11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
+1 Second Revision Test 2019
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?
சொத்துக்களுடன்
பொறுப்புகளுடன்
சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன்
சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்
2.
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________
மக்கள் தொகை கட்டுப்பாடு
நாடுகள் பெருக்கம்
இயற்கைச் சீரழிவுகள்
பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்
3.
ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு.
ரூ 8,000
ரூ 8,500
ரூ 500
ரூ 16,500
4.
கீழ்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைக் குறிப்பிடுக.
முழுவிடு
தூக்கி எழுதுதல் பிழை
கூட்டல் பிழை
கழித்தல் பிழை
5.
ஆள்சார் கணக்குகள் மற்றும் சொத்துக் கணக்குகளின் இருப்புகள் காட்டப்படுவது _________.
இலாப நட்டக் கணக்கு
வியாபாரக் கணக்கு
இருப்பு நிலை அறிக்கை
இவை எதுவுமில்லை
6.
_______ கணினி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கையால் எழுதும் கணக்கியல் முறை,படிப்படியாக மாற்றப்பட்டுள்ளது.
அறிவியலில்
வணிகத்தில்
பொருளாதாரத்தில்
இவை எதுவுமில்லை
7.
பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்?
பற்றுப் பக்கத்தில்
பொறுப்புக்கள் பக்கத்தில்
சொத்துக்கள் பக்கத்தில்
இவை எதுவுமில்லை
8.
நிகர இலாபம்.
முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
9.
பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
உள்ளீட்டு அலகு
வெளியீட்டு அலகு
தரவு
மையச் செயல்பாட்டு அலகு
10.
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
கொள்முதலோடு கூட்டப்படும்
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
முதலோடு கூட்டப்படும்
முதலிலிருந்து கழிக்கப்படும்
11.
12.
கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?
கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
நரேந்திரனால் சரசரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது
13.
பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது
பொறி மற்றும் பொறி இயந்திரம்
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
கட்டடங்கள்
வணிகக்குறி
14.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
16.
பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
இருப்பு முறை
மொத்தத் தொகை முறை
மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
18.
இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு
முக்கியத்துவ மரபு
பண மதிப்பீட்டுக் கருத்து
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு / கருத்து
19.
சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?
பேரேட்டில் விற்பனைக் கணக்கு
பேரேட்டில் கொள்முதல் கணக்கு
பேரேட்டில் முதல் கணக்கு
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
20.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
21.
தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?
22.
"உண்மை ஆதாரக் கருத்தது" - குறிப்பு வரைக.
23.
சான்றுச் சீட்டு என்றால் என்ன?
24.
கணினி என்றால் என்ன?
25.
இருப்பாய்வு தயாரித்தபின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) கொள்முதல் ஏட்டில் ரூ.900 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) பழைய அறைகலன் விற்றது ரூ.1,000 விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
(இ) அருளிடமிருந்து கடனுக்கு ரூ.1,500 க்கு சரக்கு வாங்கியது ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை
26.
ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 - ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 1, 2015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்
27.
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
28.
விற்பனை ஏடு என்றால் என்ன?
29.
விடுபட்ட பகுதிகளை நிரப்புக:
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | ? |
| (ஆ) | 60,000 | 25,000 | ? |
| (இ) | ? | 25,000 | 30,000 |
| (ஈ) | ? | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | ? | 15,000 |
| (ஊ) | 40,000 | ? | 30,000 |
30.
ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?
31.
கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.
32.
இறுதிப் பதிவுகள் என்றால் என்ன? அவை ஏன் பதிவு செய்யப்படுகின்றன?
33.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
34.
ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை 2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
(இ) ரொக்க ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
(ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
35.
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
1.1.2018 அன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் வாங்கியது ரூ. 38,000
1.1.2018 அன்று பழுது பார்த்தல் செலவு செய்தது ரூ. 12,000
இயந்திரத்தின் எதிர் நோக்கும் பயனளிப்பு காலம்: 4 ஆண்டுகள்
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 6,000
36.
இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?
37.
இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
38.
பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
39.
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
| (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 60,000 |
| (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ 20,000 |
| (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது | ரூ 15,000 |
| (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது | ரூ 500 |
40.
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
41.
கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.
| அ] | ரொக்கக் க/கு | ப |
| அறைகலன் க/கு | ||
| ஆ] | வாடகை க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| இ] | வங்கி க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| ஈ) | தமிழ்ச் செல்வி க/கு | ப |
| விற்பனை க/கு |
42.
திரு.சீனிவாசன் அவர்களின் ஏடுகளில் வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
| நாள் | விவரம் | ரூ | நாள் | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2003 பிப்.1 | இரும்பு கீ/கொ | 22,148 | 2003 பிப்.3 | மணி | 2,822 |
| 18 | குமார் | 12,000 | 15 | கிரி | 750 |
| 19 | விற்பனை [ராம்] | 200 | 20 | சிதம்பரம் | 87 |
| 28 | பாலு | 8,345 | 20 | கொள்முதல்[பத்மா] | 182 |
| 28 | கழிவு[பாபு] | 810 | 26 | சம்பளம்[சோமு] | 150 |
| வெங்கடேசன் | 3,412 | 26 | சுந்தரம் | 8,820 | |
| 28 | ரங்கன் | 2,346 | |||
| இருப்பு கீ/இ | 31,758 | ||||
| 46,915 | 46,915 |
| நாள் | விவரம் | பற்று எடுப்புகள் ரூ |
வரவு வைப்புகள் ரூ |
இருப்பு/பற்று வரவு |
|---|---|---|---|---|
| 2003 பிப்.1 | இருப்பு கீ/கொ | 22,148 | ||
| 4 | மணி | 2,822 | 19,326 | |
| 16 | கிரி | 750 | 18,576 | |
| 19 | குமார் | 12,000 | 30,576 | |
| 20 | ராம் | 200 | ||
| 20 | சிதம்பரம் | 87 | ||
| 20 | பத்மா | 182 | 30,567 | |
| 26 | சோமு | 150 | 30,357 | |
| 28 | காப்பீடு கட்டணம் | 92 | ||
| செ.மா.சீட்டு | 2,500 | |||
| பாபு | 810 | |||
| முத்து | 1,200 | |||
| வட்டி | 32 | |||
| முதலீடு மீது வட்டி | 135 | |||
| பெ.மா.சீட்டு | 750 | 30,692 |
43.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2016 ஆம் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விபரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த நட்டம் | 60,000 | அச்சு மற்றும் எழுது பொருள் (அலுவலகம்) | 2,000 |
| விற்பனை மேம்பாட்டிற்கான செலவுகள் | 5,000 | சட்டச் செலவுகள் | 5,000 |
| வழங்கல் செலவுகள் | 15,000 | வாராக்கடன் | 1,000 |
| அளித்த கழிவு | 7,000 | தேய்மானம் | 2,000 |
| கடன் மீதான வட்டி செலுத்தியது | 5,000 | வாடகை பெற்றது | 4,000 |
| கட்டுமச் செலவுகள் (விற்பனை மீது) | 4,000 | காப்பீட்டிற்கு உட்படாத, தீயினால் ஏற்பட்ட நட்டம் |
4,000 |
| பங்காதாயம் பெற்றது | 3,000 | ஏற்பட்ட நட்டம் | 3,000 |
44.
2016, டிசம்பர் 31ஆம் நாளைய இருப்பாய்வின் ஒருபகுதி கீழே தரப்பட்டுள்ளது.
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| வாராக்கடன் போக்கெழுதியது | 1,800 | |
| தள்ளுபடி அளித்தது | 600 | |
| பற்பல கடனாளிகள் | 20,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 1,500 | |
| கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு | 500 |
பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்கவும். இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
45.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம்
i) CONCATENATE செயற்கூற்றைக் கொண்டு B3 ல் முகவரியை நிரப்பவும்.
ii) C2 வில் கொடுக்கப்பட்டுள்ள KAMARAJAR SALAI என்பதனை C3 ல் சிறிய எழுத்துக்களாக மாற்றவும்
iii) D2வில் கொடுக்கப் பட்டுள்ள Chennai என்பதனை D3ல் பெரிய எழுத்துக்களாக மாற்றவும்.
46.
பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை
47.
48.
பின்வரும் செலவினங்களை முதலினம், வருவாயினம், நீள்பயன் வருவாயினச் செலவினங்களாக, வகைப்படுத்தவும்.
(i) மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு.
(ii) கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம்.
(iii) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு.
49.
ராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.
| 2018 மார்ச் 1 | செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.9,000 |
| 5 | முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது | 4,500 |
| 9 | ரொக்க விற்பனை | 6,000 |
| 18 | மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது | 3,200 |
| 23 | முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு அவரிடமிருந்து தொகை பெறப்பட்டது |
4,000 |
50.
தீபக் எழுதுபொருள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் 2018 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பின்வருமாறு இருந்தன. அவைகளை குறிப்பேட்டில் பதிவு செய்க.
| ஜனவரி | ரூ | |
| 1 | றோக்கத்துடன் வியாபாரம் தொடங்கியது | 2,00,000 |
| 2 | வங்கியில் கணக்கு ஆரம்பித்து, பணம் செலுத்தியது | 1,00,000 |
| 3 | பத்மினி நிறுவனத்திற்கு A4 தாள்களை கடனுக்கு விற்பனைச் செய்தது | 60,000 |
| 4 | பத்மினி நிறுவனத்திடமிருந்து மேற்கண்ட தொகைக்கு பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு பெறப்பட்டது | |
| 5 | பத்மினி நிறுவனத்தின் மாற்றுச்சீட் டு வங்கியில் கொடுத்து தள்ளுபடி செய்து பணம் பெறப்பட்டது | 58,000 |
| பிப்ரவரி | ||
| 15 | பத்மினி நிறுவனத்தின் மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது |
51.
2017 டிசம்பர் 31 அன்று வியாபாரி ஒருவர் பெற்ற வங்கி அறிக்கை மேல்வரைப்பற்று ரூ.12,000 எனக் காட்டியது. அதே நாளில் அவரது ரொக்க ஏடானது ரூ.2,000 பற்றிருப்பைக் காட்டியது.
பின்வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து. வேறுபாட்டிற்கான காரணங்களை காண்பிக்கும் வகையில் வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) 2017 டிசம்பர் 21 அன்று வங்கியில் செலுத்திய காசோலை ரூ 2,000, 2017 டிசம்பர் 26 அன்று வரவு வைக்கப்பட்டது.
(ஆ) 2017 டிசம்பர் 26 அன்று விடுத்த காசோலை ரூ 2,500, 2018 டிசம்பர் 31 அன்று வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
(இ) வங்கிக் கட்டணம் ரூ 200 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) இணையம் வழியாக செலுத்திய ரூ 1,500 இரு முறை ரொக்க ஏட்டில் பதியப்பட்டது.
(உ) வங்கியில் செலுத்திய காசோலை ரூ 1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. அக்காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(ஊ) செலுத்திய காசோலை இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ17,800
52.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கொண்டு குமார் எழுதுபொருள் நிறுவனத்தின் ஜூலை 2017 க்குரிய விற்பனை ஏட்டினை தயார் செய்க.
| 2017 | |
| ஜூலை 5 | சாயல்குடி, சரவணா நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனைச் செய்தது |
| 10 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம் | |
| 10 டஜன் எழுது அட்டை, ஒரு டஜன் ரூ. 850 வீதம் | |
| இரண்டிற்கும் 10% தள்ளுபடி அனுமதிக்கவும் | |
| ஜூலை 8 | இராஜாவிற்கு ரொக்கத்திற்கு விற்றது |
| 15 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம் | |
| ஜூலை 20 | முதுகுளத்தூர், மோகனுக்கு விற்றது |
| 5 வெள்ளை அட்டைகள், ஒரு அட்டை ரூ. 2,200 வீதம் | |
| 10 டஜன் எழுது பலகை, ஒரு டஜன் ரூ. 850 வீதம் | |
| ஜூலை 23 | பழைய சிற்றுந்தை நாராயணனுக்கு கடனுக்கு விற்றது ரூ. 5,000 |
| ஜூலை 28 | குமரனுக்கு ரொக்கத்திற்கு விற்றது 15 பெட்டி குறியீட்டு பேனா, ஒரு பெட்டி ரூ. 250 வீதம். |
53.
சித்ரா என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் இருப்புகளின் அடிப்படையில் இருப்பாய்வு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| சரிகட்டப்பட்ட கொள்முதல் | 60,000 | விளம்பரம் | 4,000 |
| வாடகை செலுத்தியது |
2,000 | பொதுச் செலவுகள் | 700 |
| தள்ளுபடி பெற்றது | 1,000 | கழிவு செலுத்தியது | 1,500 |
| உள் தூக்குக் கூலி | 2,700 | முதல் | 40,000 |
| இறுதி சரக்கிருப்பு | 18,600 | விற்பனை | 48,500 |
54.
2017 ஜுன் மாதத்திற்கான பாண்டீஸ்வரி என்பவரின் பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்
| 2017 ஜூன் | ரூ | |
| 1 | ரொக்கத்துடன் வணிகம் தொடங்கியது | 50,000 |
| 8 | வாடகை ரொக்கமாகச் செலுத்தியது | 4,000 |
| 10 | ரொக்கம் செலுத்தி அச்சுப்பொறி வாங்கியது | 7,500 |
| 11 | ரொக்கக் கொள்முதல் | 15,000 |
| 14 | ரொக்க விற்பனை | 10,000 |
| 17 | ரொக்கமாகப் பெற்ற கழிவு | 6,000 |
| 19 | கடன் மீதான வட்டி ரொக்கமாகச் செலுத்தியது | 2,000 |
| 20 | சொந்த செலவுக்கு பணம் எடுத்தது | 3,000 |
| 21 | துரித அஞ்சல் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது | 3,500 |
1.
(d)
சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்
2.
(d)
பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்
3.
(a)
ரூ 8,000
4.
(a)
முழுவிடு
5.
(c)
இருப்பு நிலை அறிக்கை
6.
(b)
வணிகத்தில்
7.
(c)
சொத்துக்கள் பக்கத்தில்
8.
(b)
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
9.
(c)
தரவு
10.
(d)
முதலிலிருந்து கழிக்கப்படும்
11.
(c)
12.
(a)
கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
13.
(b)
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
14.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
(c)
16.
(d)
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
(b)
எடுத்தெழுதுதல்
18.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
19.
(d)
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
20.
(b)
பணியாளர்
21.
1. முந்தைய ஆண்டு விற்பனையாகாமல் எஞ்சியுள்ள சரக்கிருப்பு நடப்பாண்டின் தொடக்கச் சரக்கிருப்பாகும்.புதிதாக தொடங்கப்படும் வணிகத்தில் தொடக்கச் சரக்கிருப்பு இருப்பதில்லை.
2. தொடக்க சர்க்கிருப்பு அந்த ஆண்டில் விற்பனைச் செய்ய்ப்படுவதால் தொடக்கச் சரக்கிருப்பின் அடக்க விலை வியாபராக்கணக்கில் சேர்க்கப்படுகிறது
22.
1. அனைத்து கணக்கியல் நடவடிக்கைகளும் உண்மை ஆதாரங்களே அடிப்படையாக கொண்டே பதிவு செய்யப்படவேண்டும்என்பதை இக்கருத்து வலியுறுத்துகிறது.
2. இது ரொக்க இரசீது, இடாப்பு போன்ற ஆதார ஆவணங்களை உள்ளடக்கியது.
3. இவை கணக்கேடுகளில் பதியப்படும் நடவடிக்கைகளின் உணமைத் தன்மை, துல்லியத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்கின்றன.
23.
ஒரு வியாபார நடவடிக்கை நிகழந்ததற்கான எழுத்து வடிவிலான ஆதாரமே சான்றுச்சீட்டு எனப்படும்.
எ.கா: ரொக்க இரசீது, இடாப்பு, வங்கிச் செலுத்துச் சீட்டு.
24.
(i) கணினி என்பதை ஒரு மின்னணு சாதனம் என்று கூறலாம். இது மூலத் தரவுகளை உள்ளீடாக ஏற்றுக் கொண்டு, அவற்றை செயல்முறைப்படுத்தி, பயனுள்ள தகவல்களாக உருவாக்கி வெளியீடாகத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(ii) இது கணித மற்றும் தர்க்க ரீ தியான செயல்பாடுகளைக், கொடுக்கப்பட்ட நிரல் என்றழைக்கப்படும் கட்டளை தொகுப்புகளின்படி செயல்படுத்தும் திறன் கொண்டதாகும்.
25.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | கொள்முதல் க/கு | ப | 900 | ||
| அனாமத்துக் க/கு | 900 | ||||
| (கொள்முதல் ஏட்டில் ரூ.900 குறைவாக கூட்டப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஆ | விற்பனை க/கு | ப | 1,000 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (பழைய அறைகலன் விற்றது செலவு ரூ.500 விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| இ | கொள்முதல் க/கு | ப | 1,500 | ||
| அருள் க/கு | 1,500 | ||||
| (அருளிடமிருந்து கடனுக்கு ரூ.1,500க்கு சரக்கு வாங்கியது ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை திருத்தியது) |
26.
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 1.04.2015 | வங்கி க/கு | 50,000 | 31.12.2015 | தேய்மானம் க/கு (50,000 x \({30\over 100}\times {9\over 12}\)) | 11,250 |
| 31.12.2015 | இருப்பு கீ/இ | 38,750 | |||
| 50,000 | 50,000 | ||||
| 1.1.2016 | இருப்பு கீ/கொ | 38,750 | 31.12.2016 | தேய்மானம் க/கு (38,750 x \({30\over 100}\)) | 11,625 |
| 31.12.2016 | இருப்பு கீ/இ | 27,125 | |||
| 38,750 | 38,750 | ||||
| 1.1.2017 | இருப்பு கீ/கொ | 27,125 | 31.12.2017 | தேய்மானம் க/கு (27,125 x \({30\over 100}\)) | 8,138 |
| 31.12.2017 | இருப்பு கீ/இ | 18,987 | |||
| 27,125 | 27,125 | ||||
| 1.1.2018 | இருப்பு கீ/கொ | 18,987 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 31.12.2015 | இயந்திரம் க/கு | 11,250 | 31.12.2015 | இலாபநட்டக் க/கு | 11,250 |
| 11,250 | 11,250 | ||||
| 31.12.2016 | இயந்திரம் க/கு | 11,625 | 31.12.2016 | இலாபநட்டக் க/கு | 11,625 |
| 11,625 | 11,625 | ||||
| 31.12.2017 | இயந்திரம் க/கு | 8,138 | 31.12.2017 | இலாபநட்டக் க/கு | 8,138 |
| 8,138 | 8,138 |
27.
(i) வணிகத்தின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் வருவாயின வரவுகளாகும்.
(ii) இது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது. இவ்வாறு பெறப்படும் தொகையானது பொதுவாக சிறிய அளவிலான தொகையாக இருக்கும்.
உதாரணங்கள்
1. சரக்கு விற்பதனால் கிடைக்கும் தொகை
2. முதலீடுகள் மீது பெற்ற வட்டி
28.
1. விற்பனை ஏட்டில் கடனுக்கு விற்கப்படும் சரக்குகள் பதியப்படும். இங்கு சரக்கு என்பது நிறுவனம் வழக்கமாக வாங்கி விற்கும் பொருளையே குறிக்கும்.
2. சரக்குகள் ரொக்கத்திற்கு விற்பனை செய்வது இதில் பதியப்படுவதில்லை.
3. இதைப்போலவே, சொத்துக்களை கடனுக்கு விற்பதுவோ அல்லது ரொக்கத்திற்கு விற்பதுவோ விற்பனை ஏட்டில் இடம் பெறாது.
4. இவ்வேடு விற்பனை நாளேடு, விற்பனைக் குறிப்பேடு, மற்றும் விற்பனைப் பதிவேடு என்றும் அழைக்கப்படுகிறது.
29.
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | 10,000 |
| (ஆ) | 60,000 | 25,000 | 35,000 |
| (இ) | 55,000 | 25,000 | 30,0000 |
| (ஈ) | 90,000 | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | 10,000 | 15,000 |
| (ஊ) | 40,000 | 10,000 | 30,000 |
30.
(1) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னரோ சரியாக தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு கலங்க கூடிய தள்ளுபடி ரொக்கத் தள்ளுபடி ஆகும்.
(2) கடனீந்தோருக்கு தள்ளுபடி அளித்தது (நட்டம்) என்றும் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் கடனாளிக்கு தள்ளுபடி பெற்றது (ஆதாயம்) என்றும் எடுத்துக் கொள்ளப்டுகிறது.
31.
கணக்கியல் சுழலின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) நடவடிக்கைகளை இனம் கண்டு குறிப்பேட்டில் பதிவு செய்தல்:
(1) கணக்கியலின் முதல் படிநிலையானது வணிகத்தின் நிதி நடவடிக்கைகளை அடையாளம் காண்பதாகும்.
(2) அனைத்து பணமதிப்பிலான நடவடிக்கைகள் தோற்றப்பதிவேடுகளில் (குறிப்பேடு) பதிவு செய்யப்படுகிறது.
(ii) எடுத்தெழுதுதல் மற்றும் இருப்புக் கட்டுதல்:
(1) பதிவுகளைக் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு மாற்றுவது எடுத்தெழுதுதல் எனப்படும்.
(2) பதிவுகள் பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தப்பட்டு, பேரேட்டில் ஒவ்வொரு கணக்கிலும் எடுத்தெழுதப்படுகின்றன.
(iii) இருப்பாய்வு தயாரித்தல்:
(1) பேரேட்டு இருப்புகளின் பட்டியல் அதாவது இருப்பாய்வு தயாரித்தல், அடுத்த படிநிலையாகும்.
(2) இருப்பாய்வின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.
(iv) வியாபாரக் கணக்கு தயாரித்தல்:
(1) குறிப்பிட்ட கணக்காண்டிற்குறிய வியாபாரக் கணக்கு தயாரிப்பதே கணக்கியல் சுழலின் அடுத்த படிநிலையாகும்.
(2) அனைத்து நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருவாய்கள் வியாபாரக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன.
(v) இலாப நட்டக் கணக்கு தயாரித்தல்:
(1) குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயார் செய்வது கணக்கியல் சுழலின் அடுத்த படிநிலையாகும்.
(2) மொத்த இலாபத்துடன் அல்லது மொத்த நட்டத்துடன் அனைத்து மறைமுக வருவாய்கள் மற்றும் மறைமுகச் செலவுகள் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன.
(vi) இருப்பு நிலைக்குறிப்பு தயாரித்தல்:
(1) கணக்கியல் சுழலில் இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்வது இறுதி படிநிலையாகும்.
(2) இருப்புநிலைக்குறிப்பு, சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இருப்புகளைக் காட்டும் ஒரு அறிக்கை.
32.
(i) வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்துப் பெயரளவுக் கணக்குகளின் இருப்புகளும் கணக்காண்டின் இறுதிநாளில் முடிக்கப்பட வேண்டும்.
(ii) உரிய குறிப்பேட்டில் தேவையான இறுதிப்பதிவுகள் செய்வதன் மூலம் இது நடைபெறுகிறது. கொள்முதல் கணக்கு பற்று இருப்பையும் கொள்முதல் திருப்பக் கணக்கு வரவு இருப்பையும் கொண்டிருக்கும். கணக்காண்டின் இறுதியில் கொள்முதல் திருப்பக் கணக்கு முடிக்கப்பெற்று கொள்முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
(iii) அதே போன்று, விற்பனைக் கணக்கு வரவு இருப்பையும், விற்பனைதிருப்பக் கணக்கு பற்று இருப்பையும் கொண்டிருக்கும். கணக்காண்டின் இறுதியில் விற்பனைத் திருப்பக் கணக்கு முடிக்கப்பெற்று விற்பனை கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
33.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
34.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 12,000 | |
| கூட்டுக: காசோலை புத்தகத்திற்கான கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்பட்டவில்லை | 200 | |
| பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம் வங்கியால் பற்று வைக்கப்பட்டது | 1,000 | 1,200 |
| 13,200 | ||
| கழிக்க: வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட பங்காதாயம் | 3,000 | |
| விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 7,000 | |
| ரொக்க ஏட்டின் பற்றிருப்பு தவறுதலாக வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது | 8,200 | 18,200 |
| வங்கி அறிக்கையின் படி சாதகமான இருப்பு | -5,000 |
35.
மொத்த அடக்கவிலை =அடக்கவிலை + நிறுவுவதற்கான செலவுகள்
=ரூ. 38000+ரூ. 12000=ரூ. 50000

\(={50000-6000\over 4}\)
\(={44000\over 4}\)=ரூ. 11,000

\(={11000\over 50000}\times 100=\) 22%
36.
சில பிழைகள் இருப்பாய்வு சமன்படுவதை பாதிக்கும். அவ்வாறான பிழைகள், கணக்கு ஏடுகளில் நிகழ்ந்தால் பற்று இருப்புகளின் கூட்டுத்தொகையும் வரவு உறுப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்காது. இருபாய்வு சமநிலை பெறாது. பகுதி விடுப்பிழையும் செய்பிழையும் இருபாய்வு சமன்பாடுவதை பாதிக்கும்.
அவ்வாறான பிழைகளின் உதாரணங்கள் பின்வருமாறு
1. குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு பேரேட்டில் ஒரு கணக்கில் எழுதப்பட்டு மற்றொரு கணக்கில் எடுத்தெழுதப்படாமல் உள்ளது.
2. பேரேட்டில் எடுத்தெழுதும் போது கணக்கின் தவறான பக்கத்தில் எழுதுதல்
3. பேரேட்டுக் கணக்கில் இருமுறை எடுத்தெழுதுதல்
4. துணை ஏட்டில் அதிகமாக கூட்டுவது அல்லது குறைவாகக் கூட்டுவது.|
5. பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையை சரியான பக்கத்தில் எடுத்தெழுதுதல்.
6. பேரேட்டுக் கணக்கிலோ அல்லது துணை ஏட்டிலோ ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் பொது தவறான தொகையை எழுதுதல்
7. பேரேட்டுக் கணக்கை இருப்புக் காட்டும் போது நிகழும் பிழைகள்
8. துணை எதிலிருந்து பேரேட்டுக் கணக்கில் எடுத்து எழுதத் தவறுதல்.
37.
(i) கணக்கீட்டின் சரித்தன்மையை பரிசோதனை செய்ய உதவுகிறது.
இருபாய்வு என்பது கணக்கீடுகள் பராமரிப்பு பணியில் கணக்கீட்டின் சரித்தன்மையை சரிபார்க்க உதவும் ஒரு வழிமுறையாகும்.
(ii) இறுதி கணக்குகளை தயாரிக்க அடிப்படையாக உள்ளது
இருபாய்விலிருந்து எடுக்கப்பட்ட பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை அறிக்கைகளான வியாபார மற்றும் இலாப நட்டக்கணக்குகளையும் மற்றும் இருப்புநிலைக்குறியையும் தயாரிக்க முடியும்.
(iii) பிழைகளை கண்டுபிடிக்க உதவுகிறது
இருபாய்வு சமன்படாவிட்டால் அது கணக்கீடுகளில் பிழைகள் நேர்ந்திருக்கும் என்பதனை உணர்த்தும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணையால் செயல்முறை நிலைகளில் பிழைகள் ஏற்பைருக்கலாம். எனவே, அப்பிழைகளை கண்டறிந்து அவை இறுதிக்கு கணக்குகளை தயாரிக்கும் முன்பு சரி செய்யப்பட வேண்டும்.
(iv) பேரேட்டுக் கணக்குகள் குறித்த தகவல்களை சுருக்கமாக தருகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் தொகுப்பை இருபாய்வு காட்டுகிறது ஒரு குறிப்பிட்ட கணக்கின் முழுவிவரங்களையும் அறிய வேண்டுமானால் பேரேட்டுக் கணக்குகளை தன பார்க்க வேண்டும்.
38.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
பேரேட்டின் பயன்பாடுகள்:
(i) ஒரு குறிப்பிட்ட கொள்முதல், இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்பந்தமான அணைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
(ii) வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
பேரெடுக்க கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து கணக்குகளின் இருப்புகளையு முழுவதுமாக பகுப்பாய்வு சியா முடியும். அதன்மூலம்வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.
(iii) இருப்பாய்வு தயாரிக்க முடிகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளையு கொண்டு இருபாய்வு தயாரிக்க முடியும். அதன் வாயிலாக குறிப்பேடு மற்றும் பேரேட்டில் உள்ள கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை அறிய முடிகிறது.
(iv) நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவுகிறது
பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை கொண்டு நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்க முடியும். அதன் மூலம் வணிகத்தின் நிகர இலாபம் அல்லது நட்டத்தையும் மற்றும் வணிகத்தின் நிதிநிலைமையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
39.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
||
|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +60,000 | +60,000 | ||
| சமன்பாடு | +60,000 | = | +60,000 | |
| (ii) ரொக்கக் கொள்முதல் | +20,000 | +20,000 | ||
| சமன்பாடு | +40,000 | +20,000 | = | +60,000 |
| (iii) ரொக்க விற்பனை | +15,000 | -10,000 | +5,000 | |
| சமன்பாடு | +55,000 | +10,000 | = | +65,000 |
| (iv) வாடகை ரொக்கமாக செலுத்தியது | -500 | -500 | ||
| சமன்பாடு | +54,500 | +10,000 | = | +64,500 |
40.
ஒரு நடவடிக்கையில் ரொக்கம் மற்றும் வாங்கி என்ற இரு கணக்குகளும்தொடர்பு பெற்றிருந்தால் அந்நடவடிக்கையின் இரு தன்மைகளும் ரொக்க ஏட்டில் பதியப்படுகின்றன.அவ்வாறு ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள், ரொக்க ஏட்டில் பதியப்பட்டால் அது எதிர்ப்பதிவு எனப்படும்.
உதாரணம்:
1. வங்கியில் பணம் செலுத்தியது
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள வாங்கிப் பத்தியிலும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் பத்தியிலும் பதியப்படும்.
2. வங்கியிலிருந்து அலுவலக செலவுகளுக்காக பணம் எடுத்து:
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் புத்தியிலும் மற்றும் வரவு பக்கத்தில் உள்ள வாங்கிப் புத்தியிலும் பதியப்படும்.
41.
அ) அறைகலன் விற்றது.
ஆ) வாடகை செலுத்தியது.
இ) வங்கியில் செலுத்தியது
ஈ) தமிழ்ச் செல்வி என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது.
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 31,758 | |
| கூட்டுக: | ||
| அளித்த காசோலைகள் வசூலிக்கப்படாதவை (சுந்தரம் ரூ 8,820 ரங்கள் ரூ 2,346) |
11,166 | |
| வாடிக்கையாளர் வங்கியில் நேரடியாக செலுத்தியது (முத்து) | 1,200 | |
| வங்கி அனுமதித்த வட்டி | 32 | |
| வங்கி வசூலித்த முதலீடு மீது வட்டி | 135 | |
| வங்கி வசூலித்த பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு | 750 | 13,283 |
| 45,041 | ||
| கழிக்க: | ||
| விடுத்த காசோலை பணமாக்கப்படாதது (பாலு ரூ 8,345+வெங்கடேசன் ரூ 3,412) |
11,757 | |
| வங்கி செலுத்திய காப்பீடு கட்டணம் | 92 | |
| செலுத்தப்பட்ட செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,500 | 14,349 |
| செல்லோட்டின்படி வங்கியிருப்பு | 30,692 |
43.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| மொத்த நட்டம் | 60,000 | வாடகை பெற்றது | 4,000 |
| விற்பனை மேம்பாட்டுச் செலவுகள் | 5,000 | பங்காதாயம் பெற்றது | 3,000 |
| வழங்கல் செலவுகள் | 15,000 | நிகர நட்டம் | 1,02,000 |
| முதல் கணக்கிற்கு மாற்றுவது | |||
| அளித்த கழிவு | 7,000 | ||
| கடன் மீதான வட்டி | 5,000 | ||
| கட்டுமச் செலவுகள் | 4,000 | ||
| அச்சு மற்றும் எழுது பொருள் | 2,000 | ||
| சட்டக் செலவுகள் | 5,000 | ||
| வாராக்கடன் | 1,000 | ||
| தேய்மானம் | 2,000 | ||
| தீயினால் ஏற்பட்ட நட்டம் | 3,000 | ||
| 1,09,000 | 1,09,000 |
44.
குறிப்பு:
| விவரம் | ரூ |
|---|---|
| பற்பல கடனாளிகள் | 20,000 |
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (இறுதி) (20,000 x 5/100) | 1,000 |
| 19,000 | |
| கழிக்க: கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு | 380 |
| 18,620 |
| விவரம் | ரூ | ரூ | விவரம | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு (இறுதி) | 1,000 | ||||
| கூட்டுக: வாராக்கடன் | 1,800 | ||||
| 2,800 | |||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (தொடக்கம்) | 1,500 | 1,300 | |||
| கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு(இறுதி) | 380 | ||||
| கூட்டுக: தள்ளுபடி அளித்தது | 600 | ||||
| 980 | |||||
| கழிக்க: தள்ளுபடி ஒதுக்கு (தொடக்கம்) | 500 | 480 | |||
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 20,000 | ||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 1,000 | ||||
| 19,000 | |||||
| கழிக்க: கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு | 380 | 18,620 | |||
45.
| A | B | C | D | E | |
|---|---|---|---|---|---|
| 1 | NAME | HOUSE NO. | STREET | PLACE | PINCODE |
| 2 | ANAND | 123 | KAMARAJAR SALAI | Chennai | 600018 |
செயல்முறை
(i) முகவரியை நிரப்புவதற்கு
(அ) MS-Excel ல் புதிய விரிதாளை திறக்கவும்
(ஆ) எடுத்துக்காட்டில் கொடுத்துள்ளபடி அனைத்து மதிப்புகளையும் உள்ளீடு செய்ய செய்யவும்.
(இ) B3 ல் கீழ்க்காணும் சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=CONCATENATE(A2,” “,B2,” “,C2,” “,D2,” “,E2)
விடை
ANAND 123 KAMARAJAR SALAI Chennai 600018
ii) C2 வில் உள்ள KAMARAJAR SALAI என்பதை சிறிய எழுத்துக்களாக மாற்ற, C3-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=LOWER(C2)
விடை
kamarajar salai
iii) D2 வில் உள்ள Chennai என்பதை D3 –ல் பெரிய எழுத்துக்களாக மாற்ற, D3- ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=UPPER(D2)
விடை
CHENNAI
46.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | இயந்திரம் க/கு | ப | 3,000 | ||
| கொள்முதல் க/கு | 3,000 | ||||
| (ரூ.3,000 த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது | |||||
| ஆ | தரகு க/கு | ப | 200 | ||
| பெற்ற வட்டி க/கு | 200 | ||||
| (பெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| இ | சம்பளம் க/கு | ப | 1,000 | ||
| தமிழ்ச்செல்வன் க/கு | 1,000 | ||||
| ( தமிழ்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஈ | விற்பனை க/கு | ப | 500 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (பழைய அறைகலன் விற்றது விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| உ | கொள்முதல் க/கு | ப | 800 | ||
| சௌந்தர பாண்டியன் க/கு | 800 | ||||
| (சௌந்தர பாண்டியனிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது திருத்தியது) |
47.
48.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு. | நீள்பயன் வருவாயினச் செலவு |
| (ii) | கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம். | முதலினச் செலவு |
| (iii) | பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு. | முதலினச் செலவு |
49.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2018 | தொடக்கக் க/கு | ப | 9,000 | ||
| மார்ச் 1 | விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
9,000 | |||
| 5 | முரளி க/கு | ப | 4,500 | ||
| விற்பனை க/கு (கடன் விற்பனை) |
4,500 | ||||
| 9 | ரொக்கக் க/கு | ப | 6,000 | ||
| விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
6,000 | ||||
| 18 | கொள்முதல் க/கு | ப | 3,200 | ||
| மணி க/கு (கடன் கொள்முதல்) |
3,200 | ||||
| 23 | ரொக்கக் க/கு | ப | 4,000 | ||
| அளித்த தள்ளுபடி க/கு | ப | 500 | |||
| முரளி க/கு (முரளியின் கணக்கு தீர்க்கப்பட்டது) |
4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | விற்பனை க/கு | 9,000 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 19,000 | ||
| 9 | விற்பனை க/கு | 6,000 | |||||
| 23 | முரளி க/கு | 4,000 | |||||
| 19,000 | 19,000 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 19,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 19,500 | 2018 மார்ச் 1 | ரொக்கக் க/கு | 9,000 | ||
| 5 | முரளி க/கு | 4,500 | |||||
| 9 | ரொக்கக் க/கு | 6,000 | |||||
| 19,500 | 19,500 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 19,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | விற்பனை க/கு | 4,500 | 2018 மார்ச் 23 | ரொக்கக் க/கு | 4,000 | ||
| 23 | அளித்த தள்ளுபடி | 500 | |||||
| 4,500 | 4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 18 | மணி க/கு | 3,200 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3,200 | ||
| 3,200 | 3,200 | ||||||
| 2018 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 3,200 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3,200 | 2018 மார்ச் 18 | கொள்முதல் க/கு | 3,200 | ||
| 3,200 | 3,200 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 3,200 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 23 | முரளி க/கு | 500 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 500 | ||
| 500 | 500 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 500 |
50.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு தீபக் முதல் க/கு (தீபக் முதல் போட்டது) |
ப | 2,00,000 | 2,00,000 | |
| 2 | வங்கி க/கு ரொ்க்கக் க/கு (வங்கியில் பணம் செலுத்தியது) |
ப | 1,00,000 | 1,00,000 | |
| 3 | பத்மினி நிறுவனக் க/கு விற்பனை க/கு (பத்மினி நிறுவனத்திற்கு கடன் விற்பனை செய்தது) |
ப | 60,000 | 60,000 | |
| 4 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு பத்மினி நிறுவனக் க/கு (வரவேண்டிய தொகைக்கு பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு பெற்றது) |
ப | 60,000 | 60,000 | |
| 5 | வங்கி க/கு தள்ளுபடி க/கு பெறுதற்குரிய மாற்றுச் சீட் டு (மாற்றுச்சீட் டு வங்கியில் தள்ளுபடி செய்து பணம் பெறப்பட்டது) |
ப ப |
58,000 2,000 |
60,000 | |
| பிப்ரவரி 15 | பத்மினி நிறுவனக் க/கு வங்கி க/கு (தள்ளுபடி செய்யப்பட்ட பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு மறுக்கப்பட்டது) |
ப | 60,000 | 60,000 | |
51.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| வங்கி மேல்வரைப் பற்று | 12,000 | |
| கூட்டுக: | ||
| வங்கியில் செலுத்திய காசோலை வரவு வைக்கப்பட்டது |
2,000 | |
| விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தப்படாதது | 2,500 | |
| இணையம் வழியாக செலுத்தியது | 1,500 | 6,000 |
| 18,000 | ||
| கழிக்க: | ||
| வங்கிக் கட்டணம் | 200 | |
| ரொக்க ஏட்டில் இருமுறை பதியப்பட்டது | 1,000 | |
| வங்கியில் செலுத்திய காசோலை பதியப்பட்டது | 1,000 | |
| செலுத்திய காசோலை வங்கியால் அவமதிக்கப்பட்டது | 17,800 | 20,000 |
| ரொக்க ஏட்டின் பட்டிருப்பு | 2,000 |
52.
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எ | தொகை ரூ |
|
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| ஜூலை 5 | சாயல்குடி, சரவணா நிறுவன | ||||
| 10 A4 தாள்கள் கட்டுகள் ஒரு கட்டு ரூ. 250 வீதம் | 2,500 | ||||
| 10 டஜன் எழுது அட்டைகள் | |||||
| ஒரு டஜன் ரூ. 850 வீதம் | 8,500 | ||||
| 11,000 | |||||
| கழிக்க: 10% தள்ளுபடி | 1,100 | 9,900 | |||
| ஜூலை 20 | முதுகுளத்தூர், மோகன் | ||||
| 5 வெள்ளை அட்டைகள் ஒரு அட்டை ரூ. 2,200 வீதம் | 11,000 | ||||
| 10 டஜன் எழுது பலகை ஒரு டஜன் ரூ. 850 வீதம் | 8,500 | 19,500 | |||
| விற்பனை க/கு வ | 29,400 | ||||
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜூலை 31 | பற்பல கடனாளிகள் | 29,400 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜூலை 5 | விற்பனை க/கு | 9,900 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜூலை 20 | விற்பனை க/கு | 19,500 |
53.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எ | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | சரிகட்டப்பட்ட கொள்முதல் | 60,000 | ||
| 2 | வாடகைச் செலுத்தியது | 2,000 | ||
| 3 | தள்ளுபடிப் பெற்றது | 1,000 | ||
| 4 | உள் தூக்குக் கூலி | 2,700 | ||
| 5 | இறுதிச் சரக்கிருப்பு | 18,600 | ||
| 6 | விளம்பரம் | 4,000 | ||
| 7 | பொதுச் செலவுகள் | 700 | ||
| 8 | கழிவு செலுத்தியது | 1,500 | ||
| 9 | முதல் | 40,000 | ||
| 10 | விற்பனை | 48,500 | ||
| மொத்தம் | 89,500 | 89,500 |
54.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 |
பாண்டீஸ்வரி முதல் க/கு | 50,000 | 2017 ஜூன் 8 |
வாடகை க/கு | 4,000 | ||||
| 14 | விற்பனை க/கு | 10,000 | 10 | அச்சுப்பொறி க/கு | 7,500 | ||||
| 17 | கழிவு க/கு | 6,000 | 11 | கொள்முதல் க/கு | 15,000 | ||||
| 19 | கடன் மீதான வட்டி க/கு | 2,000 | |||||||
| 20 | எடுப்புகள் க/கு | 3,000 | |||||||
| 21 | அஞ்சல் கட்டணம் க/கு | 3,500 | |||||||
| 30 | இருப்பு கீ/இ | 31,000 | |||||||
| 66,000 | 66,000 | ||||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 31,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards