11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
+1 Public Exam Model March 2019
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பொட்டாசியம் மற்றும் அதன் அறிகுறியினை எழுதுக
2.
இலைத்துளையின் அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்க.
3.
ஃபுளோயம் பற்றி எழுதுக.
4.
வேறுபடுத்து:பூரித மற்றும் அபூரித கொழுப்பு அமிலங்கள்.
5.
தவளையின் பால் வழி வேறுபாட்டு தன்மைகள் எப்பொழுது தெளிவாகக் காணப்படும்? அவைகள் யாவை?
6.
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.
7.
குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.
8.
திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.
9.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10.
இராணி தேனீ, வளர்ப்பு அறையிலிருந்து சூப்பர் அறைக்கு செல்லாமல் தடுக்க ____ என்னும் அமைப்பு பயன்படுகிறது.
உள்உறை
மேல்முடி
ராணித்தேனீ விலக்கி
தேனீ முகத்திரை
11.
CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.
சுவாசித்தல்
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை
இணைப்பு வினை
குளுக்கோ நியோஜெனிசிஸ்
12.
கப்பே பகுதி ______ வகை பகுப்படைதல் எனவும் அழைக்கப்படுகிறது.
Y
T
L
I
13.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
| 1) மனிதச் சிறுநீர் | i) ஆக்சின் B |
| 2) மக்காச்சோள எண்ணெய் | ii) GA3 |
| 3) பூஞ்சைகள் | iii) அப்சிசிக் அமிலம் II |
| 4) ஹெர்ரிங் மீன் விந்து | iv) கைனடின் |
| 5) இளம் மக்காச்சோளம் | v ) ஆக்சின் A |
| 6) இளம் பருத்திக் காய் | vi) சியாடின் |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | iv | v | vi | i | ii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | v | vi | i | ii | iv |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| ii | iii | v | vi | iv | i |
14.
மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
கால்சியம்
நைட்ரஜன்
15.
வைரஸ் குறித்த தவறான கூற்றைக் கண்டுபிடி
வைரஸ்கள், வைராய்டுகள் , பிரியான்கள் ஆகியவை செல் கொள்கைக்கு விதிவிலக்காகும்.
வைரஸ்களுக்கு புரோட்டோபிளாசம் கிடையாது.
வளர்ச்சிதை மாற்றத்திற்கான அமைப்பு மட்டுமே காணப்படுகிறது
செல்லுக்குள் வாழும் கட்டாய ஓட்டுண்ணிகளாகும்
16.
வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு இவ்வகுப்பு விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது.
பாலூட்டிகள்
பறப்பன
ரெப்டிலியா
இருவாழ்விகள்
17.
இரத்த உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது.
இரத்தத் தட்டுகள்
ஃபைப்ரின்
புரோத்ரோம்பின்
வைட்டமின் K
18.
ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட ஃபாஜ் DNA ஆகும்.
செல்சுவர்
குரோமோசோம்
DNA
உட்கரு
19.
கபால எலும்புகளின் எண்ணிக்கை
8
10
14
20
20.
நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?
பீனியல் சுரப்பி
அட்ரினல் சுரப்பி
தைமஸ் சுரப்பி
பாராதைராய்டு சுரப்பி
21.
சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?
பெளமானின் கிண்ணம்
ஹென்லே வளைவின் நீளம்
அண்மை சுருள் நுண்குழல்
கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு
22.
கொழுப்பு செரிமானத்தின் முதல் படி _______.
பால்மமாதல்
நொதி செயல்பாடு
லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்
அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு
23.
24.
வேர்கள் என்பவை ______.
கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
25.
26.
27.
காற்று சுவாசம் மற்றும் காற்றிலாச் சுவாசித்தலுக்கிடையே வேறுபாடிட்னை எழுதுக.
28.
பூஞ்சைகளின் நண்மைகள் யாவை?
29.
மண்புழுவின் சுற்றோட்ட மண்டபத்தை படத்துடன் விளக்கு
30.
தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணபப்டும் திசுக்கள்-விவரி.
31.
இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக
32.
தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக
33.
யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?
34.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
35.
மின்முனைப்பியக்க மீட்சி -வரையறு.
36.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
37.
வரையறு: உண்மைக்கனி
38.
கணவாய் எவ்வாறு எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறது.
39.
ஹெட்டிரோடான்ட் என்பது யாது?
40.
வகைப்பாட்டிற்கான கருவிக் கூறுகள் எவை?
41.
விதை அரக்கு என்றால் என்ன?
42.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?
43.
முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?
44.
நெஃப்ரானின் சுரத்தலுக்கான பகுதி எது?அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப்பேணும் பகுதி எது?
45.
பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.
46.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
1.
பொட்டாசியம் (K):
(i) செல்லின் சவ்வூடுபரவல் திறன் மற்றும் விறைப்பழுத்தத்தை கட்டுப்படுத்தி இலைத்துளை மூடி, திறக்க உதவுதல், புளோயத்தில் நடைபெறும் கடத்தல் செயல், நொதிகளின் செயல்பாடு மற்றும் அயனி பரிமாற்றம் மூலம் அயனி சமநிலையயை உண்டாக்குதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
(ii) K அயனிகளாக உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள் :
(i) விளிம்பு பச்சைய சோகை, நைவுப் புண்கள் (Necrosis), கேம்பிய செயல்பாடு குறைதல், முனை ஆதிக்கப் பாதிப்பு, தானியங்களில் நீரோட்ட தலைசாய்வு மற்றும் இலைவிளிம்பு சுருள்தல்.
2.

3.
(i) வாஸ்குல தாவரங்களில் உணவுப் பொருட்களைக் கடத்துகின்ற கூட்டுத் திசு ஃபுளோயம் ஆகும்.
(ii) ஃபுளோயம்என்ற சொல்லை C.நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். புரோ கேம்பியத்திலிருந்து உண்டாகும்.
(iii) ஃபுளோயம் முதலாம் நிலை ஃபுளோயம்எனப்படும். வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் ஃபுளோயம்இரண்டாம் நிலை ஃபுளோயம்எனப்படும்.
4.
| வ.எண் | பூரித கொழுப்பு அமிலங்கள் | அபூரித கொழுப்பு அமிலங்கள் |
|---|---|---|
| 1. | இதில் உள்ள ஹைட்ரோ கார்பன் சங்கிலியின் அனைத்து கார்பன்களுக்கிடையே ஒற்றைச் சகப்பிணைப்பு காணப்படும். | இதில் உள்ள ஹைட்ரோ கார்பன் சங்கிலியின் அனைத்து கார்பன்களுக்கிடையே இரட்டைப் பிணைப்பு மட்டுமாவது காணப்படும். |
| 2. | எ.கா: பால்மிடிக் அமிலம் ஸ்டீரிக் அமிலம் | எ.கா.ஒலியிக் அமிலம் லிலோனிக் அமிலம். |
5.
இனப்பெருக்க காலங்களில் பால்வழி வேறுபாடுகள் தெளிவாக காணப்படும்.
1. ஆண் தவளையை ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. ஆண் தவளையின் முன்னங்கால் முதல் விரலின் கீழே காலவித தண்டு காணப்படுகிறது.
3. குரல் பையின் மூலம் ஆண் தவளைகள் கரகர ஒலியை ஏற்படுத்துகிறது.
6.
(i) ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாதபோது O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனபப்டுகிறது. C2 சுழற்சியின்போது RUBISCO-வின் கார்பாக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக மாறுகிறது.
(ii) C2 சுழற்சியானது பசுங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்றுப்புகளில் நடைபெறுகிறது. பசுங்கணிகத்தில் RUBP யானது 2C-பாஸ்போகிளைக்கோலேட் மற்றும் பாஸ்போகிளிசரிக் அமிலமாக மாறுகிறது.
(iii) இதற்கு RUBISCOநொதி பயன்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் பொருள் 2C பொருளாக இருப்பதால் இச்சுழற்சிக்கு C2 சுழற்சி என்று பெயர்.
7.
குழலில் உள்ள வடிவத்திரவதில் வெளியிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி, குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் பை-காட்பனேட்டுகள், பை-பாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் இணைந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
8.
| வ.எண் | திறந்த வகை சுற்றோட்டம் | மூடிய வகை சுற்றோட்டம் |
| 1 | இந்த வகை சுற்றோட்ட மண்டலத்தில் சுற்றோட்ட திரவ ஹீமோலிம்ப் காணப்படுகிறது. | இதயத்தினால் உந்தித்தள்ளப்படும் இரத்தம் இரத்த நாளங்கள் வழியே செல்கிறது. |
| 2 | இவ்வகை சுற்றோட்டத்தில் இரத்தம் திசு செல்களை நேரிடையாக தொடர்பு கொள்கிறது. | இவ்வகை சுற்றோட்டத்தில் இரத்தம் திசு செல்களை நேரிடையாக தொடர்பு கொள்ளாது. |
| 3 | இரத்தக் குழாய்கள் இல்லை | இரத்தக் குழாய்கள் உண்டு |
| 4 | எ.கா:காணுக்காலிகள், பெரும்பான்மையான மெல்லுடலிகள் | எ.கா: வளைத் தசைப் புழுக்கள், தலைக்காலிகள், முதுகெலும்பிகள் |
9.
10.
(c)
ராணித்தேனீ விலக்கி
11.
(a)
சுவாசித்தல்
12.
(a)
Y
13.
(b)
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
14.
(c)
கால்சியம்
15.
(c)
வளர்ச்சிதை மாற்றத்திற்கான அமைப்பு மட்டுமே காணப்படுகிறது
16.
(b)
பறப்பன
17.
(b)
ஃபைப்ரின்
18.
(b)
குரோமோசோம்
19.
(a)
8
20.
(c)
தைமஸ் சுரப்பி
21.
(b)
ஹென்லே வளைவின் நீளம்
22.
(a)
பால்மமாதல்
23.
(b)
24.
(b)
கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
25.
(c)
26.
27.
காற்று மற்றும் காற்றிலாச் சுவாசித்தலுக்கிடையே வேறுபாடுகள்
| காற்று சுவாசித்தல் | காற்றிலாச் சுவாசித்தல் |
| 1. இது உயர் நிலை உயிரினங்களில் அனைத்து உயிருள்ள செல்களிலும் நடைபெறுகிறது | பூஞ்சை மற்றும் சில பாக்டீரியங்களில் இது நடைபெறுகிறது. |
| 2.சுவசாத் தளப்பொருள் உடைவதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. | சுவசாத் தளப்பொருள் உடைவதற்கு ஆக்ஸிஜன் தேவையில்லை. |
| 3. CO2 மற்றும் H2O இறுதி விளைபொருட்கள் ஆகும். | ஆல்கஹால் மற்றும் CO2 அல்லது லாக்டிக் அமிலம் இறுதி விளைபொருட்கள் ஆகும். |
| 4.ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றமடையும் போது 36 ATP மூலக்கூறுகலை உருவாக்குகிறது. | 2 ATP மூலக்கூறுகள் மட்டும் உருவாகிறது. |
| 5. கிளைக்காலைசிஸ், இணைப்பு வினை, TCA சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி போன்ற நான்கு நிலைகள் காணப்படும். | கிளைக்காலைசிஸ் மற்றும் நொதித்தல் போன்ற இரண்டு நிலைகள் காணப்படும். |
| 6. சைட்டோபிளாசம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவில் இது நடைபெறுகிறது. | சைட்டோபிளாசத்தில் மட்டும் இது நடைபெறுகிறது. |
28.
பூஞ்சைகளின் நண்மைகள்
1.உணவு : லென்டினஸ் எடோடஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ்,வால்வேரியெல்லா வால்வேசியே போன்றவை ஊட்ட மதிப்புடையதால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.ஈஸ்ட்கள் வைட்டமின் B-யையும் எரிம மோதீசியம் ஆஷ்பியி வைட்டமின் B-12 யையும் தருகின்றன.
2.மருத்துவம்: பூஞ்சைகள் பாக்டீரியங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லது அழிக்கும் உயிர்எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் உயிர்எதிர்ப்பொருட்களில் பெனிசிலின் (பெனிசிலியம் நொட்டேட்டம்), செபலலோஸ்போரின்கள் (அக்ரி மோனியம் கிரைசோஜீனம்), கிரைசியோ பல்வின் (பெனிசிலியம் கிரைசோபல்வம்)போன்றவை அடங்கும்.கிளாவிசெப்ஸ் பாப்பூரியா உற்பத்தி செய்யும் எர்காட் ஆல்கலாய்டு (எர்காட்டமைன்) இரத்தக்குழாயினைச் சுருங்க வைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
3.தொழிற்சாலை - கரிம அமில உற்பத்தி :
கரிம அமிலங்களை வணிகரீதியில் உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலைகளில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.சிட்ரிக் அமிலம்,குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் என்ற பூஞ்சையும், இட்டகோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ்,கோஜிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே பூஞ்சையும் பயன்படுத்தப்படுகின்றன.
29.
1.மண்புழுவில் ரத்த ஓட்ட மண்டலமும் மூடிய வகையாகும்.
2. இம்மண்டலத்தில் இரத்த நாளங்கள், இரத்த நுண்நாளங்கள் மற்றும் பக்கவாட்டு இதயங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
3. உணவுக்குழல் மேல் ரத்த நாலாம் (முதுகுப்புற ரத்த நாளம்) உணவுக்குழல் கீழ் ரத்த நாளம் (வயிற்றுப்புற ரத்த நாளம்) என இராணு நாளங்கள் உள்ளது.
4. முதுகுப்புற ரத்த நாளத்தில் ஓர் இணை வால்வுகள் பின்னோக்கிய இரத்த ஓட்டத்தை தடுக்கிறது.
5. வயிற்றுப்புற ரத்த நாளத்தில் வால்வுகள் இல்லை. சுருங்கி விரியும் தன்மையற்றது. ஆதலால் இரதம் பின்னோக்கி செல்கிறது.
6. உடலின் முன்பகுதியில் இவ்விரண்டு நாளங்களும் எட்டு இணை இணைப்புகளால் (அ) பக்கவாட்டு இதயங்களால் இணைக்கப்பட்டுள்ளது.
7. பக்கவாட்டு இதயங்கள் 6வது முதல் 13வது கண்டம் வரையில் அமைந்துள்ளது.
8. இவைகள் ரத்தத்தை மேலிருந்து கீழாக, முதுகுப்புற நாளத்திலிருந்து வயிற்று புற நாளத்திற்கு கடத்துகிறது.
9. உடல் உறுப்புகளிலிருந்து முதுகுப்புற நாளங்கள் ரத்தத்தை பெறுகிறது.
10. வயிற்றுப்புற நாளம் இரத்ததை உடல் உறுப்புகளுக்கு வழங்குகிறது.
11. உடல்முன்பகுதியில் காணப்படும் இரத்தத் சுரப்பிகள், இரத்த செல்களையும், ஹீமோகுளோபினையும் சுரக்கிறது.
30.
தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் அனைத்து திசுக்களும் "பட்டை"என குறிக்கப்படுகிறது. பட்டையில் காணப்படும் திசுக்கள்
1.பெரிடர்ம்
2.புறணி
3.முதல் நிலை ஃபுளோயம்
4. இரண்டாம்நிலை ஃபு;ளோயம்
1.பெரிடர்ம்:
இரண்டாம் நிலை வளர்ச்சியினால் தண்டும், வேரும் தடிமனில் அதிகரிக்கும் பொழுது, இரண்டாம் நிலை தோற்றத்தின் போது உருவாக்கப்படும் பாதுகாப்பு அடுக்கான பெரிடர்ம் புறத்தோல் மட்டுமின்றி முதல்நிலை புறணிக்குப் பதிலீடாக அமைகிறது.
இது கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது.
(a) பெல்லம்
(b) ஃபெல்லஜென்
(c) ஃபெல்லோடெர்ம்
(a) பெல்லம்;
(i) இது ஃபெல்லோஜன் (கார்க் கேம்பியம்)வெளிப்புறமாகத் தோற்றுவிக்கும் உயிரற்ற சூபரின் படிந்த பாதுகாப்பு திசுவாகும்.
(ii) இது பெரும்பாலான விதைத் தாவரங்களின் முதிர்ந்த தண்டு மட்டுமின்றி, வேர்களின் புறத்தோலின் பதிலீடாக அமைகிறது.
(iii) செல்கள் ஒழுங்கு முறையான அடுக்கு மற்றும் வரிசையாக அமைந்திருப்பதே இதன் பண்பாகும்.
(iv) பட்டைத் துளைகளின் அமைவால், இது (ஃபெல்லம்)ஆங்காங்கே உடைபட்டுக் காணப்படும்.
(b) ஃபெல்லோஜென் :
(i) இது ஒரு இரண்டாம் நிலை பக்கவாட்டு ஆக்குத்திசுவாகும். வாஸ்குலக் கேம்பியம் போலனறி இது ஒருபடித்தான ஆக்குத்திசு செல்களைக் கொண்டது.
(ii) இது, புறத்தோல், புறணி, ஃ புளோயம் அல்லது பெரிசைக்கின் (ஸ்டீலிற்கு வெளியே)ஆகியவைகளிலிருந்து தோன்றுகிறது.
(iii) இவற்றின் செல்கள் பக்கவாட்டில் பகுபட்டு ஆரவாக்கில் செல்களைத் தோற்றுவிக்கிறது.
(iv) வெளிபுறச் செல்கள் வேறுபாடு அடைந்து ஃபெல்லத்தையும் (கார்கி)உட்புறச் செல்கள் ஃபெல்லோடெர்ம்மையும் (இரண்டாம் நிலை புறணி) தோற்றுவிக்கிறது.
(C) ஃபெல்லோடெர்ம்:
இது விதைத்தாவரங்களின் தண்டு மற்றும் வேர்களிலுள்ள பெர்டெர்மின் ஒரு பகுதியான, ஃபெல்லோஜெனால் உட்புறமாக தோற்றுவிக்கப்படும்.
2. புறணி: புறணியானது பாரன்கைமா மற்றும் கோலன்கைமா செல்களால் ஆனது.
3. முதல் நிலை ஃபுளோயம்: நுனி ஆக்குத்திசுவின் புரோகேம்பியத்தில் இருந்து முதல் நிலை புளோயம் தோன்றுகிறது.
4. இரண்டாம்நிலை ஃபுளோயம்:
(i) பக்க ஆக்குத் திசுவான வாஸ்குலக் கேம்பியத்தில் இருந்து இரண்டாம் நிலை புளோயம் தோன்றுகிறது. இரண்டாம் நிலை புளோயம் இரண்டு திசு தொகுப்புகளை கொண்டுள்ளது. அவை செங்குத்தான நீண்ட கதிர்கோல் வடிவ தோற்றுவிகளும் கிடைமட்டமான நீண்ட நேர தோற்றுவிகளும் ஆகும்.
(ii) அச்சுமுறை தொகுப்பில் சல்லடைக் குழாய் கூறுகள் ஃபுளோயம் நார், ஃபுளோயம் பாரன்கைமாவையும், ஆரத் தொகுப்பில் ஃபுளோயம் கதிர்களும் அமைந்திருக்கும்.
(iii) இரண்டாம்நிலை ஃபுளோயம் ஒரு உயிருள்ள திசு ஆகும்.இது ஒளிச் சேர்க்கையால் உருவாகும் கரையும் கரிமக் கூட்டுப் பொருட்களை தாவரங்களின் பல்வேறு பாகங்களுக்கு கடத்துகிறது.
பட்டை :
1. பட்டை, தாவரத்தை, ஒட்டுண்ணி, பூஞ்சைகள், பூச்சிகள்,நீர் ஆவியாதலைத் தடை செய்தல், மட்டுமின்றி வெளிபுறச் சூழல் மறுபாட்டிலிருந்தும் பாதுகாக்கிறது.
2. இது ஒரு பூச்சி விரட்டி, அழுகல் பாதுகாப்பு, நெருப்பு பாதுகாப்பு, மட்டுமின்றி மருந்துகளும், நறுமணப் பொருட்களும் பெறப் பயன்படுத்தப்படுகிறது.
3. பட்டையில் காணப்படுகின்ற ஃபுளோயம் செல்கள் உணவு பொருட்களைக் கடத்துவதிலும், இரண்டாம் நிலை புறணி செல்கள் சேமிப்பு பணியிலும் ஈடுபடுகிறது.
பட்டைத்துளை (லென்டிசெல்):
1. தண்டு மற்றும் வேர்களின் பட்டையின் புறப்பரப்பிலிருந்த்து சற்று உயர்ந்து காணப்படுகின்ற வாயில் அல்லது துளை பட்டைத் துளை எனப்படும்.
2..இது தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது தோன்றுகிறது.
3.ஃ பெல்லோஜென் அதிகச் செயல்பாட்டுடன் இருக்கும் பொழுது பட்டைத்துளை பகுதியில், ஒரு திரளான நெருக்கமற்று அமைந்த மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்கள் உருவாகின்றன.
4. இதற்கு நிரம்பிச் செல்கள் நிரப்புத்திசு என்று பெயர்.
5. பட்டைத்துளைகள் வளிமப் பரிமாற்றமும் பட்டைத்தூளை நீராவிப்போக்கு செய்கின்றன.
31.
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலை வேர் | ஒரு விதையிலை வேர் |
| 1. | பெரிசைக்கிள் | பக்கவேர்கள், பெல்லோஜென் மற்றும் வாஸ்குலக் கேம்பியத்தின் ஒரு பகுதி பெரிசைக்களிலிருந்து தோன்றுகின்றன. |
பக்கவேர்கள் மட்டும் தோன்றுகின்றன. |
| 2. | வாஸ்குலத் திசு | பெரும்பாலும் ஃபுளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. |
பெரும்பாலும் சைலம் ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. |
| 3. | இணைப்புத் திசு | பாரங்கைமாவால் ஆனது. இந்தச் செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடடைகிறது. | பெரும்பாலும் ஸ்கிலிரங்கைமாவால் ஆனது. ஆனால் சில சமயங்களில் பாரங்கைமாவால் ஆனது. இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடு அடைவதில்லை. |
| 4. | கேம்பியம் | இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது. | முற்றிலும் இல்லை. |
| 5. | சைலம் | நான்கு முனை கொண்டவை. | பொதுவாகப் பல முனை கொண்டவை |
32.
| வ.எண் | குருத்தெலும்பு மீன்கள் | எலும்பு மீன்கள் |
|---|---|---|
| 1. | கடலில் வாழும் | கடல்நீர் மற்றும் தண்ணீரில் வாழும். |
| 2. | அகச்சட்டகம் குருத்தெலும்பால் ஆனது | அகச்சட்டகம் எலும்பால் ஆனது |
| 3. | பிளகாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது | கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது. |
| 4. | அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மை | கதிர் வடிவ உடல் அமைப்புடையது |
| 5. | இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. | நான்கு இணை இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. |
| 6. | செவுள்மூடி கிடையாது | செவுள்மூடி உண்டு |
| 7. | கழிவுப் பொருள்-யூரியா | அம்மோனியா |
| 8. | குட்டி ஈனக்கூடியவை | முட்டையிடுபவை |
| 9. | அகக்கருவுருவுதல் நடைபெறுகிறது | புறக்கருவுருவுதல் நடைபெறுகிறது |
| 10. | எ.கா. ஸ்கோலியோடான், ட்ரைகான் | லேபியா (ரோகு) கட்லா |
33.
1. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.
2. காடுகள் அழிக்கப்படுவதால், உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
3. மழைபொழிவு மற்றும் நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால்
4. அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால்
5. மனிதர்கள் காட்டுக்குள் சென்று அவைகளுக்கு இடையூறு செய்வதால்.
34.
| வ.எண் | பொதுப் பண்புகள் | குடும்பம் : சொலானேசி | குடும்பம் : லில்லியேசி |
|---|---|---|---|
| 1. | வளரியல்வு | பெரும்பாலும் ஒரு பருவச் சிறுகொடிகள் புதர் செடிகள், சிறிய மரங்கள் | பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகள் |
| 2 | வேர் | கிளைத்த அனிவேர் தொகுப்பு | வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு |
| 3. | தண்டு | மென்மையானது (அ ) கடைத்தன்மை கொண்டது, நிமிர்ந்து பின்னுக் கொடிகள் (அ) ஊடுருவி வளர்பவை | தரை தரைக்கீழ் குமிழ் தண்டு , சில வற்றின் மட்டநிலத்தண்டு |
| 4. | இலை | மாற்றிலை யடுக்கமைவு , தனியிலை அரிதாக இதற்கு வடிவ கூட்டிலை கள் , இலையடிச் செதிலற்றது.எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு | வேரண்மை இலைகள் காலைன் மாற்றிலை யடுக்கமைவு எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு இலையடிச் செதில் அற்றது |
| 5. | மஞ்சரி | இலைக்கோண (அ ) நுனி சைம்கள் (அ ) தனி மலர் , தேளுறு (அ )ரைபிடியம் (அ) சை மோஸ் (அ ) அம்பெல் லேட் சைம் | தனித்த (அ)கிளைத்த ரெசிமோஸ் (அ ) ஸ்பைக் (அ ) கூட்டு ரசிம் |
| 6 | மலர் | பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது , பூக்காம்பு டையது, இரு பால் மலர் இரு பூவிதழ் அடுக்குடையது | காம்புடையது. பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது,இரு பால் மலர் முவங்கமலர் சூலக மேல் மலர் |
| 7 | புல்லிவட்டம் (அ ) பூவிதழ் வட்டம் | புல்லிகள் 5,அரிதாக 4(அ ) இணைந்த புல்லி , தொடு இதழமைவு நிலைத்த புல்லி | பூவிதழ்கள் - 6 இணை யாதவை அரிதாக இணைந்தவை தோடு (அ )தழுவு இதழமைவு |
| 8 | அல்லிவட்டம் | அல்லிகள் 5 இணைந்த அல்லிகள் சூழல் இதழமைவு , சக்கர வடிவம் (அ ) மணி வடிவம் (அ ) புனல் வடிவம் தொடு (அ ) திருகு இதழமைவு | காணப்படுவதில்லை |
| 9 | மகரந்தத்தாள் வட்டம் | மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டிவை சம நீலமற்ற மகரந்த கம்பிகளை யடைவை மகரந்தபை இரு அறைகள்களை உடைவை | மகரந்ததாள் 6 பூவிதலுக்கு எதிராக அமைத்துள்ளது.மகரந்தப்பை இரு மடல்கள் உடையது.நீள வாக்கில் வெடிப்பவை வெளி உள் நோக்கியது |
| 10 | கனி | வெடிகனி (அ ) சதைக்கனி | அறைவழி வெடிகனி (அ ) சதைகனி (அ ) தடுப்புச் சுவர் வழி வெடிகனி |
35.
K அயனிகள் ஆக்ஸோலெம்மாவை விட்டு வெளியேறுவதால் ஆக்ஸோலெம்மாவின் உட்புறம் மீண்டும் எதிர்மறை மின்தன்மையைக் பெறுகிறது. இச்செயலே மின்முனைப்பியக்க மீட்சி எனப்படும்.
36.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
37.
இவ்வகை கனி மலரின் சூலகப் பையிலிருந்து உருவாகிறது. இவற்றில் சூலக இலைகள் அல்லாத பகுதிகள் இடம் பெறுவதில்லை.
எடுத்துக்காட்டு: தக்காளி, மா.
38.
கணவாய் எனும் கடல்வாழ் விலங்கு, பிற ஊண் உயிர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல மையினை உமிழ்கிறது.
39.
மனிதனில் நிரந்தரப் பற்களில்
1. உளிவடிவ வெட்டும் பற்கள்
2. கூறிய கிழிக்கும் தன்மை கொண்ட கோரைப்பற்கள்.
3. அரைத்தலுக்கு முன்கடைவாய் பற்கள் மற்றும் பின்கடை வாய் பற்கள் எனும் வெவ்வேறு வகைகளில் உள்ள தன்மைக்கு 'ஹெட்டிரோடான்ட்' என்றுப் பெயர்.
40.
1. நேரடி களப்பணி
2. ஆய்வு செய்தல்
3. அடையாளம் காணுதல்
4. வகைப்படுத்துதல்
5. பாதுகாத்தல்
6. ஆவணப் பதிவு செய்தல்
41.
அரக்கினை அரைத்த பின் தேவையற்ற பொருட்களான தூசுகள் மற்ற நுண்ணிய பொருட்கள் போன்றவை நீக்கப்பட்டு உருவாக்கப்படும் அரக்கு வித்து அரக்கு எனப்படும்.
42.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் சேய்மை சுருள் நுண் குழல் மற்றும் சேகரிப்பு நாளத்தில் சோடியம் அயனி மீள உறிஞ்சப்படுத்தல், பொட்டாசியம் அயனி வெளியேற்றம் மற்றும் நீர் உறிஞ்சப்படுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அது அட்ரீனல் கார்டெக்ஸில் இருந்து உருவாகிறது.
43.
மின்னழுத்தம் இயல்பான அளவான அளவையும் தாண்டி, அளவிற்குச் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மையுடைகிறது. எனவே, முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை பெறுகிறது.
44.
நெஃப்ரானின் சுரத்தல் மற்றும் அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப்பேனும் பகுதி சேய்மை சுருண்ட குழல் ஆகும்.
45.
பறவைகளின் எலும்புகள் யாவும் காற்றறைகளுடன் காணப்படுகிறது. இதற்கு நுமாட்டிக் எலும்புகள் என்றுபி பெயர். இதனால் அகச்சட்டகத்தின் எடைகுறைவாக இருக்கும். இது பறத்தலுக்கான தகவமைவாகும்.
46.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards