ரிக்கிள்
இடது ஆரிக்கிள்
இடது வெண்ட்ரிக்கிள்
14.
N - அசிட்டைல் குளுக்கோஸமைனின் பலபடிஇதன் செல்சுவரில் காணப்படுவது.
(I) பாக்டீரியா
(II) பூஞ்சைகள்
(III) மைக்கோபிளாஸ்மா
(IV) தாவரசெல்
I,III
II,III
III,IV
I,II
15.
அடிவயிற்று கட்டிகளில் காணப்படுவது.
காற்று சுவாசிகள்
காற்றுணா சுவாசிகள்
நிலைமாறும் காற்று சுவாசிகள்
நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்
16.
பசுங்கணிகத்தில் பச்சையம் a மற்றும் பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது.
தாவரங்கள்
ஆர்க்கி பாக்டிரீயா
குரோமிஸ்டா
புரோட்டிஸ்டா
17.
சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____
எலும்பு மஜ்சை
கல்லீரல்
தண்டு செல்கள்
சிறுநீரகம்
18.
பிளாஸ்மா புரதங்களை உற்பத்தி செய்வது
நீணநீர் முடிச்சு
எலும்பு மஞ்சை
கல்லீரல்
இரத்த நாளங்கள் மற்றும் நீணநீர் நாளங்கள்
19.
இத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது
கோல்சிக்கம் லூட்டியம்
குளோரியோஸா சூப்பர் பா
ஸ் மைலாக்ஸ் கிளாப்ரா
ஊர்ஜினியா இன்டிகா
20.
அரோக்கிஸ் ஹைப்போஜியாவில் கனியானது புவிபுதைக் கனி, கருவுறுதலுக்குப் பின்பு ______ ஆக்குத்திசுவாக மாறி வளர்ச்சி யடைந்து கருவுற்ற சூலகப்கபையை மண்ணிற்குள் செலுத்துகிறது
கற்பை
சூல் தண்டு
சூல் முடி
கற்பைக் காம்பு
21.
பொருத்துக: இலை அடுக்கமைவு வகைகளை அதனைப் பெற்றுள்ள தாவரத்தோடு பொருத்துக.
| வ.எண் | இலை அடுக்கமைவு வகை | தாவரத்தின் பெயர் |
| I. | மூவிலை அடுக்கமைவு | a. கலோட்ராபிஸ் |
| II. | வட்டஇலை அடுக்கமைவு | b. நீரியம் |
| III. | குறுக்கு மறுக்கு எதிரிலைமைவு | c. சிடியம் |
| IV. | ஒரு போக்கு எதிரிலை அடுக்கமைவு | d. அலமாண்டா |
I. b, II. d, III. a, IV. c
I. b, II. c, III. d, IV. a
I. b, II. c, III. d, IV. b
I. b, II. d, III. c, IV. a
22.
பெருங்குடலில் காணப்படும் இணைவாழ் பாக்டீரியாவில், நார்பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவது.
சோடியம்
இரும்பு தனிமம்
கழிவுப் பொருள்
வைட்டமின் K
23.
DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுவர்
ஆர்தர் கிரான்கிவிஸிட்
அடால்∴ப் எங்ளர்
காரல் A பிராண்டில்
பால்ஹெபர்ட்
24.
கொழுப்பின் கலோரி மதிப்பு _______________ கி.கலோரிகள்/ கிராம்
9.45
9
4.1
5.65
25.
பெப்ஸின் புரதத்தின் மீது செயல்பட தேவையான ஊடகம்
அமிலத்தன்மை
காரத்தன்மை
நடுநிலை
எதுவுமில்லை
26.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அனைத்தும் வேர் முனைத்தண்டின் பண்புகளாகும். இதனை தவிர
இவைகளின் வேர்களில் வேர்முடியும், வேர்தூவியும் காணப்படுகிறது
இத்தண்டில் கணுக்கள், கணுவிடைப்பகுதிகள் காணப்படுகிறது
செதில் இலைகள் மற்றும் மொட்டுக்களைப் பெற்று இருக்கின்றன
இத்தண்டு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பாக செயல்படுகிறது
27.
தவறான ஜோடியைக் கண்டுபிடி.
| வ.எண் | பாசிகளின் பெயர் | பசுங்கணிகத்தின் வாழிடம் |
| 1. | கேரா | வட்டு வடிவம் |
| வ.எண் | பாசிகளின் பெயர் | பசுங்கணிகத்தின் வாழிடம் |
| 2. | ஊடோகோனியம் | வலைப்பின்னல் வடிவம் |
| வ.எண் | பாசிகளின் பெயர் | பசுங்கணிகத்தின் வாழிடம் |
| 3. | சைக்னீமா | நட்சத்திர வடிவம் |
| வ.எண் | பாசிகளின் பெயர் | பசுங்கணிகத்தின் வாழிடம் |
| 4. | யூலோத்ரிக்ஸ் | சுருள் வடிவம் |
28.
சுவாசவேர்களில் காணப்படாத பண்பு எது?
சுவாசவேர்கள் அதிக எண்ணிக்கையிலான சுவாச துளைகளைப் பெற்றிருக்கும்
தண்டிலிருந்து. மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது
நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிக குறைவாகக் காணப்படும் தாவரங்களில் காணப்படுகிறது
சுவாசத்திற்காக எதிர் புவிநாட்டமுடையவை
29.
ஈரின சிரமஞ்சரியில___________ வகை சிறுமலர்கள் காணப்படுகின்றன.
வட்டு
குழல்
கதிர்
வட்டு மற்றும் நாவடிவ
30.
அறிக (A): சிறு குடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.
காரணம்(R): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது
A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும்.
A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை.
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
31.
பொருத்துக
| எபிதீலியம் | பண்பு | ||
|---|---|---|---|
| (அ) | தூண்வடிவ எபிதீலியம் | a | கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள் |
| (ஆ) | எளிய எபிதீலியம் | b | வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது |
| (இ) | இடைநிலை எபிதீலியம் | c | ஓரடுக்கு செல்களால் ஆனது |
| (ஈ) | சுரப்பு எபிதீலியம் | d | இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது. |
| அ | ஆ | இ | ஈ |
| b | a | d | c |
| அ | ஆ | இ | ஈ |
| d | b | c | a |
| அ | ஆ | இ | ஈ |
| a | c | b | d |
| அ | ஆ | இ | ஈ |
| b | c | d | a |
32.
செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.
நொதி
கோழை
உமிழ்நீர்
இரைப்பை நீர்
33.
விலங்குகளை கண்டு உணரவும், கற்கவும் பயன்படுவது.
விலங்கியல் பூங்கா
அருங்காட்சியகம்
கடல் பூங்கா
சரணாலயம்
34.
கீழ்க்கண்டவற்றுள் இது விலங்குகளுக்கான வகைப்பாட்டுக் கல்விக்கான கருவியாகும்.
ஹெர்பேரியம்
அருங்காட்சியகம்
டி.என்.ஏ கலப்பு ஆக்கம்
டி.என்.ஏ வரிக்குறியீடு
35.
முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.
தொகுதி
வரிசை
துணை சிற்றினம்
டாட்டோனைமி
36.
கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்_______.
ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின்
கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின்
கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்
இன்சுலின் மற்றும் குளுக்ககான்
37.
கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?
உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள், மலப்புழைத்தண்டுகள்
உணர்நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் டெக்மினா
உணர்நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம் மற்றும் மலப்புழை நீட்சி
உணர்நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி மற்றும் காக்சா
38.
எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.
தவளை
மண்புழு
புறா
கரப்பான் பூச்சி
39.
பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?
வெள்ளைக் கொழுப்பு
பழுப்புக் கொழுப்பு
மஞ்சள் கொழுப்பு
நிறமற்ற கொழுப்பு
40.
41.
எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.
மென்மையான தசைகள் இல்லாமை
வால்வுகள் இருப்பதால்
சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்
மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.
42.
உயிர்ப்புத் திறன் என்பது ______.
மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசச் சேமிப்புக் கொள்ளளவு
மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
43.
நிணநீரின் பணி யாது?
மூளைக்குள் ஆக்சிஜனை கடத்துதல்
CO2 வை நுரையீரல்களுள் கடத்துதல்
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது
44.
நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி______.
பாலூட்டிகள்
பறவைகள்
ஊர்வன
கடற்பஞ்சுகள்
45.
நான்கு அரை இதயம் இதில் காணப்படும்.
பல்லி
பாம்பு
தேள்
முதலை
46.
47.
எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?
வகைப்பாட்டுத் திறவுகோல்
ஹெர்பேரியம்
தாவரம்
மோனோஃகிராப்
48.
கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.
பிரைமேட்டா
ஆர்த்தோப்டீரா
டிப்டிரா
இன்செக்டா
49.
நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?
நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது
உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை
ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.
50.
ஆர்க்கிபாக்டீரியம் எது?
அசட்டோபாக்டர்
எர்வினீயா
டிரிப்போனிமா
மெத்தனோ பாக்டீரியம்
51.
ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகளில் கருவூண்திசு எப்பொழுது உருவாகிறது?
52.
கணையம் ஏன் ஒரு கூட்டுச்சுரப்பி என அழைக்கப்படுகிறது?
53.
அரைநாணிகளின் உடல் பகுதிகள் யாவை?
54.
நோயைக் கடத்தும் கணுக்காலிகள் இரண்டினைக் கூறு.
55.
ஹெட்டிரோஃபில்லி அல்லது இருவடிவ இல்லை அமைவு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
56.
மாசு சுட்டிக் காட்டிகளாக லைக்கென்கள் எங்ஙனம் செயல்படுகிறது?
57.
மலர் வரைபடம் என்பது யாது?
58.
மேற்புற அச்சு சூல் ஒட்டுமுறை என்பது யாது?
59.
'சிலிக்கோஸிஸ்' மற்றும் 'அஸ்பெஸ்டோஸிஸ்' என்பது யாது?
60.
ஒரு வாயுவின் பகுதி அழுத்தம் என்பது யாது?
61.
தமிழ்நாட்டு மாநில மலர் தாவரத்தின் பெயர் யாது? அத்தாவரத்தின் பயன்கள் யாவை?
62.
மூலக்கூறு வகைப்பாட்டின் பயன்கள் யாவை?
63.
உயிரினங்களில் வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?
64.
இந்தியாவில் காணப்படும் மூன்று வகை மண்புழுக்கள் யாவை?
65.
தவளையின் வளர் இளம் உயிரிகளில் (தலைப்பிரட்டை) காணப்படும் மீன்களின் பண்புகள் யாவை?
66.
இதயத்தசை நசிவுறல் நோய் [அ] மாரடைப்பு என்றால் என்ன?
67.
இரத்த அழுத்தத்தின் பயன் யாது?
68.
ஹோப்ளோஸ்டீல் என்பது யாது? எ.கா. தருக.
69.
ஃபிரினுலம் என்பது யாது?
70.
தாவர வேர்களின் முதல்நிலைப் பணிகளைக் கூறு.
71.
வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?
72.
எலும்பில் காணப்படும் செல்களின் பெயர் யாது? அது ங்கு காணப்படுகிறது?
73.
வெள்ளை கொழுப்பு என்பது யாது?
74.
வரையறு, சூழ்நிலை மண்டலம்.
75.
ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?
76.
கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?
77.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
78.
காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்து.
79.
80.
81.
ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
82.
மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக
83.
கூட்டு எபிதீலியத்தின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
84.
உரு பேரினம் என்றால் என்ன?
85.
மராஸ்மஸ் என்பது யாது? தன அறிகுறிகள் யாவை?
86.
உயிரினங்களில் வளர்ச்சிஎத்தகையது?
87.
தரைவாழ் தாவரங்களை அவை கொண்டுள்ள சூழல் தகவமைப்புகளைக் கொண்டு வகைப்படுத்து.
88.
ஆரச்சீரமைவு கொண்ட மலர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு வரைக.
89.
போலி உடற்குழி விலங்குகள் என்பது யாது?
90.
ஹீமோகுளோபின் பற்றி எழுது.
91.
கிளைப்பரிணாமவியலின் அவசியங்கள் யாவை?
92.
ஸ்கிளிரைட்டுகள் என்பது யாது
93.
எலக்ட்ரோகார்டியோகிராம் [ஈ.சி.இ] என்றால் என்ன?
94.
இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?
95.
ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.
96.
தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக.
97.
நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது?
98.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
99.
இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?
100.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
101.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
102.
தொகுதி முதுகுநாணிகளின் வகைப்பாடு அட்டவணையை எழுது.
103.
கல்லீரலின் அமைப்பை படம் வரைந்து விளக்கு.
104.
பல்வேறு தாவர வகுப்புகளில் காணப்படும் தொல்லுயிர் எச்சங்கள் அட்டவணைப்படுத்து?
105.
106.
இலை அடுக்கமைவின் வகைகளை படத்துடன் விளக்குக.
107.
ஹெர்பேரியம் என்றால் என்ன?ஹெர் பேரியம் தயாரிப்பதில் உள்ள படிநிலைகளை விளக்குக.
108.
பாக்டீரியோ ஃபாஜ்கள் எவ்வாறு சிதைவு சுழற்சி மூலம் பெருக்கமடைகிறது என்பதை படத்தின் மூலம் விளக்குக.
109.
எளிய எபிதீலிய திசுக்களை படம் வரைந்து பாகம் குறி
110.
சைமோஸ் வகை மஞ்சரி என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்கு.
111.
112.
இரத்தக் குழாய்களின் அமைப்பு - படம் வரைந்து பாகங்களை குறி.
113.
லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
114.
கீழ்க்காணும் சொல் தொகுப்பில் (பண்புகளில்) தொடர்பில்லாத வார்த்தையைப் (பண்பை) கண்டுபிடித்து காரணத்தைக் கூறுக.
முதுகுநாண், தலையாக்கம், முதுகுப்புற நரம்பு வடம் மற்றும் ஆரச்சமச்சீர்.
1.
(d)
பாலின வகைப்பாட்டு முறை
2.
(b)
பிரையோபைட்டுகள்
3.
(d)
இணைவு புரதம்
4.
(a)
இரத்தத்தில் O2 அளவு குறையும் போது
5.
(d)
மெட் ஹீமோகுளோபின்
6.
(d)
12
7.
(c)
நிக்டிடேடிவ் சவ்வு
8.
(b)
அலரித்தசைகள்
9.
(a)
பின்னோக்கு வளர் உருமாற்றம்
10.
(b)
யூரோகார்டேட்டா
11.
(a)
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| d | c | b | a |
12.
(c)
மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது
13.
(b)
வலது வெண்ட்ரிக்கிள்
14.
(d)
I,II
15.
(d)
நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்
16.
(c)
குரோமிஸ்டா
17.
(d)
சிறுநீரகம்
18.
(c)
கல்லீரல்
19.
(b)
குளோரியோஸா சூப்பர் பா
20.
(d)
கற்பைக் காம்பு
21.
(a)
I. b, II. d, III. a, IV. c
22.
(d)
வைட்டமின் K
23.
(d)
பால்ஹெபர்ட்
24.
(a)
9.45
25.
(a)
அமிலத்தன்மை
26.
(a)
இவைகளின் வேர்களில் வேர்முடியும், வேர்தூவியும் காணப்படுகிறது
27.
(d)
| வ.எண் | பாசிகளின் பெயர் | பசுங்கணிகத்தின் வாழிடம் |
| 4. | யூலோத்ரிக்ஸ் | சுருள் வடிவம் |
28.
(b)
தண்டிலிருந்து. மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது
29.
(d)
வட்டு மற்றும் நாவடிவ
30.
(a)
A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும்.
31.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| b | c | d | a |
32.
(b)
கோழை
33.
(b)
அருங்காட்சியகம்
34.
(b)
அருங்காட்சியகம்
35.
(c)
துணை சிற்றினம்
36.
(a)
ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின்
37.
(a)
உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள், மலப்புழைத்தண்டுகள்
38.
(b)
மண்புழு
39.
(b)
பழுப்புக் கொழுப்பு
40.
(d)
41.
(a)
மென்மையான தசைகள் இல்லாமை
42.
(d)
மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
43.
(c)
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
44.
(b)
பறவைகள்
45.
(d)
முதலை
46.
(c)
47.
(a)
வகைப்பாட்டுத் திறவுகோல்
48.
(a)
பிரைமேட்டா
49.
(a)
நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
50.
(a)
அசட்டோபாக்டர்
51.
ஒற்றை மடிய (n)கருவூண்திசு கருவுறுதலுக்கு முன்பாக உருவாகிறது.
52.
கணையம், நொதிகளைச் சுரக்கும் நாளமுள்ள பகுதியையும் மற்றும் ஹார்மோன்களைச் சுரக்கும் நாளமில்லா பகுதியையும் கொண்டுள்ளதால் இது ஒரு கூட்டுச்சுரப்பி என அழைக்கப்படுகிறது.
53.
1. புரோபோஸிஸ்
2. கழுத்துப் பகுதி (குட்டையான பட்டை)
3. நீண்ட உடல் பகுதி
54.
1. அனாபிலிஸ்(கொசு)
2. ஏடிஸ்(கொசு)
55.
ஒரே தாவரத்தில் இரண்டு வகையான இலைகள் காணப்பட்டால் அதற்கு இரு வடிவ இலை அமைவு அல்லது ஹெட்டிரோஃபில்லி என்று பெயர். எ.கா: ரனன்குலஸ் அக்குவாடிலிஸ், சாஜிட்டேரியா, லிமினோஃபிலா, ஹெட்டிரோஃபில்லா.
56.
1.லைக்கென் காற்று மாசுக் காரணியை (கந்தக டை ஆக்ஸைடு) எளிதில் உணரக் கூடியவை.
2.எனவே இவைகள் மாசு சுட்டிக் காட்டிகள் என அழைக்கப்படுகின்றன.
57.
1. மலரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விளக்கப்படமாக குறிக்கும் முறையாகும்.
2. மலர் வரைபடத்தில் மலரின் வட்ட அடுக்குகள் மேலிருந்து பார்ப்பதைப் போன்று குறிக்கப்பட்டிருக்கும்.
58.
மேற்புற அச்சு சூல் ஒட்டுமுறை : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூல்திசு குறுக்குச் சுவருடையய சூலகப்பையின் மேற்புறத்தில் ஒட்டியிருக்கும்.
எடுத்துக்காட்டு: ஏபியேசி
59.
1. இவைகள் தொழில் சார்ந்த சுவாசக் குறைபாடுகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
2. மணல் அரைத்தல் மற்றும் கல்நார் நிறுவனங்களில் பணிபுரிவோர், சிலிகாவை தொடர்ந்து சுவாசிப்பதால் சிலிக்கோசிஸ் மற்றும் அஸ்பெஸ் டோஸிஸ் ஏற்படுகிறது.
60.
1. காற்றில் உள்ள ஒவ்வொரு வாயுவும் தனிப்பட்ட அளவில் கொடுக்கும் அழுத்தம் அவ்வாயுவின் பகுதி அழுத்தம் எனப்படும்.
2. இதில் PO2 என்பது - O2 னின் பகுதி அழுத்தம். PCO2 என்பது - CO2 வின் பகுதி அழுத்தம்.
61.
குளோரியோசா சுப்பர்பா
பயன்கள் :
1. இத்தாவர தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது.
2. இத்தாவரத்தில் கால்சிசைன் எனும் ஆல்கலாய்டு உள்ளது. இது செல் பகுப்பாய்வுகளில் ஒரு சோதனைக் கருவியாக பயன்படுத்தப்படுகிறது
62.
1. DNA அளவில் வெவ்வேறு தாவரக் குலுக்களின் இனிபரிணாம உறவை உருவாக்குவதில் மூலக்கூறு வகைப்பிரித்தல் உதவுகிறது.
2. இது உயிரினங்களின் பரிணாம வரலாற்றின் தகவல்கள் அடங்கிய புதையல் பேழையைத் திறக்கின்றது.
63.
ஒரு செல், பல செல் உயிரினங்கள் அனைத்தும் செல்பிரிதல் மூலம் வளர்ச்சியடைகின்றன.
64.
1. லாம்பிட்டோ மாரிட்டீ (மெகஸ்கோலெக்ஸ் மாரிட்டீ)
2. பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்
3. மெடாபையர் போஸ்துமா (பெரிடிமா போஸ்துமா)
65.
1. மீன்களைப் போன்று குளம், குட்டை, நீரோடைகளில் வாழ்கின்றன.
2. கருவளர்ச்சியின் தொடக்க காலம் முழுவதும் நீரிலேயே நடைபெறுகிறது.
3. சுவாசிப்பதற்கு மீன்களை போன்று செவுள்களை பெற்றுள்ளன.
66.
1. இதயத்தசைகளுக்குச் செல்லும் தமனிக்குழல்களில் செல்லும் இரத்த ஓட்டம் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்து விடுவதால் இதயத் தசையிழைகள் இறந்து விடுகின்றன.
2. இந்நிலைக்கு மாரடைப்பு (அ) இதயத்தசை நசிவுறல் நோய் எனப்படும்
67.
இரத்த அழுத்தம், இரத்தத்தை தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்களினுள் சுழலச் செய்கிறது.
68.
மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும் ஸ்டீல், ஹோப்ளோஸ்டீல் எனப்படும்.
எ.கா செலாஜினெல்லா
69.
1. தடித்த தசையிலான நாக்கு, வாய்க்குழியின் பின் முனையில் ஒட்டியும் முன் முனையில் ஒட்டாமலும் நன்கு அசைவும் வண்ணம் உள்ளது.
2. நாக்கின் பின்பகுதி வாய்க்குழியின் தரைப்பகுதியோடு இணைக்கும் அமைப்புக்கு ஃபிரினுலம் என்று பெயர்.
70.
1. நீரையும் கனிமங்களையும் மண்ணிலிருந்து உறிஞ்சுதல்.
2. தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்துதல்.
71.
ஒத்தமைவு டி.என்.ஏ. மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை டி.என்.ஏ. மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம் முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பகுப்பாய்வு என்று பெயர்.
72.
எலும்பு செல் - ஆஸ்டியோசைட்
காணப்படும் இடம் - லாக்குனே எனப்படும் குழிகள்
73.
ஊட்டச் சத்துக்களை சேகரித்து வைக்கும் இடமாக உள்ள அடிபோஸ் திசு, வெள்ளை கொழுப்பு எனப்படும்.
இவ்வகை தோலுக்கு அடியிலும், சிறுநீரகம், கண்கோளம், இதயம் போன்ற உறுப்புகளை சூழ்ந்து காணப்படுகின்றது.
74.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்க்காரணிகளுக்கும் தாது உப்புகள், தட்பவெப்ப நிலை, மண், நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் குறிப்பது சூழ்நிலை மண்டலம் எனப்படும்.
75.
1. இனப்பெருக்க காலங்களில், ஆன் தவளைகளில் ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. குரல்ப்பையின் உதவியினால் கரகர ஒலியை உருவாக்கி பெண் தவளையை கவர்கின்றது.
76.
1. காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய், டைபாய்டு நுண்ணுயிரிகளை எடுத்துச் செல்கிறது.
2. ஆஸ்துமா நோய் வருவதற்கு இப்பூச்சிகள் காரணமாக இருப்பதால் இவைகளை நாம் தீங்குயிரி என அழைக்கின்றோம்.
77.
குரல்வளை மூடி
78.
வெளி நாசித்துவாரங்கள் → நாசியரை → தொண்டை → குரல்வளை → மூச்சுக்குழல்.
79.
80.
81.
சைலமும், ஃபுளோயமும் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும். ஸ்டீல், பிளெக்டோ ஸ்டீல் எனப்படும். எ.கா. லைக்கோபோடியம் கிளாவேட்டம்.

82.
I) மொனிரா உயிரின உலகத்தின் அனைத்து புரோகாரியோடிக் உயிரினங்களையும் உள்ளடக்கியது.
II) இவை ஒரு செல் உயிரிகள்.
III) இவை இடப்பெயர்ச்சி அடையும் திறன் கொண்டவை. சில பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள்ளாகவும், மற்றவை உடனுண்ணிகள்ளாக வாழ்கின்றன.
எடுத்துக்காட்டு : ஆர்க்கி பாக்டீரியா.
83.
84.
1.உரு பேரினம் என்ற சொல் தொல்லுயிர் எச்சத்தாவரங்களுக்கு பெயர் சூட்டப் பயன்படுகிறது.
2. ஏனெனில் தொல்லுயிர் எச்சங்கள் முழுத்தாவரங்களாகக் கிடைப்பதில்லை.
3.பதிலாக அழிந்து போன தாவரப் பகுதிகள், உறுப்புகள் சிறுசிறு துண்டுகளாக பெறப்படுகின்றன.
85.
1. மராஸ்மாஸ் தீவிரமான புரதக் குறைபாடாகும்.
2. உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதப் பற்றாக்குறைவால் தோன்றுகிறது.
3. குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
1.வயிற்றுப் போக்கு
2.உடல் மெலிதல்
3.பலவீனம்
4.தசைகளில் கொழுப்பின்மையால் மடிப்புகளுடன் கூடிய தோல்.
86.
1.உயிரினங்களில் வளர்ச்சி உள்ளார்ந்த செயலாகும்.
2.உயிருள்ள செல்களுக்குள்ளாக்கப் புதிய புரோட்டோபிளாசம் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் வளர்ச்சி ஏற்படுகிறது.
3.எனவே தான் உயிரினங்களில் வளர்ச்சி உள்ளார்ந்த செயலாகும்.
87.
| வகைகள் | சூழ்நிலை தகவமைப்பு | எடுத்துக்காட்டு |
| வள நிலைத்தாவரம் (Mesophytes) | போதுமான அளவு நீர் நிரம்பிய நிலப்பரப்பில் வாழ்பவை | அசாடிராக்டா இண்டிகா |
|
வறள் நிலத் தாவரம் (Xerophytes) |
வறண்ட நிலப்பரப்பில் வாழும் தாவரங்கள் | ஓபன்சியா, யூஃபோர்பியா |
| மணல்வாழ்த் தாவரம் (Psammophytes) | மணற்பாங்கான இடங்களில் வாழ்பவை | ஐப்போமியா பெஸ்-காப்ரே ஸ்பைனிஃபெக்ஸ் லிட்டோராலிஸ் |
| பாறை வாழ்த் தாவரம் (Lithophytes) | பாறைகளின் மேல் வாழ்பவை | லைக்கன்கள், பாசிகள், ஃபைகஸ்சிற்றினம் |
88.
1. மலரின் மையத்தில் செல்லுமாறு எந்த ஆரத்தில் அல்லது எந்த தளத்தில் வெட்டினாலும் இரு பிம்ப உருவங்களாக பிரியும் மலர்கள், ஆரச்சீரமைவு மலர்கள் எனப்படும்.
2. இவைகள் பொதுவாக இரண்டுக்கும் பிமேற்பட்ட தளங்களில் சீரமைவு கொண்டவை.
எ.கா: ஹைபிஸ்கஸ்
89.
சில விலங்குகளில், உடற்குழி முழுமையும் நடு அடுக்கு சுவரினைப் பெற்றிருக்கவில்லை. இவ்வகை விளங்குகல் போலி உடற்குழி விளங்குகல் எனப்படும்.
எ.கா: உருளைப் புழுக்கள்
90.
1. இது இணைவுச் புரத வகையைச் சார்ந்தது.
2. 4% இரும்பும், மீதம் பகுதி ஹிஸ்டோன் வகையைச் சார்ந்த குளோபின் எனும் பொருளால் ஆனது.
3. இதன் மூலக்கூறு எடை 68,000 டால்ட்டன்கள்.
4. இதில் உள்ள நான்கு இரும்புஅணுக்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் இணையும் தன்மையுடையது.
91.
1.கிளைப்பரிணாமவியல் இனபரிணாம வகைப்பாட்டு அமைப்பு முறைமைகளை உருவாக்குவதற்குப் பொதுவாக பயன்படுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும்.
2. உயிரினகளின் இனத்தோன்றங்களின் புறப்பண்புகளை முன்னறிவதற்கும் இனபரிணாம உறவுப் பற்றிய கோட்ப்பாடுகளை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
3. பரிணாம வளர்ச்சி பற்றிய நுட்பத்தை தெளிவுபடுத்துவதற்கு உதுவுகிறது.
92.
1. கரப்பான் பூச்சியின் மொத்த உடலும் உறுதியான பழுப்பு நிறமுடைய கைட்டினால் ஆன பிரச்சட்டகத்தால் மூடப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு கண்டத்திலும் காணப்படும் கடினமான தட்டுகள் ஸ்கிளிரைட்டுகள் எனப்படும்.
3. இவை மீள்தன்மையுடைய இணைப்புகள் (அ) ஆர்த்தோடியல் சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
4. வயிற்றுப்புற ஸ்கிளிரைடுகளுக்கு ஸ்டர்னைட்டுகள் என்று பெயர்.
5. முதுகுப்புற ஸ்கிளிரைடுகளுக்கு டெர்கிட்கள் என்று பெயர்.
6. பக்கவாட்டில் உள்ள ஸ்கிளிரைடுகளுக்கு புளூரைட்டுகள் என்று பெயர்
93.
1. எலக்ட்ரோகார்டியோகிராம் [ஈ.சி.இ] என்பது குறிப்பிட்ட காலத்தில் இதயத்தில் ஏற்படும் மின்திறன் மாற்றங்களைப் பதிவு செய்யும் கருவியாகும்.
2. தோல், கைகள், கால்கள் மற்றும் மார்பு பகுதியில் மின் முனைகளைப் பொருத்தி மின் திறன் பதிவு செய்யப்படுகிறது.
3. ஒரு இதயச் சுழற்சியில் இதயத்தின் மின் திறனில் ஏற்படும் மாற்றங்களை இக்கருவி பதிவு செய்கிறது.
94.
1. உயிரினங்களை அடையாளம் கண்டு, விளக்கி, பெயரிட்டு, வரிசைப்படுத்தி பாதுகாத்து ஆவணப்படுத்துவது.
2. சிற்றினங்களின் பரிணாம வரலாறு, சூழ்நிலை தொடர்பு, சூழ்நிலை தகவமைப்புகள் மற்றும் சிற்றினங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை ஆய்வு செய்வது.
95.
1. வாய்க்குழியல் உமிழ்நீர் அமைலேஸ் (அ) டயலின் உதவியால் ஸ்டார்ச், மால்டோஸாக மாற்றமடைகிறது.

2. கணைய அமைலேஸ் ஸ்டார்ச்சை, மால்டோஸாக மாற்றுகிறது.

3. சிறுகுடலில் உள்ள மால்டேஸ் எனும் நொதி, மால்டோஸை குளுக்கோஸ் + குளுக்கோஸாக மாற்றுகிறது.

96.
1. வாய்க்குழி சுவாசம்
2. நுரையீரல் சுவாசம்
3. தோல் சுவாசம்
97.
1. இந்நோய் பாக்டீரியா மாற்றும் வைரஸின் தொற்றுகளால் நுரையீரல்கள் வீக்கமடைகிறது.
2. பாதிக்கப்பட்டவர்கள் கோழைப்பொருள் உற்பத்தி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், தொண்டைப்புண் ஆகியவற்றால் பாதிப்படைகிறார்கள்.
98.

99.
1. இதைச் சூழ்ற்சியின் போது வால்வுகளின் இயக்கத்தாதல் உண்டாகும் இருவகை இதய ஒலிகள் ஸ்டெத்தாஸ்கோப் பின் உதவியுடன் கேட்கலாம்.
2. 'லப்' ஒலி - வெண்டிரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் 'லப்' எனும் ஒலி தோன்றுகிறது.
3.'டப், ஒலி - வென்ட்ரிகுலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் 'டப்' எனும் இரண்டாவது ஒளி தோன்றுகிறது.
100.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
101.
i) பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறை.
ii) அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
iii) லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
iv) எனவே, லெகும் வகை தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்திகின்றன.
v) ஆகவே, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகிறார்கள்.
102.
103.
1. கல்லீரல் நமது உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பியாகும்
2. இது வயிற்றரையின் வலது மேல் பகுதியில் உதரவிதானத்திற்கு சற்று கீழ் அமைந்துள்ளது.
3. இது இடது மற்றும் வலது என இரு பெரிய கதுப்புகளையும் இரண்டு சிறிய கதுப்புகளையும் கொண்டது.
4. இக்கதுப்புகள் உதரவிதானத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
5. ஒவ்வொரு கதுப்பும் கல்லீரலின் செயல் அலகான பல சிறுகதுப்புகளால் ஆக்கப்பட்டுள்ளது.
6. இவை ஒவ்வொன்றும் கிளிஸ்ஸனின் உறை எனும் மெல்லிய இணைப்புத்திசு படலத்தால் சூழப்பட்டுள்ளது.
7. கல்லீரல் செல்களில் சுரக்கும் பித்தநீர் மெல்லிய தசையாலான பித்தநீர் பையில் சேமிக்கப்படுகிறது.
8. பித்த நாளாகும் கல்லீரல் நாளமும் இணைந்து பொதுப்பித்த நீர் நாளத்தை உருவாக்குகின்றன.
9. பொதுப்பித்த நீர்நாளம் கீழ்நோக்கிச் சென்று கணைய நாளத்துடன் இணைந்து கல்லீரல் - கணைய பொதுநாளமாக உருவாகிச் சிறுதுளைவழியே முன் சிறுகுடலில் திறக்கிறது.
10.இத்துளை ஓட்டி சுருக்குத் தசையால் சூழப்பட்டுள்ளது.
11. கல்லீரல் செல்களுக்கு இழப்பு மீட்டல் தன்மை அதிகம் உள்ளதால் 3 முதல் 4 வாரத்திற்குள் பழைய செல்கள் புதிய செல்களால் மாற்றியமைக்கப்படுகின்றன.
கல்லீரலின் பணிகள்
1. பித்த நீரைச் சுரக்கின்றது.
2. வயதான, பழுதுபட்ட இரத்தச் செல்களை அழிக்கிறது.
3. குளுக்கோஸை கிளைக்கோஜன் வடிவத்தில் சேமித்து வைக்கிறது.
4. கணைய ஹார்மோன்களின் செய்ல்பாட்டினால் மீண்டும் குளுக்கோஸாக இரத்தத்தில் விடுவிக்கிறது.
5. கொழுப்பில் கரையும் வைட்டமின்களையும், இரும்பையும் சேமிக்கிறது.
6. நச்சுப் பொருட்களைச் சிதைத்து நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகிறது.
7. யூரியா மற்றும் அவசியமற்ற அமினோ அமிலங்களை உருவாக்குகிறது.
104.
| வ.எண். | தாவர வகுப்பு | தொல்லுயிர் எச்சங்கள் |
| 1. | பாசிகள் | போலியோபொரல்லா டைமார்ஃபோசைப்பான் |
| 2. | பிரையோஃபைட்கள் | நயடைட்டா,ஹெப்பாட்டிசைட்டிஸ்,மஸ்ஸைடஸ் |
| 3. | டெரிடோஃபைட்கள் | குக்சோனியா,ரைனியா,பாரக் வாங்கிய,கலமைட்டஸ் |
| 4. | ஜிம்னோஸ் பெர்ம்கள் | மெடுல்லோசா,லெப்பிட்டோகார்பான் வில்லியம் சோனியா,லெப்பிடோ டெண்ரான் |
| 5. | ஆஞ்சியோஸ் பெர்ம்கள் | ஆர்க்கியான்தஸ்,ஃபார்குலா |
105.
106.
1. மாற்றிலை அடுக்கமைவு
2. எதிரிலை அடுக்கமைவு
3. மூவிலை அடுக்கமைவு
4. வட்ட இணை அடுக்கமைவு

1. மாற்றிலை அடுக்கமைவு (Alternate phyllotaxy) இவ்வகை இலையமைவில் ஒரு கணுவில் ஒரே ஒரு இலை மட்டும் காணபப்டும். அடுத்தத்துள்ள கணுக்களில் மாறிமாறி மாற்றிலை அமைவில் அமைந்திருக்கும். இலைகளை சூழல் முறையில் அமைந்திருப்பது பல நெடுக்கு வரிசைகள் போன்று தோற்றம் அளிக்கின்றன. எதற்கு ஆர்தோஸ்டிகிஸ் (Orthostichies) என்று பெயர். இது இரண்டு வகைப்படும்.
அ) சூழல் மாற்றிலை அடுக்கமைவு(Alternate sirial): இவ்வகையில் இலைகள் மாற்றிலை அமைவில் சூழல் அமைப்பு முறையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ், ஃபைகஸ்
ஆ) இருவரிசை மாற்றிலை அல்லது பைஃபேரியஸ் (Alternate distichous ir Bifarious): இவ்வகையில் இலைகள் மாற்றிலை அமைவில் தண்டின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: முனூன்லான்ஜிஃபோலியம் (பாலியால்தியா லான்ஜிஃபோலியா)
2. எதிரிலை அடுக்கமைவு (Opposite phyllotaxy) இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள், ஒன்றுக்கொன்று வெவ்வேறு முறைகளில் அமைந்திருக்கின்றன.
i) ஒரு போக்கு எதிரிலை அடுக்கமைவு (Opposite superposed): இதில் அடுத்தடுத்துள்ள கணுக்களில் இணையாக உள்ள இலைகள் ஒரே போக்கில் அமைந்துள்ளன. அதாவது ஒரு கணுவில் உள்ள இரண்டு எதிரெதில் இலைகள் கீழே உள்ள கணுவிலுள்ள இலைகளுக்கு நேர்மேலாக உள்ளன. எடுத்துக்காட்டு: சிடியம், ஸைஜீஜியம் குமினி (நாவல் மரம்) குவிஸ்குவாலிஸ் (ரங்கூன் மல்லி)
(ii) குறுக்கு மறுக்கு எதிரிலை அடுக்கமைவு (Opposite decussate): அடுத்தடுத்த கணுக்களில் அமைந்துள்ள இணை இலைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக (குறுக்கு மறுக்கு )அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: கலோட்ராபிஸ் ஜினியா, ஆசிமம் (துளசி)
3. மூவிலை அடுக்கமைவு (Tcrnate phyllotaxy) இவ்வகை இளையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்று இலைகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நீரியம் (அரளி)
4. வட்ட இலை அடுக்கமைவு (Whorled or verticillate type of phyllotaxy) இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்றிற்கு மேற்பட்ட இலைகள் வட்டமாக அமைந்து காணபப்டுகின்றன. எடுத்துக்காட்டு: அலமாண்டா, அல்ஸ்டோனியா, ஸ்காலரிஸ்.
107.
ஹெர்பேரியம் என்பது அழுத்தி , உலர்த்தி வடிவமைக்கப்பட்ட உலர் தாவர ஓட்த்தாளில் ஒட்டப்பட்ட விளக்கக் குறிப்பு விவரச்சீட்டுடன் கூடிய தாளில் தாவரத் உலரத் தொகுப்பாகும்.
ஹெர் பேரியம் தயாரிக்கும் முறை கீழ்கண்ட படிநிலைகளை கொண்டது.
1. தாவரம் சேகரித்தல் - களச் சேகரிப்பு (Field Colletion)
சேகரித்து திரவங்களில் பதப்படுத்துதல் (Liquid preseverd collection)
உயிருள்ள பொருட்களை சேகரித்தல் (collection for molecular studies)
மூலக்கூறு படிப்புக்கு அல்லது ஆய்விற்குச் சேகரித்தல்.
2. சேகரிப்பு களம் குறித்த தகவல்களை ஆவணப்படுத்துதல்(Documentation of field site data).
3. தாவர வகை மாதிரி தயாரித்தல் (Prepartaion of plant specimen)
4. உலர் தாவர ஓட்த்தாளில் உலர்தாவர வகைமாதிரிகளை ஓட்டுதல். (Mounting Herbarium speciman)
5. ஹெர் பேரிய குறிப்பு விவரச்சீட் டைத் தயாரித்தல் (Herbarium lables)
6. பூஞ்சை மற்றும் பூச்சிகள் தாக்குதல்களிலிருந்து உலர்தாவர ஓட்டுத்தாளை பாதுகாத்தல்
108.
சிதைவு சுழற்சி
இதில் புதிதாகத் தோன்றும் வைரஸ்கள் செல்லுக்குள்ளே பெருக்கமடைந்து ஓம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து விரியான்கள் வெளியேற்றப்படுகின்றன.வீரியமுள்ள ஃபாஜின் பெருக்கம் கீழ்க்கண்ட படிநிலைகளில் நடைபெறுகிறது.
1.ஒட்டிக் கொள்ளுதல் (Adsorption): முதலில் ஃபாஜ் (T4) துகள்கள் (வைரஸ்கள்) ஓம்புயிர்ச் செல்லின் (ஈ.கோலை) சுவருடன் ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன.இவ்விரண்டிற்கும் இடையே ஃபாஜின் நார்கள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றன.இது பாக்டீரியா செல்பரப்பில் குறிப்பிட்ட ஏற்பெல்லை மூலமாக நிகழ்கிறது.வால்நார்களின் லிப்போபாலி சாக்கரைட்கள், ஃபாஜ்களின் ஏற்பிகளாச் செயல்படுகின்றன.பாக்டீரியத்துடன், ஃபாஜ்கள் ஏற்படுத்தும் ஒத்தேற்பு நிகழ்வுகள் அனைத்தும் உள்ளடக்கியது பரப்பிரங்கல் (Landing) எனப்படும்.வால்நார்களுக்கும் பாக்டீரிய செல்களுக்கும் இடையேயான தொடர்பு உறுதி செய்யப்பட்டவுடன் வால் நார்கள் வளைந்து பொருந்தி அடித்தட்டு மற்றும் முட்களினால் பாக்டீரிய செல்களின் மீது நன்கு பொருத்தப்படுகிறது.இந்நிகழ்வானது குத்துதல் (pinning) எனப்படுகிறது.
2.ஊடுருவுதல் (Penetration): இயங்கு முறை மற்றும் நொதியைப் பயன்படுத்தி ஓம்புயிரி செல்சுவர் கரைக்கப்பட்டு ஊடுருவுதல் நடைபெறுகிறது.இந்நிகழ்வின் போது பிணைக்கப்பட்ட பகுதியில் வைரஸின் நொதியான லைசோசைம் பயன்படுத்திப் பாக்டீரியத்தின் செல்சுவர் சிதைக்கப்படுகிறது.குத்துதல் நிகழ்வுக்குப் பிறகு வால்உறை சுருங்குவதால் (ATP ஆற்றலைப் பயன்படுத்தி)ஃபாஜ்,தடித்தும் குட்டையாகயும் காணப்படுகிறது.இதனையடுத்து அடித்தட்டின் மையப்பகுதி விரிவடைகிறது.இதன் வழியாக ஃபாஜின் DNA மூலக்கூறு, தலைப்பகுதியிலிருந்து பாக்டீரிய செல்லுக்குள் உள்ளீடற்ற மையக்குழாய் வழியாக வளர்சிதைமாற்ற ஆற்றல் செலவின்றிச் செலுத்தப்படுகிறது.இவ்வாறு பாக்டீரியாவினுள் DNA துகள் தன்னிச்சையாகச் செலுத்தப்படுவது ஊடுதொற்றல் (transfection) என அழைக்கப்படுகிறது.ஊடுருவலுக்குப் பிறகு ஓம்புயிர் செல்லுக்கு வெளியே காணப்படும் ஃபாஜின் வெற்று புரத உறை 'வெறும் கூடு' (ghost) என்று அழைக்கப்படுகிறது.
3.உற்பத்தி செய்யப்படுதல் (synthesis):
இந்நிலையில் பாக்டீரிய குரோமோசோமினை சிதைவடையச் செய்வதுடன் புரத உற்பத்தியும் DNA இரட்டிப்படைதலும் நடைபெறுகிறது.ஃபாஜின் உட்கரு அமிலம், ஓம்புயிரி உயிரணைவாக்கத்தை (biosynthetic machinery) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.ஓம்புயிரியின் DNA செயலிழப்பு செய்யப்பட்டு, பின்னர் துண்டுகளாக உடைக்கப்படுகிறது.இந்நிலையில் ஃபாஜ் DNA பாக்டீரியாவின் புரத உற்பத்தியை தடுத்து நிறுத்தி, பாக்டீரிய செல்லின் வளர்சிதைமாற்றச் செயல்கள் மூலம் ஃபாஜ் துகள்களின் புரத உற்பத்தியைத் தூண்டுகிறது.அதேசமயத்தில் ஃபாஜ் DNA க்களும் பெருக்கமடைகின்றன.
4.தொகுப்பும் முதிர்ச்சியும் (Assembely அண்ட் Maturation):
ஃபாஜ் DNA -க்களும் புரத உறைகளும் ஓம்புயிர் செல்லினுள் தனித்தனியே உருவாக்கப்படுகின்றன.பின்னர் இவை தொகுக்கப்பட்டு முழுமையான வைரஸ்களாக மாற்றப்படுகின்றன.ஃபாஜ்களின் பகுதிகள் ஒன்று சேர்ந்து, முழு வைரஸ் துகள்களாக மாறும் நிகழ்ச்சியினை முதிர்ச்சியடைதல் (Maturation) என்கிறோம்.தொற்றுதல் நிகழ்ந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு,சுமார் 300 புதிய ஃபாஜ்கள் தொகுக்கப்படுகின்றன.
5.வெளியேற்றம் (Release): தொடர்ந்து சேய் ஃபாஜ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஓம்புயிரிச் செல்சுவர் வெடித்து, ஃபாஜ்கள் வெளியேற்றப்படுகின்றன.
109.
110.
சைமோஸ் மஞ்சரி:
மையத்தண்டு வளர்ச்சி தடைபட்டு மலரில் முடிவடையும். கக்கமொட்டுகள் மூலம் தொடர்ந்து வளர்ச்சி நடைபெறும். முதிர் மலர்கள் மையத்தண்டின் நுனியிலும் இளமலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படும்.
சைமோஸ் வகைகள்:
1. தனிசைவம் :(ஒற்றை மலர் சைம்) : இது ஒரே ஒரு தனிமலரை மட்டும் கொண்ட வரம்புடைய மஞ்சரி ஆகும். எடுத்துக்காட்டு ட்ரில்லியம் கிராண்டி ஃபுளோராம் போல் நுனியிலோ (அ) ஹைபிஸ்கஸ் போல் கோணத்திலோ காணப்படும்.
2. ஒருகைக்கிளைக்கும் மஞ்சரி (Monlchasial cymel Uniorou) மையத்தண்டு ஒரு மலரில் முடிவடையும். பக்கவாட்டில் உள்ள இரண்டு பூவடிச் செதில்களிலிருந்து ஒரு கக்கமொட்டு மட்டும் தொடர்ந்து வளரும். இது ஹெலிகாய்டு, ஸ்கார்பியாய்டு என இரு வகைப்படும்.
அ. ஹெலிகாய்டு சைம் (மோஸ்டிரிக்ஸ்) : மஞ்சரியின் மையத்தண்டு ஒரு பக்கமாக மட்டுமே வளரும். ஆரம்பவளர்ச்சியின் போது மட்டும் சுருள் வடிவில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஹெமிலியா, உருளைக்கிழங்கு.
ஆ. ஸ்கார்பியாய்டு சைம் (சின்சின்னஸ்) :
மஞ்சரியின் கக்கமொட்டு அடுத்தடுத்தப் பக்கங்களில் வலம், இடமாக வளரும். பலசமயம் சுருள் அமைப்பிலும் தோன்றும்.
எடுத்துக்காட்டு : ஹீலியோட்ராப்பியம்.
3. தனி டைக்கேஷியம் (Biarous) இருவகைக் கிளைத்தல் (Simple dichasium) : மைய அச்சு நுனிமலருடன் முடிவடையும். பக்க மொட்டுகள் இரண்டும் தொடர்ந்து வளரும். மொத்தம் மூன்று மலர்கள் கொண்டவை. முதிர்மலர்கள் நுனியிலும், இளம் மலர்க்ள பக்கவாட்டிலும் அமைந்தவை.
இதுவே மெய் சைம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: ஜாஸ்மினம் (மல்லிகை)
4. கூட்டு டைக்கேஷியம் : பல மலர்கள் கொண்டவை. மைய அச்சு முதிர் மலரில் முடிவடையும். பக்கவாட்டு கிளைகள் ஒவ்வொன்றும் தனி டைக்கேஷியங்களைக் கொண்டவை. எடுத்துக்காட்டு: கிளிரோடென்ட்ரான்.
சிறிய அளவிலான தனி டைக்கேஷியம் "சைமூல்"(cymule) எனப்படும்.
5. பல்வகைக்கிளைக்கும்மஞ்சரி: (Polychasial cyme) (Multiparous) மையத்தண்டு ஒரு மலரில் முடியும். பக்கவாட்டு கிளைகள் மேலும் மேலும் கிளைத்துக்கொண்டே இருக்கும்.
எடுத்துக்காட்டு: நீரியம்.
111.
112.

113.
1.பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு லைக்கென்கள் என்று பெயர்.
2.இதில் காணப்படும் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி எனப்படுகிறது.
3.இதில் காணப்படும் பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி எனப்படுகிறது.
4.பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தைச்தருகிறது.
5.பூஞ்சை உயிரி பாசிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
6.பூஞ்சை உயிரி உடலத்தை தளப்பொருள் மீது நிலைப்படுத்த ரைசினே என்ற அமைப்பை ஏற்படுத்த உதவுகிறது.
7.பாலிலா இனப்பெருக்கம் துண்டாதல், சொரீடியங்கள்,ஐசிடியங்கள் மூலம் நடைபெறுன்றன.
8.பாசி உயிரி உறக்க நகரவித்துக்கள், ஹார்மோகோனியங்கள்,நகரா வித்துகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
9.பூஞ்சை உயிரி பாலினப்பெருக்கத்தில் ஈடுபட்டு ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகின்றன.
114.
ஆரச்சமச்சீர்.
காரணம்:
1. முதுகு நாணுடையவை அனைத்தும் இருபக்க சமச்சீரமைப்புடையனவை
2. உடற்குழியுடையவை
3. மூவடுக்கு கருவுடைய விலங்குகள்
4. உறுப்புமண்டல அளவிலான உடற்கூட்டமைப்பு
5. மலத்துளைக்குப் பின் வாலினை பெற்றுள்ளது.
6. முதுகுபுறத்தில் நரம்புக்குழல் காணப்படுகிறது.
7. முதுகுநாணைப் பெற்றுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards