11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு உயிரியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் (11th Standard Tamil Medium Book Back and Creative Biology Important Question)
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கிளோடோகிராம் என்னும் மன வரைபடத்தினை அறிமுகப்படுத்தியவர்
அரிஸ்டாட்டில்
R.H. விட்டேக்கர்
எர்ணஸ்ட்
கரோலஸ் லின்னயஸ்
2.
கோப்பைச் செல்களின் பணி
நுண்கிருமிகளை வடிகட்டுவது
துத்துகளை வடிகட்டுவது
கோழையைச் சுரப்பது
வாயுபரிமாற்றத்தில் ஈடுபடுகிறது
3.
குரல்வலைத்துளை இதனுள் திறக்கிறது.
குரல்வளை
தொண்டை
உணவுக்குழல்
மூச்சுக்குழல்
4.
மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________
தொண்டை
மூச்சுக்குழல்
காற்று நுண்ணறை
மூச்சுக்கிளை நுண்குழல்
5.
தவளையின் பார்வை வென்ட்ரிக்கிள்கள் காணப்படும் இடம்
கண்
முகுளம்
நடுமூளை
தண்டுவடம்
6.
கரப்பான் பூச்சி தம் வாழ்க்கைச் சுழற்சியின் போது _______ முறை தோலுரித்துக்கொள்கிறது
3
8
10
13
7.
தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.
இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது
கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது
உணவைப் பிடித்து கடத்துகிறது
சுவாசத்தில் பங்கு கொள்கிறது
8.
மெல்லுடலிகளில் நீரின் தரத்தை கண்டறிவதற்கு பயன்படும் உறுப்பு
உணர்நீட்சிகள்
ஆஸ்ஃபிரேடியம்
ராடுலா
மேன்டில்
9.
மண்புழுவின் மூளை எனப்படுவது
தொண்டைமேல் நரம்பு செல்
தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்
தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்
மைய நரம்பு மண்டலம்
10.
முட்தோலிகள் வகுப்பைச் சார்ந்த விலங்குகளின் சமச்சீர் தன்மை யாது?
சமச்சீரற்ற தன்மை
ஆரச்சமச்சீர் தன்மை
ஐந்தாரச் சமச்சீர் தன்மை
இருபக்கச் சமச்சீர் தன்மை
11.
இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?
பெருந்தமனி
நுரையீரல் தமனி
கரோனரி சிரை
கரோனரி தமனி
12.
கீழ்கண்ட அட்டவணையில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் வகைகளை அதனுடைய செல்கள் அல்லது பண்புகளோடு பொறுத்துக.
| இரத்த வெள்ளையணுக்கள் | செயல்/பணிகள் | |
| I | மோனோ சைட்டுகள் | a. வீக்கங்களின் காரணம் |
| II | பேசாஃபில்கள் | b பல்லுரு உட்கரு |
| III | ஈசினோஃபில்கள் | c கப்ஃபர் செல்கள் |
| IV | நியூட்ரோஃபில்கள் | d ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. |
| I | II | III | IV |
| a | d | c | b |
| I | II | III | IV |
| b | d | a | c |
| I | II | III | IV |
| d | b | c | a |
| I | II | III | IV |
| c | a | d | b |
13.
கிளைக்கோகேலிக்ஸ் எனப்படுவது பாக்டிரீயாவின்.
செல் சுவர்
வெளியுறை
நுண்சிலும்பு
ஃபிம்ரியெ
14.
வைரஸின் எப்பாகம்,ஓம்புயிரி பாக்டிரீய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றது?
அடிதட்டு
வால்நார்
கழுத்துப்பட்டை
புரத உறை
15.
யூரியா, கல்லீரலில் இதன் வளர்ச்சிதை மாற்றத்தினால் உருவாகிறது.
கார்போஹட்ரேட்
அமினோ அமிலங்கள்
தாதுப் பொருட்கள்
கொழுப்பு அமிலங்கள்
16.
வைரஸின் உயிரற்ற பண்பினைக் கன்டுபிடி.
உறுத்துணர்வு உள்ளவை
படிகங்களாக்க முடியும்
திடீர் மாற்றம் அடையும் திறன்
உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன்
17.
இத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது
கோல்சிக்கம் லூட்டியம்
குளோரியோஸா சூப்பர் பா
ஸ் மைலாக்ஸ் கிளாப்ரா
ஊர்ஜினியா இன்டிகா
18.
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இது புறத்தோன்றியாகும்.
முதன்மை வேர்கள் மற்றும் பக்கக்கிளைகள்
பக்கவேர்கள் மற்றும் இலைத்தொகுதி
பக்கக்கிளைகள் மற்றும் பக்க வேர்கள்
பக்கக்கிளைகள் மற்றும் இலைகள்
19.
பேபேசி குடும்பத்தில் காணப்படும் தக்கைத் தாவரத்தின் தாவரவியல் பெயர் யாது?
செஸ்பேனியா
பொங்கேமியா
ஆஸ்கினோமின் ஆஸ்பிரா
டால்பெர்ஜியா
20.
வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் -எவை?
தாலோஃபைட்டா
பிரையோஃபைட்டா
டெரிடோஃபைட்டா
ஸ்பெர்மெட்டோஃபைட்டா
21.
| வ.எண் | பகுதி I | பகுதி II |
| I | பொல்லினியம் | மகரந்தக் கம்பிகளும், மகரந்தப்பைகளும் முழுமையாக இணைந்து இருக்கும். |
| II | சிஞ்சினிசஷியஸ் | மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாக காணப்படும். |
| III | சினான்ட்ரஸ் | மகரந்தத் தாள்களுடன் சூல் முடி இணைந்து உருவாகுவது. |
| IV | கைனோஸ் பீஜியம் | மகரந்தக் கம்பிகள் இணையாமல் தனித்தும், மகரந்தப் பைகள் இணைந்தும் காணப்படும். |
I. a, II.d, III.c, IV.b
I. d, II.c, III.b, IV.a
I. b, II.d, III.a, IV.c
I. c, II.b, III.a, IV.d
22.
பெந்தாம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் துணை வகுப்பு அல்லி தனித்தவையின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ள வரிசை
பூத்தளக் குழுமம்
பூத்தட்டுக் குழுமம்
கோப்பை வடிவ பூத்தளக் குழுமம்
இவை அனைத்தும்
23.
முன் சிறுகுடலில் காணப்படும் உணவின் அமில காரத்தன்மை
pH 1.5
pH 7.8
pH 5
pH 8.8
24.
பீட் எனப்படும் எரிபொருள் இப்பாசிகளினால் உருவாக்கப்படுகிறது
ஸ்பேக்னம்
பிரையம்
மார்கான்ஷியா
ஃபியூனேரியா
25.
வேர்த்தூவிகள் ஒருவேரில் இப்பகுதியில் காணப்படுகிறது.
வளர்ச்சிக்குத்திசு மண்டலம்
நீட்சி மண்டலம்
செல்பகுப்பு நடைபெறும் பகுதி
முதிர்ச்சி மண்டலம்
26.
மேக்னோலியோஃபைட்கள் என்பது _____ தாவரங்களாகும்.
மூடுவிதைத்தாவரங்களாகும்
பலகாய்ப்புத் தாவரங்களாகும்
திறந்த விதைத்தாவரங்களாகும்
ஒரு காய்ப்புத் தாவரங்கள்
27.
கூற்று:கணையம் ஒரு கூட்டுச் சுரப்பியாகும். காரணம்: கணையத்தில் நாளமுள்ள சுரப்பி பகுதி நொதிகளையும் நாளமில்லா சுரப்பி பகுதி ஹார்மோன்களையும் சுரக்கிறது.
கூற்றும் சரி, காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் சரி, காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று மற்றும், காரணம் தவறு.
28.
பர்தோலினின் நாளம் இதனோடு தொடர்புடையது
கல்லீரல்
கணையம்
இரைப்பை
நாவடி உமிழ் நீர்ச் சுரப்பி
29.
இவ்வகை மஞ்சரியில் குட்டையான காம்புடைய மலர்கள் மஞ்சரித்தண்டின் நுனியிலும், நீள காம்புடைய மலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படுவதால், மலர்கள் யாவும் ஒரே மட்டத்தில் அல்லது குவிய வடிவில் காணப்படும்.
அம்பெல்
காரிம்ப்
ஸ்பாடிக்ஸ்
பானிக்கிள்
30.
தவறான ஜோடியை கண்டுபிடி
எலும்பு - எரித்ரோசைட்
குருத்தெலும்பு - காண்ட்ரோசைட்
அடிபோஸ் - திசு
திரவ இணைப்புத் திசு - இரத்தம்
31.
பொருத்துக
| எபிதீலியம் | பண்பு | ||
|---|---|---|---|
| (அ) | தூண்வடிவ எபிதீலியம் | a | கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள் |
| (ஆ) | எளிய எபிதீலியம் | b | வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது |
| (இ) | இடைநிலை எபிதீலியம் | c | ஓரடுக்கு செல்களால் ஆனது |
| (ஈ) | சுரப்பு எபிதீலியம் | d | இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது. |
| அ | ஆ | இ | ஈ |
| b | a | d | c |
| அ | ஆ | இ | ஈ |
| d | b | c | a |
| அ | ஆ | இ | ஈ |
| a | c | b | d |
| அ | ஆ | இ | ஈ |
| b | c | d | a |
32.
நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு
எண்ணெய் சுரக்கும் சுரப்பி
ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
நொதிகளை சுரக்கும் சுரப்பி
மெழுகினை சுரக்கும் சுரப்பி
33.
குரோமிஸ்டா உலகம் இவ்வுலக வகைப்பாட்டில் காணப்படுகிறது.
மூவுலக வகைப்பாடு
ஐந்துலக வகைப்பாடு
ஆறுஉலக வகைப்பாடு
ஏழுஉலக வகைப்பாடு
34.
யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________
சையனோபாக்டீரியா
யூகேரியோட்டுகள்
மெத்தனோஜென்கள்
யூபாக்டீரியா
35.
சரியான இணைகளை உருவாக்குக
| வரிசை –I | வரிசை –II |
| P) லிபேஸ் | i) ஸ்டார்ச் |
| Q)பெப்சின் | ii) காசின் |
| R) ரென்னின் | iii) புரதம் |
| S) டயலின் | iv) லிபிட் |
| P | Q | R | S |
| iv | ii | i | iii |
| P | Q | R | S |
| iii | iv | ii | i |
| P | Q | R | S |
| iv | iii | ii | i |
| P | Q | R | S |
| iii | ii | iv | i |
36.
கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?
பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்
ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்
கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்
உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்
37.
ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
10,10
9,10
8,10
9,9
38.
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது _______.
13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில்
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில்
14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில்
39.
திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.
இறுக்கமான சந்திப்புகள்
ஒட்டும் சந்திப்புகள்
இடைவெளி சந்திப்புகள்
மீள் தன்மை சந்திப்புகள்
40.
குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.
தோல்
செரிப்புபாதை
பித்தப்பை
மூச்சுக்குழல்
41.
சரியான இணையைப். தேர்ந்தெடு
| பகுதி - I | பகுதி - II |
| (P) மூச்சுக் காற்று அளவு | i. 1000 முதல் 1100 மி.லி. வரை |
| (Q) எஞ்சிய கொள்ளளவு | ii. 500 மி.லி. |
| (R) வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு |
iii.2500 முதல் 3000 மி.லி. வரை |
| (S) உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு |
iv.1100 முதல் 1200 மி.லி. வரை |
| P | Q | R | S |
| ii | iv | i | iii |
| P | Q | R | S |
| iii | ii | iv | i |
| P | Q | R | S |
| ii | iv | iii | i |
| P | Q | R | S |
| iii | iv | i | ii |
42.
நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால்
இரத்தத்தில் அதிக O2 இருப்பதால்
இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்
43.
44.
இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
ஃபைப்ரின்
கால்சியம்
இரத்தத் தட்டுகள்
பிலிரூபின்
45.
கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?
மெல்லுடலிகள்
முட்தோலிகள்
கணுக்காலிகள்
வளைத்தசைப் புழுக்கள்
46.
இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.
மனிதர்கள் -யூரியோடெலிக்
பறவைகள் -யூரியோடெலிக்
பல்லிகள் -யூரிகோடெலிக்
திமிங்கலம் - அம்மோனோடெலிக்
47.
மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது.
டி.என்.ஏ & ஆர்.என்.ஏ
மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை
செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின்
மேற்கூறிய அனைத்தும்
48.
கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.
உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு
மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை
49.
ஆர்க்கிபாக்டீரியம் எது?
அசட்டோபாக்டர்
எர்வினீயா
டிரிப்போனிமா
மெத்தனோ பாக்டீரியம்
50.
கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக
டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.
செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.
லிப்போபாலிசாக்கராக்கரைட்கள் கொண்ட செல்சுவர்
51.
அல்லி ஒட்டிய மகரந்தத்தாள்கள் என்றால் என்ன?
52.
வயிற்றுப்புண் என்பது யாது?
53.
டியூட்டிரோஸ்டோம்கள் என்பவை யாவை?
54.
மேல்கீழ் வேறுபாடு இலைகள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
55.
ஒளிசார் பரவிலை அமைவு என்றால் என்ன?
56.
மேற்புற/தொங்கும் சூல் ஒட்டு முறை என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.
57.
கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள் என்பவை யாவை?
58.
குர்திநீர்ச்சார் வகைப்பாடு அல்லது ஊநீர் வகைப்பாடு என்பது யாது?
59.
மூச்சுக்குழாயில் காணப்படும் குருத்தெலும்பு வளையத்தின் பணியாது?
60.
உள்ளூர் , தாவர விளக்கபட்டியல் என்பது யாது?
61.
மனித சுவாச மண்டலத்தில் கடத்தும் பகுதி மற்றும் சுவாசப்பகுதி என்பது யாது?
62.
மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள் என்பது யாது?
63.
கருமுட்டை கூடு என்பது யாது? இனப்பெருக்கத்தில் அதன் முக்கியத்துவம் யாது?
64.
தவளையின் சிறுநீரகம் எவ்வகையை சார்ந்தது?
65.
திசு அளவிலான உடலமைப்பு பரிணாமத்தில் எவ்வுயிரியில் தோன்றியது?
66.
மயோஜெனிக் வகை இதயம் என்றால் என்ன?
67.
உடலின் அனைத்துப் பகுதியிலிருந்து வரும் நீணநீர் நாளங்கள் இறுதியில் எந்த இரத்தக் குழாயோடு இணைகிறது?
68.
டெரிடோஃபைட்டுகள் வாஸ்குலத் தொகுப்புடை பூவாத்தாவரங்கள் என அழைக்கக் காரணம் யாது?
69.
எம்பிரியோஃபைட்டாவில் அடங்கிய பிரிவுகள் யாவை?
70.
செரிமான மண்டலத்தின் அவசியம் யாது?
71.
இணைப்புத்திசுவின் முக்கிய கூறுகள் யாவை?
72.
இணைப்புத்திசுவின் பணிகள் யாவை?
73.
எனைமா மற்றும் அனைமா என்றால் என்ன?
74.
வகைப்பாட்டியலின் அறிவியல் படிநிலைகளாக அமைந்துள்ளவை எவை?
75.
ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?
76.
இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.
77.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
78.
கருவளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது?
79.
ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
80.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து
81.
மஞ்சரி வெவ்வேறு இடத்திலிருந்து உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?ஒரு தாவரத்தில் மஞ்சரி எங்குள்ளது?தண்டு நுனியிலோ அல்லது இலைக் கக்கத்திலா?
82.
ஒற்றை இரட்டைமடியு உயிரி வாழ்க்கைச் சுழல் என்பது யாது?
83.
உணவுப் பாதையில் காணப்படும் நான்கு அடுக்குகளையும் அதில் உள்ள திசுக்களையும் தொகுத்து எழுது.
84.
கிராம் நேர் மற்றும் எதிர் வகை பாக்டீரியங்களின் செல்சுவர் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
85.
இலையின் முதன்மை பணிகள் யாவை?
86.
கண்டமாக்கம் என்றால் என்ன?
87.
பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகளை அட்டவணைப்படுத்து.
88.
DNA வரிக்குறியிடுதலின் முக்கியத்துவம் யாது?
89.
மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் என்பது யாது?
90.
திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் என்பது யாது?
91.
மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?
92.
அடிபோஸ் திசு என்பது யாது?
93.
செரிமான நொதி்கள் தேவையின்போது மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்
94.
மண்புழுவின் பெரிஸ்டோமியம் மற்றும் புரோஸ்டோமியத்தை வேறுபடுத்துக.
95.
கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?
96.
இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?
97.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
98.
பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
99.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
100.
சுறாமீனை, பூனைமீனில் இருந்து நீ எவ்வாறு வேறுபடுத்துவாய்?
101.
பாசிகளில் பொதுப்பண்புகள் யாவை?
102.
கல்லீரல் மற்றும் கணையத்தின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
103.
கரப்பான் பூச்சியின் சுவாசமண்டலத்தை படத்துடன் விளக்குக.
104.
தனிச் சதைக்கனி என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்கு.
105.
தரைகீழ் தண்டின் உருமாற்றம் என்பது யாது? அதன் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
106.
பாரம்பரிய வகைப்பாட்டிற்கும் நவீன பாரம்பரிய வகைப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
107.
சுரப்பு எபிதீலியத்தை வகைப்படுத்து
108.
சுவாச மண்டல பாதிப்புகள் - கருத்து வரைபடம்.
109.
T4 பாக்டீரியஃபாஜின் அமைப்பை விளக்குக.
110.
ABO இரத்த வகையை விளக்கு.
111.
ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி,அதன் நிறை,குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
112.
மண்புழுவை அடையாளம் காணப்பயன்படும் பண்புகள் எவை?
113.
தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக
114.
முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் தக்க வைக்கப்பட்டுள்ள முதுகு நாணிகளின் பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.
1.
(c)
எர்ணஸ்ட்
2.
(c)
கோழையைச் சுரப்பது
3.
(d)
மூச்சுக்குழல்
4.
(c)
காற்று நுண்ணறை
5.
(c)
நடுமூளை
6.
(d)
13
7.
(b)
கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது
8.
(b)
ஆஸ்ஃபிரேடியம்
9.
(a)
தொண்டைமேல் நரம்பு செல்
10.
(c)
ஐந்தாரச் சமச்சீர் தன்மை
11.
(d)
கரோனரி தமனி
12.
(d)
| I | II | III | IV |
| c | a | d | b |
13.
(b)
வெளியுறை
14.
(b)
வால்நார்
15.
(b)
அமினோ அமிலங்கள்
16.
(b)
படிகங்களாக்க முடியும்
17.
(b)
குளோரியோஸா சூப்பர் பா
18.
(d)
பக்கக்கிளைகள் மற்றும் இலைகள்
19.
(c)
ஆஸ்கினோமின் ஆஸ்பிரா
20.
(c)
டெரிடோஃபைட்டா
21.
(c)
I. b, II.d, III.a, IV.c
22.
(d)
இவை அனைத்தும்
23.
(b)
pH 7.8
24.
(a)
ஸ்பேக்னம்
25.
(d)
முதிர்ச்சி மண்டலம்
26.
(a)
மூடுவிதைத்தாவரங்களாகும்
27.
(a)
கூற்றும் சரி, காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
28.
(d)
நாவடி உமிழ் நீர்ச் சுரப்பி
29.
(b)
காரிம்ப்
30.
(a)
எலும்பு - எரித்ரோசைட்
31.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| b | c | d | a |
32.
(b)
ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
33.
(d)
ஏழுஉலக வகைப்பாடு
34.
(b)
யூகேரியோட்டுகள்
35.
(a)
| P | Q | R | S |
| iv | ii | i | iii |
36.
(a)
பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்
37.
(a)
10,10
38.
(b)
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
39.
(a)
இறுக்கமான சந்திப்புகள்
40.
(d)
மூச்சுக்குழல்
41.
(a)
| P | Q | R | S |
| ii | iv | i | iii |
42.
(c)
இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
43.
(c)
44.
(d)
பிலிரூபின்
45.
(b)
முட்தோலிகள்
46.
(d)
திமிங்கலம் - அம்மோனோடெலிக்
47.
(a)
டி.என்.ஏ & ஆர்.என்.ஏ
48.
(b)
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
49.
(a)
அசட்டோபாக்டர்
50.
(a)
டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
51.
மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படும்.
எ.கா:கத்திரி, டாட்டூரா
52.
1. இரைப்பை மற்றும் முன் சிறுகுடலினுள் ஏற்படும் கோழைப் படல அரிப்பு இரைப்பைப்புண் எனப்படும்.
2. முன்சிறுகுடல் புண் 25 முதல் 45 வயதினருக்கும், இரைப்பை புண் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தோன்றுகிறது.
53.
பலசெல் விலங்குகளில் கருக்கோளத் துளையிலிருந்தோ அல்லது கருக்கோள துளைக்கு அருகிலிருந்தோ மலத்துளையும், கருக்கோளத்துளையை விட்டுத் தூரத்திலிருந்து வாயும் உருவானால் அவ்விலங்குகள் டியூட்டிரோஸ்டோம்கள் எனப்படும்.
54.
இலையானது தட்டையாகவும், இலைபரப்பு கிடைமட்டமாகவும் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு என வேறுபாடுகளுடன் காணப்படும் இலைகள் மேல்கீழ் வேறுபாடு இலைகள் எனபப்டும். எ.கா: இருவித்திலைத் தாவரங்கள்.
55.
தாவரங்களில் ஒரு இலை மற்றொரு இலைக்கு நிழலை ஏற்படுத்தாதவாறும், அனைத்து இலைகளும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும் விதத்தில் ஒன்றின் மேல் ஒன்று தழுவாதவாறு தங்களுக்குள் சரி செய்து கொள்வது ஒளிசார் பரவிலை அமைவு என்று பெயர்.
எ.கா: அகாரிஃபா (குப்பைமேனி)
56.
மேற்புற/தொங்கும் சூல் ஒட்டு முறை : சூலகப்பையின் மேற்புறத்தில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். சூல்கள் மேலிருந்து கீழாக தொங்கிக் கொண்டிருக்கும்.
57.
CO2 பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள் எனப்படும்.எ.கா: கேம்பைலோபாக்டர்.
58.
ஒத்த பண்புகளை கொண்ட தாவரங்களின் வகைப்பாட்டில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க , அவற்றில் காணப்படும் புரதங்களின் அடிப்படஇல்லை வகைப்படுத்துதல் குர்திநீர்ச்சார்/ஊநீர் வகைப்பாடு எனப்படும்.
59.
குருத்தெலும்பு வளையங்கள் சுவாசத்தின் போது ஏற்படும் அழுத்த மாறுபாடுகளால் குழல் வெடித்துவிடாமலும், காற்று செல்லும் போது சிதைந்து விடாமலும் மூச்சுக்குழலைப் பாதுகாக்கின்றது.
60.
இது ஓர் குறிப்பிட்ட மலைத்தொடர் , நகரம் , நாடு அல்லது மாநிலத்தின் சிறு பகுதியின் தாவர விளக்கபட்டியல் ஆகும்.
61.

62.
பூஞ்சைகளைத் தாக்கக் கூடிய வைரஸ்கள் மைக்கோவைரஸ்கள் எனப்படும்.
63.
1. கிளைடெல்லத்தில் உள்ள சுரப்பி செல்களினால் சுரக்கப்பட்டு உருவாக்கப்படும் அமைப்பாகும்.
2. விந்தணு, அண்டணு மற்றும் ஊட்டத்திரவம் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
3. கருவுறுத்தலும் வளர்ச்சியும் கருமுட்டை கூட்டினுள்ளேயே நடைபெறுகிறது.
64.
மீசோநெஃப்ரிக்
65.
தொகுதி-நிடோரியா (ஈரடுக்கு விலங்கு -எ.கா. ஹைட்ரா -குழியுடலிகள்).
66.
1. மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சார்ந்தது.
2. இதயத் தசை உள்ள கார்டியோமாயோசைட்டுகள் முனைப்பியக்க நீக்கம் இயல்பான, சீரான இதயத் துடிப்பைத் துவங்குவதால், மயோஜெனிக் வகை இதயம் அழைக்கப்படுகிறது.
67.
கீழ்க்கழுத்துச் சிரை
68.
டெரிடோஃபைட்கள், வாஸ்குலத் திசுக்களான சைலம் மற்றும் ஃபுளோயம் பெற்ற முதல் தாவரங்களானதால். இவைகள் வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் எனப்படும்.
69.
1. பிரையோஃபைட்டா
2.டிரக்கியோஃபைட்டா
70.
1. பெரிய மூலக்கூறுகள் அடங்கிய உணவு அப்படியே நமது செல்களுக்குள் நுழைய முடியாது.
2. எனவே உணவைப் பகுத்து உட்கிரகிக்கும் தன்மைக்கேற்ற சிறிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு செரிமான மண்டலம் அவசியமாகிறது.
71.
1. நாரிழைகள்
2. அடிப்படை பொருட்கள்
3. செல்கள்
72.
1. பிணைத்தல்
2. ஆதரவு
3. பாதுகாத்தல்
4. பாதுகாப்பு உரையாக அமைதல்
5. பொருட்களைக் கடத்துதல்
73.
1. எனைமா-இரத்தமுடைய விலங்குகள்
2. அனைமா-இரத்தமற்ற விலங்குகள்
74.
1. பண்பாக்கம் 2. அடையாளம் காணல் 3. பெயரிடுதல், 4. வகைப்பாடு செய்தல்
75.
1. இனப்பெருக்க காலங்களில், ஆன் தவளைகளில் ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. குரல்ப்பையின் உதவியினால் கரகர ஒலியை உருவாக்கி பெண் தவளையை கவர்கின்றது.
76.
கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
77.
குரல்வளை மூடி
78.
உணவு மண்டலமாக மாறுகிறது.
79.
சைலமும், ஃபுளோயமும் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும். ஸ்டீல், பிளெக்டோ ஸ்டீல் எனப்படும். எ.கா. லைக்கோபோடியம் கிளாவேட்டம்.

80.
லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல். | வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல். |
81.
தோன்றுமிடத்தின் அடிப்படையில் மஞ்சரியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை
1. நுனி மஞ்சரி :தண்டுநுனியிலிருந்து வளர்ந்து உருவாவது.எ,கா :நீரியம் ஒலியாண்டர்.
2. கக்கமஞ்சரி :இலையின் கக்கத்தில் தோன்றுவது.
எ.கா : ஹைபிஸ்கஸ் ரோசா - சைனஸ்சிஸ்
3.தண்டு மஞ்சரி (காலிஃபுளோரஸ்) : மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து நேரடியாக மஞ்சரி உருவாதல்.எ.கா:தியுபுரோமோ கொக்கோ, கௌரோபிட்டா கையானென் சிஸ்.
82.
1. இது ஒற்றைமடிய கேமீட் உயிரி, இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழல்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது.
2.கேமீட்டக, வித்தகத் தாவரநிலைகள் பல செல்களால் ஆனவை.
3.இருப்பினும் ஓங்கு நிலையில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது. பிரையோஃபைட்களில் கேமீட்டகத் தாவரம் ஓங்கு நிலையில் காணப்படுகிறது.
4.வித்தகத்தாவரம் குறுகிய காலம் வாழ்ந்து பல செல்களைப்பெற்று கேமீட்டகத்தாவரத்தினை முழுமையாகவோ, ஓரளவிற்கோ சார்ந்துள்ளது.
5.டெரிடோஃபைட் வித்தகத்தாவரம் சார்பின்றி காணப்படுகிறது.
83.
| வ.எண் | படலங்கள் | திசுக்கள் மற்றும் பொருட்கள் |
|---|---|---|
| 1. | செரோசா | இணைப்புத்திசு , மெல்லிய தட்டை எபிதீலிய செல்கள். |
| 2. | தசை அடுக்கு | வட்டத்தசைகள், நீள்வாக்குத் தசைகள், நரம்பு வலைப்பின்னல், இணைப் பரிவு நரம்பு மண்டல நரம்பிழைகள் |
| 3 | கோழை கீழ் படலம் |
இணைப்பு திசுக்கள், நரம்புகள், இரத்த நாளங்கள், நிணநீர் நாளங்கள், நிணநீர் நாளங்கள், பரிவு நரம்புகள் |
| 4. | கோழைப் படலம் | கோழைப் பொருள் |
84.
85.
1. ஒளிச்சேர்க்கை
2. நீராவிப்போக்கு
3. வாயு பரிமாற்றம்
4. மொட்டுகளைப் பாதுகாத்தல்
5. நீரையும், நீரில் கரைந்துள்ள பொருட்களையும் கடத்துதல்.
86.
சில விலங்குகளின் உடல், உள்ளும் புறமும் வரிசையாக ஒரே மாதிரியான பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இக் கண்டங்களில் சில உறுப்புகள் மீண்டும் மீண்டும் காணப்படும். இதற்கு கண்டமாக்கம் எனப்படும்.
எ.கா: வளைதசைப் புழுக்கள்.
87.
| வ.எண் | சுவாச உறுப்புகள் | விலங்குகள் |
| 1. | உடல் பரப்பு (விரவல் முறை) | கடற்பஞ்சுகள், குழியுடலிகள், தட்டைப் புழுக்கள். |
| 2. | தோல் (ஈரப்பதமுடையது) | மண்புழுக்கள், தவளைகள் |
| 3. | மூச்சுக்குழல் | பூச்சிகள் |
| 4. | செவுள்கள் | நீர்வாழ் கணுக்காலிகள், மெல்லுடலிகள், மீன்கள் |
| 5. | நுரையீரல்கள் | இருவாழ்விகள், ஊர்வன, பரப்பன, பாலூட்டிகள் |
88.
1.உயிரினங்களை அடையாளம் காண்பதிலும் வகைப்படுத்துதலிலும் DNA வரிக்குறியிடுதல் மிகவும் பயனுள்ளதாய் இருக்கின்றது.
2. பல்லுயிர்த் தன்மையின் அளவை வரையறுக்க மற்றும் வரைபடமாக உதுவுகின்றது.
3. முழுத்தாவரத்தையோ துண்டாக்கப்பட்ட அல்லது துலாக்கப்ட்ட தவற மாதிரிகளையோ அடையாளம் காண இதன் மூலம் முடியும்.
89.
1. மண்புழுவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தாவரங்களுக்கான திரவ உரம் அல்லது தாவர ஊட்ட மருந்து மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் எனப்படும்.
2. மண்புழுவின் கோழை, கழிவுப் பொருட்கள் இவற்றுடன் மண்ணின் கரிம மூலக்கூறுகளால் உருவான நுண்ணூட்ட பொருட்களும் இணைந்தே செறிவூட்டபட்ட நீராகும்.
இத்திரவத்தை இலைகளின் மேல் தெளிப்பதன் மூலம் தாவர வளர்ச்சி தூண்டப்படுகிறது.
90.
1. இந்த வகை சுற்றோட்ட மண்டலத்தில் சுற்றோட்டத் திரவமாக ஹீமோலிம்ப் காணப்படுகிறது.
2. ஹீமோலிம்ப் இரத்தக் குழலின் வழியாகப் பைக்குழிக்கு இதயத்தால் உந்தி அனுப்பப்படுகிறது.
3. இந்தப் பைக்குழி ஹீமோசீல் எனப்படும்.
4. இரத்தத்தை எடுத்துச் செல்ல இரத்தக்குழாய்கள் கிடையாது.
எ.கா: கணுக்காலிகள், பெரும்பான்மையான மெல்லுடலிகள்.
91.
நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத்தன்மையுடைய சேய்கள் உருவாகின்றன.
எ.கா.
| வ.எண் | ஆண் | பெண் | சேய்(மலடு) |
|---|---|---|---|
| 1. | குதிரை | கழுதை | ஹின்னி |
| 2. | கழுதை | குதிரை | கோவேறுக் கழுதை |
| 3. | சிங்கம் | புலி | லைகர் |
| 4. | புலி | சிங்கம் | டைகான் |
92.
1. தோலுக்கு அடியில் காணப்படுகிறது.
2. அடிபோஸ் அல்லது கொழுப்பு செல்கள் (அடிபோசைட்டுகள்) இத்திசுக்கூட்டத்தில் 90% அதிகமாக காணப்படுகிறது.
3. இத்திசுவில் உள்ள செல்கள் நேரடியாக கொழுப்பையும் பயன்படுத்தப்படாத இதர அதிகப்படியான உணவுப் பொருட்களையும் கொழுப்பாக மாற்றி திசுக்களில் சேமித்து வைக்கின்றன.
93.
உணவுப் பொருட்கள் உணவுப்பாதையில் செல்லும் போது அதன் பகுதிப் பொருட்களாக மாற்றப்படவேண்டிய வேளையில் மட்டுமே சுரக்கின்றது. தேவையில்லாத நேரத்தில் சுரக்காமலிருப்பதால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
94.
1. பெரிஸ்டாமியம் என்பது மண்புழுவின் முதல் கண்டமாகும், இதன் மையப்பகுதியில் வாய் அமைந்துள்ளது.
2. வாயின் முன்பகுதியில் காணப்படும் தசைத் தொங்கல் 'புரோஸ்டோமியம்'அல்லது மேலுதடு எனப்படும்.
95.
1. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் நீண்ட காலம் வாழக்கூடியச் சூழலில் அதற்கேற்ற சுவாசமும், இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கமும் சரி செய்யப்படுகின்றன.
2. இத்தகைய சூழலைச் சமாளிக்கவே சிறுநீரகங்களிலிருந்து அதிக அளவு எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3. இந்த ஹார்மோன், எலும்பு மஞ்சையைத் தூண்டி அதிக இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
96.
1. இதைச் சூழ்ற்சியின் போது வால்வுகளின் இயக்கத்தாதல் உண்டாகும் இருவகை இதய ஒலிகள் ஸ்டெத்தாஸ்கோப் பின் உதவியுடன் கேட்கலாம்.
2. 'லப்' ஒலி - வெண்டிரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் 'லப்' எனும் ஒலி தோன்றுகிறது.
3.'டப், ஒலி - வென்ட்ரிகுலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் 'டப்' எனும் இரண்டாவது ஒளி தோன்றுகிறது.
97.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
98.
1.கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாதது.
2. நிலவாழ் தாவரங்களாக இருப்பினும் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் தாவர பெரும்பிரிவுன் "நீர்நில வாழ்வன" என்று அழைக்கப்படுகிறது.
3. ஆந்திரீடியங்களில் உருவாகும் இரு கசையிழைகாளைக் கொண்ட நகரும் ஆண் கேமீட்கள் மெல்லிய நீர் மென்படலத்தில் நீந்தி ஆர்க்கிகோனியத்தை அடைந்து முட்டையுடன் இணைந்து இரட்டைமடிய கருமுட்டையை உருவாக்குகின்றது.
99.
i) பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறை.
ii) அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
iii) லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
iv) எனவே, லெகும் வகை தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்திகின்றன.
v) ஆகவே, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகிறார்கள்.
100.
1. கடல் வாழ் மீன்களாகும்
2. அகச் சட்டகங்கள் குருத்தெழும்பினால் ஆனவை.
3. வாழ்நாள் முழுமையும் முதுகுநாணை கொண்டுள்ளன.
4. புறப்படலத்திலிருந்து உருவான பிளகாய்டு செதில்கள் போர்த்தப்பட்ட கடினமான தோல் காணபிபடுகிறது.
5. அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மையுடைய ஹெட்டிராசெர்க்கல் (heterocercal) வால்துடுப்பு காணப்படுகிறது.
6. ஆற்றல் மிக்க, தாடைகளைக் கொண்ட இவை, கொன்றுண்ணி விலங்குகள் ஆகும்.
7. இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது.. இவ்விலங்குகளுக்கு செவுள் மூடி கிடையாது.
8. ஈரறை இதயத்தினையும், மீசோநெஃப்ரிக் வகை சிறுநீரகத்தை உடைய கழிவுநீக்க மண்டலத்தையும் கொண்டவை
9. யூரியாவைக் கழிவுப்பொருளாக வெளியேற்றக் கூடிய இவ்வகை மீன்கள், உடல் திரவத்தின் ஊடுகலப்பு அடர்த்தியின் சமநிலையைப் பராமரிப்பதற்காகத் தம் இரத்தத்தில் யூரியாவைச் சேமிக்கக் கூடியவை.
10. இவை அனைத்தும் குட்டியீனக்கூடிய, உடல் வெப்பம் மாறும் விலங்குகள் ஆகும். ஆண், பெண் உயிரிகள் தனித்தனியானவை. இதில் ஆண் மீன்களின் இடுப்பு துடுப்பில், அகக் கருவுதலுக்கு உதவ, புணர் உறுப்பு காணப்படுகிறது.
101.
1.பாசிகள் அளவு, வடிவம், அமைப்பு ஆகியவற்றில் பெரிதும் வேறுபட்டு காணப்படுகிறது.(ஒரு செல்,பல செல்,காலனி சூழல், இழை, இரு வடிவ உடலம், வட்டு வடிவம், இலை வடிவம், இராட்சச கடல் பாசி)
2.நீலப்பசும் பாசிகளைத் தவிர பிற பாசிகள் மெய்யுட் கரு உயிரிகள்.
3.உடலத்தில் திசுத்தொகுப்பு வேறுபாடு காணப்படுவதில்லை.
4.செல்சுவர் செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோசால் ஆனது.
5. டயாட்டம்களில் செல்சுவர் சிலிகாவால் ஆனது.
6.கேராவின் உடலம் கால்சியம் கார்பனேட்டால் சுழப்பட்டுள்ளது.
7.செல்சவ்வினால் சூழப்பட்டுள்ள உட்கரு, பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியங்கள், எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள் போன்றவை காணப்படுகின்றன.
8.பைரினாய்டுகள் காணப்படுகின்றன.
9. பாசிகள் உடல், பாலிலா பால் இனப் பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கிறது.
10.உடல இனப்பெருக்கமானது, இரு பிளவுறுதல், துண்டாதல், மொட்டு விடுதல், சிறுகுமிழ் மொட்டுகள், உறக்க நகராவித்து கிழங்குகள் மூலம் நடைபெறுகிறது.
11. பாலிலா இனப்பெருக்கமானது, இயங்குவித்துக்கள், நகராவித்து, சுயவித்து மூலம் நடைபெறுகிறது.
12. பால் இனப்பெருக்கம், ஒத்த கேமீட்டுகளின் இணைவு, சமமற்ற கேமீட்களின் இணைவு, மற்றும் முட்டை கருவுருதல் முறை மூலம் நடைபெறுகிறது.
13. வாழ்க்கைச் சுழற்சி தெளிவான சந்ததி மாற்றத்தைக் கொண்டுள்ளது.
102.

103.
1. கரப்பான் பூச்சியின் சுவாசம் பல கிளைகளைக் கொண்ட மூச்சுக்குழல் மூலம் நடைபெறுகிறது.
2. மூச்சுக்குழல்கள் உடலின் பக்கவாட்டில் உள்ள 10 துளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
3. இத்துளைகளுக்கு ஸ்பைரக்கிள்கள் (அ) ஸ்டிக்மேட்டா (அ) சுவாசத்துளைகள் என்று பெயர்.
4. இந்த சுவாசத்துளைகளை திறக்கவும், மூடவும் வால்வுகள் உண்டு.
5. இவ்வால்வுகள் சுருக்கத்தசைகள் இயக்குகின்றன.
6. மூச்சுக்குழல்கள் பல கிளைகளாக பிரிந்து சிறு நுண்குழல்களாக மாற்றம் அடைகிறது.
7. அவற்றிற்கு மூச்சு நுண்குழல்கள் (அ) ட்ரக்கியோல்கள் என்னு பெயர்.
8. ட்ரக்கியோல்கள் முழுவதும் நிறமற்ற திரவத்தினால் (ஹீமோலிம்ப்) நிரப்பட்டுள்ளது.
9. இத்திரவத்தின் வழியாக காற்று பரிமாற்றம் நடைபெறுகிறது.
10. உடல் தசைகள் அதிகமாக செயல்படும்பொழுது தசைகளின் O2 தேவையை ஈடுசெய்வதற்காக இத்திரவம் திசுக்களுடன் செல்வதால் O2 விரலால் துரிதமாக நடைபெறுகிறது.
104.
தனிச் சதைக்கனி(simple fleshy fruit): ஒற்றைமலரின் ஒரு சூலகப்பையிலிருந்து உருவாகும் கனியாகும். இவற்றின் கனித்தோல் சதைப்பற்றுடன் சாறு நிறைந்தும் காணப்படுகிறது. கனித்தோல், வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலும் இது கீழ்க்கண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ) சதைக்கனி(Berry) :
1. இக்கனி இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவதாகும் கனியாகும்.
2. கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோல் மற்றும் உட்தோல் வேறுபாடற்றும் காணப்படும்.
3. இவைகள் சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
4. இதில் விதைகள் புதைந்து காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: தக்காளி, பேரிச்சை, திராட்சை, கத்தரி.
ஆ) உள்ஒட்டுச் சதைக்கனி |(Drupe):
1.இக்கனி ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல் மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகிறது.
2. இவை பொதுவாக ஒரு விதை கொண்ட கனியாகும்.
3. இக்கனித்தோலின் வெளித்தோல் இறுக்கமான தோல் போன்றும், நடுத்தோல் சதைப்பற்றுடன் சாறு நிறைந்தும், உட்தோல் கல் போன்று கடினமாகி விதையைச் சூழ்ந்தும் காணப்படுகிறது.
இ) வெளிஒட்டுச் சதைக்கனி (pepo):
1. இக்கனி கீழ்மட்டச் சூலகப்பையின் இணைந்த மூன்று சூலக இலை சூலகத்திலிருந்து உருவாகிறது.
2. கனித்தோல் தோல்போன்றோ அல்லது கடினத்தன்மைபெற்றோ, சதைப்பற்றுடன் கூடிய நடுத்தோலையும், மென்மையான உட்தோலையும் சூழ்ந்து காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: வெள்ளரி, தர்பூசணி, சுரைக்காய், பூசணி.
ஈ) எலுமிச்சை வகைக்கனி(Hesperidium):
1.இக்கனி இணைந்த பல சூலக இலைகளையும், பல சூலக அறைகளையும் கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகிறது.
2.இதன் கனியுறை எண்ணெய் சுரப்பிகளுடன் கூடிய வெளித்தோலாகவும், நார்த்தன்மையுடன் கூடிய நடுத்தோலாகவும் வேறுபாடடைந்து காணப்படுகிறது.
3. உட்தோல் பல தெளிவான அறைகள் கொண்டும் சதைப்பற்றுள்ள பல சாறு நிறைந்த தூவிப் போன்ற அமைப்புகளால் நிரம்பியும் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: ஆரஞ்சு, எலுமிச்சை.
உ) பொய்க்கனி (pome):
1.இக்கனி கீழ்மட்டச் சூலகப்பையின் இணைந்த பல சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகிறது.
2. இதில் பூத்தளம் சூலகப்பையுடன் இணைந்து கனி உருவாகிறது.
3. இது சதைப்பற்றுள்ளதாக மாறி உண்மைக்கனியை சூழ்ந்து காணப்படும்.
4.கனியின் வெளித்தோல் மெல்லிய தோல் போன்றும், உட்தோல் குருத்தெலும்பு போன்றும் காணப்படும்.
எடுத்துக்காட்டு: ஆப்பிள், பேரி.
ஊ) பலாஸ்டா(Balausta):
1.இது ஒரு சதைப்பற்றுள்ள வெடியாக்கனியாகும்.
2. இது இணைந்த பல சூலக இலைகளையும், பல சூலக அறைகளையும் கொண்ட கீழ்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகிறது.
3. ஏதன் கன்னித்தோல் கடினமாகவும், தோல் போன்றும் காணப்படும்.
4. விதைகள் ஒழுங்கற்ற முறையில் ஒட்டி காணப்படுகின்றன.
5. விதைகளின் வெளியூரை (டெஸ்டா) உண்ணும் பகுதியாகும்.
எடுத்துக்க்காட்டு: மாதுளை.
105.
பல்பருவ அல்லது இருபருவச் செடிகள் தரைகீழ் தண்டுகளைப் பெற்றிருக்கும். இவற்றை வேர் முனைத் தண்டு (Root stock) என்று அழைப்பார். வீரமுனைத் தண்டானது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பாகச் செயல்படுகிறது. இத்தண்டு சாதகமற்ற சூழ்நிலைகளில் பூமியின் கீழ் உயிருடன் இருக்கும். பின் சாதகமான சூழ்நிலைகளில் மீண்டும் வளரும். தரைக்கீழ் தண்டுகள் கணுக்கள், கணுவிடைப் பகுதிகள், செதில்கள் இலைகள் மற்றும் மொட்டுக்களைக் கொண்டிருப்பதால் இவை வேர்கள் அல்ல. வேர்முனைத்தண்டில் வேர் மூடியும் வேர்த் தூவியும் இல்லாமல் நுனி மொட்டுக்களைப் பெற்றிருப்பதால் அவை தண்டாகவே கருதப்படும்.
1. குமிழம் (Bulb): இவை சதைபற்றுள்ள செதில் இலைகளால் சூழப்பட்ட குறிக்கப்பட்ட கூம்பு அல்லது குவிந்த வடிவமுடைய தரைகீழ் தண்டாகும். இவை இரண்டு வகைப்படும்.

(i) உறையுடை குமிழ்தண்டு (Tunicated (coated) bulb):
இவ்வகையில் தண்டானது மிகவும் குறுகியும், வளையம் போன்ற பல அடுக்குகளாலான செதில் இலைகளாலும் சூழப்பட்டிருக்கும். இவை இரண்டு வகைப்படும்.
அ) சாதாரண உறையுடைய குமிழம்
எ.கா: அலியம் சீபா (வெங்காயம்)
ஆ) கூட்டு உறையுடைய குமிழம்,
எ.கா: அலியம் சட்டைவம் (பூண்டு)
(iii) உறையற்ற குமிழம், ஓரங்களில் மட்டும் ஒன்றையொன்று தழுவி காணப்படும் குமிழங்களாகும்.
எ.கா: டுலிபா சிற்றினம்

பொய்க்குமிழம் (Pseudo bulb):
இவை சேமிப்பிற்காகவோ இனப்பெருக்கத்திற்காகவோ நிலத்தின் மேல் பகுதியில் தோன்றும் சிறிய, நிமிர்ந்த தண்டுகளாகும். இந்தப் பொய்க் குமிழங்கள் குறிப்பிட்ட சில தொற்றி வாழும் ஆர்க்கிடுகளிலும், தரைவாழ் ஆர்க்கிடுகளிலும் காணப்படுகின்றன.
எ.கா: பல்போஃபில்லம்
2. கந்தம் (Corm):
இவை நேராக வளரும் நுனியை கொண்ட சதைபற்றுள்ள தரைகீழ் தண்டாகும். கந்தமானது செதில் இலைகளால் சூழப்பட்டு கணுக்களையும் கணுவிடைப் பகுதிகளையும் கொண்டிருக்கும். எ.கா: அமார்ஃபோஃபேலஸ், கிளாடியோலஸ் கொலகேசியா குரோகஸ் கால்சியம்.

3. மட்டநிலத்தண்டு (Rhizome):
இவை கிடைமட்டமாக வளரும் பல பக்கவாட்டு வளர் நுனிகளைக் கொண்ட தரைகீழ் தண்டாகும். இவை செதில் இலைகளால் சூழப்பட்ட மிகத் தெளிவாகத் தெரியும் கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் கொண்டுள்ளன. எ.கா> ஜிஞ்சிஃபெர் அஃபிசினாசியா, நிம்ஃபயா (தாமரை), நிலம்போ (அல்லி)
4. கிழங்கு (Tuber): இவை சதைப்பற்றுடைய கோள அல்லது உருளை வடிவம் கொண்டால் தரைக்கீழ் தண்டாகும். இவற்றில் பல கோண மொட்டுகள் அமிழ்ந்து காணபப்டுகின்றன. இக்கோண மொட்டுகளுக்கு 'கண்கள்' என்று பெயர்.எ.கா: சொலானம் டியூபரோசம் (உருளைக்கிழங்கு), ஹீலியாந்தஸ் டியூபரோசஸ்

106.
| பாரம்பரிய வகைப்பாடு | நவீன பாரம்பரிய |
|---|---|
| இது பழைய வகைப்பாடு அல்லது (a) வகைப்பாடு என அழைக்கப்டுகிறது | இது புதிய வகைப்பாடு முறை (neo -systematic ) அல்லது உயிரிய முறைமை (bio systematic ) அல்லது ஒமேகா வகைப்பாடு என்று அழைக்கப்டுகிறது. |
| இது டாரவினுக்கு முந்தைய காலம் | இது டாரவினுக்கு பிந்தைய காலம் |
| அடிப்படை அலகனா சிற்றினகள் நிலையானவையாகத் கருதப்படுகின்றன | புறப்பண்புகளுடன் இனபெருக்க ப் பண்புகளையும் மூலக்கூறு தரவுகள் மற்றும் பரிணாம உறவுகளின் அடிப்படையி ல் அமைந்தது |
| இது குறிப்பிட்ட சில மாதிரிகளின் கூர்நோக்கு அடிப்படையில் அமைந்தது | இது பெருமளவு மாதிரிகளின் கூர்நோக்கு அடிப்படையில் அமைந்தது |
107.
108.

109.
1.T4 ஃபாஜ்கள் தலைப்பிரட்டை வடிவம் கொண்டவை.
2.இவை தலை (head), கழுத்துப்பட்டை (collar), வால் (tail), அடித்தட்டு(basal plate), வால் நார்கள் (tail fibres) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
3.அறுங்கோண வடிவம் கொண்ட தலைப்பகுதி 2000 ஒத்த புரதத்துணை அலகுகளால் ஆனது.நீண்ட சுருள் வடிவத்தைக் கொண்ட வாலின் மையப்பகுதி உள்ளீடற்றது.
4.இது தலையுடன் கழுத்துப்பட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.வாலின் முடிவுப்பகுதியில் அடித்தட்டு இணைந்துள்ளது.அடித்தட்டு ஆறு வால் நார்களையும் , ஆறு முட்டைகளையும் (spikes) பெற்றுள்ளது.
5.இத்தகைய, நார்கள் பெருக்கச் சுழற்சியின்போது ஓம்புயிரி பாக்டீரிய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன.
6.தலைப்பகுதியில் 50μm அளவுடைய ஈரிழை DNA மூலக்கூறு இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ளது.ஃபாஜின் நீளத்தை விட அதன் DNA மூலக்கூறின் நீளம் 1000 மடங்கு அதிகமாகும்.
110.
1. இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப்படலத்தில் இருக்கும் அல்லது இல்லாத ஆன்டிஜென்களின் அடைப்படையில் A, B, AB, மற்றும் O என நான்கு வகைகளாக இரத்தம் வகைப்படுத்தப்படுகிறது.
2. A, B, AB, மற்றும் O என பிரிவு மனிதர்களின் இரத்தப் பிளாஸ்மாவில் இயற்கையாகவே எதிர்வினைப் பொருட்கள் உள்ளன.
3. சிவப்பணுவின் மேற்புறப் படலத்தில் உள்ள ஆன்டிஜென்களுக்கு அக்ளுட்டினோஜன்கள் என்று பெயர்.
4. அக்ளுட்டினோஜன் A மீது செயல்படும் எதிர்வினைப் பொருட்களுக்கு ஆன்டி A எதிர் பொருள் என்றும் அக்ளுட்டினோஜன் B மீது செயல்படுபவை ஆன்டி B எதிர் பொருள் எனவும் அழைக்கப்படுகிறது.
5. O வகுப்பு இரத்தத்தில் எந்த ஒரு அக்ளுட்டினோஜனும் காணப்படுவதில்லை.
6. AB வகுப்பு இரத்தத்தில் அக்ளுட்டினோஜன் A மற்றும் அக்ளுட்டினோஜன் B ஆகிய இரண்டும் உள்ளன.
7. ஆனால் ஆன்டி A மற்றும் பB எதிர்வினைப் பொருட்கள் காணப்படுவதில்லை.
8. ABO இரத்த வகுப்பு முறையில் A, B, மற்றும் O என அல்லீலிக் ஜின்கள் உள்ளன.
9. அனைத்து வகை அக்ளுட்டினோஜன்களும் சுக்ரோஸ், D - காலக்டோஸ், N - அசிட்டைல் குளுகோஸாமைன் மற்றும் 11 அமினோ அமிலங்கள் ஆகிய பொருட்களைக் கொண்டுள்ளன.
10. முனை அமினோ அமிலங்கள்இணைவு என்பது அதில் உள்ள A மற்றும் பி ஜீன்களின் உற்பத்திப் பொருட்களைச் சார்ந்துள்ளது.
11. இவ்வினையில் கிளைக்கோஸில் டிரான்ஸ்பெரேஸ் என்னு, நொதி வினையூக்கியாகச் செயல்படுகிறது.
| இரத்த வகுப்பு | இரத்தச் சிவப்பணுக்களில் காணப்படும் அக்ளுட்டினோஜன்கள் (ஆன்டி ஜன்கள்) | பிளாஸ்மாவில் காணப்படும் அக்ளுட்டினின்கள்(ஆண்டிபாடி ) |
| A | A | ஆன்டி B |
| B | B | ஆன்டி A |
| AB | AB | ஆன்டிபாடிகள் இல்லை |
| O | ஆன்டிஜன் இல்லை | ஆன்டி A மற்றும் ஆன்டி B |
111.
| ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டின் ஒப்பீடு | |||||
|---|---|---|---|---|---|
| பண்புகள் | மொனிரா | புரோட்டிஸ்டா | பூஞ்சைகள் | பிளாண்டே | அனிமெலியா |
| செல்லின் தன்மை | தொல்லுட்கரு உயிரிகள் Prokaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic |
| உடல் அமைப்பு | ஒரு செல் உயிரினங்கள் | ஒரு செல் உயிரினங்கள் | ஒரு செல்பலசெல் உயிரினங்கள் | திசு அல்லது உறுப்புகள் கொண்டவை | திசுக்கள் உறுப்பு / உறுப்பு மண்டலங்கள் கொண்டவை |
| செல் சுவர் | செல் சுவர் உண்டு (பெப்டிடோ கிளைக்கான் மியுகோபெப் டைட்களால் ஆனது) | ஒரு சில உயிரினங்களில் செல் சுவர் உண்டு.(செல்லுலோஸ் ஆனது)சில உயிரினங்களில் செல் சுவர் காணப்படுவதில்லை | செல் சுவர் உண்டு (செல்லுலோஸ் அல்லது கைட்டினால் ஆனது) | பொதுவாக செல் சுவர் உண்டு (செல்லுலோஸ் ஆனது) | செல் சுவர் இல்லை |
| உணவூட்ட முறை | தற்சார்பு ஊட்ட முறை (ஒளிச்சார்பு வேதிச்சார்பு) சார்பூட்ட ஊட்டமுறை (ஒட்டுண்ணிகள்,சாற்றுண்ணிகள்) |
தற்சார்பு ஊட்டமுறை (ஒளிச்சார்பு,பிறசார்பு) | சார்பூட்ட முறை(ஒட்டுண்ணிகள்,சாற்றுண்ணிகள்) | தற்சார்பு ஊட்ட முறை(ஒளிச்சார்பு) | சார்பூட்ட முறை (விழங்கூட்ட உயிரினங்கள்) |
| இடப் பெயர்ச்சி அடையும் திறன் | இடப்பெயர்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை |
இடப்பெயர்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை | இடப்பெயர்ச்சி திறன் அற்றவை | பெரும்பாலும் இடப்பெயர்ச்சி திறன் அற்றவை | இடப்பெயர்ச்சி திறன் உடைவை |
| எடுத்துக்காட்டு உயிரினங்கள் | ஆர்க்கிபாக்டீரியா,யூபாக்டீரியா, சயனோஃபாக்டீரியா, ஆக்டினோமை சீட்கள், மைக்கோ பிளாஸ்மா |
கிரைசோபைட்கள்,டைனோபிளா, ஜெல்லேட்கள் சளி,பூஞ்சைகள், அமீபா,பிளாஸ்மோடியம், டிரைபனோசோமோ,பாரமீசியம் |
ஈஸ்ட்கள்,காளான்கள், இதர பூஞ்சைகள் |
பாசிகள்,பிரையோ ஃபைட்கள்,டெரிடொஃபைட்கள், ஜிம்னோஸ்,பெர்ம்கள்,ஆஞ்சியோஸ் பெர்ம்கள் |
கடற்பஞ்சுகள்,முதுகெலும்பு அற்றவை.முதுகெலும்பு உடையவை. |
ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டின் நிறைகள்
1.இந்த வகைப்பாடு சிக்கலான செல் அமைப்பு,உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
2.உணவூட்டமுறையின் அடிப்படையில் இவ்வகைப்பாடு அமைந்துள்ளது.
3.பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
4.உயிரினங்களிக்கிடையே காணப்படும் இனப்பரிணாம குழுத்தொடர்பினை எடுத்துக்காட்டுகிறது.
ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டின் குறைகள்
1.தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள்,செல் சுவருடைய,செல் சுவரற்ற உயிரினங்கள் மொணிரா, புரோஸ்டிஸ்டா எனும் பெரும்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.இதனால் இவ்விரண்டு பெரும்பிரிவுகளும் மாற்றுப்படித்தான பண்பை (Heterogenous) பெறுகின்றன.
2.வைரஸ்கள் இந்த வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை.
112.
1. நீண்ட உருளை வடிவ உடல் அமைப்பு கொண்ட இருபக்க சமசீரமைப்பு கொண்டவை.
2. ஃபோர்பைரின் எனும் நிறமியினால் முன் முனைப் பகுதி ஊதா நிறத்துடன் காணப்படும்.
3. உடலில் வரிப் பள்ளங்கள் உண்டு.
4. உடல் கண்டகளால் (மெட்டாமியர்கள்) ஆனது.
5. பெரிஸ்டோமியம், புரோஸ்டோமியம், பைஜிடியம் காணப்படுகிறது.
6. முதிர்ச்சியடைந்த புழுக்களில் கிளைட்டெல்லம் (14 முதல் 17 வது கண்டம்) காணப்படுகிறது.
7. உடலில் இடப்பெயர்ச்சிக்கு சீட்டாக்கள் காணப்படுகிறது.
8. உடற்குழி திரவத்தினால் உடல் ஈரப்பதத்துடன் காணப்படும்.
9. நெஃப்ரிடியத் துளைகள் காணப்படுகிறது.
10. உடலில் காணப்படும் கண்டங்களின் எண்ணிக்கை சுமார் 165 முதல் 190 வரை
113.
| வ.எண் | குருத்தெலும்பு மீன்கள் | எலும்பு மீன்கள் |
|---|---|---|
| 1. | கடலில் வாழும் | கடல்நீர் மற்றும் தண்ணீரில் வாழும். |
| 2. | அகச்சட்டகம் குருத்தெலும்பால் ஆனது | அகச்சட்டகம் எலும்பால் ஆனது |
| 3. | பிளகாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது | கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது. |
| 4. | அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மை | கதிர் வடிவ உடல் அமைப்புடையது |
| 5. | இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. | நான்கு இணை இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. |
| 6. | செவுள்மூடி கிடையாது | செவுள்மூடி உண்டு |
| 7. | கழிவுப் பொருள்-யூரியா | அம்மோனியா |
| 8. | குட்டி ஈனக்கூடியவை | முட்டையிடுபவை |
| 9. | அகக்கருவுருவுதல் நடைபெறுகிறது | புறக்கருவுருவுதல் நடைபெறுகிறது |
| 10. | எ.கா. ஸ்கோலியோடான், ட்ரைகான் | லேபியா (ரோகு) கட்லா |
114.
1. ஒற்றை முதுகுப்புற நரம்புசெல் திரள் காணப்படுகிறது.
2. செவுள் பிளவுகள் மூலம் சுவாசிக்கின்றன.
3. குழல் வடிவ நரம்பு வடம் லார்வாக்களில் காணப்படுகிறது.
4. லார்வாக்களின் வால் மட்டும் முதுகுநாண் பெற்றுள்ளது.
5. முழுமையான செரிமான மண்டலம் உள்ளது.
6. குழல் வடிவ வயிற்றுப்புற இதயத்தைப் பெற்றுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards